வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


சூடு பிடிக்கிறது மோட்டார் வாகன விற்பனை

Go down

சூடு பிடிக்கிறது மோட்டார் வாகன விற்பனை Empty சூடு பிடிக்கிறது மோட்டார் வாகன விற்பனை

Post by தருண் Thu Jul 03, 2014 3:24 pm

புதுடில்லி: வாகன துறைக்கான உற்பத்தி வரிச் சலுகை நடப்பாண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சென்ற ஜூன் மாதத்தில், சில முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை விறுவிறுப்படைந்து உள்ளது.மேலும், பண்டிகை காலம் நெருங்குவதால், வாகன விற்பனையில் காணப்படும் விறுவிறுப்பு, வரும் மாதங்களில், மேலும், அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மாருதி சுசூகி: சென்ற ஜூன் மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 33.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,12,773 ஆக அதிகரித்துள்ளது.

இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 84,455 ஆக இருந்தது.இதன், உள்நாட்டு கார் விற்பனை, 31.1 சதவீதம் உயர்ந்து, 77,002லிருந்து, 1,00,964 ஆக அதிகரித்துள்ளது.கார் ஏற்றுமதி, 58.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,453லிருந்து, 11,809 ஆக உயர்ந்துள்ளது.மகிந்திரா: இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, கணக்கீட்டு மாதத்தில், 38,092லிருந்து, 38,471 ஆக அதிகரித்து உள்ளது.இதன் கார் ஏற்றுமதி, 7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,885லிருந்து, 2,014 ஆக உயர்ந்துள்ளது.போர்டு: போர்டு இந்தியா நிறுவனத்தின் ஒட்டு மொத்த கார் விற்பனை, 11,935 ஆக அதிகரித்துள்ளது.

இது, கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (8,771) விட, 36 சதவீதம் அதிகமாகும்.ஹோண்டா: சென்ற ஜூன் மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 75 சதவீதம் அதிகரித்து, 16,316 ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டின் இதே மாதத்தில், இதன் விற்பனை, 9,297 ஆக இருந்தது.டொயோட்டா: மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 13,397 ஆக உள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (13,805) காட்டிலும், 2.97 சதவீதம் குறைவாகும்.ஜெனரல் மோட்டார்ஸ்: இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 21 சதவீதம் சரிவடைந்து, 6,575லிருந்து, 5,172 ஆக குறைந்துள்ளது.யமஹா: இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும், யமஹா மோட்டார் இந்தியாவின் வாகன விற்பனை, கணக்கீட்டு மாதத்தில், 14 சதவீதம் வளர்ச்சி கண்டு, 35,561லிருந்து, 40,666 ஆக உயர்ந்துள்ளது.


தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum