வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?

Go down

சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்? Empty சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?

Post by தருண் Tue Aug 23, 2016 10:26 am

சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்? P30a

வீடு வாங்குவது ஒரு நபர் தன் வாழ்நாளில் எடுக்கும் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று. வீடு வாங்கும்போதே அத்தனை சாதக, பாதகங்களையும் பார்த்து வாங்க வேண்டியது அவசியம். அதன் அடிப்படையில் ஒருவர் தனி வீடு வாங்குவது சிறந்ததா, அடுக்குமாடிக் குடியிருப்பில் (ஃப்ளாட்) வாங்குவது சிறந்ததா என்று ரியல் எஸ்டேட் துறையில் பல ஆண்டு அனுபவமுள்ள ஃப்ளாட் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.ராமதுரையிடம் கேட்டோம். விரிவாகச் சொன்னார் அவர்.

“வீட்டை பொறுத்தவரை, நகரின் மையப் பகுதி, புறநகர்ப் பகுதி என்பதைப் பொறுத்துதான் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் தூரம் பெரும் பிரச்னை. அலைச்சல் வேண்டாம் என்று நினைத்தால் நகரத்துக்குள்தான் வசித்தாக வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணிக்க முடியும் எனில் புறநகரில் வசிக்கலாம்.

தனி வீடு, ஃப்ளாட் இரண்டிலுமே சாதகங்களும், பிரச்னைகளும் இருக்கின்றன. அவற்றை தெளிவுபடுத்திக்கொண்டால் தான் உங்களுடைய தேவை மற்றும் மனநிலைக்கேற்ப சரியான முடிவை எடுக்க முடியும்.

சொந்த வீடு என்றாலே எல்லோருக்கும் அழகான தனி வீடுதான் நினைவுக்கு வரும். காற்றோட்டமாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் தனி வீடுதான் பெஸ்ட். மாறாக, நமக்கு மனிதர்கள் வேண்டும், நாம் ஊரில் இல்லாதபோது வீடும் பொருட்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், அடுக்குமாடிக் குடியிருப்பு சிறந்தது. மேலும், நீங்கள் திருமணம் ஆனவரா, ஆகாதவரா, குழந்தைகள் உண்டா, இல்லையா, வயதானவர்கள் இருக்கிறார்களா, வயதுக்கு வந்தவர்கள் இருக்கிறார்களா என்கிற அடிப்படையிலும் வீட்டை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டில் பிளம்பிங், எலெக்ட்ரிஷியன் மற்றும் கழிவு நீர் போன்றவற்றில் ஏதேனும் பிரச்னை என்றால் அது எல்லோரையும் பாதிக்கும். ஒரு இடத்தில் கை வைத்தாலும் அது மற்றவர்களையும் பாதிக்கும். அப்படி வரும்பட்சத்தில் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். இந்த ஒற்றுமை பல ஃப்ளாட்டுகளில் இருப்பதில்லை. ஆனால், தனி வீட்டில் எந்தப் பராமரிப்பு வேலையாக இருந்தாலும் நாமே முடிவெடுத்து அதை செய்துவிட முடியும்.

தனி வீடு என்றால் முடிந்தவரை நாமே பிரச்னைகளைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவிடுவோம். ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்பில் அப்படி செய்ய முடியாது. அனைத்துமே மற்றவர்களை நம்பியே இருக்க வேண்டியிருக்கும். நம்மால் சிறு பிரச்னையைக் கூட சமாளிக்க முடியாது. இதனால் ஒருகட்டத்தில் எல்லாவற்றிற்கும் பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி முடித்து விற்பனை செய்த பின் அதன் உரிமையாளர்களோ, பில்டர்களோ பெரும்பாலும் கண்டுகொள்வதே இல்லை. அதனால் சில வருடங்களில் அவை நிறம் மாறி, பாசி படர்ந்து, விரிசல் விடுவது வரை எல்லாம் நடக்கிறது.

ஃப்ளாட்வாசிகள் வீட்டை நன்றாக வைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால், ஃப்ளாட்டுக்கு வெளியே பார்த்தால், பழைய பங்களா மாதிரி இருக்கும். வீட்டை விற்க வேண்டிய நிலை வந்தால், வெளித் தோற்றத்தைக் காரணம் காட்டியே விலையை அநியா யமாகக் குறைத்துக் கேட்பார் கள். எனவே, ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் ஒன்று சேர்ந்து அதனைப் பராமரித்துக்கொள்ள வேண்டும்.

குறைந்தது மூன்று வருடத்துக்கு ஒருமுறை வெளிச் சுவற்றுக்கு வெள்ளை அடிக்கப்பட வேண் டும். அவ்வபோது வரும் பிரச்னை களை உடனுக்குடன் சரிசெய்து விட வேண்டும். அப்படிச் செய்தால், அடுக்கு மாடிக் குடியிருப்பிலும் மகிழ்ச்சியாக வாழலாம். அதே சமயம் மீண்டும் விற்கும்போது நல்ல விலையும் கிடைக்கும்.

ஃப்ளாட் வாங்க விரும்பு பவர்கள் அதைக் கட்டும்போதே கவனித்து, வாங்கிவிடுவது நல்லது. ஏனெனில் உங்களுக்கு ஏற்ற மாற்றங்களை முன்பே சொல்லி அதில் நடைமுறைப் படுத்தலாம். ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டில் நீங்கள் கையே வைக்க முடியாது” என்று நடைமுறைச் சிக்கல்களைச் சொன்னவர், அடுத்து அடுக்கு மாடிக் குடியிருப்பு மற்றும் தனி வீடு சாதக பாதகங்களை கூடுதலாகப் பட்டியலிட்டார்.

தனி வீடு Vs ஃப்ளாட்: ப்ளஸ் மைனஸ்!

* அடுக்குமாடிக் குடியிருப்பு களில் விபத்துகள் நடக்க நிறைய வாய்ப்புள்ளது. எனவே, தேர்ந்தெடுக்கும்முன், அதற்கான வழிகாட்டுதல்களின்படி கட்டடம் பாதுகாப்பு அம்சங் களுடன் கட்டப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். இதுவே தனி வீடு என்றால் பிரச்னைகளை எளிதில் அடையாளம் கண்டு உடனடியாக சரிசெய்யலாம்.

* வீடு வாங்கும்போது நாம் செய்யும் முதலீடு மிக முக்கியம் தான். மீண்டும் அந்த வீடு விற்கப் படலாம் என்றால் விற்கும்போது என்ன விலைக்குப் போகும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். எப்போதும் இடத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டிருக்கும்; கட்டடத்தின் மதிப்பு குறைந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் 20 வருடம் கழித்து தனி வீட்டை விற்கும்போது நல்ல விலை இருக்கும். அடுக்கு மாடிக் குடியிருப்பு என்றால் கிடைக்கும் தொகை குறைவாகவே இருக்கும்.

* தனி வீட்டுக்கு நிலத்தின் மதிப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதனால் அடுக்குமாடி வீடுகள் தனி வீட்டுக்கு ஆகும் செலவைக் காட்டிலும் குறைவாக இருக்கும். ஆனால், அடுக்குமாடிக் குடி யிருப்புக்கு மாதாமாதம் செலவு செய்ய வேண்டியிருக்கும். தனி வீடுகளில் அந்தப் பிரச்னை இல்லை.

* அடுக்குமாடிக் குடியிருப்பில் உங்களுக்கும், உங்கள் பொருட் களுக்குமான பாதுகாப்புக்கு ஓரளவுக்கு உறுதி சொல்லலாம். ஆனால், தனி வீடு என்றால் பாதுகாப்பு உறுதியில்லை. செலவு செய்யத் தயார் என்றால் வீட்டிற்கு காவலாளி போட்டுக் கொள்ளலாம்.

* மின்சாரம், தண்ணீர், எரிவாயு போன்றவற்றிற்கு எந்தப் பிரச்னையும் ஃப்ளாட்டில் இருக்காது. நிர்வாகமே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிடும். ப்ளம்பிங், எலெக்ட்ரிக்கல் தொடர்பான பிரச்னைகள் எனில், ஆட்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள்.

தனி வீடு என்றால் ஒவ்வொரு விஷயத்தையும் நாம்தான் பார்த்துப் பார்த்து செய்ய வேண் டும். அனைத்திற்கும் நாம் தான் ஓட வேண்டியிருக்கும். பிளம்பர்கள், எலக்ட்ரிஷியன்கள் அவர்களுடைய நேரத்திற்குதான் வருவார்கள். நம் அவசரத்திற்கு வர மாட்டார்கள்.

சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்? P30

அடுக்குமாடிக் குடியிருப்பில் பூங்காக்கள், விளையாடுவதற்கான வசதிகள், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதற்கான இட வசதிகள் போன்றவை இருக்கும். ஆரோக்கியமான சூழல் இருக்கும். தனி வீடு என்றால் விளையாடு வதற்கு, உடற்பயிற்சி யோகா செய்வதற்கு, நீச்சல் பழகுவதற்கு போன்றவற்றிற்கு கூடுதலாக செலவு செய்து வெளியே செல்ல வேண்டியிருக்கும். அது நம் நேரத்தையும், பணத்தையும் விரயமாக்கும்.

* தனி வீடு எனில் அக்கம் பக்கத்தாருடன் பழக பயப்பட வேண்டியிருக்கும். பழகுவதற்கு சில காலம் பிடிக்கும். குழந்தைகள், பெரியவர்கள் வீட்டிற் குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டி இருக்கும். குழந்தைகளுக்கு விளையாட இடமோ, நண்பர் களோ கிடைப்பது கடினம்.

* வேலை இடமாற்றம் வந்தால் கூட, அப்பார்ட்மென்ட் என்றால் உங்கள் வீட்டை வாடகை விடும் பொறுப்பையும், வாடகையை வசூலித்து கொடுக்கும் பொறுப்பையும் அங்கிருப் பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

* ஃப்ளாட்டில் பார்க்கிங் பிரச்னை இருக்காது. எல்லோருக்கும் தனித்தனியே பார்க்கிங் செய்வதற்கான இடவசதி இருக்கும். தனி வீடு என்றால் பல இடங்களில் தெருவில்தான் காரை நிறுத்த வேண்டியிருக்கும். காருக்கும் சேர்த்து இடம் பார்த்தால் அதிக விலை கொடுக்க வேண்டி யிருக்கும்.

* அடுக்குமாடிக் குடியிருப்பில் கம்யூனிட்டி டெவலப்மென்ட் சாத்தியம். பலதரப்பட்ட மக்களை நண்பர்களாக்கிக் கொள்ள முடியும். மருந்து, மளிகை போன்ற வீட்டிற்கு தேவையான அடிப்படைப் பொருட்கள் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் கிடைக்கும். கட்டணங்களை அடுக்குமாடிக் குடியிருப்பு ஆட்களே வந்து வாங்கிக் கொள்வார்கள். எதற்கும் எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை.

* அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டுப்பாடுகள் இருக்கும். நினைத்ததையெல்லாம் செய்துவிட முடியாது. குடும்பத்தில் குழந்தைகளோ, நபர்களோ அதிகரித்துவிட்டால் அதற்கேற்ப இடத்தை விரிவுபடுத்த முடியாது. தோட்டம் அமைப்பது, பிராணிகள் வளர்ப்பது போன்றவை சாத்தியமில்லை.
* தனி வீடு என்றால் உங்கள் விருப்பத்திற்கேற்ப வீட்டை மாற்றலாம். கூடுதல் தளம் அமைப்பது, வண்ணம் மாற்றுவது என எதுவும் செய்யலாம். தோட்டம் அமைக்கலாம். செல்ல பிராணிகள் வளர்க்கலாம்.

* சத்தம் பிடிக்காதவர் என்றால் ஃப்ளாட் கொஞ்சம் சங்கடமான அனுபவத்தை தரலாம். பக்கத்து வீடு, மேல் தளத்தில் உள்ள வீட்டின் சத்தம் கொஞ்சம் அதிகமானாலும் பிரச்னைதான். அதே போல் சத்தம் பிடித்தவராக இருந்தால் உங்களால் பிறருக்கு தொல்லைதான்.

* தனி வீடு என்றால் பிரைவசி அதிகம் இருக்கும். பிறரால் உங்களுக்கோ உங்களால் மற்றவருக்கோ ஒரு பிரச்னையும் இல்லை.

* அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் தனி வீடு என இரண்டிலும் இருக்கும் அனைத்து சாதகங்களும் வேண்டும் எனில் பெரிய ரெசிடென்ஷியல் புராஜெக்ட்டுகளின் வில்லாக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், விலையைக் கேட்டால்தான் மயக்கம் வரும்.

* தனி வீடுகளில் திறந்த வெளி அதிகமாக இருப்பதால் கொசுப் பிரச்னை அதிகம் இருக்கும். ஃபிளாட்டுகளில் கொசுத் தொல்லை சற்று குறைவாக இருக்கும்” என இரண்டுக்குமான சாதக பாதகங்களை பட்டியல் இட்டு முடித்தார் ராமதுரை.

எனவே, ஒன்றுக்கு இரண்டுமுறை மேற்சொன்ன விஷயங்களை ஆராய்ந்து பார்த்து தனி வீடா, அடுக்குமாடியா என உங்களுக்கு தேவையானதை நீங்களே முடிவு செய்யலாமே!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum