வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


தங்க நகை டு தங்க இ.டி.எஃப்... அதிகரிக்கும் தங்க மோகம்!

Go down

தங்க நகை டு தங்க இ.டி.எஃப்... அதிகரிக்கும் தங்க மோகம்! Empty தங்க நகை டு தங்க இ.டி.எஃப்... அதிகரிக்கும் தங்க மோகம்!

Post by தருண் Thu Nov 17, 2016 10:45 am

தாந்த்ரேயாஸ் - கடந்த தீபாவளிக்கு முதல் நாளன்று வந்த இந்தப் பண்டிகையில் நம்மவர்கள் தங்கத்தை நிறையவே வாங்கி இருக்கிறார்கள். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தாந்த்ரேயாஸ் பண்டிகையை ஒட்டி தங்க நகை விற்பனை ஏறக்குறைய 20 முதல் 25% வரை அதிகமாக இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தங்கத்துக்கான மோகம் அதிகரித்து, தேவையும் கணிசமாகக் கூடியிருக்கிறது.

தங்க நகை டு தங்க இ.டி.எஃப்... அதிகரிக்கும் தங்க மோகம்! P27a

ஆனால், நம் நாட்டில் மட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளாக உலக அளவிலும் தங்கத்தின் தேவை குறைந்துகொண்டே வந்துள்ளது. உலக தங்கக் குழுமம் (World Gold Council) வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகத் தேவையானது 2013-ல் 2,673 டன்களாக இருந்தது. 2014-ல் 2,480 டன்களாகவும், 2015-ல் 2,414 டன்களாகவும் குறைந்துள்ளது. இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் ஆபரணத் தங்கத்தின் மீதான தேவை உலக அளவில் 17% குறைந்துள்ளது.

தேவை குறையக் காரணம்!

தங்கத்தின் தேவை குறைந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமானது, இந்தியாவிலும் சீனாவிலும் தங்கத்துக்கான தேவை குறைந்ததுதான். உலக அளவில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளின் தேவை 45 சதவிகிதமாக இருக்கிற காரணத்தினால், இந்த நாடுகளின் தேவைகளில் தொய்வு ஏற்படுமாயின், இதன் தாக்கமானது தங்கத்தின் விலைகளிலும் பிரதிபலிக்கிறது.

சமீபத்தில் முடிவடைந்த ஜூன் காலாண்டில், இந்தியாவின் ஆபரணத் தங்கத்தின் தேவையானது 2015 ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது 20 சதவிகிதம் குறைந்து காணப்பட்டது. இதே போல், சீனாவை எடுத்துக்கொண்டால், சுமார் 15% என்ற அளவுக்கு நுகர்தல் குறைந்துள்ளது.

மத்திய அரசின் நிபந்தனைகள்!

இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்ததற்கு நமது மத்திய அரசாங்கம் விதித்த சில நிபந்தனைகளே காரணம். கடந்த 2013-ல் நடப்புக் கணக்கு பற்றாக்குறை பூதாகரமாக அதிகரித்ததன் விளைவாக, சில இறக்குமதிக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. தவிர, ரூ.2 லட்சத்துக்கு மேல் வாங்குபவர்களுக்கு ‘பான் நம்பர்’ அவசியம் என அறிவித்தது. 2015-ல் அரசு தங்கப் பத்திரங்களை அறிமுகப்படுத்தியது. இதுபோன்ற பல நடவடிக்கைகள் காரணமாக தங்கத்தின் விற்பனை குறைந்தது.

தங்கத்தை வாங்குபவர்களும் அதன் விலை சரிவதற்கு வாய்ப்பு இருப்பதாக நினைத்ததால், நம் உள்நாட்டு நுகர்வும் சரிந்து காணப்பட்டது. தவிர, முதலீட்டாளர்களின் கவனம் பங்குச் சந்தை பக்கம் திரும்பியதால், தங்கம் வாங்க வேண்டும் என்கிற எண்ணம் சில மாதங்களுக்கு நீறு பூத்த நெருப்பாகவே இருந்தது.

குறைந்த சுரங்க உற்பத்தி!

உலக அளவில் தங்கத்துக்கான தேவை குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 2008 ஆண்டுக்குப் பிறகு ஆண்டொன்றுக்கு 1% என்கிற அளவுக்கு உற்பத்தி உயர்ந்துள்ளது. உலகின் தங்க உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சீனாவின் உற்பத்தி அளவு 2014-யைவிட 2015-ல் 4% குறைந்துள்ளது.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு 1 டன் தங்கத் தாதுவிலிருந்து 12 கிராம் வரை தங்கம் எடுக்கிற நிலை மாறி, தற்போது 1 டன் தங்கத்தாதுவிலிருந்து 3 கிராம் தங்கம் மட்டுமே எடுக்க முடிவதால், சந்தைக்கு வரக்கூடிய தங்கத்தின் அளவு குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தங்க நகை டு தங்க இ.டி.எஃப்... அதிகரிக்கும் தங்க மோகம்! P27b

அதிகரித்த விலை!

கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் தேவையானது கணிசமாகக் குறைந்தபோதிலும் தங்கத்தின் விலை சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் கணிசமாக உயரவே செய்திருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 11.95% (டாலர் மதிப்பில்) உயர்ந்திருக்கிறது. நம் நாட்டிலும் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் தங்கத்தின் விலை சுமார் 13% வரை உயர்ந்திருக்கிறது.

அதிகரிக்கும் இ.டி.எஃப் முதலீடு!

தங்கம் விலையானது கடந்த 2012-ல் 10.3% அதிகரித்தது. அடுத்து வந்த ஆண்டுகளில் 2013-ல் மிகச் சிறிய ஏற்றத்தைத் தவிர, கணிசமாக விலை இறங்கி நஷ்டத்தையே தந்தது. இந்த விலை உயர்வுக்கும் பல காரணங்கள் உள்ளன.

முக்கியமாக, கடந்த மூன்று வருட தொடர் சரிவுக்குப் பிறகு கோல்டு இ.டி.எஃப் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளன. உலகில் மிகப் பெரிய கோல்டு இ.டி.எஃப் நிறுவனமான எஸ்.பி.டி.ஆர் (SPDR Gold Trust) கோல்டு ட்ரஸ்ட்டின் 2015 தங்க கையிருப்பு 642 டன்களாக இருந்தது.

இ.டி.எஃப் மோகம்!

2016-ல் இதுவரையிலான எஸ்.பி.டி.ஆரின் தங்கக் கையிருப்பானது 953 டன்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்துக்குள் 48% தங்கக் கையிருப்பு அதிகரித்துள்ளது. 2015 ஜனவரி முதல் ஜூன் மாத காலத்தில் தங்க நகை விற்பனை சுமார் 1,110 டன்னாக இருந்தது. அதுவே இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் 926 டன்னாகக் குறைந்துள்ளது.

ஆனால், 2015 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் 464 டன்னாக இருந்த தங்க இ.டி.எஃப் முதலீடு இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் 1,066 டன்னாக உயர்ந்திருக்கிறது. ஆபரணத் தங்கத்தின் மீதான மோகம் குறைந்து, தங்க இ.டி.எஃப் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

மற்ற நாடுகளிலும்..!

இதேபோல், பல்வேறு நாடுகளிலும் தங்கக்கட்டிகளின் மீதான முதலீடு 2006-க்குப் பிறகு தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக தங்கக் குழுமத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இ.டி.எஃப், மற்றும் தங்கக் கட்டிகளில் முதலீடுகள் அதிகரிப்பதற்கு வளர்ந்த நாடுகளின் வட்டி விகிதங்கள் முக்கிய காரணமாக சொல்லப் படுகின்றன.

மேலும், ஜப்பான், சுவிட்சர்லாந்து, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளின் நிதிக் கொள்கைகளில் நெகட்டிவ் இன்ட்ரஸ்ட் ரேட் என்ற நடவடிக்கையின் காரணமாக சர்வதேச விலை 2016-ல் உயர்ந்து காணப்படுகிறது.

தங்கம் விலை செல்லும் திசை!

சர்வதேசக் காரணிகள் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்க இருக்கிறது. வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் பிரெக்ஸிட் நிகழ்வுக்குப் பிறகு ஐ.எம்.எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2016-ல் 3.1 சதவிகிதமாகவும் 2017-ல் 3.4 சதவிகிதமாகவும் இருக்கக்கூடும் எனவும் கணித்துள்ளது.

பிரிட்டனின் வளர்ச்சியை இந்த ஆண்டு 1.8 சதவிகிதமாகவும் 2017-ல் 1.1 சதவிகிதமாகவும் குறைத்து மதிப்பீடு செய்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சந்தை எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் காண்கிறதா என்பதையும், அமெரிக்க ஃபெடரல் வட்டி விகிதங்களில் எடுக்கக்கூடிய முடிவுகளைப் பொறுத்தும் வர்த்தகத்தின் போக்கு அமையும்.

தவிர, வளரும் நாடுகளின் தேவை அதிகரிப்பது என்பது இல்லாமல், வளர்ந்த நாடுகள் எதிர்கொள்கிற சவால்களான பணவீக்கத்தை அதிகரிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளின் தோல்விகள், இதன் விளைவுகளாக பொருளாதார வளர்ச்சி தடைபடுதல், தங்க உற்பத்தியில் ஏற்படுகிற தடைகள் இவை அனைத்தும் தங்கத்தின் விலைப் போக்கை நிர்ணயம் செய்யும்.

தற்போதைய நிலையில் தேவையான அளவுக்கு மட்டும் நகைகளாக வாங்கினால் போதும்; மற்றபடி இடிஎஃப்-ல் முதலீடு செய்து, பிற்பாடு வேண்டும்போது தங்க நகை வாங்குவதே புத்திசாலித்தனம். காரணம், தங்கத்தை நகையாக வாங்கும்போது சேதாரம் என்கிற பெயரில் இழப்பு ஏற்படுகிறது. பிற்பாடு அதைத் திரும்பத் தந்து, புதிய நகைகளை வாங்கும்போதும் மீண்டும் சேதாரம் என கழிக்கப்படுகிறது. இப்படி அடிக்கடி மாற்றும்போது கணிசமான இழப்பு ஏற்படுவதைத் தடுக்க ஒரே வழி இடிஎஃப்-ல் முதலீடு செய்வதுதான்!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum