வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


இன்ஷூரன்ஸ் க்ளைம் பிரச்னைகள்... தீர்வு தரும் ஆம்புட்ஸ்மேன்கள்!

Go down

இன்ஷூரன்ஸ் க்ளைம் பிரச்னைகள்... தீர்வு தரும் ஆம்புட்ஸ்மேன்கள்! Empty இன்ஷூரன்ஸ் க்ளைம் பிரச்னைகள்... தீர்வு தரும் ஆம்புட்ஸ்மேன்கள்!

Post by தருண் Tue Oct 14, 2014 1:41 pm

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது குறித்த விழிப்புணர்வு என்பது இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும், பாலிசி எடுத்தவர்களில் சிலருக்கு க்ளைம் கிடைப்பதில் சிக்கல் உருவாகி விடுகிறது. அதாவது, க்ளைம் படிவம் பூர்த்தி செய்வது, காலதாமதமாக க்ளைம் செய்வது என பல்வேறு காரணங்களினால் க்ளைம் நிராகரிக்கப்படுகிறது.
க்ளைம் தொகை 20 லட்சத்துக்குள் இருக்கும்போது இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன்களிடம் புகார் தெரிவிக்கலாம். ஆம்புட்ஸ்மேன்களிடம் எதற்கெல்லாம் புகார் செய்யலாம், எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன் வீரேந்தர் குமார்.

"இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன் என்பது பாலிசிதாரர்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதற்காகத்தான். ஆம்புட்ஸ்மேன்களிடம் பாலிசிதாரர்கள் நேரடியாக புகார் தெரிவிக்கலாம். இங்கு தனிநபர் எடுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ், மோட்டார் இன்ஷூரன்ஸ், லைஃப் இன்ஷூரன்ஸ் ஆகியவைக் குறித்தும் புகார் தெரிவிக்கலாம்.

பாலிசிதாரரின் பிரச்னை குறித்து பாலிசி எடுத்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் குறைதீர்க்கும் மையத்துக்குத் தெரிவித்து அதற்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்ற பிறகுதான் இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன்களிடம் புகார் தெரிவிக்க முடியும்.

காலதாமதமாக வழங்கும் க்ளைம், அதிகமாக வசூலிக்கும் இன்ஷூரன்ஸ் பிரீமியம், குறைவான தொகையை செட்டில் செய்வது அல்லது மொத்தமாக க்ளைம் நிராகரிப்பது ஆகியவைக் குறித்த புகார்களை ஆம்புட்ஸ்மேன்களிடம் தெரிவிக்கலாம்.

இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன் புகார் அளிக்க கட்டணம் எதுவும் கிடையாது. பாலிசிதாரர் புகார் அளிக்கும்போது, பாலிசியின் நகல், என்ன பிரச்னை, இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் புகார் அளித்ததற்கு என்ன பதில் கிடைத்தது என்பதற்கான கடிதம் ஆகியவற்றை இணைத்து புகார் அளிக்க வேண்டும்.
இங்கு வரும் புகார்களுக்கு, புகார் கொடுத்தவர் மற்றும் பாலிசி வழங்கிய இன்ஷூரஸ் நிறுவனம் என இரண்டு தரப்பையும் நேரில் அழைத்து பிரச்னை குறித்து விசாரனை நடத்தி முடிவு எடுப்போம். இதற்கு வழக்கறிஞர் தேவையில்லை.

க்ளைம் தொகை 20 லட்சம் ரூபாய் வரை உள்ள பாலிசிதாரர்கள்தான் ஆம்புட்ஸ்மேன்களிடம் புகார் அளிக்க முடியும். இந்தத் தொகைக்கு அதிகமாக க்ளைம் இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். பெரும்பாலான பாலிசிகள் காலதாமதமாக சமர்ப்பிப்பது, க்ளைம் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை என்ற காரணத்தினால் நிராகரிக்கப்படுகிறது. அதுவும் எதிர்பாராதவிதமாக வாகனம் தொலைந்து போகும்போது அந்த தகவலை அடுத்த 24 மணி நேரத்துக்குள் உடனடியாக இன்ஷூரன்ஸ் அலுவலகத்துக்குத் தெரிவிப்பது அவசியம். இதுபோலவேதான் அனைத்து வகையான இன்ஷூரன்ஸ் க்ளைம்களையும் உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிப்பது முக்கியம்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் பேசி க்ளைம் வாங்கிக் கொடுப்போம். ஆனால், காலதாமதத்துக்கு பாலிசிதாரர் கூறும் காரணம் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருப்பது அவசியம்." என்றார்.
- முக நூல்
-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum