வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


புரோக்கர்களைத் தேர்வு செய்வது எப்படி?

Go down

புரோக்கர்களைத் தேர்வு செய்வது எப்படி? Empty புரோக்கர்களைத் தேர்வு செய்வது எப்படி?

Post by தருண் Thu Sep 25, 2014 10:00 am

பங்குச் சந்தையில் புரோக்கர்கள் மூலமே முதலீடு செய்யமுடியும்.  புரோக்கர்கள் மூலமும், புரோக்கர்களின் ஆன்லைன் தளம்  மூலமும் வர்த்தகத்தை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு புரோக்கர்களை எப்படி தேர்வு செய்வது என்பது பற்றி  பலவிதமான சந்தேகங்கள். சிறந்த புரோக்கரை தேர்வு செய்வது எப்படி என பங்குச் சந்தை நிபுணர் நாகப்பனிடம் கேட்டோம். அவர் தெளிவாக சொன்ன பதில் இங்கே உங்களுக்காக...

1 கடந்த காலத்தைக் கவனியுங்கள்!

பங்கு வர்த்தகத்தை மேற்கொள்ளும் புரோக்கர் எத்தனை ஆண்டுகள் அந்தப் பணியில் இருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும். ‘நேற்றைய மழையில் இன்றைக்கு முளைத்த காளான்’ என்பது மாதிரி ஒருசில வருடங்கள் மட்டுமே பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவராக இருந்தால், அவரைத் தவிர்த்துவிடுவது நலம். நாம் தேர்வு செய்யும் புரோக்கர் குறைந்தபட்சம் இரண்டு பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியையும், இரண்டு பெரிய பங்குச் சந்தை ஏற்றத்தையும் சந்தித்த வராக இருக்க வேண்டும்.

2 தலைமை நிறுவனம் நமக்கு அருகில்..!

பொதுவாக, நாம் தேர்வு செய்யும் புரோக்கரின் தலைமை நிறுவனம் நமது இருப்பிடத்துக்கு அருகில் இருக்கும் படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், பங்கு வர்த்தகத்தில் புரோக்கருக்கும் நமக்கும் இடையில் பிரச்னை என்கிறபோது, நிறுவனத்தின் தலைமையிடம் வெகுதொலைவில் இருந்தால் புரோக்கர், ‘பிரச்னைக்குத் தீர்வுகாண தலைமை நிறுவனத்துக்கு கடிதமோ அல்லது மெயிலோ அனுப்பி இருக்கிறேன்’ என்று சொல்லி கால தாமதப்படுத்தலாம். தலைமை நிறுவனம் அருகில் இருக்கும்போது நாமே நேரடி யாகச் சென்று புகார்களைப் பதிவு செய்து, பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முடியும்.

3 விசாரித்தபின் தேர்ந்தெடுங்கள்!

ஆங்கிலத்தில் ‘Word Of mouth’ என்பார்கள். அதாவது, நமது நண்பர்கள் அல்லது உறவினர்களின் பரிந்துரையின் பேரில் புரோக்கர்களை தேர்வு செய்வது. ஏற்கெனவே அவர்கள் ஒரு புரோக்கரிடம்  பங்கு வர்த்தகத்தை மேற்கொண்டிருக்கும் போது அவர்களிடம் அந்த புரோக்கர் குறித்து விசாரித்துவிட்டு, அவர் சிறந்தவராக இருப்பின் புரோக்கரைத் தேர்வு செய்யலாம்.

4 விளம்பரம் தேவையில்லை!

விளம்பரங்களைப் பார்த்து புரோக்கர்களைத் தேர்வு செய்யவே கூடாது. 15 வருடங்களுக்கு முன்பு பங்கு புரோக்கர்கள் விளம்பரம் செய்யத் தடை இருந்தது. இன்று  மருத்துவர்களும், சிஏகளும் (chartered accountant) எப்படி விளம்பரம் செய்வதில்லை. அதுமாதிரி பங்கு புரோக்கர்களும் விளம்பரம் செய்யக்கூடாது என்பதே என் கருத்து.  சில புரோக்கர்கள் பங்கு வர்த்தகத்தில் உறுதியான வருமானத்தைப் பெற்றுத் தருவதாகச் சொல்லி தங்களை விளம்பரம் செய்கிறார்கள். அவர்களை முதலீட்டாளர்கள் அறவே தவிர்ப்பது நல்லது.

5 சட்டத்தில் தெளிவு!

நாம் தேர்வு செய்யும் புரோக்கரின் நிறுவனம் சட்டரீதியான விஷயங்களில் தெளிவாக இருக்கிறதா, செபியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்கிற விஷயங்களைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

மேலே சொல்லப்பட்டிருக்கும் ஐந்து முக்கியமான விஷயங்களைத் தவிர, ஒரு புரோக்கர் தனது வாடிக்கையாளரிடம் அதிக நேரம் செலவிடுபவராக இருக்க வேண்டும். அவரின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தமாதிரி பங்குகளைப் பரிந்துரைப்பவராக இருக்க வேண்டும். தனது வாடிக்கை யாளர் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஒரு பங்கை மட்டும் வாங்குங்கள் என்று சொன்னாலும் வாங்கித்தரக்கூடிய புரோக்கராகவும் இருக்க வேண்டும். அதேபோல முதலீட்டாளர்களும் நமது முதலீட்டு தகுதிக்குத் தக்கபடியான புரோக்கரிடம் செல்வதே நல்லது.

மேலே சொல்லப்பட்டது போலவே, ஆன்லைன் புரோக்கிங் நிறுவனத்தைத் தேர்வு செய்யும்போதும் கவனிக்க வேண்டும். பெரும்பாலான ஆன்லைன் புரோக்கிங் நிறுவனங்கள் பங்கு வர்த்தகம் மேற்கொள்வது குறித்து டிப்ஸ் களை வழங்கியே வாடிக்கையாளர் களைப் பிடிப்பார்கள். முதலீட்டுக்குத் தேவை டிப்ஸ் மட்டும் கிடையாது. பங்குகள் சார்ந்த அட்வைஸ்தான் முக்கியம்” என்றார் தெளிவாக.

மேலே சொன்ன விஷயங்களைக் கவனத்தில் கொண்டு  புரோக்கர்களைத் தேர்வு செய்வது நல்லது.
-விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum