வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


வெள்ளியில் முதலீடு லாபம் தருமா?

Go down

வெள்ளியில் முதலீடு லாபம் தருமா? Empty வெள்ளியில் முதலீடு லாபம் தருமா?

Post by தருண் Fri Nov 07, 2014 7:41 pm

தங்கத்துக்கு அடுத்தபடியாக விலை உயர்ந்த உலோகமாக இருப்பது வெள்ளிதான். கடந்த ஒரு மாதமாக வெள்ளியின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

கிலோ ரூ. 60 ஆயிரத்துக்கு மேல் வெள்ளியின் விலை சென்றபோது அது இன்னும் உயரும் என முதலீடு செய்தவர்கள் பலர். அதன்படியே வெள்ளியின் விலை ரூபாய் 75 ஆயிரத்துக்கு மேல் சென்று லாபம் தந்தது. ஆனால் வெள்ளியின் விலை அதற்கு பின் உயரவில்லை.

இதனால் முதலீடு நோக்கில் வெள்ளியை வாங்கியவர்கள் நஷ்டத்தில் இருக்கிறார்கள். இப்போது மீண்டும் வெள்ளியின் விலை கடுமையாக சரிய ஆரம்பித்துள்ளது. இதனால் புதிதாக சிலர் வெள்ளியை முதலீடு நோக்கில் வாங்கலாமா என குழப்பத்தில் உள்ளனர்.

வெள்ளியின் விலை இன்னும் எவ்வளவு சரியும் என்பது குறித்து கமாடிட்டி நிபுணர் ஞானசேகர்தியாகராஜனிடம் கேட்டோம்.
"வெள்ளியின் விலை இன்னும் சரியவே செய்யும். இந்த சரிவு 32 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். ஏனெனில் தங்கத்தை போல ஆபரண தேவைக்கு அதிகமாக வெள்ளியை பயன்படுத்துவது கிடையாது. பெரும்பாலும் தொழில்துறையில்தான் வெள்ளியின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதாவது ஸ்மார்ட் போன் தயாரிப்பு, எல்இடி மானிட்டர் தயாரிப்பு என வெள்ளியின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

சீனாவில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதால் வெள்ளியின் தேவை குறைந்துள்ளது. ஆனால் இந்த நிலை இப்படியே இருக்காது. ஏனெனில் இன்றைய நவநாகரீக வாழ்க்கை சூழலில் அனைவர் கையிலும் ஸ்மார்ட் போன் என்பது கட்டாயம் இருக்கிறது. இதனால் இந்த பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கவே செய்யும். இதனால் வெள்ளியின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் வெள்ளியில் முதலீடு செய்யலாம்.

மத்தியில் அமைந்துள்ளதுள்ள நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ ஆட்சி, தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே அடுத்து வரும் ஆண்டுகளில் தொழில் துறை எப்படியும் வளர்ச்சி அடையும். அதுவும் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதோடு தொழில்நுட்ப வளர்ச்சியினால் அது சார்ந்த பொருட்கள் தினம் ஒரு ரகம் என சந்தையை நோக்கி படையெடுக்கின்றன. பொதுமக்களும் தங்கள் பொருளாதார வசதிக்கு ஏற்றவகையில் பொருட்களை வாங்குவதற்கு அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இதனால் தொழிற்துறையின் வளர்ச்சி கட்டாயம் இருக்கும்.

வெள்ளியில் முதலீடு லாபம் தருமா? Silver

எனவே முதலீடு நோக்கில் வெள்ளியை வாங்க நினைக்கிறவர்கள் வாங்கலாம். மேலும் 4 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி, இப்போது நஷ்டத்தில் காத்திருக்க முடியும் என்றால் அந்த முதலீட்டை அப்படியே வைத்திருக்கலாம். ஏனெனில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 32 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இறங்கி மீண்டும் உயருவதற்கான வாய்ப்புதான் அதிகம் உள்ளது." என்றார்.

- இரா.ரூபாவதி

--முக நூல்

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum