Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பி.பி.எஃப். முதலீடு... சூப்பர் சேமிப்பு !
Page 1 of 1

சராசரி மனிதர்கள் விரும்பும் சேமிப்புத் திட்டங்கள் பல இருக்க, அதில் பி.பி.எஃப். அண்மைக் காலமாகப் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த பி.பி.எஃப். சேமிப்புத் திட்டத்தில் நீங்களும் இறங்கும்முன் அதுபற்றி தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லவே இந்தக் கட்டுரை...
பாதுகாப்பான முதலீடு!
1968-ல் சிறு முதலீட்டாளர்களுக்காகவும், சுயதொழில் செய்பவர் களுக்காகவும், மத்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டது பி.பி.எஃப். சேமிப்பு. நீண்டகால நோக்கில் இது ஒரு பாதுகாப்பான முதலீடு. சராசரியான வருமானம், வருமான வரிச் சலுகை என்பது இதில் கிடைக்கும் கூடுதல் சிறப்பு.
நீண்டகாலத்துக்கு..!
இதில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டால் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலீட்டை தொடரவேண்டும். அதன் பின்னரே முழுமையாகப் பணத்தை வெளியில் எடுக்க முடியும். வங்கிச் சேமிப்புக் கணக்குபோல தேவைப்படும் போதெல்லாம் இதிலிருந்து பணத்தை வெளியில் எடுத்து செலவு செய்ய முடியாது.
எப்படி ஆரம்பிப்பது?!
உங்களுக்கு அருகில் உள்ள தேசிய வங்கிகளில் (உதா., ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) அல்லது அஞ்சலகங்களில் பி.பி.எஃப். முதலீட்டை ஆரம்பிக்கலாம். அங்குத் தரப்படும் படிவங்களில் கேட்கப்பட்டுள்ள விவரங் களை பூர்த்தி செய்துதருவதுடன் உங்களின் புகைப்படத்தையும், பான் கார்டு எண்ணையும் தருவது அவசியம். அலுவலர்களால் சரிபார்க்கப்பட்ட பின்னர் உங்களது பி.பி.எஃப். சேமிப்புக் கணக்கு ஆரம்பமாகிவிடும். பி.பி.எஃப். முதலீடு எப்படி அவசியமோ, அதேபோலத் தான் அதில் தொடர்ந்து முதலீடு செய்வதும்.
ஒன்றுக்கு மேல்..?
ஒருவர் பெயரில் ஒரே ஒரு பி.பி.எஃப். சேமிப்புக் கணக்கு மட்டுமே ஆரம்பிக்க முடியும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பி.பி.எஃப். சேமிப்புக் கணக்கு ஆரம்பித்து அதற்கு பாதுகாப்பாளராக இருந்து கொள்ளலாமே தவிர, நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கைத் தொடங்க முடியாது. ஒருவர் பெயரில் இரண்டு பி.பி.எஃப். சேமிப்புக் கணக்கு இருப்பது உறுதியானால், இரண்டாவதாக ஆரம்பிக்கப் பட்ட பி.பி.எஃப். சேமிப்புக் கணக்கு நிறுத்தப் பட்டு, அதில் சேர்ந்திருக்கும் பணம் திருப்பித் தரப்படும். ஒருவர் பெயரில் ஜி.பி.எஃப் மற்றும் இ.பி.எஃப். இருந்தாலும் பி.பி.எஃப். சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கலாம்.
எவ்வளவு சேமிக்கலாம்?
பி.பி.எஃப். சேமிப்பில் குறைந்தபட்சம் வருடத்திற்கு 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். மாதம் ஒன்று வீதம் 12 முறை மட்டுமே பி.பி.எஃப். சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் இடைவெளிவிடாமல் பணம் கட்டவேண்டியது அவசியம். அப்படி இடைவெளி விடும்பட்சத்தில் ஓராண்டுக்கு
50 ரூபாய் அபராதக் கட்டணத்துடன், குறைந்த பட்ச முதலீடான 500 ரூபாயையும் சேர்த்து முதலீடு செய்தால்தான் தொடர முடியும். பி.பி.எஃப். சேமிப்புக் கணக்கு ஆரம்பித்தப் பிறகு ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் ஐந்தாவது தேதிக்குள் பணம் செலுத்துவது நல்லது.
பிளஸ்கள்!
இந்த பி.பி.எஃப். சேமிப்பிற்கு 8.8% வருமானம் கிடைக்கிறது. இது நிரந்தரமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை மாற்றத்திற்கு உட்படலாம். பி.பி.எஃப். சேமிப்பு 15 ஆண்டு முதிர்ச்சிக்குப் பிறகு ஒவ்வொரு ஐந்தாண்டுகளாக உங்கள் சேமிப்பைத் தொடரலாம். ஆனால், எந்தக் கட்டாயமும் கிடையாது. இன்னொரு வாய்ப்பாக,
15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் தொகையில் அதிகபட்சமாக 60 சதவிகிதத் தொகையை வெளியில் எடுத்துவிட்டு மீதி தொகையு டனும் பி.பி.எஃப். சேமிப்பை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரலாம்.
ஒருவர் மீது பொருளாதாரக் குற்றங்கள் சுமத்தப்படும்போது அவரிடம் இருக்கும் எதை வேண்டுமானாலும் அரசு எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், இந்த பி.பி.எஃப்.பை எடுக்க முடியாது. 80சி பிரிவின் கீழ் அதிகப்பட்சமாக ஒரு லட்சம் வரை வரி விலக்குக் கிடைக்கும். 15 ஆண்டுகள் கழித்து பி.பி.எஃப். சேமிப்பில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி கட்டத் தேவையில்லை.
கடனும் பெறலாம்!
பி.பி.எஃப்.-ல் சேமிக்கும் தொகைக்குக் கடன் பெறமுடியும். இதற்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணத்தைச் சேமித்திருக்க வேண்டும். சேமிப்புத் தொகையிலிருந்து 25 சத விகிதம் கடனாக வழங்கப்படும். கடனை 36 தவணையில் திரும்பக் கட்டலாம். முதலில் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திய பிறகு இரண்டாவது முறையும் பி.பி.எஃப். மூலம் கடன் பெற முடியும்.

ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பென்ஷன், பி.எஃப் ஃபண்ட் முதலீடு...சந்தைக்கு சாதகமா?
» வங்கு முதலீடு, முன்னுரிமை துறைகள், அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு - என்றால் என்ன?
» வீட்டுக் கடன் சுலபமாக வாங்க சூப்பர் டிப்ஸ்!
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு Vs நேரடி பங்குச் சந்தை முதலீடு எது பெஸ்ட்; ஏன் பெஸ்ட்?
» பெண்களுக்கான சூப்பர் முதலிட்டு கொள்கைகள்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum