Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஆன்லைனில் எடுப்பது லாபமா?
Page 1 of 1

ஆயுள் காப்பீட்டில் அதிகம் அறியப்படாத, அதிகம் எடுக்கப்படாத பாலிசியாக டேர்ம் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் குறைவான பிரீமியம் செலுத்தினாலே அதிக கவரேஜ் கிடைக்கும். பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் மட்டுமே க்ளைம் கிடைக்கும். மற்றபடி பிரீமியமாகச் செலுத்திய தொகை திரும்பத் தரப்பட மாட்டாது. மேலும், வருமானம் ஈட்டக்கூடியவர்கள் மட்டுமே இந்த பாலிசியை எடுக்க முடியும்.
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை நேரடியாகவும் வாங்கலாம், ஆன்லைன் மூலமாகவும் வாங்கலாம். ஆன்லைனில் டேர்ம் பாலிசி எடுக்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
ஆன்லைனில் டேர்ம் பாலிசி எடுக்கும்போது பிரீமியம் தொகையைச் செலுத்தியபின், வாடிக்கையாளருக்கு மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கிடைத்தப் பிறகு பிரீமியத்தை 25% -75% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஒரு சில நிறுவனங்கள் ரூ.50 லட்சம் வரை மருத்துவப் பரிசோதனை இல்லாமல் காப்பீடு வழங்குகிறது. இதில் முக்கியமான விஷயம், பாலசி எடுப்ப வருக்கு உள்ள மருத்துவப் பிரச்னைகள் எதையும் மறைக்காமல் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படை யில் மட்டுமே க்ளைம் செட்டில்மென்ட் இருக்கும்.
டேர்ம் இன்ரன்ஸ் பாலிசிகளை எப்படி தேர்வு செய்வது?
1. இன்ஷூரன்ஸ் கம்பெனியின் நிர்வாகத் திறன்!
ஒரு நிறுவனத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்முன் அந்த நிறுவனத்தின் பின்னணியைக் கட்டாயம் கவனிக்க வேண்டும். அந்த நிறுவனம் இன்ஷூரன்ஸ் துறையில் எத்தனை வருடங்களாக இருக்கிறது என்பதைப் பார்ப்பது அவசியம்.
2. பிரீமியம்!
நிறுவனத்துக்கு நிறுவனம் இன்ஷூரன்ஸ் பாலிசியின் பிரிமீயம் வித்தியாசப்படும். இதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதாவது, பிரீமியம் அதிகமாக இருக்கும் நிறுவனத்தின் பாலிசியில் ஏதாவது கூடுதல் வசதி உள்ளதா என்பதைக் கவனிப்பது அவசியம். மேலும், பிரீமியம் குறைவு என்பதால் மட்டும் ஒரு பாலிசியைத் தேர்வு செய்யக்கூடாது.
3. க்ளைம் விகிதம்!
டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்முன் அந்த நிறுவனத்தின் க்ளைம் விகிதத்தைக் கவனிப்பது மிக முக்கியம். ஆனால், ஆன்லைன் டேர்ம் பாலிசிகளின் க்ளைம் விகிதத்தைத் தனியாக எந்த நிறுவனமும் பதிவு செய்வது இல்லை. மேலும், ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி சில வருடங்கள்தான் ஆகிறது. அனைத்து க்ளைம்களும் சில சோதனைகளுக்குப் பிறகே செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று வருடம் க்ளைம் விகிதத்தின் அடிப்படையில் பாலிசியைத் தேர்வு செய்வது நல்லது.
4. வாடிக்கையாளர் சேவை!
ஆன்லைன் பாலிசியை எடுத்துவிட்டு, க்ளைம் செய்யும் தருவாயில், பாலிசிதாரரின் குடும்பத்தினர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சேவை மையத்தை மட்டும்தான் தொடர்புகொள்ள முடியும். இதற்கு, ஒரு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்குகிறதா என்று பார்க்க வேண்டும். நீங்கள் எடுக்கப்போகும் டேர்ம் பாலிசி பற்றிய அனைத்து விவரங்களும் தெளிவாகத் தெரிந்தால், அதனை ஆன்லைனில் தாராளமாக எடுக்கலாம்.
ஆன்லைனில் மட்டுமே!
சில முன்னணி நிறுவனங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஆஃப்லைனில் முழுவதுமாக தவிர்த்து, ஆன்லைனில் மட்டுமே வைத்துள்ளன. அதாவது, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, மேக்ஸ் லைஃப், பஜாஜ் அலையன்ஸ், ஏகன் ரெலிகர் நிறுவனங்கள் ஆன்லைனில் மட்டும் டேர்ம் பாலிசிகளை வைத்துள்ளன.
டேர்ம் பிளான்: நிதித் திட்டமிடலில் முதல்படி!
சந்தீப் பத்ரா, செயல் இயக்குநர், ஐசிஐசிஐ புரூ. லைஃப் இன்ஷூரன்ஸ்.
‘‘இன்றைக்கு தனிக் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவர்கள் வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் போதிய அளவுக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் எடுத்திருக்கிறார்களா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் தனிக் குடும்பத்தினர் சொந்த வீடு, பிள்ளைகளின் படிப்பு, திருமணம் ஆகியவற்றுக்கு நிதித் திட்டமிடல் (ஃபைனான்ஷியல் பிளானிங்) மேற்கொள்கிறார்கள். இதன்படி தங்களது முதலீட்டை அமைத்துக் கொள்கிறார்கள். அதேநேரத்தில், குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்த நிதித் திட்டமிடல் நிறைவேறாமல் போக அதிக வாய்ப்பு இருக்கிறது.
இதற்குமுன் கூட்டுக் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், குடும்பத்திலுள்ள மற்றவர்கள் உதவி செய்வார்கள். இப்போது தனிக் குடித்தனம் ஆகிவிட்டதால், அதுபோன்ற நிலை இல்லை. அந்த வகையில், நிதித் திட்டமிடலில் முதல்படியாக, வருமானம் ஈட்டும் நபர் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம்.
இந்த டேர்ம் பாலிசி எடுப்பதற்கு அதிகமாக செலவு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இது லைஃப் இன்ஷூரன்ஸின் எளிய வடிவமாக இருக்கிறது. இந்த பாலிசியில் பிரீமியம் குறைவாக இருக்கும். பாலிசிக் காலத்தில் பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் பாலிசி முடிவில் தொகை எதுவும் கிடைக்காது.
டேர்ம் பாலிசிக்கான கவரேஜ் என்பது இளம் வயதில் அதிகமாகவும், வயதான காலத்தில் குறைவாகவும் இருக்க வேண்டும். இளம் வயதில் ஆண்டு வருமானத்தைப்போல் 20 முதல் 30 மடங்கும், நடுத்தர காலத்தில் (40 வயதில்) 10 முதல் 20 மடங்கும், வயதானபின் (50 வயதில்) 5 முதல் 10 மடங்கும் இருப்பது நல்லது.”
-ந.விகடன் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை நேரடியாகவும் வாங்கலாம், ஆன்லைன் மூலமாகவும் வாங்கலாம். ஆன்லைனில் டேர்ம் பாலிசி எடுக்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» எல்.ஐ.சி ஆன்லைன் டேர்ம் பாலிசி: பாலிசிதாரர்களுக்கு லாபமா?
» A - Z வரை... என்ஆர்ஐ டேர்ம் இன்ஷூரன்ஸ்!
» டேர்ம் இன்ஷூரன்ஸ்: இது இருந்தால் போதும்!
» டேர்ம் இன்ஷூரன்ஸ்: தவறான புரிதல்கள்... சரியான தீர்வுகள்!
» டேர்ம் இன்ஷூரன்ஸ் - உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் ஸ்மார்ட் வழி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum