Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... கிடைக்காமல் போவதற்கு யார் காரணம்?
Page 1 of 1
ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... கிடைக்காமல் போவதற்கு யார் காரணம்?
உடல் ஆரோக்கியம் மனிதனின் அடிப்படை உரிமை. அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். இன்று மருத்துவச் செலவு இருக்கும் நிலையில் நடுத்தர, கீழ்தட்டு மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தரமான மருத்துவமும் ஆரோக்கியமான வாழ்க்கையும் நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டவையே ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்கள். குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில் பிரீமியமாக நாம் செலுத்தும் தொகையை வைத்து, அவசர காலத்தில் நிதி நெருக்கடியைச் சமாளிக்க நமக்கு திருப்பி அளிக்கப்படுபவைதான் இந்தத் திட்டங்கள்.
வெறும் 28 கோடி பேர்...
ஆனால், இன்ஷூரன்ஸ் துறையின் உண்மை நிலை அப்படி இல்லை. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 28 கோடி பேர் மட்டுமே ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளனர். அதிலும் பெரும்பாலானவை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக எடுக்கப்பட்டவை. மக்கள் தானாக முன்வந்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது அரிதாகவே உள்ளது.
எந்த நோய் வந்தாலும் சிகிச்சையைப் பணம் செலவு செய்து பெறமுடிகிற பணக்காரர்கள்தான் புத்திசாலித்தனமாக இன்ஷூரன்ஸ் எடுக்கின்றனர். ஆனால், நோய்க்கான மருந்து, மாத்திரைகளை வாங்கவோ, சிகிச்சை எடுத்துக்கொள்ளவோ பணமில்லாத நடுத்தர மற்றும் ஏழை மக்கள், எதற்கு வீண் செலவு என்று இன்ஷூரன்ஸ் பக்கமே போவதில்லை. இதனால் உயிரிழப்புகளும், நிதி நெருக்கடியும் ஏற்படுவதைப் பற்றி அவர்கள் யோசிப்பதில்லை.
இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் காரணமா?
இந்தியாவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் துறை வளராமல் இருப்பதற்கு மக்களின் இந்த அறியாமை மட்டும்தான் காரணமா என்றால் இல்லை. இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும், மருத்துவமனை களும்கூட ஒரு வகையில் காரணம்தான். இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும், மருத்துவமனை களும் தங்களின் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதால் சாதாரண மக்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது இன்றுவரை சென்று சேராத விஷயமாக இருக்கிறது.
நம்முடைய இன்ஷூரன்ஸ் துறையின் மாதிரி, அமெரிக்காவிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்திய இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அமெரிக்க இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைப் போல செயல்படுகின்றனவா எனில் இல்லை. அமெரிக்காவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்போரின் எண்ணிக்கை கிட்டதட்ட 90%. ஆனால், இந்தியாவில் 20 சதவிகிதம்கூட இல்லை.
சில கேள்விகள்...
ஹெல்த் இன்ஷூரன்ஸ் விஷயத்தில் எங்குதான் பிரச்னை? இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும், மருத்துவமனைகளும் சேர்ந்து லாபி செய்வதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா? இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்யும்போது ஏதோ ஒரு காரணம் காட்டி க்ளெய்ம் தர மறுத்து விடுகின்றன நிறுவனங்கள் என்பது எந்த அளவுக்கு உண்மை என்கிற கேள்விகளை வெல்த்லேடர் நிதி ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.ஸ்ரீதரனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்து சொன்னார் அவர்.
‘‘தற்போது இந்தியாவில் நான்கு பொதுத்துறை மற்றும் 22 தனியார் துறை நிறுவனங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்களை விநியோகித்து வருகின்றன. இவற்றில் ஹெல்த் இன்ஷூரன்ஸ்களை மட்டுமே செயல்படுத்தும் ஐந்து நிறுவனங்கள் உள்ளன. மற்ற நிறுவனங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸோடு சேர்த்து பிற இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் விநியோகித்து வருகின்றன.
ஹெல்த் இன்ஷூரன்ஸில் பல வகைகள் உள்ளன. இவற்றில் ரூ.50,000 முதல் ரூ. 1 கோடி வரை கவரேஜ்கள் கிடைக்கும். கவரேஜ்களுக்கு ஏற்றபடி பிரீமியம் இருக்கும்.
மாறும் மக்களின் புரிதல்!
பொதுவாகவே, பலரிடம் இருந்து பிரீமியம் வாங்கி தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே க்ளெய்ம் தருவதுதான் இன்ஷுரன்ஸ். ஆனால், யாரோ க்ளெய்ம் வாங்கிக் கொண்டு போக, நாம் ஏன் வீணாக பிரீமியம் கட்டவேண்டும் என்று தவறாக நினைக்கிறார்கள்.
ஒரு காலத்தில் நஷ்டத்தில் இயங்கிவந்த இன்ஷூரன்ஸ் துறை சமீப ஆண்டுகளில் நன்றாகவே லாபம் அடைந்திருக்கின்றன. மக்களின் தவறான புரிதல் தற்போது மாறத் தொடங்கியிருக்கிறது. ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. ஆனாலும், இன்ஷூரன்ஸில் க்ளெய்ம் தொடர்பான புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
ஏனெனில் மற்ற இன்ஷூரன்ஸ்களைக் காட்டிலும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் சிக்கலானது. நமக்கு எப்போது என்ன நடக்கும், என்ன நோய் வரும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் ரெகுலர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஒன்றை வைத்து எல்லாப் பிரச்னைகளுக்கும் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாது.
இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேனில் 2014-15 நிதி ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள புகார்களின் எண்ணிக்கை 11,038. இவற்றில் 31 மார்ச் 2015-ன்படி, நிலுவையில் இருந்த புகார்களின் எண்ணிக்கை 8,653. இவற்றில் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு க்ளெய்ம் வழங்கப்பட்டவற்றின் எண்ணிக்கை 2,687. விளக்கம் அளிக்கப்பட்டபிறகு திரும்பப் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 773. தள்ளுபடி செய்யப்பட்ட புகார்கள் 1,404. ஏற்றுக் கொள்ளப்படாத புகார்களின் எண்ணிக்கை 3,789. மொத்த புகார்களில் இவை 43%. ஒருவர் ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை எத்தனை ஆண்டுகள் தொடர்கிறார் என்பதைச் சொல்லும் ரேஷியோ மிகக் குறைவாகவே இருக்கிறது. இன்ஷூரன்ஸ் எடுத்து சில தவணை செலுத்து வதற்குள் தனக்கு இந்த பாலிசி ஏற்றதில்லை என்று பலர் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள்.
ஹெல்த் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, வெளிப்படைத்தன்மை இல்லாமை, பாலிசியைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள அறியாமை, தகவல் பரிமாற்றத்தில் உள்ள இடைவெளி ஆகியவைதான் முக்கியப் பிரச்னைகளாக உள்ளன.
ஹெல்த் இன்ஷூரன்ஸில் இன்ஷூரன்ஸை விநியோகிக்கும் நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு அனைத்து விவரங்களையும் சொல்வதில்லை, பாலிசி எடுப்பவரும் தனக்குள்ள பிரச்னைகளை வெளிப்படையாகச் சொல்வதில்லை. இதனால் க்ளெய்மை மறுக்க இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு எளிதில் காரணங்கள் கிடைத்துவிடுகின்றன” என்றார்.
மருத்துவமனை என்ன சொல்கிறது?
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்களை மருத்துவமனைகள் எப்படி நடத்துகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள சென்னையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றோம். பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர் நமக்கு சில தகவல்களை வழங்கினார்.“எங்களுடைய மருத்துவமனை மட்டுமல்ல, ஓரளவுக்கு டீசன்டான அனைத்து மருத்துவமனை களிலும் வருகிற நோயாளிகளிடம் அவர்கள் கட்டணம் செலுத்தவேண்டிய தருணத்தில் ஏதேனும் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்பதை கேட்கவே செய்கிறோம். மேலும், எங்களுக்கு செலுத்தவேண்டிய கட்டணத்தை நோயாளி கட்டினால் என்ன, இன்ஷூரன்ஸ் நிறுவனம் கட்டினால் என்ன? இரண்டும் ஒன்றுதான். அதனால் அவற்றில் எந்த வேறுபாட்டையும் நாங்கள் காட்டுவதில்லை.
மேலும் நீங்கள் கூறுவதுபோல, இன்ஷூரன்ஸ் நிறுவனமும் மருத்துவமனைகளும் சேர்ந்து லாபி செய்து மக்களிடமிருந்து பணம் பிடுங்கும் வேலை எல்லாம் இங்கு நடப்பதில்லை. பிற மருத்துவமனை களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. மருத்துவமனை யுடன் டை-அப் செய்துள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசி என்றால் உடனடியாக க்ளெய்ம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிடுகின்றன. வேறு நிறுவனங்களின் பாலிசி என்றால் க்ளெய்ம் கிடைக்க சற்று தாமதமாகத்தான் செய்கிறது” என்றார்.
இன்ஷூரன்ஸ் மூலம் சிறுநீரகத்தில் கல் அடைப்பு பிரச்னைக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடராஜனுடன் பேசினோம். ‘‘அறுவை சிகிச்சை, தங்குவதற்கு, சாப்பாடு போன்றவற்றுக்கெல்லாம் சேர்த்து மொத்தமாக ரூ.18,000 அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலேயே க்ளெய்ம் கிடைத்தது. சிகிச்சை முடிந்ததும் அந்த விவரங்களை இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ஆட்கள் வந்து விவரங்களை சரிபார்த்த பின்னர் க்ளெய்ம் தொகையைத் தந்தார்கள். ஸ்கேன், லேப் டெஸ்ட் போன்றவற்றுக்கான செலவு நம் பொறுப்புதான்” என்றார்.
மருத்துவமனை தரப்பிலும், மக்களிடமும் பேசியதிலிருந்து ஒரு விஷயம் தெளிவானது. நாம் வைத்திருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி நம்முடைய தேவைக்கு ஏற்றதாக இருந்தால் க்ளெய்ம் கிடைப்பதில் பெரும்பாலும் பிரச்னை இருப்பதில்லை. அதே சமயம், பெரும்பாலானோருக்கு தங்களிடம் இருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி தொடர்பான விவரங்கள் தெரியவில்லை என்பதுதான் க்ளெய்ம் கிடைக்காமல் போவதற் கான காரணம் என்பதும் புரிந்தது. அதற்கான தீர்வு, மக்களிடமும் இன்ஷூரன்ஸ் நிறுவனங் களிடமும்தான் இருக்கின்றன என்று சொன்ன எஸ்.ஸ்ரீதரன் அதற்கு செய்ய வேண்டியவற்றைப் பட்டியலிட்டார்.
* ‘‘வருமான வரி சேமிப்புக்காக மட்டுமே இன்ஷூரன்ஸ் எடுக்கக் கூடாது.
* ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தவர்கள் சிகிச்சைக்கு, பாலிசி எடுத்த நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவ மனைகளுக்கு செல்வது நல்லது. அவசர நேரங்களைத் தவிர்த்து முன்கூட்டி எடுக்கவுள்ள சிகிச்சைகளை மூன்று நாட்களுக்குமுன் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரியப்படுத்தி அனுமதி வாங்கிக்கொள்ளவும்.
* நீங்கள் எடுத்த பாலிசியில் ஏதாவது புதிய விதிமுறைகள், மாற்றங்கள் வந்திருக்கிறதா என்பதை அவ்வப்போது தெரிந்துகொள்ளுங்கள்.
* பாலிசி எடுக்கும்முன் ஆலோசகரை அணுகி ஆலோசனை செய்யுங்கள். இன்ஷூரன்ஸை இளம் வயதிலேயே எடுக்கவேண்டும். அப்போதுதான் பிரீமியம் குறைவாக இருக்கும். நோய்களையும் நெருக்கடி இல்லாமல் சமாளிக்கலாம்.
* பிரத்யேகமான நோய்களுக்கு அவற்றுக்கான பிரத்யேக இன்ஷூரன்ஸ்களைத் தேர்ந்தெடுங்கள்.
* பாலிசி எடுக்கும்போது, நமக்கு உள்ள உடல் பிரச்னைகளை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
* மருத்துவமனையில் 24 மணிநேரம் இருந்து சிகிச்சைப் பெற்றிருந்தால் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும். அவசரப்பட்டு அல்லது யாராவது சொன்னார்கள் என்று இந்த 24 மணி நேரத்துக்குமுன் வீட்டுக்கு வந்து விடாதீர்கள். சில மருத்துவமனைகள், அவர்களுக்குப் படுக்கை தேவைப்படும் நிலையில் நீங்கள் வீட்டுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் 24 மணி நேரம் மருத்துவமனையில் இருந்ததாக ரிப்போர்ட் தந்துவிடுகிறோம் என்று சொன்னால் கேட்காதீர்கள். நீங்கள் சீக்கிரமாக வீட்டுக்கு வந்த விஷயம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் விசாரணையில் தெரியவந்தால் க்ளெய்ம் கிடைக்காது என்பதுடன், உங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசியே தள்ளுபடி செய்யப்படவும் வாய்ப்புண்டு.
* பாலிசி எடுத்த விஷயத்தை குடும்ப உறுப்பினர்களிடம் அவசியம் தெரிவிக்க வேண்டும்.ஏஜென்ட் அல்லது இன்ஷுரன்ஸ் ஆலோசகர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். வாடிக்கையாளரின் தேவை என்னவோ, அதற்கேற்ற பாலிசியை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். தாங்களாகவே ஏதோ ஒரு பாலிசியை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிவிடக்கூடாது.
* க்ளெய்மில் உள்ள வரம்புகள், விதிவிலக்குகள் மேலும் எப்படி க்ளெய்ம் செய்யவேண்டும், சமர்பிக்கவேண்டிய ஆவணங்கள் என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும்.”
இப்போது இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு (பாலிசிதாரர் ஏதாவது விவரத்தை மறைத்திருக்கிறார் என்று தெரிய வந்தாலும்) கட்டாயமாக க்ளெய்ம் வழங்கவேண்டும் என்று இந்திய இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) அறிவித்துள்ளது. எனவே, சரியான ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்து நிதி நெருக்கடி ஏற்படாமல் நோய்களையும் எதிர்பாராத விபத்துகளையும் எதிர்கொள்ளலாமே!
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்: ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா புதிய அம்சங்களுடன் மறு அறிமுகம்
» ஹெல்த் இன்ஷூரன்ஸில் முழுமையான க்ளெய்ம் கிடைக்க...கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
» லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்!
» இன்ஷூரன்ஸ் பாலிசி கவனிக்க வேண்டிய க்ளெய்ம் ரேஷியோ!
» ஏன் வேண்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
» ஹெல்த் இன்ஷூரன்ஸில் முழுமையான க்ளெய்ம் கிடைக்க...கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
» லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்!
» இன்ஷூரன்ஸ் பாலிசி கவனிக்க வேண்டிய க்ளெய்ம் ரேஷியோ!
» ஏன் வேண்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum