வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


அள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்! அசத்தல் லாபத்துக்கு பெஸ்ட் சாய்ஸ்...

Go down

அள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்! அசத்தல் லாபத்துக்கு பெஸ்ட் சாய்ஸ்... Empty அள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்! அசத்தல் லாபத்துக்கு பெஸ்ட் சாய்ஸ்...

Post by தருண் Thu Jul 31, 2014 10:53 am

பங்குச் சந்தையில் நல்ல வருமானம் பார்க்க நினைத்தால், அதிகமாக டிவிடெண்ட் வழங்கிவரும் பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

இந்த ஜனவரி மாதத்தை 'டிவிடெண்ட் காலம்’ என்று சொல்லலாம். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்கள் இடைக்கால டிவிடெண்டை அறிவித்த வண்ணம் உள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், நிதிச் சம்பந்தமான இதழ்களிலும் 'டிவிடெண்ட் யீல்டு’ என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.

அண்மை ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்றஇறக்கத்தைக் கண்டுள்ளது. பங்கின் விலைப் பெரிதாக உயர்ந்து லாபம் தரவில்லை என்றாலும், பல நிறுவனங்கள் அதிக டிவிடெண்ட் வழங்குவதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்து வருகின்றன.

தொடர்ந்து நல்ல டிவிடெண்ட் தந்துகொண்டிருக்கும் பங்குகளில் முதலீடு செய்வதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. ஒன்று, பங்கின் விலை உயர்வு மூலம் கிடைக்கும் லாபம். அடுத்தது, வரி இல்லா டிவிடெண்ட் வருமானம். அந்தவகையில் பங்குச் சந்தையில் ஓரளவுக்கு நல்ல வருமானம் பார்க்க நினைத்தால், அதிகமாக டிவிடெண்ட் வழங்கிவரும் பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

அதற்குமுன், பங்குச் சந்தை புதிய முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் குறித்துப் பலவித சந்தேகங்கள் இருக்கலாம். அந்தச் சந்தேகங்களை முதலில் தெளிவுபடுத்திக்கொள்வோம்.

அள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்! அசத்தல் லாபத்துக்கு பெஸ்ட் சாய்ஸ்... Nav10b

மூன்று வகை..!

ஒரு நிறுவனம் ஈட்டும் லாபத்தை மூன்று வகைகளில் உபயோகப்படுத்தும்.

1. லாபம் அனைத்தையும் தான் செய்யும் தொழிலின் விரிவாக்கப் பணிகளுக்கோ அல்லது கடனைக் குறைப்பதற்கோ அல்லது வேறு நிறுவனங்களை கையகப்படுத்து வதற்கோ உபயோகிக்கலாம்.

2. லாபத்தின் ஒரு பகுதியை டிவிடெண்டாகப் பங்குதாரர்களுக்கு வழங்கலாம்.

3. அல்லது மேலே கூறிய இரண்டையும் செய்யலாம்.
டிவிடெண்ட் என்பது ஒரு நிறுவனம், தான் ஈட்டும் லாபத்தின் ஒரு பகுதியை மொத்தப் பங்குதாரர்களுக்குப் பணமாகப் பிரித்து வழங்குவது.

செபியின் அறிவுறுத்தல்..!

பொதுவாக, இந்த டிவிடெண்ட் தொகையை இத்தனை சதவிகிதம் என்று அறிவிப்பார்கள். ஒரு பங்கின் மீதான டிவிடெண்ட் தொகை என்பது பங்கின் முக மதிப்புக்கு வழங்கப்படுவதாகும். இங்கேயும் பலவிதக் குழப்பங்கள்; ஏனென்றால் ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு முக மதிப்பில் பங்குகளை வைத்திருக்கின்றன. மேலும், சில நிறுவனங்கள் பங்குகள் மீதான வர்த்தகம் அதிகரிக்கவேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து முக மதிப்பைக் குறைத்துவரும் அல்லது பங்கைப் பிரிக்கும் (Stock Split) வேலைகளில் ஈடுபடுகின்றன. எனவே, தற்போது நிறுவனங்கள் ஒரு பங்கின் மீதான டிவிடெண்ட் எவ்வளவு (Dividend Per Share) என்று தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று செபி அறிவுறுத்தி உள்ளது

-தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum