வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கார் கடன்: கட்டி முடித்தபிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

Go down

கார் கடன்: கட்டி முடித்தபிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள்..! Empty கார் கடன்: கட்டி முடித்தபிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

Post by தருண் Thu May 05, 2016 2:49 pm

கார் லோன் வாங்கும்போது, எந்த வங்கி குறைவான வட்டி விகிதத்தில் கடன் தருகிறது என்பதைத் தேடித் தெரிந்துகொள்வதில் காட்டும் அக்கறையை அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பலரும் காட்டுவதில்லை.

கார் கடனைக் காலக்கெடுவுக்குள் விரைந்து முடிப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிடுவதாகப் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடனை கட்டி முடித்தபின் ‘கடன் பாக்கி எதுவும் இல்லை’ என்கிற (No Due Certificate - NDC) சான்றிதழைக் கேட்டுப் பெற்றால் மட்டுமே நாம் அடுத்த முறை அதே வங்கியிலோ அல்லது வேறு வங்கியிலோ எந்தச் சிக்கலும் இல்லாமல் எளிதாகக் கடன் பெற முடியும்.

கார் கடன்: கட்டி முடித்தபிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள்..! P58a

கடன் பாக்கி இல்லை என்கிற சான்றிதழுடன் கடனைக் கட்டியதற்கான ஆதாரமாக ஸ்டேட்மென்ட் ஆஃப் அக்கவுன்ட் (Statement of Account - SOA) எனும் சான்றிதழையும் வங்கிகள் வழங்குகின்றன. இந்தச் சான்றிதழ்களை கார் கடனைக் கட்டி முடித்தவர் கேட்டால்தான் தருவார்கள்.
நாம்தான் கடனை முழுக்கக் கட்டி முடித்துவிட்டோமே என்று நினைத்து, கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், பிற்பாடு இந்தச் சான்றிதழை வாங்க அலைய வேண்டி இருக்கும்.

கார் கடனை கட்டி முடித்தவுடன், காரின் பதிவுச் சான்றிதழில் (Registration Certificate - RC) இருக்கும் வங்கியின் பெயருக்குப் பதிலாக, கடனைச் செலுத்தியவரின் பெயருக்கு ஆர்சி-ஐ மாற்றுவது அவசியம். இதற்கு மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் (Regional Transport Office - RTO) தனிப்படிவம் உள்ளது.

இதனை வங்கியில் கொடுத்தால், வங்கி அதிகாரிகள் ‘கடன் கட்டி முடிக்கப்பட்டு விட்டது’ என்று ஒரு சான்றிதழைத் தந்து உறுதிபடுத்துவார்கள். இதனை ஆர்டிஓ அலுவலகத்தில் கொடுத்தால், கார் பதிவு அதன் உரிமையாளர் பெயருக்கு மாற்றித் தரப்படும்.

எந்த வகையான கடன் என்றாலும் சரி, அதனைக் கட்டி முடித்தபிறகு, அடுத்த இரண்டு வருடங்களுக்குள்ளாகப் புதிதாகக் கடன் பெறப் போகிறீர்கள் எனில், ஒரு மாதத்துக்குள்ளாக சிபில் (CIBIL) ஸ்கோரைத் தெரிந்துகொள்வது நல்லது. ஏனெனில் அப்போது தான் வாங்கிய கடன்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு, அவை சரியாக பதிவாகி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். சில சமயங்களில் நாம் கடனை கட்டி முடித்திருந்தாலும் வட்டியாக விதிக்கப்பட்ட சிறு தொகையைக் கட்டாமலே இருந்திருப்போம். இது சிபிலில் வெளிப்படும் என்பதால் மேற்கொண்டு நமக்கு கிடைக்க அது ஒரு சிக்கலாக மாற வாய்ப்புள்ளது.

கார் கடனை முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பஞ்சாப் நேஷனல் பேங்க், போரூர் கிளை மேலாளர் அழகப்பன் கிருஷ்ணன் விளக்கிச் சொன்னார்.

‘‘கார் கடனைக் கட்டிமுடித்த பிறகு, வங்கியில் கடன் பாக்கி இல்லை என்கிற சான்றிதழ் வாங்குவது மிக முக்கியம். காரணம், இந்தச் சான்றிதழைக் கேட்டுப் பெற்றால்தான் கடன் முழுமை யாகக் கட்டப்பட்டுவிட்டது என்பது உறுதிப்படும்.

உதாரணத்துக்கு, ஒருவர் ஏப்ரல் 18-ம் தேதி கார் கடன் கடைசித் தவணை ரூ.10,000 கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாதத்தில் ஏற்கெனவே கடந்த 17 நாளுக்கான வட்டி கணக்கிடப்படாமல் இருக்கும். இந்தப் பாக்கி சிபில் அறிக்கையில் பிரதிபலிக்க வாய்ப்பு இருக்கிறது.
கடன் பாக்கி இல்லை சான்றிதழை வங்கியில் கேட்கும்போது அவர்கள் விடுபட்ட, நாள்களுக்கான வட்டியை கட்டச் சொல்வார்கள். அப்படிச் செய்யும்போது கார் கடன் முழுமையாகக் கட்டப்பட்டுவிடும்.

கார் பதிவு சான்றிதழில் கடன் முடிக்கப்பட்ட விவரம் குறிப்பிட்டால்தான் பிறகு காரை விற்கும்போது பிரச்னை வராது. இல்லை எனில், அந்த நேரத்தில் வங்கிக்கும், ஆர்டிஓ அலுவலகத்துக்கும் அலைய வேண்டி இருக்கும். இவற்றைத் தவிர்க்க, கடனைக் கட்டி முடித்தவுடனே இந்த டாக்குமென்டுகளை வாங்கி விடுவது அவசியம்” என்றார்.

கார் கடனைக் கட்டி முடிக்கப் போகிறவர்கள் இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு செயல்படலாமே!

கடன் பாக்கி இல்லை சான்றிதழின் முக்கியத்துவம்..!

1. லோனைத் திருப்பிச் செலுத்தியதற்கான சட்டப்படி செல்லுபடியாகக்கூடிய ஆவணம்.

2. கடன் தொடர்பாக வங்கியுடன் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இந்தச் சான்றிதழைக் காட்டி விளக்கலாம்.

3. சிபில் ஸ்கோரில் ஏதேனும் தவறுகள் இருந்தால், இதனைக் கொடுத்து சரிசெய்யலாம்.

4. கடனில் வாங்கப்பட்ட வீடு அல்லது காரை விற்க நேர்ந்தால், அதனை வாங்குபவரிடம் கடன் பாக்கி இல்லை என்பதை உறுதிபடுத்த இந்த ஆவணம் உதவியாக இருக்கும்.

-ந.விகடன் .


தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum