Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
படிப்பு, திருமணம், ஓய்வுக்காலம்... அனைத்து தேவைகளுக்கும் ஆயுள் காப்பீடு மட்டுமே போதுமா?
Page 1 of 1

அண்மையில் என்னைத் தேடி முதலீட்டாளர் ஒருவர் வந்திருந்தார். அவர் சுமார் 15 இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்திருந்தார். அனைத்தும் முதிர்வுத் தொகை கொண்ட எண்டோவ்மென்ட் ஆயுள் காப்பீடு பாலிசிகள். இன்ஷூரன்ஸ் மற்றும் முதலீடு இரண்டுக்கும் சேர்த்து ஆயுள் காப்பீட்டு பாலிசியை அவரின் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் பரிந்துரை செய்து இருப்பதாகச் சொன்னார். இதேபோல், அவரது நண்பர்கள் பலருக்கும் அந்த ஏஜென்ட் பத்துக்கும் மேற்பட்ட பாலிசிகளை விற்றிருப்பதாகச் சொன்னார்.
அவரது பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம், அவரது ஓய்வுக்காலம் எனப் பிரித்து, பணம் தேவைப்படும் ஆண்டில் பாலிசி முதிர்ச்சி அடைந்து பணம் கிடைக்கும் விதமாகப் பாலிசியை எடுத்துத் தந்திருக்கிறார். அவர் கட்டும் பிரீமியம் மிக அதிகமாக இருந்தது. ஆனால், அனைத்து பாலிசிகள் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த கவரேஜ் பெரிதாக இல்லை.
அவரிடம் நான், ‘உங்கள் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற எண்டோவ் மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மட்டுமே போதாது. வாழ்க்கையின் அனைத்து நிதி தேவைகளுக்கும் எண்டோவ்மென்ட் பாலிசி மட்டுமே தீர்வாக இருக்காது. அப்படி பாலிசிகள் எடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு அதிக நிதி இழப்பு ஏற்படும்’ என்பதை விளக்கிச் சொன்னேன். மேலும், நம் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் நிதித் திட்டமிடல் என்றால் என்ன, அதை எப்படி செய்வது என்பது பற்றியும் விளக்கினேன்.
நிதித் திட்டமிடுதலின் முக்கிய நோக்கம், உங்களின் எதிர்காலத் தேவைகளை அறிந்து அதற்குண்டான பாதையை வகுத்து, அதனை உறுதியாகவும், ஒழுக்கமாகவும் பின்பற்றி வெற்றி காண்பதே ஆகும்.
ஒரு நிதித் திட்டமிடுபவரின் செயல்முறையை மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒன்று, ஒருவரது வருமானம் மற்றும் செலவுகளைப் பற்றி அறிந்து கொள்வதாகும். இரண்டாவது, ஒருவரது எதிர்கால நிதித் தேவைகளையும், அதற்குண்டான கால அவகாசம் மற்றும் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் புரிந்துகொள்வது. மூன்றாவதாக, ஒருவரது கால அளவு, எதிர்காலத் தேவை மற்றும் பணவீக்கத்தை அறிந்து அந்த இலக்கை அடைய எவ்வளவு தொகையை, எந்த வகையான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்தால், குறிப்பிட்ட காலத்தில் இலக்கை அடைய முடியும் என்று கூறுவது.
ஒருவரது எதிர்காலத் தேவை அனைத்தையும் ஆயுள் காப்பீடு பாலிசிகள் எடுப்பதன் மூலம் மட்டுமே பூர்த்தி செய்வது சாத்தியமா என்றால் இல்லை என்றே சொல்லலாம். ஆயுள் காப்பீடு என்பது நிதித் திட்டமிடுதலில் ஒரு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒரு குடும்பத்தில் பணம் ஈட்டுபவரின் வருமானத்தை வைத்தே ஒரு குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளான குழந்தையின் கல்வி, திருமணம் மற்றும் ஓய்வுக்காலத் தேவைகளுக்குத் திட்டமிடுவோம். அவர் திடீரென காலமாகி விட்டால், அந்த இழப்பை யாராலும் ஈடு கட்ட முடியாது. ஆனால், அந்தக் குடும்பத்தின் நிதிச் சீர்கேட்டை சீர்படுத்த ஆயுள் காப்பீடினால் மட்டுமே முடியும். ஆகவே, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஒரு டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுப்பது மிகவும் அவசியம்.
இப்போது ஆயுள் காப்பீடு மூலமாக நிதித் திட்டமிடுதல் சாத்தியமா என்று இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
டேர்ம் பிளான்!
வாழ்க்கையின் இதர தேவைகளுக்கான முதலீட்டை ஆரம்பிக்கும்முன் ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது. ஒருவர் எண்டோவ்மென்ட் பாலிசி மூலம் ஆயுள் காப்பீடு எடுப்பது எவ்வளவு அதிகச் செலவைத் தருவதாக இருக்கிறது என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.
30 வயதான ஒருவர், 20 லட்சம் ரூபாய்க்கு 20 ஆண்டுகள் பிரீமியம் கட்டும் விதமாக எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்தால், அவர் ஒரு ஆண்டுக்கு பிரீமியமாக சுமார் ரூ.1 லட்சம் கட்ட வேண்டும். இந்த பாலிசிதாரருக்கு 10-வது ஆண்டில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் கிடைக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் பாலிசி எடுத்து 20 ஆண்டு கழித்து, முதிர்வுத் தொகையாக ஏறக்குறைய ரூ.38 லட்சம் கிடைக்கும்.
இந்த எண்டோவ்மென்ட் பாலிசிக்கு மாற்றாக, பிரீமியம் குறைவான டேர்ம் பிளான் எடுத்துவிட்டு, மீதி தொகையைப் பிபிஎஃப் அல்லது மியூச்சுவல் ஃபண்டில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் இதனைவிட அதிக கவரேஜ் மற்றும் அதிகத் தொகை கிடைக்கும்.
அதாவது, டேர்ம் இன்ஷூரன்ஸ் பிளானில் ரூ.50 லட்சம் கவரேஜ்க்கு ரூ.7,600-தான் ஆண்டு பிரீமியம். அதாவது, ரூ.1 லட்சத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸுக்கான பிரிமீயம் போக மீதமுள்ள ரூ.92,400-ஐ பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு ஆண்டும் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம்.
பாலிசிதாரருக்கு 10-வது ஆண்டில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.68 லட்சம் கிடைக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் பாலிசி எடுத்து 20 ஆண்டுகள் கழித்து, பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த தொகை ஏறக்குறைய ரூ.75 லட்சமாக திரும்பக் கிடைக்கும். (கூடுதல் விவரங்கள் அட்டவணையில்)
பொதுவாக, திருமணமாகி குழந்தை உள்ள பெற்றோருக்கு தன் குழந்தைக்கு நல்ல கல்வி, திருமணம் மற்றும் தங்களின் ஓய்வுக்காலத்துக்குத் தேவையான சேமிப்பு போன்றவை அடிப்படை தேவையாகும்.
கல்வி மற்றும் திருமணம்!
உதாரணத்துக்கு, நீங்கள் உங்களது 5 வயது குழந்தையை பிற்காலத்தில் ஒரு நல்ல மேற்படிப்பு படிக்க வைக்க இன்றைய காலகட்டத்தில் ரூ.10 லட்சம் என்றால், இதுவே 13 வருடம் கழித்து பணவீக்க விகிதம் (10%) அடிப்படையில் ரூ.34.5 லட்சம் தேவை. இந்த இலக்கை, சுமார் ரூ.9,000 மாத முதலீடாக நல்ல வருமானம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் அடைய முடியும்.
இதையே ஒரு எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்தால், குறைந்தபட்சமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,60,000 பிரீமியம் கட்ட வேண்டி இருக்கும். இதே போலத்தான் திருமணத்துக்கும்.
எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மூலம் உங்கள் எதிர்காலத் தேவைகளை சரியாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்பதற்கு காரணம் பல. எண்டோவ்மென்ட் இன்ஷுரன்ஸ் பாலிசியின் வருமானம் ஆண்டுக்கு 4% முதல் 6% வரை மட்டுமே இருக்கும். இரண்டாவதாக, எண்டோவ் மென்ட் இன்ஷுரன்ஸ் பாலிசி என்பது முதலீடும், ஆயுள் காப்பீடும் கலந்த கலவை. ஆகையால், நீங்கள் செலுத்தும் பிரீமியத்தில் ஒருபகுதி முதலீடாகவும் ஒரு பகுதி ஆயுள் காப்பீடாகவும் பிரித்துச் செயல்படுத்தப்படும்.
மூன்றாவதாக, இந்த முதலீட்டின் வருமானம் அந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் லாப நஷ்டத்தைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும். நான்காவ தாக, பிரீமியம் தொகையை எங்கு முதலீடு செய்கிறார்கள், அதன் மூலம் ஈட்டும் வருமானம் என்ன என்பதில் ஒரு தெளிவு இல்லை.
ஐந்தாவதாக, இன்ஷூரன்ஸ் ஆலோசகர் உங்களின் இன்றைய தேவைகளை மட்டும் அறிந்து செயல்படுவதால், பணவீக்க அடிப்படையில் நாளைக்கு தேவையான பணத்தை அடைவது மிகவும் கடினமாகும். ஆறாவதாக, முதலீட்டின் முக்கியமான குறிக்கோள், அந்த முதலீடு பணவீக்கத்தைவிட அதிகமான வருமானத்தை ஈட்டுவதே. கடந்த 10 ஆண்டுகளில் கல்விச் செலவு ஆண்டு ஒன்றுக்கு 15% வரையில் உயர்ந்துள்ளது. அப்படி இருக்கையில், உங்களின் முதலீடு 4% முதல் 6% வரை வருமானம் தந்தால், எதிர்காலத் தேவையை சரியாக நிறைவேற்றிக் கொள்ள முடியுமா?
ஓய்வுக்காலத் திட்டம்!
ஒரு இன்ஷூரன்ஸ் முகவரையோ அல்லது ஆலோசகரையோ, நீங்கள் அணுகி அவர்களிடம் உங்கள் ஓய்வுக்காலத்துக்குத் திட்டமிட வேண்டும் என்று கூறினால், அவர் உடனடியாக ஒரு எண்டோவ்மென்ட் பாலிசி அல்லது ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பென்ஷன் திட்டத்தைப் பரிந்துரைப்பார். நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு அந்தத் திட்டத்தில் சேர்ந்துவிடுவீர்கள். ஆனால், அதன் மூலம் உங்களுக்குத் தேவையான பலன் கிடைக்குமா என்றால் கிடைக்காது. உதாரணத்துக்கு, 40 வயதுள்ள ஒருவர் தற்போது மாதம் ரூ.20,000 வீட்டுச் செலவு செய்தால், 20 வருடம் கழித்து 6% பணவீக்கத்துடன் அவரது செலவு ரூ.65,000 ஆகும்.
அவர் சுமாராக 85 வயது வரை உயிர் வாழ்ந்தால், அவருக்கு கடைசிக் காலம் வரை தேவைப்படும் மொத்த பணம் சுமார் ரூ.1.7 கோடி. இன்றைய மதிப்பீட்டில் வருடத்துக்கு ரூ.2 லட்சம் பிரிமீயமாகக் கட்டினால், எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனமாவது பென்ஷன் திட்டத்தின் மூலம் மாதத்துக்கு 65,000 வருமானம் தருமா? இந்தக் கேள்விக்கு பதில் இல்லை!
இதையே ஒரு சொத்து விகிதாசார அடிப்படையில்,ரூ.2 லட்சத்தில் 80 சதவிகித தொகையை பங்குச் சார்ந்த மியூச்சுவல் பண்டிலும் 20 சதவிகித தொகையை பி.எஃப் அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டிலும் முதலீடு செய்தால் நாம் எதிர்பார்க்கும் ரூ.1.7 கோடி கிடைக்கும்.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் கிடைக்குமா என்று நீங்கள் கேட்கலாம். ஆண்டுதோறும் சரியாக 15% வருமானம் தரத் தவறினாலும், 5, 10, 15, 20 என ஆண்டுச் சராசரி கூட்டு வருமான விகிதமாக 15% வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அனைத்து நிதித் தேவை களுக்கும் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பதைத் தவிர்த்து, ஆயுள் காப்பீட்டுக்காக ஒரு டேர்ம் பிளான் எடுத்துக் கொண்டு, பிஎஃப், பி.பி.எஃப், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்து வந்தால், அனைத்து முதலீடுகளுக்கான தீர்வு எளிதாக இருக்கும்.
--ந.விகடன்அவரது பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம், அவரது ஓய்வுக்காலம் எனப் பிரித்து, பணம் தேவைப்படும் ஆண்டில் பாலிசி முதிர்ச்சி அடைந்து பணம் கிடைக்கும் விதமாகப் பாலிசியை எடுத்துத் தந்திருக்கிறார். அவர் கட்டும் பிரீமியம் மிக அதிகமாக இருந்தது. ஆனால், அனைத்து பாலிசிகள் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த கவரேஜ் பெரிதாக இல்லை.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ஆயுள் காப்பீடு பாலிசி வகைகள்..
» ஆயுள் காப்பீடு என்பது முதலீடு அல்ல.!!
» ஆயுள் காப்பீடு... எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்காது ?
» ஆயுள் காப்பீடு : தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்
» கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum