வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


​​மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: குரோத் ஆப்ஷன் ஏன் நல்லது?

Go down

​​மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: குரோத் ஆப்ஷன் ஏன் நல்லது? Empty ​​மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: குரோத் ஆப்ஷன் ஏன் நல்லது?

Post by தருண் Wed Jun 15, 2016 2:35 pm

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எந்த ஃபண்ட்-ஐ தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அவ்வாறு தேர்ந்தெடுத்தபின், அதில் எந்த ஆப்ஷனை தேர்வு செய்வது என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. உதாரணமாக, எந்த கம்பெனி கார் என்று முடிவெடுத்தவுடன் எந்த கலர் என்று குழம்புவதைப் போல!

​​மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: குரோத் ஆப்ஷன் ஏன் நல்லது? P16a

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வருமானத்தைப் பொறுத்தவரையில், டிவிடெண்ட் மற்றும் குரோத் என்று இரண்டு சாய்ஸ் உண்டு.

1. டிவிடெண்ட் என்பது பொதுவாக முதலீட்டாளர்களை மீண்டும் முதலீடு செய்ய வைப்பதற்கு கையாளும் ஒரு வகையான உத்தி.

2. டிவிடெண்ட் எப்போது, எவ்வளவு சதவிகிதம் கொடுப்பது என்பது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை பொறுத்தது. மேலும், டிவிடெண்ட் என்பது நம்முடைய யூனிட்டை விற்று நமக்கு பணமாக கொடுப்பது.

3. பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் டிவிடெண்டை ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வழங்கி வருகின்றன. அதே சமயம், சந்தையின் போக்கு ஒரே மாதிரி இருக்காது. இதனால் முதலீட்டாளருக்கு பலன் குறைவு.

4. நாம் எதிர்பார்க்காத சமயத்தில் நமக்கு பணம் வந்தால் தேவையற்ற செலவு வரும். அப்போது எது கண்ணில் படுகிறதோ, அதற்கு செலவு செய்துவிடுவோம்.

5. பலரும் டிவிடெண்ட் என்பது ஏதோ லாட்டரியில் பரிசு விழுந்தது அல்லது ஓசியில் கிடைத்த ஒன்று என்ற எண்ணத்தில் மதிப்பு தெரியாமல் செலவிடுகிறார்கள். இதை சரியாகப் புரிந்துகொள்வதற்கு இரண்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை உதாரணமாக எடுத்துச் சொல்கிறேன். இந்த இரண்டு ஃபண்டுகளை பரிந்துரை செய்வதற்காக சொல்லவில்லை. அதன் செயல்பாட்டை எடுத்துச் சொல்லவே சொல்கிறேன். 1995-ல் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் குரோத் ஃபண்டில் ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அவருக்கு இந்த 20 வருடத்தில் அந்த ஃபண்ட் மூலம் ரூ.10,90,000 டிவிடெண்ட் வழங்கப்பட்டிருக்கும். மேலும், அந்த ஃபண்டின் இப்போதைய மதிப்பு ரூ.5,52,883. இந்த ரூ.10,90,000-ஆனது கடந்த 20 வருடத்தில் 20-க்கும் மேற்பட்ட முறை டிவிடெண்ட்-ஆக தரப்பட்டது.

​​மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: குரோத் ஆப்ஷன் ஏன் நல்லது? P17a

இந்த டிவிடெண்ட் பணம் நம் வங்கிக் கணக்கில் வந்து சேர்வதால், அதை நாம் உடனடி யாக செலவு செய்துவிடுவோம். அதனை நம்மில் பலர் சரியாக பயன்படுத்திக் கொள்ள மாட்டோம்.

அதே சமயம், குரோத் ஆப்ஷனை தேர்வு செய்திருந்தால், அதனுடைய மதிப்பு ரூ.74,85,033. ஒருவர் மாதாமாதம் 75,000 ரூபாயை பென்ஷன் போல இதிலிருந்து எடுத்துக் கொள்வதுடன் இதன் மதிப்பு இன்னும் 5 வருடங்களில் ரூ.1 கோடியாக உயர்வதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். கடந்த 2002-ல் சுந்தரம் செலக்ட் மிட் கேப் ஃபண்டில் ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அவருக்கு ரூ.3,90,000 டிவிடெண்ட் கிடைத்திருக்கும்.மேலும், அந்த ஃபண்டின் இன்றைய மதிப்பு ரூ.3,12,820. அதே சமயம் அவர் குரோத் ஆப்ஷனை தேர்வு செய்திருந்தால், ரூ.34,15,476 ரூபாயாக வளர்ச்சி கண்டிருக்கும். மாதாமாதம் இவர் 35,000 ரூபாயை பென்ஷன் போல இதிலிருந்து எடுத்துக் கொள்வதுடன் இதன் மதிப்பு 5 வருடத்தில் ரூ.50 லட்சம் ஆக வாய்ப்புள்ளது.

​​மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: குரோத் ஆப்ஷன் ஏன் நல்லது? P18a

டிவிடெண்ட்டுக்கு வரி கிடையாது என்பதால், அந்த ஆப்ஷனை தேர்வு செய்தேன் என்கிறார்கள் கொஞ்சநஞ்சம் தெரிந்த சில முதலீட்டாளர்கள். குரோத் ஆப்ஷனில் ஒரு வருடத்துக்குப் பின்பு எந்தவொரு வரியையும் செலுத்தத் தேவையில்லை. மேலும், நமக்குத் தேவைப்படும்போது மட்டும் யூனிட்களை விற்று பணம் எடுத்துக் கொண்டால் தேவை அற்ற செலவுகள் குறையும். ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாமாதம் பணம் தேவைப்படும் என்பதால், ஒரு வருடத்துக்கான தொகையை வைத்துக்கொண்டு முதலீடு செய்யும்போது இரண்டாவது வருடத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.

எந்த ஒரு முதலீடும் நன்றாக வளர்ச்சி காண வேண்டுமானால் கால அவகாசம் முக்கியம். தினசரி பங்குச் சந்தையை பார்த்துக் கொண்டிருத்தால் டென்ஷன் மற்றும் பயம் ஏற்பட்டு பணத்தை எடுத்துவிடவே வாய்ப்புகள் அதிகம். மியூச்சுவல் ஃபண்ட் மூலமான வருமானம் என்பது பங்குச் சந்தைக் குறியீட்டின் வளர்ச்சியைத் தாண்டியது. கடந்த 23 மாதத்தில் பிஎஸ்இ (மும்பை பங்குச் சந்தை) சென்செக்ஸ் குறியீடு ஏறக்குறைய அதே இடத்தில்தான் உள்ளது. பெரிய வருமானம் எதுவும் தரவில்லை. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டங்கள் கொடுத்த வருமானம் அதைவிட அதிகமாக உள்ளது என்பது பக்கம் 17-ல் உள்ள அட்டவணையைப் பார்த்தாலே தெளிவாகப் புரியும்!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஏன் குரோத் ஆப்ஷன்?

1. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பணத்தை பல மடங்கு பெருக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

2. பல முதலீட்டுத் திட்டங்களில் வருமானத்துக்கு வரி உண்டு. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் ஒரு வருடத்துக்குப் பின்பு எந்த வரியும் கிடையாது.

3. திட்டங்கள் மிகவும் வெளிப்படையாக இருப்பதுடன் செபி எனும் அரசாங்க கட்டமைப்பின் கீழ் இயங்குவதால் யாரும் பணத்தை எடுத்துச் சென்று விட முடியாது.

4. ஒருவருக்கு வருடம் 16.2% கூட்டு வளர்ச்சி 20 வருடம் கிடைப்பதாக எடுத்துக்கொண்டால் ரூ.1 லட்சம் என்பது ரூ.20 லட்சமாக மாறிவிடும். இந்த பவர் ஆஃப் காம்பவுண்டிங் என்பது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்டகாலத்தில் சாத்தியம். ​வருடா வருடம் தேவை ஏற்படும்போது வட்டியை எடுத்துக்கொண்டால்கூட அவர்களுக்கு 16,200 * 20 = 3.24 லட்சம் கிடைத்திருக்கும். அதனுடன் அசல் ரூ.1 லட்சம் அப்படியே இருக்கும்.

-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum