வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கடன் இஎம்ஐ... கடைசி நேர பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி?

Go down

கடன் இஎம்ஐ... கடைசி நேர பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி? Empty கடன் இஎம்ஐ... கடைசி நேர பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி?

Post by தருண் Sun May 03, 2015 6:13 pm

சில வாரங்களுக்கு முன்பு, நிதியாண்டு முடிவு, மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி என வங்கிகள் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு விடுமுறை விடப்பட, வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இஎம்ஐ கட்ட முடியாமல் திணறினார்கள். இந்த விடுமுறையைத் தொடர்ந்து சில நிறுவனங்கள் தாமதமாக சம்பளம் வழங்கவே, இஎம்ஐக்கான பணத்தைக் கட்ட முடியாமல் பலரும் தவித்தார்கள். இஎம்ஐக்கான தொகையைக் கட்டவில்லை என்றால் வங்கிகள் விதிக்கும் அபராதம் அதிகமாகும் என்பதே இந்த பதற்றத்துக்கு காரணம். இதுபோன்ற சிக்கல்களில் மாட்டாமல் இருக்க சில வழிகள் இருக்கவே செய்கின்றன. அந்த வழிகளை இப்போது பார்க்கலாம்!

கடன் இஎம்ஐ... கடைசி நேர பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி? P46a

இஎம்ஐ தேதியை முடிவு செய்யுங்கள்!

இஎம்ஐ தேதியை மாதத்தில் முதல் ஐந்து நாட்களிலோ அல்லது கடைசி ஐந்து நாட்களிலோ வைத்திருக்காதீர்கள். ஒருவேளை உங்கள் அலுவலக சம்பள தேதி சற்று தள்ளிப்போனால், கடைசி நேரத்தில் போதிய பணமில்லை என்ற நிலை ஏற்பட்டு அபராதம் கட்டவேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் அலுவலகச் சம்பளத் தேதி என்ன என்பதைப் பார்த்து, அதிலிருந்து ஒரு மூன்று நாட்கள் கழித்து, இஎம்ஐ தேதியை நிர்ணயிப்பது நல்லது.

சிறப்பு விடுமுறைகளைக் கவனியுங்கள்!

ஒரு மாதத்தின் சிறப்பு விடுமுறை தினங்கள் மாத ஆரம்பத்தில் குறிப்பாக, வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் வந்தால் உங்கள் கணக்கில் வியாழக்கிழமையன்றே தொகையைச் செலுத்தி, உங்கள் கணக்கில் போதிய பணத்தை வைத்துவிடுங்கள். இல்லை எனில், இரண்டு நாட்கள் நீங்கள் தவறவிட்டதும், திங்களன்று உங்கள் கணக்கில் போதிய பணமில்லை என்ற நிலை இருக்கும். அதனால் சிறப்பு விடுமுறைகளைக் கவனித்து அதற்கேற்ப கணக்கை நிர்வகித் தால் இந்தச் சிக்கலில் சிக்க வேண்டிய அவசியம் இருக்காது!

இன்டர்நெட் மூலம் முன்கூட்டியே அனுப்புங்கள்!

இன்டர்நெட் பேங்கிங் வசதி இருந்தாலும் சில சிக்கல்கள் வரவாய்ப்புள்ளது. உங்களது கணக்கில் இருந்து நீங்கள் இஎம்ஐ செலுத்தும் கணக்குக்குப் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ய நீங்கள் முயற்சிக்கும்போது, உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, வங்கியின் இணையதளத் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மற்றறொரு கணக்கில் சேராமல் போய்விடும் சூழல் உருவாகலாம். அப்போது இரண்டு கணக்கிலும் பணமில்லாத நிலை ஏற்படலாம். முன்கூட்டியே பணத்தை இன்டர்நெட் பேங்கில் மாற்றிவிட்டால் சிக்கலில்லை.

பணம் செலுத்தும் இயந்திரத்தைப் பயன்படுத்துங்கள்!

வங்கி விடுமுறை நாட்களில் ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பணம் எடுக்கிற மாதிரி, பணத்தை டெபாசிட் செய்யும் இயந்திரங் களும் வந்துவிட்டன. அதில் சென்று உங்கள் கையில் உள்ள பணத்தைச் செலுத்தினால், அடுத்த சில நிமிடங்களில் உங்கள் கணக்கில் பணம் சேர்க்கப்பட்டு விடும். இது உங்கள் பதற்றத்தைக் குறைக்க எளிமையான வழியாக இருக்கும்.

இதுபோன்ற நேரங்களில் தேவையான தொகையைப் பணமாக உங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

ஒரே கணக்கில் பல இஎம்ஐக்கள் வேண்டாம்!

ஒரே வங்கிக் கணக்கில் பல இஎம்ஐகளை வைத்திருப்பதைத் தவிருங்கள். உங்களது வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு ஆகியவற்றை ஒரே வங்கியில் வைத்திருக்க வேண்டாம்.

இரண்டுக்கும் ஒரே தேதியில் பணம் எடுக்கும் சூழல் உருவானால், உங்களால் அந்தக் கணக்கில் போதிய பணத்தை வைக்க முடியவில்லை எனில் தேவையில்லாமல் அபராதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதனால் ஒரே கணக்கில் ஒரே தேதியில் பல இஎம்ஐகளை வைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

--விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum