Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பங்குச் சந்தையில் கலக்கும் பள்ளி மாணவி!
Page 1 of 1
பங்குச் சந்தையில் கலக்கும் பள்ளி மாணவி!
'முதல்கட்டமாக 30 ஆயிரம் ரூபாய்க்கு பங்குகள் வாங்கினேன். இதுவரை மொத்தமாக 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறேன்' என்கிறார் கலாவதி.
முழுதாக 15 வயதுகூட முடியவில்லை. அதற்குள் பங்குச் சந்தை முதலீட்டில் கலக்குகிறார் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கலாவதி. ஒன்பதாம் வகுப்பு படிக்கு மாணவியான கலாவதி, கடந்த ஓராண்டில் ரூ.3 லட்சம் முதலீடு செய்து ரூ.30 ஆயிரம் லாபம் பார்த்திருக்கிறார்.
''என் அப்பா பங்குச் சந்தை குறித்து அடிக்கடி என்னுடன் பேசுவார். நானும் கேட்பேன். ஒருநாள், நாமே ஏன் பங்குச் சந்தையில் முதலீடு செய்யக்கூடாது என்று அப்பாவிடம் கேட்டேன். ஏற்கெனவே முதலீடு செய்து நஷ்டம் அடைந்துவிட்டேன். வேண்டுமானால் நீ செய் என்றார். நானும் தைரியமாக அதில் இறங்கினேன்.
என்னால் வெற்றிகரமாக ஒரு பொருளை வாங்கி விற்க முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 1,000 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி, அதை 1,700 ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்தேன். அதுமாதிரி பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாமே என்று என் அப்பாவிடம் கேட்டேன். என் ஆர்வத்துக்கு ஓகே சொன்னதோடு, பங்குச் சந்தை குறித்த அடிப்படை விஷயங்களைப் படித்து தெரிந்துகொள் என சொல்லி, அதற்கான புத்தகங்களை வாங்கித் தந்தார். அவர் தந்த புத்தகங்களை எல்லாம் இரண்டே மாதத்தில் படித்து முடித்துவிட்டு, முதலீட்டில் இறங்கினேன்'' என ஒரு தேர்ந்த முதலீட்டாளர்போல் பேசினார் அவர்.
முதல்கட்டமாக 30 ஆயிரம் ரூபாய்க்கு பங்குகள் வாங்கினேன். இதுவரை மொத்தமாக 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறேன். இதில் மெக்லாய்டு ரஸ்ஸல் பங்கை வாங்கி, இரண்டு வாரங்கள் கழித்து விற்பனை செய்ததில் மட்டும் எனக்கு 7,000 ரூபாய் லாபம் கிடைத்தது. ஆனால், நான் வாங்கிய எல்லா பங்குகளும் எனக்கு லாபம் தந்துவிடவில்லை. சில பங்குகள் எனக்கு நஷ்டத்தையும் தந்தது'' என உண்மையை மறைக்காமல் சொன்னார்.
''நான் எப்போதுமே பங்குச் சந்தை சென்டிமென்டுக்கு எதிராகச் செயல்படுவேன். பெரிய புரோக்கர் நிறுவனங்கள் சந்தை இறங்கும் அல்லது ஏறும் என்றால் அதற்கு எதிர்மறையான முடிவையே நான் எடுப்பேன்.
100 ரூபாய்க்கு கீழே விற்பனையாகும் பங்குகளை வாங்கமாட்டேன். 500 ரூபாய்க்கு மேலே விலைபோகும் பங்குகளையே வாங்குவேன். ஒரு பங்கின் செயல்பாட்டு லாப வரம்பு 20-30 சதவிகிதத்துக்குள் இருக்கவேண்டும். அந்தப் பங்கில் புரமோட்டர் 15 சதவிகிதமும், வெளிநாட்டு முதலீடு 20 - 25% வரை இருக்கவேண்டும். அதிக மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கமாட்டேன்'' என்று சொன்ன கலாவதியிடம், படித்துக்கொண்டே பங்குச் சந்தையில் எப்படி கவனம் செலுத்துகிறீர்கள் என்று கேட்டோம்.
''பள்ளிக்கூடம் முடித்து வந்தவுடன், இரண்டு மணிநேரம் அன்றைக்கு பங்குச் சந்தையில் நடந்த முக்கிய விஷயங்களை நெட்டில் பார்த்து அப்டேட் செய்துகொள்வேன். நான் வாங்கிய பங்கின் அன்றைய நிலை என்ன என்பது பற்றியும், அடுத்தநாள் வாங்கவேண்டிய/ விற்கவேண்டிய பங்குகள் குறித்த தகவல்களையும் என் அப்பாவிடம் சொல்லிவிடுவேன். நான் சொன்னதை என் அப்பாவும் அப்படியே செய்துவிடுவார். என் அப்பா என் மீது நம்பிக்கை வைத்து, என்னை உற்சாகப்படுத்துவதால்தான் என்னால் தைரியமாக பல விஷயங்களைச் செய்ய முடிகிறது'' என்று அவர் சொல்ல, எதிர்கால வாரன் பஃபெட்டுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, புறப்பட்டோம்.

-முகநூல்(ந.விகடன்)
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
» பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்!
» தரச்சான்று அறிக்கையால் பங்குச் சந்தையில் எழுச்சி
» வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு: பங்குச் சந்தையில் எழுச்சி
» பங்குச் சந்தையில் நஷ்டம் தவிர்க்க பத்து வழிகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum