வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


சாம்சங் கேலக்ஸி s6

Go down

சாம்சங் கேலக்ஸி s6 Empty சாம்சங் கேலக்ஸி s6

Post by தருண் Mon Mar 23, 2015 4:24 pm

சாம்சங் கேலக்ஸி s6 11057802_895802517145206_4919493055556066504_n

சில வருடங்களுக்கு முன்பு உச்சக்கட்டத்தில் இருந்த சாம்சங் நிறுவனம், சமீப காலமாக பலமான தொய்வைக் கண்டுவருகிறது. மிகுந்த சிரமத்துக்குப்பின், சாம்சங் நிறுவனம் தனது பழைய நிலையை அடையும் முயற்சியில் தனது புதிய ஸ்மார்ட் போனான  ‘சாம்சங் கேலக்ஸி எஸ்6’ ஸ்மார்ட் போனை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இதன் இந்திய விலை ரூபாய் 48,500 என்று எதிர்பார்க்கலாம்.

இயங்குதளம்!

இது லேட்டஸ்ட் வெர்சனான லாலிபாப் 5.0.2 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. மேலும், சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேகமான ‘TouchWiz’ டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும். முந்தைய TouchWiz டிசைனைவிட இது கச்சிதமாக இருக்கும் என்று சாம்சங் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

தொழில்நுட்பம்!

இந்த ஸ்மார்ட் போன் Exynos 7420 சிப் செட்டைக் கொண்டு இயங்குகிறது. இந்த அதிநவீன சிப்செட்டில் Quad-core 1.5 GHz Cortex-A53 மற்றும் Quad-core 2.1 GHz Cortex-A57 பிராசஸர்கள் அடங்கும். மேலும், Mali-T760 என்ற பிரத்யேகமான கிராஃபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். இந்த ஸ்மார்ட் போன் 3GB ரேமைக் கொண்டு இயங்குகிறது.

டிஸ்ப்ளே!

இந்த ஸ்மார்ட் போன் அதிநவீன QHD Resolution 5.1 இன்ச் டச் ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே Super  Amoled தொழில்நுட்பத்தைக் கொண்டு உள்ளது. 1440x2560 pixel 577 ppi கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளே வெளிச்சத் திலும் இருட்டிலும் சிறப்பாகச்  செயல்படும். பாதுகாப்புக்காக  ‘Corning Gorilla Glass 4’-யும் இதில் உள்ளது.

பேட்டரி!

இந்த ஸ்மார்ட் போன் ‘Non-removable’ 2550mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது மற்ற நிறுவனங்களின் ‘Flag Ship’ ஸ்மார்ட் போன்களின் பேட்டரியைவிட திறன் மிகக் குறைவு. இந்த ஸ்மார்ட் போனின் அனைத்துக் கோணங்களில் சீராக உழைத்துள்ள சாம்சங் நிறுவனம் பேட்டரியில் மட்டும் பெரும் அளவில் சொதப்பியுள்ளது.Finger Print ஸ்கேனர், 4G, Wireless சார்ஜிங் ஆகிய வசதிகளுடன் வரும் இந்த ஸ்மார்ட் போன் தற்போது சிங்கிள் சிம் வசதியுடன் வருகிறது. சில பகுதிகளில் மட்டும் டூயல்-சிம் வசதியுடன் உள்ள மாடல் வெளியிடப்படும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசைன்!

இந்த போனின் டிசைன் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. முந்தைய கேலக்ஸி எஸ் வகை ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டவை. ஆனால், இது ‘மெட்டல்’ மற்றும் கிளாஸைக் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் டிசைனைக் கொண்டுள்ள இந்த  போனின் டிசைன், ஆப்பிள் மற்றும் ஹெச்டிசி ஆகிய ஸ்மார்ட் போன்களின் டிசைன்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் அடர்த்தி 6.8 மி.மீ.

கேமரா!

16 MP  2988 x 5312 pixels பின்புற கேமரா மற்றும் 5MP முன்புற கேமராக்களைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் பின்புற கேமராவைக் கொண்டு 2160p வீடியோக்களை எடுக்க முடியும். மற்றும் முன்புற கேமராவைக் கொண்டு 1080p வீடியோகளை எடுக்க முடியும்.

ஸ்டோரேஜ்!

இந்த ஸ்மார்ட் போன் 32GB, 64GB, 128GB ஆகிய மூன்று இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதிகளுடன் வருகிறது. எஸ்டி கார்டு மூலம் இதன் ஸ்டோரேஜை விரிவுபடுத்த முடியாது. என்றாலும்,  ஒட்டுமொத்த அளவில் இது ஸ்மார்ட் போனின் செயல்திறனை அதிகரிக்கும்.

பிளஸ்:

டிசைன்   டிஸ்ப்ளே.
தொழில்நுட்பம்  கேமரா.

மைனஸ்:

பேட்டரி  
TouchWiz டிசைன்.
விலை.


விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum