Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பெண்களுக்கான சூப்பர் முதலிட்டு கொள்கைகள்!!
Page 1 of 1

பொதுவாக பெண்கள் என்றாலே ஷாப்பிங் பிரியர், அதிகமாக செலவு செய்பவர்கள், முதலீட்டை பற்றிய போதிய அறிவு இல்லாதவர்கள் என்ற எண்ணம் பல பேரின் மனதில் நிலவி வருகிறது. ஆனால் அந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் பெண்களும் கூட சம்பாதிக்கும் பொறுப்பை ஏற்று முதலீட்டிலும் நாட்டம் செலுத்தி வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் உயரும் விலைவாசியில் குடும்பம் நடத்த ஒருவரின் சம்பாத்தியம் போதியதாக இல்லை, எனவே பெண்கள் சம்பாதிப்பதும் தேவையான ஒன்றாக மாறி விட்டது. கணவன் மனைவி என இரட்டை சம்பாத்தியம் இருக்கும் போது உங்கள் முதலீட்டு குறிக்கோள்களை சிறப்பாக திட்டமிடுங்கள்.
இதனால் பாதுகாப்பான வருங்காலத்தையும் வயதான காலத்தை நிம்மதியாகவும் செலவழிக்கலாம். இருப்பினும் பெண்கள் சேமிப்பில் ஈடுபடும் போது அவர்களின் சேமிப்பு அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் இருக்க வேண்டும். பணத்தை மட்டும் சேமித்தால் பத்தாது. அதனை எப்படி முதலீடு செய்தால் அதிக வருவாயை ஈட்டலாம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீண்ட மற்றும் குறுகிய கால குறிக்கோள்கள்
உங்கள் வாழ்க்கையில் உள்ள நீண்ட கால குறிக்கோள்கள் மற்றும் குறுகிய கால குறிக்கோள்கள் என அனைத்தையும் யோசியுங்கள். உதாரணத்திற்கு, உங்களின் ஓய்வுகால திட்டம், உங்கள் குழந்தையின் உயர்கல்வி, உங்கள் கனவு இல்லம், உலக சுற்றுலா என்பதெல்லாம் நீண்ட கால குறிக்கோள்களாகும். பகுதி நேர கல்வி, கல்வி கடனை திருப்பி செலுத்துதல், திருமண செலவு என்பதெல்லாம் குறுகிய கால குறிக்கோள்களாகும்.
பணவீக்கம்
பணவீக்கம் என்பது உங்கள் பணத்தின் மதிப்பை குறைக்க போவது உறுதி என்பதை மறந்து விடாதீர்கள். அதனால் முதலீட்டை திட்டமிடும் போது பணவீக்கத்தை முக்கியமான காரணியாக எடுத்துக் கொள்ள மறந்து விடாதீர்கள்.
திட்டமிடல்
முதலீட்டு கலைகளில் தன்னை முழுமையாக பெண்கள் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களால் பொருளாதார ரீதியில் சிறப்பாக இருக்க முடியும். அதே போல் தன்னுடைய ஓய்வு காலத்தையும் திட்டமிட முடியும். உங்கள் ஓய்வு காலத்திற்காக நீங்கள் சேமிக்க எந்த ஒரு வயது வரம்பும் இல்லை.
இளம் பெண்களுக்கான முதலீடுகள்
இளம் வயதில் பெண்கள் கையில் அதிகமாக பணம் இருப்பதில்லை. இருப்பினும் தேவையற்ற செலவுகளை குறைத்து உங்கள் பாக்கெட் மணியை மிச்சம் செய்து சஞ்சயிகா திட்டத்தில் முதலீடு செய்யவும். அப்படி சேமித்த பணத்தை கொண்டு நண்பர்கள் அல்லது பெற்றோர்களுக்கு பரிசுப்பொருட்கள் வாங்குதல், உங்கள் பிறந்தநாள் பார்டிக்கான செலவு போன்ற உங்களின் குறுகிய கால குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ள உதவும்.
இருபதுகளில் முதலீடு
இருபதுகளில் உள்ள பெண்கள் தங்கள் தொழில் மற்றும் வருங்காலத்தை தீர்மானிக்கும் நேரம் இது. சின்ன வயதில் இடர்பாடு எடுக்க பயம் இல்லாததால் அவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்தால் உங்கள் பணத்தை வல்லுனர்கள் கையாண்டு பலவற்றில் முதலீடு செய்வார்கள். அதனால் நீண்ட கால குறிக்கோள்களுக்கு மியூச்சுவல் பண்ட்டை தேர்ந்தெடுக்கலாம். இந்த வயதில் போதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும் முதலீடு செய்யுங்கள். இது உங்கள் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும். உங்கள் நீண்ட கால குறிக்கோள்களை முடிவு செய்ய இதுவே சரியான பருவமாகும்.
முப்பதுகளில் முதலீடு
வாழ்க்கையின் இந்த பருவத்தில், பொதுவாக பெண்களுக்கு திருமணமாகி குழந்தைகளும் இருக்கக் கூடும். குடும்பம், குழந்தைகளின் எதிர்காலம் என்ற அவர்களின் பொறுப்பு அதிகரித்து விடும். அதனால் தேவையான டெர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யுங்கள். உங்கள் குழந்தைகளுக்கான கல்வி திட்டங்களையும் நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்களுக்கான வரித் திட்டங்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். நீண்ட கால வளர்ச்சி வேண்டுமானால் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்வதும் கூட சிறப்பான தேர்வே. எப்போதுமே தங்கத்தை காசுகளாக அல்லது கட்டிகளாக வாங்க வேண்டும். இல்லையென்றால் தங்க பண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும். தங்க நகைகள் வாங்குவதை முதலீடாக கருதாதீர்கள்.
நாற்பதுகளில் முதலீடு
இந்த வயதில் பொதுவாக நீங்கள் அதிகமாக சம்பாதிப்பீர்கள். அதனால் உங்கள் ஓய்வு கால சேமிப்பு மற்றும் குழந்தைகளுக்கான திருமணம் அல்லது உயர் கல்வி போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு வீடு வாங்கவோ கட்டவோ எண்ணம் இருந்தால் இந்த காலத்தில் கட்டுவதே சரியான நேரமாக இருக்கும்.
ஐம்பதுகளில் முதலீடு
இந்த பருவத்தில் நீங்கள் ஓய்வு காலத்தை நெருங்கி கொண்டிருப்பீர்கள். அதனால் இடர்பாடு குறைவாக இருக்கும் முதலீட்டை தேர்ந்தெடுங்கள். உங்கள் மகளின் திருமண நேரத்தின் போது பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தால் என்ன செய்வீர்கள்? அந்த இழப்பை தவிர்க்க பங்குச் சந்தையில் செய்துள்ள முதலீட்டின் ஒரு பகுதியை கடன் பத்திரத்தில் முதலீடு செய்யுங்கள். அதனால் மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தால் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே உங்கள் பணத்தை பங்குகளில் இருந்து எடுத்து கடன்பத்திரமாக மாற்றி விடுங்கள்.
அறுபதுகளில் முதலீடு
இந்த பருவத்தில் உங்கள் பணத்தை மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். மற்ற திட்டங்களை விட இதில் வருவாய் அதிகமாக இருப்பதால் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதில் முதலீடு செய்யலாம். வைப்பு நிதியில் பணத்தை முதலீடு செய்தாலும் கூட நல்ல வருவாயை ஈட்டித் தரும். உங்கள் பணமும் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு அதிலும் கொஞ்சம் சம்பாதிக்கலாம்.

-thatstamil
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட்... ஒரு சூப்பர் மார்க்கெட்!
» பி.பி.எஃப். முதலீடு... சூப்பர் சேமிப்பு !
» வீட்டுக் கடன் சுலபமாக வாங்க சூப்பர் டிப்ஸ்!
» வேலைக்கு செல்லும் பெண்களுக்கான முதலீடுகள்..
» பெண்களுக்கான ஸ்பெஷல் ஹெல்த் பாலிசிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum