Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பண்டிகை செலவுகள்... சமாளிக்கும் சூட்சுமங்கள்!
Page 1 of 1

இது பண்டிகைக் காலம். தீபாவளி தொடங்கி பொங்கல் வரை பல பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன. இந்தப் பண்டிகைகளின்போதுதான் நாம் புதிதாக துணிமணிகளை எடுக்கிறோம்; வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்குகிறோம். இதற்காக கணிசமான தொகையை செலவு செய்கிறோம். இந்தச் செலவுகள் எல்லாம் நாமே விரும்பிச் செய்யும் சுபச் செலவுகள் என்றாலும், எதிர்காலத்தில் அவை நமக்கு ஒரு சுமையாக மாறிவிடாத படிக்கு எப்படி சரியாகச் செய்வது? இதற்கு நாம் அவசியம் கவனித்தாக வேண்டிய விஷயங்கள் இதோ...
ஆஃபர்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்!
தீபாவளி, புத்தாண்டு போன்ற தினங்களுக்குப் புதிய ஆடைகளை அனைவரும் வாங்குவார்கள். அப்படி வாங்கும்போது மூன்று ஆடைகளாக எடுத்தால், 30% தள்ளுபடி அல்லது 2,000 ரூபாய்க்கு மூன்று ஆடைகள் என்கிற மாதிரியான கவர்ச்சிகரமான அறிவிப்புகள் உங்களை உடனடியாக வாங்கத் தூண்டும். ஒரு ஆடையை 600-700 ரூபாய் செலவில் எடுக்க வேண்டிய நீங்கள் ஆஃபர்களில் சிக்கி தேவையில்லாமல் 2,000 ரூபாயைச் செலவழிக்கும் சூழல் உருவாகும். இதேபோல, குடும்பத்தினர் அனைவரும் ஆஃபரில் ஆடைகளை வாங்கினால் 12,000 முதல் 13,000 வரை செலவாகும். ஒரு நடுத்தர வருமானம் கொண்ட குடும்பத்தில் இந்தத் தொகை என்பது சற்று அதிகம்தான். சிலர் போனஸ் பணம் முழுவதையுமே இப்படி செலவழித்துவிடுவது உண்டு. இதுபோன்ற ஆஃபர்களில் சிக்காமல், அதேசமயம் நல்ல விலையில் ஆடைகளைத் தேர்வு செய்து வாங்கும் போது பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
தேவையில்லாத செலவுகளைக் குறையுங்கள்!
பண்டிகையையொட்டி எது தேவை, எது தேவையில்லை என்று யோசித்து செலவு செய்யுங்கள். சில நிறுவனங்கள் பண்டிகை காலச் சலுகை என செல்போன், ஏசி, டிவி போன்ற பொருட்களுக்கு ஆஃபர்களை வழங்கும். இவற்றை உடனடியாக வாங்க வேண்டுமா என்று யோசித்துப்பார்த்து வாங்குவது நல்லது. காரணம், இந்தப் பொருட்கள் பண்டிகைக் காலத்தில் மட்டும் கிடைக்கக்கூடியவை அல்ல. எல்லா நேரத்திலும் கிடைக்கக் கூடியவையாகத்தான் இருக்கின்றன. இவற்றை ஆஃப் சீஸன் (Off Season) என்று சொல்லப்படும் காலத்தில் வாங்கினால், ஆஃபரைவிட விலை குறைவாகக் கிடைக்கும். உதாரணமாக, குளிர்காலத்தில் ஏசி வாங்கினால் விலை குறைவாகக் கிடைக்கும். இதுமாதிரி ஆஃப் சீஸனில் பொருட்களை வாங்க முன்பே திட்டமிட்டுக்கொள்வது அவசியம்.
பயணச் செலவுகளைக் குறையுங்கள்!
நம்மில் பெரும்பாலானோர் வெளியூரில் வேலை பார்ப்பவர்களா கவோ அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்களாகவோ இருக்கிறார்கள். அவர்கள் பண்டிகைக் காலங்களில் ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையில் கடைசி நேரத்தில் 400 ரூபாய் தந்து செல்ல வேண்டிய ஊருக்கு 1,000 ரூபாய் செலவழித்து போகிறார்கள். இப்படிச் செய்வதைவிட பண்டிகைக்கு ஊருக்குப் போவதாக திட்டம் இருந்தால், முன்கூட்டியே ரயில் அல்லது பஸ் டிக்கெட் எடுத்துவிடுவது நல்லது. இதனால் கூடுதல் செலவை புத்திசாலித்தனமாக தவிர்த்துவிட முடியும்.
விலைக்கு வாங்குவதைக் குறையுங்கள்!
பண்டிகை என்றாலே இனிப்புகள் இல்லாமல் இருப்பதில்லை. இன்றைக்கு நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வேலையைச் சுலபமாக்கிக்கொள்ள கடைகளில் விற்கப்படும் இனிப்புகளையும், பலகார வகை களையும் வாங்கி மகிழ்கின்றனர்.
இதனால் ஏற்படுவதென்னவோ அதிக செலவுதான். இந்தச் செலவுகளைச் சமாளிக்க வீட்டிலேயே வார இறுதி நாட்களில் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, பலகாரங்களையும் இனிப்பையும் செய்துவிடலாம். கடையில் கொஞ்சமாக இனிப்புகளை வாங்கினால் செலவும் குறையும். நாம் நிறைய இனிப்பையும் சாப்பிட முடியும்.
முன்கூட்டியே சேமியுங்கள்!
பண்டிகை நெருங்கும்போது அதற்குத் தேவையான பணத்தை நோக்கி ஓடுவதை விட்டுவிட்டு, முன்கூட்டியே வங்கி ஆர்.டி மூலம் திட்டமிட்டுச் சேமித்தால், எல்லோருக்கும் விரும்புவதை வாங்க முடியும். பண்டிகைகளுக்கென்றே தீபாவளி ஃபண்ட் போன்ற திட்டங்களில் சேருவதைத் தவிர்ப்பது நல்லது.
தீபாவளி செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்குவது கூடவே கூடாது. பண்டிகை செலவுகளுக்காக திட்டமிட்டு சேமித்தாலே போதும், எல்லா பண்டிகளையும் நாம் குதூகலமாக கொண்டாடலாம்!
-ந .விகடன் ஆஃபர்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்!

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்!
» தவிர்க்க வேண்டிய வீண் செலவுகள்!
» இன்ஷூரன்ஸ் பாலிசிகள்... க்ளைம் பெறும் சூட்சுமங்கள் !
» பட்ஜெட் 2014 : வரிச் சலுகைகளை லாபகரமாக மாற்றிக்கொள்ளும் சூட்சுமங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum