வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


சரவெடி பங்குகள் தீபாவளிக்கு வாங்கலாம்!

Go down

சரவெடி பங்குகள் தீபாவளிக்கு வாங்கலாம்! Empty சரவெடி பங்குகள் தீபாவளிக்கு வாங்கலாம்!

Post by தருண் Thu Oct 23, 2014 11:08 am

இந்திய பங்குச் சந்தைகள் கடந்த ஒரு வருடமாகவே ஏற்றத்தில் இருந்து வருகிறது. மத்தியில் புதிய ஆட்சி அமைந்தது மற்றும் அதனுடைய செயல்பாடு அனைத்தும் மிகவும் பாசிட்டிவாக இருப்பதாலும் பங்குச் சந்தை ஆபார வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தியை பெருக்குவதற்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மத்தியில் புதிய ஆட்சி அமைந்தோடு, அடுத்த நடந்த ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் மத்திய அரசுக்கு சாதமாக வெளியாகி உள்ளது. மத்தியில் ஆளும் பிஜேபி கட்சியே மாநிலங்களிலும் பரவலாக ஆளும் போது வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை வேகப்படுத்த முடியும். திட்டங்களை எளிதாக நடைமுறைப்படுத்தவும் முடியும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்து வருவதால் நடப்பு கணக்கு பற்றாகுறை குறையும். இந்தியாவில் அதிகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் முக்கிய இடத்தை வகிப்பது கச்சா எண்ணெய்தான். இதன் விலை சரிந்து வருவதால், ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறையும் போது பணவீக்க விகிதமும் குறையும். அதோடு மட்டும் இல்லாமல் 2014 செப்டம்பர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 2.38 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவாகும். அதேபோல  நுகர்வோர் பணவீக்க விகிதமும் 6.46 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான அடையாளம் ஆகும்.

அதாவது தொடர்ந்து  பணவீக்க விகிதம் குறைந்து வந்தால் அடுத்த ஆண்டு  ஆர்பிஐ வட்டிவிகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் குறைந்தால் கடனுக்கான வளர்ச்சி அதிகரித்து தொழில் துறைகளின் உற்பத்தி பெருகும். இதன் விளைவாக வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். இத்தனை சாதாகமான அறிகுறிகள் இருப்பதால் சந்தை ஏற்றத்திலே இருக்கும் என நம்பப்படுகிறது.

தீபாவளி முன்னிட்டு வியாழக்கிழமை (23.10.2014) பங்குச் சந்தைகள் விடுமுறை என்றாலும், சென்டிமென்டாக ஒரு மணிநேரத்திற்கு மட்டும் முகூர்த்த டிரேடிங் நடக்கும். இந்த டிரேடிங்கில் முதலீட்டாளர் தீபாவளி அன்று வாங்குவதற்கு சில பங்குகளை பங்குச் சந்தை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.

இந்தியா நிவேஷ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் வழங்கிய பரிந்துரைகள்:

பங்கின் பெயர்                                                    விலை 21.10.2014    இலக்கு விலை  
 
ஆஷியானா ஹவுஸிங் (ASHIANA)                     166                             202      
கேப்பிட்டல் ஃபர்ஸ்ட்( CAPF)                               293                            360      
மேக்மணி ஆர்கனிக்ஸ்( MEGH)                           21.90                         34      
பெண்ணார் இண்டஸ்ட்ரீஸ்(PENIND)                  52.60                         52      
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(RELIANCE)           928                            1111    

ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காமின் ஈக்விட்டி ரிசர்ச் ஹெட் பி. கிருஷ்ணகுமாரின் பரிந்துரை:


பங்கின் பெயர்             விலை 21.10.2014    இலக்கு விலை  
 
ஆர்இசிஎல் (RECLTD)     285.40                           390      
பிபிசிஎல் (BPCL)            687.05                           850    

சென்னை ஆர்.எம்.ஆர் ஷேர் நிறுவனத்தின் பங்குச் சந்தை நிபுணர் லெட்சுமராமனின் பங்கு பரிந்துரைகள்:

பங்கின் பெயர்                                                       விலை 21.10.2014    இலக்கு விலை
     
ஹிண்டால் கோ (HINDALCO)                                  148.05                        174      
ஃபெடரல் பேங்க்(FEDERALBNK)                             140.55                        185      
எல் ஐ சி ஹவுஸிங் ஃபைனானஸ்(LICHSGFIN) 334.45                        400      
பேங்க் ஆஃப் பரோடா(BANKBARODA)                   883.00                        1150      
ஹேவல்ஸ் இந்தியா(HAVELLS)                               278.70                         335      
கரூர் வைஸ்யா பேங்க்( KARURVYSYA)                 540.50                         700      
என்டிபிசி( NTPC)                                                           147.15                          170      
ரேமென்ட் இந்தியா(RAYMOND)                               486.50                          650    

டிஸ்க்ளைமர்: முதலீட்டாளர்கள் முதலீடு குறித்த முடிவுகளை சொந்தமாக எடுக்கவும்.
முக நூல்

ந. விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum