வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


வீட்டுக் கடன்... அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்!

Go down

வீட்டுக் கடன்... அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்! Empty வீட்டுக் கடன்... அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்!

Post by தருண் Mon Jul 18, 2016 3:40 pm

வீட்டுக் கடன்... அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்! P32a

வீட்டுக் கடன் வாங்குவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் அடிக்கடி வந்து போவதுண்டு. அடிக்கடி வரும் அந்த கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்ன பதில் என்பதை பார்ப்போமா?

முழுத் தொகைக்கும் கடன் கிடைக்குமா?

பொதுவாக, வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வீட்டின் மதிப்பில் சுமார் 80 முதல் 85% மட்டுமே கடனாக வழங்கும். மீதமுள்ள 15 - 20 சதவிகிதத் தொகையை கடன் வாங்குபவர் கையிலிருந்து போட வேண்டியிருக்கும். இதனை ஆங்கிலத்தில் டவுன் பேமென்ட் (Down Payment) என்பார்கள்.

வீட்டுக் கடன் பெற அடிப்படைத் தகுதிகள் என்ன?

வீட்டுக் கடன் பெறும் நபர் இந்தியராக அல்லது வெளிநாடு வாழ் இந்தியராக இருக்க வேண்டும். அவர் நிரந்தர வருமானம் பெறுவது மிக முக்கியம். மாதச் சம்பளம் வாங்குபவர், சுய தொழில் செய்பவராக இருக்கலாம்.

வீட்டுக் கடன் வாங்க எத்தனை வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்?

பொதுவாக, கடன் பெறும்போது 21 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டும். கடன் முடியும் தருவாயில் 65 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

பத்திரப் பதிவுக்கு கடன் கிடைக்குமா?

இப்போதெல்லாம் சொத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதால், பத்திரப் பதிவுக்கு என்றே சில லட்சம் ரூபாயை செலவிட வேண்டி இருக்கிறது. தேவையின் அடிப்படை மற்றும் கடன் வாங்குபவரின் வேலையின் தன்மையைப் பொறுத்து (அரசு ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள்) பதிவு மற்றும் முத்திரைக்  கட்டணச் செலவுக்கு சில வங்கிகள் கடன் வழங்குகின்றன.  

எவ்வளவு தொகை கடனாக கிடைக்கும்?

ஒருவரின் மாத வருமானத்தில் 40 முதல் 50 சதவிகிதம் வரை மாதத் தவணை கட்டும் விதமாக கடன் கிடைக்கும். சம்பளம் அதிகமாக இருப்பின் (சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல்) சம்பளத் தொகையில் 60 சதவிகிதம் மாதத் தவணையைக் கட்டும் விதமாக கடன் கிடைக்கும். ஒருவரின் நிகர மாத சம்பளத்தைப் போல் அதிகபட்சமாக 60 மடங்கு தொகை வீட்டுக் கடனாக கிடைக்கும். உதாரணத்துக்கு ஒருவரின் நிகர மாதச் சம்பளம் (பிடித்தங்கள் எல்லாம் போக) ரூ.40,000 என்றால் அவருக்கு சுமார் ரூ.25 லட்சம் வீட்டுக் கடன் கிடைக்கும்.

இன்னொரு நபருடன் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்க முடியுமா?

உங்களின் சம்பளம் குறைவாக இருக்கும்போது வேலை பார்க்கும் இன்னொருவருடன் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கினால் அதிக தொகை கடனாக கிடைக்கும். பொதுவாக, கணவன் - மனைவி, மகன் - தந்தை சேர்ந்து கூடுதலாக தொகையை வீட்டுக் கடனாக பெற முடியும்.

இஎம்ஐ என்றால் என்ன?

சம மாதத் தவணை (EMI - Equated Monthly Installment) என்பதன் சுருக்கம்தான் இஎம்ஐ. கடன் தொகை மற்றும் அதற்கான வட்டியை தவணைக் காலம் முடியும் வரை கணக்கிட்டு, சம தொகையை மாதம் தோறும் ஓர் குறிப்பிட்ட தேதியில் செலுத்தி வருவதுதான் இஎம்ஐ. இந்த சம மாதத் தவணை முறையால் கடன் பெற்றவர், தனது கடனைத் திட்டமிட்டு சிரமுமின்றி திரும்ப செலுத்த உதவும். இஎம்ஐ தொகை, கடன் தொகை, கடனைத் திரும்பச் செலுத்த வேண்டிய ஆண்டுகள், வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

நிலையான வட்டி, மாறுபடும் வட்டி - இதில் எதைத் தேர்ந்தெடுப்பது?

வீட்டுக் கடனை பொறுத்தவரையில், வட்டி விகிதத்தில் ஃபிக்ஸட் ரேட் (நிலையான வட்டி)  ஃப்ளோட்டிங் ரேட் (மாறுபடும் வட்டி) என இரு வகைகள் இருக்கிறது. ஃப்ளோட்டிங் ரேட்டில் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றத்துக்கு ஏற்ப வட்டி விகிதம் மாற்றத்துக்கு உள்ளாகும். பொதுவாக, வட்டி விகிதம் மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறை அதிகரிக்கும் அல்லது குறையும். ஃபிக்ஸட் ரேட்டில் வட்டியானது சுமார் 3, 5 ஆண்டுகளுக்கு ஒரே மாதிரி இருக்கும். குறுகிய காலத்துக்குள் (3, 5 ஆண்டுகள்) கடனை முடிப்பவர்கள் ஃபிக்ஸட் ரேட்டை தேர்ந்தெடுப்பது சிறந்தது. என்றாலும் ஃபிக்ஸட் வட்டியைவிட ஃப்ளோட்டிங் வட்டி சுமார் 1.5 - 2% குறைவாக இருப்பதாலும், எதிர்காலத்தில் வட்டி விகிதம் குறையும் என்பதாலும் அனைவரும் ஃப்ளோட்டிங் வட்டியைத் தேர்ந்தெடுப்பது லாபகரமாக இருக்கும்.  

வீட்டுக் கடனை எத்தனை ஆண்டுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும்?

கடனைத் திரும்ப செலுத்த பொதுவாக 5 முதல் 25 ஆண்டுகள் அனுமதிக்கப்படுகிறது. சில வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள், இளம் வயதில் கடன் வாங்குபவர்களை 30 ஆண்டுகள் வரைக்கும்கூட கடனைத் திரும்பச் செலுத்த அனுமதிக்கின்றன. கடனை எவ்வளவு சீக்கிரமாக கட்டுகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு வட்டிச் சுமை குறையும். இதே போல் தவணைத் தொகையை அதிகரித்துக் கட்டினாலும் வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும்.

வீட்டுக் கடன்... அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்! P34a

தவணைக் காலம் முடியும் முன்னரே வீட்டுக் கடனை திரும்பச் செலுத்த முடியுமா?

தவணைக் காலம் முடிவதற்குள்ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ வீட்டுக் கடனை திரும்பச் செலுத்தலாம். நீங்கள் ஃபிக்ஸட் வட்டியில் கடன் வாங்கி இருந்தால், அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும். ஃப்ளோட்டிங் வட்டியில் வாங்கி இருந்தால், எந்த அபராதமும் கிடையாது. சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், கடன் வாங்கிய ஆறு மாதம் முதல் ஓராண்டுக்குள் முழுமையாக திரும்பச் செலுத்த அனுமதிப்பதில்லை.

தவணைத் தொகையை தாமதமாகக் கட்டினால் அபராதம் விதிக்கப்படுமா..?

கால தாமதக் கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். அடுத்து உங்களுக்கு வட்டிக்கு வட்டி போடப்படும். இதனால் வட்டிக்கு செல்லும் தொகை அதிகரிக்கும்.
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum