வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஆர்பிட்ரேஜ் பண்ட்(Arbitrage Fund)... யாருக்கு ஏற்றது ?

Go down

ஆர்பிட்ரேஜ் பண்ட்(Arbitrage Fund)... யாருக்கு ஏற்றது ? Empty ஆர்பிட்ரேஜ் பண்ட்(Arbitrage Fund)... யாருக்கு ஏற்றது ?

Post by தருண் Mon Dec 02, 2013 10:43 am

மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் பங்குச் சந்தை சார்ந்த நிதித் திட்டங்கள் நீண்டகால முதலீட்டுக்கும், கடன் சார்ந்த நிதித் திட்டங்கள் (Debt Funds) குறுகியகால முதலீட்டுக்கும் உகந்ததாக உள்ளன. இந்த இருவிதமானத் திட்டங்களில் முதலீட்டு மீதான நிலையற்றத் தன்மை (Volatility) பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் அதிகமாகவும், கடன் சார்ந்த நிதித் திட்டங்களில் வட்டி விகிதம் மாறுபடும் நேரத்திலும் மட்டுமே இருக்கும்.

இந்த முதலீட்டு மீதான நிலையற்றத் தன்மையைத் தவிர்த்து, அதேநேரத்தில் கடன் திட்டங்களுக்கு நிகரான வருமானத்தை ஈட்டித் தரும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களே ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் எனப்படுகிறது.

ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளின் செயல்பாடு:

பங்குச் சந்தையில் பணச் சந்தை (Cash market), ஃப்யூச்சர் சந்தை என இரண்டு வகை உள்ளன. ஒரு குறிப்பிட்டப் பங்கு இந்த இரு சந்தையிலும் வெவ்வேறு விலையில் வர்த்தகமாகும் வாய்ப்பைப் பயன்படுத்தி, லாபம் ஈட்டுவதே இந்த ஃபண்டின் நோக்கமாகும்.

உதாரணத்துக்கு, ஒரு பங்கின் விலை ஃப்யூச்சர்ஸ் சந்தையில் ரூ.110-க்கு வர்த்தகமாகும்போது, அதே பங்கு பணச் சந்தையில் ரூ.100-க்கு வர்த்தகமாகுமேயானால் ஃப்யூச்சர் சந்தையில் உள்ள பங்கை ரூ.110-க்கு விற்றுவிட்டு பணச் சந்தையில் அதே அளவு பங்கை ரூ.100-க்கு வாங்குவதன் மூலம் ஒரு பங்குக்கு 10 ரூபாய் ஆதாயமாகப் பெறக்கூடும்.

அந்த மாத இறுதியில் ஃப்யூச்சர்ஸ் சந்தையில் ஒப்பந்தம் முடிவடையும்போது இந்தப் பங்கின் மதிப்பு இரு சந்தையிலும் ஒன்றாக இருக்கும். அந்த மாத இறுதியில் அந்த பங்கின் விலை ரூ.120-ல் முடிவடைந்தால் ரூ.10 நஷ்டம் அடைந்திருக்கும். அதே பங்கை ரூபாய் 100-க்கு பணச் சந்தையில் வாங்கியதால் ரூ.20 லாபம் கிடைத்திருக்கும். ஆக, நிகர லாபம் பங்குக்கு ரூ.10 கிடைத்திருக்கும் (பார்க்க, அட்டவணை).

கவனிக்க வேண்டியவை:

பங்கு விலையில் ஃப்யூச்சர்ஸ் சந்தைக்கும், பணச் சந்தைக்கும் இடையே வேறுபாடு இருந்தால் மட்டுமே வருமானம் ஈட்டித் தரும்.

பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்போது மட்டுமே வருமானத்துக்கான வாய்ப்பு அதிகம்.

நீண்டகால முதலீட்டுக்கு உகந்ததல்ல.

எதிர்பார்க்கும் வருமானம் ஆண்டுக்கு 6% - 9% வரை.

முதலீட்டுக்கு உகந்தகாலம் அதிகபட்சம் ஒரு வருடம்

ஃபண்டு நிர்வகிக்கும் தொகை குறைவாக இருக்கும் திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது.

யாருக்கு உகந்தது?

பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையில் உள்ள முதலீட்டு மீதான நிலையற்றத் தன்மையைத் தவிர்க்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு.

அதிகபட்ச வரி வரம்புக்குள் வருபவர்கள் குறுகியகாலத்தில் வரும் வருமானத்துக்கு வரியைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கு.

ஆர்பிட்ரேஜ் பண்ட்(Arbitrage Fund)... யாருக்கு ஏற்றது ? Nav61c

வரி விகிதம்!

இந்தவகை ஃபண்டுகள் கடன் சார்ந்த திட்டங்களுக்கான வரிவிதிப்பின் கீழ் வந்தாலும் பெரும்பாலான திட்டங்களில் பங்குச் சந்தை முதலீடு 65%க்கு மேல் உள்ளதால் பங்குச் சந்தை முதலீட்டுக்கான வரிவிதிப்பின்படி கணக்கிடப்படுகிறது. இதன்படி ஒரு வருடத்துக்குள்ளான லாபத்துக்கு 15% வரி உண்டு. ஒரு ஆண்டுக்கு மேலான லாபத்துக்கு வரி கிடையாது. முதலீட்டுக்கு அதிக பாதுகாப்பை விரும்புவர்களுக்கும் அதிகபட்ச வரி விகிதத்தின் கீழ் வருபவர்களுக்கும்

குறுகியகால முதலீட்டுக்கு இது உகந்ததாக இருக்கும்.

ஆர்பிட்ரேஜ் பண்ட்(Arbitrage Fund)... யாருக்கு ஏற்றது ? Nav61d

-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum