வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஏற்ற இறக்க சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற டிவிடெண்ட் பங்குகள்!

Go down

ஏற்ற இறக்க சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற டிவிடெண்ட் பங்குகள்! Empty ஏற்ற இறக்க சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற டிவிடெண்ட் பங்குகள்!

Post by தருண் Fri Jan 13, 2017 11:13 am

ஏற்ற இறக்க சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற டிவிடெண்ட் பங்குகள்! 22p1

இந்திய பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த நவம்பர் 9-ம் தேதிக்குப் பிறகு சரியத் தொடங்கிய சென்செக்ஸ், 27591 புள்ளிகளிலிருந்து 25765 வரை சரிந்து தற்போது 26000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. திடீரென கொஞ்சம் ஏறுவதுமாகவும் திடீரென சந்தை கொஞ்சம் இறங்குவதுமாகவும் இருக்கும் இந்த நேரத்தில், ‘சந்தையில் முதலீடுகளை மேற்கொள்ளலாமா’ என்கிற கேள்வி முதலீட்டாளர்களின் மனதில் அடிக்கடி எழவே செய்கிறது. நீண்ட காலத்துக்கு முதலீடு செய்பவர்களுக்கு இப்போது சந்தையில் முதலீடு செய்ய சரியான நேரம் என்றாலும், நல்ல டிவிடெண்ட் தந்து வருகிற நிறுவனங்களில் முதலீடு செய்தால், சந்தையின் ஏற்ற இறக்கம் குறித்து கவலைப்படாமல் இருக்கலாம்.

பொதுவாக, பங்குச் சந்தையில் முதலீட்டாளர் களுக்கு இரண்டு வழிகளில் வருமானம் வருகிறது. ஒன்று, முதலீட்டாளர்கள் வாங்கிய பங்கின் விலை ஏற வேண்டும். இல்லையெனில் அந்த நிறுவனத்தின் மூலம் டிவிடெண்ட் கிடைக்க வேண்டும். டிவிடெண்ட் என்பது ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தின் ஒரு பகுதியை முதலீட்டாளர்களுக்குப் பிரித்து வழங்குவதாகும்.

நல்ல டிவிடெண்ட்!

எந்த ஒரு நிறுவனமும் டிவிடெண்ட் வழங்காமல், தனது வணிகத்தை விரிவுப்படுத்திக் கொண்டே சென்றால் அதனால் முதலீட்டாளர் களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றே சொல்லலாம். எந்த நிறுவனம் தொடர்ச்சியாக டிவிடெண்ட் வழங்கி வருகிறதோ, அந்த நிறுவனம் வளர்ச்சி அடைந்து வருகிறது எனவும், அதனால் நாமும் லாபம் ஈட்டி வருகிறோம் என்கிற எண்ணமும் முதலீட்டாளர்கள் மனதில் எழும். ஆனால், சில நிறுவனங்கள் டிவிடெண்ட் வழங்காமல், லாபம் ஈட்டியதாக விளம்பரம் செய்வது, முதலீட்டாளர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இது மாதிரியான பொய்யான தகவல்களைக் கண்டு முதலீட்டாளர்கள் ஏமாறக்கூடாது.

இன்றைய ஏற்ற, இறக்க சந்தையில் முதலீட்டாளர்கள் லாபம் சம்பாதிக்கும் வகையில் அதிக டிவிடெண்ட் வழங்கும் ஐந்து சிறந்த பங்குகளை பரிந்துரை செய்ய முடியுமா என மும்பையைச் சேர்ந்த ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ரிசர்ச் ஹெட் ஏ.கே. பிரபாகரிடம் கேட்டோம். பங்குகளைப் பரிந்துரை செய்யும்முன், பங்குகளைத் தேர்வு செய்வதற்கான வழி முறைகள் பற்றி விளக்கினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகள்!

“சிறந்த நிறுவனம் மற்றும் டிவிடெண்ட் அதிகமாக வழங்கும் நிறுவனங்களை மட்டுமே கீழே பரிந்துரைத்து உள்ளோம். நிறுவனத்தின் மதிப்பு (Enterprise value), புத்தக மதிப்பு (book value), இபிஎஸ் (EPS), பி/இ (P/E), பி/பி (P/B)மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 சதவிகிதத்துக்கு மேல் பங்குகள் மீதான வருமானம் (Return on equity - ROE), நிகர லாபம் 8 சதவிகிதத்துக்கு மேல் உள்ள, அதிக டிவிடெண்ட் யீல்ட் (Dividend Yield) தரும் பங்குகளைத் தேர்வு செய்து தந்துள்ளோம்’’ என்றவர், பங்குகள் பற்றிய விவரங்களையும் தந்தார்.

ஏற்ற இறக்க சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற டிவிடெண்ட் பங்குகள்! 22p3

கோல் இந்தியா (Coal India)

கோல் இந்தியா, இந்தியாவின் மிகப் பெரிய சுரங்கத் தொழில் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இபிஎஸ் ரூ.25- ஆக உள்ளது. சுரங்கத் தொழிலில் லாப வரம்பு மிக அதிகமாக உள்ளது. ஆனால், சர்வதேச அளவில் நிலக்கரி விலை சரிவைச் சந்தித்ததினால், இந்த நிறுவனத்தின் லாபமும் குறைந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில் இதன் லாப வரம்பு அதிகமாக இருந்தது. சமீபத்தில் இதன் லாபம் குறையக் காரணம், உலக அளவில் சுரங்கத் தொழில் நிறுவனங்களின் லாபத்தில் ஏற்பட்டுள்ள சரிவே.
கடந்த ஒரு வருட காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை சரிவைச் சந்தித்தது. எனினும், நிறுவனத்தின் காலாண்டு முடிவு மற்றும் நிலக்கரி விலை உலக அளவில் உயர்ந்து வருவதால், கடந்த ஆறு மாதமாக இந்த நிறுவனப் பங்கு விலை அதிகரித்து வருகிறது.

தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். இந்தப் பங்கு மேலும் சரிய வாய்ப்புக் குறைவு. வங்கி வட்டி 7 சதவிகிதமாக உள்ளது. இந்த நிறுவனம் இதைவிட அதிகமாக (8.9%) டிவிடெண்ட் வழங்கி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக டிவிடெண்ட் வழங்கி வருகிறது. வங்கி வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டும். பங்கு முதலீட்டில் வரி செலுத்தத் தேவையில்லை.

இந்த பங்கின் விலை 10% அதிகரித்தாலே டிவிடெண்டையும் சேர்த்தால், 19% வரை லாபம் கிடைக்கும். ஆகையால் இந்த பங்கு, முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்தப் பங்கு தற்போதைய விலையிலிருந்து 10% வரை கீழே இறங்கினால்கூட அதிகமாக பங்குகளை வாங்கி முதலீடு செய்யலாம்.

இந்த நிறுவனப் பங்கின் விலை ரூ.305 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. தற்போதைய விலையில் 50 சதவிகித பங்குகளையும், ரூ.290-க்குக் கீழே இறங்கினால், அப்போது 50 சதவிகிதப் பங்கு களையும் வாங்கலாம். அடுத்த ஓராண்டில் ரூ.365 வரை இந்தப் பங்கின் விலை உயர வாய்ப்புண்டு.

ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் (Rural Electrification Corporation Ltd)

ஆர்.இ.சி நிறுவனம், நாட்டில் மின் வசதியை மேம்படுத்த கடன் அளித்து வருகிறது. இந்த நிறுவனம் வழங்கி உள்ள கடனில் 95 சதவிகித தொகை மத்திய, மாநில அரசுகளின் மின்சார வாரியங்களுக்கு சென்றுள்ளது. ஆகையால், இந்த நிறுவனம் கொடுத்த கடன் திரும்ப வராமல் போக வாய்ப்பு இல்லை.

இந்த நிறுவனம் தொடர்ச்சியாக டிவிடெண்ட் வழங்கி வருகிறது. 6.2% டிவிடெண்ட் வழங்கியுள்ளது. ஆகையால் இந்த நிறுவனத்தின் பங்கை தற்போதைய நிலையில் வாங்கலாம். வங்கி
வட்டி விகிதம் 7%, இந்த நிறுவனத்தின் டிவிடெண்ட் 6.2% என்பதால், தாராளமாக பங்கை வாங்கலாம்.

பங்கின் விலை அதிகரிக்கும்போது வங்கி டெபாசிட்டைவிட வரி இல்லா லாபம் கிடைக்கும். ஆர்.இ.சி பங்கின் பி/இ 4.7-ஆக உள்ளது. இந்த நிறுவனம் சார்ந்த பிற நிதிச் சேவை நிறுவனங்களில் இது 10 என்கிற அளவில் அதிகமாகவே உள்ளது. சில நிறுவனங்களில் 30 என்கிற அளவில் மிக மிக அதிகமாக இருக்கிறது.

இதன் இபிஎஸ் இப்போது ரூ.29-ஆக உள்ளது. அடுத்த வருடம் ரூ.36 வரை எதிர்பார்க்கலாம். ஆர்.இ.சி பங்கின் விலை, அடுத்த ஓராண்டுக்குள் ரூ.162 வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய விலையான ரூ.133-ல் 50 சதவிகித பங்குகளை வாங்கிக் கொள்ளலாம். சென்ற மாத அதிகபட்ச சரிவான ரூ.112 என்ற விலையை நெருங்கும்போது, மீதமுள்ள 50 சதவிகிதப் பங்குகளை வாங்கலாம்.

மைண்ட் ட்ரீ (Mindtree)

மைண்ட் ட்ரீ, ஒரு தகவல்தொழில்நுட்ப நிறுவனம். இந்த நிறுவனம் டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங்-ல் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

மைண்ட் ட்ரீ-ன் பி/இ 14.1-ஆக உள்ளது. இந்த நிறுவனம் சார்ந்துள்ள துறையைவிட, இந்த நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் நிலையில் உள்ளது. நாஸ்காம் கணிப்பின்படி, ஐடி துறையின் வளர்ச்சி இந்த ஆண்டில் 8 முதல் 10 சதவிகிதமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், மைண்ட் ட்ரீ-யின் வளர்ச்சி 10% முதல் 12% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அடுத்த ஓராண்டில் பங்கின் விலை குறைந்தபட்சம் 30% லாபம் தரக்கூடும். இந்த பங்கின் விலை 2016, மார்ச் மாதம் ரூ.814 என்ற விலையில் இருந்தது. தற்போது ரூ.458 என்ற விலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட 50% வரை சரிவைச் சந்தித்துள்ளது.

இந்த நிலையில், இந்தப் பங்கை முதலீட்டாளர்கள் வாங்கலாம். அடுத்த ஒரு ஆண்டுக்குள் ரூ.620 வரை அதிகரிக்கும். மைண்ட் ட்ரீ பங்கின் விலை தற்போதைய விலையில் 60 சதவிகித பங்குகளையும், ரூ.400 என்ற நிலைக்கு வரும்போது மீதி 40 சதவிகித பங்குகளையும் வாங்கலாம்.

டோரன்ட் பார்மாசூட்டிக்கல்ஸ் (Torrent pharmaceuticals)

டோரன்ட் பார்மா சூட்டிக் கல்ஸ் ஒரு பார்மா நிறுவனமாகும். பொதுவாக, பார்மா நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து காணப்படும். அதுபோலவே இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், இந்த நிறுவனத்திடம் விலையுயர்ந்த தயாரிப்புகள் அதிகம் உள்ளன. இவர்களின் உற்பத்தி நிலைமை மிக நன்றாக இருக்கிறது. இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 2.5% வரை டிவிடெண்ட் வழங்கி வருகிறது.

அடுத்த ஒரு ஆண்டில் பங்கின் விலை ரூ.1,700 வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிறுவனப் பங்கை தற்போதைய விலையில் 50 சதவிகிதமும், கிட்டத்தட்ட ரூ.1,200 என்ற விலையை நெருங்கும்போது 50 சதவிகிதமும் வாங்கலாம்.

ஸ்வராஜ் இன்ஜின்ஸ் (Swaraj Engines Ltd)

இது மகேந்திரா அண்ட் மகேந்திரா குழும நிறுவனம். மகேந்திரா அண்ட் மகேந்திரா டிராக்டர் விற்பனை அதிகரித்தால், ஸ்வராஜ் நிறுவனத்தின் விற்பனையும் அதிகரிக்கும். இந்த ஆண்டு பருவ மழை நன்றாக இருந்தது. அதனால், அதிகளவிலான இன்ஜின்கள் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, ஸ்வராஜ் நிறுவனத்தில் 33 சதவிகித பங்கை மகேந்திரா நிறுவனமே வைத்துள்ளது.

ஸ்வராஜ் நிறுவனம் உற்பத்தி செய்யும் தயாரிப்புகள் பெரும்பாலும் மகேந்திரா நிறுவனத்தின் நுகர்வுக்காகவே தரப்படுகிறது. இந்த நிறுவனம் 2.5% டிவிடெண்ட் வழங்கி வருகிறது.

அடுத்த ஒரு ஆண்டில் இந்த நிறுவன பங்கின் விலை ரூ.1,500 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய லெவலில் 50 சதவிகிதமும், கிட்டத்தட்ட 1,250 ரூபாயை நெருங்கும்போது 50 சதவிகித பங்குகளையும் வாங்கிக் கொள்ளலாம்” என்று முடித்தார்.

வாசகர்கள் இந்த பங்குகளில் முதலீடு செய்ய பரிசீலிக்கலாமே!

பங்கு முதலீடு: லாபத்துக்கு எவ்வளவு வரி?

12 மாதங்களுக்கு மேல் பட்டியலிடப்பட்ட பங்குகளை வைத்திருந்தால், லாபத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியதில்லை. (ஓராண்டுக்குள் விற்கும்பட்சத்தில் 15% வரி)

ரூ. 10 லட்சம் வரையிலான டிவிடெண்ட் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டியதில்லை.

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum