Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஃபண்ட் ஹவுஸ்
Page 1 of 1
ஃபண்ட் ஹவுஸ்
ஃபண்ட் ஹவுஸ் - 1
ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடு -புதிய தொடர்
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்!
மியூச்சுவல் ஃபண்ட் என்பது இந்தியாவில் 90 சதவிகிதத்துக்கும் மேலான மக்களுக்கு இன்னும் போய்ச் சேரவில்லை. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியர்களில் சுமார் 4 கோடி மியூச்சுவல் ஃபண்ட் போலியோக்களே உள்ளன. இந்த நான்கு கோடி போலியோக்களிலும் ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட போலியோக்களை வைத்திருக்கலாம் என்பதால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை துல்லியமாக எடுத்துச் சொல்ல முடியாத நிலை.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்கிற பரப்பில் எல்லா மக்களையும் கொண்டுவர பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன. இத்தனைக்கும் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் செயல்பட ஆரம்பித்தது இன்று நேற்றல்ல. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்பே மியூச்சுவல் ஃபண்டுகள் செயல்படத் தொடங்கிவிட்டன.
இந்தியாவில் முதன்முதலாக 1964-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியாதான். இது யூடிஐ என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் மக்களுக்கு வங்கி, அஞ்சலக சேமிப்பு, எல்ஐசி, பங்குச் சந்தை தவிர வேறு ஏதாவது புதிய முறையில் சேமிக்க / முதலீடு செய்ய வேண்டுமென்றால், யூடிஐ மட்டும்தான் அதற்கு வழி அமைத்துத் தருவதாக இருந்தது.
வெற்றிகரமாக நடந்துவந்த இந்த நிறுவனத்தில் பின்னாளில் பிரச்னைகள் வந்தது. அது சமயம் மத்திய அரசாங்கம் தலையிட்டு அந்த நிறுவனத்தை இரண்டாக பிரித்தது. எஸ்யூயூடிஐ என்பதை ஒரு நிறுவனமாகவும் மற்றும் யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் என்பதை வேறு ஒரு நிறுவனமாகவும் பிரித்தது. இப்படிப் பிரித்ததால், 2003-ம் ஆண்டு உருவானதுதான் யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். எஸ்யூயூடிஐ மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதேபோல், யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் செபி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பழைய யூடிஐ-யில் இருந்து பல திட்டங்கள் யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு நிர்வாகம் செய்வதற்காக மாற்றப்பட்டன.
தற்போது இந்த நிறுவனம் 1,05,000 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து, இந்தியாவில் ஐந்தாவது பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக உள்ளது. பல பங்கு சார்ந்த மற்றும் கடன் சார்ந்த திட்டங்களை நிர்வகித்துவரும் இந்த ஃபண்ட் நிறுவனத்தின் சிஇஓ லியோ பூரி ஆவார். தற்போது செபியின் சேர்மனாக இருக்கும் யூ.கே.சின்ஹா, இந்த நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் ஆவார்.
இந்த நிறுவனத்தின் ஸ்பான்ஸர்கள் நமது பொதுத் துறை நிறுவனங்களான எஸ்பிஐ, எல்ஐசி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகும். இந்த நான்கு நிறுவனங்களும் சேர்த்து, யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் 74% பங்குகளை வைத்துள்ளன. மீதி 26% பங்குகளை அமெரிக்க இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான டி.ரோவ் பிரைஸ் வைத்துள்ளது. 1937-ம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்க நிறுவனமான டி.ரோவ் பிரைஸ் உலகெங்கிலும் 14 நாடுகளில் 773 பில்லியன் டாலர்களுக்கு மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
யூடிஐ இண்டர்நேஷனல், யூடிஐ வென்ச்சர்ஸ், யூடிஐ ரிட்டையர்மென்ட் சொல்யூஷன்ஸ் போன்றவை யூடிஐ ஏஎம்சி-யின் (AMC – Asset Management Company) 100 சதவிகித சொந்தமான துணை நிறுவனங்களாகும். துபாய், லண்டன், சிங்கப்பூர் போன்ற நகரங்களிலும் தனது அலுவலகத்தைக் கொண்டுள்ளது.
மீடியம் டு லாங்க் டேர்மில், குறைவான ஏற்ற இறக்கத்தில் தொடர்ச்சியாக சீரான வருமானத்தை தனது முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த நிறுவனத்தின் முதலீட்டு தாரக மந்திரமாக உள்ளது. சந்தையில் இருக்கும் ஃபண்டுகளில் தனது ஃபண்டுகள் டாப் 25 சதவிகிதத்துக்குள் இருக்குமாறு முயற்சி செய்கிறது.
யூடிஐ மியூச்சுவல் ஃபண்டுக்கு ஆய்வுக் குழு (Research team) மிகவும் பலமாக உள்ளது. அதேபோல் 150-க்கும் மேற்பட்ட கிளைகளையும், 45,000-க்கும் மேற்பட்ட நிதி ஆலோசகர்களையும் கொண்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் பலவிதமான திட்டங்களை இ்ந்த நிறுவனம் வழங்குகிறது. உதாரணத்துக்கு, ஓய்வுக்கால முதலீடு, குழந்தைகள் உயர் கல்விக்கான முதலீடு, இன்ஷூரன்ஸுடன் கூடிய முதலீடு, பங்கு சார்ந்த முதலீடுகள், கடன் சார்ந்த முதலீடுகள், கலப்பின முதலீடுகள், தங்கம் போன்ற பல வகையான முதலீடுகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.
இந்த நிறுவனத்தின் பங்கு சார்ந்த முதலீடுகளின் தலைவர் அனூப் பாஸ்கர் ஆவார். இவர் யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ், யூடிஐ ஈக்விட்டி, யூடிஐ மிட் கேப் போன்ற திட்டங்களை சுயமாக நிர்வகித்து வருகிறார். இந்தத் திட்டங்களின் செயல்பாடு நன்றாக இருந்து வருகிறது. இதற்குமுன் சுந்தரம் மற்றும் ஃப்ராங்க்ளின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பணியாற்றியவர் இவர். சுந்தரம் செலக்ட் மிட்கேப் ஃபண்டை வெற்றிகரமாக நிர்வகித்தார் இவர்.
மிகவும் தரமான பங்குகளையே எப்போதும் இவர் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துக் கொள்கிறார். இந்த நிறுவனத்தின் கடன் சார்ந்த திட்டங்களின் தலைவர் அமன்தீப் சிங் சோப்ரா ஆவார்.
டி.ரோவ் பிரைஸ் நிறுவனத்தின் உதவியுடன், யூ.டி.ஐ பெரிய அளவில் செயல்முறைகளை மேம்படுத்தியுள்ளது. அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல், தொடர்ச்சியாக ஒரு நிலையான செயல்பாட்டை கொடுத்து வருகிறது. ஒரு தனி ஃபண்ட் மேனேஜரின் மேல் நிறுவனம் கொண்டுள்ள ரிஸ்க்கை குறைப்பதற்கு, 30 சதவிகிதத்துக்கும் மேலான சொத்துக்களை ஒரு ஃபண்ட் மேனேஜர் நிர்வகிப்பதை இந்த நிறுவனம் அனுமதிப்பதில்லை.
இந்த நிறுவனத்தில் பலரும் பயன்பெறும் வகையில், பல திட்டங்களுக்கு குறைந்தபட்ச எஸ்.ஐ.பி முதலீடு ரூ.500-ஆக வைக்கப்பட்டுள்ளது. நீண்டகால அனுபவம், ஸ்டிராங் ரிசர்ச் டீம், அனுபவமுள்ள ஃபண்ட் மேனேஜர்கள், நல்ல திட்டங்கள் போன்ற பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் தேவைக்கேற்றாற்போல் முதலீட்டை மேற்கொள்ளலாம்.
யூடிஐ டாப் ஈக்விட்டி/கடன் திட்டங்கள்!
யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் (நிர்வகிக்கும் தொகை ரூ.5,108 கோடி), யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட் (நிர்வகிக்கும் தொகை ரூ.4,620 கோடி), யூடிஐ சிசிபி பேலன்ஸ்ட் ஃபண்ட் (நிர்வகிக்கும் தொகை ரூ.3,392 கோடி) ஈக்விட்டி திட்டங்கள் ஆகும்.
கடன் திட்டங்களைப் பொறுத்தவரை, யூடிஐ லிக்விட் கேஷ் ஃபண்ட் (நிர்வகிக்கும் தொகை ரூ.12,851 கோடி), யூடிஐ டிரஷரி அட்வான்டேஜ் ஃபண்ட் (நிர்வகிக்கும் தொகை ரூ.10,903 கோடி) யூடிஐ மணி மார்க்கெட் ஃபண்ட் (நிர்வகிக்கும் தொகை ரூ.9,118 கோடி).

--ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Re: ஃபண்ட் ஹவுஸ்
ஃபண்ட் ஹவுஸ் - 2
ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட்!
ஏறக்குறைய ரூ. 1.70 லட்சம் கோடிகளுக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து மொத்தமுள்ள 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கிறது ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட்.
2000-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் ஸ்பான்சர்கள், ஹெச்டிஎஃப்சி லிமிடெட் மற்றும் ஸ்டாண்டர்டு லைஃப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் ஆவார்கள்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டாண்டர்டு லைஃப் உலகெங்கிலும் 375 பில்லியன் டாலர்களுக்கும் மேலான சொத்தை நிர்வகித்து வருகிறது. ஹெச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனம் சுமார் 60 சதவிகித பங்குகளை இந்த நிறுவனத்தில் வைத்துள்ளது. மீதமுள்ள 40% ஸ்டாண்டர்டு லைஃப் நிறுவனத்திடம் இருக்கிறது.
பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த நிறுவனத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இந்த நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ந்து இன்று இந்திய மியூச்சுவல் ஃபண்ட் உலகில் ஒரு பெரிய ஜாம்பவானாகத் திகழ்கிறது.
இந்த நிறுவனம் கடந்த 15 வருடங்களில் இரண்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களை விலைக்கு வாங்கியுள்ளது. 2003-ம் ஆண்டு சுரிச் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் (Zurich India Mutual Fund) என்ற நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. அந்த நிறுவனத்திலிருந்து வந்த திட்டங்கள்தான் இன்று அதிக அளவு சொத்துக்களை கொண்டுள்ள ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி டாப் 200 ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி புரூடன்ஸ் ஃபண்ட் மற்றும் ஹெச்டிஎஃப்சி டாக்ஸ் சேவர் ஃபண்ட்.
மேலும் தற்போது சி.ஐ.ஓ-ஆக இருக்கும் பிரஷாந்த் ஜெயினும் சுரிச் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திலிருந்து வந்தவர்தான். இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கியது ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு ஒரு பெரிய வரம் என்றுதான் கூற வேண்டும்.
இரண்டாவதாக, சென்ற ஆண்டு மார்கன் ஸ்டான்லி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் திட்டங்களை ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியது.
பிரஷாந்த் ஜெயின் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் உலகில் நன்கு அறியப்பட்ட ஃபண்ட் மேனேஜர் ஆவார். இவர் இந்த நிறுவனத்தின் முன்னணி திட்டங்களான டாப் 200, ஈக்விட்டி, புரூடன்ஸ், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் எம்ஐபி (பங்கு சார்ந்த முதலீடு மட்டும்) போன்ற திட்டங்களை நேரடியாக நிர்வகித்து வருகிறார். இந்தத் திட்டங்களின் கூட்டுத் தொகை சுமார் 40,000 கோடி ரூபாய்க்கும் மேல். இந்த நிறுவனத்தின் சிஇஓ மிலிந் பார்வே ஆவார்.
ரீடெயில் முதலீட்டாளர்களின் பெரும்பாலான முதலீடு பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில்தான் உள்ளது.
இந்த நிறுவனம் வெற்றிகரமாக பல கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களையும் நிர்வகித்து வருகிறது. கடன்சார்ந்த திட்டமான ஹெச்டிஎஃப்சி லிக்விட் ஃபண்ட் மட்டும் தனியாக ரூ.23,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
இந்த நிறுவனத்தில் சிராக் சேத்தல்வத் என்ற ஃபண்ட் மேனேஜர், மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ், பேலன்ஸ்டு, சில்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்ட் போன்ற திட்டங்களை மிகவும் திறம்பட மேனேஜ் செய்து வருகிறார். இந்தத் திட்டங்கள் தொடர்ச்சியாக நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளன. அனில் பம்போலி மற்றும் ஷோபித் மெஹ்ரோத்ரா பல கடன் சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக நிர்வகித்து வருகின்றனர்.
சந்தைகளின் ஏற்ற இறக்கத்தைப் பற்றி கவலை கொள்ளாமல், ஃபைனான்ஷியல் மார்க்கெட்டில் லாபகரமாக முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த ஃபண்ட் நிறுவனத்தின் தார்மீக மந்திரமாக உள்ளது.
இந்த நிறுவனத்தின் நட்சத்திர திட்டங்கள் என்று சொல்லப்படும் டாப் 200, ஈக்விட்டி மற்றும் புரூடன்ஸ் திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாக சற்று மெதுவாக செயல்பட்டு வருகின்றன. அதற்கு முக்கியக் காரணம், இந்த ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோ அமைப்பாகும்.
இந்தியப் பொருளாதாரம் மீண்டுவருவதால், இனிவரும் நாட்களில் கேப்பிட்டல் குட்ஸ் சம்பந்தமான நிறுவனங்கள் நன்றாகச் செயல்படும் என்று பிரஷாந்த் ஜெயின் நம்பு கிறார். ஆகவே, அந்தத் துறை சார்ந்து தனது போர்ட்ஃ போலியோவை அமைத்துள்ளார். இந்தத் துறை சார்ந்த பங்குகள் தற்போது மலிவாகக் கிடைக்கின்றன. நல்ல குவாலிட்டியான தொழில்கள் மலிவாகக் கிடைக்கும்போது வாங்குவதுதான் இந்த ஃபண்டின் கொள்கையாக உள்ளது. மேலும், இவர் நீண்ட கால அனுபவம் கொண்ட ஃபண்ட் மேனேஜர்களில் ஒருவர் ஆவார்.
நல்ல ஸ்பான்சர், திறமையான ஃபண்ட் மேனேஜ்மென்ட் டீம், நல்ல வரலாறு உள்ள திட்டங்கள் என பல நல்ல அம்சங்களைக்கொண்ட இந்த ஃபண்ட் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் தேவைக்கேற்றாற்போல் முதலீட்டை மேற்கொள்ளலாம்.
--சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
ந.விகடன் .

ஃபண்ட் ஹவுஸ் - 3
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்
இந்தியாவில் இன்று இரண்டாவது பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது ஐசிஐசிஐ புரூ மியூச்சுவல் ஃபண்ட். தற்போது (செப்டம்பர் 30, 2015 நிலவரப்படி) ரூ.1,64,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் ஸ்பான்சர்கள் நமது ஐசிஐசிஐ வங்கி மற்றும் இங்கிலாந்தை சார்ந்த புரூடென்ஷியல் பி.எல்.சி நிறுவனமாகும். ஐசிஐசிஐ வங்கி நம் நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியாகும்.
இந்த வங்கிக்கு 4,000-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. சென்ற ஆண்டில் (மார்ச் 31, 2015) ஐசிஐசிஐ வங்கியின் மொத்த சொத்துக்கள் மற்றும் நிகர லாபம் முறையே ரூ.6,46,129 கோடி மற்றும் ரூ.11,175 கோடியாகும்.
புரூடென்ஷியல் பி.எல்.சி 744 பில்லியன் டாலர் களுக்கு (1 பில்லியன் டாலர் = சுமார் ரூ.6,666 கோடி) மேலான சொத்துக்களை ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் நிர்வகித்து வரும் ஒரு நிதி சேவை நிறுவனமாகும். 166 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனம் இந்தத் தொழில்களில் உள்ளது.
ஐசிஐசிஐ அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிர்வகிப்பதுடன், பி.எம்.எஸ் (PMS – Portfolio Management Services) சேவை மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அட்வைஸரி சேவையையும் வழங்கி வருகிறது. தற்போது இந்த நிறுவனம் 30 லட்சத்துக்கும் மேலான முதலீட்டாளர் களைக் கொண்டுள்ளது.
1998-ஆம் ஆண்டு இந்தியாவில் இரண்டு அலுவலகங்களில் ஆறு பணியாட்களுடன் தொழிலைத் துவக்கிய இந்த நிறுவனம், இன்று 120 அலுவலகங்களையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்களையும் கொண்டுள்ளது.
முதலீட்டாளர்கள் தங்களின் நிதி இலக்கை அடைவதற்கு வேண்டிய முதலீடுகளை எளிமையான முறையில் தருவதுடன், தேவைக்கேற்ற புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, தொடர்ச்சி யான நல்ல ரிஸ்க் அட்ஜஸ்டட் (risk adjusted) வருவாயை தருவதை தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் ஒரு குறிப்பிட்ட ஃபண்ட் மேனேஜரையோ அல்லது ஒரு சில ஃபண்ட் மேனேஜர்களை மட்டுமோ நம்பி இருப்பதில்லை. அனலிஸ்ட்டாக வேலை செய்யும் நல்ல திறமை உள்ள நபர்களை தேர்ந்தெடுத்து ஃபண்ட் மேனேஜர்களை உருவாக்குகிறது. அவ்வாறு உருவாக்கிய ஃபண்ட் மேனேஜர்கள் இன்று இந்த நிறுவனத்தில் பல வெற்றிகரமான திட்டங்களை நிர்வகித்து வருகிறார்கள்.
இந்த வியூகத்தினால், ஃபண்ட் நிறுவனம் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் வெகுவாகக் குறைந்துவிடுகிறது.
மேலும், ஸ்டார் ஃபண்ட் மேனேஜர்(கள்) என்று ஒரு சிலரையே நம்பி இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. மேலும், ஒவ்வொரு ஃபண்ட் மேனேஜரும் அவரவருடைய முதலீட்டு ஸ்டைலை கடைபிடிப்பதற்கு இந்த நிறுவனம் அனுமதிக்கிறது.
இருந்தபோதிலும் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த முதலீட்டுக் கட்டுப்பாட்டினை அனைத்து ஃபண்ட் மேனேஜர்களும் கடைபிடிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முதலீட்டாளர்களுக்கும் வெவ்வேறு முதலீட்டு ஸ்டைலில் ஃபண்டுகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. உதாரணத்துக்கு வேல்யூ, குரோத், காண்ட்ராரியன் (Contrarian), கார்ப் (GARP – Growth at Reasonable Price) போன்ற ஸ்டைல்களில் ஃபண்டுகளை மேனேஜ் செய்கிறது.
இந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ நிமேஷ் ஷா ஆவார். இவர் ஒரு சார்டர்ட் அக்கவுன்டன்ட். இந்த நிறுவனத்தில் சேரும்முன், ஐசிஐசிஐ வங்கியில் சீனியர் ஜெனரல் மேனேஜராக பணியாற்றி வந்தார்.
இவர் 2007-ஆம் ஆண்டு இந்த நிறுவனத் தில் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து, ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் அந்த நிறுவனம் மேனேஜ் செய்யும் திட்டங்களும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.
இந்த நிறுவனத்தின் சி.ஐ.ஓ சென்னை வாசியான சங்கரன் நரேன் ஆவார். இவர் சென்னை ஐஐடி-யில் பி.டெக் முடித்தபிறகு ஐஐஎம் கொல்கத்தாவில் எம்பிஏ முடித்துள்ளார்.
இவர் ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்டில் வேலைக்கு சேரும்முன், ரெஃப்கோ சிஃபி செக்யூரிட்டீஸ், ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ், யோஹா செக்யூரிட்டீஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.
இவர் அனைத்து முதலீட்டுக்கும் தலைமை வகிப்பதுடன், சுயமாக ஐசிஐசிஐ புரூ டைனமிக் பிளான் மற்றும் ஐசிஐசிஐ புரூ டாப் 100 போன்ற ஃபண்டுகளை நிர்வகித்து வருகிறார். உலகளவில் மேக்ரோ நிகழ்வுகளை கணிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.
ராகவ் ஐயங்கார் இந்த நிறுவனத்தில் பிசினஸ் ஹெட் (Business Head)-ஆக உள்ளார். இவரும் ஒரு சார்டர்ட் அக்கவுன்டன்ட் ஆவார்.
இந்த நிறுவனத்தில் மூன்று ஈக்விட்டி மற்றும் கலப்பினத் திட்டங்கள் கடந்த காலங்களில் நல்ல செயல்பாட்டைத் தந்து, இன்றைய தினத்தில் ஒவ்வொரு திட்டமும் சுமார் ரூ.10,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகின்றன.
அதேபோல், லிக்விட் பிளான் மற்றும் ஃபிளக்ஸிபிள் இன்கம் பிளான் முறையே ரூ.23,012 கோடி மற்றும் ரூ.16,785 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகின்றன.
முதலீட்டாளர்கள் இலகுவான முறையில் முதலீட்டை மேற் கொள்ளும் வகையில் தொழில் நுட்பத்தில் மேம்பாடுகளை செய்துள்ளது.
ஆன்லைன், மொபைல் (ஐபுரூடச்), என்.எஸ்.இ, பி.எஸ்.இ, ஓ.டி.எம் (OTM – One Time Mandate) போன்றவற்றின் மூலம் இலகுவாக முதலீடு செய்யலாம்.
மேலும் இந்த நிறுவனம், தன்னுடைய வெப்சைட் மூலம் புதிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு அறிவை வளர்த்துக் கொள்ள பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
அனைத்து வகையினருக்கும் ஏற்ற வகையில் லார்ஜ்கேப், மிட்கேப், மல்டிகேப், பேலன்ஸ்டு, எம்.ஐ.பி, லிக்விட், கில்ட், அல்ட்ரா ஷார்ட் டேர்ம், ஷார்ட் டேர்ம், இன்கம், கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ், கோல்ட், ஓவர்சீஸ் போன்ற அனைத்து வகை ஃபண்டு களையும் இந்த நிறுவனம் திறம்பட நிர்வகித்து வருகிறது.
நல்ல ஸ்பான்சர், திறமையான ஃபண்ட் மேனேஜ்மென்ட் டீம், நல்ல ஆராய்ச்சிப் பிரிவு போன்ற பல பாசிட்டிவ் அம்சங்களை இந்த ஃபண்ட் நிறுவனம் கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்றாற் போல் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 4
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
டி.எஸ்.பி–பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட்
டிஎஸ்பி-பிளாக்ராக் (டிஎஸ்பி-பிஆர்) மியூச்சுவல் ஃபண்ட், இதற்கு முன்பு டிஎஸ்பி மெரில் லின்ச் என்று அழைக்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு உலகளவில் மெரில் லின்ச் (Merrill Lynch)-ன் மற்றும் பிளாக்ராக் (BlackRock)-ன் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் பிசினஸ் ஒன்று சேர்க்கப்பட்டது.
இதனை ஒட்டி இந்தியாவில் 2008-ம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டு தற்போதைய பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது ரூ.39,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
டிஎஸ்பி-பிளாக்ராக் மும்பையைச் சேர்ந்த டி.எஸ்.பி குரூப் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிளாக்ராக் ஆகிய இரு நிறுவனங்களின் ஜாயின்ட் வென்ச்சர் ஆகும்.
டிஎஸ்பி குரூப்பின் தலைவராக ஹேமந்திர கோத்தாரி இருந்து வருகிறார். இந்த குரூப் 145 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது. மேலும், மும்பை பங்குச் சந்தையின் ஸ்தாபக உறுப்பினராகவும் உள்ளது இந்த குரூப்.
ஹேமந்திர கோத்தாரி 1975-ம் ஆண்டிலேயே இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் தொழிலை ஆரம்பித்து, வெற்றிகர மாக நடத்தி, பின்னாளில் மெரில் லின்ச் நிறுவனத்துக்கு நல்ல விலைக்கு விற்றார்.
பிளாக்ராக் நிறுவனம் உலகளவில் பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட மிகப்பெரிய அஸெட் மேனேஜ்மென்ட் (Asset Management) கம்பெனியாகும். வட மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தொழில் செய்து வருகிறது. உலகத்தில் 30 நாடுகளில் இதன் அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 4.50 டிரில்லியன் டாலர் (சுமார் 2,97,00,000 கோடி ரூபாய்) ஆகும்.
பிளாக்ராக் நிறுவனத்துக்கு உலகளவில் ஆராய்ச்சி பிரிவு மற்றும் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் டீம் மிகவும் பலமாக உள்ளது. இந்தப் பிரிவு மற்றும் டீமிலிருந்து இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு முதலீட்டு அனுபவங்கள், லேட்டஸ்ட் டெக்னாலஜி மற்றும் சிறந்த ரிஸ்க் மேனேஜ்மென்ட் போன்றவை கிடைக்கிறது.
எப்போதும் முதலீட்டாளர்களின் விருப்பத்தை முன்வைத்தே செயல்படுகிறது. அனைத்துச் சந்தை சூழ்நிலைகளிலும் சிறந்த வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு தருவதையே தனது தலையாய கொள்கையாகக் கொண்டுள்ளது. நல்ல வருமானத்தை மட்டும் கொடுத்தால் போதாது என்று முதலீட்டாளர் சேவையிலும் மிகுந்த அக்கறை செலுத்துகிறது.
இந்த நிறுவனத்தின் சிறந்த பலம் என்றால் இதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மும்மூர்த்திகள் (எஸ். நாகநாத், அனூப் மகேஸ்வரி மற்றும் அபூர்வ ஷா) ஆவர். நாகநாத் தற்போது இந்த நிறுவனத்தின் பிரஸிடண்ட் மற்றும் சி.ஐ.ஓ-வாக உள்ளார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் மற்றும் ஐஐஎம் அஹமதாபாத்தில் எம்பிஏ முடித்துள்ளார்.
அனூப் மகேஸ்வரி பங்கு சார்ந்த முதலீடுகளின் தலைவராக உள்ளார். இவர் பாம்பே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் மற்றும் ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ முடித்துள்ளார்.
அபூர்வ ஷா ஐஐஎம் அஹமதாபாத்தில் எம்பிஏ முடித்துள்ளார். இவர் சற்று முன்பு வரை டிஎஸ்பி-பிஆர் டாப் 100 ஈக்விட்டி போன்ற திட்டங்களை நிர்வகித்து வந்தார். தற்போது நிறுவனங்களுக்கான முதலீட்டை மேலாண்மை செய்து வருகிறார்.
இந்த நிறுவனத்தில் சமீப காலங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் திட்டம் டிஎஸ்பி-பிஆர் மைக்ரோகேப் ஃபண்டாகும். இதன் ஃபண்ட் மேனேஜர் வினித் சாம்ப்ரே ஆவார். இவர் ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட். இவரது வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு கூடுதலான ஃபண்டுகளை நிர்வகிக்கும் பொறுப்பு தரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்டையும் தற்போது இவரே நிர்வகித்து வருகிறார். மேலும், டிஎஸ்பி-பிஆர் ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் பேலன்ஸ்டு ஃபண்டுகளின் இணை ஃபண்ட் மேனேஜராகவும் உள்ளார்.
இந்த நிறுவனத்தின் டைகர் ஃபண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சரை அடிப்படையாகக் கொண்டு முதன்முதலாக வெளிவந்த ஃபண்டுகளில் ஒன்றாகும். கடன் சார்ந்த திட்டங்களில் இதன் இன்கம் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் நன்றாகச் செயல்பட்டு வருகிறது. இது கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் வகையைச் சார்ந்த ஃபண்டாகும். இதன் ஃபண்ட் மேனேஜர் தவால் தலால் ஆவார். இவரே இந்த நிறுவனத்தின் கடன் சார்ந்த முதலீடுகளின் தலைவரும் ஆவார்.
இதன் டாப் 100 ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளில் சற்று மெதுவான செயல்பாட்டை கொடுத்ததை ஒட்டி, அதன் ஃபண்ட் மேனேஜர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாறுதல்களை ஒட்டி, வரும் ஆண்டுகளில் இந்த இரு ஃபண்டுகளின் செயல்பாடு நன்றாக இருக்கும் என ஃபண்ட் நிறுவனம் நம்புகிறது.
முதலீட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பலவிதமான ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது இந்த நிறுவனம். இவற்றில் ஓ.டி.எம் (OTM – One Time Mandate), IFAExpress.com போன்ற வசதிகள் குறிப்பிடத்தக்கவை. இதனுடைய இணையதளத்தில் டபிள்யூ இன்வெஸ்டர் (Winvestor) என்ற பகுதியில் பெண்களுக்கான நிதித் திட்டமிடல் மற்றும் முதலீடு குறித்த ஏராளமான தகவல்களைக் கொடுத்துள்ளது. மேலும், ரிஸோர்சஸ் (Resources) பகுதியில் முதலீடு குறித்த பல வீடியோக்களையும் தகவல்களையும் கொடுத்துள்ளது.
முதலீட்டாளர்களின் தேவைக்கேற்றாற்போல் பலவிதமான முதலீட்டுத் திட்டங்களை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. பல பாசிட்டிவ் அம்சங்களைக் கொண்ட இந்த ஃபண்ட் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்றாற்போல் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 5
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட்
ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி குழுமத்தைச் சார்ந்த ஒரு நிறுவனமாகும். ஐ.டி.எஃப்.சி. நிறுவனத்திற்கு வங்கி தொடங்குவதற்கான அனுமதியை சமீபத்தில் (2014) வழங்கியது நமது ரிசர்வ் வங்கி. ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் தற்போது ரூ.54,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் 2000-ம் ஆண்டு ஏ.என்.இஸட் கிரிண்ட்லேஸ் (ANZ Grindlays) மியூச்சுவல் ஃப்ண்ட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் ஏ.என்.இஸட்டின் இந்திய தொழில்களை ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு நிறுவனம் வாங்கியதால், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு மியூச்சுவல் ஃபண்ட் என பெயர் மாற்றப்பட்டது. 2008-ஆம் ஆண்டு ஐ.டி.எஃப்.சி நிறுவனம் ஸ்டாண்டர்டு சார்ட்டரிடமிருந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கி, இப்போது வரை தொடர்ந்து நடத்தி வருகிறது. தற்போது நம் நாட்டில் நிர்வகிக்கும் சொத்துக்கள் அடிப்படையில் 9-ஆவது (9/44) பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.
ஃபிரான்ஸ் நாட்டினைச் சார்ந்த நேட்டிக்ஸிஸ் குளோபல் அஸெட் மேனேஜ்மென்ட் (Natixis Global Asset Management) நிறுவனம், ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் 25 சதவிகித பங்குகளை 2010-ம் ஆண்டு வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் உலகளவில் உள்ள டாப் 15 அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களில் ஒன்றாகும். தற்போது உலகெங்கிலும் 719 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, இந்த நிறுவனத்தின் வெகு நாளைய ஃபண்ட் மேனேஜர் மற்றும் சி.ஐ.ஓ (CIO) கென்னத் ஆண்ட்ரேட் (Kenneth Andrade), இந்த நிறுவனத்தினை விட்டு விலகிச் சென்றார். அவருடைய இடத்துக்கு இன்னொருவர் விரைவில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தினை முன்னிலைக்குக் கொண்டுவந்த திட்டங்களில் முதன்மை யானது ஐ.டி.எஃப்.சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்டாகும். இந்தத் திட்டம் தற்போது ரூ.6,400 கோடிகளுக்கு மேலான சொத்தை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்டின் தற்போதைய மேனேஜர்கள் அனிருத்த நாஹா மற்றும் பூனம் ஷர்மா. இதன் முந்தைய ஃபண்ட் மேனேஜர் கென்னத் ஆண்ட்ரேட் ஆவார்.
இந்தத் திட்டம் பொதுவாக மொத்த முதலீடுகளை அனுமதிப்பதில்லை. எஸ்.ஐ.பி மூலம் மட்டுமே முதலீடுகளை அனுமதிக்கிறது. எப்போதெல்லாம் சந்தை குறைந்த அளவில் இருக்கிறது என்று இந்த நிறுவனம் நினைக்கிறதோ, அப்போது மட்டும் மொத்த முதலீட்டை இந்தத் திட்டத்தில் அனுமதிக்கிறது.
ஐந்து லட்சத்துக்கும் மேலான முதலீட்டாளர்கள் இந்த நிறுவ னம் மூலம் முதலீடு செய்துள்ளனர். இரு நூறுக்கும் மேற்பட்ட நகரங் களில் உள்ள முதலீட்டாளர்களை இந்த மியூச்சுவல் ஃபண்ட் சென்றடைந்துள்ளது.
இந்த நிறுவனம் நீண்ட காலத்தில் நன்றாக வளரக்கூடிய நிறுவனங்களை விரும்புகிறது.மேலும், கடன் சுமை அதிகம் இல்லாத நிறுவனங்களாகப் பார்த்து முதலீடு செய்கிறது. பிரைஸிங் பவர் (pricing power) அதிகம் உள்ள நிறுவனங்களாகப் பார்த்து தேர்வு செய்கிறது. அதிகம் ரிசர்ச் செய்யப்படாத நிறுவனங்களை, நன்றாக ஆராய்ந்து தனது போர்ட்ஃபோலியோவில் தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்கிறது இந்த நிறுவனம். தனது ஃபண்டுகளின் டேர்னோவர் விகிதம் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. மேலும், கான்சென்ட்ரேட்டட் (concentrated) போர்ட்ஃபோலியோவை விரும்புகிறது. இந்த சூட்சுமங்கள்தான் இந்த நிறுவனத்தின் முதலீட்டு தாரக மந்திரங்களாக உள்ளது.
ஒரு ஃபண்டுக்கும் மற்றொரு ஃபண்டுக்கும் எவ்விதமான ஓவர்லேப் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும், அடிக்கடி புது என்.எஃப்.ஓ-க்களை (NFO – New Fund Offer) சந்தையில் கொண்டுவருவது தேவையற்றது என இந்த நிறுவனம் நம்புகிறது. இந்த நிறுவனத்தின் பல கடன் சார்ந்த திட்டங்கள் நன்றாகச் செயல்பட்டு வருகின்றன.
முதலீட்டாளர்களுக்கும், அட்வைஸர்களுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய கல்வியை புகட்டுவதில் இந்த நிறுவனம் நூதனமான முறைகளைக் கையாள்கிறது. முதன் முதலாக நுழையும் முதலீட்டாளர்களுக்கு தேவையான பல விஷயங்களை இதன் வெப்சைட்டில் கொடுத்துள்ளது.
முதலீட்டாளர் களுக்கு பல புதிய வசதி களையும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் உலகில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. உதாரணத்துக்கு, ஒரு மாதத்தில் எந்த நாளிலும் எஸ்.ஐ.பி முதலீடு செய்து கொள்ளும் வசதியை இந்த நிறுவனம்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. அதைப் போலவே, தினசரி எஸ்.ஐ.பி, எஸ்.எம்.எஸ் மற்றும் போன் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் பரிவர்த்தனை செய்வது போன்ற வசதிகளையும் முன்னோடியாக அறிமுகம் செய்தது. அதைப்போல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை இந்த மியூச்சுவல் ஃபண்டில் உள்ள லிக்விட் திட்டங்களில் நேரடியாக செலுத்துவதற்கு உண்டான வசதியையும் செய்துகொடுத்துள்ளது.
இதுபோல் பல பாசிட்டிவ் அம்சங்களைக் கொண்ட இந்த ஃபண்ட் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்றாற்போல் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 6
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்
பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சார்ந்த நிறுவனமாகும். இந்நிறுவனம் இன்றைய தினத்தில் ரூ.1,36,000 கோடிகளுக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து, இந்தியாவில் நான்காவது பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.
கனடாவைச் சார்ந்த சன்லைஃப் குழுமம் இந்த நிறுவனத்தில் 50 சதவிகித பங்குகளை வைத்துள்ளது. இந்த இரண்டு குழுமங்களும்தான் இந்த நிறுவனத்தின் ஸ்பான்சர்கள். ஆதித்யா பிர்லா குழுமம், இந்தியாவையும் சேர்த்து 26 நாடுகளில் தொழில் செய்து வருகிறது. 1,30,000 நபர்கள் இந்தக் குழுமத்தில் உலகெங்கிலும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்தியாவில் அலுமினியம், ஃபைனான்ஸ், சிமென்ட், ரீடெய்ல், டெலிகாம், உரம் போன்ற இன்னும் பல துறைகளில் தொழில் செய்து வருகிறது. இந்தக் குழுமத்தின் சேர்மன் குமாரமங்கலம் பிர்லா ஆவார்.
சன்லைஃப் குழுமம் கனடா நாட்டினைச் சார்ந்த நிதி சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் உலகெங்கிலும் பல நாடுகளில் தொழில் செய்து வருகிறது. இந்த நிறுவனம் நிர்வாகம் செய்யும் சொத்துக்களின் மதிப்பு 846 பில்லியன் டாலர்களாகும். கனடா, அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் இந்த நிறுவனத்தின் பங்குகள் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளன.
பிர்லா மியூச்சுவல் ஃபண்டின் சி.இ.ஓ மற்றும் சி.ஐ.ஓ நமது தஞ்சாவூர்காரரான பாலசுப்ரமணியன் ஆவார். இவர் இந்த நிறுவனம் துவங்கியதிலிருந்து பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு ஜி.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் கேன்பேங்க் ஃபைனான்ஷியல் சர்வீஸில் பணிபுரிந்துள்ளார். இவர் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். மேலும் ஐஐஎம் பெங்களூரில் டி.எஃப்.எம் (DFM – Diploma in (Financial Management) மற்றும் ஏ.எம்.பி (AMP – Advanced
Management Program) கோர்ஸை முடித்துள்ளார்.
மகேஷ் பாட்டீல் இந்த நிறுவனத்தின் பங்கு சார்ந்த முதலீடுகளின் தலைவராவார். இவர் இந்த ஃபண்ட் நிறுவனத்தில் நன்றாக செயல்பட்டு வரும் ஃபிரன்ட்லைன் ஈக்விட்டி, டாப் 100, பேலன்ஸ்டு 95 போன்ற திட்டங்களையும் இன்னும் சில திட்டங்களையும் நிர்வகித்து வருகிறார். இவர் ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜீனியர். பிறகு ஜமன்லால் பஜாஜ் இன்ஸ்ட்டிட்யூட்டில் எம்.பி.ஏ முடித்துள்ளார். பிர்லா மியூச்சுவல் ஃபண்டில் சேர்வதற்கு முன்பு சி.எம்.சி, பராக் பரிக், டாடா எக்கனாமிக் கன்சல்டன்சி, மோதிலால் ஓஸ்வால், ரிலையன்ஸ் இன்போஃகாம் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
மனீஷ் டாங்கி, கடன் சார்ந்த முதலீடுகளின் தலைவராவார். இவர் இந்த நிறுவனத்தின் வெற்றிகரமான திட்டங்களான டைனமிக் பாண்ட் ஃபண்ட், மீடியம் டேர்ம் பிளான் போன்ற திட்டங்களை நிர்வகித்து வருகிறார். இவர் எம்.பி.ஏ மற்றும் எஃப்.ஆர்.எம் (FRM – Financial Risk Manager) முடித்துள்ளார்.
இந்த நிறுவனம் நீண்டகால ஃபண்டமென்டல் ரிசர்ச் அடிப்படையிலான முதலீட்டு முறையைக் கடைபிடிக்கிறது. நல்ல தரமான மேனேஜ்மென்ட், நிலைத்து நிற்கக்கூடிய பிஸினஸ் மாடல், நல்ல வளர்ச்சி வாய்ப்புள்ள தொழில்கள் போன்றவற்றை கவனித்து பங்குகளை தேர்வு செய்கிறது.
செல்வத்தை உருவாக்குவது, சேமிப்பு, டாக்ஸ் சேவிங்ஸ், ரெகுலர் இன்கம் போன்ற அனைத்து தேவைகளுக்கும் ஏதுவான திட்டங்களை முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனம் வழங்குகிறது. மேலும், மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய கல்வியை பொதுமக்களுக்கு புகட்டுவதற்காக, பலவிதமான கையேடுகளை வழங்கி வருகிறது.
முதலீட்டாளர்களுக்கு பலவிதமான ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. இதன் இணையதளம் மூலம் முதன்முறை முதலீட்டாளர்கள் இ.கே.ஒய்.சி (eKYC) செய்து கொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபிரன்ட்லைன் ஈக்விட்டி, டாப் 100, எம்.என்.சி போன்ற ஈக்விட்டி திட்டங்களும், டைனமிக் ஃபாண்ட் ஃபண்ட், மீடியம் டேர்ம் பிளான், ஷார்ட்டேர்ம் ஆப்பர்ச்சூனிட்டீஸ் போன்ற கடன் சார்ந்த திட்டங்களும் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில் நான்காவது பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நல்ல செயல்முறையைக் கொண்டுள்ள நிறுவனம், தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை தந்து கொண்டிருக்கக்கூடிய நிறுவனம் இது. பல நல்ல அம்சங்களைக் கொண்டுள்ள இந்த ஃபண்ட் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்றாற்போல் முதலீட்டை தேர்வு செய்துகொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 7
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்!
ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தைச் சார்ந்த நிறுவனமாகும். இது தற்போது ரூ.1,56,000 கோடிகளுக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து இந்திய மியூச்சுவல் ஃபண்ட் உலகில் மூன்றாவது பெரிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. இந்த மியூச்சுவல் ஃபண்டின் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி (AMC – Asset Management Company) ரிலையன்ஸ் கேப்பிட்டல் அஸெட் மேனேஜ்மென்ட் ஆகும். இந்த அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத் தின் பங்குகள் நமது பங்குச் சந்தைகளில் லிஸ்ட் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறுவனமே ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டின் ஸ்பான்சர் ஆகும்.
ரிலையன்ஸ் கேப்பிட்டல் ஒரு வங்கி சாரா நிதி நிறுவனமாகும் (NBFC – Non Banking Finance Company). மேலும், இது அனில் அம்பானியின் நிதித் துறை சார்ந்த நிறுவனங் களுக்கு எல்லாம் ஹோல்டிங் கம்பெனி யாகவும் உள்ளது. இதற்கு கீழ் மியூச்சுவல் ஃபண்ட், பென்ஷன் ஃபண்ட், பி.எஃப், லைஃப் இன்ஷூரன்ஸ், ஜெனரல் இன்ஷூ ரன்ஸ், ஃபைனான்ஸ், அஸெட் ரீகன்ஸ்ட்ரக் ஷன், புரோக்கரேஜ், வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் பி.எம்.எஸ் போன்றவைகளும் உள்ளன.
அஸெட் மேனேஜ் மென்ட் நிறுவனத்தில் (மியூச்சுவல் ஃபண்ட்) ஜப்பானைச் சார்ந்த நிப்பான் லைஃப் இன்ஷுரன்ஸ் நிறுவனம் 35% பங்குகளை வைத்து உள்ளது. இது உலகளவில் 7-வது பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆகும். ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இந்தியாவில் 158 இடங்களில் அலுவலகங்களை வைத்துள்ளதுடன், சிங்கப்பூர், துபாய், மொரீஷியஸ் போன்ற இடங்களிலும் கால்பதித்து உள்ளது. பங்கு சார்ந்த முதலீடுகளில் நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்குவதையும், கடன் சார்ந்த முதலீடுகளில் தொடர்ச்சியாக நல்ல ரிஸ்க் அட்ஜஸ்ட் வருமானத்தைத் தருவதையும் தனது தத்துவமாகக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
முதலீட்டாளர்களுக்கு பலவிதமான முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ சந்தீப் சிக்கா ஆவார். இவர் கடந்த காலத்தில் ஆம்ஃபி (AMFI – Association of Mutual Funds in India) சேர்மனாகவும் இருந்துள்ளார்.
இதனுடைய ஃபண்ட் மேனேஜ்மென்ட் டீம் மிகவும் திடமாக உள்ளது. இதனுடைய ஈக்விட்டி டீம் 30 நபர்களை உள்ளடக்கியது. இந்த டீமை சுனில் சிங்கானியா தலைமை வகிக்கிறார். இந்த டீமில் 5 ஃபண்ட் மேனேஜர்களும், ஒரு பொருளாதார நிபுணரும், 14 அனலிஸ்ட்டுகளும் உள்ளனர்.
உலக அளவில் 20 நாடுகளில், கிட்டத்தட்ட 2,800 நிறுவனங்களை பேஸிவ்வாக டிராக் (track) செய்கிறது இந்த ஏ.எம்.சி. இந்தியாவில் ஆக்டிவ்வாக 450 நிறுவனங்களை டிராக் செய்கிறது. அவற்றில் 200 நிறுவனங்களை இந்த நிறுவனத்தின் சொந்த டீமே டிராக் செய்கிறது.
இதனுடைய கடன் சார்ந்த திட்டங்களின் மேனேஜ்மென்ட் டீமில் நான்கு ஃபண்ட் மேனேஜர் களும், ஐந்து அனலிஸ்ட்டுகளும் உள்ளனர். இந்த டீம் நல்ல ரிஸ்க் மேனேஜ்மென்ட் திறமைகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் பின்பற்றும் பல வேல்யூவேஷன் மாடல்கள் இந்த நிறுவனத்தின் அனலிஸ்ட்டுகளால் உருவாக்கப்பட்டவை.
மியூச்சுவல் ஃபண்ட் உலகத்துக்கு பலவிதமான வசதிகளை முதன்முதலாக அறிமுகப்படுத்திய பெருமை இந்த நிறுவனத்தினைச் சேரும். உதாரணத்துக்கு, முதல் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டை இந்த நிறுவனம்தான் அறிமுகப்படுத்தியது.
அதேபோல், முதன்முறையாக, வேண்டுகிறபோது மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து பணம் எடுத்துக் கொள்வதற்காக டெபிட் கார்டை அறிமுகப் படுத்தியதும் இந்த நிறுவனம்தான். மேலும், முதன்முறையாக 80சி பெனிஃபிட்டுடன் பங்கு சார்ந்த ரிட்டையர்மென்ட் ஃபண்டை அறிமுகப்படுத்தியதும் இந்த நிறுவனம்தான்.
இந்த நிறுவனத்தின் பங்கு சார்ந்த திட்டங்கள் பொதுவாக, கரடிச் சந்தையைவிட, காளைச் சந்தையில் மிக நன்றாகச் செயல்படும். பங்கு சார்ந்த திட்டங்களின் போர்ட்ஃபோலியோ அமைப்பு பொதுவாக காளைச் சந்தையை ஒட்டியே அமைக்கப்படுகிறது.
பலவிதமான பாசிட்டிவ் அம்சங்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தில், முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்றாற்போல், முதலீட்டினை மேற்கொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 8
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
எல் & டி மியூச்சுவல் ஃபண்ட்
எல் & டி (லார்ஸன் அண்ட் டூப்ரோ – Larsen & Toubro) நம்மில் பலருக்கும் பரிச்சயமான நிறுவனம். கட்டுமானம், உற்பத்தி, இன்ஜினீயரிங், ஃபைனான்ஸ், கப்பல் கட்டுமானம், மெஷினரி தயாரிப்பு, ரியாலி்ட்டி, ஐ.டி என்று பல துறைகளில் நம் நாட்டின் வளர்ச்சியோடு பின்னி பிணைந்துள்ள நிறுவனமாகும். டென்மார்க்கில் இருந்து இந்தியாவுக்கு வந்த இரண்டு இன்ஜினீயர்களால் (ஹென்னிங் ஹோல்க் லார்ஸன் மற்றும் சோரன் கிறிஸ்டியன் டூப்ரோ) துவங்கப்பட்ட நிறுவனமாகும்.
இன்று பெருமளவில் வளர்ந்து, நிஃப்டியில் 4 சதவிகிதத்துக்கும் மேல் வெயிட்டேஜ் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1,06,000 கோடிக்கும் மேல். முழுக்க முழுக்க தொழில் ரீதியிலான புரஃபஷனல்களால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனம் என இதைக் கூறலாம். இந்த நிறுவனத்துக்கு புரமோட்டர்கள் என்று தனியாக யாரும் கிடையாது. இதனுடைய பங்குகள் யாவையும் தனிநபர்கள், வங்கிகள், நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், மற்றும் யூ.டி.ஐ போன்றவர்களின் கையில்தான் உள்ளது.
எல் & டி, எல் & டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை 2008-ம் ஆண்டு நிறுவியது. எல் & டி-யின் ஃபைனான்ஸ் துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் இதன் கீழ் வருகிறது. எல் & டி மியூச்சுவல் ஃபண்டின் ஸ்பான் சரும் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ்தான். பங்குச் சந்தையில் எல் & டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தனியாக லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டு டி.பி.எஸ் சோழ மண்டலம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் எல் & டி நிறுவனம், மியூச்சுவல் ஃபண்ட் தொழிலில் கால்பதித்தது. பிறகு 2012-ம் ஆண்டு ஃபிடலிட்டி என்ற அமெரிக்க நிறுவனம், இந்தியாவிலிருந்த தனது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை விற்றது. அதையும் எல் & டி மியூச்சுவல் ஃபண்ட் வாங்கியது. தற்போது ரூ.25,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
இந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில் பங்குகளை தேர்வு செய்வதற்கு GEM (G - Generation of Ideas, E – Evaluation of Companies, M – Manufacturing & Monitoring of Portfolios) என்ற செயல்முறையைப் பயன்படுத்துகிறது. அனலிஸ்ட்டு களும், ஃபண்ட் மேனேஜர்களும் ஐடியாக்களை உண்டு பண்ணு கிறார்கள். பங்கு சார்ந்த திட்டங் களுக்கு, முதலீட்டு டீம் சந்திப்பு கள் மற்றும் கம்பெனி நிர்வாகம், போட்டி நிறுவனங்கள், சப்ளையர்கள், தொழில் நுணுக்கம் தெரிந்தவர்கள், கட்டுப்பாட்டு ஆணையங்கள் போன்றவர்களை சந்திப்பதன் மூலமும் ஐடியாக்கள் உருவாக்கப்படுகின்றன. இவை தவிர, வெளியிலிருந்து கிடைக்கும் ரிசர்ச் ரிப்போர்ட்டுகளும் உபயோகிக்கப்படுகின்றன. தவிர, கடன் திட்டங்களுக்கு, வெளியிடுபவர்கள், சந்தையில் இருப்பவர்கள் ஆகியோரின் கருத்துக்களும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
அடுத்த கட்டமாக, அந்தப் பங்குகளுக்கு/ பத்திரங்களுக்கு உள்ள லிக்விடிட்டி, சந்தை மதிப்பு, ஓனர்ஷிப், நிறுவனத்தின் லாபம், தொழிலின் கவர்ச்சி, டிவிடெண்ட், மேனேஜ்மென்ட் டிராக் ரெக்கார்ட், வேல்யூவேஷன், கார்ப்பரேட் கவர்னென்ஸ் (corporate governance) போன்றவை ஃபில்டர் செய்யப்படுகின்றன.
மூன்றாவது கட்டமாக, ஃபண்ட் மேனேஜர்கள், மேலே இரண்டு கட்டங்களில் வடிகட்டியதிலிருந்து கிடைத்தவற்றை தங்களது போர்ட்ஃபோலியோவுக்கு தேவைக்கேற்றாற்போல் தேர்வு செய்துகொள்கின்றனர். இதன்பிறகு, ஒவ்வொரு ஃபண்ட் மேனேஜரும் தங்களது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளை/ கடன் பத்திரங்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான மாற்றங்களைச் செய்து கொள்கின்றனர்.
கைலாஷ் குல்கர்னி இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ஆவார். இவர் இதற்கு முன்பு கோட்டக் மஹிந்த்ரா மியூச்சுவல் ஃபண்டிலும், அதற்குமுன் மெட்லைஃப், ஐசிஐசிஐ, ஜே.எம் ஃபைனான்ஷியல் போன்ற நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
சௌமேந்திரநாத் லாஹிரி இந்த நிறுவனத்தின் சி.ஐ.ஓ ஆவார். இவர், ஈக்விட்டி, டேக்ஸ் அட்வான்டேஜ், ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ், மிட்கேப் போன்ற பல ஈக்விட்டி திட்டங்களை நேரடியாகவும், துணை ஃபண்ட் மேனேஜர்களு டனும் நிர்வகித்து வருகிறார். இவர் இன்ஜினீயரிங்கில் இளங்கலை பட்டமும், ஐஐஎம் பெங்களூரில் மேனேஜ்மென்ட் டில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இதற்கு முன்பு கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் பங்கு சார்ந்த முதலீடுகளின் தலைவராக இருந்தார்.
இந்த நிறுவனத்தில் ஈக்விட்டி பிரிவில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க ஃபண்ட் மேனேஜர் வேணுகோபால் மங்கத் ஆவார். இவர் எல் & டி இந்தியா வேல்யூ ஃபண்டை மிகவும் வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். அதேபோல் இந்த நிறுவனத்தில் உள்ள பேலன்ஸ்டு ஃபண்டான புரூடன்ஸ் ஃபண்ட் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் கடன் சார்ந்த முதலீடுகளின் தலைவர் ஸ்ரீராம் ராமநாதன் ஆவார். இவருக்கு இந்தத் துறையில் 15 வருடங்களுக்கு மேலான அனுபவம் உள்ளது. இவர் ஜாம்ஷெட்பூரில் உள்ள எக்ஸ்.எல்.ஆர்.ஐ (XLRI)-யில் எம்.பி.ஏ முடித்துள்ளார். இவர் சி.எஃப்.ஏ (CFA – Chartered Financial Analyst) சான்றிதழும் பெற்றுள்ளார்.
எட்டு லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்துடன் இணைந்து உள்ளனர். நீண்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான நல்ல வருமானத்தை ஈட்டித் தருவதை தனது கொள்கையாகக் கொண்டுள்ளது.
சமீப காலமாக இந்த நிறுவனத்தின் பல திட்டங்கள் தொடர்ச்சியாக நன்றாக செயல்பட்டு வருகின்றன. வெற்றிகரமாக செயல்பட்டு வரும், இந்த நிறுவனத்தில், முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்ப வேண்டிய முதலீட்டினை செய்து கொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 9
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
பி.என்.பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட்!
பி.என்.பி பரிபாஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த் ஒரு உலகளவில் வங்கி ஆகும். உலக அளவில் நான்காவது பெரிய வங்கியாகும். உலகளவில் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் பட்டியலில், இந்த வங்கி 2014-ம் ஆண்டு 42-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் இந்த வங்கி 1860-ம் ஆண்டே கால் பதித்துவிட்டது. முதல் கிளையை கொல்கத்தாவில் துவக்கியது. இன்று இந்தியாவில் எட்டு பெரிய நகரங்களில் இந்த வங்கி தனது கிளைகளைக் கொண்டுள்ளது.
உலக அளவில் 75 நாடுகளில் தொழில் செய்து வருகிறது. இந்தியாவில் பல தொழில்களை உள்நாட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து செய்து வருகிறது. ஸ்டேட் பேங்க்-வுடன் லைஃப் இன்ஷூரன்ஸ், சுந்தரம் ஃபைனான்ஸுடன் ஹோம் ஃபைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி சர்வீசஸ் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளதுடன், எஸ்.ஆர்.இ.ஐ, ஜியோஜித் போன்ற நிறுவனங்களுடனும் கைகோர்த்துள்ளது. இவை தவிர, தனியாக மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஆர்வல் என்ற கார் லீஸிங் முதலிய தொழில்களையும் செய்து வருகிறது.
இந்த வங்கிக்கு மூன்று பிரிவுகள் உள்ளன. ரீடெய்ல், கார்ப்பரேட் மற்றும் ஃபைனான்ஷியல் சர்வீஸ். இவற்றில் மூன்றாவது பிரிவின் கீழ் வருவதுதான் அஸெட் மேனேஜ்மென்ட். இந்தப் பிரிவில் ஒரு அங்கம்தான் பி.என்.பி பரிபாஸ் இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஸ். இந்த அங்கம்தான் நம் நாட்டில் உள்ள பி.என்.பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்டின் ஸ்பான்சர் ஆகும்.
தற்போது பி.என்.பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட் ரூ.5,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இது தவிர, சுமார் 6,500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆஃப்ஷோர் ஃபண்டுகளையும் நிர்வகித்து வருகிறது.
இந்தியாவில் இருக்கும் டாப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களைப் பார்க்கும் போது, இதன் அளவு சிறிதாக இருந்தாலும், இதன் திட்டங்கள் தொடர்ச்சியாக நன்கு செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ஷரத் ஷர்மா ஆவார்.
ஏ.பி.என் அம்ரோ மியூச்சுவல் ஃபண்ட் வெளிநாடுகளில் நடந்த மாறுதல்களால், ஃபோர்ட்டீஸ் மியூச்சுவல் ஃபண்ட் என இந்தியாவில் பெயர் மாறியது. அதன்பிறகு நடந்த மாறுதல்களில், ஃபோர்ட்டீஸ் மியூச்சுவல் ஃபண்ட் பி.என்.பி மியூச்சுவல் ஃபண்ட் என பெயர் மாற்றம் அடைந்தது.
இதன் சி.ஐ.ஓ ஆனந்த் ஷா ஆவார். இவர் இதற்கு முன்பு கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் பங்கு சார்ந்த முதலீட்டுப் பிரிவின் தலைவராக இருந்தார். அதற்கு முன்பு ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பணிபுரிந்து உள்ளார். இவர் என்.ஐ.டி சூரத்தில் இன்ஜினீயரிங்கில் இளங்கலைப் பட்டமும், ஐ.ஐ.எம் லக்னோவில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
இந்த நிறுவனத்தில் பங்கு சார்ந்த திட்டங்கள் நான்குதான் உள்ளன. அந்த நான்கு திட்டங்களையும் ஷ்ரேயாஷ் தெவால்கர் என்பவர் மேனேஜ் செய்து வருகிறார். இவர் இதற்கு முன்பு ஐ.டி.எஃப்.சி கேப்பிட்டல் மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் பணியாற்றியுள்ளார். இவர் நிர்வாகம் செய்யும் நான்கு திட்டங்களுமே தொடர்ச்சியாக நன்றாக செயல்பட்டு வருகின்றன.
‘‘நிறுவனங்கள்தான் செல்வத்தை உருவாக்குகின்றன; சந்தைகள் அல்ல” என்பது இந்த நிறுவனத்தின் தார்மீக மந்திரமாக உள்ளது. நல்ல நிர்வாகத் திறமை கொண்டுள்ள ஸ்திரமான தொழில்களில் நீண்ட காலத்துக்கு செய்யப்படும் முதலீடு, தொடர்ச்சியாக நல்ல வருமானத்தைக் கொடுக்கும் என்ற அடிப்படையில் தனது முதலீட்டை இந்த நிறுவனம் மேற்கொள்கிறது.
வேகமான வளர்ச்சி, நல்ல காலங்களில் முதலீட்டுக்கு நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும்; அதே சமயத்தில், சிறந்த கார்ப்பரேட் கவர்னன்ஸ் (corporate governance) உடைய மேனேஜ்மென்ட், கஷ்டமான காலகட்டங்களில் முதலீட்டின் இறக்கத்தைக் குறைக்கும் என்பது இந்த நிறுவனத்தின் அனுபவமாக உள்ளது.
ஸ்திரமான ஃபண்டமென்டல் களையும் நல்ல வளர்ச்சியையும் உடைய நிறுவனங்களாகப் பார்த்து முதலீடு செய்கிறது.
பங்குகளை தேர்வு செய்வதற்கு, கார்ப் (GARP - Growth at Reasonable Price) மாடலை உபயோகிக்கிறது. பி.எம்.வி (BMV – Business, Management, Valuation) அடிப்படையில் இதன் ஆராய்ச்சி மற்றும் முதலீட்டு கலாசாரம் அமைந்துள்ளது. பிசினஸில் (B) எந்த அளவு வளர்ச்சி மற்றும் மோட் (moat) உள்ளது என்பதைப் பார்க்கிறது. நிர்வாகத்தில் (M) தலைமை, கவர்னன்ஸ், ஆற்றல்/ தகுதி போன்றவற்றை அலசுகிறது. அதேபோல், வேல்யூவேஷனில் (V), நியாயமான வேல்யூவேஷனாக உள்ளதா என்று பார்ப்பதுடன், கேஷ் ஃப்ளோவுக்கு நிகர லாபத்துடன் அதிகமான வெயிட்டேஜைக் கொடுக்கிறது. செய்யும் முதலீடுகளில் மார்ஜின் ஆஃப் சேஃப்டியை (margin of safety) எப்போதும் வைத்துக் கொள்கிறது.
இதன் கடன் சார்ந்த திட்டங்கள் புனீத் பை தலைமை யில் நிர்வகிக்கப் படுகிறது. இந்த நிறுவனத்தின் இன்வெஸ்ட் மென்ட் மேனேஜ்மென்ட் டீம் மொத்தம் எட்டு நபர்களைக் கொண்டு செயல்படுகிறது.
மிளகு சிறிதென்றாலும் காரம் அதிகம் என்பது போல, சிறிய ஃபண்ட் நிறுவனமாக இருந்தாலும் இதன் ஈக்விட்டி திட்டங்கள் அனைத்தும் நன்கு செயல்பட்டு வருகின்றன.
வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில், முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்றாற்போல், வேண்டிய முதலீட்டினை செய்துகொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 10
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட்
1947-ம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் ரீடெய்ல் புரோக்கரேஜ் நடத்தி வந்த ரூபெர்ட் ஹெச். ஜான்ஸன் என்பவரால் துவங்கப்பட்டதுதான் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன். கடந்த அறுபது வருடங்களில் பல நிறுவனங்களை தன்வசம் ஆக்கிக் கொண்டு, இன்று முதலீட்டு மேலாண்மை உலகில் ஒரு பெரிய ஜாம்பவானாகத் திகழ்ந்து வருகிறது.
இந்த நிறுவனம், அமெரிக்காவில் பங்குச் சந்தையில் ஃப்ராங்க்ளின் ரிசோர்ஸஸ் என்கிற பெயரில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலராகும்.
இந்த நிறுவனம் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஸேன் மேட்டியோ என்ற இடத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு, உலகெங்கிலும் 35 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. 150 நாடுகளில் இதனது சேவை வழங்கப்படுகிறது. உலகெங்கிலும் 800 பில்லியன் டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.54 லட்சம் கோடி) மேலான சொத்தை நிர்வகித்து வருகிறது இந்த நிறுவனம்.
இந்த நிறுவனம் 1996-ம் ஆண்டு இந்தியாவில் தனது செயல்பாட்டைத் துவக்கியது. 2002-ம் ஆண்டு பயோனியர் ஐடிஐ என்ற மியூச்சுவல் நிறுவனத்தை இந்தியாவில் விலைக்கு வாங்கியது.
நீண்ட காலத்தில் தொழிலில் வெற்றிகரமாகத் திகழ்வதற்கு முதலீட்டாளர் மற்றும் ஃபைனான்ஷியல் அட்வைஸர்களுக்கு முதலீட்டு அறிவை புகட்டுவதுதான் ஒரே தீர்வு என்பதை புரிந்துகொண்டிருக்கிறது இந்த நிறுவனம். இதனாலேயே முதலீட்டாளர்களுக்கும் அட்வைஸர்களுக்கும் பலவிதமான பயிற்சி சேவைகளை வழங்கி வருகிறது.
உலகளவில் ஒரு தலைசிறந்த முதலீட்டு மேலாண்மை நிறுவனமாகத் திகழ்ந்து, முதலீட்டாளர்களுக்கு தரமான முதலீட்டு தீர்வுகளை, உன்னதமான சேவையுடன் வழங்கி, சிறந்த ஊழியர்களை தன்வசம் தக்கவைத்துக் கொள்வதையே தனது தொலைநோக்குப் பார்வையாகக் (vision) கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
தற்போது இந்த நிறுவனம் இந்தியாவில் ரூ.70,000 கோடி களுக்கும் மேலான சொத்தை நிர்வகித்து, இந்திய மியூச்சுவல் ஃபண்ட் உலகில், ஏழாவது பெரிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.
பயோனியர் ஐடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது இந்த நிறுவனத்துக்கு பெரிய ஏற்றத்தைக் கொடுத்தது. அங்கிருந்த நல்ல ஃபண்ட் மேனேஜ்மென்ட் டீம் (கே.என். சிவசுப்ரமணியன் மற்றும் சுகுமார் ராஜா போன்றோர்) மற்றும் ஃபைனான்ஷியல் அட்வைஸர்கள் நெட்வொர்க் இந்த நிறுவனத்துக்கு பெரிய பாசிட்டிவ் அம்சமாக அமைந்தது.
இந்த நிறுவனத்தின் முன்னணி ஃபண்டுகள் பல (புளுசிப், பிரைமா பிளஸ், பிரைமா போன்ற ஃபண்டுகள்), தொடர்ச்சி யாக நல்ல செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இந்த நிறுவனத்தின் பங்கு சார்ந்த பிரிவுகளின் தலைவராக இருந்த வர் கே.என். சிவசுப்ரமணியன். இவருடைய திறமை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் உலகம் அறிந்த ஒன்றாகும். தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு சார்ந்த பிரிவுகளின் தலைவராக ஆனந்த் ராதாகிருஷ்ணன் உள்ளார்.
இவர் மொத்த பங்கு சார்ந்த முதலீடுகளை மேற்பார்வை செய்வதுடன், புளுசிப், பிரைமா பிளஸ், டாக்ஸ் ஷீல்ட் மற்றும் இன்ஃபோடெக் ஃபண்டுகளை நேரடியாக நிர்வகித்தும் வருகிறார். இந்த நிறுவனத்துக்கு முன்பு, சுந்தரம் மற்றும் எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.
இவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலில் இளங்கலை பட்டமும், ஐஐஎம் அகமதாபாத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.
இவரைத் தவிர, இந்த நிறுவனத்தின் முக்கிய ஈக்விட்டி ஃபண்ட் மேனேஜர்கள் ஜானகிராமன் ரெங்கராஜு மற்றும் ரோஷி ஜெயின் ஆவார்கள். இந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. இங்குதான் பங்கு சார்ந்த ஃபண்டுகள் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த நிறுவனத்தின் கடன் சார்ந்த முதலீடுகளின் தலைவர் சந்தோஷ் காமத் ஆவார். இவர் பொறியியலில் இளங்கலைப் பட்டமும், சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.
கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் வகையில் இந்த ஃபண்ட் நிறுவனம் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அந்தத் திட்டங்களை முன்னின்று நடத்திச் செல்பவர் இவர்தான்.
நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்குவதும், ரிஸ்க் அட்ஜஸ்டட் ரிட்டர்னை (risk adjusted return) அதிகமாக முதலீட்டாளர்களுக்கு கொடுக்க முயல்வதும்தான் இதன் அடிப்படைக் கொள்கையாக உள்ளது. பாட்டம்-அப் (bottom-up) முறையை இந்த நிறுவனம் தனது ஆய்வுக்குப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு கம்பெனியையும் முழுவதுமாக ஆராய்ந்து, அந்த நிறுவனப் பங்கில் அல்லது கடன் பத்திரத்தில் முதலீடு செய்கிறது.
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் உலகில் பல விஷயங்களை முதன்முறையாக செய்துள்ளது இந்த நிறுவனம். முதல் ஓப்பன் எண்டட் ஃபண்ட் (ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட்), முதல் வேல்யூ ஃபண்ட் (டெம்பிள்டன் இந்தியா குரோத் ஃபண்ட்), முதல் இன்ஃபோடெக் ஃபண்ட் (ஃப்ராங்க்ளின் இன்ஃபோடெக் ஃபண்ட்), முதல் ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் (தற்போது ஃப்ராங்க்ளின் இந்தியா சேவிங்ஸ் பிளஸ் ஃபண்ட்), முதல் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (ஃப்ராங்க்ளின் இந்தியா டைனமிக் பி.இ ரேஷியோ), முதல் கேப்பிட்டல் புரடக்ஷன் ஃபண்ட், முதல் ஏஷியா ஃபண்ட், முதல் டிவிடெண்ட் ஈல்ட் ஃபண்ட் என பலவற்றை இந்தியச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியதன் பெருமை இதனைச் சாரும். முதலீட்டாளர்களுக்காகவே ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் அகாடமி (https://www.franklintempletonacademy.com/) என்ற இணையதளத்தை வைத்துள்ளது.
நல்ல ஃபண்ட் மேனேஜ் மென்ட் டீம், தொடர்ச்சியான நல்ல செயல்பாடு, நல்ல கஸ்டமர் சேவை என பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில், முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்றாற்போல், வேண்டிய முதலீட்டினை செய்துகொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 11
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
ரெலிகேர் இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட்
ரெலிகேர் இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஏறக்குறைய ரூ.20,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை ரெலிகேர் செக்யூரிட்டீஸும், எஞ்சியதை அமெரிக்க நிறுவனமான இன்வெஸ்கோ நிறுவனமும் வைத்துள்ளன.
ரெலிகேர் செக்யூரிட்டீஸ், நமது பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ள ரெலிகேர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் (wholly owned subsidiary) துணை நிறுவனமாகும்.
ரெலிகேரின் புரமோட்டர்கள், ரான்பேக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர் குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்கள் மல்விந்தர் மோகன் சிங் மற்றும் ஷிவிந்தர் மோகன் சிங் ஆவர். இன்வெஸ்கோ உலகளவில் 756 பில்லியன் டாலர் களுக்கு மேலான சொத்துக்களை நிர்வகித்து வரும் ஒரு அமெரிக்க முதலீட்டு நிறுவனமாகும்.
இன்வெஸ்கோ நிறுவனம் உலகளவில் இருபது நாடுகளுக்கும் மேலாக தனது கால்களை பதித்துள்ளது. மேலும், 130 நாடுகளில் உள்ள கஸ்டமர்களுக்கு தனது சேவைகளை வழங்கி வருகிறது. அமெரிக்காவில் பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்குகள் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 11 பில்லியன் டாலர்களுக்கும் (ரூ.75,000 கோடி) மேல்.
சில மாதங்கள் முன்பு இன்வெஸ்கோ நிறுவனம், ரெலிகேர் இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் உள்ள இந்திய புரமோட்டர்களின் 51 சதவிகித பங்கினை முழுவது மாக வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. கட்டுப்பாட்டு வாரியங்களின் ஒப்புதல் கிடைத்தவுடன், இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்டாக பெயர் மாறிவிடும். இந்த மாற்றங்களினால் முதலீட்டாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. இது முதலீட்டாளர்களுக்கு நன்மையாகவே அமையும். ஏனென்றால், இன்வெஸ்கோ நிறுவனம் முழுக்க முழுக்க முதலீட்டுத் தொழிலில் மட்டும்தான் உள்ளது. ஆகவே, இந்தியச் சந்தையின் மீது அந்த நிறுவனத்தின் மீது இருக்கும் அக்கறையும் கவனமும் மிக அதிகமாக இருக்கும்.
நன்றாகச் செயல்பட்டு வரும் சிறிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. ஒழுக்கமுடன் கூடிய முதலீட்டுப் பழக்கத்தை இந்த நிறுவனம் கடைபிடித்து வருகிறது. நீண்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை தருவதற்கு, ஒழுக்கமுடன் கூடிய முதலீட்டு முறையை கடைபிடிப்பதுடன், தொடர்ச்சியாக திரும்ப திரும்ப கடைபிடிக்கக்கூடிய முதலீட்டு முறையும் அவசியம் என இந்த நிறுவனம் நம்புகிறது.
பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரை, முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை குறியீட்டைவிட நீண்ட காலத்தில் நல்ல லாபத்தை (Capital appriciation) சம்பாதித்து தருவதே இந்த நிறுவனத்தின் தத்துவம். நல்ல ஆராய்ச்சித் திறனும், ஒழுக்கத்துடன் கூடிய போர்ட்ஃபோலியோ நிர்வாகமும் நீண்ட காலத்தில் குறியீட்டைவிட அதிக வருமானத்தை ஈட்டி தரும் என இந்த நிறுவனம் பூரணமாக நம்புவதால், தனது பங்கு சார்ந்த ஃபண்டுகளை அந்த முறையில் ஆக்டிவ்வாக செயல்படுத்தி வருகிறது. பங்கு சார்ந்த முதலீட்டில் பங்குகளை ஸ்டார், லீடர், வாரியர், டைமண்ட், ஃப்ராக் பிரின்ஸ், ஷாட்கன் என பல வகைகளாக பிரித்துக் கொள்கிறது. தனது ஃபண்டுகளின் குறிக்கோளுக்கேற்ப மேற்கண்ட கேட்டகிரிகளிலிருந்து பங்குகளை தேர்வு செய்கிறது.
பல இந்திய ஃபண்ட் நிறுவனங்கள் பங்கு சார்ந்த முதலீட்டுக்கு பின்பற்றப்படும் தங்களது செயல்முறைகளை நன்றாக விவரித்துக் கூறுகின்றன. ஆனால், மிகக் குறைவான ஃபண்ட் நிறுவனங்களே தங்களது கடன் சார்ந்த முதலீட்டின் செயல்முறைகளைப் பற்றி விபரமாக எடுத்துக் கூறுகின்றன. அவ்வாறு விவரமாக எடுத்துக் கூறும் நிறுவனங்களில் ரெலிகேர் இன்வெஸ்கோவும் ஒன்றாகும்.
நல்ல ரிஸ்க் அட்ஜஸ்டட் ரிட்டர்ன்ஸை முதலீட்டாளர் களுக்கு கொடுப்பதில் குறியாக உள்ளது இந்த நிறுவனம். அதே போல், தனது போர்ட்ஃபோலியோ வில் நல்ல, தரமான கடன் மதிப்பு (Credit Quality) உள்ள முதலீட்டுத் திட்டங்களையே வைத்துக் கொள்கிறது. மேலும், கிரெடிட் ரேட்டிங் ஏறும் என்று கணிக்கக் கூடிய பங்குகளில்/ பத்திரங்களில் முதலீடு செய்கிறது. இவற்றின் கடன்மதிப்பு (Credit rating) ஏறும் போது, ஃபண்டின் ரிட்டர்ன்ஸும் அதிகரிக்கும்
இந்த நிறுவனத்தின் கடன் ஆய்வுக் குழு (Credit team) மிகவும் பலமானது. மேலும், இந்தக் குழுவே வெளியில் இருக்கும் கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் கொடுக்கும் ரேட்டிங்கைப் பற்றிக் கவலைப்படாமல், தான் முதலீடு செய்யும் ஒவ்வொரு நிறுவனத்துக் கும் சுயமாக ரேட்டிங் கொடுத்து அதன் அடிப்படையில் தனது முதலீட்டை மேற்கொள்கிறது. ஆகவே, பல தவறுகள் தவிர்க்கப் படுகின்றன.
இந்த நிறுவனத்தின் சி.ஐ.ஓ வெற்றி சுப்ரமணியம் ஆவார். இவர் டாக்ஸ் பிளான், டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட், காண்ட்ரா ஃபண்ட், பிசினஸ் லீடர்ஸ் ஃபண்ட், மற்றும் குரோத் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளை வெற்றிகர மாக நிர்வகித்து வருகிறார். இவர் வணிகவியலில் இளங்கலை பட்டமும், ஐஐஎம் பெங்களூரில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.
இந்த நிறுவனத்தில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க ஃபண்ட் மேனேஜர் வினை பஹாரியா ஆவார். இவர் மிட்கேப் ஃபண்ட் மற்றும் மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டு களை நிர்வகித்து வருவதுடன், டாக்ஸ் பிளான் மற்றும் பிசினஸ் லீடர்ஸ் ஃபண்டை வெற்றி சுப்ரமணியத்துடன் இணைந்து நிர்வகித்து வருகிறார். பொதுவாக, இந்த நிறுவனத்தின் பங்கு சார்ந்த ஃபண்டுகள் அனைத்தும், நன்றாக செயல்பட்டு வருகின்றன. கடன் சார்ந்த முதலீடுகளின் தலைவராக சுஜய் குமார் தாஸ் உள்ளார்.
பெரிய ஃபண்ட் நிறுவனங் களோடு ஒப்பிடும்போது, இதன் அளவு சிறிதாக இருந்தாலும், நல்ல ஃபண்ட் மேனேஜ்மென்ட் டீம், உன்னதமான முதலீட்டு செயல்முறை, தொடர்ச்சியான நல்ல செயல்பாடு போன்ற சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில், முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்றாற்போல், வேண்டிய முதலீட்டினை செய்து கொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 12
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
டாடா மியூச்சுவல் ஃபண்ட்!
டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்றுதான். உப்பு முதல் தகவல் தொழில்நுட்பம் (salt to software) வரை பல்வேறு தொழில்களை நடத்தும் டாடா குரூப்பைச் சார்ந்த நிறுவனம் இது.
பல நபர்களுக்கும் நிறுவனங் களுக்கும் சட்டப்படி நடப்பதே ஒரு பெரிய சாதனையாக இருக்கும்போது, டாடா குழும நிறுவனங்கள் அதற்கும் ஒருபடி மேலே சென்று நியாயப்படி மற்றும் தர்மப்படி எப்போதும் நடப்பதை தனது நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன.
இந்தக் குழுமம், சட்டத்துக்குப் புறம்பாக எப்போதும் எந்தச் செயலையும் செய்வதில்லை. அதனால் தங்களது தொழில் பாதிப்படைந்தால்கூட பரவாயில்லை என்பதுதான் இந்த நிறுவனத்தின் கருத்து! சட்டத்துக்குப் புறம்பாக செல்லாத தினால், சில தொழிலில் நல்ல பல வாய்ப்புக்களைக்கூட இந்த நிறுவனம் இழந்திருக்கிறது!
டாடா குழும நிறுவனங்கள் அனைத்துக்கும் டாடா சன்ஸ்தான் ஹோல்டிங் கம்பெனி. இந்த ஹோல்டிங் கம்பெனிக்கு 66 சதவிகித சொந்தக்காரர்கள் பல (உண்மையான) டிரஸ்ட்டுகள் என்பது பலரும் அறிந்திராத விஷயம்! தாங்கள் சம்பாதிக்கும் செல்வம் அனைத்தும் தாங்கள் இருக்கும் சமூகத்துக்கு திருப்பித் தரப்பட வேண்டும் என்பதை எப்போதும் இந்தக் குழுமம் நம்புகிறது.
டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஸ்பான்சர்கள் டாடா சன்ஸ் மற்றும் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆவார்கள். இந்த நிறுவனம் ஏறக்குறைய ரூ.31,500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
இதன் சி.இ.ஓ நம்மூர்காரரான ராமமூர்த்தி கணேஷ் ஆவார். இவர் ஜூன் 2015-ல் டாடா மியூச்சுவல் ஃபண்டின் சி.ஐ.ஓ-வாக பொறுப்பேற்றார். இதற்கு முன், பல ஆண்டுகளாக அமெரிக்காவில் முதலீட்டுத் துறையில் பணியாற்றினார். டாடாவில் சேருவதற்குமுன் பிளாக்ராக்கில் மேனேஜிங் டைரக்டராக பணியாற்றினார்.
இதன் சி.ஐ.ஓ ரித்தேஷ் ஜெயின் ஆவார். இவர் இந்திய முதலீட்டு உலகுக்கு மிகவும் பரிச்சயமானவர். இவர் இதற்கு முன்பு கனரா ராபிகோ மற்றும் கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், ஐடிபிஐ வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி போன்றவற்றில் பணியாற்றி உள்ளார்.
இந்த நிறுவனத்தில் உள்ள பிற முக்கியமான ஃபண்ட் மேனேஜர்கள் பிரதீப் கோகலே மற்றும் அதுல் போலே ஆவார்கள். எத்திக்கல் ஃபண்ட், ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ், பியூர் ஈக்விட்டி போன்ற ஃபண்டுகளை பிரதீப் கோகலே நிர்வகித்து வருகிறார். இந்த ஃபண்ட் நிறுவனத்தின் பேலன்ஸ்டு ஃபண்ட் (டாடா பேலன்ஸ்டு ஃபண்ட்) மிகவும் பாப்புலர். பேலன்ஸ்டு ஃபண்ட், மிட்கேப் குரோத் ஃபண்ட், ஈக்விட்டி பி/இ ஃபண்ட் போன்ற ஃபண்டுகளை அதுல் போலே நிர்வகித்து வருகிறார்.
மக்களிடம் இருந்து பெறப்பட்ட பணம், திருப்பி அவர்களிடம் செல்லும்போது பன்மடங்காக திரும்பச் செல்ல வேண்டும் என ஜே.ஆர்.டி டாடா கூறியதற்கேற்ப, இந்த நிறுவனம், தனது வேல்யூ அடிப்படையிலான முதலீட்டு முறை மூலம், தொடர்ச்சியான (consistent) நல்ல வருவாயை முதலீட்டாளர்களுக்கு ஈட்டித் தருவதை தனது குறிக்கோளாக கொண்டுள்ளது.
தனது ஈக்விட்டி போர்ட் ஃபோலியோவுக்கு உன்னதமான அடிப்படை ஆராய்ச்சி (fundamental research) மூலம் பங்குகளைத் தேர்வு செய்கிறது. இரண்டு விதமான பங்குகளை இந்த நிறுவனம் முதலீட்டுக்குத் தேர்வு செய்கிறது. முதல் வகை நல்ல மீடியம் டேர்ம் வளர்ச்சியுள்ள, சந்தையில் முன்னணி வகிக்கும், தரமான நிர்வாகத்தைக் கொண்டுள்ள மற்றும் பங்குமுதல் (equity) பணத்தை மிகவும் திறமையாக பயன்படுத்தும் நிறுவனப் பங்குகளை தேர்ந்தெடுக்கிறது. மற்றொரு வகை, நல்ல தரமான நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட, கவர்ச்சிகரமான மதிப்பில் கிடைக்கும் போது, இந்த நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவுக்கு வாங்குகிறது. இந்த நிறுவனம் தனது பங்குகளை சரியான தருணத்தில் வாங்கி விற்கிறது. அதாவது, கார்ப் (GARP – Growth At Reasonable Price) முறையில் பங்குகளை தேர்வு செய்கிறது.
நாடெங்கிலும் 72 அலுவலகங் களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், வாடிக்கையாளர் சேவையை முக்கியமாக எடுத்துக் கொண்டுள்ளது. நல்ல ஃபண்ட் நிர்வாகக் குழு, நல்ல செயல்பாடு போன்ற சிறப்புகளைக் கொண்ட இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில், முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்றாற்போல், வேண்டிய முதலீட்டினை செய்து கொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 13
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட்
1997-ல் ஆரம்பிக்கப்பட்ட மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இன்று ஐந்து கண்டங்களில் 12 நாடுகளில் அஸெட் மேனேஜ்மென்ட் தொழிலை செய்து வருகிறது. எமர்ஜிங் மார்க்கெட் என்று சொல்லக்கூடிய இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் முதலீடு செய்வதில் திறமை பெற்றுள்ளது இந்த நிறுவனம். உலகெங்கிலும் கிட்டத்தட்ட 75 பில்லியன் டாலர் சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
இந்த நிறுவனம் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் தொழிலை 2007-ம் ஆண்டு ஆரம்பித்தது. வெளிநாட்டு முதலீட்டாளராக 2004-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் இருந்து வருகிறது.
இந்தியாவில் தற்போது இந்த நிறுவனம் ரூ.2,800 கோடி சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. அளவில் சிறிதாக இருந்தாலும், இதனுடைய இரண்டு ஈக்விட்டி (மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் மற்றும் மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட்) ஃபண்டுகள் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருகின்றன.
சில மாதங்களுக்குமுன் ஒரு பேலன்ஸ்டு ஃபண்ட் மற்றும் ஒரு டாக்ஸ் சேவர் ஃபண்டுகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்வரூப் ஆனந்த் மொஹாந்தி ஆவார். இவர் இதற்கு முன்பு ரெலிகேர், பிர்லா, ஃப்ராங்க்ளின், கோட்டக் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். கோபால் அகர்வால் இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ஆவார். இவர் பொறி யியலில் இளங்கலை பட்டமும், எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார். மிரே அஸெட்டில் சேர்வதற்குமுன் எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டில் பணியாற்றினார்.
நீலேஷ் சுரானா பங்கு சார்ந்த முதலீடுகளின் தலைவராவார். இவரும் பொறியியலில் இளங்கலை பட்டமும், ஃபைனான்ஸில் எம்.பி.ஏ-வும் முடித்துள்ளார். நீலேஷ் மற்றும் கோபால் ஆகிய இருவரும் பங்கு சார்ந்த திட்டங்களை நிர்வகிப்பதில் சிறந்த திறமை பெற்றுள்ளனர். எமர்ஜிங் புளூசிப் மற்றும் ஆப்பர்ச் சூனிட்டீஸ் ஃபண்ட் ஆகிய இரண்டும் தத்தமது கேட்டகிரியில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனம் தனது பங்கு சார்ந்த முதலீடுகளில், தரமான தொழில்களை நியாயமான விலையில் வாங்குகிறது. அவ்வாறு வாங்கிய பங்குகளை நீண்ட காலத்துக்கு வைத்துக் கொள்கிறது. மேலும், போர்ட்ஃபோலியோ அமைப்பதை ஒரு குழு நடவடிக்கையாகவே செய்கிறது.
ஃபண்ட் நிறுவனம் சிறிதாக இருந்தாலும், நிர்வாகம் செய்யும் ஃபண்டுகளை திறம்பட செய்து வருகிறது. நல்ல செயல்பாடு கொண்ட இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில், முதலீட் டாளர்கள் தங்களது தேவைக் கேற்றாற்போல், வேண்டிய முதலீட்டை செய்யலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 14
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்
நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வெற்றிகரமாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறது என்றால் அது சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டுதான்! நம் அனைவருக்கும் பரிச்சயமான சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம்தான் இதன் புரமோட்டர்.
டிவிஎஸ் குரூப் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டது. சென்னையைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு இந்த நிறுவனம் நடந்து வருகிறது.
அமரர் டி.வி.சுந்தரம் ஐயங்காரின் மகனான டி.எஸ்.சந்தானம் ஆரம்பித்த நிறுவனம் சுந்தரம் ஃபைனான்ஸ் ஆகும். சுந்தரம் ஃபைனான்ஸ் ஆரம்பித்து, 60 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.
இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 13,000 கோடிக்கும் மேல். சுந்தரம் ஃபைனான்ஸ் குரூப் நாடெங்கிலும் 570-க்கும் மேற்பட்ட அலுவலகங்களையும், 6,000 ஊழியர்களையும் கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் டெபாசிட்டுகள் AAA ரேட்டிங் பெற்றுள்ளது. இது டெபாசிட்டுகளுக்கு கிடைக்கும் உச்சபட்ச ரேட்டிங் ஆகும். இது முதலீடு செய்த அசலுக்கும் கிடைக்கப் போகும் வட்டிக்கும் உரிய அதீத பாதுகாப்பை குறிக்கும். நம்மில் பலர் இந்த நிறுவன டெபாசிட்டில் முதலீடு செய்த அனுபவம் இருக்கும்.
சுந்தரம் ஃபைனான்ஸ் வாகனக் கடனில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. இது தவிர, தனது துணை (subsidiary) நிறுவனங்கள் மூலமாக வேறு பல தொழில்களையும் செய்து வருகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, மியூச்சுவல் ஃபண்ட், ஹோம் ஃபைனான்ஸ், மற்றும் ஜெனரல் இன்ஷுரன்ஸ் ஆகும்.
சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் 1996-ம் ஆண்டு நியூட்டன் அஸெட் மேனேஜ்மென்ட் என்ற இங்கிலாந்து நிறுவனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 2002-ம் ஆண்டில் நியூட்டன் நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கியதால், நியூட்டனின் பங்கினை சுந்தரம் ஃபைனான்ஸ் விலைக்கு வாங்கியது.
2006-ம் ஆண்டில் பி.என்.பி பரிபாஸ் நிறுவனம், சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டில் 49.90 சதவிகித பங்கினை வாங்கி சுந்தரம் பி.என்.பி பரிபாஸ் என்று பெயர் மாற்றம் ஆனது.
2010-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டினைச் சார்ந்த பி.என்.பி பரிபாஸ் வங்கி ஃபோர்ட்டீஸ் குழுமத்தை விலைக்கு வாங்கியது. அதனால் அப்போது இந்தியாவில் நடந்துவந்த ஃபோர்ட்டீஸ் மியூச்சுவல் ஃபண்ட், பி.என்.பி குழுமத்தின் கீழ் வந்தது.
இந்தியாவில் ஒரே குழுமம் இரண்டு மியூச்சுவல் ஃபண்டு களை நிர்வகிக்க முடியாது என்பதால், பி.என்.பி சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டிலிருந்து வெளியேறியது.
ஃபோர்ட்டீஸ் மியூச்சுவல் ஃபண்ட் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பி.என்.பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட் என்று தற்போது செயல்பட்டு வருகிறது. தற்போது சுந்தரம் ஃபைனான்ஸ்தான், சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டின் 100% பங்குகளை வைத்துள்ளது.
சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் இன்றைய தினத்தில் ரூ.22,000 கோடிக்கும் மேலான சொத்தை நிர்வகித்து வருகிறது.
டிவிஎஸ் குடும்பத்தைச் சார்ந்த ஹர்ஷா விஜி இதன் மேனேஜிங் டைரக்டராக உள்ளார். சுனில் சுப்ரமணியன் இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக உள்ளார்.
எஸ்.கிருஷ்ணகுமார் பங்கு சார்ந்த முதலீடுகளின் சி.ஐ.ஓ-வாக உள்ளார். இவர் திருச்சி என்.ஐ.டி-யில் என்ஜினீயரிங்கில் இளங்கலை பட்டமும், சென்னை லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார். இவர் சுந்தரம் செலக்ட் மிட்கேப், சுந்தரம் ஸ்மைல், சுந்தரம் மைக்ரோகேப் சீரிஸ் போன்ற ஃபண்டுகளை நேரடியாக நிர்வகித்து வருகிறார்.
சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்மால்கேப் ஃபண்டுகளை நிர்வகிப்பதில் நல்ல திறமை பெற்றுள்ளது. அதுபோல் அதிகமான குளோஸ் எண்டட் ஃபண்டுகளையும் இந்த நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் சந்தையில் எழும்போது, புதிய ஃபண்ட் வெளியீடுகள் மூலம் தனக்கும், முதலீட்டாளர்களுக்கும் அந்த வாய்ப்புக்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மைக்ரோகேப் சீரிஸ் ஃபண்டுகள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
சிறந்த ரிசர்ச் டீமைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ரிசர்ச் டீம் மற்றும் ஃபண்ட் மேனேஜர்கள் குறு மற்றும் சிறிய நிறுவனங்களை முதலீட்டுக்கு தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள். இதே வல்லமையை லார்ஜ் கேப் ஃபண்டுகளுக்கும் இப்போது கொண்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் ஸ்டார் ஃபண்ட் சுந்தரம் செலக்ட் மிட்கேப் ஃபண்டாகும். ஸ்மால் கேப் உலகத்தில், இந்த நிறுவனம் நிர்வகிக்கும் ஸ்மைல் ஃபண்ட் பிரபலமானது.
சுந்தரம் ஃபைனான்ஸ் எவ்வாறு வாடிக்கையாளர் சேவைக்கு பெயர் பெற்றதோ, அதே அளவில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் சிறந்த வாடிக்கையாளர் சேவையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிறுவனம் நிர்வாகம் செய்யும் தொகையில் பெரும்பாலான முதலீடுகள் சிறு முதலீட்டாளர்களிடமிருந்து தான் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பல இடங்களில் இதன் அலுவலகம் இருப்பது, தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு மிகப் பெரிய வசதியாகும். இதனால் முதலீடு செய்ய தேடி அலைய வேண்டியதில்லை.
நல்ல பாரம்பரியம், நீண்ட நாள் வரலாறு, சிறந்த மேலாண்மை, நல்ல வாடிக்கை யாளர் சேவை, மிட்கேப் ஃபண்டு களை மேலாண்மை செய்வதில் நல்ல வல்லமை போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்ட நிறுவனமாக சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இருக்கிறது.
நீண்ட காலத் தேவைக்கும் குறுகிய காலத் தேவைக்கும் பல நல்ல ஃபண்ட் திட்டங்கள் இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் இருப்பதால், முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்றாற்போல் வேண்டிய முதலீட்டினை செய்து கொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 15
ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடு -புதிய தொடர்
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
கோட்டக் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட்!
கோட்டக் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் தற்போது ரூ.58,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஸ்பான்ஸர் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகும்.
ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி மற்றும் எஸ்.பி.ஐ போல, கோட்டக் மஹிந்திரா வங்கியும் இந்தியாவில் ஒரு பெரிய நிதிக் குழுமமாக உருவெடுத்துள்ளது. கமர்ஷியல் பேங்கிங், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங், மியூச்சுவல் ஃபண்ட், லைஃப் இன்ஷுரன்ஸ், ஸ்டாக் புரோக்கிங் என அனைத்து நிதி சார்ந்த தொழில்களையும் செய்து வருகிறது.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் சந்தை மதிப்பு ரூ.1,20,000 கோடிக்கும் மேல் உள்ளது. இந்தியா முழுவதிலும் 470 நகரங்களில் இந்தக் குழுமம் இருப்பதுடன், அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர், மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் தனது கால்களைப் பதித்துள்ளது.
1980-களில் சிறிய அளவில் பில் டிஸ்கவுன்ட்டிங் தொழிலை துவங்கி, இன்று ஒரு ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார் உதய் கோட்டக் – கோட்டக் குழுமத்தின் நிறுவனர்.
கோட்டக் மியூச்சுவல் ஃபண்டில் கிட்டத்தட்ட 10 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். இந்தியாவில் முதன்முதலாக கில்ட் (100% மத்திய அரசாங்க பாண்டுகளில் முதலீடு செய்யும் திட்டம்) திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்த நிறுவனம்தான்.
ஏறக்குறைய 79 கிளைகளுடன் இந்தியா முழுவதிலும் 76 நகரங்களில் இந்த நிறுவனம் கால்பதித்துள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் உலகில் ஒரு பொறுப்பான நிறுவனமாகத் திகழ்ந்து, முதலீட்டாளரின் வாழ்க்கை முழுவதுக்கும் சிறந்த முதலீட்டுத் திட்டங்களை கொடுப்பதை தனது எதிர்கால லட்சியமாகக் (vision) கொண்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியாக நல்ல செயல்பாட்டை (consistent performance) கொடுப்பதை தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
நிலேஷ் ஷா, கோட்டக் ஏ.எம்.சி-யின் (AMC – Asset Management Company) மேனேஜிங் டைரக்டர் ஆவார். இவருக்கு சந்தையைப் பற்றிய தெளிவான ஞானம் உள்ளது. கால் நூற்றாண்டுகளுக்கும் மேலான அனுபவம் இவருக்கு இந்தத் துறையில் உள்ளது. இதற்கு முன்பு, ஆக்ஸிஸ் கேப்பிட்டல் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்டில் தலைமைப் பதவிகளை வகுத்துள்ளார். அதற்கு முன்பு ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்டில் ஃபண்ட் மேனேஜராக இருந்துள்ளார்.
ஹர்ஷா உபாத்தியாயா ஈக்விட்டி ஃபண்டுகளின் தலைவராக உள்ளார். இவர் கோட்டக் செலக்ட் ஃபோகஸ் போன்ற திட்டங்களைச் சிறப்பாக நிர்வகித்து வருகிறார். ரிசர்ச் மற்றும் ஃபண்ட் மேனேஜ்மென்ட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பணி செய்து வருகிறார். இதற்கு முன்பு, டி.எஸ்.பி-பி.ஆர், யூ.டி.ஐ, ரிலையன்ஸ் போன்ற மியூச்சுவல் ஃபண்டுகளில் பணியாற்றி இருக்கிறார்.
லக்ஷ்மி ஐயர் கடன் சார்ந்த திட்டங்களின் தலைவராவார். இவர் ஒரு தமிழர். இவர் 2000-லிருந்து இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடன் சார்ந்த திட்டங்களை மிகவும் ஆக்டிவ்வாக நிர்வாகம் செய்வதில் வல்லமை படைத்தவர்.
இந்த நிறுவனம் ஈக்விட்டி, கலப்பினம் மற்றும் டெப்ட் கேட்டகிரியில் பல திட்டங்களை நிர்வாகம் செய்வதுடன், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் மற்றும் இ.டி.எஃப் கேட்டகிரியிலும் பெரிதாக செயல்பட்டு வருகிறது.
ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸில் அஸெட் அலோகேஷன் ஃபண்ட், கோல்ட் ஃபண்ட், வேர்ல்டு கோல்ட் ஃபண்ட் மற்றும் யூ.எஸ் ஈக்விட்டி ஃபண்ட் போன்ற திட்டங்களை நிர்வகித்து வருகிறது.
இ.டி.எஃப்-இல், கோல்டு இ.டி.எஃப், சென்செக்ஸ் இ.டி.எஃப், நிஃப்டி இ.டி.எஃப், பேங்கிங் இ.டி.எஃப், பி.எஸ்.யூ பேங்க் இ.டி.எஃப் மற்றும் என்.வி 20 இ.டி.எஃப் போன்ற திட்டங்களை நிர்வகித்து வருகிறது. இவை தவிர, பி.எம்.எஸ் திட்டங்களையும் நிர்வகித்து வருகிறது. மேலும், பி.எஃப்.ஆர்.டி.ஏ-வின் கீழ் பென்ஷன் ஃபண்ட் மேனேஜராகவும் உள்ளது.
நல்ல பாரம்பரியம் (pedigree), சிறந்த நிர்வாகக் குழு, முதலீட்டாளர்களுக்கு தேவையான பல தேர்வுகள் என பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில், முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்றாற் போல் வேண்டிய முதலீட்டினை செய்துகொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 16
ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடு -புதிய தொடர்
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
டிஹெச்எஃப்எல் பிரமெரிக்கா மியூச்சுவல் ஃபண்ட்
டி.ஹெச்.எஃப்.எல் பிரமெரிக்கா மியூச்சுவல் ஃபண்ட், இந்தியா வைச் சார்ந்த டிஹெச்எஃப்எல் (Dewan Housing Finance Corporation Ltd - DHFL) மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த புரூடென்ஷியல் ஃபைனான்ஷியல் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சி ஆகும். இந்த இரு நிறுவனங் களும் இந்த மியூச்சுவல் ஃபண்டின் ஸ்பான்ஸர்கள் ஆவர்.
திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் 1984-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும். நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் குறைவான வருமானம் உள்ளவர் களுக்கு வீடு வாங்குவதற்கு கடன் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும். நாடெங்கிலும் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்களைக் கொண்டு இயங்கி வருவதுடன், துபாய் மற்றும் லண்டனிலும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் வீட்டுக் கடன் ஏ.யு.எம். (AUM) - Assets Under Management) ரூ. 60,000 கோடிக்கு மேல். டி.ஹெச்.எஃப்.எல் குரூப், பிரமெரிக்கா குரூப்புடன் சேர்ந்து, இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை, டி.ஹெச்.எஃப்.எல் பிரமெரிக்கா லைஃப் இன்ஷூரன்ஸ் என்ற பெயரில் நடத்தி வருகிறது. அவன்ஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் என்ற கல்விக் கடன் வழங்கும் நிறுவனம் இதன் அஸோஸியேட் நிறுவனமாகும்.
பிரமெரிக்கா என்பது புரூடென்ஷியல் ஃபைனான்ஷியல் நிறுவனத்தின் டிரேட் நேம் (Trade Name) ஆகும். இந்த நிறுவனம் மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், லைஃப் இன்ஷுரன்ஸ், ரிடையர்மென்ட் சேவைகள், அனுயூட்டீஸ் (annuities) போன்ற பலவிதமான தொழில்களை செய்துவரும் ஒரு பெரிய நிறுவனமாகும்.
சென்ற ஆகஸ்ட் மாதத்தில் டி.ஹெச்.எஃப்.எல் பிரமெரிக்கா மியூச்சுவல் ஃபண்ட், டெய்ஷ் மியூச்சுவல் ஃபண்ட் (Deutsche Mutual Fund) நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. கடந்த மார்ச் 04-ஆம் தேதியன்று அனைத்துத் தரப்பிலிருந்து அப்ரூவல் கிடைத்தபிறகு, திட்டங்களின் பெயர்கள் மாற்றப் பட்டன அல்லது இணைக்கப் பட்டன. தற்போது இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிர்வகித்து வரும் சொத்துக்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.27,000 கோடி ஆகும்.
பொதுவாக, அமெரிக்கா மற்றும் கனடா வாழ் இந்தியர்களிடமிருந்து பல இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டை ஏற்ப தில்லை. அவ்வாறு முதலீட்டை ஏற்கும் வெகுசில நிறுவனங்களில் டி.ஹெச்.எஃப்.எல் பிரமெரிக்காவும் ஒன்று.
சுரேஷ் ஸோனி இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக உள்ளார். இவர் சி.ஏ மற்றும் சி.டபிள்யூ.ஏ முடித்துள்ளார். இதற்கு முன்பு டெய்ஷ் மியூச்சுவல் ஃபண்டில் எம்.டி மற்றும் சி.இ.ஓ-வாக இருந்தார். அதற்கு முன்பு பயோனியர், சுந்தரம் மற்றும் எஸ்.பி.ஐ போன்ற மியூச்சுவல் ஃபண்டு களில் பணியாற்றியுள்ளார்.
சுந்தரம் பங்கு சார்ந்த முதலீடு களின் தலைவராக உள்ளார். இவர் ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் எம்.பி.ஏ முடித்துள்ளார். குமரேஷ் ராமகிருஷ்ணன் கடன் சார்ந்த முதலீடுகளின் தலைவராக உள்ளார்.
குறுகிய கால நோக்குடன் செயல்படாமல், நீண்ட கால நோக்குடன்தான் எப்போதும் இந்த நிறுவனம் செயல்படுகிறது. அதுபோல், டீம் வொர்க்கை இந்த நிறுவனம் அதிகமாக நம்பி செயல்படுகிறது.
ஃபண்ட் மேனேஜர்கள் மற்றும் அனலிஸ்ட்டுகள் ஆகிய இரு தரப்பினரும் சேர்ந்தே முதலீட்டு முடிவுகளை எடுக் கின்றனர். ரிஸ்க் மேனேஜ்மென்ட் முறை களும் இந்த நிறுவனத்திடம் ஸ்திரமாக உள்ளது.
பங்கு மற்றும் கடன் சார்ந்த திட்டங்களின் இடையில் ஆட்டோமெட்டிக்காக, சந்தையின் ஏற்ற இறக்கத்தை வைத்து, மாற்றிக் கொள்ளும் வசதியை பவர் கோல்ஸ் (Power Goals) என்ற முறையில் முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனம் வழங்குகிறது.
வெளிநாடு மற்றும் உள்நாட்டு பார்ட்னர்கள் இருவருமே தத்தமது துறையில் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களாகும். நல்ல பார்ட்னர்கள், சிறந்த முதலீட்டு முறை, நல்ல டீம் அணுகுமுறை, இந்தியாவில் ஸ்திரமாக செயல்படுவதற்கான முயற்சி போன்ற பல சிறப்பம் சங்களைக் கொண்ட இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில், முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்றாற்போல் வேண்டிய முதலீட்டினை செய்து கொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 17
ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடு -புதிய தொடர்
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்!
இந்தியாவில் முதன்முதலாக துவக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் யூ.டி.ஐ ஆகும். அதன்பிறகு மியூச்சுவல் ஃபண்ட் நடத்த லைசென்ஸ் வழங்கப்பட்டது 1987-ம் ஆண்டில்தான். எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்தான் அந்த லைசென்ஸ் பெற்ற நிறுவனம்!
இந்த நிறுவனத்தின் ஸ்பான்ஸர் இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகும். தற்போது இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரூ.1,06,000 கோடிக்கும் மேலான சொத்துக் களை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் டாப் 6 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்குள் ஒன்றாக இந்த நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனம் எஸ்.பி.ஐ மற்றும் ஃபிரான்ஸ் நாட்டினைச் சார்ந்த அமுண்டி (Amundi) ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும். அஸெட் மேனேஜ்மென்ட் தொழிலில் அமுண்டி நிறுவனம், ஐரோப்பாவில் முதலிடத்திலும், உலகளவில் 9-வது இடத்திலும் உள்ளது. உலகெங்கிலும் பல நாடுகளில் இந்த நிறுவனம் அஸெட் மேனேஜ்மென்ட் தொழிலை நடத்தி வருகிறது. தற்போது கிட்டத்தட்ட 1000 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள சொத்தினை உலகெங்கிலும் நிர்வகித்து வருகிறது.
சிறந்த பங்குகளை தேர்வு செய்து, அவற்றை நன்றாக மேலாண்மை செய்து, நீண்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தருவதே இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தார்மீக மந்திரமாக உள்ளது. குறுகிய காலக் கண்ணோட்டத்தில் ஒருபோதும் தங்களது முடிவை எடுப்பதில்லை. முதலீடு செய்வதற்கு ஆக்டிவ்வாக 320 நிறுவனப் பங்குகளையும், 258 நிறுவன கடன் பத்திரங்களையும் இதன் ரிசர்ச் டீம் எப்போதும் ஆராய்கிறது.
மேலும், வருடத்துக்கு 1,000 முறைக்கு மேல் நிறுவனங்களை நேரடியாக விசிட் செய்கிறது. இவை தவிர, இதன் ரிசர்ச் டீம் செமினார் மற்றும் கான்ஃபரன்ஸ் அழைப்புகள் மூலமும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் புது ஐடியாக்கள் கிடைப்பதுடன், நிறுவனங்களைப் பற்றிய மாற்றுக் கருத்துக்களும் தெரிய வருகிறது.
ரிஸ்க் மேனேஜ்மென்டை தனது சொத்து மேலாண்மையில் மிகவும் திறம்பட செய்து வருகிறது. எங்கெங்கு ரிஸ்க் உள்ளது என்பதைக் கண்டுபிடிப் பதிலிருந்து, அதை மதிப்பீடு செய்வது, பிறகு அதை எவ்வாறு அகற்றுவது அல்லது குறைக்க நடவடிக்கைகள் எடுப்பது என பல செயல்முறைகளை ரிஸ்க் மேனேஜ்மென்டில் கடைபிடித்து முதலீட்டாளர்களுக்கு, தங்களது முதலீட்டில் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கிறது.
சில வருடங்கள் முன்பு, இந்த ஃபண்ட் நிறுவனத்தின் செயல் பாடு சற்று குறைவாக இருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களில் அந்தத் தடைகளை எல்லாம் அகற்றி, தற்போது இந்த நிறுவனத்தின் பல ஃபண்டுகள் திறம்படச் செயல்பட்டு வருகின்றன.
லார்ஜ்கேப் ஃபண்டுகளில் இதன் புளூசிப் ஃபண்ட், பேலன்ஸ்டு கேட்டகிரியில் இதன் பேலன்ஸ்டு ஃபண்ட், ஸ்மால் அண்ட் மிட்கேப் கேட்ட கிரியில் இதன் மிட்கேப் ஃபண்ட், மல்டிகேப் கேட்ட கிரியில் இதன் மேக்னம் மல்டிபிளையர் ஃபண்ட், கிரெடிட் ஆப்பர்ச் சூனிட்டீஸ் கேட்டகிரியில் இதன் கார்ப்பரேட் ஃபாண்ட் ஃபண்ட் போன்றவை நன்றாகச் செயல் பட்டு வருகின்றன.
தினேஷ் குமார் கரா இந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ-வாக உள்ளார். இவர் இதற்கு முன்பு எஸ்பிஐ வங்கியில் பொது மேலாளராக பணிபுரிந்துள்ளார்.
இதன் சி.ஐ.ஓ-வாக நவ்நீத் முனோத் உள்ளார். இதற்கு முன்பு மார்கன் ஸ்டான்லி மற்றும் பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பணியாற்றி யுள்ளார். இவர் சிறந்த ஃபண்ட் மேனேஜருக்கான பரிசை பல முறை இக்ரா (ICRA), கிரிஸில் (Crisil-CNBC TV-18), ராய்ட்டர்ஸ் (Reuters), வேல்யூ ரிசர்ச் (Value Research) போன்ற நிறுவனங் களிடமிருந்து பெற்றுள்ளார்.
ஆர்.சீனிவாசன் பங்கு சார்ந்த முதலீடுகளின் தலைவராக உள்ளார். இவர் வணிகவியல் மற்றும் நிதி நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று உள்ளார். இதற்கு முன்பு மோதி லால் ஆஸ்வால், ஓபன்ஹெய்மர், பிரின்ஸிபல் பி.என்.பி (Principal PNB) போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இவர் மேக்னம் ஈக்விட்டி, எமர்ஜிங் பிசினஸ், மேக்னம் குளோபல், பேலன்ஸ்டு, காண்ட்ரா, ஸ்மால் அண்ட் மிட்கேப் போன்ற ஃபண்டுகளை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.
இ.பி.எஃப்.ஓ (EPFO – Employees Provident Fund Organzation), தனது பங்கு சார்ந்த முதலீடுகளை எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாகம் செய்யும் இடிஎஃப்-கள் மூலம் முதலீடு செய்து வருகிறது.
நாடெங்கிலும் 40 லட்சத்துக் கும் மேலான முதலீட்டாளர் கணக்குகள் இந்த நிறுவனத்திடம் உள்ளது. 163 கிளைகளின் மூலம் முதலீட்டாளர்களுக்கு தனது சேவையை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்திடம் 37,000 ஐ.எஃப்.ஏ-க்கள் (Independent Financial Advisors) கைகோர்த்து தங்களது வாடிக்கையாளர் களுக்கு சேவையை வழங்கி வருகின்றனர். இவை தவிர, வங்கி மூலமும் தனது திட்டங்களை விநியோகித்து வருகிறது.
இவ்வாறு பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த நிறுவனத்தில், ரீடெய்ல் மற்றும் கார்ப்பரேட் முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்ப முதலீடு செய்து கொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 18
ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடு -புதிய தொடர்
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட்!
மோதிலால் ஆஸ்வால் செக்யூரிட்டீஸ் நம் அனைவருக்கும் தெரிந்த ஷேர் புரோக்கரேஜ் நிறுவனமாகும். இதனுடைய நிறுவனர்கள் நமது பங்குச் சந்தையில் பிரசித்தமான மோதிலால் ஆஸ்வால் மற்றும் ராம்தியோ அகர்வால் ஆவார்கள்.
இந்தக் குழுமம் மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் என்ற பெயரில் நமது பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்டின் ஸ்பான்ஸர் மோதிலால் ஆஸ்வால் செக்யூரிட்டீஸ் ஆகும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் ஒரு இளமையான நிறுவனம்.
ஏனென்றால் இது ஆரம்பிக்கப் பட்டது டிசம்பர் 2009-ம் ஆண்டுதான். ஆரம்பித்த முதல் சில ஆண்டுகளில் இந்த நிறுவனம் இ.டி.எஃப் திட்டங்களில் தனது இலக்கை வைத்தது. இந்தியா ஒரு இ.டி.எஃப் மார்க்கெட் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள இந்த நிறுவனத்துக்கு சில ஆண்டுகள் ஆகிவிட்டது.
கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக ஆக்டிவ் ஃபண்டுகளில் தனது ஃபோகஸைச் செலுத்தி, அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
வளர்ந்த நாடுகளில் பங்குச் சந்தை குறியீட்டைவிட அதிக வருமானம் சம்பாதிப்பது கடினம். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் பங்குச் சந்தை குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட பல ஃபண்டுகளைவிட அதிக லாபம் சம்பாதித்துத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுமத்தின் பலமே இதன் ஆராய்ச்சிப் பிரிவுதான். ஃபண்ட் நிறுவனங்கள் மோதிலால் செக்யூரிட்டீஸ் போன்ற நிறுவனங்களிடமிருந்தும் தங்களுக்கு தேவையான ஆராய்ச்சி ரிப்போர்ட்டுகளை தேவைப்படும்போது விலைக்கு வாங்குகின்றன.
இந்தக் குழுமம் 1996-லிருந்து வெல்த் கிரியேஷன் அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கை நமது பங்குச் சந்தையில் மிகவும் பிரபலம்.
மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தற்போது ரூ.5,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்தத் தொகையில் மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோக்கஸ்டு மல்டிகேப் 35 என்ற ஃபண்ட் மட்டுமே ரூ.3,294 கோடி மதிப்பு உள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
இந்த ஃபண்ட் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கப்பட்டது. ஏறக்குறைய இந்த இரண்டாண்டு காலத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு உள்ளது. அதுபோல் இதனுடைய மிட்கேப் 30 ஃபண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்த ஃபண்ட் நிறுவனம், தனக்கு பங்கு சார்ந்த ஆராய்ச்சி யில்தான் பலம் அதிகம் என்பதால், பங்கு சார்ந்த திட்டங் களிலேயே தனது கவனத்தைச் செலுத்தி வருகிறது.
கடன் சார்ந்த திட்டங்கள் இதன் கீழ் மிகவும் குறைவுதான். எம் 100, எம் 50 மற்றும் நாஸ்டாக் 100 போன்ற இ.டி.எஃப் திட்டங்களையும் இந்த நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
இதன் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ ஆஷிஷ் சோமையா ஆவார். இவர் இதற்கு முன்பு ஐசிஐசிஐ புரூ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். தஹீர் பாதுஷா பங்கு சார்ந்த முதலீடு களின் தலைவராக உள்ளார்.
இவர் ஃபோக்கஸ்டு 25, ஃபோக்கஸ்டு மிட்கேப் 30, எம் 100, எம் 50 போன்ற ஃபண்டுகளை நிர்வகித்து வருகிறார். இதற்கு முன்பு இவர் ஐசிஐசிஐ பி.எம்.எஸ் மற்றும் கோட்டக் மஹிந்த்ரா இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸர்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். இந்த நிறுவனத்தின் வெற்றிகரமான ஃபோக்கஸ்டு மல்ட்டிகேப் 35 திட்டத்தை நிர்வகித்து வருபவர் கௌதம் சின்ஹா ராய் ஆவார்.
நல்ல பங்குகளை சரியான விலையில் வாங்கி, அவற்றை எப்போதும் வைத்துக்கொள்வது (Buy Right, Sit Tight) என்பதுதான் இந்த ஃபண்ட் நிறுவனத்தின் தாரக மந்திரமாக உள்ளது.
பங்குகளை வாங்கும்போது, க்யூ.ஜி.எல்.பி (QGLP – Quality, Growth, Longevity, Price) என்ற கொள்கையை பின்பற்றுகிறது. க்யூ என்பது அந்த பிசினஸ் மற்றும் மேனேஜ்மென்டின் குவாலிட்டியையும், ஜி என்பது அந்த நிறுவனங்களின் லாபத்தின் மற்றும் ஈக்விட்டி மீதான வருமானத்தின் குரோத்தையும், எல் என்பது அந்த பிசினஸின் லாங்குவிட்டி, அதாவது போட்டித் திறனையும் பி என்பது பிரைஸ் – அதாவது, பங்குகளை சரியான அல்லது அதனது உள்ளார்ந்த மதிப்பைவிட குறைவான விலையில் வாங்குவதைக் குறிக்கும். இதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனம் பங்குகளை தனது போர்ட்ஃபோலியோவுக்கு தேர்வு செய்கிறது.
இந்த ஃபண்ட் நிறுவனம் மிகவும் கச்சிதமான போர்ட் ஃபோலியோ அமைப்பை விரும்புகிறது. எந்த ஃபண்டிலும் 20 – 25 பங்குகளுக்கு மேல் வைத்துக்கொள்வதில்லை.
இந்த ஏ.எம்.சி, பி.எம்.எஸ் (PMS) திட்டங்களையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சிறிய ஃபண்ட் நிறுவனமாக இருந்தாலும், இதன் பின்புலம் ஸ்ட்ராங்காக உள்ளது. இது போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த நிறுவனத்தில், முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்ப முதலீடு செய்து கொள்ளலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 19
ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடு -புதிய தொடர்
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட்
ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் தோன்றி ஆறு வருடங்கள் ஆகிறது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதன் ஸ்பான்ஸர் நாம் அனைவரும் அறிந்த ஆக்ஸிஸ் வங்கியாகும்.
ஆக்ஸிஸ் வங்கி முன்பு யூ.டி.ஐ வங்கி என அழைக்கப்பட்டது. ஆக்ஸிஸ் வங்கி, இந்தியாவில் தனியார் துறையில் உள்ள டாப் 5 வங்கிகளுள் ஒன்றாக உள்ளது. இந்தியா முழுவதும் 2,400-க்கும் மேற்பட்ட கிளைகள் இந்த வங்கிக்கு உள்ளன. இவை தவிர சிங்கப்பூர், கொழும்பு, ஷாங்காய், துபாய், அபுதாபி போன்ற இடங்களிலும் இதற்கு அலுவலகங்கள் உள்ளன.
இந்த வங்கி ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்டில் 74.99% பங்குகளை வைத்துள்ளது. வங்கியின் கிளைகள் இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு பெரும்பலமாக உள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் ரூ.33,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்தை நிர்வகிக்க வங்கிக் கிளைகளும் ஒரு காரணம்.
இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் வெளிநாட்டு பார்ட்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஷ்ரோடர்ஸ் (Schroders) நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 25 சதவிகித பங்குகளை வைத்துள்ளது. இந்த நிறுவனம் உலகளவில் ஒரு பெரிய அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஆகும். உலகெங்கிலும் 450 பில்லியன் டாலர்களுக்கு மேற்பட்ட சொத்தை 27 நாடுகளில் நிர்வகித்து வருகிறது.
ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட், முதலீட்டாளர்களை மையமாக வைத்துதான் ஒவ்வொரு முடிவை யும் எடுக்கிறது. முதலீட்டாளர் களுக்காக செல்வத்தை உருவாக்குவதை தனது முக்கிய கடமையாக எடுத்துக் கொண்டுள்ளது. முதலீட்டாளர் களுடன் நீண்ட நாள் உறவை விரும்பி, அதற்கேற்றாற்போல் தனது திட்டங்களை செயலாக்குகிறது.
ஆக்ஸிஸ் வங்கியின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ-வான ஷிகா ஷர்மா, இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேர்பெர்ஸனாக உள்ளார்.
இந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ சந்திரேஷ் குமார் நிகம் ஆவார். இவர் ஐ.ஐ.டி டெல்லியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் இளங்கலைப் பட்டமும், ஐ.ஐ.எம் கொல்கத்தாவில் எம்.பி.ஏ-வும் முடித்துள்ளார். ஈக்விட்டி ஃபண்டுகளை மேனேஜ் செய்வதில் 22 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உண்டு.
இதற்கு முன்பு டி.சி.ஜி அட்வைஸரி (TCG Advisory), ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட், ஸுரிச் (Zurich) மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.
பங்கஜ் முரார்கா இந்த நிறுவனத்தில் ஈக்விட்டி பிரிவுகளின் தலைவராக உள்ளார். இவர் ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் ஆவார். இதற்குமுன் டி.எஸ்.பி மற்றும் யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ஆக்ஸிஸ் ஈக்விட்டி ஃபண்ட், ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட், ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட், ஆக்ஸிஸ் சில்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளை நிர்வகித்து வருகிறார்.
இந்த நிறுவனத்தில் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் திட்டம் டாக்ஸ் சேவர்(இ.எல்.எஸ்.எஸ்) ஃபண்டான ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ஆகும்.
இருக்கும் டாக்ஸ் சேவர் ஃபண்டுகளிலேயே இன்றைய தினத்தில் மிகவும் அதிகமான சொத்துக்களை நிர்வகித்து வருவது இந்தத் திட்டம்தான். தற்போது ரூ.7,800 கோடிக்கும் அதிகமான சொத்தை நிர்வகித்து வருகிறது.
கடந்த காலங்களில் இதனது செயல்பாடு, முன்னணியில் இருந்துள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர் ஜினேஷ் கோபானி ஆவார்.
நல்ல ஸ்பான்ஸர் மற்றும் பங்குதாரர்கள், குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி, குறிப்பிட்ட திட்டங்களின் நல்ல செயல்பாடு போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த நிறுவனத்தில், முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்ப முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் ஹவுஸ் - 20
கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட்
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
கனரா ராபிகோ (Canara Robeco) மியூச்சுவல் ஃபண்ட் நமது பொதுத்துறை வங்கியான கனரா வங்கியும், நெதர்லாந்தைச் சார்ந்த ராபிகோ நிறுவனமும் சேர்ந்து நடத்தி வரும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாகும்.
இன்றைய நிலையில் ரூ.7,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது இந்த நிறுவனம். இந்தியாவில் இரண்டாவதாக ஆரம்பிக்கப் பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆகும்.
கனரா வங்கி 1906-ல் ஆரம்பிக்கப்பட்டது. நாடெங்கிலும் 3000-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இவை தவிர, ஹாங்காங், சீனா மற்றும் யூ.கே-விலும் தனது கால்களைப் பதித்துள்ளது. இன்ஷூரன்ஸ், செக்யூரிட்டீஸ், ஹவுஸிங் ஃபைனான்ஸ், வெஞ்சர் கேப்பிட்டல் போன்ற வேறு பல தொழில்களிலும் ஈடுபட்டுள்ளது.
ராபிகோ 1929-ல் ரோட்டர்டேம், நெதர்லாந்தில் துவங்கப்பட்ட நிறுவனம் ஆகும். உலகெங்கிலும் 54 நாடுகளில் தனது கால்களை பதித்துள்ளது. 300 பில்லியன் டாலர்களுக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
2013-ம் ஆண்டு ஜப்பானைச் சார்ந்த ஒரிக்ஸ் (ORIX) நிறுவனம் ராபிகோவை விலைக்கு வாங்கியது. நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களை, உயர் தரமான சேவையுடன் உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக ரஜ்னீஷ் நருலா உள்ளார். இவர் இதற்கு முன்பு ஏ.என்.இஸட் கிரிண்ட்லேஸ், அலயன்ஸ் கேப்பிட்டல் அஸெட் மேனேஜ்மென்ட், டிபிஎஸ் சோழமண்டலம் அஸெட் மேனேஜ்மென்ட் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். கனரா ராபிகோவில் 2007-ல் இருந்து பணிபுரிந்து வருகிறார்.
ரவி கோபாலகிருஷ்ணன் பங்கு சார்ந்த முதலீட்டு பிரிவு களின் தலைவராக உள்ளார். இவர் இதற்கு முன்பு பிரமெரிக்கா (Pramerica), பிரின்ஸிபல் பிஎன்பி (Principal PNB), ஹட்ஸன் பேஃர்பேஃக்ஸ் (Hudson Fairfax), சன் எஃப் அண்ட் சி அஸெட் மேனேஜ்மென்ட் (Sun F&C Asset Management) போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்து உள்ளார். கனரா ராபிகோ எமர்ஜிங் ஈக்விட்டீஸ், கனரா ராபிகோ ஈக்விட்டி டைவர்சிஃபைடு, கனரா ராபிகோ லார்ஜ்கேப் போன்ற ஃபண்டுகளை நிர்வகித்து வருகிறார்.
அவ்னிஷ் ஜெயின் கடன் சார்ந்த முதலீட்டு பிரிவின் தலைவராக உள்ளார்.
ராபிகோ நிறுவனம், இந்தியா போன்ற எழுந்து வரும் சந்தை களுக்காக ராபிகோ எமர்ஜிங் மார்க்கெட்ஸ் ஸ்டாக் செலக்ஷன் மாடலை (Emerging Markets Stock Selection Model) 2000-த்தில் அறிமுகப்படுத்தியது. இதில் ஒரு தனிப் பிரிவாக இந்தியாவுக்காக குவாண்ட் மாடலை (Quant Model) உருவாக்கியது. இந்த மாடலில் வேல்யூவேஷன் (valuation), மொமன்டம் (momentum), மற்றும் ஏர்னிங்ஸ் ரிவிஷன் (earnings revision) ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
வேல்யூவேஷனில் பி/பிவி (P/BV), இ.பி.எஸ் (EPS), டேர்னோவர் போன்ற விகிதங்கள் மலிவாக உள்ள பங்குகளை அலசுகிறது. அதுபோல், நல்ல மொமன்டம் – அதாவது, கடந்த காலங்களில் நல்ல வருமானத்தைத் தந்துள்ள பங்குகளாக தேர்வு செய்கிறது. மேலும், இ.பி.எஸ் ஏறிக்கொண்டே வரும் நிறுவனப் பங்குகளாக தனது போர்ட்ஃபோலியோவுக்கு அலசுகிறது. இந்த மாடல்தான் இந்த நிறுவனத்தின் தலையாய தத்துவமாக உள்ளது.
இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வரும் திட்டம் கனரா ராபிகோ எமர்ஜிங் ஈக்விட்டீஸ் திட்டம் ஆகும். இது ஸ்மால் அண்ட் மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டமாகும். இதன் பேலன்ஸ்டு மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் திட்டங்களும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
நல்ல ஸ்பான்சர்கள், குறிப்பிட்ட திட்டங்களின் நல்ல செயல்பாடு, சிறந்த வாடிக்கை யாளர் சேவை போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த நிறுவனத்தில், முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்ப முதலீடு செய்து கொள்ளலாம்.
ந.விகடன் கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட்

Similar topics
» ஃபண்ட் பரிந்துரை :
» ஃபண்ட் பரிந்துரை : ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் முதலீடு செய்க!
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» மியூச்சுவல் ஃபண்ட் : வரலாறு
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum