Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
டேர்ம் இன்ஷூரன்ஸ்: இது இருந்தால் போதும்!
Page 1 of 1

இன்ஷூரன்ஸ் என்றாலே நம்மூரில் எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு எண்டோவ்மென்ட் பாலிசிகளை வாங்குவதுதான் வழக்கம்! எண்டோவ்மென்ட் பாலிசிகளைவிட டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் குறைந்த செலவில் அதிக நன்மை கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
பன்னாட்டு கம்பெனியில் வேலை பார்த்த சுரேஷ§க்கும் இதேதான் நடந்தது. 36 வயதான இவர் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க விரும்பினார். இதற்கு எவ்வளவு பிரீமியம் என இன்ஷூரன்ஸ் ஏஜென்டிடம் விசாரித்தபோது, ஆண்டுக்கு 3.40 லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என்றார். இவ்வளவு பிரீமியம் கட்ட வேண்டுமா என்று மலைத்துப் போன சுரேஷ், தன் நண்பரான நிதி ஆலோசகரை அணுகி, இதற்கு ஏதாவது மாற்றுத் திட்டம் உண்டா என்று கேட்க, டேர்ம் பிளானை அறிமுகப்படுத்தினார் அவர். அதில், ஒரு கோடி ரூபாய் இழப்பீடுக்கான பிரீமியம் வெறும் 22,500 ரூபாய் என்று சொல்ல, உடனே அந்த பாலிசியை எடுத்தார்.
டேர்ம் பிளான் என்றால்..?
இன்ஷூரன்ஸ் என்பது ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர், அவருடைய எதிர்பாராத இறப்பால் அவர் குடும்பம் எந்த பொருளாதாரப் பாதிப்பும் அடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படுவது. இந்த இன்ஷூரன்ஸ் எண்டோவ்மென்ட், யூலிப், டேர்ம் பிளான் என பல வகையாக இருந்தாலும், இதில் நாம் ஏன் டேர்ம் பிளானை தேர்வு செய்ய வேண்டும்? எண்டோவ்மென்ட், யூலிப் பாலிசிகளுக்கும் டேர்ம் பிளானுக்கும் இடையே என்ன வித்தியாசம்?
டேர்ம் பிளானில் ஒருவர் பாலிசி எடுத்து, அந்த பாலிசி காலம் முடிவடைவதற்குள் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்திற்கு காப்பீடு தொகை கிடைக்கும். அவர் பாலிசி காலம் முடிந்தபிறகும் உயிரோடு இருந்தால் காப்பீடுத் தொகையோ, கட்டிய பிரீமியமோ கிடைக்காது. உதாரணமாக, சுரேஷ் ஒரு கோடி ரூபாய்க்கு 20 வருட பாலிசி எடுத்துள்ளார். இருபது ஆண்டுகளுக்குள் அவர் இறக்க நேர்ந்தால், அவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி ரூபாய் சேரும். அப்படி இல்லாமல் பாலிசி காலம் முடிந்தபிறகும் அவர் உயிரோடு இருந்தால் காப்பீடுத் தொகையோ, கட்டிய பிரீமியமோ எதுவும் கிடைக்காது. இந்த பாலிசியில் இறப்பு பலன் மட்டுமே கிடைக்கும். முதிர்வு பலன் எதுவும் கிடையாது.
எண்டோவ்மென்ட் பாலிசியில் ஒருவர் போடும் பணத்திற்கு அதிகபட்சம் 4-6% வருமானம் மட்டுமே கிடைக்கும். ஆனால், அதே பணத்தை 15 வருட பி.பி.எஃப். திட்டத்தில் முதலீடு செய்தால்கூட வருடத்திற்கு 8.6% வரியில்லா வருமானம் கிடைக்கும். இந்த வருமானம் எண்டோவ்மென்ட் பாலிசி மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகையைவிட அதிகமாகவே இருக்கும். (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்)
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் தங்களுடைய ஏஜென்டுகள் மூலமாகவே விற்பனை செய்கின்றன. இந்த வகையான பாலிசிகள் மூலம் ஏஜென்டுகளுக்கு கிடைக்கும் கமிஷன் குறைவு. மேலும், கட்டாய மருத்துவ பரிசோதனை, சுமார் 25 லட்ச ரூபாய்க்கு மேல் பாலிசி எடுக்க வேண்டும் என்றால் வருமானச் சான்று கொடுக்க வேண்டும் என்பது போன்ற சில நடைமுறைகள் இருப்பதால், இதை பாலிசிதாரர்களுக்கு தருவதைவிட அதிக கமிஷன் கிடைக்கும் எளிய பாலிசிகளையே விற்கிறார்கள்.
பாலிசி எடுப்பவர்களும் பாலிசி காலம் முடியும் வரை பணம் செலுத்திவிட்டு, இறுதியில் தனக்கு எதுவும் திரும்ப கிடைக்காது என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. இப்போது இருப்பதுபோல மாற்று முதலீட்டு வாய்ப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இல்லை. எனவே, காப்பீடை காப்பீடாக எடுக்காமல் முதலீட்டுத் திட்டமாகவும், வரிச் சேமிப்பு முறையாகவும் கருதினார்கள்.
ஆனால், தற்போது முதலீடு செய்வதற்கு நிறைய திட்டங்கள் இருக்கின்றன. அதனால் காப்பீடை முதலீடுடன் சேர்க்காமல், தனியாக டேர்ம் பிளான் மூலம் எடுக்க வேண்டும். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்குச் செலுத்தும் பிரீமியத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது. டேர்ம் பிளானில் குறைவான பிரீமியம், அதிகமான காப்பீடு தொகை இருப்பதால், தாங்கள் எடுக்கும் ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் கிளைம் செட்டில்மென்ட் விகிதம் எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். ஐ.ஆர்.டி.ஏ. இணையதளத்தில் அனைத்து நிறுவனங்களின் இழப்பீடு விகிதத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
டுத்து, காப்பீடு நிறுவனங்களின் பிரீமியத்தை ஒப்பிட்டுப் பார்க்கவும். இதில் முதிர்வு பலன் இல்லாததால், குறைவான பிரீமியம் உள்ள திட்டத்தைத் தேர்வு செய்யலாம். ஆனால், கிளைம் செட்டில்மென்ட் விகிதம் குறைவு என்றால் அவ்வகையான நிறுவனங்களைத் தவிர்க்கவும்.
சில நிறுவனங்கள், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி முடிவில் கட்டிய பிரீமியத்தைத் தந்துவிடு கிறார்கள். அதாவது, பாலிசி காலம் முடிந்தபிறகு உயிரோடு இருந்தால், அவர் செலுத்திய பிரீமியம் மட்டும் திரும்பக் கிடைக்கும். இவ்வகையான திட்டத்தில் பிரீமியம், வழக்கமான டேர்ம் பிளானைவிட அதிகமாக இருக்கும். நீங்கள் கட்டிய பணத்தைத் திரும்பத் தர அதிக பிரீமியம் வசூலிக்கிறார்கள். இதற்குப் பதில் டேர்ம் பிளான் எடுத்துவிட்டு மீதித் தொகையை வேறு திட்டத்தில் குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட், பி.பி.எஃப்., ஆர்.டி. (இதை ஆண்டு இறுதியில் ஃபிக்ஸட் டெபாசிட்டாக மாற்றிக்கொள்ள வேண்டும்) முதலீடு செய்தால் உங்களுக்கு கிடைக்கும் தொகை கட்டிய பிரீமியம் தொகையைவிட ஓரிரு மடங்கு அதிகமாக இருக்கும். அதனால், பாலிசி முதிர்வில் பிரீமியம் திரும்பக் கிடைக்கும் பாலிசிகளைத் தவிர்ப்பது நல்லது.
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் உயிரோடு இருந்தால் கட்டிய பணம் எல்லாம் வீண் என நீங்கள் நினைக்கலாம். டேர்ம் இன்ஷூரன்ஸுக்காக நீங்கள் செலுத்தும் தொகை உங்களுடைய கார்/பைக் போன்ற வாகனங்களுக்குச் செலுத்தும் பிரீமியம் போல ஆகும். வாகனங்களுக்கு விபத்து ஏற்பட்டால் அதை ஈடு செய்ய நமக்கு பணம் கிடைக்கும். எந்த விபத்தும் ஏற்படவில்லை என்றால் கட்டிய பிரீமியம் வீணாகிவிட்டதே என்று வருத்தப்படுவோமா என்ன? அதைப் போல உங்களுடைய நகைகளை பாதுகாப்பாக வங்கி லாக்கரில் வைக்கிறீர்கள். வங்கி உங்களிடமிருந்து லாக்கர் கட்டணம் வசூலிக்கிறது. உங்கள் வீட்டில் திருடு போகவில்லை என்றால், நான் வங்கி லாக்கர் கட்டணம் செலுத்தியது வீண் என்று நினைப்போமா என்ன?
இதைப் போலத்தான் டேர்ம் இன்ஷூரன்ஸுக்காக நாம் செலுத்தும் பிரீமியம். நமக்கு ஏற்படும் எதிர்பாராத இறப்பால், நம் குடும்பத்தைப் பொருளாதார இழப்பிலிருந்து காக்க, நாம் செலுத்தும் தொகையாக டேர்ம் பிளான் பிரீமியத்தை நினைக்க வேண்டும். நாம் உயிரோடு இருந்தால் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை (குழந்தைகளின் கல்வி/திருமணம், ஓய்வு) செய்துவிடுவோம். ஒருவேளை இல்லாது போனால் காப்பீட்டிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு நிறைவேற்ற முடியுமே!
என்ன, டேர்ம் பிளான் பாலிசி எடுக்க கிளம்பிட்டீங்களா?
தொகுப்பு: சி.சரவணன்.
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» A - Z வரை... என்ஆர்ஐ டேர்ம் இன்ஷூரன்ஸ்!
» டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஆன்லைனில் எடுப்பது லாபமா?
» டேர்ம் இன்ஷூரன்ஸ் - உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் ஸ்மார்ட் வழி!
» டேர்ம் இன்ஷூரன்ஸ்...ஏன், எதற்கு எப்போது அதிகரிக்க வேண்டும்?
» டேர்ம் இன்ஷூரன்ஸ்: தவறான புரிதல்கள்... சரியான தீர்வுகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum