Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மூத்த குடிமக்களுக்கான முதலீடுகள்
Page 1 of 1
மூத்த குடிமக்களுக்கான முதலீடுகள்
மூத்த குடிமக்களுக்கான முதலீடுகள்
- யசீஷ் தாஹியா, முதன்மை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர், பாலிசி பஜார்.காம்
எந்த வயதினராக இருந்தாலும், முதலீட்டுக்கான முடிவுகளை எடுப்பதில் கவனமான திட்டமிடுதலும், சந்தை குறித்த ஆய்வும் தேவை. வருவாய் ஈட்டாத வயதினரைப் பொருத்தவரையில் நிதி பாதுகாப்பு மற்றும் உயர் பயன்கள் ஆகியவை குறிப்பாக முக்கிய கவலையாக உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கமும், குறைந்து வரும் வட்டி விகிதமும் இந்தப் பிரிவு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் சிரமத்தை அளிக்கின்றன.யசீஷ் தாஹியா
முதலீடுகளை மேற்கொள்ளும் போது மூத்த குடிமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஓரிரு விஷயங்கள் உள்ளன.
மூத்த குடிமக்களைப் பொருத்தவரையில் இது அவர்களது வாழ்நாள் சேமிப்பாக இருப்பதுடன் எதிர்கால வாழ்வாதாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த முதலீடுகள் செய்யப்படுகின்றன.
எனவே, அவர்கள் பாதுகாப்பும் நிலையான பயன்களையும் தரக்கூடிய திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்த முதலீடுகள்தான் அவர்கள் தங்களது வழக்கமான செலவுகளுக்கான ஒரே நிதி ஆதாரமாக இந்த முதலீடுதான் உள்ளது என்பதையும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இறுதியாக அவர்கள் முதலீடு செய்யும் வழிமுறைகள் அவர்களது செலவுகளுக்கு தேவைப்படும் போது பணப் புழக்கத்தை அதிக அளவில் தருவதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நீங்கள் ஓய்வுபெற்றவராக இருந்தால், நீங்கள் பின்பற்றுவதற்கான சில வாய்ப்புகளை பார்க்கலாம்.
சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம் (எஸ்சிஎஸ்எஸ்)
இந்திய அரசு குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள சேமிப்பு திட்டம். இதில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஐந்து ஆண்டு காலத்திற்கான இந்த முதலீட்டு திட்டம் 9 சதவிகித வட்டியை அளிக்கிறது.
மன்த்லி இன்கம் பிளான்ஸ் (எம்ஐபி)
நீங்கள் ரிஸ்க்களை எதிர்கொள்வதற்கு தயாரானவராக இருந்தால் நீங்கள் மாதாந்திர வருவாய் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இவை மியூச்சுவல் மிபண்ட் நிறுவனங்கள் அளிக்கும் சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு வாய்ப்பு. எம்ஐபி எனப்படும் இந்த மாதாந்திர வருவாய் திட்டங்களில் 15 முதல் 20 சதவிகிதம் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் பயன்களுக்கு வரி கிடையாது என்ற போதிலும், நீங்கள் சந்தை ரிஸ்க்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஃபிக்சட் டெபாசிட்கள்
நிரந்தர வைப்புக் கணக்கு எனப்படும் ஃபிக்சட் டெபாசிட்கள் மற்ற முதலீடுகளைவிட கூடுதலாக 0.5 சதவிகித வட்டி அளிக்கக்கூடியது என்பதால் மூத்த குடிமக்களுக்கு ஏற்ற முதலீட்டு வாய்ப்பாகும். தற்போது நிரந்தர வைப்புகளுக்கான வட்டி விகிதம் குறைந்து வருகிறது. எனினும் சில வங்கிகள் அவற்றுக்கு அதிக வட்டி அளிக்கின்றன.
டெட் மியூச்சுவல் ஃபண்ட்கள்
மூத்த குடிமக்கள் குறைந்த ரிஸ்க் கொண்ட டெட் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். டெட் மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆண்டுக்கு சுமார் 10 சதவிகித வருமானத்தை தருகின்றன.
-விகடன் - யசீஷ் தாஹியா, முதன்மை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர், பாலிசி பஜார்.காம்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்புத் திட்டம் இது தான்
» வேலைக்கு செல்லும் பெண்களுக்கான முதலீடுகள்
» லாபம் தரும் பரஸ்பர நிதி முதலீடுகள் - சொக்கலிங்கம் பழனியப்பன்
» இழப்பை தரும் இலக்கு தவறிய முதலீடுகள்
» வயதுக்கேற்ற வருமான வரி சேமிக்கும் முதலீடுகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum