வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


சிறுகக் கட்டி பெருக வாழலாம்!

Go down

சிறுகக் கட்டி பெருக வாழலாம்! Empty சிறுகக் கட்டி பெருக வாழலாம்!

Post by தருண் Sun Oct 19, 2014 11:43 am

எல்லாரும் பல்லாக்குல ஏறிட்டா தூக்கறது யாரு? எல்லா தொழிலதிபர்களும் பெரிய பிராண்ட் வேண்டும் என்று அடம் பிடித்தால் சின்ன பிராண்டுகளை யார் பராமரிப்பது?

ஒவ்வொரு பொருள் பிரிவிலும் சிறிய பிராண்டுகள் இருந்தே தீருமா? இருக்க முடியுமா? பேஷாக முடியும். எல்லா பொருள் பிரிவிலும் பெரிய தேவைகள் கொண்ட வாடிக்கையாளர் பிரிவுகள் இருக்கும். அதோடு குறிப்பிட்ட தேவையுள்ள சிறிய சைஸ் வாடிக்கையாளர் வட்டங்களும் வாழ்ந்தே தீரும். அதில் சின்ன பிராண்டுகள் சூப்பராய் ஜெயிக்கலாம். சீரும் சிறப்புமாய் வாழலாம். சில்லறை அள்ளலாம்.

உங்கள் பிராண்ட் பெரிய பல்லக்கு இல்லையென்றால் என்ன. நாயன்மார் சைசில் இருந்துவிட்டு போங்களேன். கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் அன்று பவனி வரலாமே. மயிலாப்பூர் வாசிகளுக்குத் தெரியும். அதிகார நந்திக்கு இருக்கும் மவுசு அறுபத்து மூவருக்கும் உண்டு என்று!

சிறிய பிராண்டுக்கும் மவுசு உண்டு

ஒவ்வொரு பொருள் பிரிவிலும் குறிப்பிட்ட தேவை கொண்ட சிறிய வாடிக்கையாளர் செக்மண்ட் உண்டு. அப்பிரிவுகளுக்கு ’நீஷ்’ என்று பெயர். அதிலுள்ள பிராண்டுகளை நீஷ் பிராண்ட் என்பர். ஷாம்பு பிரிவில் ‘அடர்த்தியான கேசம்’, ‘பொடுகில்லா கேசம்’ ‘ஆரோக்கியமான கேசம்’, என்று பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு உட்பிரிவும் படா சைஸ். அதிலுள்ள பிராண்டுகள் மகா பெரியது. அதே ஷாம்பு பிரிவில் ‘பேன் போக்கும்’ தேவையும் சிறிய அளவில் உண்டு. அதில் நிலம் வாங்கி, பட்டா போட்டு, சின்னதாக வீடு கட்டி ‘மெடிக்கர்’ என்னும் பிராண்ட் படு சௌக்கியமாக வாழ்கிறதே. பெரிய பிராண்டுகளுக்கு மத்தியில் சின்னதாய், சிறப்பாய் குடித்தனம் நடத்துகிறதே!

சின்ன தொழிலதிபர்களுக்கென்றே இருப்பவை நீஷ்கள். எந்த பொருள் பிரிவிலும் தேடுங்கள். உங்கள் சின்ன சைஸுக்கேற்ப ஒரு நீஷ் கட்டாயம் தெரியும். அதில் கடை பரப்பி கல்லா கட்டுங்கள். சின்னதாக இருக்கும் வரை பெரிய பிராண்டுகள் உங்களை கண்டுகொள்ளாது. கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல் பரமசிவன் கழுத்தில் இருக்கும் சின்ன நீஷ் பாம்பு பெரிய கருட பிராண்டைப் பார்த்து ’சௌக்கியமா’ என்று கிண்டலாய் கேட்கலாம். கருடன் கண்டுகொள்ளாது.

‘சங்கரா டீவி’ உம்மாச்சி சேனல் வளர்ந்திருக்கிறதே என்று ‘சன் டீவி’ சங்கடப்படப் போகிறதா? இல்லை ‘ஆசீர்வாதம் டீவியால்’ ‘விஜய் டீவி’ தான் அசரப் போகிறதா!

சிறப்புக் குணம்

நீஷ் பிரத்யேக குணங்கள் கொண்டது. ஒரு மார்க்கெட்டில் நீஷ் என்று வரையறுக்க மூன்று விஷயங்கள் உண்டு. நீஷ் பிரிவு வாடிக்கையாளர்களுக்கு சிறிய, பிரத்யேக தேவை உண்டு. தலையில் பொடுகில்லாதவர்கள் கூட பொடுகு போக்கும் ‘ஹெட் அண்டு ஷோல்டர்ஸ்’ ஷாம்பு உபயோகிக்கலாம். ஆனால் தலையில் பேன் இருந்தாலொழிய யாரும் மெடிக்கர் உபயோகிக்க மாட்டார்கள்.

தங்கள் குறிப்பிட்ட தேவையை தீர்க்கும் பிராண்டுகளை அதிக விலை கொடுத்து வாங்கவும் வாடிக்கையாளர்கள் தயாராய் இருப்பார்கள். மற்ற ஷாம்பு சாஷே விலை ஒன்று அல்லது இரண்டு ரூபாய். மெடிக்கர் பத்து ரூபாய்! நீஷ் அளவில் சிறியதாய் இருக்கும். அதன் வாடிக்கையாளர்கள் அளவும் சிறியதே. அதனால் போட்டியாளர்கள் ஓரிருவருக்கு மேல் இருக்கமாட்டார்கள். எலக்ட்ரிக் கார் பிரிவு ஒரு நீஷ். அதில் தனியாய் ஓடும் ஒரே கார் ‘ரேவா’.

நீஷ்கள் சின்ன குளமாய் இருப்பதால் பெரிய மீன்களுக்கு தெரிவதில்லை. மார்க்கெட் சைஸ் குறைவாய் இருப்பதால் இதற்கு போய் எதற்கு பிரயத்தனப்படுவது என்று பெரிய மீன்கள் மார்க்கெட்டின் பிற பிரிவுகளை தேடுவதிலே குறியாய் இருந்துவிடும். சின்ன குளத்தை முதலில் கண்டுபிடித்து அங்கு குடியேறும் சிறிய மீன் குளத்தை குத்தகைக்கு எடுத்து குதூகலமாய் கொண்டாடி கும்மாளம் போடும்!

நல்லெண்ணெய் பிரிவில் ‘இதயம்’, ‘விவிஎஸ்’, ‘ஆனந்தம்’ என்று ஏகப்பட்ட பிராண்டுகள். ஒவ்வொன்றும் கோடிக்கணக்கில் விளம்பரத்திற்கு செலவழிப்பவை. நல்லெண்ணையில் கால் வைத்தால் வழுக்குமோ என்னவோ, அந்த மார்க்கெட்டில் கால் வைத்தால் புதிய பிராண்டுகள் வக்கணையாய் வழுக்கி விஸ்தாரமாய் விழும்.

தோசைக்கு ஏற்றது

இந்த மார்க்கெட்டில் போட்டி போட்டு மாளாது என்று உணர்ந்தது மதுரையைச் சேர்ந்த ’சாஸ்தா நல்லெண்ணெய்’. நல்லெண்ணெய்க்கு பதில் ரிஃபைண்ட் ஆயிலை பெண்கள் உபயோகிக்க துவங்கியிருந்தாலும் தோசை வார்க்க நல்லெண்ணை தான் விரும்புவார்கள் என்பதை உணர்ந்து ‘தோசை மேல ஆசை’ இருப்பவர்கள் உபயோகிக்க சிறந்தது ‘சாஸ்தா’ என்று சூடான, சுவையான மெசேஜை பரிமாறியது.

’நம் வீட்டு தோசையின் சுவை கம்மியாய் இருப்பதன் காரணம் இப்பொழுதல்லவா புரிகிறது’ என்று இல்லத்தரசிகள் தோசைக்கு சாஸ்தா நல்லெண்ணெய் வாங்கத் துவங்கினார்கள். சிறிய நீஷ் தான், ஆனால் மற்ற பிராண்டுகள் தொடாத நீஷ். அந்த சின்ன குளத்தில் இன்று சாஸ்தா பெரிய மீன்!

பலவற்றுக்கும் வாய்ப்பு

நீஷ் மார்க்கெட்டர்கள் ஒரு நீஷ்ஷை மட்டும் பிடிக்காமல் பல நீஷ்களை தேட முயற்சிக்கலாம். இதற்கு மல்டிப்பிள் நீஷ்ஷிங் (Multiple Niching) என்று பெயர். இப்படி செய்வதால் அதிக வளர்ச்சி கிடைப்பதோடு, ஒரே நிஷ்ஷை நம்பியிருக்கும் ரிஸ்க்கும் குறைகிறது. சிலருக்கு உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசையிருக்கும் என்று உணர்ந்த ’டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ்’ என்ற கம்பெனி அத்தகையவர்களுக்கு ‘டிஸ்கவரி’ சேனலை அறிமுகப்படுத்தியது. எல்லாரும் எல்லா நேரமும் இதை பார்க்கப் போவதில்லை. அறிவை வளர்க்க எப்பவாவது தப்பித் தவறி ஆசை வந்தால் பார்க்கும் சிறிய நீஷ் பிராண்ட் இது. ஆனால் வெற்றிகரமான நீஷ் பிராண்ட்.

அதே ரேஞ்சில் ’அனிமல் பிளானட்’, ‘டிஸ்கவரி சைன்ஸ்’, ‘டிஸ்கவரி கிட்ஸ்’, ‘டிஎல்சி’, ‘டிஸ்கவரி டர்போ’ என்று பதினான்கு வெவ்வேறு நீஷ் பிராண்டுகளை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொறு சேனலின் வாடிக்கையாளர் வட்டம் சிறியதே. ஆனால் உலகமெங்கும் இந்த சேனல்களை பார்ப்பவர் எண்ணிக்கை சுமார் ஒரு பில்லியனுக்கும் மேலே!

நீஷ்ஷாய் துவங்கி சில பிராண்டுகள் முன்னேறி, பெரியதாய் வளர்ந்து மெகா பிராண்டாகவும் மாறியிருக்கின்றன. ’சென்சிடிவ் பற்கள் உள்ளவர்களுக்கு’ என்ற சிறிய நீஷ்ஷாக துவங்கி படா பிராண்டாக வளர்ந்திருக்கும் ’சென்சடின்’ டூத்பேஸ்ட் போல.

அதற்காக சின்ன குளத்தில் பெரிய மீனாகிவிட்டேன் என்ற மமதையோடு பெரிய மீன்களோடு போட்டி போடக் கிளம்பக்கூடாது. பெரிய பிராண்டுகளின் கண்ணில் படாமல் இருப்பதால்தான் வெற்றியே என்பதை உணர்ந்து அளவோடு கொண்டாடி வளமோடு வாழ்வது தான் நீஷ் பிராண்டுக்கு அழகு. நிஷ்ஷை தேடிப்பிடித்து தேர்ந்தெடுத்து திட்டம் போட்டு கட்டம் கட்டி அந்த நீஷ்ஷில் நுழைந்து வெற்றி பெறுவது சாமர்த்தியம். அந்த வெற்றி தலைக்கு ஏறாமல், நம் கண்னை மறக்காமல், புத்தியை பேதலிக்க விடாமல் இருப்பது புத்திசாலித்தனம்.

நீஷ் பிராண்ட் வளரக்கூடாது என்று சொல்றேனா? இல்லை, நீஷ் பிராண்ட் வளரலாம், வளர வழி தேடலாம். ஆனால் நீஷ் வளர்க்கிறேன் பேர்வழி என்று பெரிய பிராண்டுகளோடு நேரடியாக போட்டி போடும் அளவிற்கு போகக்கூடாது. கிடைத்த வெற்றி நம் கண்ணை மறைக்கக்கூடாது என்று தான் சொல்கிறேன். சின்ன மார்க்கெட்டில் சீரிய நீஷ்ஷாய் இருங்கள். சின்ன குளத்தில பெரிய ஃபிஷ்ஷாய் இருங்கள். பிரச்சினை இல்லை. பயம் இல்லை. பெரிய பிராண்டுகள் கண்டுகொள்ளாது. யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே.

கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது!
-தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum