Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஆயுள் காப்பீடு பாலிசி வகைகள்..
Page 1 of 1
ஆயுள் காப்பீடு பாலிசி வகைகள்..
எப்பவுமே சின்ன வயசிலேயே பாலிசி எடுக்கறது பலவகையிலும் நல்லது. கட்டுற பிரீமியம் குறைவா இருக்கும். கிடைக்கற பயன் கணிசமா இருக்கும். அதுவே வயசான பிறகு போட்டா, பாலிசி காலம் குறைவா இருக்கும்ங்கறதால பிரீமியம் அதிகமா கட்டவேண்டியிருக்கும்.
பாலிசியை எடுக்காம விட்டுட்டோமேனு நடுத்தர, பெரிய வயசுக்காரங்க சும்மா இருக்க வேண்டாம். உங்க தகுதிக்குத் தகுந்தாப்ல ஒரு பாலிசியைக் கட்டாயம் எடுத்து வையுங்க!
இந்த காப்பீட்டுல பலவிதம் இருக்கு. நம்மோட தேவைக்கும், தகுதிக்கும் ஏத்தமாதிரி ஒரு பாலிசியை செலக்ட் பண்ணி எடுத்துக்கலாம். முழுக்க முழுக்க காப்பீடு மட்டும்தான் நோக்கம்னு செயல்படுற திட்டம், கொஞ்சம் காப்பீடு, கொஞ்சம் முதலீடுனு இரண்டும் கலந்து கிடைக்கிற திட்டம், முதலீட்டிலேயே நல்ல லாபம் தரக்கூடியதா திட்டம்போட்டு செயல்படுத்துற திட்டம்னு பலவித திட்டங்-கள் இருக்குது
காப்பீடு மட்டும்...
காப்பீடு மட்டும்தான் நோக்கம்னு செயல்படுற திட்டத்துக்கு ‘டேர்ம் இன்ஷூரன்ஸ்’னு பேரு. இதுல பாலிசி எடுத்தா, காப்பீடு மட்டும்தான். பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தா... அவர் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகையைக் கொடுப்பாங்க. பாலிசி காலம் முழுசுக்கும் நல்லவிதமாக இருந்தார்னா கட்டின பிரீமியம் கிடைக்காது. அதனாலேயே பலருக்கு இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ்னா வேப்பங்காயா இருக்கு.
அது எதுக்குப் பைசா பிரயோஜனம் இல்லாம பணத்தைக் கொண்டுபோய் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குக் கொடுக்கணும்னு பல பேரு நினைக்கிறாங்க. இதுல ரொம்ப முக்கியமாக் கவனிக்கவேண்டிய விஷயம், டேர்ம் இன்ஷூரன்ஸூல பிரீமியம் ரொம்பக் கம்மி. 35 வயதான ஒருவர் 25 லட்ச ரூபாய்க்கு இருபது வருஷத்துக்கு டேர்ம் பாலிசி எடுத்தா... வருஷத்துக்கு பிரீமியம் சுமார் 6000 ரூபாய்தான்! இப்படி குறைஞ்ச பிரீமியத்துல நிறைய பலன் கிடைக்கும்னா அதை எடுத்துக்கறது நல்லதுதானே?
இதுல அஞ்சு வருஷத்தி-லேர்ந்து முப்பது வருஷம் வரைக்கும் பாலிசிக் காலத்தை நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி செலக்ட் பண்ணிக்கிடலாம். எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுக்கலாம்ங்கறது பாலிசிதாரரோட வருமானத்தைப் பொறுத்தது. பொதுவா, ஒருத்தர் தன்னோட வருஷ வருமானத்தைப் போல சுமார் 10 மடங்கு தொகைக்கு பாலிசி எடுத்துக்கலாம்.
மற்ற ஆயுள் காப்பீட்டு திட்டங்களைப் பார்க்கும்போது, இதுக்கான பிரீமியம் ரொம்பவும் கம்மியாதான் இருக்கு. சரி, இந்த டேர்ம் பாலிசியால கிடைக்கப்போற இன்ஷூரன்ஸ் பலன்கள் என்னென்ன?
பொதுவாகவே இந்த பாலிசிக்கு பிரீமியம் குறைவு. இதையே குழு காப்பீடா எடுத்தா இன்னும் குறைவா கிடைக்கும். அதாவது தனிநபர் பிரீமியத்தில் 30 முதல் 40% அளவுக்கும் குறைவா கிடைக்கும். ஒரே இடத்துல நூற்றுக்கணக்கான பாலிசிதாரர் கிடைக்கறதால காப்பீடு நிறுவனங்கள் இந்தச் சலுகையைக் கொடுக்கறாங்க.
(நாணயம் விகடன் எல்.கே.ஜி. இணைப்பு புத்தகத்தில் இருந்து)

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ஆயுள் காப்பீடு: எந்த வகை பாலிசி பெஸ்ட்?
» ஆயுள் காப்பீடு... எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்காது ?
» ஆயுள் காப்பீடு என்பது முதலீடு அல்ல.!!
» ஆயுள் காப்பீடு : தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்
» அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum