வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


வங்கிகளில் எல்ஐசி முதலீடு செய்திருப்பது நல்லதா?

Go down

வங்கிகளில் எல்ஐசி முதலீடு செய்திருப்பது நல்லதா? Empty வங்கிகளில் எல்ஐசி முதலீடு செய்திருப்பது நல்லதா?

Post by தருண் Mon Jul 27, 2015 11:12 am

வங்கிகளில் எல்ஐசி முதலீடு செய்திருப்பது நல்லதா? Lic_2488090f

இந்த பங்குச் சந்தை இருக்கிறதே, அங்கே லாப நஷ்ட கணக்கு போட்டுத்தான் பங்குகளை எப்போதும் வாங்குவார்கள், விற் பார்கள் என்று நினைத்துவிட முடியாது. சில வேளைகளில் அவர்களுடைய மூளை வித்தியாசமாக வேலை செய்யும்; மக்களவை பொதுத் தேர்தல் முடிவு என்ன ஆகும்,

அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டியை உயர்த்துமா - அப்படியே வைத்திருக்குமா, வளை குடா நாடுகள் எண்ணெய் உற்பத்தி யைக் குறைக்குமா கூட்டுமா, இனி மேல் மக்கள் ஊறுகாய்க்குப் பதில் பேரிக்காய் தொட்டுக்கொள்ள முடிவு செய்தால் மசாலா மார்க்கெட் என்னாகும் என்றெல்லாம் சிந்தித்து திடீரென பங்குகளை சில நிறுவ னங்களிலிருந்து விலக்கி சில நிறுவனங்களில் முதலீடு செய்ய முற்படுவார்கள். காரணமே இல்லாமல் சந்தை சரியும் பிறகு நிமிரும். சில வேளைகளில் பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படித்த பிறகு விபரீ தமாக சிந்தித்து திடீர் முடிவுகளை எடுப்பார்கள்.

சமீபத்திய செய்தி ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இந்திய வங்கிகள் பலவற்றில் ஏராளமாக பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது என்று தெரிவித்தது. இப்போது பல முதலீட்டாளர்கள் தங்களுக்குள் கிசுகிசுவென இதுபற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

அரசுடமை வங்கிகளில் பல வாராக் கடன் சுமையால் அழுந்திக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்களே, அதில் முதலீடு செய்த எல்.ஐ.சி. நிலை என்னாகும் என்பதுதான் அந்த கிசுகிசு. அரசுடமை வங்கிகளுக்கு அரசாங்கம் பின்புலமாக இருக்கிறது, அந்த வங்கிகள் தடுமாறினாலும் அரசு கைகொடுத்து தூக்கிவிட்டுவிடும் எனவே எல்.ஐ.சி. பற்றி வீண் கவலை எந்த வீணர்களுக்கும் வேண்டாம் என்பதே நிதி நிபுணர்களின் அறிவுரை.

இந்திய ரிசர்வ் வங்கியைப் போலவே நெடிதுயர்ந்த அரசு நிறுவனம் ஒன்று உண்டென்றால் அது எல்.ஐ.சி. தான். தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு இந்திய இன்ஷூரன்ஸ் துறையில் இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களும் முட்டி மோதிப் பார்த்தும் கூட இந்த மேரு மலையை அசைக்க முடியவில்லை. இது சாதாரண அமைப்பல்ல, ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடிய அசாதாரண தல விருட்சம்.

கடன் வழங்குவதில் 11-ம் இடம்

2008-ல் உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் அமெரிக்காவில் திவாலானதால், எல்.ஐ.சி. இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை இந்திய வங்கிகளில் முதலீடு செய்திருக் கிறதே, வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டால் எல்.ஐ.சி. என்னாகும் என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது. எல்.ஐ.சி.யின் இன்றைய சொத்து மதிப்பு 17 லட்சம் கோடி ரூபாய். கடன் தரும் நிறுவனங்களில் 11-வது இடத்தில், ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. எல்.ஐ.சி. வங்கியாக மாற்றப்பட்டால் இந்தியாவின் 20-வது பெரிய வங்கியாக மாறிவிடும்.

தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், கடன் பத்திரங்கள், அரசு வங்கிகள் என்று பலவிதங்களில் எல்.ஐ.சி. முதலீடு செய்கிறது. இவ்வகை முதலீடு மட்டும் இந்த ஆண்டு 31 மார்ச்சுடன் முடிந்த நாளில் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இது 8.11 லட்சம் கோடியாக இருந்தது. எல்லா இன்ஷுரன்ஸ் நிறுவனங்களுக்கும் உள்ள கவனத்துடனும் எச்சரிக்கை யுடனும்தான் எல்.ஐ.சி. தனது முதலீடு களைச் செய்கிறது.

நிதி நிர்வாக நிபுணர்கள் கூடிப்பேசி சாதக, பாதகங் களை அலசித்தான் முடிவெடுக்கின் றனர். என்னதான் விவாதித்தாலும் தவறுகளுக்கோ, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கோ இடம் தந்துவிடக் கூடாது என்று கடன் தருவதற்கும் முதலீடு செய்வதற்கும் முன்னர் அந்நிறுவனத்தின் நிதி நிலைமை, விற்று முதல், லாப ஈவு போன்ற அனைத்தையும் ஆவணப்பூர்வமாக திரட்டி அலசுகின்றனர்.

சட்டப்பூர்வ நியதிகள்

எந்தவொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் அதன் முதலீட்டை 1. அங்கீகரிக்கப்பட்ட முதலீடு, 2. இதர முதலீடு என்ற 2 வழிகளில் மட்டுமே மேற்கொள்ள முடியும். வாடிக்கையாளர்களிடம் சந்தாவாக வசூலிக்கும் தொகையில் அதிகபட்சம் 85%-யும் பங்குகளுடன் இணைந்த நிதியில் 75%-யும் அங்கீகரிக்கப்பட்ட இனங்களில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று ‘இந்திய காப்பீட்டு நெறிப்படுத்தல், வளர்ச்சி ஆணையம்’ வரையறுத்துள்ள படியே முதலீடு செய்யப்படுகிறது. உயர்ந்த தரத்திலான, நல்ல வருமானம் தரக்கூடிய பங்குகளில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளைச் செய்ய வேண்டும். நிறுவனங்களை அவற்றின் நிதிநிர்வாக அடிப்படையில் தரமிடும் நிறுவனம், ‘ஏஏ’ என்றோ ‘ஏஏஏ’ என்றோ மதிப்பிடும். அந் நிறுவனங்களில் மட்டுமே எல்.ஐ.சி. முதலீடு செய்கிறது.

எல்.ஐ.சி. கடன் தரும் நிறுவனங் களும் பலதரப்பட்டவை. வங்கிகள் எப்படி கடன் தருவதற்கு முன்னால் எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து கடன் வழங்க முன் வருமோ அப்படித்தான் எல்.ஐ.சி.யும். ஆனால் விவரம் தெரிந்தவர்கள், வங்கிகளிடம்கூட எளிதில் வாங்கி விடலாம், எல்.ஐ.சி.யிடம் வாங்க முடியாது என்று கூறுகிறார்கள். கடன் வாங்கிவிட்டு 91 நாள்களுக்கு அசலில் ஒரு பகுதி, வட்டி என்று எதுவுமே செலுத்தாவிட்டால் ‘வாராக் கடன்’ இனத்தில் ஒன்றாக பாவிக்கத் தொடங்குவார்கள். ‘இந்திய காப்பீட்டு நெறிப்படுத்தல், வளர்ச்சி ஆணையம்’ மட்டுமல்லாமல் இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் செயல்பாடுகளை அவ்வப்போது கண்காணித்துக்கொண்டே வருவதால் அச்சப்படத் தேவையில்லை.

அதிக முதலீடு எதில்?

அடித்தளக் கட்டமைப்புப் பணிகளுக்காக வெளியிடப்படும் கடன் பத்திரங்களில்தான் எல்.ஐ.சி. அதிகம் முதலீடு செய்கிறது. இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி அடித்தளக் கட்டுமானத்துறை, சமூகத்துறைகளில் மட்டும் எல்.ஐ.சி.யின் முதலீடு 1.55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 1.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வங்கியல்லாத நிதி நிறுவனங் களுக்கும் கணிசமாகக் கடன் தருவது எல்.ஐ.சி. தான். 2014-15 நிதியாண்டுக்கான நிலைநிதி அறிக் கைப்படி, வங்கியல்லாத நிறுவனங் களுக்கு அதிகக் கடன் கொடுத்தது வங்கிகளைவிட இன்சூரன்ஸ் நிறுவனங் கள்தான் என்று தெரியவருகிறது.

அடுத்தபடியாக, அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் ரூபாய்3.32 லட்சம் கோடி முதலீடு செய்திருக்கிறது. கார்ப்பரேஷன் வங்கி யின் பங்குகளில் மட்டும் 22.54% முதலீடு செய்திருக்கிறது. பேங்க் ஆஃப் இந்தியாவில் 14.93%, கனரா வங்கியில் 14.4%, பாரத ஸ்டேட் வங்கி 11.82%, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 8.11% முதலீடு செய்திருக்கிறது. இப்படி மொத்தம் 27 வங்கிகளில் முதலீடு செய்திருக்கிறது.

ஒரு வங்கி அல்லது நிறுவனத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்வதாக இருந்தால் அதற்கு முந்தைய 7 அல்லது 8 ஆண்டுகளில் அந் நிறுவனம் குறைந்தபட்சம் 4% லாப ஈவு (டிவிடெண்ட்) அறிவித்திருக்க வேண்டும் என்ற நியதியைப் பின்பற்றுகிறது. நல்ல நிறுவனமாக இருந்தால்தான் இது சாத்தியம். எந்த ஒரு நிறுவனத்திலும் அதிகபட்சம் 10% அல்லது 15%-க்கு மேல் எல்.ஐ.சி.யால் முதலீடு செய்ய முடியாது. சில வேளைகளில் அப்படி நடந்தால் அது அரசின் அறிவுறுத்தல்படியாக இருக்கக்கூடும் எனவே அதுபற்றியும் அச்சம் தேவையில்லை.

இந்திய அரசுத்துறை நிறுவனங் களில் ஜாம்பவான்களான எல்.ஐ.சி.யின் அனுபவம், ஆற்றல், வீச்சு, அரசின் பின்பலம் காரணமாக மத யானை போல நிதித்துறையில் உலா வருகிறது. இந்த யானைக்கு மதமும் பிடிக்காது, அடியும் சறுக்காது. எனவே யாருக்கும் கவலை வேண்டாம்.

தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு இந்திய இன்ஷூரன்ஸ் துறையில், இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களும் முட்டி மோதிப் பார்த்தும் கூட இந்த மேரு மலையை அசைக்க முடியவில்லை. இது சாதாரண அமைப்பல்ல, ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடிய அசாதாரண தல விருட்சம்.
--தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» `இந்திரதனுஷ்’ திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகளில் அரசு விரைவில் முதலீடு
» இண்டெக்ஸில் அதிக வங்கிப் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு நல்லதா?
» வீட்டுக்கடன் தவணை: சீக்கிரம் கட்டி முடிப்பது நல்லதா?​​
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு Vs நேரடி பங்குச் சந்தை முதலீடு எது பெஸ்ட்; ஏன் பெஸ்ட்?
» பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கை 52% குறைக்க முடிவு: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum