வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா?

Go down

சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா? Empty சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா?

Post by தருண் Tue Feb 03, 2015 10:35 am

மோடி அரசு ஆட்சிக்கு வந்தபின் அடிக்கடி புதிய திட்டங்கள் அறிமுகமாகி வருகிறது. ஜன் தன் திட்டத்தின் மூலம் இந்தியாவில் வசிக்கும் எல்லோருக்கும் வங்கிக் கணக்கு என்கிற திட்டத்தை ஆர்வத்துடன் அமல்படுத்தியது. தற்போது, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் மகிழ்ச்சியான எதிர்காலத்துக்காக புதிதாக ஒரு வங்கிக் கணக்கை அறிமுகம் செய்துள்ளது.

யார் தொடங்க முடியும்?

பிறந்த பெண் குழந்தை முதல் 10 வயது வரையிலான பெண் குழந்தைகள் வரை யார் வேண்டுமானாலும் வங்கி அல்லது அஞ்சலகத்தில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் துவங்கி 1.5 லட்சம் ரூபாய் வரை அந்தக் குழந்தையின் பெயரில் சேமிக்கலாம். இப்படி 14 ஆண்டுகள் வரை இந்தக் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும்.

சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா? Nav32a

இந்தக் கணக்கை துவங்கியபின் அந்தக் குழந்தையின் 18வது வயது வரை கணக்கில் செலுத்தியுள்ள பணத்தை எடுக்க முடியாது. அதன்பின் 50 சதவிகிதம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும். இந்தக் கணக்கு 21 வருடங்கள் வரை செயல்பாட்டில் இருக்கும். ஒருவேளை இடையே திருமணம் நடந்தால், அந்த வருடத்தோடு இந்தக் கணக்கு முடிந்துவிடும்.அதற்குப்பின் இந்தக் கணக்கைத் தொடர முடியாது. 21 வருடங்கள் கழித்து மீதமுள்ள தொகையையும் அதற்கான ஆண்டுக் கூட்டு வட்டியையும் பெறலாம்.

ஒரு பெண் குழந்தைக்கு அதிகபட்சமாக 10 வயதில் இந்தக் கணக்கைத் துவங்கினால் 31 வயது வரை அதன் கல்வி, திருமணம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் உதவும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதிக்கு அரசு 9.1 சதவிகித கூட்டு வட்டியை யும், முதலீட்டில் வருமான வரி விலக்கும் அளித்துள்ளது.

இதனால் இனி பெண் குழந்தைகள் கல்விக்கும், திருமணத்துக்கும் பணம் ஒரு தடையாக இருக்காது என்று அரசு கூறியுள்ளது. உதாரணமாக, நடுத்தர வருமானம் கொண்ட குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் இந்தத் திட்டத்தில் கணக்கைத் துவங்கி, ஆண்டுக்கு 50,000 ரூபாய் முதலீடு செய்கிறார் என்றால், வருடத்துக்கு 9.1 சதவிகிதம் வட்டி என்ற கணக்கின்படி 21 வருடங் கள் கழித்து, சுமார் 28.3 லட்சம் ரூபாய் கிடைக்கும். இது அந்தக் குழந்தையின் திருமணத்துக்கு உதவியாக இருக்கும். ஒருவேளை 18வது வயதில் எடுத்தால், ரூ.20 லட்சம் கிடைக்கும். இதில் பாதி தொகை அந்தக் குழந்தையின் கல்விக்குப் பயன்படும்விதமாக அமையும். மீதித் தொகை கணக்கு ஆரம்பித்து 21 வருடம் முடியும்போது கொடுக்கப்படும்.

சாத்தியமாகுமா?

இந்தத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள 9.1 சதவிகித வட்டி என்பது, ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். இந்த நிலையில் 9.1 சதவிகிதத்துக்கும் குறைவான வட்டி விகிதம் கிடைத்தால் இது பயனளிக்குமா என்பது முக்கியமான கேள்வி.

சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா? Nav32

10 வயது பெண் குழந்தை இந்தக் கணக்கை துவங்கினால், 26 வயதில் திருமணம் செய்ய நினைக்கும்போது வெறும் 16 வருடத்தில்

50 சதவிகித பணம்தான் கிடைக்கும் எனில், அதை வைத்து எப்படி திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியும்? 10 வயதில் துவங்கினால் 14 வருடங்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற கணக்கின்படி பார்த்தால், 24 வயது வரை பணம் செலுத்த வேண்டும். ஒருவேளை அடிப்படைத் திருமண வயது 21 எனக் கொண்டால், இது முழுமையான பலனை அளிக்குமா என்கிற கேள்விகள் எழவே செய்கின்றன. மேலும் இந்தத் திட்டம் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு மட்டுமே உதவக்கூடியதாக இருக்கும். ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் போடுவதன் மூலம் அதிக வருமானம் பெற முடியும்.

சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா? P1

எப்படியோ இந்தத் திட்டம் பெண் கல்விக்கும், பெண்கள் மேம்பாட்டுக்கும் ஓர் ஆரம்பமாக இருக்கும் என்பதால், தாராளமாக வரவேற்கலாம்!
முக நூல்
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா? Empty Re: சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா?

Post by தருண் Wed Mar 04, 2015 11:14 am

சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா? 3UFSAJ3S0CvXSgF6sPCy+Sukanya_Samridhhi_Account

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா? Empty செல்வ மகள் சேமிப்புத் திட்டம்

Post by தருண் Sat Apr 04, 2015 10:23 am

சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா? YgMITroMRnKLb1qOlHge+selvamagal

பாரதப் பிரதமர் மோடி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் சுகன்யா சம்ரிட்ஹி யோஜனா என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். ஆங்கிலத்தில் அதை Girl Child Prosperity Scheme  என்கிறார்கள்.  தமிழில் அதன் பெயர் “செல்வ மகள் சேமிப்புத் திட்டம்”.

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கும், அது முதிர்வடையும்போது வழங்கப்படும் தொகைக்கும் வருமான வரி கிடையாது என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பினால், இந்தத் திட்டத்தில் சேருகிறவர்களுக்கு லாபகரமான  திட்டமாக மாறிவிட்டது.

யார் சேரலாம்?

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் பத்து வயது அல்லது பத்துக்கும் குறைவான வயதாகும் பெண் பிள்ளைகள் மட்டுமே சேர முடியும். மற்றவர்கள் பெயரில் இந்த கணக்கு தொடங்க முடியாது. இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் இந்த ஆண்டுக்கு மட்டும் ஒரு சிறிய விதிவிலக்கு கொடுத்திருக்கிறார்கள்.

அதன்படி, வயது பத்துக்கும் மேலாக ஓர் ஆண்டு கூடுதல் ஆகியிருந்தாலும், அதாவது 2003-ம் ஆண்டு  டிசம்பர் 2-ம் தேதிக்கும், 2004-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கும் இடையில் பிறந்த பெண் குழந்தைகள், அவர்களுக்கு  வயது பத்துக்கு மேல் ஆகியிருந்தாலும் இந்தத் திட்டத்தில் சேர அனுமதி உண்டு. அப்படிச் சேர கடைசி நாள் 01.12.2015.

யார் கணக்கு துவங்கலாம்? என்ன சான்றிதழ்கள் தேவை?

பெண் குழந்தையின் பெற்றோர்தான் துவங்க வேண்டும். பெற்றோர் இருவரும் இல்லாதபட்சத்தில் மட்டும் அந்தப் பெண்ணின் சட்டபூர்வமான கார்டியன் கணக்குத் துவங்கலாம்.

எவ்வளவு கட்டவேண்டும்?

திட்டத்தில் சேருகிறவர்கள், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் ரூ.1,000 கட்ட வேண்டும். நூறின் மடங்குகளில் கட்டுகிற தொகை, ஆண்டுக்கு ஆண்டு மாறுபடலாம். குறிபிட்ட அளவு, ஒரே தொகைதான் கட்ட வேண்டும் என்பதில்லை. ஆனால், அதிகபட்சமாக ஒரு ஆண்டில் ஒன்றரை லட்சம்தான் கட்டலாம். கட்டுகிற பணத்தை ஒரே தவணையில்தான் கட்ட வேண்டும் என்பதில்லை. சீட்டு கட்டுவது போல, எஸ்ஐபி போல மாதா மாதமும், மாதம் 100 ரூபாய் முதல் 12,500 ரூபாய் வரைகூடக் கட்டலாம்.

எப்படிக் கட்டினாலும், திட்டத்தில் தொடருவதற்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 கட்ட வேண்டும். எந்த ஒரு ஆண்டும் ரூ.1,000 கட்டத் தவறினால், அதன்பிறகு  ரூ.50 அபராதம் செலுத்திவிட்டுத்தான்  சேமிப்பைத் தொடரமுடியும்.

இந்தத் திட்டத்தினால் என்ன பலன்?

கட்டுகிற பணத்துக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80-சியின் கீழ் முழு வரி விலக்கு உண்டு. அதேபோல், முதிர்வுத் தொகையை பெறும் நேரமும், பெறுகிற முழுத்தொகைக்கும் வரி கிடையாது.

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் சேரும் பணத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு வட்டி தருவார்கள். அந்த வட்டியை கையில் தரமாட்டார்கள். கணக்கில் சேர்த்துவிடுவார்கள். தற்சமயம் இருக்கிற பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, வரும் ஆண்டுக்கு அறிவித்திருக்கிற 9.1 சதவீதம் என்பது நல்ல வட்டி. அதுவும், வரிவிலக்குடன். இதனுடன் ஒப்பிடக்கூடிய மற்றொரு சிறுசேமிப்புத் திட்டத்துடன் வைத்துப் பார்த்தால், பி.பி.எஃப்.-ல் இந்த ஆண்டு வட்டி 8.75 சதவீதமாக இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வட்டி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, கவர்மென்ட் செக்யூரிட்டிகளுக்கு நிலவும் வட்டியைவிட 0.75 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று பதில் சொல்கிறார்கள்.

எவ்வளவு காலம்பணம் கட்ட வேண்டும்?

திட்டம், 21 ஆண்டுகளுக்கானது. ஆனால், பணம் கட்டுவது அதிகபட்சமாக 14 ஆண்டுகளுக்குத்தான். அதன்பிறகு பணம் கட்ட வேண்டாம். கட்டவும் முடியாது. கணக்கில் இருக்கிற பணத்துக்கு வட்டியைக் கணக்கிட்டு, முதிர்வுகாலம் வரை கணக்கில் சேர்த்துக்கொண்டே வருவார்கள்.

முதிர்வு எப்போது?

கணக்கு துவங்கியதில் இருந்து 21-ம் ஆண்டுடன் இந்தத் திட்டம் முதிர்வு அடைந்துவிடும். அதன்பிறகும் தொடருவதென்றால் தொடரலாம். கணக்கில் இருக்கிற பணத்துக்கு வட்டி உண்டு.

கணக்குதாரர் விரும்பினாலும், 18 வயதுக்குப் பின் எந்த வயதில் திருமணம் நடந்தாலும், அதன்பின் இந்தத் திட்டத்தில் தொடர முடியாது.  முதிர்வுத் தொகை, கணக்குதாரரான பெண்ணிடம்தான் வழங்கப்படும்.

கணக்கு துவங்கி 21 ஆண்டுகள் காத்திருக்காமல் முன்கூட்டியே விலக முடியாதா?

முடியும். ஆனால், விலகுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு.

1. கணக்குதாரருக்கு  18 வயது நிரம்பியிருக்க வேண்டும். மேலும்,
2. அவருக்கு திருமணம் முடிந்திருக்க வேண்டும்.

அப்படியிருந்து விண்ணப்பித்தால், கணக்கை முடித்து மொத்தப் பணத்தையும் கொடுத்துவிடுவார்கள். கொடுக்கப்படும் தொகை எவ்வளவாக இருந்தாலும் அதற்கு வருமான வரி இல்லை.

இடையில் பணம் தேவைப்பட்டால்?

கணக்கு வைத்திருக்கும் பெண்ணுக்கு 18 வயது ஆன பிறகு, தேவைப்பட்டால் கணக்கில் இருக்கும் பணத்தில் பாதியை பெற முடியும். இந்தத் திட்டத்தில் 50 சதவீதம் பார்ஷியல் வித்டிராயல் அனுமதிக்கப்படுகிறது. இது, அந்தப் பெண்ணின் கல்வி போன்ற செலவுகளுக்கு உதவுவதற்காக.

18 வயதாகும் வரை, முதலீடு செய்த பணத்தை எடுக்கவே முடியாது. அது முழு ‘லாக் இன். 18 வயதுக்குப் பின், பாதிப் பணத்தை எடுக்கலாம். திருமணத்துக்குப் பின் முழுப் பணத்தையும் எடுக்கலாம். பெற்றோர் அல்லது கார்டியன் மிக மோசமான நிதி நெருக்கடியில் இருக்கும்பட்சத்தில், அதற்கென உள்ள தனிப் படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பரிசீலனைக்குப் பின் கணக்கை முடித்து பணம் கொடுப்பார்கள்.

ஒரு பெண் குழந்தைக்கு எத்தனை கணக்குகள் ஆரம்பிக்கலாம்?

ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்குதான் ஆரம்பிக்க முடியும்.  இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர், இரண்டு குழந்தைகளின் பெயரிலும் தனித்தனியே இரண்டு கணக்குகள் துவங்கி சேமிக்கலாம். இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் என்றால் மட்டும், முதல் பிரசவத்தில் பிறந்த பெண்ணுக்கும் சேர்த்து மொத்தம் மூன்று தனித்தனி கணக்குகள் துவக்க அனுமதி உண்டு. முதல் பிரவத்திலேயே மூன்று பெண் குழந்தைகள் என்றாலும், மூன்று கணக்குகளுக்கு அனுமதி தருகிறார்கள். மற்றபடி, ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் பிள்ளைகளுக்குத்தான்.

வாரிசுதாரர் எனும் நாமினேஷன் வசதி இந்தத் திட்டத்தில் இல்லை. கணக்குதாரருக்கு ஏதும் நிகழும்பட்சம், கணக்கை துவங்கிய பெற்றோர் அல்லது கார்டியனிடம் கணக்கு முடித்துக் கொடுக்கப்படும்.

எங்கே, எப்படி இந்தக் கணக்கை துவங்குவது?

குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், கணக்கு துவங்குபவரின் அடையாள அட்டை மற்றும் அவரது முகவரி சான்றிதழ் ஆகியவை போதும். அஞ்சலகங்கள் அல்லது அரசு குறிபிட்டிருக்கும் 28 வங்கிகளில் செல்வ மகள் திட்டக் கணக்கை துவங்கிவிடலாம். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி ஆகியவை அவற்றில் சில.

--ஈகரை

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா? Empty Re: சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா?

Post by தருண் Sat Apr 04, 2015 10:26 am

சிறப்பு அம்சங்கள்

* 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு காப்பாளர் மூலம் கணக்கு துவங்க முடியும்.

* கணக்கு துவங்க குறைந்தபட்ச தொகை, 1,000 ரூபாய்.

* ஒரு நிதியாண்டில், அதிகபட்சம், 1.5 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும். வட்டி விகிதம், 9.1 சதவீதம்.

* கணக்கு துவங்கியதில் இருந்து, 14 ஆண்டுகள் பணம் செலுத்தலாம்.

* கணக்கு வைத்திருக்கும் பெண் குழந்தைகள், 18 வயது முடிந்த பின், இருப்புத் தொகையில் இருந்து அதிகபட்சம், 50 சதவீதம் மேற்படிப்பு அல்லது திருமணத்திற்காக பெற்றுக் கொள்ள முடியும்.

* வாரிசு நியமன வசதி இல்லை.

* குழந்தைக்கு 21 ஆண்டுகள் முடிந்த பின் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

* விருப்பத்தின் படி மாதாந்திர வட்டி பெறும் வசதி உள்ளது.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா? Empty Re: சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா?

Post by தருண் Sat Apr 04, 2015 10:26 am

Sukanya Samriddhi Yojana Account (SSYA) துவங்க அங்கீகாரம் பெற்ற 28 வங்கிகள்!


1. State Bank of India (SBI)
2. State Bank of Patiala (SBP)
3. State Bank of Bikaner & Jaipur (SBBJ)
4. State Bank of Travancore (SBT)
5. State Bank of Hyderabad (SBH)
6. State Bank of Mysore (SBM)
7. Allahabad Bank
8. Andhra Bank
9. Axis Bank
10. Bank of Baroda (BoB)
11. Bank of India (BoI)
12. Bank of Maharashtra (BoM)
13. Canara Bank
14. Central Bank of India (CBI)
15. Corporation Bank
16. Dena Bank
17. ICICI Bank
18. IDBI Bank
19. Indian Bank
20. Indian Overseas Bank (IOB)
21. Oriental Bank of Commerce (OBC)
22. Punjab National Bank (PNB)
23. Punjab & Sind Bank (PSB)
24. Syndicate Bank
25. UCO Bank
26. Union Bank of India
27. United Bank of India
28. Vijaya Bank

மேலும் விபரங்களுக்கு!
http://sukanyasamriddhiaccount.com/

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா? Empty Re: சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா?

Post by தருண் Sat Apr 04, 2015 10:27 am

சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா? Sukanya-samriddhi-yojana-account-opening-form-for-bank-post-office

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா? Empty Re: சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum