Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
2020-ல் ரூ.20 லட்சம் கோடி... வளர்ச்சிப் பாதையில் மியூச்சுவல் ஃபண்ட்!
Page 1 of 1

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது, பிர்லா மியூச்சுவல் ஃபண்ட். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன் நாணயம் விகடன் மியூச்சுவல் ஃபண்ட் சிறப்பிதழுக்காகப் பேட்டி அளித்தார்.
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் மொத்த தொகை 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி இருக்கிறது. ஆனால், வளர்ச்சி வேகம் என்பது 2000ம் ஆண்டுக்கு முன்பிருந்த அளவுக்கு இப்போது இல்லையே, ஏன்?
'
'கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, முதலீட்டாளர்களிடம் காணப்பட்ட நெகட்டிவ் சென்டிமென்ட் ஆகியவற்றால் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு குறைந்துபோனது. குறிப்பாக, 2003 முதல் 2008 வரை ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு குறைந்து காணப்பட்டது. அதேநேரத்தில், ஃபிக்ஸட் இன்கம் என்கிற கடன் ஃபண்டுகளில் தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடு அதிகரித்தது. ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு வளர்ச்சி குறைந்துபோனதற்கு முக்கியக் காரணம், பங்குச் சந்தை சரியாகச் செயல்படாதது தான்.''
நீண்ட காலமாகவே மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட 15 நகரங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்து வருகிறார்கள். மற்ற சிறு நகரங்களில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு இல்லையே ஏன்?
''இதற்குக் காரணமாக, பொருளாதார மந்தநிலை மற்றும் பங்குச் சந்தை சுணக்கத்தைக் குறிப்பிடலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மதிப்பு குறைந்துபோன காலகட்டத்தில் முதலீட்டாளர்களை சமாதானப்படுத்த மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பெரும்பாலும் முன்வர வில்லை. மேலும், முதலீட்டு மதிப்பு குறைந்துபோனது மற்றும் சந்தை மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை குறைந்துபோனதால், மேற்கொண்டு முதலீடு செய்ய முன்வரவில்லை. இது டாப் 15 நகரங்களைவிட சிறிய நகரங் களில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்தக் காலகட்டத்தில் மக்களின் முதலீடு, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் பக்கம் சென்றுவிட்டது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் பங்களிப்பு சிறிய நகரங்களில் குறைவு என்றாலும் முதலீடு அங்கேதான் அதிகமாக இருப்பதை செபி அமைப்பு கண்டுபிடித்தது. அதற்கு ஏற்ப சிறிய நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களுக்கு மியூச்சுவல் ஃபண்டை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புற ஏஜென்ட்களுக்கு அதிக கமிஷன் வழங்கப்படுகிறது.
கடந்த ஓராண்டு காலமாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு, இந்த வேகம் இன்னும் கூடி இருக்கிறது. சந்தை மீது முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் நம்பிக்கை பிறந்திருக்கிறது. கடந்த 5, 10, 15 ஆண்டு களில் முதலீடு செய்த அனைவரும் இப்போது லாபத்தில் இருக்கிறார்கள். 2008ல் முதலீடு செய்தவர்களும், 2011 மற்றும் 2012ல் முதலீடு செய்தவர்களும் இப்போது லாபத்தில் இருக்கிறார்கள். அடுத்த 35 ஆண்டுகளில் ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. அதற்கான நம்பிக்கை இப்போது உருவாகி இருக்கிறது.''
பட்ஜெட் 2014 வருமான வரிச் சலுகை மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு சாதகமா?
''80சி பிரிவில் வரிச் சலுகை முதலீட்டுக்கான அளவு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தக் கூடுதல் 50,000 ரூபாயை இஎல்எஸ்எஸ் ஃபண்டில் போடுவது மூலம் நல்ல வருமானத்தைப் பெற முடியும். நம்மவர்கள் 9% வருமானத்துக்கு பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்டில் போட்டுவிட்டு, 15 ஆண்டுகள் காத்திருக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றி கொஞ்சம் ரிஸ்க் எடுத்து, இஎல்எஸ்எஸ் ஃபண்டில் முதலீடு செய்வதன்மூலம் இதைவிட பல மடங்கு லாபம் பெற முடியும். இந்த இஎல்எஸ்எஸ் ஃபண்ட், ஒரு ஈக்விட்டி டைவர்ஸிஃபைடு ஃபண்ட் என்பதால் நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்பட்டு லாபமும் அதிகமாகக் கிடைக்கும்.''
அடுத்த 35 ஆண்டுகளில் எந்தெந்தத் துறைகளின் செயல்பாடு நன்றாக இருக்கும்?
''பொருளாதார வளர்ச்சி மேம்படும்போது பொதுவாக அனைத்துத் துறைகளின் செயல்பாடும் மேம்படும். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், வங்கி மற்றும் நிதிச் சேவை, வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் துறை நிறுவனங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வளர்ச்சி ஏற்பட்டு வருவதால், பார்மா மற்றும் ஐ.டி துறை நிறுவனங்களின் வளர்ச்சி முன்பைவிட அதிகமாக இருக்கும். அடுத்து, உற்பத்தி அதிகரிப்பால் கேப்பிட்டல் கூட்ஸ் நிறுவனங்களின் லாபம் கணிசமாக உயரும்.''
மியூச்சுவல் ஃபண்ட் துறை வளர்ச்சி குறித்து..?
''2020ம் ஆண்டில் எப்படி இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். தற்போது இந்திய மியூச்சுவல் துறை 10 லட்சம் கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது. 4 கோடி முதலீட்டாளர்கள் இருக்கிறார் கள். 2020ல் நிர்வகிக்கும் தொகை ரூ.20 லட்சம் கோடி, முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 20 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ.1.05 லட்சம் கோடி, முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 22 லட்சம் என்பதாக இருக்கிறது. இதை 2020ல் நிர்வகிக்கும் தொகை ரூ.2 லட்சம் கோடி, முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 50 லட்சம் என அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.'
சிறு முதலீட்டாளர்களுக்கு உங்களின் ஆலோசனை?
''நம்மவர்கள் இன்ஷூரன்ஸ் பாலிசிக்குப் பணம் கட்டும் ஒழுங்கை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும் பின்பற்றினால் நல்ல லாபம் பார்க்க முடியும். லாபமோ, நஷ்டமோ இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை விடாமல் கட்டிவிடுகிறார்கள். இதேபோல் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபியிலும் பின்பற்றி 10, 15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், குழந்தைகள் படிப்பு, கல்யாணம், சொந்த வீடு போன்றவை எளிதில் நிறைவேறிவிடும். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் அடுத்த 35 ஆண்டுகளில் 1820%ஆண்டு வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வருமானத்துக்கு வரி எதுவும் கிடையாது என்பது கூடுதல் லாபம்' என்றார்.

ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் சொத்து மதிப்பு ரூ.20 லட்சம் கோடியாக உயரும்: செபி
» அன்று ரூ.10 லட்சம்... இன்று ரூ.6.6 கோடி!
» மியூச்சுவல் ஃபண்ட் : வரலாறு
» மியூச்சுவல் பண்டில் 9 லட்சம் புதிய முதலீட்டாளர்கள்
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum