Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பான் கார்டு : மீண்டும் கிஸான் விகாஸ் பத்திரம்!
Page 1 of 1
பான் கார்டு : மீண்டும் கிஸான் விகாஸ் பத்திரம்!
கிஸான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்வதை மத்திய அரசு மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை 2014-15-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. அதாவது, மக்களின் சேமிப்பை உயர்த்தும் வகையிலும், எளிதாக நீண்ட காலத்துக்குச் சேமிக்கும் வகையிலும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர் விளக்கமாக எடுத்து கூறுகிறார்.
கிஸான் விகாஸ் பத்திரம் அனைத்து தபால் நிலையங்களிலும் கிடைக்கும். இந்தப் பத்திரம் ரூ.1,000, ரூ.5,000, ரூ. 10,000 மற்றும் ரூ.50,000 மதிப்புகளில் கிடைக்கும். இதில் முதலீடு செய்வதற்கு பான் கார்டு எண் தேவையில்லை. மேலும், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். இந்தப் பத்திரத்தில் தனிநபர் மற்றும் இருவர் சேர்ந்தும் முதலீடு செய்ய முடியும்.
ஒருவர் எத்தனை பத்திரங்கள் வேண்டுமானாலும் வாங்கலாம். மேலும், ஒரு தபால் நிலையத்தில் முதலீடு செய்துள்ள பணத்தை, இந்தியாவில் உள்ள எந்த தபால் நிலையத்துக்கும் மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும், இந்தப் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைக்க முடியும். அதேபோல, செக்யூரிட்டியாகவும் கொடுக்க முடியும்.
இந்த முதலீடு குறைந்தபட்சம் 2.5 ஆண்டுகள் (30 மாதம்) லாக்-இன் காலமாக கருதப்படும். இந்தக் காலத்தில் உங்கள் முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது. 30 மாத காலம் முடிந்தபின், 36, 42, 48 என ஒவ்வொரு 6 மாத கால முடிவில்தான் முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியும். இதில் முதலீடு செய்த தொகை 100 மாதங்களில் இரட்டிப்பாகும். அதாவது, 8 வருடம் 4 மாதங்கள் முதலீட்டுக் காலம் ஆகும்” என்றார்.
வருமான வரி வரம்பில் இல்லாதவர் களுக்கும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் களுக்கும் மட்டுமே இந்தத் திட்டம் உதவியாக இருக்கும். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட இந்தப் பத்திரத்தில் குறைவான வருமானமே கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது, 10 ஆண்டுகள் வங்கி டெபாசிட்டுக்கு அதிகபட்சம் 9% வரை வட்டி கிடைக்கிறது. மேலும், 5 ஆண்டுகளுக்கு வங்கியில் டெபாசிட் செய்யும் தொகைக்கு வருமான வரி பிரிவு 80சி-ன் கீழ் விலக்கு பெற முடியும். ஆனால், கிஸான் விகாஸ் பத்திரத்தில் 8.70 சதவிகிதம்தான் வட்டி கிடைக்கும். மேலும், இதற்கு வருமான வரி சலுகை பெற முடியாது.
- ந.விகடன் கிஸான் விகாஸ் பத்திரம் அனைத்து தபால் நிலையங்களிலும் கிடைக்கும். இந்தப் பத்திரம் ரூ.1,000, ரூ.5,000, ரூ. 10,000 மற்றும் ரூ.50,000 மதிப்புகளில் கிடைக்கும். இதில் முதலீடு செய்வதற்கு பான் கார்டு எண் தேவையில்லை. மேலும், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். இந்தப் பத்திரத்தில் தனிநபர் மற்றும் இருவர் சேர்ந்தும் முதலீடு செய்ய முடியும்.
ஒருவர் எத்தனை பத்திரங்கள் வேண்டுமானாலும் வாங்கலாம். மேலும், ஒரு தபால் நிலையத்தில் முதலீடு செய்துள்ள பணத்தை, இந்தியாவில் உள்ள எந்த தபால் நிலையத்துக்கும் மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும், இந்தப் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைக்க முடியும். அதேபோல, செக்யூரிட்டியாகவும் கொடுக்க முடியும்.
இந்த முதலீடு குறைந்தபட்சம் 2.5 ஆண்டுகள் (30 மாதம்) லாக்-இன் காலமாக கருதப்படும். இந்தக் காலத்தில் உங்கள் முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது. 30 மாத காலம் முடிந்தபின், 36, 42, 48 என ஒவ்வொரு 6 மாத கால முடிவில்தான் முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியும். இதில் முதலீடு செய்த தொகை 100 மாதங்களில் இரட்டிப்பாகும். அதாவது, 8 வருடம் 4 மாதங்கள் முதலீட்டுக் காலம் ஆகும்” என்றார்.
வருமான வரி வரம்பில் இல்லாதவர் களுக்கும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் களுக்கும் மட்டுமே இந்தத் திட்டம் உதவியாக இருக்கும். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட இந்தப் பத்திரத்தில் குறைவான வருமானமே கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது, 10 ஆண்டுகள் வங்கி டெபாசிட்டுக்கு அதிகபட்சம் 9% வரை வட்டி கிடைக்கிறது. மேலும், 5 ஆண்டுகளுக்கு வங்கியில் டெபாசிட் செய்யும் தொகைக்கு வருமான வரி பிரிவு 80சி-ன் கீழ் விலக்கு பெற முடியும். ஆனால், கிஸான் விகாஸ் பத்திரத்தில் 8.70 சதவிகிதம்தான் வட்டி கிடைக்கும். மேலும், இதற்கு வருமான வரி சலுகை பெற முடியாது.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» கிஸான் விகாஸ் பத்திரம் முதலீட்டுக்கு ஏற்றதா?
» கிஷான் விகாஸ் பத்திரம் மீண்டும் அறிமுகம்
» டெபிட் கார்டு: பின் நம்பர் பத்திரம்!
» தங்கம் வாங்க பான் கார்டு ! இது என்ன நியாயம்?
» பான் கார்டு வைத்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum