வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஃபண்ட் பரிந்துரை :

2 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Fri Jul 25, 2014 3:09 pm

ஃபண்ட் பரிந்துரை : ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் முதலீடு செய்க!
சொக்கலிங்கம் பழனியப்பன்,டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


இந்த ஃபண்ட் பெயரில் குறிப்பிட்டுள்ளதுபோல, மிட் - ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் பங்கு சார்ந்த திட்டமாகும். இதன் ஃபண்ட் மேனேஜர் சிராக் சேத்தல்வத் ஆவார். இந்த ஃபண்ட் ஏறக்குறைய 62 சதவிகிதத்தை மிட் கேப் பங்குகளிலும், 23 சதவிகிதத்தை ஸ்மால் கேப் பங்குகளிலும், எஞ்சியதை லார்ஜ் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது.

இந்த ஃபண்ட் மேனேஜர் இந்த ஃபண்டையும் இன்னும் ஓரிரு ஃபண்டுகளையும் தொடர்ந்து நல்ல முறையில் நிர்வகித்து வருகிறார். இந்த ஃபண்ட் ஆரம்பித்ததிலிருந்து இதன் ஃபண்ட் மேனேஜராக இவரே உள்ளார். இவர் நல்ல, தரமான நிறுவனங்களையே இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளார்.

பொதுவாக, மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் இந்தியச் சந்தையில் முதலீடு செய்ய நிறைய பொறுமை வேண்டும். அந்தப் பொறுமை இந்த ஃபண்ட் மேனேஜரிடம் உள்ளது. தரமான நிறுவனங்களை வைத்துள்ளதால், இந்த ஃபண்ட் சந்தை இறங்குமுகமாக இருக்கும்போது, திடமாக நிற்கும். மிட் - ஸ்மால் கேப் ஃபண்ட் என்றாலே ரிஸ்க் மற்றும் ரிவார்டு ஆகிய இரண்டுமே அதிகமாக இருக்கும்.


கடந்த ஆண்டுகளில் (2008 மற்றும் 2011-ம் ஆண்டுகளைத் தவிர) இந்த ஃபண்ட் நிஃப்டி 50 குறியீட்டைவிட அதிகமான வருமானத்தைத் தந்துள்ளது. சந்தை வீழ்ச்சியில் இருக்கும்போது, சந்தையைவிட அதிகமாக விழும்; அதே சமயம், சந்தை காளையின் பிடியில் இருக்கும்போது, சந்தையைவிட மிகவும் அதிகமான வருமானத்தைத் தரும்.

உதாரணத்துக்கு, 2009-ம் ஆண்டு, சந்தை 18.64% வருமானத்தைத் தந்தது. ஆனால், இந்த ஃபண்ட் 94.40% வருமானத்தைத் தந்தது. அதேசமயம், 2011-ம் ஆண்டுச் சந்தை 6.31% வருமானத்தைத் தந்தது. ஆனால், இந்த ஃபண்டின் வருமானம் 18.31% ஆகும்.

இந்த ஃபண்ட் நிஃப்டி குறியீட்டுடன் ஒப்பிடும்போது, நிதி மற்றும் எஃப்எம்சிஜி துறையில் அண்டர்வெயிட்டாகவும்  (under weight)  ஆகவும், ஹெல்த்கேர், இன்ஜினீயரிங் மற்றும் கெமிக்கல்ஸ் துறையில் ஓவர்வெயிட்டாகவும் (over weight) உள்ளது. இது மிட் கேப் ஃபண்டாக இருந்தபோதிலும் அதன் பீட்டா (0.89) சந்தையைவிட குறைவாகவே உள்ளது.

இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது  (25.06.2007) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.2,83,700-ஆக உள்ளது. இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்தோ ரூ.3,000 கோடிக்கு மேல்.

நேரடியாக மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்ய திணறுபவர்களுக்கு இந்த ஃபண்ட் ஒரு நல்ல முதலீட்டுக் கருவி. இளம்வயதினர், செல்வத்தைப் பன்மடங்காக்க விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள், நீண்ட நாள் காத்திருக்க முடிந்தவர்கள், குறுகிய காலத்தில் பணம் தேவைப்படாதவர்கள், மிட்-ஸ்மால் கேப் நிறுவனங்கள் இனிவரும் காலத்தில் வேகமாக வளரும் என நினைப்பவர்கள் போன்ற அனைவரும் இந்த ஃபண்டில் தாராளமாகவும், மொத்தமாகவும், எஸ்ஐபி மற்றும் எஸ்டிபி முறையிலும் முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav22c

முதலீட்டுக் காலம்!

இந்த ஃபண்டில் அதிகமாக மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் இடம் பெற்றுள்ளதால், நீண்ட காலத்தில்தான் வருமானம் தரக்கூடியதாக இருக்கிறது.

ஃபண்ட் பரிந்துரை : Nav22d

யார் முதலீடு செய்யக் கூடாது?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான, நிலையான வருமானத்தை  விரும்பு பவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள் ஆகியோர் இந்த ஃபண்டில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதே நல்லது!

-- ந.விகடன்


Last edited by தருண் on Fri Aug 01, 2014 9:20 am; edited 1 time in total

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty ஃபண்ட் பரிந்துரை யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்: முதலீடு செய்க!

Post by தருண் Fri Jul 25, 2014 3:15 pm

ஃபண்ட் பரிந்துரை
யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்: முதலீடு செய்க!
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்



கடந்த 1, 3, 5, 7 ஆண்டுகளில் இந்த ஃபண்டானது நிஃப்டி 50 குறியீட்டைவிட அதிக வருமானம் தந்துள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர் அனூப் பாஸ்கர் ஆவார். இவரே யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பங்கு சார்ந்த ஃபண்டுகளின் தலைவராகவும் உள்ளார். இதற்குமுன் சுந்தரம் மற்றும் ஃப்ராங்க்ளின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களில் வேலை செய்துள்ளார். சுந்தரம் செலக்ட் மிட் கேப் ஃபண்டை வெற்றிகரமாக நிர்வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யூடிஐ ஒரு பொதுத்துறை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆகும். இதன் பங்குதாரர்கள் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் (எஸ்பிஐ, எல்ஐசி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க்) மற்றும் டி.ரோவ் பிரைஸ் குரூப் என்ற அமெரிக்க நிறுவனம் ஆகும்.

பல நேரங்களில் அரசாங்கத்தின் தலையீடு இருந்தபோதிலும், அனூப் பாஸ்கர் இந்த நிறுவனத்தில் சேர்ந்ததில் இருந்து ஃபண்டுகளின் செயல்பாடு மிகவும் நன்றாக உள்ளது. இவரின் வருகை யூடிஐ நிறுவனத்துக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இவர் 2007-ம் ஆண்டு இந்த ஃபண்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். இந்தத் திட்டத்தை ஜூலை 2011-ம் ஆண்டிலிருந்து நிர்வகித்து வருகிறார்.

இந்த ஃபண்ட் மிகுதியாக லார்ஜ் கேப் பங்குகளிலேயே (86%) முதலீடு செய்துள்ளது. எஞ்சியதை (14%) கிரிஸில், எம்ஆர்எஃப், ஸ்ரீ சிமென்ட், அதானி போர்ட்ஸ் போன்ற மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது.

இதன் போர்ட்ஃபோலியோ மிகவும் கச்சிதமாக 47 பங்குகளுடன் உள்ளது. போர்ட்ஃபோலியோ கச்சிதமாக இருப்பதால், ஐந்து பங்குகள், 5% அல்லது அதற்கும் அதிகமான அளவில் போர்ட்ஃபோலியோவில் உள்ளன. இதன் போர்ட்ஃபோலியோ ஃபைனான்ஸ் மற்றும் எனர்ஜி துறை களில் அண்டர்வெயிட்டாகவும், ஆட்டோமொபைல் துறையில் ஓவர்வெயிட்டாகவும் உள்ளது.

இந்த ஃபண்டின் பீட்டா 0.81 ஆகும். இது கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர் களுக்கு மிகவும் பொருந்தும். ஏனென்றால், சந்தை இறங்கும்போது இந்த ஃபண்ட் சந்தையைவிட குறைவாகவே இறங்கும். உதாரணத்துக்்கு சந்தை 10% இறங்கினால், இந்த ஃபண்ட் 8-10 சதவிகிதம்தான் இறங்கும்.

இந்த ஃபண்டின் பாஸிட்டிவ் அம்சங்கள்: மிகவும் தரமான பங்குகளையே எப்போதும் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளது. இதனுடைய ரிசர்ச் டீம் மிகவும் உறுதியாக உள்ளது.

டி.ரோவ் பிரைஸ் நிறுவனத்தின் உதவியுடன், யூடிஐ பெரிய அளவில் செயல்முறைகளை மேம்படுத்தியுள்ளது. அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல், தொடர்ச்சியாக ஒருநிலையான செயல்பாட்டைக் கொடுத்துவருகிறது.

ஒரு தனி ஃபண்ட் மேனேஜரின் மேல், நிறுவனம் கொண்டுள்ள ரிஸ்க்கை குறைப்பதற்கு, 30 சதவிகிதத்துக்கு மேலான சொத்துக்களை ஒரு ஃபண்ட் மேனேஜர் நிர்வகிப்பதை இந்த நிறுவனம் அனுமதிப்பதில்லை.

ஃபண்ட் பரிந்துரை : Nav66

இந்த ஃபண்டில் குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீடு ரூ.500-தான். இந்தத் தொகை பல ஃபண்ட் நிறுவனங்களில் ரூ.1,000-ஆக உள்ளது. பல முதலீட்டாளர் களுக்கு இது ஒரு பெரிய பாஸிட்டிவ் ஆகும்.

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.16.88 ஆகும். திட்டம் ஆரம்பித்த மறுவருடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து டிவிடெண்டை வழங்கி வருகிறது. இது சீனியர் சிட்டிசன் மற்றும் கேஷ் ஃப்ளோ தேவைப்படுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

சந்தை திடீரென்று ஏறும்போது, இந்த ஃபண்டின் ஏற்றம் சற்று மெதுவாக இருக்கும். ஆனால், சந்தை கரடியின் பிடியில் இருக்கும்போது அல்லது சமமான நிலையில் இருக்கும்போது, இதன் செயல்பாடு மிகவும் நன்றாக இருக்கும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav66c

ஆகவே, நீண்ட நாள் முதலீட்டை நாடுபவர்கள், நிலையான செயல்பாட்டை விரும்புபவர்கள், கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்கள், கோர் போர்ட்ஃபோலியோவுக்கு ஃபண்டைத் தேடுபவர்கள், எப்போதும் தரமான போர்ட்ஃபோலியோவை விரும்புபவர்கள் போன்ற அனைவரும் இந்த ஃபண்டில் எஸ்ஐபி/ எஸ்டிபி முறையிலும், சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் தாராளமாக முதலீடு செய்யலாம். குறைந்தது ஐந்து வருட முதலீட்டுக் காலம் உள்ளவர்கள் இந்த ஃபண்டில் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav66d

யாருக்கு உகந்தது?

அனைத்து வயதினர், முதல்முறை முதலீட்டாளர்கள், பணம் உபரியாக உள்ளவர்கள், சந்தை ஏற்ற இறக்கமாக உள்ளபோது நிலையான வருமானத்தை நாடுபவர்கள், ஸ்திரமான பங்கு சார்ந்த போர்ட்ஃபோலியோவை நாடுபவர்கள், பங்கு சார்ந்த முதலீட்டில் கன்ஸர்வேட்டிவ்வாக இருப்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த ஃபண்ட்
உகந்தது.

ஃபண்ட் பரிந்துரை : Nav66e

யாருக்கு உகந்ததல்ல!

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், முதலீடு செய்வதற்கு சர்ப்பிளஸ் இல்லாதவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், பங்குச் சந்தை குறித்த போதிய ஞானம் இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு இந்த ஃபண்ட்
உகந்ததல்ல.

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty ஃபண்ட் பரிந்துரை : ஐசிஐசிஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் - முதலீடு செய்க!

Post by தருண் Fri Jul 25, 2014 3:29 pm

ஃபண்ட் பரிந்துரை : ஐசிஐசிஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் - முதலீடு செய்க!
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


கடந்த வாரத்தில் ஒரு மிட் கேப் ஃபண்ட் குறித்து பார்த்தோம். இந்த வாரமும் இன்னொரு மிட் கேப் ஃபண்டை பரிந்துரைக்கிறோம். சந்தை காளையின் பிடியில் இருக்கும்போது இந்த வகையான ஃபண்டுகள் நல்ல வருமானம் தரும் என்பதே இதற்கு காரணம். இந்த ஃபண்டுகள் மிட் கேப் ஃபண்டுகளாக இருந்தபோதிலும், நல்ல ஸ்திரத்தன்மையுடன் செயல்படுபவை. ஆகவே, நீண்டகால நோக்கில், உங்களது பங்கு சார்ந்த போர்ட்ஃபோலியோவில் இந்த ஃபண்டுகளுக்கு சிறு இடம் தரலாம். இவற்றில் ரிஸ்க் அதிகம் என்றாலும், ரிவார்டும் ரிஸ்க்கையட்டி இருக்கும்.

ஐசிஐசிஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் அனைத்து துறைகளிலும் முதலீடு செய்யக்கூடிய ஒரு டைவர்ஸிஃபைடு திட்டமாகும். இந்த ஃபண்ட், துறைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆகவே, தன்னைத்தானே குறியீட்டில் உள்ள துறைகளின் சதவிகிதத்துடன் ஒப்பிட்டுக்கொள்வதில்லை. இதன் தாரக மந்திரம் தனது போர்ட்ஃபோலியோவில் வேல்யூ பங்குகள் இருக்க வேண்டும் என்பதுதான். வேல்யூ என்று நாம் கூறுவது, சராசரி சந்தை மதிப்பைவிட குறைவான பி/இ மற்றும் குறைவான பி/பிவி அல்லது அதிகமான டிவிடெண்ட் யீல்டை கொண்டுள்ள பங்குகளாக இருக்கும்.

இதுபோன்ற பங்குகளை இந்த ஃபண்ட் வாங்கும்போது, பொதுவாக அந்தப் பங்குகள் சந்தையால் நிராகரிக்கப்பட்டவையாக இருக்கும். பொதுவாக, ஒரு பங்கு விலை உயர்வதற்கு இரண்டு வருடம் ஆகும் எனில், அது எவ்வளவு தரமான நிறுவனமாக இருந்தாலும், அந்தப் பங்கை யாரும் வாங்கமாட்டார்கள். அதுபோன்ற பங்குகள்தான் இந்த ஃபண்டுக்கு மிகவும் பிடித்தமானவை.

ஏனென்றால், அந்தப் பங்குகள் தேவை குறைவினால் மிகக் குறைந்த விலைக்கு வர்த்தகமாகும். இந்த ஃபண்டினால் இரண்டு, மூன்று வருடங்கள் தாராளமாகக் காத்திருக்க முடியும். ஆகவேதான், இதன் போர்ட்ஃபோலியோ டேர்னோவர்
விகிதம் மிகவும் குறைவாக (36%) இருக்கிறது.

இந்த ஃபண்டின் மேனேஜர் மிரினால் சிங். இவர், 2008-ம் ஆண்டு ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் ஈக்விட்டி அனலிஸ்ட்டாகச் சேர்ந்து, 2009-ல் ஃபண்ட் மேனேஜராகப் பதவி உயர்த்தப்பட்டார். 2011-லிருந்து இதன் ஃபண்ட் மேனேஜராக உள்ளார்.

இந்த ஃபண்ட் சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஏற்ற இறக்கத்துடன் செயல்பட்டு வந்தது. காரணம், முழுவதுமாக மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்ததுதான். சந்தை இறங்கும்போது, ரிடெம்ப்ஷன் பிரஷர் சற்றுக் கூடுதலாக இருக்கும். அந்த நேரத்தில் மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகள் சந்தையைவிட அதிகமாக விழும். விழுவதோடு மட்டுமல்லாமல், லிக்விடிட்டி பிரச்னையும் இருக்கும்.

இந்தப் பிரச்னையை சமாளிக்க, கடந்த சில ஆண்டுகளுக்குமுன் லார்ஜ் கேப் பங்குகளையும் தனது போர்ட்ஃபோலியோவில் அறிமுகம் செய்தது. தற்போது 30 சதவிகிதத்துக்கு மேல் லார்ஜ் கேப் பங்குகளைத் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளது. இந்த மாற்றத்தினால் ஏற்ற இறக்கம் குறைந்து, கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நன்றாகச் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஐந்து வருடத்தில் மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகளில், வருமானத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது ரூ.3,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

இதன் போர்ட்ஃபோலியோவில் 47% மிட் கேப் பங்குகளும், 22% ஸ்மால் கேப் பங்குகளும் இடம் பெற்றுள்ளன. இன்ஜினீயரிங், கன்ஸ்ட்ரக்ஷன், சர்வீசஸ் போன்ற துறைகளில் இந்த ஃபண்ட் ஓவர்வெயிட்டாகவும், எனர்ஜி, டெக்னாலஜி போன்ற துறைகளில் அண்டர்வெயிட்டாகவும் உள்ளது. ஐசிஐசிஐ வங்கியைத் தவிர (7.51%), வேறு எந்தப் பங்கும் இதன் போர்ட்ஃபோலியோவில் 5 சதவிகிதத்துக்கு அதிகமாக இல்லை.

ஃபண்ட் பரிந்துரை : Nav24c

அதிக லீவரேஜ் (கடன்) உள்ள நிறுவனங்களில் இந்த ஃபண்ட் முதலீட்டைத் தவிர்க்கிறது. அதேபோல், சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்வதால், அந்த நிறுவனங்களின் மேனேஜ்மென்ட்டுடன் இந்த ஃபண்டின் டீம் தொடர்ந்து தொடர்பில் இருந்து, தனது முதலீட்டைக் கண்காணித்து வருகிறது.

ஃபண்ட் ஆரம்பித்தபோது (9+ ஆண்டுகளுக்கு முன்பு) முதலீடு செய்த ரூ.1 லட்சம், தற்போது ரூ.8.85 லட்சமாக உள்ளது. இந்த வருமானம், சிஏஜிஆர் அடிப்படையில் 25.02 சதவிகிதத்துக்கு ஈடாகும். இந்த அளவுக்கு வரியில்லாத (12 மாதங்களுக்கு மேல்) வருமானத்தை வேறு எந்த ரக முதலீட்டிலும் பார்க்க முடியாது. இந்த ஃபண்ட், சந்தை கரடியின் பிடியில் இருக்கும்போது மிக நன்றாகச் செயல்படும் தன்மை யுடையது. அதேசமயம், சந்தை காளையின் பிடியில் இருக்கும்போது, சந்தையைவிட மிகவும் நல்ல வருமானம் கொடுக்கும். என்றாலும், இருப்பதிலேயே டாப்-ஆக இருக்காது. இந்தக் குணாதிசயம் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நன்மையைத் தரும்.

வருடத்தில் ஓரிருமுறை டிவிடெண்ட் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைப்பவர்கள், இந்த ஃபண்டில் டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்லலாம். ஃபண்ட் ஆரம்பிக்கப்பட்ட மறு ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்த மார்ச் வரை டிவிடெண்ட் வழங்கியுள்ளது. பல ஆண்டுகளில் வருடத்துக்கு இருமுறை டிவிடெண்ட் வழங்கியுள்ளது. இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.28.32 (01072014).

ஃபண்ட் பரிந்துரை : Nav24b

இது ஒரு மிட் கேப் ஃபண்ட் என்பதால், இதை நிர்வகிக்கும் சொத்து அதிகமாகும்பட்சத்தில் வருங்காலத்தில் மொத்த முதலீடுகளை இந்த ஃபண்ட், ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட் போல, தவிர்க்கவும் வாய்ப்புண்டு. இந்திய பொருளாதாரத்தின் அடுத்த 5/10/20 வருட கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, ரிஸ்க் எடுக்கக்கூடிய முதலீட்டாளர்கள் இந்த ஃபண்டில் மொத்தமாகவும் (சந்தை சரிவைப் பயன்படுத்தி), எஸ்ஐபி மற்றும் எஸ்டிபி முறையிலும், குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்காவது தேவைப்படாத பணத்தைத் தாராளமாக முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav24a

யாருக்கு உகந்தது?

இளம் வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தை அதிகம் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், பணம் உடனடியாக தேவைப்படாதவர்கள்.

யார் முதலீடு செய்யக்கூடாது?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படு பவர்கள், உறுதியான, நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty ஃபண்ட் பரிந்துரை! ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்டு ஃபண்ட்: முதலீடு செய்க

Post by தருண் Fri Aug 01, 2014 9:19 am

ஃபண்ட் பரிந்துரை!
ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்டு ஃபண்ட்: முதலீடு செய்க
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


சமீபத்தில் வந்த பட்ஜெட்டில் நமது மத்திய நிதி அமைச்சர் 80சி பிரிவின் கீழ் கிடைக்கும் வருமான வரிச் சலுகையை அனைவருக்கும்  ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தியுள்ளார். அந்த ரூ.1.50 லட்சத்தில் இஎல்எஸ்எஸ் (ELSS – Equity Linked Savings Scheme)என்று சொல்லக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்ட முதலீடும் அடக்கம். அவ்வாறு வரிச் சலுகை தரக்கூடிய திட்டங்களுள் ஒன்றான ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்டு திட்டத்தைப் பற்றி விரிவாக இந்த வாரம் பார்ப்போம்.

80சி பிரிவின் கீழ் வரும் முதலீடுகளில் மிகக் குறுகிய லாக்இன் உள்ள முதலீடு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாகும். இதன் லாக்இன் காலம் 3 வருடங்கள் தான். இ்ந்த முதலீட்டில் டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்பவர்களுக்கு, வருடா வருடம் டிவிடெண்ட் கையில் கிடைத்துவிடும். வரிச் சலுகையும் கிடைக்கும்; கையில் கேஷ் ஃப்ளோவும் கிடைக்கும். 80சி பிரிவின் கீழ் இதுபோன்ற வசதி இருக்கும் முதலீடுகள் வெகு சிலவே.

பல சிறு முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதல்முறை நுழைவது வரியைச் சேமிக்கத்தான். வரியைச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல், இந்தத் திட்டங்கள் நீண்ட காலத்தில் நல்ல வளர்ச்சியைத் தந்துள்ளன/ தரக்கூடியவை.
இந்தத் திட்டம் ஏப்ரல் மாதம் 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2007ம் ஆண்டிலிருந்து ஆனந்த்  ராதாகிருஷ்ணன் இதன் ஃபண்ட் மேனேஜராக உள்ளார். 2011ம் ஆண்டிலிருந்து இவருடன் அனில் பிரபுதாஸ் என்பவரும் நிர்வகித்து வருகிறார். ஆனந்த் ராதாகிருஷ்ணன் ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் மற்றும் ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் போன்ற ஃபண்டுகளையும் நிர்வகித்து வருகிறார். ஃப்ராங்க்ளின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஒரு நல்ல செயல்பாடு மற்றும் செயல்முறைகளைக் கொண்ட நிறுவனமாகும். சென்னையில் இயங்கி வரும் வெகுசில ஃபண்ட் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

இந்தத் திட்டம் 63 சதவிகிதத்தை லார்ஜ் கேப் பங்குகளிலும், 33 சத விகிதத்தை மிட் கேப் பங்குகளிலும், எஞ்சியதை ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், இன்போஃசிஸ்,
ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்குகளாக உள்ளன. அமரராஜா பேட்டரீஸ், கும்மின்ஸ் இந்தியா, பிடிலைட், கரூர் வைஸ்யா பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க், கிரீவ்ஸ் காட்டன், பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் போன்ற மிட் கேப் பங்குகள் இதன் போர்ட்ஃபோலியோவில் இடம் பெற்றுள்ளன்ன. ஃபைனான்ஸ் மற்றும் ஹெல்த்கேர் துறைகளில் ஓவர்வெயிட்டாகவும், எனர்ஜி, டெக்னாலஜி போன்ற துறைகளில் அண்டர்வெயிட்டாகவும் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் (2003–2013) இரண்டு ஆண்டுகளைத் தவிர (2006 மற்றும் 2016, ஒவ்வொரு ஆண்டும் நிஃப்டி 50 குறியீட்டவிட சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த ஃபண்ட் ஸ்டெடியாகச் செயல்படும் திட்டமாகும். ஆகவே, அக்ரெஸிவ்வான (அதேசமயம் ஏற்ற இறக்கம் அதிகமுடைய) வருமானத்தை விரும்புபவர்கள் இந்த ஃபண்டை நாட வேண்டாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav54a

இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (ஏப்ரல் 10, 1999) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், இன்றைய தினத்தில் (ஜூலை 18, 2014) ரூ.33 லட்சத்துக்கும் மேலாக உள்ளது. இது கூட்டு வட்டியில் ஏறக்குறைய ஆண்டுக்கு 25.72% (சிஏஜிஆர்) வருமானத்துக்குச் சமம். இது ஓர் உன்னதமான வருமானமாகும்.

இந்த ஃபண்டில் குறைந்தபட்ச மொத்த முதலீடு, மறுமுதலீடு மற்றும் எஸ்ஐபி முதலீடு என அனைத்தும் ரூ.500தான். இது குறைந்தபட்ச முதலீடு செய்ய விருப்பப்படும் பல முதலீட்டாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷன், ஆரம்பித்த மறு ஆண்டிலிருந்து ஒரு சில ஆண்டுகளைத் தவிர (2002, 2003, 2009), தொடர்ந்து இந்த ஆண்டுவரை டிவிடெண்டை வழங்கியுள்ளது. 2000 மற்றும் 2007ம் ஆண்டுகளில் இருமுறை டிவிடெண்டையும் வழங்கியுள்ளது. இதன் டிவிடெண்ட் ஆப்ஷன் என்ஏவி ரூ.36.59 ஆகும். கேஷ் ஃப்ளோவை விரும்புபவர்கள் டிவிடெண்ட் ஆப்ஷனை நாடிச் செல்லலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav54c

நீண்ட கால செயல்பாட்டைக் கொண்ட இந்தத் திட்டதில் எஸ்ஐபி முறையிலும், சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும், வரிச் சலுகை பெற விரும்புபவர்கள், முதலீடு செய்யலாம். எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும்போது ஒவ்வொரு மாத முதலீட்டுக்்கும், 3 வருட லாக்இன் என்பதை நினைவில் கொள்க.

யாருக்கு உகந்தது?

மாத சம்பாத்தியம் ரூ.2 லட்சத்துக்கு மேல் இருந்து, 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கை எதிர்பார்ப்பவர்கள், அவ்வாறு செய்யும் முதலீட்டில் ரிஸ்க் எடுத்து, அந்த ரிஸ்குக்கு ஏற்றாற்போல வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள்.

ஃபண்ட் பரிந்துரை : Nav54d

யாருக்கு உகந்ததல்ல!

80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை தேவைப்படாதவர்கள், ரிஸ்க் எடுக்க விருப்பமில்லா தவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புகிறவர்கள், பங்குச் சந்தை குறித்து போதிய ஞானம் இல்லாதவர்கள்.

ஃபண்ட் பரிந்துரை : Nav54b

[/b]


ந.விகடன்


Last edited by தருண் on Thu Jun 30, 2016 9:33 am; edited 1 time in total

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty பண்ட் பரிந்துரை!

Post by தருண் Mon Aug 04, 2014 3:45 pm

பண்ட் பரிந்துரை!
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

சென்ற வாரம் 80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை தரக்கூடிய ஒரு ஃபண்டைப் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்து தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்டைப் பற்றி விரிவாகக் காண்போம்.

இது 6,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்தை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் சைலேஷ் ராஜ் பான். இவர் இந்த ஃபண்டை 2005-ம் ஆண்டிலிருந்து நிர்வகித்து வருகிறார்.

இது மார்ச் 2005-ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மல்டி கேப் திட்டமாகும். இந்த ஃபண்ட் சந்தைக்கு ஏற்ப தனது போர்ட்ஃபோலியோவை மாற்றிக்கொள்ளும். சில சமயங்களில் லார்ஜ் கேப் பங்குகளில் அதிகமாக முதலீட்டை வைத்துக்கொள்ளும்; சில சமயங்களில் மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளில் அதிகமாக முதலீட்டை வைத்துக்கொள்ளும். தற்போது இதன் போர்ட்ஃபோலியோவில் 33 சத விகிதத்தை லார்ஜ் கேப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளிலும் வைத்துள்ளது.

அதேபோல், துறை சார்ந்த ஒதுக்கீட்டி லும் விகிதாசாரம், ஃபண்ட் மேனேஜரின் பார்வைக்கு ஏற்ப மாறுபடும். மேலும், எழும்பிவரும் துறைகளான இன்ஷூரன்ஸ், ரீடெய்ல், என்டர்டெய்ன்மென்ட் போன்ற துறை களுக்கு இந்த ஃபண்ட் தொடர்ந்து ஒரு ஒதுக்கீட்டைக் கொடுக்கிறது.

ஆக மொத்தத்தில், ஃபண்ட் மேனேஜர் தனது விருப்பம்போல முதலீட்டை மேற்கொள்ளும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபண்டின் இன்றளவுவரை உள்ள செயல்பாட்டைப் பார்க்கும்போது, ஃபண்ட் மேனேஜருக்குத் தரப்பட்ட சுதந்திரத்தை நன்றாகவே பயன்படுத்தியுள்ளது தெரிய வருகிறது.

இந்த ஃபண்டினுடைய மேனேஜரின் நோக்கம் லார்ஜ் கேப் பங்குகளின் நிரந்தரத் தன்மையையும், மிட் கேப் பங்குகளின் வளர்ச்சியையும் ஒருசேர பிடிப்பதுதான். அதனால் பொதுவாக 60:40 யுக்தியைக் கடைப்பிடிக்கிறது. அதாவது, எந்த நேரத்திலும் 60 சதவிகித லார்ஜ் கேப் பங்குகளும், 40 சதவிகித மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளும் இருக்கும். இல்லையேல் அதுவே உல்ட்டாவாக இருக்கும். அதுபோல் மிட் கேப் பங்குகள் சூடாகும்போது அவற்றை விற்றுவிட்டு, கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும் லார்ஜ் கேப் பங்குகளை வாங்குவதற்கு இந்த ஃபண்ட் யோசிப்பது இல்லை.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரும்போது லார்ஜ் கேப் சூடாகிவிடும். அதுபோன்ற சமயங்களில், ஃபண்ட் மேனேஜர் மிட் கேப் பங்குகளில் முதலீட்டை அதிகமாக்கிக் கொள்வார். இவ்வளவு செய்தும் இந்த ஃபண்டினு டைய டேர்னோவர் 27 சதவிகிதம்தான். இந்த விகிதம் ஃபண்ட் மேனேஜர் நீண்ட நாட்கள் பங்குகளைத் தனது போர்ட் ஃபோலியோவில் வைத்திருப்பதைக் காண்பிக்கிறது.

இன்ஜினீயரிங், சர்வீசஸ், ஹெல்த்கேர் போன்ற துறைகளில் ஓவர்வெயிட்டா கவும், ஃபைனான்ஸ் மற்றும் டெக்னாலஜி யில் அண்டர்வெயிட்டாகவும் உள்ளது. உதாரணத்துக்கு இன்ஜினீயரிங் மற்றும் சர்வீசஸ் துறைகளின் நிஃப்டி 50 வெயிட் முறையே 0.88% மற்றும் 0% ஆகும். ஆனால், இந்த ஃபண்டோ 15.76% (இன்ஜினீயரிங்) மற்றும் 13.63% (சர்வீசஸ்) வைத்துள்ளது.

நிஃப்ட்டி 50 குறியீட்டையொட்டி தனது போர்ட்ஃபோலியோவை அமைத்துக்கொள்ளாத போதிலும், கடந்த காலங்களில் (1, 3, 5 மற்றும் 7 வருடங்களில்) தொடர்ச்சியாகக் குறியீட்டைவிட அதிக வருமானத்தைக் கொடுத்துள்ளது. இது இந்த ஃபண்டினு டைய ஆல்ஃபாவிலிருந்து (Alpha) தெரிகிறது.

ஃபண்ட் பரிந்துரை : Nav38c

இந்த ஃபண்டினுடைய ஆல்ஃபா 7.58 ஆகும். இது குறியீட்டைவிட 7.58% அதிக வருமானம் கொடுத்துள்ளதைக் காண்பிக்கிறது. இந்த அளவு அதிக வருமானத்தைக் குறைந்த ரிஸ்க்கில் கொடுத்துள்ளது, அதைவிடச் சிறந்ததாகும்.

குறைவான ரிஸ்க் என்பது இந்த ஃபண்டின் பீட்டாவிலிருந்து (Beta) தெரிய வருகிறது. இந்த ஃபண்டின் பீட்டாவான 0.96 சந்தையைவிடக் குறைவான ரிஸ்க் எடுத்துள்ளதைக் காட்டுகிறது (பீட்டா 1 என்பது சந்தைக்கு ஈடான ரிஸ்க்).

ஃபண்ட் பரிந்துரை : Nav38d

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.30.66 ஆகும். ஃபண்ட் ஆரம்பித்த இரண்டாம் ஆண்டிலிருந்து, 2010-ம் ஆண்டைத் தவிர, ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து டிவிடெண்டை வழங்கியுள்ளது இந்த ஃபண்ட்.

ஹைரிஸ்க், ஹைரிவார்டை விரும்புபவர்கள், இளைஞர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர் கள் என அனைவரும் இந்த ஃபண்டில் எஸ்ஐபி முறையிலும், சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் முதலீட்டை தாராளமாக மேற்கொள்ளலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav38e

யாருக்கு உகந்தது?

இளம் வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.

யாருக்கு உகந்ததல்ல?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.

-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty மிரே அஸெட் இந்தியா ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட்

Post by தருண் Fri Aug 15, 2014 7:10 pm

ஃபண்ட் பரிந்துரை !
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


லார்ஜ் + மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்து தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டுவரும் மிரே அஸெட் இந்தியா ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்டைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம். திட்டத்தைப் பற்றி பார்க்கும்முன், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைப் பற்றி முதலில் பார்த்துவிடுவோம்.

ஆசியாவில் பெயர் சொல்லக்கூடிய அளவில் உள்ள பெரிய ஃபண்ட் நிறுவனங்களில் மிரே அஸெட் குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸும் ஒன்று. இந்த நிறுவனம் தனது முத்திரையை அமெரிக்கா, கனடா, பிரேசில், கொரியா போன்ற 12 நாடுகளில் பதித்துள்ளது. இது தென்கொரியா நாட்டைச் சேர்ந்த நிறுவனமாகும். உலகெங்கிலும் 58 பில்லியன் டாலர் களுக்கு மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

இந்த நிறுவனம் இந்தியாவில் நவம்பர் 2007-ம் ஆண்டு கால் பதித்தது. இந்த நிறுவனம் தற்போது ரூ.936 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் இது ஒரு சிறிய நிறுவனமாக இருந்தபோதிலும், இதனுடைய பங்கு சார்ந்த ஃபண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இந்தத் திட்டத்தை நாம் பரிந்துரை செய்கிறோம்.

இது லாபத்துடன் செயல்பட்டுவரும் நிறுவனமாகும். மேலும், இதனுடைய தாய் நிறுவனம் இந்தியப் பங்குச் சந்தைகளில் செய்யும் முதலீட்டுக்கு அட்வைஸ் செய்தும் பணம் ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் இன்றளவில் ஒரு சிறிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக இருப்பதால், ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளவர்கள், போர்ட்ஃபோலியோ டைவர்ஸிஃபிகேஷனுக்காகவும், நல்ல வருமானத்துக்காகவும் இந்தத் திட்டத் தில் தாராளமாக முதலீடு செய்யலாம். முதன்முறையாக மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்பவர்கள், இந்த ஃபண்டை தங்களின் இரண்டாவது அல்லது மூன்றாவது ஃபண்டாக வைத்துக்கொள்ளலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav34a

இந்தத் திட்டம் தற்போது ரூ.557 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்தத் திட்டம் இந்த நிறுவனத்தின் முதன்மையான (flagship) திட்டமாகும். தனது போர்ட்ஃபோலியோவில் மூன்றில் இரண்டு பங்கினை லார்ஜ் கேப் பங்கு களிலும், எஞ்சியதை மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. இதன் டாப் 10 பங்குகள் அனைத்தும் முன்னணி நிறுவனப் பங்குகளாகவே உள்ளது. நிஃப்டி 50 குறியீட்டை ஒப்பிடும்போது, ஹெல்த்கேர், சர்வீசஸ், இன்ஜினீயரிங் போன்ற துறைகளில் ஓவர்வெயிட்டா கவும், எனர்ஜி, டெக்னாலஜி, ஆட்டோ மொபைல் போன்ற துறைகளில் அண்டர்வெயிட்டாகவும் உள்ளது.

பங்குச் சந்தைக்குக் கடினமான காலமாகிய 2008-ம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து நிஃப்டி 50 குறியீட்டைவிட அதிக வருமானம் தந்துள்ளது பாராட்டத் தக்கது. உதாரணத்துக்கு கடந்த ஐந்து வருடங்களில், நிஃப்டி 50 குறியீடு ஆண்டுக்கு 10.40% வருமானத்தை சிஏஜிஆர் அடிப்படையில் கொடுத்துள்ளது. அதேசமயத்தில் இந்த ஃபண்ட் 18.8% தந்துள்ளது. கடந்த ஐந்து வருட செயல்பாட்டிலும் டாப் ஃபண்டு களில் ஒன்றாக உள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர் நிலேஷ் சுரானா, இந்த ஃபண்ட் ஆரம்பித்த திலிருந்து நிர்வகித்து வருகிறார்.

ஃபண்ட் பரிந்துரை : Nav34b

இந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில், குறியீட்டில் இருக்கும் அனைத்து துறைகளையும் வைத்துள்ளது. துறை சார்ந்த சதவிகிதம் ஏறக்குறைய குறியீட்டை ஒட்டியே இருக்கும். குறியீட்டில் இருக்கும் துறைசார்ந்த சதவிகிதத்திலிருந்து ஓரளவே தன்னை மாறுபடுத்திக் கொள்கிறது. அந்தந்த துறைகளுக்குள் இந்த ஃபண்ட் தேர்ந்தெடுக்கும்் பங்கு களில்தான் தனது வித்தியாசத்தைக் காட்டுகிறது. இதுவரை இந்த முறையில் மிகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்துள்ளது. பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்டும் இந்த யுத்தியைக் கடைப்பிடித்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இது ஒரு கைதேர்ந்த முறை என்பதால் இனிவரும் காலங்களிலும் இந்த யுக்தி வெற்றியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

இதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள லார்ஜ் கேப் பங்குகள் இந்த ஃபண்டுக்கு ஒரு ஸ்திரத்தன்மையைத் தருகிறது. அதேசமயத்தில் இதன் போர்ட்ஃபோலியோவில் மூன்றில் ஒரு பகுதி உள்ள தரமான மிட் கேப் பங்குகள் இந்த ஃபண்டுக்கு ஒரு கவர்ச்சியைத் தருகிறது. மேலும், இந்த ஃபண்ட் அக்ரெஸிவ்வான செயல்களைச் செய்வதில்லை. உதாரணத்துக்கு ஒரே துறையில் அதிகமான முதலீட்டைச் செய்வதில்லை. அதேபோல் ரொக்கமாக அதிக கையிருப்பு வைத்திருப்பதில்லை. எப்போதும் ரொக்க கையிருப்பு 5%-க்கு மிகாமல் பார்த்துக்கொள்கிறது. இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷன் திட்டம், ஆரம்பித்ததிலிருந்து 2011-ம் ஆண்டைத் தவிர, தொடர்ச்சியாக டிவிடெண்டை வழங்கியுள்ளது. டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.16.11 ஆகும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav34c

இந்த ஃபண்டின் தாரக மந்திரம் தொடர்ச்சியாக அல்லது நிலையாக (consistent) ஒரேமாதிரியான லாபத்தை ஈட்டித் தருவதாகும். முதலீட்டில் நிலையாக லாபத்தைத் தருவது அவ்வளவு எளிதான செயலல்ல. ஆகவே, தொடர்ச்சியாகக் குறியீட்டை விட அதிக வருமானத்தைப் பெற விரும்புபவர்கள், மிரே அஸெட் இந்தியா ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம். சந்தைச் சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் அல்லது தொடர்ந்து எஸ்ஐபி/ எஸ்டிபி முறையிலும் முதலீடு செய்யலாம்.

யாருக்கு ஏற்றது?

ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்துள்ளவர்கள், அனைத்து வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.

ஃபண்ட் பரிந்துரை : Nav34d


யாருக்கு உகந்ததல்ல?

முதல்முறை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள், குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.
-ந.விகடன்


Last edited by தருண் on Fri Mar 11, 2016 3:16 pm; edited 1 time in total

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty ஃபண்ட் பரிந்துரை! ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட்: முதலீடு செய்க

Post by தருண் Thu Aug 21, 2014 3:51 pm

ஃபண்ட் பரிந்துரை!
ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட்: முதலீடு செய்க
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட், மிட் அண்ட ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் ஒரு திட்டமாகும். இதன் போர்ட்ஃபோலியோ வில் 75% மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகள் உள்ளன. சமீபகாலமாக 20 சதவிகிதத்துக்கும் மேலான முதலீட்டை லார்ஜ் கேப் பங்குகளிலும் வைத்துக் கொள்கிறது.

இதன் ஃபண்ட் மேனேஜர் கென்னத் ஆண்ட்ரேட் ஆவார். இந்தியாவில் உள்ள முன்னணி ஃபண்ட் மேனேஜர் களில் இவரும் ஒருவர்.

பொதுவாக, மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்கள், சந்தை சரியும்போது சற்று அதிகமாகச் சரியும். ஆனால், இந்தத் திட்டமோ லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டம்போல, கரடிச் சந்தையில் செயல்படும். அதாவது, சந்தை சரியும்போது இதன் சரிவு குறைவாகவே இருக்கும். இதுவே இதன் சிறப்பம்சம். இதற்குக் காரணம், இந்த ஃபண்ட் தனக்குத்தானே வகுத்துக்கொண்டுள்ள உத்தியாகும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav60a

இந்த ஃபண்ட் கடனே இல்லாத நிறுவனங்களில் அல்லது மிகவும் குறைவாகக் கடன் வைத்துள்ள நிறுவனங்களிலேயே முதலீடு செய்கிறது. மேலும், அந்த நிறுவனங்கள் தாங்கள் விற்கும் பொருளில் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்வதோடு மட்டுமல்லாமல், நல்ல லாபத்தை ஈட்டும் நிறுவனமாக இருக்க வேண்டும். இவற்றுக்குமேல் பொருளாதார அகழியை (economic moat) கொண்ட நிறுவனமாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற பல ஃபில்டர்களைக் கொண்டு, இந்தத் திட்டம் தனது பங்குகளைப் பொறுக்குகிறது. இதனால் மிட் கேப் அல்லது ஸ்மால் கேப் பங்குகளாக இருந்தபோதிலும், இதன் போர்ட்ஃபோலியோ மிகவும் தரமாக உள்ளது. அதனால்தான் இதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளின் சராசரி பி/இ விகிதமும் (33.83) அதிகமாக இருக்கிறது. வளர்ச்சி உள்ள பங்குகளின் பி/இ விகிதம் எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும் என்பதால், இந்த ஃபண்டும் அதிக பி/இ மதிப்பில் உள்ள நிறுவனப் பங்குகளை வாங்கத் தயங்குவதில்லை.

இந்த ஃபண்டின் பீட்டா 0.85. இது சந்தையைவிட குறைவான ஏற்ற இறக்கம் உடையது என்பதைக் குறிக்கிறது. அதேசமயத்தில், இந்த ஃபண்டின் ஆல்ஃபா 7.10. இது குறியீட்டைவிட 7.10% அதிக வருமானத்தைக் கொடுத்துள்ளதைக் காண்பிக்கிறது.

எந்த மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவைப் பார்த்தாலும், ஒரேமாதிரி கம்பெனிகள்தான் இருக்கிறது என்று அங்கலாய்த்துக் கொள்பவர்களுக்கு, இந்த ஃபண்ட் மிகவும் பிடிக்கும். ஏனென்றால், இந்த ஃபண்டில் நீங்கள் ஒரு வித்தியாசமான போர்ட்ஃபோலியோவைக் காணலாம்.

உதாரணத்துக்கு, இதன் டாப் ஹோல்டிங்ஸாகக் கீழ்க்கண்ட பங்குகள் உள்ளன: காவேரி சீடு கம்பெனி, பேஜ் இண்டஸ்ட்ரீஸ் (ஜாக்கி உள்ளாடைகள் தயாரிப்பாளர்கள்), விஏடெக் வாபாக், புளூடார்ட் எக்ஸ்பிரஸ், பேட்டா இந்தியா. அதேபோல் நிஃப்டி குறியீட்டை ஒப்பிடும்போது, இந்த ஃபண்டின் துறை சார்ந்த ஒதுக்கீடும் மாறுபட்டிருக்கும். கெமிக்கல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், சர்வீசஸ், எஃப்எம்சிஜி, இன்ஜினீயரிங் போன்ற துறைகளுக்கு அதிக ஒதுக்கீட்டை இந்த ஃபண்ட் கொடுத்துள்ளது.

ஃபண்ட் பரிந்துரை : Nav60c

கடந்த 1, 3, 5, 7 வருடங்களில் இந்த ஃபண்ட் தொடர்ந்து நிஃப்டி குறியீட்டையும் தாண்டி வருமானம் தந்துள்ளது. இந்த ஃபண்ட் துவங்கப்பட்டு 8 ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. ஃபண்ட் ஆரம்பித்தபோது (செப்டம்பர் 15, 2005) ஒருவர் முதலீடு செய்த ரூ.1 லட்சமானது, இன்றைய தேதியில் ரூ.5,59,330-ஆக உள்ளது. இது கூட்டு வட்டியில் ஆண்டுக்கு 21.34 சதவிகித வருமானத்துக்கு சமம்.

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷன் 2009-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து டிவிடெண்ட்டை வழங்கி வருகிறது. இந்த ஆப்ஷனின் என்ஏவி ரூ.29.96 ஆகும். ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து மார்ச் மாதத்தில் டிவிடெண்ட் வழங்குவது குறிப்பிடத் தக்கது. ஓய்வுக்காலத்தில் டிவிடெண்ட் எதிர்பார்ப்பவர்கள் இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்லலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav60d

பங்குகளில் முதலீடு செய்ய விருப்ப முள்ளவர்கள், லார்ஜ் கேப் பங்குகளில் சுயமாக முதலீடு செய்துவிட்டு, மிட் கேப் பங்குகளுக்குப் பதிலாக ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி போன்ற மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளலாம்.

நல்ல லாபத்தை எதிர்பார்ப்பவர்கள், வேறுமாதிரியான போர்ட் ஃபோலியோவை நாடுபவர்கள், வரியில்லா நீண்ட கால முதலீட்டை நாடுபவர்கள், இளம் வயதினர், நேரடியாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பப்படாதவர்கள், வரியில்லா டிவிடெண்டை நாடுபவர்கள் என அனைவரும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav60e

இந்த ஃபண்டில் யார் முதலீடு செய்யக் கூடாது என்பதையும் சொல்லிவிடுகிறேன். குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்பு பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்கு பவர்கள், உபரிப் பணம் எதுவும் இல்லாதவர்கள்.

இந்த ஃபண்ட் பொதுவாக மொத்த முதலீட்டை அனுமதிப்பதில்லை. அவ்வப்போது மொத்த முதலீட்டை அனுமதிக்கிறது. தற்போது இந்த ஃபண்ட் மொத்த முதலீட்டை அனுமதித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஃபண்டில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வதற்குக் குறைந்தபட்ச தொகை மாதத்துக்கு ரூ.2,000 ஆகும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav60f

முதலீட்டாளர்கள் எஸ்ஐபி அல்லது எஸ்டிபி முறையில் தாராளமாக இந்த ஃபண்டில் தங்களின் நீண்ட காலத் தேவைகளுக்காக முதலீடு செய்யலாம்.

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty ஃபண்ட் பரிந்துரை! ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட்: முதலீடு செய்க

Post by தருண் Tue Aug 26, 2014 1:31 pm

ஃபண்ட் பரிந்துரை!
ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட்: முதலீடு செய்க
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


சென்ற வாரம் ஒரு மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டைப் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் கலப்பினத் திட்டமான ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட் பற்றிப் பார்ப்போம்.

கலப்பினத் திட்டங்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பேலன்ஸ்டு ஃபண்டுகள் ஒருவகை ஆகும். இந்த வகை ஃபண்டுகள் தங்களின் முதலீட்டில் மூன்றில் இரண்டு பகுதியை பங்கு சார்ந்த முதலீட்டிலும், மீதியைக் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன. இதனால் பங்குகளில் உள்ள வளர்ச்சியும், கடன் பத்திரங்களில் உள்ள ஸ்திரத்தன்மையும் ஒன்றாகச் சேர்ந்து முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், முழுக்க முழுக்கப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்களை ஒப்பிடும் போது, இந்தவகை ஃபண்டுகளில் ஏற்ற இறக்கம் குறைவாக இருக்கும்.

வருமான வரிச் சட்டத்தின்படி, 65%க்குமேல் போர்ட்ஃபோலியோவில் பங்குகள் இருக்கும்போது, அந்தத் திட்டங்கள் ஈக்விட்டி திட்டங்களுக்கு உண்டான வருமான வரி வரம்பின் கீழ் வரும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav64b

ஆகவே, இந்தவகை பேலன்ஸ்டு ஃபண்ட் திட்ட முதலீடுகளை ஓராண்டுக்குமேல் வைத்திருக்கும் பட்சத்தில் எந்தவிதமான வருமான வரியும் கிடையாது. அதேபோல், இந்தத் திட்டங்களிலிருந்து தரப்படும் டிவிடெண்டுகளுக்கும் எந்தவிதமான வருமான வரியும் கிடையாது. ஒருவர் தனியாகக் கடன் பத்திரங்களில் அல்லது ஃபிக்ஸட் டெப்பாசிட்களில் முதலீடு செய்யும்போது வருமான வரி உண்டு. அதே முதலீட்டை இந்தவகையான ஃபண்டுகளின் மூலம் செய்யும்போது வரி கிடையாது.

உதாரணத்துக்கு, நீங்கள் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்ய வைத்துள்ளீர் கள். அந்தப் பணத்தை நேரடியாக இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அல்லது அதிலிருந்து ரூ.35,000-த்தை லிக்விட் ஃபண்டுகள் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்துவிட்டு, மீதியை 100% பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். அவ்வாறு செய்யும்போது நீங்கள் செய்த ரூ.35,000 முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டி இருக்கும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav64c

இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோ மேனேஜர் சிராக் சேத்தல்வத் ஆவார். இவர் ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்சூனிட்டீஸ், ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்ட் போன்ற சிறப்பாகச் செயல்படும் திட்டங்களையும் நிர்வகித்து வருகிறார். இதே ஃபண்ட் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி புரூடென்ஸ் என்ற மற்றுமொரு பேலன்ஸ்டு திட்டத்தை நடத்தி வருகிறது.

அதன் ஃபண்ட் மேனேஜர் பிரஷாந்த் ஜெயின் ஆவார். புரூடென்ஸ் திட்டம் சந்தை காளையின் பிடியில் இருக்கும் போது மிகவும் நன்றாகச் செயல்படும். நாம் பார்க்கும் இந்தத் திட்டம் குறிப்பாகச் சந்தை கரடியின் பிடியில் இருக்கும்போது நன்றாகச் செயல்படும். ஆகவே, சற்று கன்ஸர்வேட்டிவ்வாக இருக்க விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் கனகச்சிதமாகப் பொருந்தும்

ஃபண்ட் பரிந்துரை : Nav64d

இந்தத் திட்டம் தற்போது 68.50 சதவிகிதம் பங்குகளிலும், எஞ்சியதைக் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ளது. இந்த ஃபண்ட் தனது பங்கு சார்ந்த போர்ட்ஃபோலியோவில் லார்ஜ், மிட், மற்றும் ஸ்மால் கேப் என அனைத்துவகை நிறுவனங்களிலும் முதலீடு செய்கிறது.

பங்குகளைத் தேர்வு செய்யும்போது தரமான நிறுவனங்களாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. மேலும், தத்தமது துறைகளில் முன்னணி நிறுவனமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வதோடு, நல்ல வளர்ச்சியுள்ள நிறுவனமா என்றும் பார்த்துக்கொள்கிறது. இதன் போர்ட்ஃபோலியோவில் அனைத்துப் பங்குகளும் 4 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது. துறை சார்ந்த முதலீடுகளில் நிதித் துறை (17.76%) முன்னணி வகிக்கிறது. அதற்குப்பிறகு ஹெல்த்கேர் (7.75%), டெக்னாலஜி (7.37%), மற்றும் ஆட்டோமொபைல் (7.06%) துறைகள் இடம்பிடித்துள்ளன.

இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (11/09/2000) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் இன்றைய தேதியில் (14/08/2014) ரூ.9,11,190-ஆக உள்ளது. இது கூட்டு வட்டியில் ஆண்டுக்கு 17.19% வருமானத்துக்கு சமம்

ஃபண்ட் பரிந்துரை : Nav64e

குறிப்பாக, சிராக் சேத்தல்வத்தின் நிர்வாகப் பொறுப்பில் இந்த ஃபண்ட் வந்ததிலிருந்து (ஏப்ரல் 2007), மிகவும் நன்றாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் காலகட்டத்தில் புரூடென்ஸ் ஃபண்டைவிடவும் சற்று அதிக வருமானத்தைக் கொடுத்துள்ளது.

மேலும், இந்த ஏழுக்கும் மேற்பட்ட வருடங்களில் (ஏப்ரல் 2007 – ஆகஸ்ட் 2014) இதே ஃபண்ட் நிறுவனத்தில் உள்ள ஹெச்டிஎஃப்சி டாப் 200 (16.05%) மற்றும் ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி (15.90%) ஃபண்டுகளைவிடவும், இன்னும் பல லார்ஜ் கேப் திட்டங்களைவிடவும் அதிகமான வருமானத்தை இந்தத் திட்டம் (16.69%) கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செயல்பாடு இந்த ஃபண்ட் மேனேஜரின் நிர்வாகத் திறனை எடுத்துக் காண்பிக்கிறது.

ஃபண்ட் பரிந்துரை : Nav64f

இந்தவகை ஃபண்டுகளின் மற்றொரு சிறப்புச் சொத்து ஒதுக்கீடு (asset allocation) ஆகும். சந்தை உச்சத்தில் இருக்கும்போது, ஃபண்ட் மேனேஜர் அதிகமாகக் கடன் பத்திரங்களுக்கு மாறிக்கொள்ளலாம்.
அதேபோல் சந்தை பாதாளத்தில் இருக்கும்போது, பங்கு சார்ந்த ஒதுக்கீட்டை அதிகரித்துக் கொள்ளலாம். இந்த ஒதுக்கீடு சாதாரண நபர்களால், அடிக்கடி செய்ய முடிவதில்லை.

மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு முதன்முறையாக வருபவர்களுக்கு, இந்த ஃபண்ட் ஒரு சிறந்த நுழைவாயிலாக இருக்கும்.
மேலும், 100 சதவிகித பங்கு சார்ந்த ஃபண்டுகளைவிட சற்று குறைவான ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள், ரிட்டையர்மென்ட்டுக்கு அருகாமையில் உள்ளவர்கள், குழந்தைகளின் கல்விக்காகச் சேமிப்பவர்கள் என அனைவரும் இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

ரெகுலராக மாத வருவாய் உள்ளவர்கள் எஸ்ஐபி முறையிலும், மொத்தமாகப் பணம் வைத்துள்ளவர்கள் சந்தை சரிவுகளைப் பயன்படுத்தியும் முதலீடு செய்யலாம்.
-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Sat Sep 06, 2014 3:53 pm

ஃபண்ட் பரிந்துரை!
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


இதுவரை முதலீட்டுக்கு உகந்த பல பங்கு சார்ந்த திட்டங்கள் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் வகைகளில் ஒன்றான டிஎஸ்பி – பிஆர் மணி மேனேஜர் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.

பொதுவாக, மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ரிஸ்க்தான்; ஏனென்றால் நாம் நினைப்பது பங்கு சார்ந்த திட்டங் களைத்தான். ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகள் நிர்வகிக்கும் சொத்துக்களில் மிகுதியானவை கடன் சார்ந்த திட்டங்கள்தான். கடன் சார்ந்த திட்டங்களில் ரிஸ்க்குக்கு ஏற்றாற்போல் பல வகைகள் உள்ளன.

கடன் சார்ந்த திட்டங்களிலேயே மிக மிகக் குறைந்த ரிஸ்க் உடையவை லிக்விட் ஃபண்டுகளாகும். அதற்கடுத்தாற் போல் உள்ள வகைதான் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள். எஸ்ஐபி போன்ற முதலீட்டு வசதிகள் பல ஃபண்ட் நிறுவனங்களில் லிக்விட் ஃபண்டுகளுக்குப் பரவலாகத் தரப்படு வதில்லை. ஆகவே, சில்லறை முதலீட்டா ளர்களுக்கு முதலீட்டுக்கு உகந்த அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் வகையை இங்கு எடுத்துக் கொண்டுள்ளோம்.

நம்மில் பலர் ஒரு பாதுகாப்பான உணர்வு கிடைப்பதற்காக, பெரிய தொகைகளை வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்த வட்டியில் (வருடத்துக்கு 4%) பல மாதங்களுக்குப் போட்டு வைக்கிறோம்.

அதுபோல் குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கு அல்லது இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்துவதற்கு என வங்கி சேமிப்புக் கணக்கிலேயே விட்டுவைக்கிறோம். அல்லது மகன்/ மகள் திருமணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் அந்தச் சேமிப்புக் கணக்கிலேயே பணத்தை விட்டு வைக்கிறோம்.

இன்னும் சிலர் ஷார்ட் டேர்ம் வங்கி டெபாசிட்களில் போட்டு வைக்கிறார் கள். இவை எல்லாவற்றையும்விட சற்று அதிக வருமானம் கிடைக்கக்கூடிய திட்டம்தான் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் வகையைச் சார்ந்த டிஎஸ்பி - பிஆர் மணி மேனேஜர் ஃபண்ட்.

இந்தத் திட்டம் மற்றும் இதுபோன்ற திட்டங்களில் உள்ள பெரிய சௌகரியம்: சேமிப்புக் கணக்கைப்போல எப்போது வேண்டுமானாலும் அபராதக் கட்டணம் ஏதும் இல்லாமல் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி; அதேசமயத் தில் சேமிப்புக் கணக்கைப்போல ஏறக்குறைய இரண்டு மடங்கு வருமானம் கிடைக்கும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav64b

இந்த ஃபண்ட் ரூ.2,400-க்கும் மேற்பட்ட தொகையை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் லௌகிக் பாக்வே ஆவார். இந்த ஃபண்டில் உள்ள உபகரணங்களின் சராசரி முதிர்ச்சி காலம் 0.27 ஆண்டுகள் (99 நாட்கள்) ஆகும்.

பொதுவாக, கடன் பத்திரங்களில் சராசரி முதிர்ச்சி காலம் குறைவாக இருந்தால், ரிஸ்க் குறைவு என்று அர்த்தம். இதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள உபகரணங்களில் 48 சதவிகிதம் 60 நாட் களுக்குள் உள்ள மெச்சூரிட்டியுடனும், 35 சதவிகிதம் 150 நாட்களுக்குள் உள்ள மெச்சூரிட்டியுடனும், மற்றவை அதற்குமேல் உள்ள மெச்சூரிட்டியுடனும் உள்ளது.
அதேபோல் இந்த ஃபண்டில் உள்ள உபகரணங்களின் ஆவரேஜ் கிரெடிட் ரேட்டிங் AAA ஆகும். இந்த ரேட்டிங் மிக மிகப் பாதுகாப்பான உபகரணங்களைக் கொண்டுள்ளது.

ஃபண்ட் பரிந்துரை : Nav64c

இதன் போர்ட்ஃபோலியோவில் 47% தரமான தனியார் துறை மற்றும் பொதுத்துறை நிறுவன கமர்ஷியல் பேப்பர்களிலும், 36% பொதுத்துறை வங்கிகளின் டெபாசிட்களிலும், மற்றவை தரமான நிறுவனங்களின் பாண்டுகள், என்சிடி-கள் மற்றும் டிரஷரி பில்களிலும் உள்ளது.

இந்த ஃபண்டில் முதலீடு செய்யும்போது சிறு முதலீட்டாளர்கள் குரோத் ஆப்ஷனில் செல்லலாம். குரோத் ஆப்ஷன் தவிர, தினசரி டிவிடெண்ட், வாராந்திர டிவிடெண்ட், மாதாந்திர டிவிடெண்ட், டிவிடெண்ட் ரீஇன்வெஸ்ட்மென்ட் என பலவித ஆப்ஷன்கள் உள்ளன.

ஆனால், டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்லும்போது 28.33% (தனி நபர்கள்) அல்லது 33.99% (கம்பெனிகள்) டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரியைப் பிடித்துக்கொண்டுதான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் டிவிடெண்டை கொடுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்க.

ஃபண்ட் பரிந்துரை : Nav64d

இந்தத் திட்டத்தில் நுழைவுக் கட்டணமோ அல்லது வெளியேற்றுக் கட்டணம் ஏதுமோ இல்லை. போட்ட சில நாட்களிலேயே பணத்தை எடுத்துக் கொள்ளலாம் அல்லது எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விட்டுவைக்கலாம். சில தினங்கள் அல்லது மிகக் குறுகிய காலத் தேவைகளுக்கு வருபவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டாம்.

குறைந்தது ஒரு மாதத்துகாகவாவது தேவைப்படாத பணத்தை இந்தத் திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம். தேவைப்படும்போது மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீடு ரூ.500 ஆகும். ஆகவே, சிறு முதலீட்டாளர்களுக்கு இது ஒரு கச்சிதமான முதலீட்டு வாய்ப்பாகும்.

எஸ்ஐபி மற்றும் மொத்த முதலீட்டை இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் துவக்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டை துவக்குவதற்கு எந்த நேரமும் நல்ல நேரமே.

ஃபண்ட் பரிந்துரை : Nav64e

அவ்வப்போது வங்கி சேமிப்புக் கணக்கில் தூங்கிக்கொண்டிருக்கும் பணத்தை இந்தத் திட்டத்துக்கு முதலீட்டாளர்கள் மாற்றிவிடலாம். பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ஒரு நாளாகும் (விடுமுறை தவிர்த்து). இந்தத் திட்டத்தில் ஆன்லைன் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

நாம் ஏற்கெனவே கண்டதுபோல், எந்த வயதினரும் தங்களுடைய குறுகிய காலத் தேவைகளுக்கு இந்தத் திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

உங்கள் பணம் உங்களது வங்கி சேமிப்புக் கணக்குகளில் தூங்காமல், முடங்கிக் கிடக்காமல் உங்களுக்காக வேலை செய்வதற்கு இது ஓர் அரிய முதலீட்டு வாய்ப்பாகும்.

யாருக்கு உகந்தது?

சேவிங்ஸ் கணக்கில் தூங்கிக் கொண்டிருக்கும் பணத்துக்கு, ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, சில நாட்களிலிருந்து சில மாதங்களுக்குள் பணம் தேவைப்படுபவர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் பணம் தேவைப்படுபவர்களுக்கு, சேவிங்ஸ் கணக்கைவிட அதிக வருமானம் பெற விரும்பும் முதலீட்டாளர்கள் போன்றவர்களுக்கு இந்த ஃபண்ட் உகந்தது.

யாருக்கு உகந்ததல்ல?

அதிக வருமானத்தைப் பெற விரும்புகிறவர்கள், அதிக ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள், கேரன்டீட் வருமானத்தைப் பெற விரும்பும் முதலீட்டாளர்கள் போன்றவர்களுக்கு இந்த ஃபண்ட் உகந்ததல்ல.

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Fri Sep 12, 2014 10:14 am

ஃபண்ட் பரிந்துரை!
ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட்: முதலீடு செய்க
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


இந்த வருட பட்ஜெட்டில் 80சி பிரிவின் கீழ் உள்ள வரிச் சலுகையை அதிகரித்ததிலிருந்து மக்களின் ஆர்வம், இந்தப் பிரிவின் கீழ் வரும் முதலீட்டு வகைகளில் அதிகரித்துள்ளது. 80சி-ன் கீழ் வரும் பலவகை முதலீடுகளில் டாக்ஸ் சேவர் அல்லது இஎல்எஸ்எஸ் (ELSS – Equity Linked Savings Scheme) என்று சொல்லக்கூடிய மியூச்சுவல் ஃபண்டு களும் அடக்கம். இந்தவகையில் சில வாரங்களுக்கு முன்பு ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்டு ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஆக்ஸிஸ் பேங்கினால் புரமோட் செய்யப்பட்டது. ஆக்ஸிஸ் பேங்க் 74.99% பங்கினையும், மீதியை யூ.கே-வைச் சார்ந்த ஸ்கிரோடர்ஸ்(Schroders) என்ற ஃபண்ட் நிர்வகிக்கும் நிறுவனமும் வைத்துள்ளது. ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் அக்டோபர் 2009-ல் ஆரம்பிக்கப்பட்டு, இன்றைய தினம் ரூ.11,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. பொதுவாக நாம் 5 ஆண்டுகளுக்குக் குறைவான செயல்பாடுள்ள திட்டங் களைப் பரிந்துரைக்கு எடுத்துக் கொள்வதில்லை. இருந்தபோதிலும் குறுகிய காலத்திலேயே இந்தத் திட்டம் தொடர்ச்சியாக நன்றாகச் செயல்பட் டுள்ளதால், இந்தவாரப் பரிந்துரைக்கு இந்தத் திட்டத்தை எடுத்துக் கொண்டுள்ளோம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav38

2009-ம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்த போது ரூ.1 கோடிக்கும் குறைவான சொத்துக்களைக் கொண்டிருந்த இந்தத் திட்டம், தற்போது ரூ.1,335 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த வேகமான வளர்ச்சிக்குக் காரணம் இதன் நல்ல செயல்பாடும், முதலீட்டாளர்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ள வருமானமும்தான்.

4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது ஒருவர் முதலீடு செய்த ரூ.1 லட்சமானது இன்று ரூ.2,51,531-ஆக உள்ளது. இது கிட்டத்தட்ட ஆண்டுக்கு 21.82% கூட்டு வட்டிக்குச் சமமாகும். மூன்றாண்டு கால அடிப்படையில் பார்க்கும்போது டாக்ஸ் சேவிங் வகை ஃபண்டுகளில் டாப்பராக உள்ளது.

ஃபண்ட் பரிந்துரை : Nav38a

இந்த ஃபண்டின் நல்ல செயல்பாட்டுக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அரசாங்க ஈடுபாடு இருப்பதால் இந்த ஃபண்ட் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விரும்புவதில்லை. நல்ல குவாலிட்டியான தனியார் துறை பங்குகளையே தனது போர்ட்ஃபோலியோ வில் வைத்துள்ளது. மற்றொன்று போர்ட்ஃபோலியோ அலோகேஷன் ஆகும்.

இந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில் 50% லார்ஜ் கேப் பங்குகளையும் எஞ்சியதை மிட் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. இந்த இரு காரணங்களுமே இந்த ஃபண்டுக்கு நல்ல வெற்றியைத் தந்துள்ளது. இவைதவிர அதிகமான லீவரேஜ் உள்ள நிறுவனங்களை இந்த ஃபண்ட் தொடுவதில்லை. மேலும், புரமோட்டரின்/ மேனேஜ்மென்ட்டின் கடந்தகால சொல்களையும் செயல்களையும் ஒப்பிட்டுப்பார்த்து, எந்த அளவுக்குச் சொன்னதைச் செய்துள்ளார்கள் என்று கவனிக்கிறது. இதுபோல் பல ஃபில்டர்களைக் கையாண்டு பங்குகளைப் பொறுக்குகிறது.

இதன் போர்ட்ஃபோலியோ கச்சிதமாக 36 பங்குகளைக் கொண்டுள்ளது. டாப் 10 பங்குகள் 51% இடத்தைப் பிடித்துள்ளன.
நிஃப்டி யுடன் ஒப்பிடும்போது நிதி, ஆட்டோ, டெக்னாலஜி, ஹெல்த்கேர் போன்ற துறைகளில் ஓவர்வெயிட்டாக உள்ளது.

ஃபண்ட் பரிந்துரை : Nav38b

இந்த ஃபண்டின் மற்றொரு சிறப்பம்சம் குறைந்த அளவு ரிஸ்க்கில் அதிக அளவு வருமானத்தைத் தந்துள்ளது தான். இந்த ஃபண்டின் பீட்டா 0.87; ஆனால் இதன் ஆல்ஃபா 10.0 ஆகும். நாம் இந்தப் பகுதியில் இதுவரை பார்த்த ஃபண்டுகளிலேயே மிகவும் குறைந்த ரிஸ்க்கில் அதிகமான ஆல்ஃபாவைக் கொண்டுள்ள ஃபண்ட் இதுதான்.

இந்த ஃபண்டின் நெகட்டிவ் என பார்த்தால் குறைந்தகாலச் செயல்பாடு, புதிய ஃபண்ட் நிறுவனம், அதிகமான டேர்னோவர் போன்றவை ஆகும். குறைந்தகாலமாக இருந்தபோதிலும் இதன் செயல்பாடு மிகவும் நன்றாக இருந்துள்ளது.

புதிய ஃபண்ட் நிறுவனமாக இருந்தபோதிலும், இதன் புரமோட்டர் நாம் எல்லோரும் அறிந்த ஆக்ஸிஸ் பேங்க் ஆகும். இந்த வங்கி வேகமாக வளர்ந்துவரும் ஒரு முன்னணி நிறுவனமாகும். டேர்னோவர் அதிகமாக இருப்பதின் முக்கியக் காரணம், இந்த ஃபண்டின் வேகமான வளர்ச்சி ஆகும். புதிய பணம் வேகமாக உள்ளேவரும் போது, அந்தப் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அதுவும் டேர்னோவர் விகிதத்தை அதிகப்படுத்தும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav38c

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.20.05 ஆகும். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட செயல்பாட்டில் மூன்று முறை டிவிடெண்டை வழங்கியுள்ளது. சில ஆண்டுகளில் இந்த ஃபண்டின் சொத்து மதிப்பு நிலையாகும்போது, தொடர்ச்சி யான டிவிடெண்டை வழங்குவதற்குத் தனக்குத்தானே வியூகம் அமைத்துக் கொள்ளும் என நம்புகிறோம். அதேபோல் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு நிலைபெறும்போது டேர்னோவர் விகிதமும் குறையும்.

கிட்டத்தட்ட இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோதிலிருந்தே இதன் ஃபண்ட் மேனேஜராக ஜினேஷ் கோப்பானி உள்ளார். இந்த ஃபண்டின் தொடர்ச்சியான சிறந்த செயல்பாட்டுக்கு இவரின் மேலாண்மை ஒரு முக்கியக் காரணமாகும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav38d

பல பாசிட்டிவ் அம்சங்கள் கொண்ட இந்த ஃபண்டில் 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை தேவைபடுபவர்கள் தாராளமாக எஸ்ஐபி முறையிலும், சந்தையின் சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டின் மிட் கேப் ஃபோக்கஸ், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் சூட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

யாருக்கு உகந்தது?

சம்பாத்தியம் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் இருந்து 80C பிரிவின் கீழ் வருமான வரி விலக்கை எதிர்பார்ப்பவர்கள், அவ்வாறு செய்யும் முதலீட்டில் ரிஸ்க் எடுத்து, எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்றாற் போல் வருமானத்தை எதிர்பார்ப்பவர் கள் ஆகியோருக்கு இந்த ஃபண்ட் உகந்தது.

யார் முதலீடு செய்யக்கூடாது?

80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை தேவைப்படாதவர்கள், ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாதவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் குறித்து போதிய ஞானம் இல்லாதவர்கள் ஆகியோருக்கு இந்த ஃபண்ட் ஏற்றதல்ல.

ந. விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Thu Sep 25, 2014 9:44 am

ஃபண்ட் பரிந்துரை!
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட்: முதலீடு செய்க


ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் உலகளவில் 35 நாடுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். இந்த ஃபண்ட் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து சுய ஒழுக்கத்துடன் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

உலகளவில் 900க்கும் மேற்பட்ட ட்ரில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் 1996ல் கால்பதித்தது. சொந்தமாக பல திட்டங்களைத் துவக்கி யதுடன், ஜூலை 2002ல் இந்தியாவில் அப்போது நடந்துவந்த பயோனியர் ஐடிஐ என்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை வாங்கியது. அந்த நிறுவனத்தில் இருந்துவந்த திட்டங்களுள் ஒன்றுதான், ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் திட்டமாகும்.

இந்தத் திட்டம் ஆரம்பித்தபோது (டிசம்பர் 01, 1993) ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு (09-09-2014) ரூ.77,11,240 ஆகும். அதாவது, உங்களின் முதலீடு 76 மடங்கு களுக்குமேல் அதிகரித்திருக்கும். சதவிகிதத்தில் பார்க்கும்போது இது 7,611% லாபம் ஆகும். இது கூட்டுவட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 23.25% வருமானத்துக்குச் சமம். இந்த லாபம் முழுவதுக்கும் ஒரு பைசாகூட வருமான வரி கிடையாது. இந்த அளவு வருமானத்தைப் பரவலாக, வேறு எந்த பேஸிவ்வான (passive) முதலீட்டிலும் முதலீட்டாளர்கள் பார்த்திருக்க முடியாது – நிலம், வீடு, தங்கம் உள்பட!
இந்த ஃபண்டின் மேனேஜர் ஆனந்த ராதாகிருஷ்ணன் மற்றும் ஆனந்த் வாசுதேவன் ஆவர். இந்த ஃபண்ட் தற்போது நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு ரூ.5,038 கோடியாகும். இந்த ஃபண்ட் தனது மெஜாரிட்டி முதலீட்டை லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளிலேயே வைத்துக்கொள்ளும் / கொள்கிறது.

ஃபண்ட் பரிந்துரை : P64

லார்ஜ் கேப் பங்குகளில் பொதுவாக ரிஸ்க் குறைவு. அதுபோல், இந்தியாவில் அல்லது உலகளவில் ஏற்படும் நிகழ்வு களினால், இந்தவகைப் பங்குகளுக்கு ஏற்படும் தாக்கமும் குறைவு. மேலும், இந்தியாவின் வளர்ச்சியில் பங்குபெற விரும்பும் எவரும் முதலில் நாடுவது இந்தவகைப் பங்குகளைத்தான்.

கடந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் எப்போதும் தனது போர்ட்ஃபோலியோவில் லார்ஜ் கேப் பங்குகளைத்தான் இந்த ஃபண்ட் வைத்துள்ளது. ஒருபோதும் இந்தக் கோட்பாட்டில் இருந்து மாறியதில்லை.

லார்ஜ் கேப் பங்குகளுக்குள்ளும் சிறந்த நிதிநிலைமையையும், தரமான நிர்வாகம் மற்றும் சந்தையில் முன்னிலை யில்
உள்ள நிறுவனப் பங்குகளை மட்டுமே பொறுக்குகிறது. அனைத்துத் துறைகளிலும் தனது முதலீட்டை வைத்துள்ளதால், ரிஸ்க் குறைகிறது. ஏறும் சந்தையில் சற்று அதிக வருமானம் தராவிட்டாலும் பரவாயில்லை; ஆனால், இறங்கும் சந்தையில் எனது முதலீடு ஸ்திரமாக இருக்க வேண்டும் என நினைப்பவர் களுக்கு இந்த ஃபண்ட் கனகச்சிதமாகப் பொருந்தும்.

ஃபண்ட் நிறுவனங்களைப் பொறுத்து, போர்ட்ஃபோலியோவை காளைச் சந்தைக்காக அல்லது கரடிச் சந்தைக்காக அமைக்கின்றன. அந்தவகையில் பார்த்தால், இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோ கரடிச் சந்தைக்காக அமைக்கப்பட்டது.

ஃபண்ட் பரிந்துரை : P64b

அதாவது, பிற ஃபண்டுகளுடன் ஒப்பிடுகை யில், கரடிச் சந்தையில் மிக நன்றாகச் செயல்படும். தற்சமயம் போல காளைச் சந்தையில், சற்று சுமாராகச் செயல்படும். ஆனால், நீண்ட காலத்தில் பார்க்கும்போது முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயைத் தந்துள்ளது; தந்துகொண்டி ருக்கிறது; தரவல்லது. இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி (09-09-2014) ரூ.41.09 ஆகும். கடந்த 15 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியான டிவிடெண்ட்டை இந்தத் திட்டம் வழங்கிக் கொண்டி ருக்கிறது.

கடந்த பத்து வருடங்களாக ஜனவரி அல்லது பிப்ரவரியில் டிவிடெண்ட்டை வழங்கி வருகிறது. இந்த ஃபண்டின் டிவிடெண்ட் யீல்டு ஏறக்குறைய எஃப்டி  வட்டியை ஒட்டி வந்துள்ளது – டிவிடெண்ட்டுக்கு வருமான வரி இல்லாதது போனஸ் ஆகும்

ஃபண்ட் பரிந்துரை : P64c

கம்யூனிகேஷன் துறையில், நிஃப்டியை ஒப்பிடும்போது, இந்த ஃபண்ட் ஓவர்வெயிட்டாக உள்ளது. இது இந்த ஃபண்டின் வருவாயை கடந்த காலங்களில் குறைத்துள்ளது. ஆட்டோ மொபைல் மற்றும் எனர்ஜி துறைகளில் அண்டர்வெயிட்டாக உள்ளது. கடந்த 11 வருடங்களில் மூன்று முறை நிஃப்டியை விடக் குறைவான வருவாயைத் தந்துள்ளது. மீதி எட்டு வருடங்களிலும் குறியீட்டைவிட அதிக வருமானத்தைத் தந்துள்ளது.

இந்த ஃபண்ட் ஒரு ப்ளைன் வெனிலா (Plain Vanilla) கேப் ஃபண்டுகள்தான் ஒருவரின் கோர் போர்ட்ஃபோலியோவில் (Core Portfolio) அதிகமான இடத்தைப் பிடித்திருக்க வேண்டும். அந்தவகையில் இந்த ஃபண்டுக்கு உங்கள் போர்ட் ஃபோலியோவில் முக்கிய இடம் உண்டு.

ஒழுக்கமான முதலீட்டு வழிமுறை களைக் கொண்ட ஃபண்டுகளை விரும்புபவர்கள், சற்று சர்ப்ளஸ் உள்ள முதியோர்கள், ரெகுலர் டிவிடெண்டை எதிர்பார்ப்பவர்கள், பங்கு சார்ந்த முதலீட்டில் குறைவான ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் பரிந்துரை : P64d

யாருக்கு உகந்தது?

அனைத்து வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், நீண்ட காலத்தில் குறைந்த ரிஸ்க்கில் பணத்தைப் பெருக்க நினைப் பவர்கள், பங்கு சார்ந்த முதலீடுகளில் குறைவான ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.

யார் முதலீடு செய்யக்கூடாது?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படு கிறவர்கள், நிலையான வருமானத்தை விரும்புகிறவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள் இந்த ஃபண்டில் முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது.
-ந. விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Mon Sep 29, 2014 3:42 pm

ஃபண்ட் பரிந்துரை
டாடா எத்திக்கல் ஃபண்ட்: முதலீடு செய்க
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


இஸ்லாமியர்கள் பலர் ஷரியா முறைக்கு உட்பட்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பு கிறார்கள். அவ்வாறு ஷரியா முறைக்கு உட்பட்டு முதலீட்டை மேற்கொள்ளும் ஃபண்டுகள் சந்தையில் வெகுசிலவே உள்ளன. அவற்றுள் நன்றாகச் செயல்பட்டுவரும் டாடா எத்திக்கல் ஃபண்டைப் பற்றி இந்த வாரம் காண்போம்.

டாடா மியூச்சுவல் ஃபண்ட் நம் அனைவருக்கும் தெரிந்த டாடா குழுமத்தைச் சார்ந்த நிறுவனமாகும். டாடா சன்ஸ் இந்த நிறுவனத்தின் புரோமோட்டர் ஆவர். டாடா சன்ஸ்-ன் 66% பங்குகளைத் தர்மம் செய்யும் டிரஸ்ட்டுகள் வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் ரூ.23,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

ஷரியா முறை முதலீட்டில் புகையிலை, மதுபானம், சூதாட்டம், லாட்டரி மற்றும் வட்டி சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங் களின் பங்குகள் இருக்கக்கூடாது.  ஆகவே, இந்த ஃபண்டும் அதுபோன்ற நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதில்லை. நிஃப்டி குறியீட்டில் நிதி சார்ந்த பங்குகளின் வெயிட்டேஜ் ஏறக்குறைய 30% உள்ளது.

ஃபண்ட் பரிந்துரை : Nav64a

ஆனால், இந்த ஃபண்டில் ஒரு நிதி சார்ந்த நிறுவனம்கூட இடம்பெற வில்லை. இந்தியாவில் வங்கி மற்றும் நிதி சார்ந்த துறைகள் பங்குச் சந்தையில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதால், அந்தத் துறை சார்ந்த முதலீடுகளே இல்லாமல் இருப்பது இந்த ஃபண்டுக்கு ஒரு சவால்தான்.

நிதி தவிர, ஷரியா முறையில் உள்ள பிற முதலீடுகளைத் தவிர்ப்பது இந்த ஃபண்டுக்கு அவ்வளவு சவாலாக இருக்காது. ஏனென்றால், பங்குச் சந்தை குறியீடுகளில் அவற்றின் தாக்கம் குறைவே. ஷரியா முறை முதலீட்டினால், இந்த ஃபண்டை நாம் பிற டைவர்ஸிஃபைடு ஃபண்ட் முதலீடு களுடன் ஒப்பிட முடியாது.

இந்தத் திட்டம் மே 24, 1996-ல் ஆரம்பிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு டாடா எத்திக்கல் ஃபண்ட் என்று பெயர் மாற்றப்பட்டு, அன்று முதல் ஷரியா முதலீட்டு விதிகளைக் கடைப்பிடித்து வருகிறது.

அதற்குமுன் இந்த ஃபண்ட் டாடா செலக்ட் ஈக்விட்டி என்று அழைக்கப்பட்டது. இதன் ஃபண்ட் மேனேஜர் பிரதீப் கோகலே. தற்போது ரூ.161 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

டெக்னாலஜி, எஃப்எம்சிஜி, எனர்ஜி, ஹெல்த்கேர், இன்ஜினீயரிங் போன்ற துறைகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, லூபின், டிவிஸ் லேபாரட்டரீஸ் போன்ற நிறுவனங்கள் இதன் டாப் 5 பங்குகளாக உள்ளன. இந்த ஃபண்டினுடைய பெஞ்ச்மார்க் சிஎன்எக்ஸ் 500 ஷரியா குறியீடு ஆகும். கடந்த 1 மற்றும் 3 வருடங்களில் இந்தக் குறியீட்டைவிட நன்கு செயல்பட் டுள்ளது.

ஷரியா முறையில் முதலீடு செய்வதில், முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்ட் தவிர, வேறு இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று, டாரஸ் எத்திக்கல் ஃபண்ட்; மற்றொன்று, கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் நடத்தும் ஷரியா பீஸ் என்ற இடிஎஃப் ஆகும். அவை இரண்டும் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மிகவும் குறைவு ஆகும்.

கடந்த 10 வருட வரலாற்றில் நிஃப்டி 50 குறியீட்டைவிட எட்டு முறை அதிக வருமானம் தந்துள்ளது. இந்த ஃபண்டின் ஏற்ற இறக்கம் குறைவாக உள்ளது என்பது இதன் பீட்டாவில் (0.76) இருந்து தெரிய வருகிறது. இதற்கு ஒரு முக்கியக் காரணம், வங்கிப் பங்குகள் போர்ட்ஃபோலியோவில் இடம் பெறாததுதான்.

ஃபண்ட் பரிந்துரை : Nav64c

அதேசமயத்தில், இந்த ஃபண்டின் ஆல்ஃபா 7.13 ஆகும். இதற்கு ஒரு முக்கியக் காரணம், நல்ல ஃபண்ட் மேலாண்மையுடன், இதன் போர்ட்ஃபோலியோவில் மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகள் சுமாராக 44% இருப்பதுதான். லார்ஜ் கேப் பங்குகள் ஏறக்குறைய 55% உள்ளது.

இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (மே 24, 1996) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், இன்றைய தேதியில் (ஆகஸ்ட் 31, 2014) ரூ.18,38,900-ஆக உள்ளது.

அதேபோல் கடந்த 18 வருடங்களில் ஒருவர் எஸ்ஐபி மூலம் மாதம் ரூ.1,000 செய்த முதலீடானது, தற்போது ரூ.18,58,209-ஆக உள்ளது.

ஃபண்ட் பரிந்துரை : Nav64d

ஷரியா முறைப்படி, இந்தியச் சந்தையில் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாக முதலீடு செய்ய விரும்புபவர் களுக்கு, டாடா எத்திக்கல் ஃபண்ட் ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும்.

அதேபோல் வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த பங்குகள் போர்ட்ஃபோலியோ வில் இருக்க வேண்டாம் என நினைப்பவர்களுக்கும், இது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாகும். முதலீட்டாளர்கள் எஸ்ஐபி மூலமாகவும், மேலும் சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav64e

யாருக்கு உகந்தது?

ஷரியா முறைப்படி முதலீடு செய்ய நினைப்பவர்கள், குறைந்த கடன் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், பணம் உடனடியாகத் தேவை இல்லாதவர்கள், போர்ட்ஃபோலியோவில் வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் இருக்க வேண்டாம் என நினைப்பவர்கள், சமூக அக்கறை கொண்ட முதலீட்டை நாடுபவர்கள் போன்ற முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்ட் உகந்ததாக இருக்கும்.

யாருக்கு உகந்ததல்ல?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படு பவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், ஷரியா முறை முதலீடு தேவைப்படாதவர்கள் போன்றவர்களுக்கு இந்த ஃபண்ட் உகந்தது அல்ல.

ஃபண்ட் பரிந்துரை : Nav64f

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Sun Oct 05, 2014 7:23 pm

ஃபண்ட் பரிந்துரை!
ஐசிஐசிஐ புரூ டைனமிக் பிளான்: முதலீடு செய்க
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ வங்கியின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில், மியூச்சுவல் ஃபண்ட் சொத்துக்களை நிர்வகிப்பதில், இரண்டாவது பெரிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. 1,18,000 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. முதல் இடத்தில் ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் உள்ளது.

இந்த நிறுவனம் நிர்வகிக்கும் அதிகச் சொத்துடைய திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்தத் திட்டம் நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு ரூ.4,254 கோடியாகும். இந்த நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அலுவலர் (Chief Investment Officer) சங்கரன் நரேன் ஆவார். அவரே  ஃபண்டின் மேனேஜரும் ஆவார்.

அவருடன் மித்துல் காலவாடியாவும் இணைந்து இந்த ஃபண்டினை நிர்வகித்து வருகிறார்.
இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (அக்டோபர் 31, 2002) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் இன்றைய தினத்தில் (செப்டம்பர் 19, 2014) ரூ.18,05,600-ஆக உள்ளது. இது கூட்டு வட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 27.54 சதவிகிதத்துக்குச் சமம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav64f

இந்த ஃபண்டானது பேலன்ஸ்டு ஃபண்ட் போன்ற சாயலில் செயல் படும். அதாவது, இந்த ஃபண்டில் பங்குகளுக்கும் கடன் உபகரணங் களுக்குமான அலோகேஷன் டைனமிக்காக இருக்கும். பொதுவாக, சந்தை ஏறிக் கொண்டிருக் கும்போது, போர்ட்ஃபோலியோவில் பங்குகளின் சதவிகிதம் குறைந்து, கடன் உபகரணங்களின் சதவிகிதம் ஏறும். அதுவே, சந்தை இறங்கும்போது உல்ட்டாவாக மாறும்.

தற்போது இதன் போர்ட்ஃபோலியோவில் ஏறக்குறைய 80 சதவிகிதம் பங்கு சார்ந்த முதலீட்டிலும், எஞ்சியது கடன் சார்ந்த முதலீட்டிலும் உள்ளது. அதிகபட்சமாக 35% வரை கடன் சார்ந்த உபகரணங்களிலும், 100% வரை பங்கு சார்ந்த முதலீட்டிலும் இந்தத் திட்டத்தினால் செல்ல முடியும். பங்குகளுக்கும் கடன் உபகரணங் களுக்குமான சதவிகிதத்தை சந்தை விலைக்கும் புத்தக மதிப்புக்கும் உள்ள விகிதாசாரத்தை வைத்து பிரதானமாக இந்த ஃபண்ட் முடிவு செய்கிறது. இது தவிர, வட்டி விகிதம், அரசாங்க வரவு-செலவுகள் போன்ற மேக்ரோ குறியீடு களையும் வைத்து முடிவு செய்கிறது.

ஃபண்ட் பரிந்துரை : Nav64a

தற்போது பங்கு சார்ந்த முதலீட்டில் ஏறக்குறைய 74% லார்ஜ் கேப் பங்கு களிலும், மீதமுள்ளவை மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஃபைனான்ஸ், எனர்ஜி மற்றும் டெக்னாலஜி இதன் டாப் துறைகளாக உள்ளன. பங்குகளில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் 9.36 சதவிகிதமும், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் முறையே 8.28%, 7.02 சதவிகிதமாகவும் உள்ளன. பிற பங்குகள் எல்லாம் போர்ட்ஃபோலியோவில் 5 சத விகிதத்துக்கும் குறைவாகவே உள்ளன. இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோ டேர்னோவர் 100 சதவிகிதத்துக்கும் மேல். இதன் முக்கிய காரணம், ஃபண்ட் மேனேஜர் பங்குகளைச் சற்று அதிகமாக வாங்கி விற்பதுதான்.

அதாவது, இந்த ஃபண்ட் கடைப்பிடிக்கும் டிஃபென்ஸிவ் யுக்திதான். அதாவது, சொத்தை, சந்தை நிலவரங்களைப் பொறுத்து, பங்கு களிலிருந்து கடன் சார்ந்த முதலீட்டுக்கும் அல்லது உல்ட்டாவாகவும் மாற்றுவது தான்.
இந்த ஃபண்டின் பீட்டா 0.85 என்பது சந்தையுடன் ஒப்பிடும்போது சற்று குறைவான ரிஸ்க்கை காண்பிக்கிறது.

அதேசமயத்தில், இதன் ஆல்ஃபா 5.38 ஆகும். குறைந்த ரிஸ்க்கில் நல்ல வருமானத்தை ஈட்டித் தருவதை இந்த இரண்டு அளவுகோல்களும் காண்பிக் கின்றன.

ஃபண்ட் பரிந்துரை : Nav64b

சந்தை நன்றாக இருக்கிறது; ஆனால் தான் செய்த முதலீட்டின் வருமானம் அவ்வளவு சரியாக இல்லை என்று எண்ணுபவர்களுக்கு, இந்த ஃபண்ட் பிரச்னையைத் தீர்த்துவைக்கும். மேலும், மொத்தமாக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு, 100% ஈக்விட்டி திட்டங்களைவிட இந்த ஃபண்ட் நன்றாகப் பொருந்தும். ஏனென்றால், இதனுள் இருக்கும் டைனமிக் அசெட் அலோகேஷன் மாடல் ஏற்ற இறக்கத்தைக் குறைக்கிறது. இந்த ஃபண்ட் பிர்லா சன் லைஃப் ஃபிரன்ட் லைன் ஈக்விட்டி, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் போன்ற திட்டங்களுக்கு ஈடாக கடந்த 11 வருடத்தில் வருமானத்தைக் கொடுத்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு ஆண்டைத் (2007) தவிர, மீதமுள்ள ஒன்பது ஆண்டுகளிலும் நிஃப்டி குறியீட்டைவிட அதிக வருமானம் தந்துள்ளது. காளைச் சந்தையைவிட கரடிச் சந்தையில் இந்தத் திட்டம் நன்றாகச் செயல்படும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav64c

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.24.17 ஆகும். 2005-லிருந்து தொடர்ச்சியாக இந்தத் திட்டம் டிவிடெண்ட் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டிலிருந்து தீபாவளிக்கு சற்று முன்பாக டிவிடெண்ட் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பழக்கம் இனிவரும் ஆண்டுகளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால முதலீட்டை நாடுபவர்கள், சற்று குறைவான ரிஸ்க்குள்ள ஈக்விட்டி ஃபண்டை நாடுபவர்கள், நல்ல தரமான ஃபண்ட் மேனேஜேரை தேடுபவர்கள் என அனைவரும் இந்தத் திட்டத்தில் எஸ்ஐபி மூலமாகவும், சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் முதலீடு செய்யலாம்.

யாருக்கு உகந்தது:

அனைத்து வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், பணம் உடனடியாக தேவை இல்லாதவர்கள், நீண்ட காலத்தில் குறைந்த ஏற்ற இறக்கத்துடன் நல்ல வருவாயை ஈட்ட நினைப்பவர்கள்.

ஃபண்ட் பரிந்துரை : Nav64e

யாருக்கு உகந்ததல்ல:

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உத்தரவாதமான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், குறுகிய காலத்தில் ஏற்படும் மதிப்பு இழப்பை ஜீரணிக்க முடியாதவர்கள்.
--ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Fri Oct 10, 2014 11:38 am

ஃபண்ட் பரிந்துரை!
ரிலையன்ஸ் பார்மா ஃபண்ட்: முதலீடு செய்க
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


ரிலையன்ஸ் பார்மா ஃபண்ட். இதன் பெயரில் உள்ளதுபோல, மருந்துத் துறை சார்ந்த ஃபண்டாகும். பொதுவாக, துறை சார்ந்த ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம் என்பதால், சிறிய முதலீட்டாளர்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதன்முறையாக முதலீடு செய்ய வருபவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம். ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருபவர்கள் (தங்களது போர்ட் ஃபோலியோவை டைவர்ஸிஃபைடு செய்வதற்காகவும்) மற்றும் இந்தத் துறை பற்றிய ஞானம் உள்ளவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

இந்த ஃபண்டை பரிந்துரை செய்வதற்கான காரணம் என்ன?

மருந்துத் துறை இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் டிமாண்ட் வளர்ந்துகொண்டே வரக்கூடிய துறை களில் ஒன்றாகும். இந்திய மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குப் பெருவாரியாக ஏற்றுமதி செய்கின்றன. மேலும், காப்புரிமையை (Patent) விட்டு வெளிவரும் மருந்துகளைத் தயாரிப்பதில் இந்திய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்திய நாடு பொருளாதாரத்தில் மேம்பட்டுவரும் இந்தக் காலகட்டத்தில், மருந்துத் துறையின் வளர்ச்சி அமோகமாக இருக்கும். ஏனென்றால், மக்களின் வருமானம் அதிகரிக்கும்போது, உடல் நலத்துக்குச் செலவிடும் தொகை யும் அதிகமாகும்.

மேலும், நம் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக கான்ட்ராக்ட் அடிப்படையில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி (CRAMS – Contract Research and Manufacturing Business) செய்துதரும் தொழிலும் பெருகி வருகிறது. நடப்பு ஐந்து வருடத்தில் (2010 –2015) இந்திய உள்நாட்டு மருந்துச் சந்தையின் வளர்ச்சி சிஏஜிஆர் அடிப்படையில் ஆண்டுக்கு 16% இருக்கும் என கிரிஸில் நிறுவனம் கணக்கிட்டுள்ளது. அதேபோல், மருந்து ஏற்றுமதியின் வளர்ச்சி ஆண்டுக்கு 17 சதவிகிதமும், கிரேம்ஸ் செயல்பாட்டின் வளர்ச்சி 33 சதவிகிதமாகவும் இருக்கும் எனவும் அதே நிறுவனம் கணக்கிட்டு உள்ளது.

ஃபண்ட் பரிந்துரை : Nav54

இந்திய மருந்து நிறுவனங்கள் உலகளவில் 100-க்கும் மேலான நாடு களுக்கு ஏற்றுமதி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை, ஐ.டி நிறுவனங்களைவிட அதிகமானது. நமது உள்நாட்டு மருந்துச் சந்தையின் வால்யூம் உலகளவில் நான்காவது பெரிய சந்தை யாகும். மேலும், நமது மருந்துத் துறையின் சராசரி வளர்ச்சி நமது ஜிடிபியைப்போல் ஒன்றரை மடங்குக்கும்மேல்.

ஆகவே, இந்தத் துறை ஒரு எவர்கிரீன் துறையாகும். குறுகிய காலத்தில் சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நீண்ட காலத்தில் நல்ல வருவாயைத் தரவல்லது. இந்த ஃபண்டில் செய்யப்போகும் முதலீட்டை மக்கள் எந்த இலக்குக்காகவும் செய்யாமல், சொத்தினைப் பெருக்குவதற் காக (Wealth Creation) செய்யலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav54f

இந்த ஃபண்டின் மேனேஜர் சைலேஷ் ராஜ் பான் ஆவார். இவரே, நாம் ஏற்கெனவே இந்தப் பகுதியில் பரிந்துரைத்த ரிலையன்ஸ் ஈக்விட்டி ஃபண்டின் மேனேஜரும் ஆவார். இந்த ஃபண்ட் தற்போது ரூ.809 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (ஜூன் 05, 2004) ஒருவர் செய்த முதலீடு ரூ.1 லட்சம், தற்போது (செப்டம்பர் 26, 2014) ரூ.11,86,520-ஆக உள்ளது. இது கூட்டு வட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 27.10 சதவிகிதத்துக்குச் சமம். 2004-ம் ஆண்டில் முதலீட்டுக்காக வாங்கிய வீடோ, நிலமோ அல்லது தங்கமோ, இந்த அளவு (11 மடங்குக்கும் மேலான) வருமானத்தைத் தந்திருக்குமா என்பது சந்தேகமே!

இந்த ஃபண்ட் ஏறக்குறைய 45 சத விகிதத்தை லார்ஜ் கேப் பார்மா நிறுவனப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் அண்ட் ஸ்மால் கேப் பார்மா நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்து உள்ளது. அபாட் இந்தியா, டிவிஸ் லேபாரட்டரீஸ், கெடிலா, லூபின் மற்றும் சன் பார்மா இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இந்த ஃபண்ட் கடந்த 1, 2, 3, 5 மற்றும் 10 வருட காலங் களில் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் நிஃப்டி 50 குறியீட்டைவிட அதிக வருமானம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபண்ட் பரிந்துரை : Nav54e

இந்த ஃபண்ட் கடந்த 9 ஆண்டுகளில் (2005 – 2013) நான்கு முறைதான் பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீட்டைவிட அதிக வருமானம் தந்துள்ளது. மீதி ஆண்டுகளில் அந்தக் குறியீட்டுடன் ஒப்பிடும்போது அதிகபட்சமாக 5% வரை நெகட்டிவ் வருமானத்தைத் தந்துள்ளது. ஆனால், பாசிட்டிவ் வருமானம் தந்துள்ள ஆண்டுகளில் அதிகபட்சமாக 49% வரை குறியீட்டைவிட அதிக வருமானத்தைத் தந்துள்ளது. ஆகவே, இந்த ஃபண்டில் அதிக வருமானத்தை ஈட்ட விரும்புபவர் கள் நீண்ட நாட்கள் ஃபண்டில் முதலீடு செய்து இருக்கும் நோக்கத்துடன் உள்ளே நுழைய வேண்டும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav54c

இந்த ஃபண்டில் மொத்தம் 16 பங்குகள் உள்ளன. இந்தத் துறை சார்ந்த ஃபண்டுகளில் இன்னும் இரு ஆப்ஷன்கள் முதலீட்டாளர்களுக்கு உள்ளன. அவை, எஸ்பிஐ பார்மா ஃபண்ட் மற்றும் யூடிஐ பார்மா அண்ட் ஹெல்த் ஃபண்ட் ஆகும். இந்த மூன்று ஃபண்டுகளிலும் அதிகமான சொத்து நிர்வாகத்தைக் கொண்டது இந்த ஃபண்டாகும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav54d

நீண்ட காலத்தில் செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், தங்களது மாதாந்திர முதலீட்டில் ஒரு பகுதியை இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். தற்போது எஸ்ஐபி முறையிலும், பார்மா துறை குறியீடு வெகுவாக அடி வாங்கும் போது மொத்தமாகவும் முதலீடு செய்யலாம்.

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Sat Oct 18, 2014 12:13 pm

ஃபண்ட் பரிந்துரை!
ஹெச்டிஎஃப்சி – எம்ஐபி – எல்டிபி: முதலீடு செய்க
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


ரெக்கரிங் டெபாசிட் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட எனக்கு சற்று அதிக வருமானம் வேண்டும் என நினைப்பவர்களுக்கு எம்ஐபி எனக் கூறப்படும் இந்தவகைத் திட்டங்கள் மிகவும் பொருந்தும்.

இந்தவகைத் திட்டங்கள் கலப்பின வகையாகும். அதாவது, கடன் மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளில் கலந்து முதலீடு செய்யப்படும். இந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில் 74% கடன் சார்ந்த உபகரணங்களிலும், 25% பங்கு சார்ந்த முதலீட்டிலும், எஞ்சியதை ரொக்க முதலீடாகவும் வைத்துள்ளது.

பலர் தங்களது முதலீட்டில் அதிக ரிஸ்க் இருக்க வேண்டாம் என நினைக் கிறார்கள். அதே சமயத்தில் பண வீக்கத்தைவிட அதிக வருவாய் வேண்டும் என விரும்புகிறார்கள். மேலும், தங்களது வருமானத்துக்குக் குறைந்த அளவு வருமான வரி இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அது போன்றவர்களுக்கு இந்த ஃபண்ட் மிகவும் கச்சிதமாகப் பொருந்தும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav46a

ஹெச்டிஎஃப்சி எம்ஐபி - எல்டிபி டிசம்பர் 2003-ல் ஆரம்பிக்கப்பட்ட ஃபண்டாகும். இதன் ஃபண்ட் மேனேஜர் பிரஷாந்த் ஜெயின் மற்றும் ஷோபித் மெஹ்ரோத்ரா ஆவர். இந்த ஃபண்ட் தற்போது ரூ.3,701 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. ஃபண்ட் ஆரம்பித்தபோது, ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது (அக்.01, 2014) ரூ.3,21,649ஆக உள்ளது. இது கூட்டு வட்டி அடிப்படை யில் ஆண்டுக்கு 11.45% வருமானம் ஆகும். நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட்டுடன் ஒப்பிடும்போது, இது ஒரு நல்ல வருமான மாகும். மேலும், இந்த வருமானத்துக்கு நீண்ட கால கேப்பிட்டல் கெயின்ஸ் வரிதான் உரித்தாகும் என்பது கூடுதல் லாபம் ஆகும். உச்சபட்ச வருமான வரி வரம்பில் இருப்பவர்களுக்கு, ஃபிக்ஸட் டெபாசிட்டுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் லாபகரமானதாக அமையும்.


இந்த வருடத்தில் இருந்து, இந்த ஃபண்டை மூன்று ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்து வெளியேறினால், நீண்ட கால கேப்பிட்டல் கெயின்ஸ் வரி உரித்தாகும். அதாவது, பணவீக்க சரிக்கட்டலுக்குப்பின், 20% வரி கட்ட வேண்டி வரும். இதில் இருக்கும் இன்னொரு பாசிட்டிவ் அம்சம், நீங்கள் ஃபண்டைவிட்டு வெளியேறும் வருடத்தில்தான் வரி கட்ட வேண்டும். இதுவே ஃபிக்ஸட் டெபாசிட்டாக இருந்தால், வருடா வருடம் வட்டித்தொகையைக் கையில் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் வரி கட்ட வேண்டும். வரி கட்ட வேண்டிய தொகைக்குக் கிடைக்கும் வருமானம் இந்த ஃபண்டுகளில் உங்களுக்கு எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கிறது.

ஃபண்ட் பரிந்துரை : Nav46c

இதன் பங்கு சார்ந்த முதலீட்டில், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், மாருதி சுஸூகி, டாடா மோட்டார்ஸ் டிவிஆர் போன்ற பங்குகள் முதலிடம் வகிக்கின்றன. இதன் கடன் சார்ந்த முதலீடுகளில் இந்திய அரசாங்க பாண்டுகள் மிகுதியாகவும், AAA மற்றும் AA கிரெடிட் ரேட்டிங் கொண்ட பாண்டுகள் அடுத்தபடியாகவும் உள்ளன.

பொதுவாக வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், இதன் பாண்ட் முதலீடுகள் வரும் காலத்தில் நல்ல வருவாயை ஈட்டித் தரும். மேலும், பங்குச் சந்தையும் காளையின் பிடியில் இருப்பதால், இந்த ஃபண்டின் வருவாய் இனிவரும் காலங்களிலும் நன்றாக இருக்கும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav46d

இந்த ஃபண்டில் முதலீடு செய்து மூன்று வருடங்களுக்குப் பிறகு, எஸ்டபிள்யூபி (SWP – Systematic Withdrawal Plan) முறை மூலம் மாதாமாதம் பென்ஷன் போலப் பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையினால் இரண்டு நன்மைகள் கிடைக்கும். ஒன்று, ரெகுலர் வருமானம் இருக்கும்; மற்றொன்று, 3 வருடங்களுக்குப் பிறகு பணத்தை எடுக்கும்போது வருமான வரியும் குறைவாகத்தான் கட்ட வேண்டி வரும்.

இதன் பெயரில் உள்ளது போல (MIP - மன்த்லி இன்கம் பிளான்) ஒவ்வொரு மாதமும் இந்த ஃபண்ட் வருமானம் கட்டாயமாகத் தரும் என்று எதிர்பார்க்காதீர்கள். இந்த ஃபண்டில் குரோத் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன்கள் உள்ளன. டிவிடெண்ட் ஆப்ஷனில் மாதாந்திர டிவிடெண்ட் மற்றும் காலாண்டு டிவிடெண்ட் என இருவகைகள் உள்ளன. டிவிடெண்ட், வரிப் பிடித்தம் செய்தது போகத்தான் முதலீட்டாளர்களின் கையில் கிடைக்கும். வரியைச் சேமிக்க விரும்புபவர்கள், குரோத் ஆப்ஷனில் சென்றுவிட்டு, 3 வருடங்களுக்குப் பிறகு நாம் மேலே கூறியது போல எஸ்டபிள்யூபி முறை மூலம் மாதாமாதம் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav46e

இந்த ஃபண்டில் மிகவும் குறுகிய காலத்துக்கு முதலீட்டாளர்கள் நுழைய வேண்டாம். குறைந்தது 3 – 5 வருட காலத்துக்காவது முதலீடு செய்யும் தொகையை மட்டுமே இந்த ஃபண்டில் கொண்டு வரவும்.

நாம் ஏற்கெனவே கண்டது போல, குறைந்த ரிஸ்க்கில் பணவீக்கத்தைத் தாண்டி சற்று அதிக வருவாயை எதிர்பார்ப்பவர்கள் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டுடன் ஒப்பிடும்போது குறைவான வருமான வரி கட்ட விரும்புபவர்கள் இந்தத் திட்டத்தில் மொத்தமாகவும், எஸ்ஐபி முறையிலும் தாராளமாக முதலீடு செய்யலாம்.

யாருக்கு உகந்தது:

நீண்ட நாள் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள், குறைந்த ரிஸ்க்கை விரும்புவர்கள், நீண்ட நாட்களில் பணவீக்கத்தைத் தாண்டி சில சதவிகிதம் அதிக வருமானத்தை விரும்புவர்கள், குறைந்த ரிஸ்க் முதலீட்டில் வரும் வருமானத்துக்கு மிகக் குறைவான வரியைக் கட்ட விரும்புபவர்கள், மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டு களுக்கான முதலீட்டை நாடுபவர்கள் போன்ற அனைவருக்கும் உகந்தது.

ஃபண்ட் பரிந்துரை : Nav46g

யாருக்கு உகந்ததல்ல:

அதிக வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் இதில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்.
-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Sun Oct 26, 2014 11:56 am

யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட் ஒரு லார்ஜ் மற்றும் மிட் கேப் ஃபண்ட் ஆகும். இது மே 1992-ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். ஜூலை 2005-க்கு முன்புவரை இந்தத் திட்டம் யூடிஐ மாஸ்டர்கெயின் என்று அழைக்கப் பட்டது.


நாம் ஏற்கெனவே யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் என்ற திட்டத்தைப் பற்றி இந்தப் பகுதியில் அலசினோம். அதன் ஃபண்ட் மேனேஜரான அனூப் பாஸ்கர்தான் இந்த ஃபண்டையும் நிர்வகித்து வருகிறார். இவரே, யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பங்கு சார்ந்த முதலீடுகளின் தலைமை முதலீட்டு அலுவலரும் ஆவார்.

இந்த ஃபண்ட் தனது முந்தைய அவதாரத்தில் (மாஸ்டர்கெயின் பெயரில் இருந்தபோது), பிற ஈக்விட்டி ஃபண்டுகளுடன் ஒப்பிடுகையில், சுமாரான செயல்பாட்டினைத்தான் கொண்டிருந்தது.

ஏப்ரல் 2007-ல் அனூப் பாஸ்கர் ஃபண்ட் மேனேஜராகப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து மிகவும் நன்றாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஃபண்ட் தற்போது ரூ.3,559 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

ஏறக்குறைய 82 சதவிகிதத்தை லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. இந்த பங்குகளின் சராசரி சந்தை மதிப்பு சுமார் 68,634 ரூபாய். 1.6 சதவிகித தொகையை கடன் பத்திரங்களில் வைத்திருக்கிறது. 0.4 சதவிகித தொகையைக் கையிருப்பாகவும் வைத்திருக்கிறது.

டிசிஎஸ், இன்போஃசிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

ஃபண்ட் பரிந்துரை : Nav62a

2008-லிருந்து தொடர்ச்சியாக நிஃப்டியைவிட அதிக வருமானம் தந்துள்ளது. தற்போது ஃபைனான்ஸ், டெக்னாலஜி மற்றும் எனர்ஜி துறை களில் நிஃப்டி குறியீட்டுடன் ஒப்பிடும்போது, அண்டர் வெயிட்டா கவும், ஹெல்த்கேர் மற்றும் ஆட்டோ மொபைல் துறைகளில் ஓவர்வெயிட்டா கவும் உள்ளது.

இந்த ஃபண்ட் மேனேஜர் தனது போர்ட்ஃபோலியோவில் பங்குகளை தேர்வு செய்வதற்கு ‘ரிலேடிவ் வேல்யூ’ மதிப்பீட்டைக் கையாளுகிறார். ஆகவே, சற்று பி/இ அதிகமாக உடைய பங்குகளை இதன் போர்ட்ஃபோலியோவில் பார்ப்பது ஆச்சர்யமில்லை.

இந்த ஃபண்ட் மேனேஜர் இந்த ஃபண்டின் மிகப் பெரிய பாசிட்டிவ் அம்சமாகும். அதுவே, இந்த ஃபண்டின் ரிஸ்க் எனவும் கூறலாம். இவர் ஃபண்டுகளைத் தேர்வு செய்வதில் வல்லவர்; அதேசமயத்தில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தாலும் அதைத் துரிதமாகச் சரிபடுத்திக் கொள்வார்.

இதன் போர்ட்ஃபோலியோவில் 68 பங்குகள் உள்ளன. பிற ஃபண்டுகளை ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை சற்று அதிகம்தான் என்றாலும், இது ஃபண்டினுடைய ரிஸ்க்கை குறைக்கிறது.

ஃபண்ட் பரிந்துரை : Nav62e

இது பெரும்பாலும் லார்ஜ் கேப் பங்குகளையே கொண்டுள்ளதால், ஏற்றத்தாழ்வும் சந்தையை ஒட்டியே இருக்கும். அதை இந்த ஃபண்டினுடைய பீட்டாவில் காணலாம். ஃபண்டின் பீட்டாவான 0.90, மார்க்கெட்டைவிடக் குறைவானது.

அதேசமயத்தில், இந்த ஃபண்டின் ஆல்ஃபா 5.03 ஆகும். இது ரிஸ்க் சரிப்படுத்தல் (adjusted) வகையில் பார்க்கும்போது நல்ல ஆல்ஃபா ஆகும். இந்த ஃபண்ட், தொடர்ச்சியாக இதன் கேட்டகிரியில் உள்ள ஃபண்டு களில், முன்னணி வரிசையில் உள்ளது.

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷன் என்ஏவி ரூ.76.71 ஆகும். இதற்கு முந்தைய காலங்களில் இதன் டிவிடெண்ட் ரெக்கார்டு அவ்வளவு தொடர்ச்சியாக இல்லை என்றாலும், கடந்த இரண்டு வருடமாக (2013 - 2014) தொடர்ந்து கொடுத்து வருகிறது. இது இனிவரும் காலங்களில் தொடரும் என எதிர்பார்க்கிறோம்.

குழந்தைகள் கல்வி / திருமணம், ஓய்வுக்காலம் போன்றவற்றுக்கு முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav62d

முழுவதுமாக லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகளைவிட, சற்று அதிகமான வருவாய் நீண்ட காலத்தில் இந்த ஃபண்டில் உறுதியாகக் கிடைக்கும்.

யாருக்கு உகந்தது:

இளம் மற்றும் நடுத்தர வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், பணம் உடனடியாக தேவை இல்லாத வர்கள்.

ஃபண்ட் பரிந்துரை : Nav62f

யாருக்கு உகந்ததல்ல:

குறுகிய காலத்தில் பணம் தேவைப் படுபவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.

- ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by Balasubramanian TN Thu Oct 30, 2014 4:10 pm

useful info. 
Is Transliteration facility available ?
Balasubramanian

Balasubramanian TN

Posts : 1
Join date : 30/10/2014

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Sat Nov 01, 2014 12:59 pm

Balasubramanian TN wrote:useful info. 
Is Transliteration facility available ?
Balasubramanian
Quote do post: 784

கேள்வி எதை பற்றி என்று புரியவில்லை . சற்று விளக்கமாக சொன்னால் நனறாக இருக்கும் ...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

தமிழில் எழுதுவது பற்றி என்றால் கீழ் கண்ட திரியை பார்க்கவும் ....

http://www.varththaham.com/t28-topic


Last edited by தருண் on Sat Nov 01, 2014 1:18 pm; edited 1 time in total

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Sat Nov 01, 2014 1:16 pm

ஃபண்ட் பரிந்துரை!
பிர்லா சன் லைஃப் டாப் 100 ஃபண்ட்: முதலீடு செய்க
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


பிர்லா சன் லைஃப் டாப் 100 ஃபண்ட் 2005 அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். இதன் ஃபண்ட் மேனேஜர் மகேஷ் பாட்டீல் ஆவார். இவர் நாம் ஏற்கெனவே இந்தப் பகுதியில் பரிந்துரை செய்த பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி திட்டத்தின் ஃபண்ட் மேனேஜரும் ஆவார்.

மேலும், பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இணை முதன்மை முதலீட்டு அலுவல ராகவும் இருந்து வருகிறார்.
இவருடைய ஃபண்ட் மேலாண்மை டிராக் ரெக்கார்டு இதுவரை மிகவும் நன்றாக இருந்துள்ளது. இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு ரூ.833 கோடியாகும்.

இந்த ஃபண்ட், இந்தியாவில் டாப் 100 சந்தை மதிப்பில் உள்ள நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும். இந்திய பங்குச் சந்தையில் டாப் 100-ல்இருக்கும் நிறுவனங்கள் வலிமையாக இருப்பதுடன், சந்தையை ஒட்டிய வளர்ச்சியுடனும் இருக்கும்.

மேலும், பாதுகாப்பை நாடும் முதலீட்டாளருக்கு இந்த நிறுவனங்கள் மிகவும் உகந்்ததாக இருக்கும். முதலீட்டாளர்கள் நீண்ட காலத்துக்குப் பணத்தைச் சந்தையில் வைத்திருக்கும் போது முதலீட்டின் பாதுகாப்பு அவசியமாகிறது.
இதுபோன்ற நிறுவனங்கள் சந்தை அடிபடும்போதுகூட ஆடாமல் நிலைத்து நிற்கும். அதேபோல், எழுந்து வரும்போது வேகமாக எழுந்து வரும் வல்லமை உடையவை.

ஃபண்ட் பரிந்துரை : Nav60f

இந்த ஃபண்ட் ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், டாடா மோட்டார்ஸ், இன்போஃசிஸ் போன்ற நிறுவனப் பங்குகளை டாப் 5 இடத்தில் வைத்துள்ளது.

முத்தூட் மினி, ஃபெடரல் பேங்க், மாதர்சன் சுமி, யெஸ் பேங்க், கிராம்ப்டன் கிரீவ்ஸ் போன்ற மிட் கேப் பங்குகளும் இதன் போர்ட் ஃபோலியோவில் இடம் பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 70 சதவிகித லார்ஜ் கேப் பங்குகளும், 30 சதவிகித மிட் கேப் பங்குகளும் இதன் போர்ட்ஃபோலியோவில் உள்ளன.

நிஃப்டி குறியீட்டுடன் ஒப்பிடும்போது, நிதித் துறையில் சம வெயிட்டாகவும், டெக்னாலஜி, எனர்ஜி மற்றும் எஃப்எம்சிஜி துறைகளில் அண்டர் வெயிட்டாகவும், ஆட்டோமொபைல் மற்றும் ஹெல்த்கேர் துறைகளில் ஓவர்வெயிட்டாகவும் இதன் போர்ட்ஃபோலியோ உள்ளது. இதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை 68.

ஃபண்ட் பரிந்துரை : Nav60a

இது பிற ஃபண்ட் போர்ட்ஃபோலியோக் களைவிட அதிகமானது. மிட் கேப் பங்குகளும் இடம் பெற்றிருப்பதால், இந்த அளவு எண்ணிக்கை உள்ளது. இந்த ஃபண்டின் பீட்டா 1. இது, சந்தையை ஒட்டியே இந்த ஃபண்டின் ஏற்ற இறக்கம் இருப்பதைக் குறிக்கிறது. இந்த ஃபண்டின் ஆல்ஃபா 5.10 ஆகும். இது சந்தை குறியீட்டைவிட 5.10% அதிக வருமானம் கொடுத்துள்ளதைக் காண்பிக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக (2010 – 2014) இந்த ஃபண்ட் தொடர்ந்து நிஃப்டியைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபண்ட் பரிந்துரை : Nav60d

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் மூன்று ஃபண்ட் நிறுவனங்கள், எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இலவசமாக இன்ஷூரன்ஸை வழங்கு கின்றன.

அவற்றில் பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் ஒன்றாகும். ஆகவே, இந்த ஃபண்டில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர்கள், இன்ஷூரன்ஸை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தை செஞ்சுரி எஸ்ஐபி என இந்த நிறுவனம் அழைக்கிறது. எஸ்ஐபி ஆரம்பித்த முதலாண்டில் எஸ்ஐபி தொகையைப் போல 10 மடங்கும், இரண்டாம் ஆண்டு 50 மடங்கும், மூன்றாம் ஆண்டிலிருந்து 100 மடங்கும் இன்ஷூரன்ஸ் கிடைக்கும். ஒரு நபருக்கு உச்சபட்சமாக ரூ.20 லட்சம் வரை இன்ஷூரன்ஸ் கிடைக்கும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav60c

உதாரணத்துக்கு, நீங்கள் மாதம் ரூ. 10,000 முதலீடு செய்தால், முதலாண்டில் ரூ.1 லட்சமும், இரண்டாம் ஆண்டில் ரூ. 5 லட்சமும், மூன்றாம் ஆண்டிலிருந்து ரூ.10 லட்சமும் இன்ஷூரன்ஸ் கவர் உங்களின் 55-ஆவது வயது வரை கிடைக்கும். இந்த வாய்ப்பினை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறைந்த ரிஸ்க்கில் நல்ல வருமானத்தைத் தேடுபவர்கள், சந்தையைவிடச் சற்று அதிக வருமானத்தை நாடுபவர்கள், நீண்டகால முதலீட்டுக்கு ஒரு பாதுகாப்பான ஃபண்டைத் தேடுபவர்கள், முதன்முறை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் போன்ற அனைவரும் இந்த ஃபண்டில் தாராளமாக எஸ்ஐபி முறையிலும், சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav60b

யாருக்கு உகந்தது?

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதன்முறை முதலீடு செய்பவர்கள், அனைத்து வயதினர், குழந்தைகள் கல்வி/ திருமணம், ஓய்வுக்காலம் போன்ற நோக்கங்களுக்காக முதலீடு செய்பவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள், பங்கு சார்ந்த முதலீடு களில் சற்று குறைவான ரிஸ்க்கை நாடுபவர்கள் போன்றவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

யார் முதலீடு செய்யக்கூடாது?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படு பவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள் போன்றவர் களுக்கு இந்த ஃபண்ட் ஏற்றது அல்ல.

-ந. விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Sun Nov 09, 2014 3:26 pm

ஃபண்ட் பரிந்துரை!
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

இதுவரை பலவகையான பங்கு சார்ந்த திட்டங்கள் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் கடன் சார்ந்த திட்டங்களில் ஒன்றான ஃப்ராங்க்ளின் இந்தியா ஷார்ட் டேர்ம் இன்கம் பிளான் குறித்துப் பார்ப்போம்.


கடன் சார்ந்த திட்டங்களில் முதிர்வு காலத்தை அடிப்படை யாகக் கொண்டு பலவகையான திட்டங்கள் உள்ளன. லிக்விட், அல்ட்ரா ஷார்ட் டேர்ம், மீடியம் டேர்ம், இன்கம், கிரெடிட் ஆப்பர்சூனிட்டீஸ், கில்ட் என பலவகைகள் உள்ளன. இந்தத் திட்டத்தின் பெயரில் ஷார்ட் டேர்ம் என இருந்தாலும், நாம் இந்த ஃபண்டை ஒரு மீடியம் டேர்ம் ஃபண்டாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த ஃபண்ட் வைத்திருக்கும் உபகரணங்களின் சராசரி முதிர்வு காலம் ஏறக்குறைய இரண்டரை ஆண்டு கள் ஆகும். இந்த ஃபண்ட் பெரும்பாலும் அதிக வட்டி தரக்கூடிய கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்கிறது.

இந்த ஃபண்ட் வைத்திருக்கும் உபகரணங்களின் சராசரி கிரெடிட் ரேட்டிங் A ஆகும்.

இதன் போர்ட்ஃபோலியோவில் ஏறக்குறைய 48% முதலீடுகள் ‘AA’ ரேட்டிங்குடனும் மற்றும் 37% முதலீடுகள் ‘A’ ரேட்டிங் மற்றும் அதற்குக் குறைவாக உள்ள உபகரணங்களிலும் உள்ளன. எஞ்சிய முதலீடுகள் ‘AAA’ ரேட்டிங் கொண்ட உபகரணங்களிலும், டிரஷரி பில்ஸ் மற்றும் டெபாசிட்டுகளிலும் உள்ளன. மொத்தத்தில், இந்த ஃபண்ட் சற்று குறைவான கிரெடிட் ரேட்டிங் கொண்ட நிறுவனங்களில்தான் தனது பெரும்பாலான முதலீடுகளை வைத்துள்ளது.

இருந்தபோதிலும், இதுவரை சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது எடுக்கும் கிரெடிட் ரிஸ்க்குக்கு ஏற்ப இதன் வருமானமும் இருந்துள்ளது. கார்ப்பரேட் பாண்ட் முதலீட்டில் இந்த ஃபண்ட் நிறுவனம் ஒரு முன்னோடி யாகத் திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கடன் சார்ந்த திட்டங் களை நிர்வகிக்கும் அனலிஸ்ட்டுகளும், குழுவும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ஒரு சிறந்த அனுபவத்தைக் கொண்டதாகும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav36b

இந்தத் திட்டம் கடந்த ஒன்று (10.93%) மற்றும் மூன்று (9.94%) வருடங்களில் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளது. கடந்த ஐந்து (8.92%) மற்றும் பத்து (8.68%) வருடங்களிலும் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளது. தற்போது இந்தத் திட்டம் ரூ.9,531 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் குணால் அகர்வால் மற்றும் சந்தோஷ் காமத் ஆகியோர் ஆவர்.

அதானி என்டர்பிரசைஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ராம் டிரான்ஸ்போர்ட், திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் மற்றும் எஸ்ஸெல் கார்ப்பரேட் ரிசோர்சஸ் போன்ற நிறுவனங்களின் உபகரணங்கள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. கடந்த 18 காலாண்டுகளில் ஒருமுறைகூட இந்த ஃபண்ட் நெகட்டிவ் வருமானம் தந்ததில்லை. அதேபோல், கடந்த 10 வருடங்களில் ஒருமுறைகூட நெகட்டிவ் வருமானத்தை இந்த ஃபண்ட் தந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 2004-ம் ஆண்டு மிகவும் குறைவான வருமானமான 4.01 சதவிகிதத்தையும், 2009-ம் ஆண்டு மிகவும் அதிகமான வருமானமான 11.95 சதவிகிதத்தையும் கொடுத்துள்ளது.

‘AAA’ கிரெடிட் ரேட்டிங் உள்ள முதலீட்டை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம். அதே சமயத்தில், ஒரு டீசன்ட் கிரெடிட் குவாலிட்டியுடன், கூடுதல் வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள் இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம். அதற்கு இந்த ஃபண்டின் 12 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு ஒரு சான்றாக உள்ளது.

இந்த ஃபண்டில் முதலீடு செய்த ஒரு வருடத்துக்குள் வெளியேறினால், 0.5% வெளியேற்றுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களது முதலீட்டுக் காலத்தைக் குறைந்தது மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வைத்துக்கொள்வது நல்லது. மூன்று ஆண்டுகளுக்குள் வெளியேறும்போது வரும் வருமானத்துக்கு அவரவர் வருமான வரி வரம்பில் வரி கட்ட வேண்டிவரும். அதுவே, மூன்று வருடத்துக்கு மேல் ஆகும்போது, நீண்ட கால கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ் உரித்தாகும். அது தற்போது, பணவீக்கத்துக்கு அட்ஜஸ்ட் செய்தபிறகு 20% ஆகும். அவ்வாறு செலுத்தும்போது வருமான வரி மிகவும் சொற்பமாகத்தான் வரும். ஆகவே, வருமான வரியின் உச்ச வரம்பில் இருப்பவர்களுக்கு, ஃபிக்ஸட் டெபாசிட்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஃபண்ட் வரப்பிரசாதமாக இருக்கும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav36d

இந்த ஃபண்டில் டிவிடெண்ட் ஆப்ஷன் (வாராந்திரம், மாதாந்திரம், காலாண்டுக்கு ஒருமுறை) மற்றும் போனஸ் ஆப்ஷனும் உள்ளது. இவற்றையெல்லாம்விட குரோத் ஆப்ஷனில் சென்றுவிட்டு, மூன்று ஆண்டுகள் கழித்து எஸ்டபிள்யூபி (SWP – Systematic Withdrawal Plan) முறை மூலம் மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் பணத்தை எடுத்துக் கொள்ளும்போது, வருமான வரி மிகவும் குறைவாக இருக்கும்.

ரெக்கரிங் டெபாசிட்டுக்குப் பதிலாக, எஸ்ஐபி முறையிலும் இந்த ஃபண்டில் சிறு முதலீட்டாளர்கள் தாராளமாக முதலீடு செய்யலாம். நல்ல ஃபண்ட் நிறுவனம், சிறந்த ஃபண்ட் நிர்வாகக் குழு, நல்ல வரலாறு போன்ற குணங்களுடைய இந்த ஃபண்ட் கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர் களுக்கும், போர்ட்ஃபோலியோவில் கடன் சார்ந்த ஒதுக்கீட்டை நாடுபவர் களுக்கும் சிறப்பான முதலீடாக அமையும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav36e

யாருக்கு உகந்தது?

பங்குச் சந்தையில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், அதிக வரி வரம்பில் இருப்பவர்கள், வரிக்குப் பிந்தைய வருமானத்தை அதிகமாக எதிர்பார்ப்பவர்கள், ஓய்வுக்காலத்தில் இருப்பவர்கள், பணம் அதிகம் உள்ளவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள், நடுத்தர காலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு நிகரான வருமானத்துடன், வேண்டும்போது எடுத்துக்கொள்ளும் வசதியை விரும்புபவர்கள்.

ஃபண்ட் பரிந்துரை : Nav36f

யார் முதலீடு செய்யக்கூடாது?

நீண்ட காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், குறிப்பிட்ட இடைவெளிகளில் உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள்.

--ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Sat Nov 22, 2014 12:44 pm

ஃபண்ட் பரிந்துரை!
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


சில வாரங்களுக்கு முன்பு துறை சார்ந்த ஃபண்டுகளில் ஒன்றான ரிலையன்ஸ் பார்மா ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் வங்கித் துறை சார்ந்த ஐசிஐசிஐ புரூ. பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.

பொதுவாக, சாதாரண முதலீட்டாளர் களுக்கு நாம் துறை சார்ந்த ஃபண்டு களைப் பரிந்துரை செய்வதில்லை. காரணம், டைவர்ஸிஃபைடு ஃபண்டு களைவிட துறை சார்ந்த ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம். எனவே, ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் மட்டும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். அதுவும் மொத்தமாக துறை சார்ந்த முதலீடு களுக்காக அதிகபட்சம் 25% ஒதுக்கிக் கொள்ளலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav38a

நிதித் துறை சார்ந்த பங்குகள் ஏறக்குறைய 28% இடத்தை நமது நிஃப்டி குறியீட்டில் பிடித்துள்ளன. நிதித் துறை எந்த ஒரு பொருளாதாரத்துக்கும் முதுகெலும்பைப் போன்றது. நமது பொருளாதாரம் பிக்-அப் ஆகும்போது, முதலில் மேலெழுந்து வருவது நிதித் துறை சார்ந்த நிறுவனங்கள்தான். மேலும், நமது நாட்டில் வங்கிகள் இல்லாத இடங்கள் எவ்வளவோ உள்ளன. வங்கிச் சேவைக்குள் கொண்டு வரப்பட வேண்டிய மக்கள் ஏராளமானோர் ஆவர். நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கியுள்ள மக்கள்தான் இன்று மெஜாரிட்டி. நிதி நிறுவனங்களின் சேவைகளை உபயோகிக்கும் மக்கள் தொகை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டுதான் செல்லும். ஆகவே, இந்தத் துறையின் வளர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்லும். எனவே, இந்தத் துறை சார்ந்த பங்குகளின் வளர்ச்சியும் மிகவும் நன்றாக இருக்கும்.

இந்த ஃபண்ட் தற்போது ரூ.471 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் வெங்கடேஷ் சஞ்சீவி ஆவார். இதன் போர்ட்ஃபோலியோவில் வங்கிப் பங்குகள், வங்கி சாரா நிதி நிறுவனங் களின் பங்குகள் மற்றும் பிற நிதித் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளே முழுக்க முழுக்க இடம்பெற்றுள்ளன. இதன் டாப் ஹோல்டிங்ஸாக ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், சிட்டி யூனியன் பேங்க் மற்றும் மேக்ஸ் இந்தியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

ஃபண்ட் பரிந்துரை : Nav38b

இதன் போர்ட்ஃபோலியோ பீட்டா 0.89 ஆகும். இது நிஃப்டி குறியீட்டைவிட குறைவாக உள்ளதைக் குறிக்கிறது. அதேசமயத்தில், இந்த ஃபண்டின் ஆல்ஃபா 7.01 ஆகும். இது நிஃப்டியைவிட 7.01% அதிக வருமானம் கொடுத்துள்ளதைக் காண்பிக்கிறது.

வங்கித் துறை சார்ந்த திட்டங்கள் பத்துக்கும் மேலாக சந்தையில் உள்ளன. கடந்த 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் அடிப்படையில், இந்தத் திட்டம் பிற திட்டங்களைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் துறையில் அதிகச் சொத்துக் களைக் கொண்டுள்ளது ரிலையன்ஸ் பேங்கிங் ஃபண்டாகும். அந்த ஃபண்ட் இந்த (ஐசிஐசிஐ) ஃபண்டுக்கு அடுத்தபடி யாக நல்ல வருமானத்தைத் தந்துள்ளது.

இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (ஆகஸ்ட் 22, 2008) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.3,37,300-ஆக உள்ளது. இது கூட்டு வட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 21.65% வருமானம் ஆகும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav38c

இந்த ஃபண்ட் தனது பெஞ்ச்மார்க்காக பிஎஸ்இ பேங்கெக்ஸைக் கொண்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக (2012–2014) அந்தக் குறியீட்டை தொடர்ந்து பீட் செய்துள்ளது.இந்த ஃபண்டில் எந்த ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகவும் (உதாரணத்துக்கு, குழந்தைகள் கல்வி/ திருமணம்) முதலீடு செய்யாமல், வெல்த் க்ரியேஷனுக்காக மட்டும் முதலீடு செய்யலாம். அவ்வாறு செய்யும்போது, தேவைப்பட்டால், உங்களால் அதிக நாட்கள் காத்திருக்க முடியும்.

நீண்ட கால அடிப்படையில் இந்த ஃபண்டில் தங்களது மொத்த முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை எஸ்ஐபி முறையில் தாராளமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வரலாம். மேலும், இதுபோன்ற பொருளாதாரம் பிக்-அப் ஆகும் தருணங்களில், சந்தை சரிவைப் பயன்படுத்தி மொத்தமாக எஸ்டிபி முறையிலும் முதலீடு செய்யலாம்.

நமது நாட்டில் பல பெரிய தனியார் துறை வங்கிகள் நல்ல அளவில் பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளன. ஆகவே, பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது, தனியார் துறை வங்கிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இந்தக் காரணத்தினால் இந்த ஃபண்ட் தனியார் துறை வங்கிகளில் தனது பெரும்பாலான முதலீட்டை வைத்துள்ளது. தவிர, இந்த ஃபண்டின் நல்ல செயல்பாட்டுக்கு மற்றொரு காரணம், நிதிச் சேவை துறையில் உள்ள நிறுவனங்களின் பங்குகளைப் பெருவாரியாக வைத்துள்ளது.

உதாரணத்துக்கு, ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் கேப்பிட்டல், சுந்தரம் ஃபைனான்ஸ், மேக்ஸ் இந்தியா, மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்ஷியல், எஸ்கேஎஸ் மைக்ரோ ஃபைனான்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் நல்ல வளர்ச்சியை இந்த ஃபண்டுக்குத் தந்துள்ளன. அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தத் துறையின் வளர்ச்சி மிக நன்றாக இருக்கும். ஆகவே, இந்த ஃபண்டின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

யாருக்கு ஏற்றது?

எற்கெனவே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ளவர்கள், போர்ட் ஃபோலியோவை பரவலாக்க விரும்பு பவர்கள், இளம் வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.

ஃபண்ட் பரிந்துரை : Nav38e

யாருக்கு ஏற்றதல்ல?

முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள், சிறிய முதலீடு உள்ளவர்கள், குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புபவர் கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.

--ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Sat Dec 06, 2014 7:31 pm

ஃபண்ட் பரிந்துரை!
டிஎஸ்பி-பிஆர் மைக்ரோ கேப் ஃபண்ட்: முதலீடு செய்க
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


இதற்குமுன் சில மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகள் குறித்து இந்தப் பகுதியில் அலசினோம். அந்த வகையில் இந்த வாரம் டிஎஸ்பி-பிஆர் மைக்ரோ கேப் ஃபண்ட் பற்றி பார்ப்போம். சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் டிஎஸ்பி-பிஆர் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் ஒன்றாகும்.

சந்தை மதிப்பில் டாப் 300 நிறுவனங் களைத் தவிர்த்து, பிற நிறுவனங்களில் இந்த ஃபண்ட் முதலீடு செய்கிறது. பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீட்டை தனது பெஞ்ச்மார்க்காக வைத்துக் கொண்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களால் அதிகமாக வைத்தி ருக்கப்படாத நிறுவனப் பங்குகளில் தனது முதலீட்டை மேற்கொள்கிறது. மேலும், சந்தையால் அதிகமாக ஆராயப்படாத நிறுவனங்களை ஆராய்ந்து முதலீடு செய்கிறது.

இந்த ஃபண்ட் வைத்துள்ள நிறுவனங்களின் சராசரி சந்தை மதிப்பு ரூ.2,491 கோடியாகும். அதேசமயத்தில், இந்த ஃபண்ட் கேட்டகிரியில் உள்ள பிற ஃபண்டுகளின் சராசரி சந்தை மதிப்பு ரூ.11,400 கோடியாகும். ஆகவேதான் இந்த ஃபண்ட் மைக்ரோ கேப் என்று அழைக்கப்படுகிறது.

இதன் போர்ட்ஃபோலியோவில் மிட் கேப் பங்குகள் 24 சதவிகிதமும், ஸ்மால் கேப் பங்குகள் 74 சதவிகிதமும், எஞ்சியது லார்ஜ் கேப் பங்குகளிலும் உள்ளது. 64 பங்குகள் இதன் போர்ட்ஃபோலியோவில் உள்ளதால், ஒரு பங்கினைத் (இண்டோகோ ரெமடீஸ் – 5.40%) தவிர்த்து, அனைத்துப் பங்குகளும் 4 சத விகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இது ரிஸ்க்கை வெகுவாகக் குறைத்துவிடு கிறது.

ஃபண்ட் பரிந்துரை : Nav38g

மைக்ரோ கேப் கேட்டகிரியில் உள்ள பங்குகளின் ரிஸ்க் அதிகம். சந்தை வீழ்ச்சியைக் காணும்போது, இந்தப் பங்குகளின் மதிப்பு வேகமாக கீழே இறங்கும். அதேசமயத்தில், தற்சமயம் போல் சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது, இந்தப் பங்குகளின் ஏற்றமும் வேகமாக இருக்கும். அதை இந்த ஃபண்டின் கடந்த ஒரு வருட கால வருமானத்திலிருந்தே (114.50%) நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

சந்தையை ஒட்டிய இதன் ஏற்ற இறக்கம் அதிகமாக இருப்பதால், இந்த ஃபண்டினை செல்வத்தைப் பெருக்குவ தற்கான நோக்கத்துடன் மட்டுமே அணுகுங்கள். அன்றாட வாழ்க்கைத் தேவைகளான ஓய்வுக்காலம், குழந்தைகளின் கல்வி/ திருமணச் செலவு போன்ற நோக்கங்களுக்காக இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav38b

சிறிய நிறுவனப் பங்குகளில் இந்த ஃபண்டைப்போல, நன்றாக ஆராய்ந்து முதலீடு செய்யும்போது, நீண்ட நாட்களில் வருமானம் மிக நன்றாக இருக்கும். ஸ்மால் அண்ட் மிட் கேப் கேட்டகிரியில் இந்த ஃபண்ட் டாப் 5 ஃபண்டுகளில் ஒன்றாக உள்ளது.

நேரடியாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள், லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்துவிட்டு, மிட் அண்ட் ஸ்மால் கேப் கேட்டகிரி முதலீட்டுக்கு இந்த ஃபண்டை நாடலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav38c

அதேபோல், பல லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரேமாதிரியான போர்ட் ஃபோலியோவைக் கொண்டுள்ளது என அங்கலாய்த்துக் கொள்பவர்கள், இந்த ஃபண்டின் வித்தியாசமான போர்ட் ஃபோலியோவை நாடலாம்.

இந்த ஃபண்ட் தற்போது ரூ.1,590 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் வினித் சாம்ப்ரே மற்றும் ஜெய் கோத்தாரி ஆவர்.

ஃபண்ட் பரிந்துரை : Nav38f

இந்த ஃபண்டை, நிஃப்டி குறியீட்டுடன் ஒப்பிடும்போது, நிதித் துறையில் அண்டர்வெயிட்டா கவும், கெமிக்கல்ஸ், இன்ஜினீயரிங், டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் ஓவர்வெயிட்டா கவும் உள்ளது. இதன் பீட்டா (1.09) சந்தையைவிட சற்று அதிகமாக இருந்தாலும், இதன் ஆல்ஃபா பிரமாதமாக (12.12%) உள்ளது.

ஃபண்ட் பரிந்துரை : Nav38d

பல ஸ்மால் அண்ட் மிட் கேப் ஃபண்டுகள் கடந்த ஒரு வருடத்தில் பிரமாதமான வருமானத்தைத் தந்துள்ளதை அடுத்து புதிய முதலீட்டாளர்கள் இந்த ஃபண்டுகளை நோக்கி படையெடுத்துள்ளார்கள். புதிய நுழைவுகளைக் குறைப்பதற்காக, மொத்த முதலீட்டை இந்த ஃபண்ட் தவிர்க்க விரும்புகிறது. ஆகவே, மொத்தமாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மட்டுமே இந்த ஃபண்டில் தற்போது முதலீடு செய்ய முடியும். அதேபோல், எஸ்ஐபி / எஸ்டிபி முறை முதலீட்டையும் அதிகபட்சமாக இரண்டு லட்சத்துக்கு லிமிட் செய்துள்ளது.

யாருக்கு உகந்தது:

இளம் வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள் தங்கள் முதலீட்டில் ஒரு பகுதியை இந்த ஃபண்டுக்காக தாராளமாக ஒதுக்கிக் கொள்ளலாம்.

யாருக்கு உகந்ததல்ல:

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.

--ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Sat Dec 27, 2014 7:49 pm

ஃபண்ட் பரிந்துரை!
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
ரிலையன்ஸ் மன்த்லி இன்கம் பிளான்: முதலீடு செய்க


ரிலையன்ஸ் மன்த்லி இன்கம் பிளான் ஒரு கலப்பின வகைத் திட்டமாகும். இந்த ஃபண்ட், தனது போர்ட்ஃபோலியோவில் சுமார் 20 சதவிகித முதலீட்டை பங்குகளிலும், எஞ்சியதை கடன் சார்ந்த உபகரணங்களிலும் முதலீடு செய்துள்ளது. குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை முதலீடு செய்யும் தொகை தேவைப்படாது; அதே சமயத்தில், அதிக ரிஸ்க் வேண்டாம்; ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட சற்று அதிக வருமானம் வந்தால்போதும் என நினைப்பவர்களுக்கு இந்தத் திட்டம் கனகச்சிதமாகப் பொருந்தும்.

சில வாரங்களுக்கு முன்பு, இதே வகையைச் சார்ந்த ஹெச்டிஎஃப்சி எம்ஐபி – எல்டிபி திட்டம் குறித்து பார்த்தோம். ஹெச்டிஎஃப்சி திட்டம் ரிலையன்ஸ் திட்டத்தைவிட சற்று அதிகமான சதவிகிதத்தில் பங்குகளை வைத்துள்ளது. ஹெச்டிஎஃப்சி மற்றும் ரிலையன்ஸ் திட்டங்கள் முறையே 25% மற்றும் 20% பங்கு சார்ந்த முதலீட்டை தங்களது போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளன. ஆகவே, ரிலையன்ஸ் எம்ஐபி திட்டத்தில் பங்கு சார்ந்த ரிஸ்க் சற்றுக் குறைவுதான். ஆதலால் கன்ஸர்வேட்டிவ் எம்ஐபி திட்டத்தை நாடுபவர்கள், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்த ஃபண்ட் தற்போது ரூ.2,288 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் அமித் திரிபாதி மற்றும் சஞ்சய் பரேக் ஆவார்கள்.

ஃபண்ட் பரிந்துரை : Nav38f

பாண்டுகள் மற்றும் பங்குகள் ஆகிய இரண்டும் நல்ல வருவாயைத் தருவது ஒருசில காலங்களில் மட்டும்தான். அதுபோன்ற வருவாய் தற்போது நிலவுகிறது. வரும் மாதங்களில் வட்டி குறையும் என்ற எதிர்பார்ப்பில் பாண்டு களின் விலை ஏறிக்கொண்டிருக்கிறது. அதேபோல், புதிய அரசாங்கம் வந்ததி லிருந்து பங்குச் சந்தையும் ஏறிக்கொண்டி ருக்கிறது. ஆக மொத்தத்தில், ரிலையன்ஸ் மன்த்லி இன்கம் போன்ற திட்டங்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான். இதன் போர்ட்ஃபோலியோவில் சுமார் 30% மத்திய அரசாங்க பாண்டுகளிலும், 43% என்சிடி-க்களிலும் முதலீடு செய்யப் பட்டுள்ளது.

இந்தத் திட்டம் கடந்த 19 காலாண்டு களில், 6 முறைதான் நெகட்டிவ் வருமானத்தைத் தந்துள்ளது. எஞ்சிய காலாண்டுகளில் கொடுத்துள்ள பாசிட்டிவ் ரிட்டர்ன், இந்த நெகட்டிவ் ரிட்டர்னை எல்லாம் தாண்டி முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபண்ட் பரிந்துரை : Nav38e

இந்தத் திட்டம் கடந்த 3, 5, மற்றும் 10 வருட அடிப்படையில் ஆண்டுக்கு முறையே 13.93%, 9.98%, மற்றும் 11.88% வருமானத்தைக் கொடுத்துள்ளது. நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட்டுடன் ஒப்பிடும்போது, இது ஒரு நல்ல வருமானமாகும். மேலும், இந்த வருமானத்தை மூன்று வருடத்துக்குமேல் வைத்திருக்கையில், நீண்ட கால கேப்பிட்டல் கெயின்ஸ் வரிதான் (பணவீக்கத்துக்கு அட்ஜஸ்ட் செய்தபிறகு 20%) உரித்தாகும் என்பது கூடுதல் லாபம் ஆகும்.

உச்சபட்ச வருமான வரி வரம்பில் இருப்பவர்களுக்கு, ஃபிக்ஸட் டெபாசிட்டுடன் ஒப்பிடும் போது, இது மிகவும் லாபகரமானதாக அமையும். ஏனென்றால், நிகர வரி மிகக் குறைவாகத்தான் வரும். மேலும், இதுபோன்ற கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் ஒரு பாசிட்டிவ் அம்சம் என்னவெனில், நீங்கள் ஃபண்டைவிட்டு வெளியேறும் வருடத்தில்தான் வரி கட்ட வேண்டும். இதுவே, ஃபிக்ஸட் டெபாசிட்டாக இருந்தால், வருடா வருடம் வட்டித் தொகையைக் கையில் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் வரி கட்ட வேண்டும். வரி கட்ட வேண்டிய தொகைக்குக் கிடைக்கும் வருமானம் இந்த ஃபண்டுகளில் உங்களுக்கு எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கிறது.

ஃபண்ட் பரிந்துரை : Nav38d

இந்த ஃபண்டில் முதலீடு செய்து 3 வருடங்களுக்குப் பிறகு, எஸ்டபிள்யூபி (SWP – Systematic Withdrawal Plan) முறை மூலம் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் போல பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த முறையினால் இரண்டு நன்மைகள் கிடைக்கும். ஒன்று, ரெகுலராக வருமானம் வந்துகொண்டிருக்கும்; மற்றொன்று, 3 வருடங்களுக்குப் பிறகு பணத்தை எடுக்கும்போது வருமான வரியும் குறைவாகவே கட்டவேண்டி வரும்.

இதன் பெயரில் உள்ளதுபோல (MIP - மன்த்லி இன்கம் பிளான்) ஒவ்வொரு மாதமும் இந்த ஃபண்ட் வருமானம் கட்டாயமாகத் தரும் என்று எதிர்பார்க்காதீர்கள். இந்த ஃபண்டில் குரோத் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன்கள் உள்ளன. டிவிடெண்ட் ஆப்ஷனில் மாதாந்திர டிவிடெண்ட் மற்றும் காலாண்டு டிவிடெண்ட்  என இருவகைகள் உள்ளன. டிவிடெண்ட், வரிப் பிடித்தம் (DDT – டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் டாக்ஸ்) செய்தது போகத்தான் முதலீட்டாளர்களின் கையில் கிடைக்கும். கடந்த சில வருடங்களாக இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷன் தொடர்ந்து டிவிடெண்ட்டை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஃபண்டில் மிகவும் குறுகிய காலத்துக்கு முதலீட்டாளர்கள் நுழைய வேண்டாம். குறைந்தது 3 – 5 வருட காலத்துக்காவது முதலீடு செய்யும் தொகையை மட்டுமே இந்த ஃபண்டில் கொண்டு வரவும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav38c

நாம் ஏற்கெனவே கண்டதுபோல, குறைந்த ரிஸ்க்கில் பணவீக்கத்தைத் தாண்டி சற்று அதிக வருவாயை எதிர்பார்ப்பவர்கள் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டுடன் ஒப்பிடும்போது, குறைவான வருமான வரி கட்ட விரும்புபவர்கள் இந்தத் திட்டத்தில் மொத்தமாகவும், எஸ்ஐபி முறையிலும் தாராளமாக முதலீடு செய்யலாம்.

யாருக்கு உகந்தது?

நீண்ட நாள் ஃபிக்ஸட் டெபாசிட்டு களைவிட அதிக வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள், குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள், நீண்ட நாட்களில் பணவீக்கத்தைத் தாண்டி சில சதவிகிதம் அதிக வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள், குறைந்த ரிஸ்க் முதலீட்டில் வரும் வருமானத்துக்கு மிகக் குறைவான வரியைக் கட்ட விரும்புபவர்கள், 3-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கான முதலீட்டை நாடுபவர்களுக்கு உகந்தது.

ஃபண்ட் பரிந்துரை : Nav38b

யார் தவிர்க்கலாம்?

அதிக வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், நீண்ட காலத்தில் பணம் தேவைப்படு பவர்கள், வருமான வரியில்லாத முதலீட்டை நாடுபவர்கள்.  


ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Tue Dec 30, 2014 3:07 pm

ஃபண்ட் பரிந்துரை !
எல் & டி ஈக்விட்டி ஃபண்ட்: முதலீடு செய்க
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


எல் அண்ட் டி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், என்ஜினீயரிங் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் துறையில் சிறந்து விளங்கும் எல் அண்ட் டி நிறுவனத்தின் ஒரு அங்கம் ஆகும். எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் வருகிறது. 2009-ம் ஆண்டு டி.பி.எஸ் சோழ மண்டலம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் எல் & டி நிறுவனம், மியூச்சுவல் ஃபண்ட் தொழிலில் கால் பதித்தது. பிறகு 2012-ம் ஆண்டு ஃபிடலிட்டி என்ற அமெரிக்க நிறுவனம், இந்தியாவிலிருந்த தனது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை விற்றது. அதையும் எல் & டி மியூச்சுவல் ஃபண்ட் வாங்கியது. தற்போது ரூ.20,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

முதலில் ஃபிடலிட்டி ஈக்விட்டி ஃபண்ட் என்று அழைக்கப்பட்ட திட்டம்தான் தற்போது எல் & டி ஈக்விட்டி ஃபண்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் தற்போது ரூ.2,505 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு சார்ந்த முதலீட்டுப் பிரிவின் தலைவரான சௌமேந்திரநாத் லாஹிரி இந்த ஃபண்டை நிர்வகித்து வருகிறார். இவர் இதற்குமுன் கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

ஃபண்ட் பரிந்துரை : Nav46a

தனது போர்ட்ஃபோலியோவில் 73 சதவிகிதத்தை லார்ஜ்கேப் நிறுவனங்களிலும், எஞ்சியதை மிட் அண்ட் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. நிஃப்டி 50 குறியீட்டில் உள்ள பல நிறுவனங்களை இதன் போர்ட்ஃபோலியோவில் காண்பதுடன், ஐ.என்.ஜி வைஸ்யா பேங்க், சுந்தரம் ஃபாஸனர்ஸ், ராம்கோ சிமென்ட்ஸ், எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், டிவிஸ் லேபாரட்டரீஸ் போன்ற நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளையும் காண முடிகிறது.

2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளைத் தவிர்த்து, இந்தத் திட்டம் தொடர்ந்து நிஃப்டி 50 குறியீட்டை பீட் செய்துள்ளது. இதன் போர்ட்ஃபோலியோவில் 54 பங்குகள் உள்ளது. இந்த எண்ணிக்கை பிற ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது சற்று அதிகமாக இருந்தபோதிலும், போர்ட்ஃபோலியோ ரிஸ்க்கை குறைக்கிறது.

ஃபண்ட் பரிந்துரை : Nav46b

நிஃப்டி குறியீட்டுடன் ஒப்பிடும்போது, ஃபைனான்ஸ், டெக்னாலஜி, எனர்ஜி, ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் அண்டர்வெயிட்டாகவும், கன்ஸ்ட்ரக்‌ஷன், சர்வீசஸ் மற்றும் என்ஜினீயரிங் துறைகளில் ஓவர்வெயிட்டாகவும் இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோ உள்ளது.

இந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில் பங்குகளைப் தேர்வு செய்வதற்கு G.E.M (G - Generation of Ideas, E – Evaluation of Companies, M – Manufacturing & Monitoring of Portfolios) என்ற செயல்முறையைப் பயன்படுத்து கிறது.

ஃபண்ட் பரிந்துரை : Nav46c

இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (மே 16, 2005) ஒருவர் செய்த முதலீடான ரூ 1 லட்சம், தற்போது ரூ.6,00,790-ஆக உள்ளது. இந்த ஃபண்டின் டிவிடென்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ 31.95 ஆகும். டிவிடென்ட் ஆப்ஷனில் முதலீடு செய்தவர்களுக்கு, இந்த ஃபண்ட்

2006-லிருந்து, இரு ஆண்டுகளைத் தவிர (2009 - 2012), தொடர்ந்து டிவிடெண்ட் வழங்கியுள்ளது. 2011-ம் ஆண்டு இருமுறை டிவிடெண்ட் வழங்கியுள்ளது. கடந்த 1, 3, 5, 7 என்ற ஒவ்வொரு காலகட்டங்களிலும் நிஃப்டி குறியீட்டை பீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மேற்கண்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் லார்ஜ்கேப் கேட்டகிரியில் டாப் 10 ஃபண்டுகளுக்குள் ஒன்றாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்த ரிஸ்க்கில் நீண்ட காலத்தில் ஒரு சீரான வளர்ச்சியில் வருமானத்தை நாடுபவர்கள் இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் பரிந்துரை : Nav46d

யாருக்கு உகந்தது?

அனைத்து வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தை பெருக்க நினைப்பவர்கள், ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள், நீண்ட காலத்தில் குறைந்த ஏற்ற இறக்கத்துடன் நல்ல வருவாயை நாடுபவர்கள்.

யார் முதலீடு செய்யக்கூடாது?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உத்திரவாதமான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், நஷ்டத்தை ஜீரணிக்க முடியாதவர்கள்.

ஃபண்ட் பரிந்துரை : Nav46f

--ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by தருண் Tue Dec 30, 2014 4:17 pm

ஃபண்ட் பரிந்துரை!
டாடா பேலன்ஸ்டு ஃபண்ட்: முதலீடு செய்க
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்


டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரூ.24,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் உள்ள பல திட்டங்கள் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிர்வகித்து வரும் திட்டங்களுள் ஒன்றுதான் டாடா பேலன்ஸ்டு ஃபண்டாகும்.

டாடா பேலன்ஸ்டு ஃபண்ட் நீண்ட நாட்களாக நடைமுறையில் இருக்கும் திட்டங்களில் ஒன்று. இது, 1995 அக்டோபர் 8-ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டம். இந்தத் திட்டம் தற்போது ரூ.1,533 கோடி மதிப்புள்ள சொத்துக் களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் அதுல் போலே மற்றும் ரகுபதி ஆச்சார்யா ஆவர்.

இது ஒரு கலப்பினவகைத் திட்டமாகும். அதாவது, ஏறக்குறைய தனது போர்ட்ஃபோலியோவில் 70 சதவிகிதத்தைப் பங்குகளிலும், எஞ்சியதை கடன் சார்ந்த உபகரணங்களிலும் முதலீடு செய்கிறது. இந்தத் திட்டத்தில் உள்ள முதலீட்டை 12 மாதத்துக்கு மேல் வைத்திருக்கையில், பங்கு சார்ந்த திட்டங்களைப்போல பாவிக்கப்படுவதால், வரும் லாபத்துக்கு வருமான வரி ஏதும் கட்ட வேண்டாம். மேலும், இதுபோன்ற கலப்பினவகைத் திட்டங்களில் முழுக்க முழுக்கப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்களைவிட, ஏற்ற இறக்கம் சற்று குறைவாக இருக்கும்; அதேசமயத்தில் வருமானமும் நன்றாக இருக்கும்.

ஃபண்ட் பரிந்துரை : Nav58b

இந்தத் திட்டம் தனது பங்கு சார்ந்த முதலீட்டில் பொதுவாக 60 சதவிகிதத்தை லார்ஜ் கேப் பங்குகளிலும், 40 சதவிகிதத்தை மிட் கேப் பங்குகளிலும் முதலீடு செய்கிறது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் லார்ஜ் கேப், மிட் கேப் வகைப்படுத்துதல் சற்று வித்தியாசத்துடன் உள்ளது. சந்தை மதிப்பில் டாப் 125 நிறுவனங்களை லார்ஜ் கேப் என்றும், 126-லிருந்து 500 வரை சந்தை மதிப்பு உள்ள நிறுவனங் களை மிட் கேப் என்றும் வகைப்படுத்தி யுள்ளது.

இந்த ஃபண்ட் பொதுவாக பொதுத் துறை வங்கிகளையோ அல்லது பொதுத் துறை நிறுவனங்களையோ விரும்புவ தில்லை என்பது இதன் போர்ட் ஃபோலியோவிலிருந்து தெரிகிறது. இந்தக் கருத்து பல ஃபண்ட் மேனேஜர் களின் கண்ணோட்டமாகவும் உள்ளது.

ஃபண்ட் பரிந்துரை : Nav58c

கார்ப் (GARP – Growth At Reasonable Price) அடிப்படையில் தனது பெரும்பாலான பங்குகளைத் தேர்வு செய்கிறது இந்த ஃபண்ட். இந்த நிறுவனம், தனது ஃபண்ட் மேனேஜ்மென்ட் செயல்முறையை கடந்த சில ஆண்டுகளில் ஸ்திரப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. ஒரு பங்கில்/ஒரு துறையில் பெஞ்ச்மார்க் வெயிட்டைவிட எவ்வளவு வேறுபடலாம் என்பதையெல்லாம் வரையறுத்துள்ளது. ஃபண்ட் மேனேஜ்மென்ட் டீமும் கடந்த பல ஆண்டுகளாக நிலையாக உள்ளது.

ஃபண்ட் பரிந்துரை : Nav58d

கடந்த 1, 3, 5 மற்றும் 10 வருட காலகட்டத்தில் இந்த ஃபண்டின் செயல்பாடு (வருமானம்) மிகவும் நன்றாக இருந்துள்ளது. மேலும், இதன் வகையில் டாப் 5 ஃபண்டுகளில் ஒன்றாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 11 வருடங்களில், ஒரு வருடத்தைத் தவிர பிற வருடங்கள் அனைத்திலும் இந்த ஃபண்ட் தனது பெஞ்ச்மார்க்கை விட அதிக வருமானம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபண்ட் பரிந்துரை : Nav58e

இந்த ஃபண்ட், குரோத் ஆப்ஷன் தவிர, மாதாந்திர டிவிடெண்ட் மற்றும் வருடாந்திர டிவிடெண்ட் ஆப்ஷன் களையும் கொண்டுள்ளது. வருமான வரிக் கணக்கு பங்கு சார்ந்த திட்டத்தைப்போல் பாவிக்கப்படு வதால், இந்த ஃபண்ட் வழங்கும் டிவிடெண்ட்டுக்கு எந்தவிதமான வரியும் இல்லை. மாதாமாதம் பணவரத்தை விரும்புபவர்கள், இந்த ஃபண்டின் மாதாந்திர டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்லலாம். கடந்த 24 மாதத்துக்கும் மேலாகத் தொடர்ந்து டிவிடெண்ட் வழங்கி வருவது ஒரு பாசிட்டிவ் அம்சமாகும்.

நீண்ட காலத்தில் நல்ல செயல்பாட்டைக் கொண்டுள்ள இந்த ஃபண்டில், சற்று குறைவான ரிஸ்க்கை யும் அதேசமயத்தில் நல்ல வருமானத் தையும் தேடுபவர்கள் தாராளமாக முதலீடு செய்யலாம். குழந்தைகள் கல்வி மற்றும் திருமணம் போன்ற தேவைகளுக்காக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த ஃபண்ட் மிகவும் கனகச்சிதமாகப் பொருந்தும்.

யாருக்கு உகந்தது?

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதன் முறை முதலீடு செய்ய விரும்புபவர்கள், 100% ஈக்விட்டி ஃபண்டுகளைவிட சற்று குறைவான ரிஸ்க் எடுக்க விரும்புப வர்கள், சற்று குறைவான ஏற்ற, இறக்கத்தை நாடுபவர்கள், 50 வயதைத் தாண்டியவர்கள், மீடியம் டேர்மில் பணம் தேவைப்படுபவர்கள், குழந்தைகள் கல்வித் தேவைக்கு முதலீடு செய்பவர்கள்.

ஃபண்ட் பரிந்துரை : Nav58g

யார் முதலீடு செய்யக்கூடாது?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.
-- ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஃபண்ட் பரிந்துரை : Empty Re: ஃபண்ட் பரிந்துரை :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஃபண்ட் பரிந்துரை : ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் முதலீடு செய்க!
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» ஃபண்ட் ஹவுஸ்
» பரஸ்பர நிதித் திட்டங்களில் குழும நிறுவனங்களின் முதலீடு: விவரம் வெளியிட பரிந்துரை
» பி.எஃப் நிதியை பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்யலாம்: பங்கு பரிவர்த்தனை வாரியம் பரிந்துரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum