Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஆயுள் காப்பீடு... எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்காது ?
Page 1 of 1

ஆயுள் காப்பீடு எடுப்பது என்பதே தனக்குப் பிறகு பொருளாதார ரீதியாக தன் வாரிசுகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால், சில பாலிசிதாரர்கள் காலமான பிறகு இன்ஷூரன்ஸ் நிறுவனம் க்ளைம் தராமலே போகலாம் அல்லது க்ளைம் தரும்போது சிக்கல் ஏற்பட்டு இழப்பீடு கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம். எந்தெந்த நிலையில் க்ளைம் கிடைக்காது என்பதற்கான காரணங்களை ஆயுள் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் தந்த காரணங்கள் இதோ;
1. பாலிசி உயிர்ப்போடு இருக்க வேண்டும்!
பாலிசியின் பிரீமியத் தொகையைத் தொடர்ந்து கட்ட வேண்டும். பாலிசிக்கு பணம் கட்டுவதை இடையில் நிறுத்திவிட்டாலோ அல்லது கருணைக் காலம் தாண்டி பணம் கட்டாமல் இருந்தாலோ க்ளைம் கிடைக்காது. மாத பிரீமியம் என்றால் 15 நாட்களும், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு பிரீமியம் என்றால் 30 நாட்களும் பிரீமியம் கட்ட கருணை நாட்கள் தரப்படும். இதற்குள் பிரீமியத் தொகையைக் கட்டியாக வேண்டும்.
2உண்மைத் தன்மையை மறைப்பது.
பாலிசி எடுக்கும்போதே விண்ணப்பத் தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களில் பாலிசிதாரர் குறித்த உண்மையான விவரங்களே பதிவு செய்யப்பட வேண்டும். பூர்த்தி செய்யும்போது விண்ணப்பம் நிராகரிக்கப்படக் கூடாது என்பதற்காக உண்மையை மறைக்க வாய்ப்புண்டு. இதனால் பிற்காலத்தில் க்ளைம் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
பாலிசி எடுப்பதற்கு முன்பிருந்தே இருந்து வரும் நோய்களை மறைத்து, காப்பீடு எடுத்த சில ஆண்டுகளில் இறக்கும்பட்சத்தில் க்ளைம் எதுவும் கிடைக்காது. குறிப்பாக, புற்றுநோய், தீவிர நீரிழிவு போன்ற நோய்கள் இருப்பதை மறைத்திருந்தால் க்ளைம் கிடைக்காது. ஆரம்பத்தில், திட்டமிட்டு உண்மைகளை மறைத்ததாக நிரூபிக்கப்பட்டால் க்ளைம் கிடைக்காது.
3.மருத்துவப் பரிசோதனை அறிக்கை..!
பாலிசி எடுக்க விண்ணப்பிக்கும்போது மருத்துவப் பரிசோதனை அறிக்கை தரவேண்டும். ஆனால், சில நேரங்களில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளாமலேயே பொய்யான அறிக்கை கொடுத்து, பின்னாட்களில் இது காப்பீடு நிறுவனத்திற்கு தெரியவந்தால் க்ளைம் கிடைக்காது. மருத்துவப் பரிசோதனை அறிக்கை தேவைப்படாத குறைந்த கவரேஜ் பாலிசி என்றாலும், பாலிசி எடுக்கும்போது நோய்கள் இருந்தால் அதைக் குறிப்பிட வேண்டும். இல்லையேல் இதைக் காரணமாகக் காட்டியும் க்ளைம் மறுக்கப்படும்.
4- தற்கொலை!
பாலிசி எடுத்த 13 மாதங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டால் க்ளைம் கிடைக்காது.
5 விபத்துகள் !
பாலிசிதாரர் விபத்தின் மூலம் இறக்கும் பட்சத்தில், விபத்தின் தன்மையைப் பொருத்தே க்ளைம் கிடைக்கும். விபத்து நடந்தச் சூழல், சட்ட முரண்பாடுகள், காவல்துறை அறிக்கை போன்றவற்றின் அடிப்படையில்தான் க்ளைம் கிடைக்கும். குறிப்பாக, இரண்டு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்து விபத்து ஏற்பட்டு பாலிசிதாரர் இறக்கும்பட்சத்தில் க்ளைம் கிடைக்காது.
ரயில்வே லெவல் கிராஸிங்குகளை கடக்கும் போது விபத்து ஏற்பட்டால், அதுகுறித்த விசாரணை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை, இறப்புச் சான்றிதழ், காவல்துறை புலனாய்வு அறிக்கை போன்ற ஆவணங்கள் அடிப்படை யிலும், இன்ஷூரன்ஸ் நிறுவனம் விசாரித்தப் பிறகே க்ளைம் தருவதை முடிவு செய்யும்.
6 பெயர் குழப்பம் !
பாலிசியில் உள்ள பெயரும், க்ளைம் பெறுவதற்காகத் தரப்படும் ஆவணங்களில் உள்ள பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். உதாரணமாக, பாலிசியானது பாஸ்கரன் என்கிற பெயரில் எடுக்கப்பட்டிருக்கும். இறப்புச் சான்றிதழிலில் பாஸ்கர் என்று எழுதப்பட்டிருக்கும். இதுபோன்ற குழப்பங்களில் க்ளைம் கிடைப்பதில் தாமதமாகலாம்.
7 நாமினி குழப்பம் !
பாலிசிதாரர் நியமித்துள்ள நாமினிக்கே க்ளைம் தரப்படும். நாமினி இல்லாதபட்சத்தில் பாலிசிதாரரின் வாரிசுக்கும், வாரிசு யார் என்கிற குழப்பம் இருக்கும்போது நீதிமன்றம் மூலம் ஒப்புதல் வாங்கிவரும் வாரிசுக்கு க்ளைம் தரப்படும். நாமினியோ, வாரிசோ இல்லாத நிலையில் க்ளைமுக்கு விண்ணப்பிக்க முடியாது.
8 சந்தேகம் !
பிரீமியம் கட்டியதற்கான வருமான ஆதாரம் குறித்தோ, மோசடியாக பாலிசி க்ளைம் செய்வது குறித்தோ காப்பீடு நிறுவனத்திற்கு சந்தேகம் எழும்பட்சத்தில் க்ளைம் கிடைக்காது.
க்ளைமுக்கு விண்ணப்பிக்கும்போது சிக்கல் இல்லாமல் இருந்தால்தான் வாரிசுகளுக்கு காப்பீட்டின் பணப் பலன்கள் சென்று சேரும். இனியாவது இதை மனதில்கொண்டு திட்டமிடுவோம்.

-ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ஆயுள் காப்பீடு பாலிசி வகைகள்..
» ஆயுள் காப்பீடு : தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்
» ஆயுள் காப்பீடு: எந்த வகை பாலிசி பெஸ்ட்?
» ஆயுள் காப்பீடு என்பது முதலீடு அல்ல.!!
» அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum