Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்!
Page 1 of 1

கணேஷ் ஐயர், மூத்த துணைத் தலைவர் (க்ளெய்ம்ஸ் அண்ட் அண்டர் ரைட்டிங்), கோட்டக் மஹிந்திரா ஓல்ட் மியூச்சுவல் லைஃப் இன்ஷூரன்ஸ்.
லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் என்றாலே இப்போதெல்லாம் மக்கள் எரிச்சலடைகிறார்கள். இன்ஷுரன்ஸ் பாலிசி அவர்களுக்கு அவசியமான ஒன்று; தவிர, அவர்களால் ஒரு பாலிசியை எடுக்க முடியும் என்றாலும்கூட அவர்கள் அப்படி எரிச்சல் அடைவதற்கு காரணங்கள் பலப்பல. அதில் முக்கியமான காரணம், க்ளெய்ம்.
லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்த பலருக்கு தாங்கள் எதிர்பார்த்த க்ளெய்ம் கிடைக்கவில்லை என்பதுதான் புலம்பலாகவே இருக்கிறது. ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் செட்டில் மென்ட் விகிதம் 90% என்று விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. அப்படியெனில் க்ளெய்ம் சரியாக கிடைக்கவில்லை என்று பாலிசிதாரர்கள் ஏன் புகார் செய்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே.
பாலிசிதாரர் கோரியுள்ள க்ளெய்மை சரியாக தர வேண்டும் என்பது ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலையாய கடமை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்ம் தொகையைக் குறைப்பதற்கும், முழுவதுமாக மறுப்பதற்கும் சொல்லும் காரணங்கள் என்னென்ன, எந்த இடத்தில் எல்லாம் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பவை ஒரு பாலிசிதாரர் தனக்கான க்ளெய்மை சரியாகப் பெற அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
சிக்கல்கள் இல்லாமல் க்ளெய்மை சரியாகப் பெறுவதற்கு கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கே கொடுத்துள்ளோம்.
1. நீங்கள் எடுக்க விரும்பும் ஆயுள் காப்பீடு பாலிசியை பற்றி முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதில் உங்களுக்குள்ள சந்தேகங்களையும் கேள்வி களையும் ஏஜென்டிடமோ, இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமோ கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
2. பாலிசி விண்ணப்பத்தை முழுவதுமாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலம் புரியவில்லை என்றால் தெரிந்த நண்பரையோ, உறவினரையோ படித்து காட்டச் சொல்லவும். முடிந்தவரை விண்ணப்பத்தை நீங்களே பூர்த்தி செய்யுங்கள். வேறொருவர் மூலமாகப் பூர்த்தி செய்தாலும், முழுவதுமாகப் படித்து, சரிபார்த்தபின் கையெழுத்திட வும். பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பத்தில் மறந்தும் கையெழுத்து போடாதீர்கள்.
3. மேலும், பாலிசியின் மூலம் கிடைக்கக்கூடிய அத்தனை பலன்களையும் கேட்டு, அவை உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்தால் மட்டும் அந்த பாலிசியில் கையெழுத்திடுங்கள்.
4. வயது, படிப்பு, வேலை, வருமானம், பழக்கவழக்கம், குடும்ப வரலாறு, உடல்நலம் மற்றும் ஏற்கெனவே உள்ள பாலிசிகள் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்யும்போது உண்மையான விவரங்களை மட்டுமே குறிப்பிடுங்கள். நீங்கள் கொடுக்கும் விவரங்களைப் பொறுத்தே உங்களுக்கான க்ளெய்ம் இருக்கும். தவறான விவரங்களால் க்ளெய்ம் குறையும் வாய்ப்புகளே அதிகம். சில சமயங்களில் முற்றிலும் மறுக்கப்படலாம்.
5. உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களைச் சரியாக வழங்கவும். இதன் மூலம் உங்களுடைய முதிர்வுத் தொகை / இழப்பீட்டு தொகையை விரைவாகவும் நேரடியாகவும் வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
6. நாமினியாக மிக நெருங்கிய குடும்ப உறுப்பினரை (வாழ்க்கைத் துணை - கணவன் / மனைவி, குழந்தை அல்லது பெற்றோர்) மட்டுமே குறிப்பிடுங்கள். அப்போதுதான் இழப்பீட்டைச் சிக்கல் இல்லாமல் எளிதில் பெற முடியும். மேலும், நாமினியின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் சரியாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
7. ஒன்றுக்கு மேற்பட்ட நாமினி கள் இருந்தால், அவர்களுக்கான பங்கீட்டை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு: வாழ்க்கைத் துணைக்கு 50%, பிள்ளைக்கு 50% 8. முக்கியமாக பாலிசி எடுத்திருப்பது குறித்து நாமினிக்கு தெரியப்படுத்துவது அவசியம்.
9. பாலிசி கான்ட்ராக்ட் வரும்போது, நீங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அனைத்தும் அந்த கான்ட்ராக்டில் இருக்கிறதா என்பதை முழுவதுமாக படித்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
10. ஐஆர்டிஏஐ விதிமுறைப்படி, நீங்கள் கையெழுத்திட்ட விண்ணப்பப் படிவத்துடன், அந்த பாலிசியில் கிடைக்கத்தக்க பலன்களின் விவரம் அடங்கிய பேப்பரும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அப்படி வரும் விண்ணப்பப் படிவமோ, பலன்கள் குறிப்பு பேப்பரோ உங்களுடையதாக இல்லை யெனில் உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் முறையிட வேண்டும்.
11. உங்களுடைய பாலிசி கான்ட்ராக்டை பாதுகாப்பான இடத்தில் பத்திரப்படுத்தவும். மேலும், நாமினியிடம் இது குறித்து தெரிவித்துவிட வேண்டும். அதில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொள்வதற்கான எண் மற்றும் விலாசம் இருந்தால் நாமினியிடம் தெரியப்படுத்தவும். பாலிசி தாரர் இறக்கும்பட்சத்தில் அதற்கான க்ளெய்மை உடனடியாகப் பெற வேண்டும் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
12. பாலிசிக்கான பிரீமியத்தை சரியான நேரத்தில் செலுத்திவிட வேண்டும். இதன் மூலம் க்ளெய்ம் குறைக்கப் படுவதையோ, மறுக்கப் படுவதையோ தவிர்க்கலாம்.
13.உங்களுடைய முகவரியையோ, நாமினியையோ மாற்ற விரும்பினால், உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துவிட வேண்டும். அப்போதுதான் உங்களைத் தொடர்புகொள்வதிலும் க்ளெய்ம் வழங்குவதிலும் சிக்கல் இருக்காது.
14. உங்களுடைய நாமினி என்பதை உறுதி செய்ய போது மான அடையாள அட்டை, முகவரி உறுதிச் சான்று கட்டாயம் அவசியம். உதாரணம்: ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு உள்ளிட்டவை.
15. நாமினிக்கு வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். அதன் மூலம் க்ளெய்ம் தாமதமாவதைத் தவிர்க்கலாம்.
16. பாலிசி கான்ட்ராக்டில் குறிப்பிட்டுள்ள, க்ளெய்முக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். உதாரணம்: இறப்புச் சான்று, மருத்துவர் அறிக்கை, மருத்துவமனை ஆவணங்கள் மற்றும் நாமினியின் கேஒய்சி ஆவணங்கள் ஆகியவை.
17. நாமினியானவர் பாலிசிதாரர் இறந்ததும், கூடிய விரைவில் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அணுகி அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்து க்ளெய்ம் குறித்த நடவடிக்கைகளை எடுத்துவிட வேண்டும்.
இவையனைத்தையும் சரியாக செய்தால் க்ளெய்ம் மறுக்கப் படுவதற்கான வாய்ப்பே இல்லை.
ந.விகடன் கணேஷ் ஐயர், மூத்த துணைத் தலைவர் (க்ளெய்ம்ஸ் அண்ட் அண்டர் ரைட்டிங்), கோட்டக் மஹிந்திரா ஓல்ட் மியூச்சுவல் லைஃப் இன்ஷூரன்ஸ்.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» லைஃப் இன்ஷூரன்ஸ்..! எத்தனை பாலிசி எடுக்கலாம்?
» இன்ஷூரன்ஸ் பாலிசி கவனிக்க வேண்டிய க்ளெய்ம் ரேஷியோ!
» லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது?
» ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... கிடைக்காமல் போவதற்கு யார் காரணம்?
» மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் புதிய பாலிசி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum