வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


மியூச்சுவல் ஃபண்ட்... என்எஃப்ஓவில் முதலீடு செய்யலாமா?

Go down

மியூச்சுவல் ஃபண்ட்... என்எஃப்ஓவில் முதலீடு செய்யலாமா? Empty மியூச்சுவல் ஃபண்ட்... என்எஃப்ஓவில் முதலீடு செய்யலாமா?

Post by தருண் Sat Oct 18, 2014 12:15 pm

கடந்த ஒரு வருடமாக பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஏற்றத்தைப் பயன்படுத்திப் பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிய மியூச்சுவல் ஃபண்ட் (என்எஃப்ஓ) திட்டங்களைக் கொண்டு வருகின்றன. இது போன்ற புது ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை விளக்கிச் சொன்னார், ஹோலிஸ்டிக் இன்வெஸ்மென்ட் பிளானர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டி.ராஜன்.

1. புதிய மியூச்சுவல் ஃபண்ட் வெளியீடு என்பது பங்குச் சந்தை ஐபிஓ போல் கிடையாது. பங்குச் சந்தை ஐபிஓவில் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைத் திரட்டிய 12 நாட் களுக்குப்பின், அந்தப் பங்கு லிஸ்ட் ஆகும். அப்போது இருக்கும் தேவையைப் பொறுத்து பங்கின் விலை உயரும் அல்லது குறையும். ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் அப்படி லிஸ்ட் செய்யும்போது யூனிட் விலையில், அதிக ஏற்றம் இறக்கம் இருக்காது. அந்தவகையில் பங்கு முதலீடு போல் உடனடியாக, லாபமோ, நஷ்டமோ இருக்காது.

2. ஏற்கெனவே உள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்குமுன், அந்த ஃபண்டின் கடந்த காலச் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வோம். ஆனால், புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அப்படி ஆய்வு செய்ய முடியாது. அந்த ஃபண்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. எனவே, ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், ஏற்கெனவே நீண்ட காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. என்எஃப்ஓவில் முதலீடு செய்யும்போது, அந்த ஃபண்டின் மேனேஜர் யார்? அவர் நிர்வகித்து வரும் இதர ஃபண்டுகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைக் கவனிப்பது முக்கியம்.

மியூச்சுவல் ஃபண்ட்... என்எஃப்ஓவில் முதலீடு செய்யலாமா? Nav60

3. தற்போது நடைமுறையில் இல்லாத புது வகையான ஃபண்டுகள் வந்தால், அவற்றில் முதலீடு செய்வதைப் பரிசீலனை செய்யலாம். உதாரணமாக, 2007-ம் ஆண்டு வந்த கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் கோல்டு இடிஎஃப் ஃபண்டைக் குறிப்பிடலாம்.

4. சந்தை ஏறுமுகத்தில் இருக்கும்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிய திட்டங்களை அதிகமாகக் கொண்டு வருகின்றன. இப்போது குளோஸ்டு எண்டட் ஃபண்டுகள் முன்பைவிட அதிகமாகி வருகின்றன. இவற்றில் முதலீடு செய்வதில் அதிக ரிஸ்க் உள்ளது. குளோஸ்டு எண்டட் ஃபண்டுகளில், ஓப்பன் எண்டட் ஃபண்டுகளைப் போல நினைத்தபோது பணத்தை எடுக்க முடியாது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுதான் பணத்தை வெளியே எடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஃபண்ட் செயல்பாட்டை பொறுத்தவரை, குளோஸ்டு எண்டட் ஃபண்டைவிட ஓப்பன் எண்டட் ஃபண்ட் செயல்பாடு சிறப்பாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு, ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டை அறிமுகப் படுத்தும்போது, குளோஸ்டு எண்டட் ஃபண்டாக இருந்தது. ஆனால், அதன் செயல்பாடு பெரிதாக இல்லை. அதுவே, ஓப்பன் எண்டடாக மாறிய பிறகு இதன் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.

5. எஃப்எம்பி கடன் சார்ந்த புதிய மியூச்சுவல் ஃபண்ட் என்எஃப்ஓ வரும் போது அந்த ஃபண்டின் வருமானம் மட்டும் இல்லாமல், அதனுடைய போர்ட்ஃபோலியோ, ரேட்டிங் தெரிந்து முதலீடு செய்வது ரிஸ்கைக் குறைக்கும்.

6. குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த பங்குகளில் மட்டும் முதலீடு செய்யும் செக்டார் ஃபண்டுகளில் அதிக ரிஸ்க் இருக்கிறது. அந்தத் துறைக்கான வளர்ச்சி என்பது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்தான் இருக்கும். அந்தச் சமயத்தில் ஃபண்டின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். அதன்பிறகு பெரிதாக ஏற்றம் இருக்காது.

அதாவது, 2000-ம் வருடம் சந்தை ஏற்றத்தில் ஐ.டி துறை சார்ந்த என்எஃப்ஓகளும் 2007, 2008-ம் ஆண்டுகளில் இன்ஃப்ரா துறை சார்ந்த என்எஃப்ஓகளும் அதிகமாக வெளியிடப்பட்டன. ஆனால், அந்த ஃபண்டுகளின் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு பெரிதாக இல்லை.

எனவே, கூடியவரையில் பல துறை நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படும் டைவர்ஸிஃபைடு ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்’’ என்று முடித்தார் டி.ராஜன்.

இனி, என்எஃப்ஓகளில் முதலீடு செய்யும்போது இந்த விஷயங்களை யெல்லாம் அவசியம் கவனியுங்க!


-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum