Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பணவீக்க பாண்டு முதலீடு... லாபம் தருமா?
Page 1 of 1
பணவீக்க பாண்டு முதலீடு... லாபம் தருமா?
சிறு முதலீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் பணவீக்கத்தைவிட அதிகமாக வருமானம் தரக்கூடிய பாண்டுகளை (Inflation Indexed National Saving Securities - Cumulative (IINSS-C)) மத்திய அரசாங்கம் வெளியிடுகிறது.
இந்த பாண்டுகளில் டிசம்பர் 23-31-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். இந்த பாண்டின் ஹைலைட் மற்றும் பாதகங்களை இனி பார்ப்போம்.
ஹைலைட்!
* இந்தவகை பாண்டுகளில் வருடத்துக்கு குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலம் 10 ஆண்டுகள்.
* இதற்கான வட்டி விகிதம் 1.5% (நிலையானது) + நுகர்வோர் பணவீக்க விகிதம்.
* இந்த முதலீட்டுக்கான வட்டியானது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு முதலீட்டுக் காலம் முடியும்போது வட்டி வருமானத்துடன் சேர்த்து வழங்கப்படும்.
* இந்த பாண்டுகளில் முதலீடு செய்யும் மூத்தக் குடிமக்கள், முதலீடு ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து விலகிக்கொள்ளலாம். மற்றவர்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு விலகிக்கொள்ளலாம்.
* இந்த முதலீட்டில் நாமினிகளாக ஒருவர் அல்லது ஒருவருக்கு மேற்பட்டவர்களை நியமிக்கலாம். என்ஆர்ஐ-களையும் நாமினியாக நியமித்துக்கொள்ள முடியும்.
* இந்தவகை முதலீடுகளில் தனிநபர், இந்து கூட்டுக் குடும்பம், அறக்கட்டளைகள் முதலீடு செய்யலாம்.
* இந்த பாண்டை அடமானமாக வைத்து வங்கிகளில் கடன் வாங்க முடியும்.
* இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் இந்த பாண்டுகளை வாங்கலாம்.
பாதகங்கள்!
* இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கட்டவேண்டும். ஒவ்வொரு வருடத்துக்கான வட்டிக்கு அந்த வருடமே வரி கட்டவேண்டும். ஆனால், வட்டியானது 10 ஆண்டுகள் கழித்து அசலோடுதான் கிடைக்கும். சுருக்கமாகச் சொன்னால், என்றோ கிடைக்கப்போகும் வட்டிக்கு முன்னதாகவே வரி கட்டவேண்டும்.
* ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் வட்டி கணக்கிடப்பட்டு முதலீட்டுக் காலமுடிவில் வருமானத்துடன் கூடிய மொத்தத் தொகை கிடைக்கும் என்பதால், வருடாவருடம் பணவீக்க விகிதமானது அதிகரித்தால்தான் வருமானம் அதிகரிக்கும்.
உதாரணத்துக்கு, பணவீக்கம் 10% எனக் கொண்டால், கிடைக்கும் வருமானம் 11.5 சதவிகிதமாக இருக்கும். அதே 6% எனக் கொண்டால் கிடைக்கும் வருமானம் 7.5 சதவிகிதமே!
* இதன் வருமானமானது முதலீட்டுக் காலத்துக்கு முன்னால் எடுக்கும்போது, கடைசியாக இருக்கும் வட்டி விகிதத்தில் 50% அபராதமாக வசூலிக்கப்படும். அந்தவகையில் மூத்தக் குடிமக்கள் இந்த முதலீட்டின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பாமல் இருப்பது நல்லது.
* நீண்ட காலம் என்பதால் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கும் அல்லது குறையும் என்று கணக்கிட முடியாது. இதை மையமாக வைத்து முதலீடு செய்தால் நிலையான வருமானம் இல்லை என்றாலும், சுமாரான வருமானத்துக்கு உத்தரவாதம் கிடைப்பது சந்தேகமே.
* தற்போதைய நுகர்வோர் விலைக் குறியீட்டை (11.5% வட்டி கிடைக்குமென்றால்) வைத்துப் பார்க்கும் போது, வரிக்குப் பிந்தைய வருமானமானது குறைந்த வருமான வரி வரம்பான 10.3 சதவிகிதத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே லாபமாக இருக்கும்.
அதிக வருமான வரி வரம்பில் இருப்பவர்களுக்கு பிபிஎஃப், வரி விலக்கு பாண்டுகள் சாதகமாக இருக்கும்.
* வட்டி வருமானம், முதலீடு முடியும் போதுதான் (10 வருடங்கள்) வழங்கப்படும் என்பதால், ஓய்வுபெற்றவர்களுக்கு நிலையான மாத வருமானம் கிடைக்காது.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, இந்த முதலீடு பணவீக்கத்துக்கான மருந்தாகத் தெரியவில்லை.
-விகடன் இந்த பாண்டுகளில் டிசம்பர் 23-31-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். இந்த பாண்டின் ஹைலைட் மற்றும் பாதகங்களை இனி பார்ப்போம்.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» வெள்ளியில் முதலீடு லாபம் தருமா?
» இன்ஃப்ரா ஃபண்டுகள்... இனி லாபம் தருமா?
» மல்டி அசெட் ஃபண்ட் லாபம் தருமா?
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு Vs நேரடி பங்குச் சந்தை முதலீடு எது பெஸ்ட்; ஏன் பெஸ்ட்?
» மியூச்சுவல் முதலீடு: லாபம் பார்ப்பது எப்படி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum