வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஸியோமி ரெட்மி நோட்(Xiaomi‬ ‪-RedmiNote‬ )

Go down

ஸியோமி ரெட்மி நோட்(Xiaomi‬ ‪-RedmiNote‬ ) Empty ஸியோமி ரெட்மி நோட்(Xiaomi‬ ‪-RedmiNote‬ )

Post by தருண் Tue Dec 09, 2014 3:47 pm

சிறப்பான தொழில்நுட்பம், எளிமையான டிசைன் மற்றும் குறைந்த விலை, இது தான் ஸியோமி நிறுவனத்தின் சிறப்பம்சம். இந்நிறுவனத்தின் எம்.ஐ.3 மற்றும் ரெட்மி 1எஸ் ஆகிய இரு ஸ்மார்ட் போன்களும் இந்திய மார்கெட்டில் பயங்கர ஹிட்.  ரெட்மி 1எஸ் ரக போன் சூடாகிறது என்ற குறைபாடு பற்றி பேசப்பட்டாலும், அதன் புதிய 4.5 வர்சனை அப்டேட் செய்த பிறகு சூடாவது குறைந்திருக்கிறது. தற்போது ஷியோமி நிறுவனத்தின் புதிய கேட்ஜெட்டான ‘ஸியோமி ரெட்மி நோட்’ இந்தியாவில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.  

வடிவமைப்பு:

ரெட்மி நோட்டின் வடிவமைப்பும் ரெட்மி 1S-ன் வடிமைப்பு கிட்டத்தட்ட ஒன்று தான். எளிமையான டிசைனை கொண்ட ரெட்மி நோட் முற்றிலும் பிளாஸ்டிக்கால் ஆனது. ரெட்மி நோட்டின் முன்புறம் கருப்பு நிறத்திலும் பின்புறம் வெள்ளை நிறத்திலும் அமைந்துள்ளது.

டிஸ்ப்ளே:

ரெட்மி நோட் அகலமான 5.5 இன்ச் 1280*720 IPS LCD ஸ்க்ரீன் HD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 267 ppi கொண்டுள்ள இந்த துல்லியமான டிஸ்ப்ளே படம் பார்க்க, ஈ-புக் படிக்க, இன்டர்நெட் ப்ரௌஸ் செய்ய மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ‘Corning Gorilla Glass 3’ என்ற சக்திவாய்ந்த ஒரு கிளாஸால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ப்ராஸஸர்:

ரெட்மி நோட் சக்திவாய்ந்த MediaTek MT6592 ப்ராஸஸரை கொண்டு இயங்குகிறது. இந்த MediaTek MT6592 ப்ராஸஸர் எட்டு CPU கோர்களை கொண்டுள்ளது. 1.7 GHzஇல் இயங்கக்கூடும் இந்த ப்ராஸஸரோடு பிரத்யேகமான Mali 450 GPU என்ற கிராபிக்ஸ் ப்ராஸஸரும் அடங்கும். 2GB ரேமோடு வரும் இந்த ஸ்மார்ட் போனின் செயல்பாட்டில் எந்த குறைப்பாடும் இருக்காது. 8GB இன்டெர்னல் மெமரியுடன் வரும் இந்த ரெட்மி நோட்டை 32GB SD கார்ட் மூலமும் விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

கேமரா:

13 மெகா பிக்ஸல் பின்புறக் கேமராவும் 5 மெகா பிக்ஸல் முன்புறக் கேமராவும் கொண்டுள்ள இந்த ஒன் பிளஸ் ஒன் ஸ்மார்ட் போன் 1080P HD வீடியோவை ரெகார்ட் செய்யும் திறனை கொண்டுள்ளது.

பேட்டரி:

3100 mAh பேட்டரியை கொண்டுள்ள ரெட்மி நோட், நீடித்து உழைக்கும் தன்மையை கொண்டுள்ளது. கிட்டதட்ட 15 மணி நேரம் வரை இந்த பேட்டரி உழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ரெட்மி நோட்டுடன் கொடுக்கப்படும் 2A சார்ஜர் சில மணி நேரங்களிலேயே இந்த பேட்டரியை சார்ஜ் செய்யும் திறனை பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

ஓ.எஸ்:

ரெட்மி நோட் ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ் கொண்டு இயங்குகிறது. ரெட்மி 1S மற்றும் எம்.ஐ.3யில் பயன்படுத்தப்பட்ட ஷியோமி நிறுவனத்தின் பிரத்யேக MIUI ஓ.எஸ். டிசைனும் இந்த ரெட்மி நோட்டில் அடங்கும். பார்பதற்கு கவர்ச்சியாகவும் பயன்படுத்த எளிதாகவும் இருக்கும் இந்த MIUI, வாடிகையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் வண்ணத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ்:

* சிறப்பான தொழில்நுட்பம்.
*  கேமரா.
* விலை.

மைனஸ்:

* பழைய ஓஸ்.
* சிம்பிள் டிசைன்.

ரெட்மி நோட் ‘Flipkart’ இணையதளத்தில் ரூபாய் 8,999 என்ற விலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.


--விகடன்  

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum