வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


குழந்தை பிறந்தாச்சு... முதலீட்டைத் தொடங்கியாச்சா..?

Go down

குழந்தை பிறந்தாச்சு... முதலீட்டைத் தொடங்கியாச்சா..? Empty குழந்தை பிறந்தாச்சு... முதலீட்டைத் தொடங்கியாச்சா..?

Post by தருண் Mon Jan 09, 2017 1:49 pm

குழந்தை பிறந்தாச்சு... முதலீட்டைத் தொடங்கியாச்சா..? 46P1

‘‘என் பொண்ணு பிளஸ் டூவுல 1,150 மார்க் வாங்கியிருக்கா... ஆனா காலேஜ்ல சேர்க்க காசு இல்லை. ஏதாவது டிப்ளமோ கோர்ஸ்தான் சேர்க்கணும்” என புலம்பித் தவிக்கும் பெற்றோர்கள் ஏராளம். அதே போல் மகனுக்கோ, மகளுக்கோ திருமண ஏற்பாடுகளைச் செய்துவிட்டு செலவுக்கு பணம் இல்லாமல் கடன் வாங்க அலையும் பெற்றோர்களும் ஏராளம்.

இப்படித் தும்பைவிட்டு வாலைப் பிடித்த கதையாகத் திண்டாடி நிற்பதை விட குழந்தை பிறந்தவுடனேயே மேற்படிப்புக்கும், திருமணத்துக்கும் என முதலீட்டினைத் தொடங்கிவிட்டால், பின்னாட்களில் சிரமப்பட வேண்டியதில்லை. மிகச் சுலபமாகவும், மகிழ்ச்சியாகவும் காரியங்களை செய்து முடிக்கலாம்.

உதாரணமாக, தற்போதைய நிலையில் உயர்கல்விக்கு தோராயமாக வருடத்துக்கு ரூ.2 லட்சம் தேவை. 6 வருடம் உயர்கல்வி படிப்பார்கள் என்று எடுத்துக் கொள்ள லாம். அதேபோல், திருமணத்துக்கு ரூ.10 லட்சம் தற்போதைய நிலையில் தேவை என்று வைத்துக் கொள்வோம்.

எதிர்காலத்தில் தேவைப்படும் தொகையைச் சேர்க்க மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் போல, வேறு எந்த முதலீட்டிலும் சேர்க்க முடியாது. குழந்தை இப்போதுதான் பிறந்திருப்பதால், மியூச்சுவல் ஃபண்டில் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வேறு திட்டங்களில் கிடைக்கும் வருமானத்தைவிட கூடுதல் வருமானம் பார்க்க முடியும்.

இதற்கு, முதலில் உங்களுக்கான மியூச்சுவல் பண்ட் திட்டங்களை தீர்மானித்துக்கொள்ளுங்கள். முதல் ஆப்ஷனாக பிர்லா சன் லைஃப் பேலன்ஸ்டு 95 ஃபண்ட் (குரோத்), ஹெச்டிஎஃப்சி புரூடென்ஷியல் ஃபண்ட் (குரோத்) என இரண்டு பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வதாக எடுத்துக்கொள்வோம். இரண்டாவது ஆப்ஷனாக, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ப்ளஸ் (குரோத்), ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட் (குரோத்) போன்ற ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதாகக் கொள்வோம்.

குழந்தை பிறந்தாச்சு... முதலீட்டைத் தொடங்கியாச்சா..? 46P2

எதிர்காலத்தில் தேவைப்படும் தொகை, தேவைப்படும் காலகட்டம் போன்றவற்றை பணவீக்க விகிதத்துடன் கணக்கிட்டு மாதம் எவ்வளவு முதலீடு செய்யவேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளலாம். (பார்க்க அட்டவணை 1)

குழந்தை பிறந்தாச்சு... முதலீட்டைத் தொடங்கியாச்சா..? 46P31

இவ்வளவு பெரிய தொகையை ஆரம்பம் முதலே என்னால் முதலீடு செய்ய முடியாது என்பவர்கள் குறைந்த தொகையில் ஆரம்பித்து, ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வின்போது முதலீட்டுத் தொகையை அதிகரித்துக்கொள்வதன் மூலம் நம் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியும் (பார்க்க அட்டவணை - 2).

உங்களுக்குக் குழந்தை பிறந்தாச்சா... இப்போதே திட்டமிட்டு முதலீட்டைத் தொடங்குங்கள். எதிர்காலம் பற்றிய கவலையை விடுங்கள்!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 2015-ல் மியூச்சுவல் ஃபண்ட்: மூன்றாண்டுகளுக்கு திட்டமிட்டு முதலீட்டைத் தொடங்குங்கள்!
» மியூச்சுவல் ஃபண்ட்: முதலீட்டைத் தொடங்க என்ன செய்ய வேண்டும்?
» குழந்தை காப்பீட்டு திட்டங்களால் பெற்றோருக்கு கிடைக்கும் பலன்கள்
» குழந்தை காப்பீட்டு திட்டங்களால் பெற்றோருக்கு கிடைக்கும் பலன்கள்
» குழந்தை பிறப்பு: முன்னும் பின்னும் செய்ய வேண்டிய நிதித் திட்டமிடல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum