Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
2015-ல் மியூச்சுவல் ஃபண்ட்: மூன்றாண்டுகளுக்கு திட்டமிட்டு முதலீட்டைத் தொடங்குங்கள்!
Page 1 of 1

2014-ம் ஆண்டின் முடிவில் பங்குச் சந்தை சிறிது ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. இனி 2015-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும், பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யத் தயங்குபவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்குமா என்கிற கேள்விகள் எல்லாம் மனதைக் குடைந்துகொண்டிருக்க, அந்தக் கேள்விகளை ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி சங்கர் நரேனிடம் கேட்டோம். இதோ அவர் நமக்களித்த சிறப்புப் பேட்டி...
?‘‘2014-ல் உங்களது இனிமையான அனுபவங்களும் சாதனைகளும் என்ன?’’
‘‘இனிமையான அனுபவம் எனில், 2013 தொடங்கியே முதலீட்டாளர்கள் எங்களைத் தேடி வர ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக, சந்தை உயர்ந்தபின்புதான் முதலீட்டாளர்கள் வருவார்கள். ஆனால், சந்தை உயர்வதற்கு முன்பே முதலீட்டாளர்கள் எங்களைத் தேடிவந்ததுதான் இனிமையான அனுபவம். ஏறக்குறைய 1,500 கோடி ரூபாய் சந்தை உயர்வதற்கு முன்பே எங்களுக்குக் கிடைத்தது ஒரு சாதனைதான். தவிர, 2014-ம் ஆண்டில் கடன் சந்தையில் லாபம் பார்க்க முடியாது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அதிலும் பணம் பண்ண முடியும் என்கிற நம்பிக்கை எனக்குள் இருந்தது. நான் நினைத்தபடியே 2014-ல் கடன் சந்தையில் அதிக லாபத்தைத் தரமுடிந்தது. இதுவும் ஒரு சாதனைதான்.''
?‘‘2015-ல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு லாபம் தருமா?’’
‘‘2015-ல் பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்கிற வர்கள் மூன்றாண்டுகளுக்குத் திட்டமிட்டு முதலீட்டைத் தொடங்குங்கள். 2015-ஐ மட்டும் மனதில் வைத்துக்கொண்டு முதலீடு செய்யக்கூடாது. 2015, 16, 17 என மூன்றாண்டுகளை மனதில் வைத்துக்கொண்டுதான் முதலீடு செய்யவேண்டும். 2015-ல் ஒருவேளை சந்தை இறங்கினால், முதலீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டுமே ஒழிய, குறைப்பதோ அல்லது அறவே நிறுத்துவதோ கூடாது.
இப்படிச் சொல்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இன்றைக்கு உலக அளவில் சிறப்பாகச் செயல்படுகிறது இந்திய பொருளாதாரம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். தவிர, கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்தி ருப்பதாலும், மத்திய அரசாங்கம் தொடர்ந்து வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டிவருவதாலும் 2015-2017 இடையிலான காலம் இந்தியாவுக்கான தாக இருக்கும் என்கிற கருத்தை எல்லோரும் தெளிவாகச் சொல்கிறார்கள். கடன் சார்ந்த ஃபண்டுகளைப் பொறுத்தவரை, 2015-ல் வருமானம் கிடைக்கும். அடுத்துவரும் ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்று இப்போது சொல்ல முடியாது.’’
?‘‘2015-ல் எந்தெந்த செக்டார் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?’’
‘‘இந்தியா தொடர்பான எல்லா செக்டார்களும் நன்றாகவே செயல்படும். ஏற்றுமதி தொடர்பான தொழில்கள் நன்றாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை, எஃப்எம்சிஜி, ஓரளவுக்கு பார்மா துறையைத் தவிர, மற்ற துறைகள் அனைத்தும் நன்றாகவே செயல்படும் என்றே நினைக்கிறேன்.''
?‘‘எல்லா செக்டார்களும் நன்கு செயல்படும் எனில், செக்டோரல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?’’
‘‘என்னைப் பொறுத்தவரை, மியூச்சுவல் ஃபண்டில்தான் முதலீடு செய்யச் சொல்வேன். ஆனால், அதில் எந்த செக்டாரில் முதலீடு செய்வது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் ரிஸ்க் எடுக்கும் அளவை அறிந்து அதற்கேற்ப முடிவு செய்துகொள்ளுங்கள்.’’
?‘‘2015-ல் மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்குமா? அப்படிக் குறைத்தால் கடன் ஃபண்டுகள் தரும் வருமானம் குறையுமா?’’
‘‘2015-ல் இரண்டு முறை வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தாலும் குறைக்காவிட்டாலும் வட்டி குறையவே வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, 2014-ல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வில்லை. ஆனாலும், வட்டியானது குறைந்து கொண்டுதான் வருகிறது. வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றம் கடன் ஃபண்டிலும் தெரியும்.’’
?‘‘மேக் இன் இந்தியா’ திட்டம் நம் நாட்டில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும்?’’
‘‘அடுத்த 3 - 5 ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகை உச்சகட்ட வளர்ச்சியை அடைந்து, குறையவும் வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைக் கொண்டுவந்தால், இந்தியா உலக அளவில் ஓர் உற்பத்திக் கேந்திரமாக உருவாகும். இதனால் இந்தியாவில் தொழில் வளர்ச்சி பெருகும். நாங்கள் நடத்திவரும் ‘குரோத்’ ஃபண்ட் சீரிஸில் ‘மேக் இன் இந்தியா’ கருத்தைப் பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகிறோம்.’’
?‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது இன்னும் குறைவாகவே இருக்கிறது. இந்த முதலீட்டை அதிகரிக்க என்ன செய்யலாம்?’’
‘‘மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, விதிமுறைகள் அனைத்தும் முதலீட்டாளர்களின் நலனைக் காக்கிற வகையிலேயே உள்ளது. எனவே, பணத்தை சரியாக நிர்வாகம் செய்தாலே போதும்; வளர்ச்சி என்பது மெதுவாக வந்து கொண்டே இருக்கும். தவிர, இந்த முதலீட்டில் திருப்தி அடைந்த முதலீட்டாளர்கள் பலர் இருக்கிறார்கள். 2008-க்குப்பின் திருப்தியோடு இருக்கும் முதலீட்டாளர்கள் அதிகம் இருப்பது இப்போதுதான். இந்தத் திருப்தி அடைந்த முதலீட்டாளர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்த முதலீட்டின் அருமையை எடுத்துச் சொல்ல வேண்டும்.
தவிர, ரியல் எஸ்டேட்டிலும் தங்கத்திலும் நிறைய பணம் முடங்கிக் கிடக்கிறது. ரியல் எஸ்டேட்டில் வாடகை மூலம் கிடைக்கும் வருமானம் மிக மிகக் குறைவுதான். எனவே, வங்கி எஃப்டியிலும் பங்குச் சந்தையிலும் பணம் வந்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அது பயன்படும்’’.
?‘‘வரிச் சேமிப்புக்கான ஃபண்டுகளைக்கூட நம்மவர்கள் அதிகம் நாடாமல் இருக்கிறார் களே, அது ஏன்?’’
‘‘இஎல்எஸ்எஸ் ஃபண்டுகளை மக்கள் ஏன் நாடுவதில்லை என்பதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. கடந்த காலங்களில் அந்த ஃபண்டுகள் தந்த வருமானம் அதிகமாகவே இருந்திருக்கிறது. இருந்தாலும் மக்கள் அதை நாடாமலே இருக்கிறார்கள். இந்த ஃபண்டுகள் தொடர்பான விழிப்பு உணர்வை நாம் அதிகப்படுத்த வேண்டும்.’’
?‘‘அடுத்த சில ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, வேறு எந்த முதலீட்டைக் காட்டிலும் நல்ல வருமானம் தருவதாக இருக்குமா?’’
‘‘நீண்ட காலத்தில் நல்ல வருமானம் தருவதாக இருக்கும். 2015-ம் ஆண்டை மட்டும் மனதில் கொண்டு பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யாதீர்கள். மூன்று ஆண்டுகளுக்குக் குறையாமல் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளிலும் ஓராண்டு காலத்துக்கு கடன் சார்ந்த ஃபண்டு களிலும் முதலீடு செய்யுங்கள்.’’
--ந.விகடன் ?‘‘2014-ல் உங்களது இனிமையான அனுபவங்களும் சாதனைகளும் என்ன?’’

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட்: முதலீட்டைத் தொடங்க என்ன செய்ய வேண்டும்?
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» மியூச்சுவல் ஃபண்ட் : வரலாறு
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு...
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: இனி எஸ்.எம்.எஸ். போதும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum