Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஒரு லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்கினால் பான் கார்டு அவசியம்... அரசு அறிவிப்பால் பாதிப்பா?
Page 1 of 1

சமீபத்தில் வெளியான மத்திய அரசின் 2015-16-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்குபவர்கள் இனிமேல் பான் கார்டு எண் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு மக்களுக்கு சாதகமா அல்லது பாதகமா, நகைக்கடை வைத்திருப்பவர்கள் இந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என பல கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடிப் புறப்பட்டோம்.
மத்திய அரசு சமீபத்திய பட்ஜெட்டில் தங்கத்தை காயின்களாகவோ, நகைகளாகவோ அல்லது எந்த வடிவத்திலும் 1 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கினால் பான் கார்டு எண்ணை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்தியாவில் தங்கத்தை முதலீடாகவும், பயன்பாட்டுக்காகவும் வாங்குபவர்கள் அதிகம். இப்படி இவர்கள் வாங்கும்போது அவர்களிடம் பான் கார்டு கேட்பதால், அவர்களது வருமானம் கண்காணிக்கப்படும்; வரி ஏய்ப்பு இருக்காது என்பதால் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், பல ஆண்டுகளாக சிறிது சிறிதாக சேமித்த பணத்தைக் கொண்டு வீட்டுத் தேவைகளுக்காகவும், திருமணங்களுக்காகவும் நகை வாங்கும்போது பான் எண் கேட்பது சரியா?, அன்றாடம் சாதாரண வேலைக்குச் சென்று வருமான வரி வரம்புக்குள் வராமல் இருப்பவர்கள் பான் கார்டு வைத்திருப்பார்களா என்பதே சந்தேகமாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு எந்தவகையில் பலனளிக்கும் என்கிற கேள்வியை மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அண்ட் டைமண்ட் அசோசியேஷனின் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் கேட்டோம்.
“இந்த அறிவிப்பு நிச்சயம் சாதாரண மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் விஷயமாகவே அமையும். காரணம், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தில் நகை வாங்க வந்திருப்பார்கள். அப்படி வைத்திருப்பவர்கள் பான் கார்டு வைத்திருப்பார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதுதான் உண்மை. அப்படி இருக்கும்போது அவர்களால் சரியான நேரத்தில், சரியான கடைகளில் தங்கம் வாங்க முடியாமல் போகலாம். 1000, 2000 ரூபாய் அதிகம் செலவழித்தாவது கள்ளச் சந்தையில் வாங்கலாம் என்ற நிலையும் உருவாகும். கள்ளச் சந்தையில் உள்ளவர்கள் தரம் குறைந்த நகையை விற்க வாய்ப்புள்ளது.
இதனால் நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது? பெரிய நிறுவனங்கள் அரசின் அறிவிப்பை தொடர்ந்து பான் கார்டு இருந்தால்தான் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகை என்று கூறும்போது சிறிய கடைக்காரர்கள் ஒரு லட்சத்துக்கு மேல் பில் இல்லாமல் விற்பனை செய்ய வாய்ப்புண்டு. அதனால் பெரிய நகைக் கடைகள் பாதிப்படையும். சிறிய கடைக்காரர்கள் பில் இல்லாமல் கொடுக்கும்போது அந்த நகை தரத்தில் குறைந்தோ அல்லது போலியாகவோ இருந்தால் வாடிக்கையாளர் பாதிக்கப்படுவார். ஒருவேளை இதுபோல் செய்யும் சிறிய கடைக்காரரும் வரி ஏய்ப்பு செய்து வழக்குகளை சந்திக்க நேரிடும்” என்றார்.
சென்னையை சேர்ந்த சில நகைக்கடை வியாபாரிகளிடம் இது குறித்து பேசினோம்.
“பான் நம்பர் வாங்கி கொண்டுதான் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் நகை வியாபாரம் செய்ய வேண்டும் என்று அரசு சொல்கிறது. பான் நம்பர் வாங்கிட்டு வியாபாரம் பண்றதா இருந்தா, நகை வாங்க வர்ற எல்லாருக்குமே நாங்க பில் போடணும். இதனால எங்களுக்கு நேரடியா எந்தப் பிரச்னையும் இல்ல. ஆனா, இங்க நகைக் கடைக்கு வரும் பாதி பேர் பான் கார்டு வைத்திருப்பதே இல்லை. அப்படியே வச்சிருந்தாலும் இதெல்லாம் எதுக்கு சார் கேட்கறீங்க. பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு நகையை கொடுங்கனு சொல்றாங்க. இந்த மாதிரி சொல்கிறார்களே என்று வியாபாரம் பண்ணாம கடைக்கு வர்றவங்களை திருப்பியா அனுப்ப முடியும்? இதெல்லாம் நமக்கு சாத்தியப்பாடாத ஒன்றுதான். இந்த அறிவிப்பு கண்டிப்பா நகை வியாபாரத்தை பாதிக்கும்” என்றனர்.
இன்னும் சில கடைகளில் வாடிக்கையாளர் போல சென்று விசாரித்தபோது, பான் கார்டு எல்லாம் வெறும் ஆதாரத்துக்காக்காகதான். அதெல்லாம் தேவையில்லை நகையை பாருங்க. பிடித்திருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். பான் கார்டு அவசியமில்லை என்ற பதில்களும் வந்தன.
சென்னை தி.நகருக்கு நகை வாங்க வந்திருந்த வாடிக்கையாளரான ராமலட்சுமியிடம் கேட்டோம்.
‘‘வீட்டு விசேஷத்துக்காக நகை வாங்க வந்தேன். இங்க வந்ததுக்கு அப்புறம்தான் பான் கார்டு வேணும்னு சொல்றாங்க. என்னை மாதிரி மாச சம்பளத்துக்கு வேலை பாக்கறவங்க ஒரு லட்ச ரூபாய்க்கு நகை வாங்கணுங்கறது பெரிய விஷயம்தான். குறைஞ்சபட்சம் நாலு சவரன் நகை வாங்கணும்னா, அதுக்கு நாங்க ரெண்டு வருஷத்துக்கு சீட்டு, ஃபண்டுன்னு சிறுக சிறுக சேர்த்து வச்சிதான் வாங்கணும். அதனால இப்படி நகை வாங்கும்போது பான் நம்பர் கொடுத்து நகை வாங்கறதால எங்களுக்கு பெருசா எந்த பாதிப்பும் வந்துடாது. அதுவே கருப்பு பணத்தை வெள்ளை பணமா மாத்தறதுக்காக தங்கத்து மேல காசு போடலாம்னு நினைக்கறவங்களுக்கு கண்டிப்பா இது ஒரு பெரிய பாதிப்புதான். அதுமட்டுமில்லாம பான் கார்டை வெறும் அடையாள அட்டையா நினைச்சி அதை வாங்கி வைக்காத ஒரு கூலி தொழிலாளி அவர் பொண்ணு கல்யாணத்துக்கு நகை வாங்கணும்னா கல்யாண அவசரத்துல கல்யாண பத்திரிகை அடிக்காம இந்த கார்டு வாங்கவா அலைய முடியும்?” என்றார்.
இதேபோல் சேலத்தில் உள்ள தங்க நகைக்கடை வியாபாரிகளிடம் பேசியபோது, ‘‘ஒரு லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்கும்போது பான் நம்பர் வாங்க வேண்டும் என அரசு சொல்லுவது பாதிப்புதான். ஏனெனில், நாங்கள் பான் கார்டு கேட்டு வாங்கும்போது அதனை மக்கள் சில காரணங்களுக்காக தர மறுக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. அவர்கள் எங்களை விட்டு பில் தராத கடைகளுக்கு சென்று வாங்கும் சூழலும் ஏற்படுகிறது. சிறிய கடைக்காரர்கள், 1 லட்சத்துக்கு கீழ் பில் வழங்கியும், மற்ற பணத்தை கணக்கில் காட்டாமலும் போக வாய்ப்புள்ளது” என்றனர்.
சேலத்தில் நகை வாங்க வந்திருந்த குப்புசாமி என்பவரிடம் கேட்டோம். “நான் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் நகை வாங்க வேண்டும் என்பதற்காகதான் வந்தேன். இங்கு வந்தவுடன்தான் இதற்கு பான் நம்பர் தரவேண்டும் என்றார்கள்.
என்னிடம் பான் கார்டு இல்லை என்பதால் என்னால் தற்போது வாங்க முடியாத சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி சாதாரண தொழிலாளர்கள், வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் பான் கார்டு எல்லாம் வைத்திருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. இதனால் பாதிப்பே அதிகம்” என்றார்.
தங்கம் வாங்க பான் கார்டு அவசியம் என்பதால், அதிகமான பேர் கள்ளச் சந்தையிலும், பில் போடாமலும், பாதி பணத்தை கணக்கில் காட்டாத கறுப்புப் பணமாக அளிக்கவே அதிக வாய்ப்புள்ளதால், இந்த அறிவுப்பு நகைக் கடைக்காரர்கள் மத்தியிலும், வாடிக்கையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதுகுறித்த தெளிவான நெறிமுறையை அரசு அறிவித்தால் மட்டுமே மக்கள் தொல்லை இல்லாமல் தங்க நகை வாங்குவார்கள். இல்லையெனில் கறுப்பு பணமும், ஊழலுமே இந்த அறிவிப்பால் பெருகும்!
முக நூல் மத்திய அரசு சமீபத்திய பட்ஜெட்டில் தங்கத்தை காயின்களாகவோ, நகைகளாகவோ அல்லது எந்த வடிவத்திலும் 1 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கினால் பான் கார்டு எண்ணை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்தியாவில் தங்கத்தை முதலீடாகவும், பயன்பாட்டுக்காகவும் வாங்குபவர்கள் அதிகம். இப்படி இவர்கள் வாங்கும்போது அவர்களிடம் பான் கார்டு கேட்பதால், அவர்களது வருமானம் கண்காணிக்கப்படும்; வரி ஏய்ப்பு இருக்காது என்பதால் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» தங்கம் வாங்க பான் கார்டு ! இது என்ன நியாயம்?
» கிரெடிட் கார்டு - கத்தி மேல் நடக்கும் வித்தை!
» பான் கார்டு : மீண்டும் கிஸான் விகாஸ் பத்திரம்!
» பிராண்டுக்கு அவசியம் ரிப்போர்ட் கார்டு!
» பான் கார்டு வைத்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum