வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


செப்டம்பர் எச்சரிக்கை... சந்தை சரியுமா?

Go down

செப்டம்பர் எச்சரிக்கை... சந்தை சரியுமா? Empty செப்டம்பர் எச்சரிக்கை... சந்தை சரியுமா?

Post by தருண் Fri Sep 16, 2016 11:00 am

செப்டம்பர் எச்சரிக்கை... சந்தை சரியுமா? P8a


இந்திய பங்குச் சந்தைகள் கடந்த ஆகஸ்ட் 31 அன்று 52 வார உச்சத்தைத் தொட்டது. சென்செக்ஸ் 28,452 புள்ளிகளாகவும் நிஃப்டி 8,786 புள்ளிகளாகவும் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

ஆனால், கடந்த காலங்களில் செப்டம்பரில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் முதலீடு ஏதும் செய்யாமலே இருந்திருக்கிறார்கள். 2008 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை அதிகப்படுத்துவதற்கு பதிலாகத் திரும்ப பெறவே செய்து உள்ளனர். அந்த நிலை இந்த செப்டம்பரிலும் தொடருமா, இந்த செப்டம்பரில் பங்குச் சந்தை சரியுமா என பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம். நம் கேள்விக்கு விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

காய்ச்சல் வந்த ஜூன் காலாண்டு!

“இந்த நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகள் (ஜூன் 2016) கலவையாகத்தான் வந்திருக்கின்றன. பொதுவாக, சந்தை இப்படி புதிய உச்சங்களையும், அதிகப் புள்ளிகளை யும் தொட்டு வர்த்தகமாகும் புல்லிஷ் டிரெண்டில், காலாண்டு முடிவுகளும் பாசிட்டிவாகவே இருக்கும். ஆனால், இந்த முறை கலவையாகவே வந்திருக்கிறது.

எனினும், இந்த காலாண்டு முடிவுகளை நெகட்டிவ் என்று சொல்ல முடியாது. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். அதிலும் குறிப்பாக, ஆட்டோ மொபைல் போன்ற துறைகள் நல்ல காலாண்டு முடிவுகளையே தந்திருக்கின்றன.

அதேபோல், வங்கித் துறைகளில் சில பங்குகள் நல்ல முடிவுகளைத் தந்திருந்தாலும், பெரும்பாலான வங்கிகள் மோசமான முடிவுகளைக் கொடுக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த கலவை யான முடிவுகள், பங்குச் சந்தையின் சரிவுக்கு வழிவகுக்கும் என்கிற அளவுக்கு மோசம் கிடையாது.

இப்படி சில முரண்கள் இருந்தாலும் இந்த காலாண்டு முடிவுகள் சொல்லும் முக்கியமான விஷயம் என்னவெனில், தற்போது சந்தையில் பங்குகளுக்கு இருக்கும் மதிப்பீடுகளுக்கு தகுந்தாற் போல, பங்குகளின் காலாண்டு முடிவுகள் வரவில்லை என்பதுதான். இருப்பினும், இதனால் ஒரு பெரிய சரிவு (Crash) வரும் என்று கருத வேண்டாம். அப்படியே வந்தாலும் அதை ஒரு கரெக்‌ஷன் (Correction) என்று எடுத்துக்கொள்ளலாம். அப்படியே இறங்கினாலும் அதிக பட்சமாக 8 - 10 சதவிகித கரெக்‌ஷனை எதிர்பார்க்கலாம்.

இந்த கரெக்‌ஷன், அடுத்த சில மாதங்களில் பங்குகளைத் தள்ளுபடி விலையில் கிடைக்க செய்யும். ஆக, இந்த கரெக்‌ஷனைப் பயன்படுத்தி முதலீடுகளைத் தொடரலாம். சொல்லப் போனால், நல்ல பங்குகளை கவர்ச்சிகரமான விலையில் வாங்கலாம்.

சீறும் சிபிஐ!

நுகர்வோர் பணவீக்க விகிதம் (Consumer Price Index) கடந்த ஜூலை 2015-ல் 3.69 சதவிகிதமாக இருந்தது. இது டிசம்பர் 2015-ல் 5.61 சதவிகிதமாக உயர்ந்தது. பருப்பு விலை அதிகரித்ததே இதற்குக் காரணம். பிறகு ஜனவரி 2016-ல் இருந்து ஜூன் 2016 வரையில் பணவீக்கம் அதிகபட்சமாக 1 சதவிகிதத்துக்குள்தான் இருந்தது. தற்போது ஜூலை 2016-ல் பணவீக்க மானது 6.07 சதவிகிதமாக இருக்கிறது. இது கட்டுப்படுத்தப்படக் கூடியதுதான்.

பணவீக்கம் 7 சதவிகிதத்தைத் தாண்டி அதிகரிக்கிறது எனில், அதை ஓர் அபாயகரமான அறிகுறியாக கருதலாம். ஆகவே, தற்போது இருக்கும் 6.07 சதவிகித லெவல்களில் நுகர்வோர் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. எனவே, சந்தையை நுகர்வோர் பணவீக்கம் பெரிதாகப் பாதிக்காது.

பக்காவான பருவமழை!

பருவ மழை, இந்திய பங்குச் சந்தையை ஓரளவுக்கு நேரடியாகப் பாதிக்கக்கூடிய விஷயமாகவே இருந்து வந்திருக்கிறது. இது ஏழாவது ஊதிய கமிஷன் சம்பள உயர்வுபோல, இந்தியாவின் 0.5 சதவிகித மக்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதல்ல. 70 முதல் 80 சதவிகித மக்களை பாதிக்கக்கூடிய முக்கியமான விஷயம்.

இந்தியப் பொருளாதாரம், வளரக்கூடிய பொருளாதாரம். இந்தியாவில் பெரும்பாலும், ஓர் ஆண்டு பருவ மழை தவறினால்கூட அடுத்த வருடம் மழை நன்றாக பெய்துவிடு கிறது. மழை பெய்யாத காலங்களில், அவசியமான பொருட்களைக்கூட வாங்காமல் சமாளிக்கிறார்கள். இப்படி தேவையானதைக்கூட வாங்காமல் இருப்பதற்கு ‘பென்ட் அப் டிமாண்ட்’ (Pentup demand) என்று சொல்வார்கள்.

அதே நேரத்தில், மழை பெய்து பயிர் செய்து கையில் காசு வந்தவுடன், சென்ற வருடத்துக்குத் தேவையாக இருந்த மற்றும் வாங்க விரும்பிய பொருட்களை எல்லாம் அடுத்த வருடம் வரும் காசில் சேர்த்து வைத்து வாங்கிவிடுகிறார்கள். எனவே, பருவ மழையினால் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டாலும், அடுத்த ஆண்டுகளில் சரியாகிவிடுகிறது. தவிர, தற்போது தென்மேற்கு பருவ மழை நன்றாகப் பெய்து வருகிறது. ஆகையால், தற்போது இருக்கும் சூழ்நிலை தொடரும்பட்சத்தில் சந்தை பெரிதாகப் பாதிக்க வாய்ப்பில்லை.

நுகர்வோர் தேவை!

சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக நுகர்வோர் தேவையைச் (Consumer Demand) சொல்லலாம். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட இருப்பதாலும் மற்றும் பருவ மழை நன்றாக பெய்வதாலும் மக்கள் கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். இந்த சமயங்களில், மக்கள் தங்களின் நீண்ட நாள் ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ளத் தொடங்குவார்கள். எனவே, நுகர்வோர் தேவை வரும் மாதங்களில் குறையாது என்னும்போது, பங்குச் சந்தை எப்படி குறையும்..?

செப்டம்பர் எச்சரிக்கை... சந்தை சரியுமா? P10b

எஃப்.சி.என்.ஆர்.ஏ. தலைவலி!

எஃப்.சி.என்.ஆர்.ஏ. (FCNRA - Foreign Currency Non Resident Account) என்பது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், வெளிநாடுகளில் இருக்கும் இந்திய வங்கிகளில் போடும் டெபாசிட்டுகளின் பெயர். இந்த எஃப்.சி.என்.ஆர்.ஏ. கணக்கில் இருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பணம் டெபாசிட் காலம் முடிந்து, சுமார் 15 - 30 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இந்தியாவிலிருந்து வெளியே போகப் போவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, சந்தை சரியும் என்கிறார்கள்.

பொதுவாக, இந்தியாவிலிருந்து அமெரிக்க டாலர் வெளியேறினால், அப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறையும். இந்தியாவின் டாலர் கையிருப்பு அதிகரித்தால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்.

இந்த எஃப்.சி.என்.ஆர்.ஏ. கணக்கின் சிறப்பான அம்சமே, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அதிக வட்டி வருமானம் தருவதுதான். இந்த எஃப்.சி.என்.ஆர்.ஏ. கணக்கில் 1 - 3 வருடம், 3 - 5 வருடம் என பணத்தை டெபாசிட் செய்யலாம். இதற்கு மற்ற பாதுகாப்பான முதலீடுகளைவிட கூடுதலான வருமானம் கிடைப்பதால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தக் கணக்கை விட்டு வேறு பாதுகாப்பான முதலீடுகளைத் தேட மாட்டார்கள் என்று நம்பலாம்.

அதுமட்டுமின்றி, தற்போது நம் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 350 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கிறது. ஒருவேளை சுமாராக 30 பில்லியன் டாலர் வெளியே போனால், அடுத்த ஒரு சில நாட்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்புக் குறையும். இதனை ஆர்.பி.ஐ. உடனே கட்டுப்படுத்தி, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்துவிடும். எனவே, இதையெல்லாம் காரணமாக வைத்து சந்தை பெரிதாக இறங்கும் என்று பயப்படத் தேவை இல்லை.

வயிற்றைக் கலக்கும் ஃபெட் ரேட்!

சமீபத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் ஜெனட் யெல்லனின் பேச்சு அனைத்தையும் பார்க்கும்போது, அமெரிக்காவின் வட்டி விகிதத்தை டிசம்பர் 2016 வரை ஃபெட் உயர்த்துவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றுதான் தோன்றுகிறது.

அப்படியே ஒருவேளை வட்டி விகிதத்தை ஏற்றினாலும், அந்த 0.25 - 0.50 சதவிகிதத்துக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் செய்திருக்கும் முதலீடுகளை பெரிய அளவில் திரும்ப எடுக்கமாட்டார்கள். அப்படியே எடுத்தாலும், இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7 - 7.5 சதவிகிதத்தில் இருப்பதால், மீண்டும் இந்தியாவை தேடித்தான் வருவார்கள். எனவே, அமெரிக்காவில் எப்போது வட்டி அதிகரிக்கப்பட்டாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. அதனால் ஏற்படும் தாக்கம் தற்காலிகமானதாகவே இருக்கும்.

ஒட்டுமொத்தத்தில், இப்போது நிலைமைகளை வைத்துப் பார்க்கும்போது, இந்த செப்டம்பரில் பங்குச் சந்தை பெரிதாக இறங்க வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். அப்படியே ஒருவேளை சந்தை இறங்கினால், அதை வாங்குவதற்கான வாய்ப்பாக பாருங்கள்’’ என பாசிட்டிவாக முடித்தார் நாகப்பன்.

இன்றுள்ள நிலைமையை வைத்துச் சொல்லிவிட்டார் நிபுணர். எதற்கும் உஷாராக இருப்பது முதலீட்டாளர்களின் கடமை. ஒரு நாளில் பெரிய மாற்றம் வந்துவிடக் கூடியதுதானே பங்குச் சந்தை!

--ந,விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பங்குச் சந்தையில் தீவிரவாத அமைப்புகள் முதலீடு? - செபி எச்சரிக்கை
» அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறாதீர்கள்: செபி எச்சரிக்கை
» இந்தியாவில் செயல்படுத்தப்படாத வங்கிக் கணக்குகள் அதிகரிப்பு: உலக வங்கி எச்சரிக்கை
» ஆன்லைன் பேங்கிங்கை குறிவைக்கும் புதிய வைரஸ்: சிஸ் எச்சரிக்கை
» சரிவில் சந்தை: வாங்கும் தருணமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum