Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
சரியான ஃபண்ட்... தேர்வு செய்வது எப்படி?
Page 1 of 1
சரியான ஃபண்ட்... தேர்வு செய்வது எப்படி?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது சக்தி வாய்ந்த முதலீட்டு முறை. எந்த ஒரு வயதினரும், எந்த ஒரு தேவைக்கும், எந்த ஒரு முதலீட்டுக் காலத்துக்கும் ஏற்ப ஒரு மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்யமுடியும் என்பதே இந்த முதலீட்டின் ஆதார பலம். ஆனால், இந்த பலமே ஒருவிதத்தில் ஒரு பலவீனமாகவும் மாறிவிடுகிறது. காரணம், பல்வேறு ஃபண்ட் வகைகள் இருப்பதே
.
இப்பிரச்னைக்கு தீர்வுகாண கொஞ்சம் அடிப்படை ஞானமும் பயிற்சியும் தேவை. இவற்றுக்கு நேரம் செலவழிக்க முடியாதவர்களில் ஒரு சிலர் புத்திசாலித்தனமாக நிதி ஆலோசகரை உதவிக்காக அணுகுகின்றனர்; இன்னும் சிலர், பெரிய அளவில் ஆராய்ச்சி ஏதும் செய்யாமல் ஏதோ ஒரு ஃபண்டில் பணத்தைப் போட்டுவிட்டு, பிற்பாடு நஷ்டம் வந்துவிட்டதே என்று புலம்ப ஆரம்பித்துவிடுகின்றனர்.
நாம் அந்தத் தவறை செய்யவேண்டாம். நமக்கான மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வு செய்வது எப்படி என்று முதலில் தெரிந்துகொள்வோம். இதற்கு, மியூச்சுவல் ஃபண்டில் எத்தனை வகைகள் உள்ளன? நமது தேவைக்கு ஏற்ப எப்படி ஃபண்டுகளைத் தேர்வு செய்வது? நல்ல ஃபண்டுகளை அடையாளம் காண்பது எப்படி? இக்கேள்விகளுக்கான விடைகள் என்னென்ன? என்று பார்ப்போம்.
உங்கள் நண்பன் !
மியூச்சுவல் ஃபண்டுகளில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன. அவை, பங்குச் சந்தை ஃபண்டுகள், கடன் பத்திர ஃபண்டுகள், மற்றும் தங்க ஃபண்டுகள்.
பங்குச் சந்தை ஃபண்டுகள் தமது நிதியை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்கின்றன. இவற்றுள் சில உட்பிரிவுகள் உண்டு. மிகப் பெரும் கம்பெனிகளில் மட்டும் முதலீடு செய்பவை, மத்திய அளவிலான கம்பெனிகளில் முதலீடு செய்பவை, எல்லாவித மான கம்பெனிகளிலும் கலந்து முதலீடு செய்பவை, ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த கம்பெனிகளில் மட்டும் முதலீடு செய்பவை என பல பிரிவுகள் உண்டு. ஒருசில ஃபண்டுகளில் சர்வதேச சந்தையிலும் முதலீடு செய்வார்கள். எல்லா ஃபண்ட் கம்பெனிகளும் இவற்றில் ஒரு வகையிலாவது ஒரு ஃபண்ட் வைத்திருக்கும். சில நிறுவனங்கள் எல்லாவகையான ஃபண்டுகளும் வைத்திருக்கின்றன.
கடன் பத்திர ஃபண்டுகள் நம்மிடம் திரட்டும் நிதியை கம்பெனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் கடனாகத் தந்து நிர்வாகம் செய்கின்றன. இதிலும் சில உட்பிரிவுகள் உண்டு. நீண்டகால கடன் பத்திரங்களில் முதலீடு செய்பவை, குறுகியகாலப் பத்திரங்களில் முதலீடு செய்பவை, மிகக் குறுகியகாலப் பத்திரங்களில் முதலீடு செய்பவை, அரசாங்கக் கடன் பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்பவை போன்றவை சில பிரிவுகள். எல்லா ஃபண்ட் கம்பெனிகளும் இவற்றில் சில வகை ஃபண்டுகளையாவது வைத்திருக்கின்றன.
தங்கத்தில் முதலீடு செய்யும் ஃபண்டுகளும் உண்டு. இவை எளிமையானவை. உள்வரும் நிதியை வைத்து தங்கம் வாங்கி முதலீடு செய்வது மட்டுமே இவற்றின் பணி. சில ஃபண்ட் கம்பெனிகள் தங்கம் சார்ந்த ஃபண்டுகளை நிர்வகிக்கின்றன.
இம்மூன்றைத் தவிர, சில கலவை ஃபண்டுகளும் உண்டு. கொஞ்சம் பங்குச் சந்தை, கொஞ்சம் கடன் பத்திரம் என்றோ அல்லது கொஞ்சம் கடன் பத்திரம், கொஞ்சம் தங்கம் என்றோ முதலீடு செய்யும் ஃபண்டுகள் அதிகம்.
எந்த ஃபண்ட் உங்கள் ஃபண்ட்?
இப்படி பல வகைகள் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகளில் எதை நமக்கென்று தேர்ந்தெடுப்பது? சில எளிமையான விதிகளைப் பின்பற்றினால், இக்கேள்விக்கு விடை காண்பது எளிது.
முதலில், நாம் எத்தகைய கால அளவிற்கு முதலீடு செய்கிறோம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நாம் ஒரு வைப்பு நிதித் திட்டத்தில் சேமிக்க முற்பட்டால் அது ஒரு வருட வைப்பு நிதியா?, ஆறு மாதங்களுக்கா?, மூன்று வருடங்களுக்கா? என்று தீர்மானித்துக்கொண்டு முதலீட்டில் இறங்குவது நல்லது.
உங்கள் முதலீட்டுக் காலம் எவ்வளவு அதிகமோ, அந்த அளவிற்கு உங்களால் பங்குச் சந்தை ஃபண்டுகளில் முதலீடு செய்யமுடியும். காரணம், பங்குச் சந்தை ஃபண்டுகள் ரிஸ்க் அதிகம் உள்ளவை. நீண்டகாலத்தில் நல்ல லாபம் தரக்கூடியவை என்றாலும்கூட, குறுகியகாலத்திற்கு முதலீடு செய்தால் பணத்தை இழப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆகையால், குறுகியகால முதலீடுகளுக்கு கடன் பத்திர ஃபண்டுகளே உசிதம்.
இத்தகைய ஒரு அளவுகோலுடன் நாம் அணுகும்போது, கீழ்க்காணும் முதலீட்டு விதிமுறைகளை அடையாளம் காணலாம்.
1. ஒரு வருடத்திற்கு குறைந்த முதலீடுகள்: இந்தக் காலகட்டத்திற்கு, குறுகியகாலக் கடன் பத்திர ஃபண்டுகள் லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள் நல்லவை. வங்கிகள் தரும் வட்டியைவிட அதிக லாபம் தரக் கூடியவை.
2. ஒன்றிலிருந்து மூன்று வருடங்கள்: ஒன்றரை அல்லது இரண்டு வருடங்கள் முதலீடு செய்பவர்கள், கொஞ்சம் ரிஸ்க் அதிகமுள்ள கடன் பத்திர ஃபண்டுகள் டைனமிக் பாண்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இன்னமும் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்றால் எம்.ஐ.பி. எனப்படும் கலவை ஃபண்ட் வகை - கடன் பத்திரங்களில் அதிகமாகவும், பங்குச் சந்தையில் குறைவாகவும் முதலீடு செய்யும் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
3. மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள்: இந்த முதலீட்டுக் காலத்தில் நாம் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் ஓரளவுக்கு நம்பிக்கை யுடன் கால் வைக்கலாம். பேலன்ஸ்டு ஃபண்டு எனப்படும் பங்குச் சந்தையில் அதிகமும், கடன் பத்திரங்களில் கொஞ்சமும் முதலீடு செய்யும் ஃபண்டுகளில் தொடங்கி, மிகப் பெரும் கம்பெனிகளில் மட்டும் முதலீடு செய்யும் ஃபண்டுகளிலும் இப்போது முதலீடு செய்யலாம்.
4. ஐந்து முதல் பத்து வருடங்கள்: ஐந்து வருடங்களுக்கு மேலான காலகட்டங்களில் குறிப்பிட்ட ஃபண்டுவகை என்றில்லாமல், ஒரு போர்ட்ஃபோலியோ (பல ஃபண்டுகளின் தொகுப்பு) என்ற வகையில் யோசிக்கவேண்டும். பலவகை பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள், கொஞ்சம் கடன் பத்திர ஃபண்டுகள் (20 - 30 சதவிகிதம் வரை) என்று கலந்த ஒரு தொகுப்பாக நீங்கள் முதலீடு செய்யக்கூடிய முதலீட்டுக் கால இடைவெளி இது. குழந்தை களின் பள்ளிப் படிப்பு, கல்யாணம் போன்ற செலவுகளுக்கு ஏற்ற முதலீடுகள் இவை.
5. பத்து வருடங்களுக்கு மேல்: ரிட்டையர்மென்ட் இன்கம் எனப்படும் ஓய்வூதியத்திற்காகச் சேமிப்பவர்கள் இத்தகைய நீண்டகால முதலீடுகளைச் செய்யவேண்டும். இதுவும் ஒரு ஃபண்டுகளின் தொகுப்பாக நிர்வகிக்கப்படவேண்டியது. ஆனால், முந்தைய தொகுப்பைப் போலன்றி, இதில் பங்குச் சந்தை முதலீடுகள் மிக அதிகமாகவும், கடன் பத்திர முதலீடுகள் மிகக் குறைவாகவும் இருக்கும்.
தங்கத்தில் முதலீடு செய்வது பற்றி நிறையச் சொல்வதற்கு எதுவுமில்லை. உங்கள் மொத்த முதலீட்டில் 10 முதல் 15 சதவிகிதத்திற்கு மிகாமல் பார்த்துக்கொண்டாலே போதும்.
சரி, இதுதான் நமது முதலீட்டுக் காலகட்டம் என்று தெரிந்திருந்தால் இதையெல்லாம் செய்யலாம். தெரியாவிட்டால்..? நம் கையில் கொஞ்சம் பணம் உள்ளது, அதை ஏதாவது ஒரு நல்ல ஃபண்டில் போட்டு வைக்கலாம் என்ற நிலைமையில் என்ன செய்வது? இந்தச் சூழ்நிலையில் நீங்கள் ரிஸ்க் குறைவாக எடுக்கலாம் என்று நினைத்தால் கடன் பத்திரம் சார்ந்த எம்.ஐ.பி. ஃபண்டிலும், ரிஸ்க் கொஞ்சம் அதிகம் எடுக்கலாம் என்று நினைத்தால் பங்குச் சந்தை சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டிலும் முதலீடு செய்யலாம்.
இந்த வழிமுறையைப் பின்பற்றினால் எந்தவகை ஃபண்டுகளில் முதலீடு செய்வது என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு ஃபண்ட் வகையிலும் எப்படி ஃபண்டுகளைத் தேர்வு செய்வது..?
ஃபண்ட் தேர்வுகளுக்கான எளிய விதிகள் !
ஃபண்டுகளில் முதலீடு செய்வது என்று முடிவு செய்தபிறகு, முதலில் எந்தெந்த வகைகளில் என்னென்ன ஃபண்டுகள் என்பதனைக் கண்டறியவேண்டும். இதற்கான எளிய முறை valueresearchonline.com அல்லது moneycontrol.com போன்ற வலைதளங்களை நாடுவதுதான். உங்களுக்குத் தேவைப்படும் வகைகளில் என்ன ஃபண்டுகள் உள்ளன என்ற பட்டியல் உங்களிடம் கிடைத்ததும், அதில் கீழுள்ள எளிய விதிமுறைகளைப் பொருத்திப் பாருங்கள்.
1. குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது சந்தையில் புழங்கிவரும் ஃபண்டுகளை மட்டுமே கருத்தில்கொள்வது நலம். ஐந்து வருடங்களுக்கு மேல் வயதான ஃபண்டுகள் இன்னமும் நல்லது. புதிதாக முதலீடு செய்யத் துவங்குபவர்கள் புதிய ஃபண்டுகளிடமிருந்து விலகி இருப்பது நல்லது.
2. ஒவ்வொரு ஃபண்டிற்கும் ஒரு சந்தைக் குறியீடு உண்டு. உதாரணத்திற்கு, பல பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளுக்கு சென்செக்ஸ்தான் சந்தை குறியீடு. இத்தகைய குறியீட்டினைவிட நன்றாகச் செயல்படும் ஃபண்டுகளே நல்ல ஃபண்டுகள். ஆகையால், இதை ஒரு தர நிர்ணயமாகக் கொள்ளவேண்டியது அவசியம்.
பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் எனில், மூன்று மற்றும் ஐந்து வருட காலகட்டங்களிலும், கடன் பத்திர ஃபண்டுகள் ஒன்று மற்றும் மூன்று வருட காலகட்டங்களிலும் சந்தைக் குறியீட்டினைவிட சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் ஃபண்டுகளை மட்டுமே தேர்வு செய்யவேண்டும்.
3. இப்படி வடிகட்டிய பிறகு இருக்கும் ஃபண்டுகளிலிருந்து அதிக லாபம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஃபண்டுகளை அல்லது பெரிய, நம்பகமான கம்பெனி என்று நீங்கள் கருதும் ஃபண்ட் கம்பெனியின் ஃபண்டுகளை நீங்கள் தேர்வு செய்யலாம். இவை தவிர, மேற்கூறிய வலைதளங்களில் இருக்கும் நட்சத்திரக் குறியீடுகளையும் ஒரு அளவுகோலாகக் கொள்ளலாம்.
அவ்வளவுதான்... ஓரளவிற்கு ஃபண்ட் வகைகளையும், எந்ததெந்த வகைகள் நமக்கு உகந்தவை என்பதையும் முதலில் முடிவு செய்து விட்டால், பின்னர் சுலபமாக அவ்வகைகளில் உள்ள நல்ல ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்து பயன் பெறலாம்.
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» முதலீடு செய்வது எப்படி?
» புரோக்கர்களைத் தேர்வு செய்வது எப்படி?
» எப்படி தேர்வு செய்வது?(Mutual Fund)
» சரியான புரோக்கிங் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
» சரியான கிரெடிட் கார்டை தேர்ந்தெடுப்பது எப்படி??

Permissions in this forum:
You cannot reply to topics in this forum