வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பிராண்டுக்கு அவசியம் ரிப்போர்ட் கார்டு!

Go down

பிராண்டுக்கு அவசியம் ரிப்போர்ட் கார்டு! Empty பிராண்டுக்கு அவசியம் ரிப்போர்ட் கார்டு!

Post by தருண் Sat Nov 15, 2014 10:51 am

படிப்பின் லட்சணத்தை பிரதிபலிப் பவை ரிப்போர்ட் கார்டு. கொடுத்த நாளே பிள்ளை வந்து கொடுத்தால் நல்ல மார்க் என்று பார்க்காமல் புரியும். பல முறை கேட்டபின் ஒளிக்கப்பட்டது எடுக்கப்பட்டால் பெல்ட்டை எடுக்கவேண்டி வரும்.

பிராண்டுக்கும் தேவை

தொழிலதிபராய் உங்கள் பிராண்ட் ரிப்போர்ட் கார்டை பார்த்தீர்களா? யாரும் தரமாட்டார்கள். நீங்களே தயாரிக்கவேண்டும். பேலன்ஸ் ஷீட், பிஅண்ட்எல் இருக்கிறது என்று சொல்லாதீர்கள். அவை சொல்வது போன வருட நிலையை.

உங்கள் பிராண்டின் தற்போதைய நிலை தெரிய பிராண்ட் ரிப்போர்ட் கார்டு தேவை என்கிறார் ’கெவின் லேன் கெல்லர்’. ‘ஹாவர்ட் பிசினஸ் ரெவ்யூ’வில் ‘தி பிராண்ட் ரிப்போர்ட் கார்டு’ என்ற கட்டுரையில் உலகின் தலைசிறந்த பிராண்டுகள் பத்து குணங்களை பிரதிபலிக்கின்றன என்கிறார்.

பிராண்டின் சில தன்மைகளை மட்டுமே மார்க்கெட்டர் அறிகிறார். ஆனால் பிராண்டின் முழுமையை தங்கள் வேலை பளுவில் கவனிக்க தவறுகிறார்கள். பிராண்டில் பத்து அத்தியாவசிய குணங்கள் உள்ளதா, எங்கு குறை இருக்கிறது, எதில் மாற்றம் தேவை என்பதை தெரிந்துகொள்ள ரிப்போர்ட் கார்டு தேவை என்கிறார் கெல்லர்.

உங்கள் பிராண்டுகளுக்கு ரிப்போர்ட் கார்டு தயாரிக்கும் போது உங்கள் போட்டியாளர் பிராண்டுகளுக்கும் ரிப்போர்ட் கார்டு தயாரித்தால் அவர்கள் பலம், பலவீனம் தெரியும். வகுப்பில் எல்லாருக்கும் ரிப்போர்ட் கார்டு தயாரிக்கும் போதுதானே அனைவரின் ராங்க் தெரிகிறது. அது போலத்தான் மார்க்கெட்டிங்கிலும். சிறந்த பிராண்டுகள் சிறந்து விளங்கும் அந்த பத்து மேட்டர்கள் இதோ.

வாடிக்கையாளருக்கு அவசியமான பயன்கள் அளிப்பதில் சிறக்கிறது

பிராண்ட் பல பயன்களை தரலாம். ஆனால் வாடிக்கையாளருக்கு எந்த தேவை முக்கியமோ அதை மற்ற பிராண்டுகளை விட பெட்டராய் தருவதே சிறந்த பிராண்ட். ‘கவின்ஸ்’ பால் 120 நாட்கள் வரைக்கும் கூட கெடாமல் இருக்கும் என்று கூறுகிறது. அத்தனை நாள் வைத்து குடிக்க அது என்ன சுண்ட கஞ்சியா, ஸ்காட்சா? யாருக்கும் தேவையில்லாத பலனைக் கொடுத்தால் பால் த’பால் என்று விழும்!

பிராண்ட் ரெலவெண்டாய் திகழ்கிறது

காலம் மாறுகிறது. வாடிக்கையாளர் தேவை மாறுகிறது. இந்த இரண்டையும் கவனிப்பதற்குள் போட்டியாளர் உத்தி மாறுகிறது. பிராண்ட் பழைய பஞ்சாங்கமாய் இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப ரெலவெண்டாய் வைப்பது அவசியம். மாறிவரும் குழந்தைகளின் டேஸ்டிற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு ’இபாங் குபாங் ஜபாங்’ செய்யும் ‘ஹார்லிக்ஸ்’ போல.

வாடிக்கையாளருக்கு உகந்த விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

உங்கள் தயாரிப்பு செலவு, எதிர்பார்க்கும் லாபம் இதைப் பற்றி வாடிக்கையாளருக்கு கவலை இல்லை. தனக்கு பிராண்ட் தரும் வேல்யூவிற்கு உண்டான விலையை தர மட்டுமே அவர் ரெடி. எத்தனையோ அலப்பரை செய்தும் விலை அதிகம் என்று ஆனாளப்பட்ட ’ஐ ஃபோனையே’ ஐயையோ ஃபோன் ஆக்கிவிட்டார்களே நம்மவர்கள்.

பிராண்ட் சரியாய் பொசிஷனிங் செய்யப்பட்டிருக்கிறது

எத்தனை பெரிய கம்பெனியாய் இருந்தாலும், என்ன அப்பாடக்கராய் இருந்தாலும், பிராண்ட் சரியாய், தெளிவாய் பொசிஷனிங் செய்யப்பட்டிருந்தால்தான் பிராண்டாய் இருக்கும். அதன் விற்பனை க்ராண்டாய் இருக்கும். எதற்கு வாங்கவேண்டும், என்ன பொசிஷனிங் என்று தெளிவாய் வரையறுக்கப்படாததால் ‘ஃபியாமா டி வில்ஸ்’ சோப் விற்க முடியாமல் அதன் நாக்கு வெளியே வந்து வாயில் நுரை தள்ளுகிறது.

பிராண்ட் கன்சிஸ்டண்ட்டாய் இருக்கிறது

மனையை மாற்றுங்கள், மனைவியை மாற்றுங்கள், பிராண்டின் தன்மை, குணங்கள், பொசிஷினிங்கை மாற்றித் தொலைக்காதீர்கள். பிராண்ட் வளர்ச்சிக்கு, வாடிக்கையாளர் நம்பிக்கைக்கு பிராண்ட் கன்சிஸ்டென்சி மிக அவசியம். புத்துணர்ச்சிக்கு ‘லிரில்’ என்று இத்தனை நாள் கரடியாய் கத்திவிட்டு திடீரென்று ’மிருதுவான சருமத்திற்கு லிரில்’ என்று மாற்றியதால் வாடிக்கையாளர்கள் மாறினார்கள்………….வேறு சோப்பிற்கு!

பிராண்ட் போர்ட்ஃபோலியோ தெளிவாய் அமைக்கப்பட்டிருக்கிறது

சில கம்பெனிகளுக்கு ஒரு பொருள் பிரிவில் பல பிராண்டுகள் இருக்கலாம். உதாரணத்திற்கு ’கவின்கேர்’ கம்பெனிக்கு ஷாம்பு பொருள் பிரிவில் பல பிராண்டுகள்.

ஆனால் ஒவ்வொன்றும் வித்தியாச மானவை. ‘மீரா’ ஆரோக்கியம் தரும் சீயக்காய் ஷாம்பு. ‘சிக்’ விலை குறைந்த சாஷே ஷாம்பு. ‘னைல்’ ஹெர்பல் ஷாம்பு. அது போல் கம்பெனியின் ஒரே பிரிவிலுள்ள பிராண்டுகள் தெளிவாக வித்தியாசப்படுத்திக் காட்டும்போது வெற்றி நிச்சயம். ஒரே கம்பெனியின் பிராண்டுகள் தங்க ளுக்குள் சண்டையிடுவதும் தவிர்க் கப்படும்.

பிராண்ட் எளிமெண்ட்ஸ் தெளிவாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது

பிராண்ட் எளிமெண்ட்ஸ் என்பது ரிஜிஸ்டர் செய்யக்கூடிய வகையில் அமையும் பிராண்டின் பெயர், லோகோ, பேஸ்லைன் போன்றவை. பிராண்டை முழுமையாக்க, போட்டிக்கு மத்தியில் தனித்துவமாய் தெரியவைக்க, வாடிக்கையாளரை கவர்ந்திழுக்க பிராண்ட் எளிமெண்ட்ஸ் இன்றியமையாதது. இவைகளை கவனமாய் செதுக்கினால் போட்டியை போட்டுத் தள்ளலாம். காலிலுள்ள பித்த வெடிப்பை குணப்படுத்தும் பிராண்டிற்கு ‘க்ராக்’ என்று பெயர் வைக்கும் போது பொறுத்தமாய் இருப்பதோடு மனதில் முதல் பிராண்டாகவும் தோன்றுகிறதல்லவா!

வாடிக்கையாளர்களுக்கு பிராண்ட் தெளிவாய் புரிந்திருக்கிறது

மார்க்கெட்டருக்கு தன் பிராண்ட் பொன்குஞ்சு. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக புரிகிறதா என்று பார்க்கவேண்டும். ’லைஃப்பாய்’ என்றாலே ஆண்களுக்கான சோப் என்று மக்கள் நினைத்திருக்க அதை சரியாய் உணராமல் ‘லைஃப்பாய் கோல்டு’ என்று பெண்களுக்கு ஒரு சோப்பை அறிமுகப்படுத்தி அதே சோப்பில் கால் வைத்து வழுக்கி விழந்தது போல் செய்யாதீர்கள்.

பிராண்டிற்கு தகுந்த சப்போர்ட் தரப்படுகிறது

பிராண்ட் வளர்ப்பு என்பது விமானம் செலுத்துவது போல. அதை கிளப்பி வானத்தில் ஏற்றுவதற்கு படாதபாடு படவேண்டும். முப்பதாயிரம் அடி உயரத்தில் எண்ணூறு கிலோமீட்டர் வேகத்தில் ஜோராகப் பறக்கிறதே என்று ஸ்விட்சை அனைத்து அக்கடா என்று விட்டால் வேகமாக கீழே விழந்து சோகமாக மேலே போகவேண்டியது தான்!

அதே போல்தான் பிராண்ட் வளர்ப்பும், பராமரிப்பும். எவ்வளவு பெரிய பிராண்டாய் வளர்ந்தாலும் அதற்கு கொடுக்கப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உதவி, மார்க்கெட்டிங் சப்போர்ட் முதலியன நிறுத்தப்படக்கூடாது. சக்கைப் போடு போட்ட ‘கோகுல் சாண்டால்’ பவுடருக்கு அதன் கம்பெனி பவுடர் போட மறந்ததால் மக்களும் மெல்ல அந்த பவுடரை மறக்கத் துவங்கிவிட்டனர்.

பிராண்டின் நலம் ரெகுலராய் செக் செய்யப்படுகிறது

உங்கள் ஹெல்த்தை அடிக்கொறு தரம் சென்று செக் செய்கிறீர்கள். உங்கள் பிராண்ட் என்ன பாவம் செய்தது? அதை ரெகுலராய் செக் செய்கிறீர்களா? அதற்கும் ஈசிஜி, ப்ளட் டெஸ்ட் எடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. மார்க்கெட் ரிசர்ச், கஸ்டமர் ஆய்வுகள் போன்றவற்றை ஒழுங்காய் செய்து பிராண்ட் எந்த நிலையில் இருக்கிறது, எதில் ஸ்ட்ராங்காய் இருக்கிறது, எங்கு தூசி தட்டவேண்டும், எதில் ரிப்பேர் தேவை, எங்கு டிங்கரிங் செய்யவேண்டும் என்று ரெகுலராய் பார்த்து வாருங்கள்.

வருடா வருடம் உங்கள் பிராண்டிற்கு ரிப்போர்ட் கார்டு தயாரியுங்கள். கிழிக்கும் நிலையில் வைக்காமல் வெற்றியை வழிக்கும் வகையில் பிராண்டை பராமரியுங்கள். படிக்கும் காலத்தில் 100க்கு 40 எடுத்தால் போதும், ‘பாஸ்’ என்று பெருமைப்படலாம். மார்க்கெட்டிங்கில் நூற்றுக்கு நூறு தான் பாஸ் மார்க். பிராண்ட் ரிப்போர்ட் கார்டின் பத்து அம்சங்களிலும் பாஸானால்தான் உங்கள் பிராண்ட் பாஸ் என்று அர்த்தம்.

ஆனால் ஒரு சௌகரியம். ஃபெயிலானால் யாரும் பெல்ட்டை எடுக்கமாட்டார்கள்!
--தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்கினால் பான் கார்டு அவசியம்... அரசு அறிவிப்பால் பாதிப்பா?
» தொழில் ரகசியம்: பிராண்டுக்கு பொருந்தாத பிரபலங்கள்
» மொபைல் பேங்கிங்... ஷாக் ரிப்போர்ட்... பாதுகாப்பான பணப் பரிமாற்றத்துக்கு எச்சரிக்கை டிப்ஸ்!
» மார்க்கெட்டிங் மிக அவசியம்
» கேன்சர் இன்ஷூரன்ஸ் பாலிசி... ஏன் அவசியம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum