வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்!

Go down

பர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்! Empty பர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்!

Post by தருண் Sat Oct 18, 2014 12:28 pm

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பண்டிகை ஆஃபர்கள் நம் வீட்டின் கதவைத் தட்ட தொடங்கியுள்ளன. முன்பு கடைகளுக்குச் சென்று பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவதை வழக்க மாகக் கொண்டிருந்தனர் நம் மக்கள்.

ஆனால், தற்போது வீட்டிலிருந்தபடியே பண்டிகை பர்ச்சேஸை பக்காவாக முடித்துக்கொள்ளும் வசதியை ஆன்லைன் நிறுவனங்கள் கொண்டுவந்துவிட்டன. புத்தாடைகள் தொடங்கி, டிவி, ஃபிரிட்ஜ் என அனைத்துப் பொருட் களையும் கணினி திரையில் பார்த்தபடி வாங்கிக் குவிக்கிறது இளைஞர் கூட்டம்.

இதனை நன்றாகப் புரிந்துகொண்ட இ-காமர்ஸ் நிறுவனங்களும் ஆஃபர்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கி வருகின்றன.

ஒரு நாளைக்கான ஆஃபர், ஒரு மணி நேரத்துக்கான ஆஃபர் என பல ஆஃபர்களை இந்த நிறுவனங்கள் வழங்கி வருவதுடன், இடையிடையே அதிரடி ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களைத் திக்குமுக்காட செய்கின்றன ஆன்லைன் நிறுவனங்கள்.

பர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்! Nav08a

இதனைச் சமாளிக்க நேரடியாகப் பொருட்களை விற்கும் சில ரீடெயில் நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு ஆஃபர்களை வழங்கத் தொடங்கி விட்டன. குறிப்பிட்ட தொகைக்கு நீங்கள் பொருட்களை வாங்கினால், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகைக்கான பொருட்களை இலவச மாகவே பெறலாம் என்று சொல்லி, தாங்களும் இந்த ஆஃபர் மழையில் இலவசங்களை கொட்டத் தயார் என்று களத்தில் குதித்திருக்கின்றன. இந்த ரீடெயில் நிறுவனங்கள் தரும் ஆஃபரையும் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவில் ரீடெயில் நிறுவனங் களின் வர்த்தகத்தில் அமைப்பு சார்ந்த ரீடெயில் வர்த்தகத்தின் மதிப்பு ரூ.1,76,700 கோடியாக உள்ளது. அதேசமயம், அமைப்பு சார்ந்த ஆன்லைன் வர்த்தகத்தின் மதிப்பு ரூ.13,900 கோடியாக உள்ளது. மொத்த ரீடெயிலுடன் ஒப்பிட்டால், வெறும் 7.9 சதவிகிதத்தையே ஆன்லைன் நிறுவனங்கள் ஆக்கிரமிக் கின்றன.

என்றாலும் ஆஃபர்களை அள்ளி வழங்குவதில் முதலிடம் பிடிப்பவை ஆன்லைன் நிறுவனங்களாகவே இருக்கின்றன. சமீபத்தில் ஃப்ளிப்கார்ட் ‘பிக் பில்லியன் டே’ என்று அறிவித்து, அன்றைக்கு ஆரவாரமான பம்பர் தள்ளுபடி விற்பனையை நடத்தியது.

அன்று மட்டும் ஏறக்குறைய ஒரு பில்லியன் முறை (100 கோடி) மக்கள் இந்த இணையதளத்தை அணுகி பொருட்களைத் தேடியுள்ளனர் என பெருமையோடு சொல்லிக் கொண்டது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஒரு ரூபாய்க்கு ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவது தொடங்கி, பொருளின் விலையில் 90% வரை ஆஃபர் வழங்கும் அதிசயம் அன்று நடந்ததால், காலை 8 மணி தொடங்கி பலரும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து பல பொருட்களை வாங்கத் தயாரானார்கள்.

இந்த ஆஃபரில் விற்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே சாதாரண மாக எல்லா கடைகளிலும் கிடைப்பது தான். என்றாலும், நினைத்துப் பார்க்க முடியாத ஆஃபர், அதுவும் மிகச் சில மணி நேரங்களுக்குத்தான் என்கிற பரபரப்பினால் பலரும் பல பொருட்களை வாங்க முற்பட்டனர். குறிப்பிட்ட சில பொருட்களுக்குக் காலையில் மிகக் குறைந்த விலையும், நேரம் ஆக ஆக அதிக விலையும் இருந்தது. இருந்தாலும், ரீடெயில் கடைகளைவிட விலை குறைவுதான் என்பதால், அதிகமான பொருட்களை மக்கள் வாங்கிக் குவித்தனர்.

ஆன்லைன் நிறுவனங்கள் இந்த அளவுக்கு ஆஃபர்களை அள்ளித் தருகிறதே, இதெல்லாம் நிஜமா என்று கேட்டால், நிஜம்தான் என்கிறார்கள் ஆன்லைன் துறையைச் சேர்ந்தவர்கள். எப்படி என்று கேட்டோம்.

‘‘ஆன்லைன் நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள செய்யும் பல்வேறு முயற்சிகளில் முக்கியமானது இந்த விலை குறைப்பு. 100 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 20 ரூபாய்க்கு விற்பதன் மூலம் வாடிக்கையாளர்களைத் தங்களது கண்காணிப்பில் முதலில் கொண்டுவர நினைக்கின்றன ஆன்லைன் நிறுவனங்கள். கடைக்கான வாடகை இல்லை; பொருட்களை வாங்கி வைக்க வேண்டிய முதலீடு இல்லை; நூற்றுக் கணக்கில் ஊழியர்கள் தேவை இல்லை என பல விஷயங்கள் ஆன்லைன் துறைக்கு சாதகமாக இருப்பதால், அதிரடித் தள்ளுபடியில் அவர்களால் பொருட்களை எளிதாக விற்க முடிகிறது’’ என்கிறார்கள் அவர்கள்.

இவர்கள் சொல்ல மறுக்கும் இன்னொரு உண்மை என்னவெனில், மிகக் குறைந்த விலையில் பொருட்களைத் தருவதன் மூலம் நேரடியாக பொருட் களை விற்கும் கடைகளை ஒழித்துக் கட்டிவிட்டு, அதன்பிறகு தாங்கள் சொல்கிற விலையில் பொருட்களை விற்க இந்த நிறுவனங்கள் முயற்சிக்கும் என்பதே.

பர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்! Nav08d

தவிர, ஆன்லைன் நிறுவனங்கள் தரும் இந்த ஆஃபர்கள் வெறும் மார்க்கெட் தந்திரமே என்றும் எஃப்எம்சிஜி துறையைச் சார்ந்த நிபுணர் கள் சொல்கிறார்கள். ஆன்லைனில் மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்பதன் மூலம் அந்த நிறுவனங்களுக்கு நஷ்டம்தான் என்கின்றனர்.
உதாரணமாக, ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 2013-ம் ஆண்டு நிகர விற்பனை ரூ.1,247 கோடி. அதேசமயம் அந்த நிறுவனம் கண்ட நஷ்டம் ரூ.644 கோடி. இந்த நிலை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு மட்டுமல்ல, பிற ஆன்லைன் நிறுவனங்களுக்கும்தான் என்கிறார்கள் அவர்கள்.

பில்லியன் சொதப்பல்கள்!

‘பிக் பில்லியன் டே’ அன்று ஏறக்குறைய ரூ.600 கோடிக்கு வியாபாரம் செய்ததாகச் சொன்னது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஆனால், அன்றைய தினத்தில் பொருட்களை வாங்க வந்தவர்களுக்கு கசப்பான அனுபவமே கிடைத்தது. காரணம், இந்த ஆஃபரில் விற்கப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை விற்பனை தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பு வந்துவிட்டது.

சில பொருட்களை ஆர்டர் செய்யும்போது ஆஃபர் விலை ஒன்றாகவும், அதனை வாங்கும்போது வேறொரு விலையாகவும் இருந்தது கண்டு பலரும் அதிர்ந்து போனார்கள். அழகான சுடிதார் 500 ரூபாய் விலையில் கிடைக்கிறதே என்று ஆசையாக வாங்கப்போனவர்கள், பணம் கட்டும் போது அது 1,200 ரூபாய் என்று மாறியதைப் பார்த்து அதிர்ந்தனர்.
ஒரு பொருளை வாங்கியவர் அதற்கான பணத்தைக் கட்டிவிட்டு ஆவலாகக் காத்திருக்க, மறுநாள் காலையில் இந்தப் பொருளைத் தருவதில் எங்களுக்குச் சிரமம் உள்ளது. அதனால் உங்கள் பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று வந்த மெயிலைப் பார்த்து கடுப்பானவர்கள் பலர்.

பரிசாகத் தரப்பட்ட கூப்பனிலும் பல குளறுபடிகள். ரூ.500 மதிப்புள்ள கூப்பனைத் தந்துவிட்டு, இதனை நீங்கள் பயன்படுத்த 3,000 ரூபாக்குமேல் பொருளை வாங்க வேண்டும் என்று நிபந்தனைப் போட்டதும் அதிர்ச்சிதான்.
இன்னும் சிலர், சில பொருட்களின் விலையைக் கடந்த மூன்று மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, இப்போது மீண்டும் குறைத்துள்ளனர். இதெல்லாம் தள்ளுபடியே கிடையாது என இணையதளங்களில் வெறுப்பு மழை கொட்டினார்கள்.

பலரும் இப்படி வெறுப்பில் இருப்பதைப் பார்த்து, மறுநாள் காலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது ஃப்ளிப்கார்ட் நிறுவனம்.

அடுத்தது அமேசான்!

ஃப்ளிப்கார்ட்டின் இந்த மெகா ஆஃபரைத் தொடர்ந்து அமெரிக்காவின் அமேசான் நிறுவனமும் இதேமாதிரியான தள்ளுபடி கொண்டாட்டத்துக்குத் தயாரானது. ஏற்கெனவே மிஷன் மார்ஸ் என்கிற பெயரில் ஆஃபர்களைத் தந்த அமேசான், ஃப்ளிப்கார்ட் இழுத்துக்கொண்ட வாடிக்கை யாளர்களை இப்போது தனது பக்கம் இழுத்துக் கொள்ள தயாராகிவிட்டது.

இனிவரும் காலத்தில் ஆன்லைன் நிறுவனங்களை நம்மால் தவிர்க்க முடியாது. விலை குறைவு, வீட்டுக்கு பொருள் வந்து சேரும் வசதிகளால் இனி பலரும் பொருட்களை வாங்க ஆன்லைனை நாடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம். எந்தப் பொருளை வாங்கவதாக இருந்தாலும் 5 முக்கிய விஷயங்களைக் கவனித்தாக வேண்டும். அவை
இதோ...

1. நீங்கள் வாங்கும் பொருளின் விலை கடந்த மூன்று மாதங்களுக்குமுன் என்ன விலையில் இருந்துள்ளது என ஒப்பிட்டுப் பாருங்கள். இதே விலைதான் என்றால், இன்னமும் விலை குறையும். எனவே, அவசரப்பட்டு வாங்காமல் சற்று யோசித்துப் பிறகு வாங்கலாம்.

2. ஆன்லைனில் நீங்கள் வாங்கும் பொருளை இன்றைய ரீடெயில் விலையுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். அதிலிருந்து விலை எவ்வளவு வேறுபட் டுள்ளது என்பதையும் பாருங்கள்.
நீங்கள் வாங்கும் பொருளுக்கு குறைந்தபட்சம் 35% விலை தள்ளுபடி கிடைத்தால், ஆன்லைனில் நீங்கள் அந்தப் பொருளை வாங்குவதில் லாபம் இருக்கும். ஏனெனில், தற்போது பண்டிகைக் காலம் என்பதால் ரீடெயில் கடைகளிலேயே 20 - 25% தள்ளுபடி கிடைக்கும்.

3. ஆஃபரில் தருகிறார்கள் என்று தேவையில்லாதப் பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள். உங்களுக்குத் தேவைப்படுவதை மட்டுமே தேர்வு செய்யுங்கள். நீங்கள் மொத்தமாக வாங்கிய பொருளில் சேமித்த பணத்தை அடுத்தப் பொருளை வாங்கி வீணடித்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

4. இந்த ஆஃபர் தினத்தில் சில பொருட்களைப் பற்றிய ரெவியூ படித்துவிட்டு, அது நன்றாக இருந்தால், உடனே அந்த பொருளை வாங்கிவிடுவது கூடாது. காரணம், அனைத்து விற்பனை யாளர்களும் தங்கள் பொருளை ரெவியூ மூலம் பிரபலப்படுத்துவார்கள். அதனால் உங்கள் நண்பர் அல்லது உறவினர்களிடம் இந்தப் பொருளை வாங்கிய அனுபவம் பற்றி விசாரித்து வாங்குங்கள்.

5. ஒரு பொருளை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் சரியான தள்ளுபடி இருக்கும்போது அதே விலைக்கு அப்போதே வாங்கிவிடுங்கள். ஒருசில மணி நேரம் கழித்து வாங்கினால், அதன் விலை அதிகரித்துவிடும். காரணம், இதுபோன்ற ஆன்லைன் நிறுவனங்கள் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை விலையை மாற்றியமைக்கின்றன.

பர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்! Nav08c

ரீடெயில் நிறுவனங்களின் ஆஃபர்கள்!

சரி, ஆன்லைன் நிறுவனங்கள்தான் ஆஃபர்களை வாரி வழங்குகின்றன என்றால், ரீடெயில் நிறுவனங்களும் இந்த ஆஃபர் மோகத்தைக் காட்டி வாடிக்கையாளர்களைக் கவரத் தயாராகிவிட்டன. சமீபத்தில் ஒரு ரீடெயில் நிறுவனம் தீபாவளி ஆஃபராக அறிவித்துள்ள விளம்பரம் எல்லோரை யும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

குறிப்பிட்ட 12 நாட்களுக்குள் 10 லட்சம் ரூபாய்க்குப் பொருட்களை வாங்கினால், மாதம் 25,000 ரூபாய்க்கு ஒரு வருடத்துக்கு இலவசமாக எந்தப் பொருளை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னது அந்த விளம்பரம். அதாவது, 10 லட்ச ரூபாய்க்கு பொருளை வாங்கினால், 3 லட்சம் ரூபாய் லாபம். இப்படி ரூ.5,000 தொடங்கி ரூ.10 லட்சம் வரை 11 ஆஃபர்களை இந்த நிறுவனம் அளித்துள்ளது.

இது நல்லதுதானே! இதன் மூலம் மாதாமாதம் இலவசமாக பொருட்களை வாங்கலாமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த ஆஃபரில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பொருள் வாங்குபவருக்குத்தான் ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதற்குக் குறைவாக இருப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற அளவில்தான் லாபம் கிடைக்கும். ஆனால், தீபாவளிக்காக யாரும் ஒரு லட்சம் ரூபாயை செலவழிக்க மாட்டார்கள். குறைந்தபட்சம் 10,000 ரூபாய் செலவழித்தால் வெறும் 125 ரூபாய் மட்டுமே இலவச ஆஃபர் கிடைக்கும். இதற்கு அவர்கள் குறிப்பிடும் கடையில் ஒரு கிலோ எண்ணெய் பாக்கெட்தான் வாங்க முடியும்.

பர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்! Nav08e

இந்த ஆஃபரில் இன்னொரு சிக்கலும் உள்ளது. நீங்கள் 7,000 ரூபாய்க்கு உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கினால், நீங்கள் இன்னமும் 3,000 ரூபாய்க்கு வாங்கினால்தான் 10,000 ரூபாய்க்கு ஆஃபரைப் பயன்படுத்த முடியும் என்ற சூழல் உருவாகிறது. அதனால், உங்கள் பர்ஸிலிருந்து இன்னமும் 3,000 ரூபாயை நீங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும்.

ரீடெயில் நிறுவனங்கள் தரும் ஆஃபர்களை நாடும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?

1. உங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை மட்டும் வாங்குங்கள். இன்னமும் 2,000 ரூபாய்க்கு வாங்கினால் தான் ஆஃபர் என்றால், அதனைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், நீங்கள் மிச்சப்படுத்த நினைத்த தொகை ஆஃபரை அடைய நீங்கள் கொடுத்த தொகைக்குச் சமமாகிவிடும்.

2. ஆன்லைனில் பொருளை வாங்கிக் குவிப்பது ஃபேஷன் என நினைத்துப் பணத்தை விரயமாக்காதீர்கள். பக்கத்தில் உள்ள ஒருவர் 12,000 ரூபாய்க்குப் பொருட்களை வாங்கியுள்ளார்; அவரை விட நான் 100 ரூபாய்க்காவது அதிகமாக வாங்குவேன் என்று போட்டி போடாதீர்கள்.

3. ஆன்லைனில் எந்தப் பொருளை வாங்க வேண்டும், ரீடெயிலில் எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்று முதலில் பட்டியலிடுங்கள். சில பொருட் களை டச் & ஃபீல் எனப்படும் தொட்டு பார்த்து வாங்கினால்தான் சரியாக இருக்கும். சில பொருட்கள் ரீடெயில் கடைகளில் அதிக விலைக்கு இருக்கும். அதனை ஆன்லைனில் வாங்குவது சிறந்ததாக இருக்கும்.

4. ஆஃபர் என்று மூன்று பொருட்களைச் சேர்த்து 2,000 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள் என்றால் அதனை வாங்காமல், உங்களது தேவைக்கு வாங்கும் பொருள் 600 ரூபாய்தான் என்றாலும் அதை மட்டும் வாங்குங்கள்.
ஆன்லைனோ அல்லது ரீடெயிலோ பொருட்களை வாங்கும்போது தேவையான பொருளை மட்டும் கவனித்து வாங்கினால், நம் பர்ஸ் வீண்செலவுகளில் இருந்து நிச்சயம் தப்பிக்கும்.

தீபாவளி போன்ற பண்டிகை களின்போது நீங்கள் பொருட்களை வாங்க நினைத்தால், சரியான நிதித் திட்டமிடலை செய்தோ அல்லது உங்களுக்குத் தேவையான பணத்தை வங்கி டெபாசிட்டுகளில் சேமித்தோ வாங்குங்கள். ஆசை வார்த்தைகளில் நீங்கள் ஏமாறாமல் தப்பித்தால், நிச்சயம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்!

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum