வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


சுவர்களை வடிவமைப்பதில் புதுமை!

Go down

சுவர்களை வடிவமைப்பதில் புதுமை! Empty சுவர்களை வடிவமைப்பதில் புதுமை!

Post by தருண் Sat Dec 06, 2014 11:58 am


கட்டுமானத்தின் வலுவான ஆணிவேராக விளங்கும் சுவர்கள் வடிவமைப்பில் புதுமைகள் புகுந்த வண்ணம் இருக்கின்றன. ரெடிமேடாகவும் சுவர்கள் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய சுவர்கள் கட்டுமான பணிகளை விரைவாக முடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் கட்டுமான பணியை நிறைவு செய்வதற்கு ஆகும் கால நேரம் குறைகிறது.


சுவர்களை வடிவமைப்பதில் புதுமை! 201412061136571316_Shaping-the-walls-Strange_SECVPF

நவீன கற்கள்

சுவர் கட்டுமானத்தை ரெடிமேட் கற்கள் எளிமையாக்கினாலும் பூச்சு வேலைகள் மேற்கொள்வதற்கு சில நாட்கள் பிடிக்கும். இந்த கூடுதல் வேலையை எளிமையாக மாற்றுவதற்கு தற்போது 'ரீசைக்கிளிங் கான்கிரீட்' என்ற நவீன கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மறுசுழற்சி கான்கிரீட் தொழில்நுட்பத்தில் கட்டுமான கழிவுகளாக மிஞ்சும் ரப்பீஸ், பிளாஸ்டிக் கழிவுகள், மணல் போன்றவை மூலப்பொருளாக பயனப்படுத்தப்படுகின்றன. இந்த பொருட்களை அஸ்திவார பகுதியில் போடுவது வழக்கம். ஆனால் இந்த முறையில் கழிவுகளே உறுதியாக சுவர்களாக மாற்றப்படுகின்றன. கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் இந்த சுவர்களை பசுமை வீடுகளிலும் பயன்படுத்தலாம்.

சுவர் கட்டமைப்பு முறை

இவை ரெடிமேட் கற்களை போன்று எல்-வடிவம், டி-வடிவம், போன்ற பல வடிவங்களில் கிடைக்கின்றன. மேலும் எளிமையான சாதாரண ரெடிமேட் கற்களாகவும் இவை சந்தைகளில் கிடைக்கின்றன. இந்த புதுமையான தொழில்நுட்பம் சுவர் கட்டமைப்பு முறைகளை எளிமைப்படுத்துகிறது. மற்ற ரெடிமேட் சுவர்களை போன்றே இதன் அடிப்பகுதியிலும் தட்டையான பகுதி அமைந்துள்ளது.

இவையே சுவர்களின் அடித்தளமாகவும் விளங்குகிறது. இந்த சுவர்களை கொண்டு வீடுகளை அமைக்க அடித்தள பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அடிப்பரப்பு சமமாக இருந்தால் போதும், இந்த 'ரீசைக்கிளிங் கான்கிரீட்' சுவர்களை நிறுவி வீடுகளை அமைத்திடலாம்.
கண்களை கவரும் பூச்சு வேலைகள்

இந்த சுவர்களின் இரு புறங்களிலும் அழகான பூச்சு வேலைகள் முடித்தாற்போன்று காணப்படுகின்றன. இவை மிகவும் மென்மையாகவும் அழகான தோற்றத்திலும் காணக்கிடைக்கின்றன. விசுவல் கான்கிரீட் முறைகளின்படி மேற்பரப்புகள் பளபளப்பாக்கப்படுகின்றன. இந்த கற்களை பயன்படுத்தி கட்டமைப்புகளை விரைவாகவும் எளிமையாகவும் அமைத்திடலாம்.

மேலும் இந்த வகை கற்களுக்கு பூச்சு வேலைகள் செய்ய வேண்டியதில்லை. கட்டமைப்புகளை அமைத்து வர்ணங்களை பூசினாலே போதுமானதாகும். ரீசைக்கிளிங் கான்கிரீட் சுவர்கள் முழு நீள சுவர்களாகவும், அழகுப்படுத்தும் வகையில் பாதி அளவுகள் கொண்ட சுவர்களாகவும் கிடைக்கின்றன.

அஸ்திவாரம் அவசியமில்லை

சிறிய வீடுகளின் உள்பகுதியில் பயன்படுத்தப்படும் குறைந்த தடிமனிலான சுவர்களும் இத்தொழில்நுட்பத்தில் கிடைக்கின்றன. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கவும் இந்த சுவர்களை பயன்படுத்தலாம். இந்த தொழில்நுட்பம் இதற்கு முன்னதாக அறிமுகமான டி-வடிவ சுவர் மற்றும் எல்-வடிவ சுவர்களை பின்பற்றி பூச்சு வேலைகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை கொண்டு தற்காலிக குடியேற்றங்கள் மற்றும் நிரந்தர குடியிருப்புகள் அமைக்க முடியும்.

இவற்றை கொண்டு அமைக் கப்படும் வீடுகளுக்கு அஸ்திவாரம் தேவைப்படுவதில்லை. மேலும் இவை பிரிந்து செயல்படும் வண்ணம் இருப்பதால் நிலையற்ற நிலப்பரப்புகளிலும் இவற்றால் நிலையாக நிற்க முடியும். இந்த சுவர்களை கொண்டு எளிமையாக நிரந்தர குடியிருப்புகளை அமைத்திட முடியும். இதனை தரை பகுதியோடு நிலையாக இருக்க செய்ய கான்கிரீட் கலவைகளை பயன்படுத்துகின்றனர். தரை மற்றும் சுவர்களை இணைக்க குறைந்த அளவிலான கான்கிரீட் கலவைகளே தேவைப்படுகின்றன.

நேரம் குறையும்

பொதுவாக ரெடிமேட் சுவர்கள் லீகோ விளையாட்டு கற்கள் முறையில் இருக்கும். இதில் ஒன்றை மற்றொன்றுடன் இணைக்கும் வகையில் மேல் கீழ் பகுதிகளில் பிரத்தியேகமான அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் 'ரீசைக்கிளிக் கான்கிரீட்' முறையில் ஒன்றின்மீது மற்றொன்றினை வைத்து கான்கிரீட் கலவைக் கொண்டு பூசும் வகையில் இருக்கும்.

இவ்வாறான செயல்பாடு கட்டிடத்திற்கான உறுதி தன்மையை உறுதிப்படுத்துகிறது. மேலும் மழைக்காலங்களில் ஏற்படும் நீர் கசிவு, நீர் புகுதல் போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. அத்துடன் கட்டிடங்களுக்கு மேல் சாதாரணமாக அமைக்கப்படும் கான்கிரீட் தளங்கள் மற்றும் அழகுப்படுத்தும் கூம்பு வடிவ கோபுரங்கள் போன்ற அமைப்பு முறைகளை அமைத்துக் கொள்ளலாம்.

கட்டுமானத்துக்கு வரவேற்பு

இதன் இருபுறங்களிலும் அழகான தோற்றத்தினை கொண்டிருப்பதால் இதற்கு மேற்கொண்டு பூச்சுவேலைகள் செய்ய வேண்டியதில்லை. இதனால் கட்டமைப்புகளை அமைப்பதற்கு ஆகும் நேரம் குறைகிறது. மேலும் மறுசுழற்சி கான்கிரீட் முறைகளே மேலை நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. வீணாகும் பொருட்களை கொண்டு கட்டமைக்கப்படுவதால் இதனை மக்களும் வெகுவாக வரவேற்கின்றனர்.

- தினந் தந்தி

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum