Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
இன்ஷூரன்ஸ் பாலிசி கவனிக்க வேண்டிய க்ளெய்ம் ரேஷியோ!
Page 1 of 1

ஹெல்த் இன்ஷூரன்ஸ், லைஃப் இன்ஷூரன்ஸ் என எந்த பாலிசியாக இருந்தாலும், பாலிசி எடுக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் க்ளெய்ம் விகிதத்தைப் பார்த்த பின்புதான் பாலிசி எடுக்க வேண்டும் என்கிறார்கள், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்கள்.
அது என்ன க்ளெய்ம் விகிதம்?
இன்ஷூரன்ஸ் நிறுவனம், எத்தனை சதவிகித பாலிசிகளுக்கு க்ளெய்ம் கொடுத்தி ருக்கிறது என்பது க்ளெய்ம் விகிதம் எனப்படும். இது அதிகமாக இருக்கும் நிறுவனத்தில் பாலிசி எடுப்பது நல்லது. அதேநேரத்தில், இந்த க்ளெய்ம் விகிதத்திலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன.
க்ளெய்ம் விகிதத்தை ஏன் கவனிக்க வேண்டும், அதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து மும்பையைச் சேர்ந்த இன்ஷூரன்ஸ் ஆலோசகர் வருண்குமார் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
க்ளெய்ம் விகிதம் ஏன் முக்கியம்!
''ஹெல்த் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, பெரும்பாலும் கேஷ்லெஸ் வசதியை பாலிசிதாரர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த வசதி இல்லாதவர்கள் மருத்துவச் செலவுகளுக்கான ரசீதைக் கொடுத்து க்ளெய்ம் செய்துகொள்ள முடியும். இதில் ஏதாவது சிக்கல் எனில், இன்ஷூரன்ஸ் நிறுவனம் அல்லது டிபிஏவிடம் பாலிசிதாரரே நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும். க்ளெய்ம் செய்வதில் ஏதாவது சிக்கல் இருந்தாலும் பாலிசிதாரர் அதற்கான காரணத்தைக் கேட்டு பாலிசி எடுக்கும் போது இன்ஷூரன்ஸ் நிறுவனம் என்ன கூறியிருந்தது, இப்போது என்ன கூறுகிறது, பாலிசி பத்திரத்தில் என்ன உள்ளது என்பதைப் பார்த்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் பேச முடியும்.
ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை, பாலிசிதாரர் இறந்த பிறகுதான் க்ளெய்ம் செய்ய முடியும். அதுவும் நாமினிதான் க்ளெய்ம் செய்வார். அந்தச் சமயத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனம் க்ளெய்ம் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டால், பாலிசி எடுத்தும் பயன் இல்லாமல் போய்விடும். மேலும், பாலிசி எடுத்துள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை எப்படி அணுக வேண்டும் என்பது நாமினிக்குத் தெரியாமல் இருக்கலாம். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையும் அதிகமாக இருக்கும். எனவே, பாலிசியில் க்ளெய்ம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் பொருளாதார ரீதியாக பாலிசிதாரரின் குடும்பம் பாதிக்கப்படும். எனவே, பாலிசி எடுப்பதற்கு முன்பே இதையெல்லாம் கவனிப்பது நல்லது.
கவனிக்க வேண்டியது என்ன?
இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் க்ளெய்ம் விகிதத்தைப் பார்க்கும்முன் எத்தனை பாலிசிகள் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். அதில் எத்தனை பாலிசிகளுக்கு அந்த நிறுவனம் க்ளெய்ம் செட்டில் செய்துள்ளது, அதை எத்தனை நாட்களுக்குள் செட்டில் செய்துள்ளது, எவ்வளவு பாலிசிகளின் க்ளெய்ம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.
தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த அனுபவம் என்பது 10-15 ஆண்டுகள்தான் இருக்கும். இதில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். அதாவது, ஒரு வருடத்தில் மொத்தமாக 100 பாலிசிகள்தான் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். அனைத்து பாலிசிகளுக்கும் க்ளெய்ம் வழங்கியிருந்தால், அந்த நிறுவனத்தின் க்ளெய்ம் விகிதம் 100 சதவிகிதமாக இருக்கும். உதாரணத்துக்கு, மொத்த பாலிசியில் 2 பாலிசி களின் க்ளெய்ம் நிராகரிக்கப்பட்டுள்ளது எனில், அப்போது அந்த நிறுவனத்தின் க்ளெய்ம் விகிதம் 98 சதவிகிதம் ஆகும்.
ஆனால், எல்ஐசி போன்ற பழைய நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பாலிசிகள் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்கப்படும். இதில் கட்டாயம் குறிப்பிட்ட அளவு பாலிசிகளின் க்ளெய்ம் நிராகரிக்கப்படும். இதனால் க்ளெய்ம் விகிதம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், க்ளெய்ம் வழங்கப்பட்ட பாலிசிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே, எவ்வளவு பாலிசி களுக்கு க்ளெய்ம் செட்டில் செய்யப்பட்டுள்ளது, அது எத்தனை நாட்களுக்குள் செட்டில் செய்யப் பட்டுள்ளது என்பதையும் கவனிப்பது முக்கியம்.
புதிய நிறுவனங்களின் நிராகரிப்பு அதிகம்!
புதிதாகத் துவங்கப்பட்டுள்ள தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அதேபோல, பாலிசியின் காலமும் குறைவாக இருக்கும். ஒருவர் பாலிசி எடுத்த 4, 5 வருடத்தில் க்ளெய்ம் செய்ய வந்தால், அதிகமான விசாரணைகள் இருக்கும்.
இதனால் அந்த நிறுவனத்தில் க்ளெய்ம் நிராகரிப்பு அதிகமாக இருக்கும். ஏனெனில், மொத்த பாலிசிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும்.
இதனால் க்ளெய்ம் செய்யப்படும் பாலிசிகளுக்கு அதிக விசாரணைக்குப் பிறகே க்ளெய்ம் செட்டில் செய்யப்படும். இதன் விளைவாகக் குறைவான பாலிசிகளுக்குத்தான் க்ளெய்ம் வழங்கப்படும்.
ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம் லாபம் அடைய தொடர்ந்து 10, 15 வருடம் செயல்பாட்டில் இருப்பது முக்கியம். அப்போதுதான் அந்த நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட அளவு லாபம் கிடைக்கும். அதுவரை அந்த நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்து வந்திருக்கும்.
ஆனால், பழைய இன்ஷூரன்ஸ் நிறுவனங் களில் இந்தச் சிக்கல் இருக்காது. ஏனெனில், மொத்த பாலிசிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் க்ளெய்ம் எளிதாக வழங்கப்படும். மேலும், பாலிசியின் கால அளவும் அதிகமாக இருக்கும். இதனால் விசாரணைகள் குறைவாகவே இருக்கும்' என்றார்.
க்ளெய்ம் நிராகரிப்புக் காரணங்கள்!
இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் க்ளெய்ம் பெரும்பாலும் சின்னச் சின்ன காரணங்களுக்காக நிராகரிப்படுகிறது. அதாவது, மெடிக்ளெய்ம் பாலிசியில் க்ளெய்ம் செய்யும்போது சில ஆவணங்களை டிபிஏ கேட்கும். அவை இணைக்கப்படவில்லை எனில், க்ளெய்ம் வழங்குவதில் காலதாமதமாகும். மேலும், சில ஆவணங்களின் ஒரிஜினலை டிபிஏ கேட்கும் போது தரத் தவறியிருப்பார்கள்.
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் சிலர் நாமினியைக் குறிப்பிடத் தவறியிருப்பார்கள். அப்படியே குறிப்பிட்டிருந்தாலும், அதிலும் நாமினி பெயர், வயது, உறவுமுறை ஆகியவற்றில் ஏதாவது தவறு செய்திருப்பார்கள். சிலர் திருமணத்துக்குமுன் பாலிசி எடுக்கும்போது பெற்றோரின் பெயரை நாமினியாகப் போட்டிருப் பார்கள். இடையில் நாமினி இறந்திருக்கக்கூடும். அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவித்து, புதிய நாமினி பெயரைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். இதனால் க்ளெய்ம் கொடுக்க கால தாமதமாக வாய்ப்புள்ளது.
பிரீமியம் குறைவாக உள்ளது என பாலிசியை எடுக்காமல், அந்த நிறுவனத்தின் க்ளெய்ம் விகிதம் எப்படி உள்ளது என்பதைக் கவனித்து பாலிசி எடுப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.
க்ளெய்ம் விகிதம்:எங்கு, எப்படிப் பார்ப்பது?
''இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், பாலிசிகளின் (ஹெல்த் மற்றும் லைஃப்) க்ளெய்ம் விகிதத்தை ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் வெளியிட வேண்டும் என்பது விதிமுறை. எனவே, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் இணைய தளத்தில் க்ளெய்ம் விகிதம் வெளியிடப்பட்டி ருக்கும். மேலும், எவ்வளவு நாட்களுக்குள் க்ளெய்ம் செட்டில் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலும் இருக்கும். இந்தத் தகவல் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமான ஐஆர்டிஏ இணையதளத்திலும் வெளியிடப்படும். அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் க்ளெய்ம் விகிதத்தையும் அக்டோபர் மாதத்தில் திரட்டி, அதை அடுத்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஐஆர்டிஏ வெளியிடும். இந்தத் தகவல் ஐஆர்டிஏவின் ஆண்டு அறிக்கையில் இருக்கும். தற்போது 2012-13-ம் ஆண்டுக்கான க்ளெய்ம் விகிதம் ஐஆர்டிஏவின் இணையத்தளத்தில் உள்ளது.
(https://www.irda.gov.in/ADMINCMS/cms/NormalData_Layout.aspx?page=PageNo764&mid=31.1 என்ற இணையதளத்தில் ஒவ்வொரு நிறுவனத்தின் க்ளெய்ம் விகிதத்தையும் பார்க்கலாம்.) இங்கே அனைத்து வகையான இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கும் க்ளெய்ம் விகிதம் கொடுக்கப்பட்டிருக்கும்.
தவிர, ஒரு பாலிசிக்கான க்ளெய்ம் எத்தனை நாட்களுக்குள் செட்டில் செய்யப்பட்டுள்ளது என்பதையும் கட்டாயமாகப் பார்க்க வேண்டும். அதாவது, இன்ஷூரன்ஸ் க்ளெய்மை 30 நாட்களுக்கு செட்டில் செய்தால் நல்லது. அதிகபட்சம் 90-180 நாட்களுக்குள் க்ளெய்ம் செட்டில் செய்திருக்க வேண்டும். மேலும், 30 நாட்களுக்குள் எவ்வளவு பாலிசியைச் செட்டில் செய்திருக்கிறார்கள்,
90-180 நாட்களுக்குள் எவ்வளவு பாலிசிகளுக்கு க்ளெய்ம் செட்டில் செய்திருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். 90-180 நாட்களுக்கு மேல் க்ளெய்ம் செட்டில் செய்யும் நிறுவனங்களில் பாலிசி எடுப்பதை முடிந்தவரை தவிர்த்துவிடுவது நல்லது.
தற்போதுள்ள புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது, 30 நாட்களுக்குள் 73 சதவிகித பாலிசிகளுக்கும், 30 முதல் 90 நாட்களுக்குள் 7.93 சதவிகித பாலிசிகளுக்கும், 90 முதல் 180 நாட்களுக்குள் 1.18 சதவிகித பாலிசிகளுக்கும், 180 நாட்களுக்குமேல் மீதமுள்ள பாலிசிகளுக்கும் க்ளெய்ம் செட்டில் செய்யப்பட்டிருக்கிறது.''
--ந.விகடன் அது என்ன க்ளெய்ம் விகிதம்?

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... எடுக்கும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
» ஹெல்த் இன்ஷூரன்ஸில் முழுமையான க்ளெய்ம் கிடைக்க...கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
» லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்!
» ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... கிடைக்காமல் போவதற்கு யார் காரணம்?
» லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum