வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


டைனமிக் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாமா?

Go down

டைனமிக் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாமா? Empty டைனமிக் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாமா?

Post by தருண் Wed Oct 05, 2016 3:36 pm

டைனமிக் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாமா? P52a

பங்குச் சந்தை உச்சத்தைத் தொட்டுவிட்டு, எப்போது வேண்டுமானாலும் இறங்கலாம் என்கிற நிலையில்தான் இருக்கிறது. சந்தை உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் முதலீடு செய்வது சரியாக இருக்குமா என்று நினைத்து, பலரும் கொஞ்சம் ஒதுங்கியே நிற்கிறார்கள். சந்தையின் பிஇ ரேஷியோ அதிக அளவில் இருக்கும் இந்த சமயத்தில், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதைவிட, டைனமிக் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்வதே சரி. அது என்ன டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட் என்று கேட்கிறீர்களா?

டைனமிக் ஃபண்ட் என்பது!

டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட் என்பது ஒரு வகை பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். அதாவது, மார்க்கெட் ஏற்ற இறக்கத்துக்கேற்ப, பங்கு (ஈக்விட்டி) முதலீட்டைக் கூட்டுவது அல்லது குறைப்பது இந்த ஃபண்டில் நடக்கும். ஈக்விட்டி மார்க்கெட்டின் வேல்யூவேஷன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட விகிதப்படி, பங்கு மற்றும் கடன் திட்டங்களில் முதலீடு செய்வதுதான் இந்தத் திட்டம்.

இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். பொதுவாக, ஈக்விட்டி பிஇ (ப்ரைஸ் ஏர்னிங்) ரேஷியோவை வைத்துத்தான் வேல்யூவேஷனைக் கணக்கிடுவார்கள். இப்போது, நிஃப்டி பிஇ ரேஷியோ 23-ஆக இருக்கிறது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். (கடந்த கால பிஇ ரேஞ்ச் 10 முதல் 28 வரை இருந்தது. நிஃப்டி சராசரி பிஇ ரேஷியோ = 18).

பங்குச் சந்தையின் பிஇ இப்படி அதிகமாக இருக்கும்போது ஃபண்ட் மேனேஜர்கள் அதில் மட்டுமே அதிக அளவில் முதலீடு செய்வதைக் குறைத்துக்கொண்டு, கடன் சந்தையி லும் முதலீடு செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம் பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் ஏற்படும் இழப்பு தவிர்க்கப்படுகிறது. கடன் சந்தையின் மூலம் கிடைக்கும் குறைந்தபட்ச வருமானம் உறுதியாகிறது.

பங்குச் சந்தையின் வேல்யூவேஷன் நன்கு குறைந்தபின்பு, கடன் சந்தையில் இருக்கும் பணத்தை எடுத்து மீண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள் ஃபண்ட் மேனேஜர்கள். இதன்மூலம் நஷ்டத்தைத் தவிர்த்து, கொஞ்சம் கூடுதலான லாபத்தைப் பார்க்க வழி உண்டு.

லாபம் எப்படி?

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வேல்யூவேஷன் அதிகமாக இருக்கும் சமயத்தில் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதினால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க முடிகிறது. என்றாலும், இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபமானது ஈக்விட்டி ஃபண்டு களுடன் ஒப்பிடும்போது நீண்ட காலத்தில் குறைவாக இருக்கிறது. இது நீண்ட காலத்துக்கு ஏற்ற திட்டமல்ல. பங்குச் சந்தையின் வேல்யூவேஷன் அதிகமாக இருக்கிற காலத்தில் மட்டுமே இந்த ஃபண்டினை நாடவேண்டும்.

டைனமிக் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாமா? P53b

யாருக்குப் பொருந்தும்?

குறுகிய காலத்தில் மிதமான லாபம் கிடைத்தால் போதும்; நஷ்டம் வரக்கூடாது என்கிற மனப்பான்மை உள்ளவர்களுக்கு இந்தத் திட்டம் ஏற்றது.

வருமானம் எப்படி?

அட்டவணை 1-ல் தரப்பட்டுள்ள 2 மல்டி கேப் மற்றும் 2 டைனமிக் ஈக்விட்டி வருமானத்தை பார்க்கும்போது, கடந்த 12 ஆண்டுகளில், டைனமிக் ஈக்விட்டி பண்டில் முதலீடு செய்தவர்கள், 2008, 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்தவர்களைவிட அதிக பலன் பெற்றுள்ளனர்.

டைனமிக் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாமா? P54a

எஸ்ஐபி ஏற்றதா?

பங்குச் சந்தை அதிக வேல்யூவேஷன் இருக்கும்போது மட்டுமே இந்தத் திட்டம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதால், குறிப்பிட்ட காலத்துக்கு மேல் எஸ்ஐபி முறையின் மூலம் இதில் முதலீடு செய்வது நல்லதல்ல. குறிப்பாக, நீண்ட கால எஸ்ஐபி இதற்கு ஏற்றதே அல்ல. குறுகிய கால எஸ்ஐபி மற்றும் ரிஸ்க் குறைவாக இருக்கவேண்டும் என்றால் மட்டுமே டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட் ஏற்றது.

கடந்த 01-01-2004 முதல் எஸ்ஐபி துவங்கி இருந்தால் கிடைக்கும் வருட வருமானத்தை கவனித்தால் நீண்ட காலத்தில் (ஓராண்டுக்கு மேல்) டைனமிக் ஃப்ண்டுகள் வருமானம் குறைவாக கொடுத்திருப்பது தெளிவாகும்.

*ஃப்ராங்க்ளின் இந்தியா டைனமிக் பிஇ ரேஷியோ ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் : 12.92%

*ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் ஃபண்ட் : 17.88%

*பிர்லா சன் லைஃப் டைனமிக் அஸெட் அலோகேஷன் ஃபண்ட் : 11.63%

*பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் : 17.35%

எப்போது முதலீடு?

பிஇ ரேஷியோ அதிகமாக இருக்கும்போது, ஈக்விட்டி மார்க்கெட்டில் முதலீடு செய்தே ஆகவேண்டும் என்று நினைக்கும்போது, டைனமிக் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாம். முதன் முதலில் ஈக்விட்டி மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்கள், ஈக்விட்டி மார்க்கெட் அதிகமாக இருக்கும்போது முதலீடு செய்ய துவங்குவார்கள். அவர்கள், நல்ல செயல் திறன் உள்ள டைனமிக் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.
--ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum