Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஃபண்ட் பரிந்துரை :
2 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஃபண்ட் பரிந்துரை :
First topic message reminder :
ஃபண்ட் பரிந்துரை : ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் முதலீடு செய்க!
சொக்கலிங்கம் பழனியப்பன்,டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
இந்த ஃபண்ட் பெயரில் குறிப்பிட்டுள்ளதுபோல, மிட் - ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் பங்கு சார்ந்த திட்டமாகும். இதன் ஃபண்ட் மேனேஜர் சிராக் சேத்தல்வத் ஆவார். இந்த ஃபண்ட் ஏறக்குறைய 62 சதவிகிதத்தை மிட் கேப் பங்குகளிலும், 23 சதவிகிதத்தை ஸ்மால் கேப் பங்குகளிலும், எஞ்சியதை லார்ஜ் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது.
இந்த ஃபண்ட் மேனேஜர் இந்த ஃபண்டையும் இன்னும் ஓரிரு ஃபண்டுகளையும் தொடர்ந்து நல்ல முறையில் நிர்வகித்து வருகிறார். இந்த ஃபண்ட் ஆரம்பித்ததிலிருந்து இதன் ஃபண்ட் மேனேஜராக இவரே உள்ளார். இவர் நல்ல, தரமான நிறுவனங்களையே இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளார்.
பொதுவாக, மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் இந்தியச் சந்தையில் முதலீடு செய்ய நிறைய பொறுமை வேண்டும். அந்தப் பொறுமை இந்த ஃபண்ட் மேனேஜரிடம் உள்ளது. தரமான நிறுவனங்களை வைத்துள்ளதால், இந்த ஃபண்ட் சந்தை இறங்குமுகமாக இருக்கும்போது, திடமாக நிற்கும். மிட் - ஸ்மால் கேப் ஃபண்ட் என்றாலே ரிஸ்க் மற்றும் ரிவார்டு ஆகிய இரண்டுமே அதிகமாக இருக்கும்.
கடந்த ஆண்டுகளில் (2008 மற்றும் 2011-ம் ஆண்டுகளைத் தவிர) இந்த ஃபண்ட் நிஃப்டி 50 குறியீட்டைவிட அதிகமான வருமானத்தைத் தந்துள்ளது. சந்தை வீழ்ச்சியில் இருக்கும்போது, சந்தையைவிட அதிகமாக விழும்; அதே சமயம், சந்தை காளையின் பிடியில் இருக்கும்போது, சந்தையைவிட மிகவும் அதிகமான வருமானத்தைத் தரும்.
உதாரணத்துக்கு, 2009-ம் ஆண்டு, சந்தை 18.64% வருமானத்தைத் தந்தது. ஆனால், இந்த ஃபண்ட் 94.40% வருமானத்தைத் தந்தது. அதேசமயம், 2011-ம் ஆண்டுச் சந்தை 6.31% வருமானத்தைத் தந்தது. ஆனால், இந்த ஃபண்டின் வருமானம் 18.31% ஆகும்.
இந்த ஃபண்ட் நிஃப்டி குறியீட்டுடன் ஒப்பிடும்போது, நிதி மற்றும் எஃப்எம்சிஜி துறையில் அண்டர்வெயிட்டாகவும் (under weight) ஆகவும், ஹெல்த்கேர், இன்ஜினீயரிங் மற்றும் கெமிக்கல்ஸ் துறையில் ஓவர்வெயிட்டாகவும் (over weight) உள்ளது. இது மிட் கேப் ஃபண்டாக இருந்தபோதிலும் அதன் பீட்டா (0.89) சந்தையைவிட குறைவாகவே உள்ளது.
இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (25.06.2007) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.2,83,700-ஆக உள்ளது. இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்தோ ரூ.3,000 கோடிக்கு மேல்.
நேரடியாக மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்ய திணறுபவர்களுக்கு இந்த ஃபண்ட் ஒரு நல்ல முதலீட்டுக் கருவி. இளம்வயதினர், செல்வத்தைப் பன்மடங்காக்க விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள், நீண்ட நாள் காத்திருக்க முடிந்தவர்கள், குறுகிய காலத்தில் பணம் தேவைப்படாதவர்கள், மிட்-ஸ்மால் கேப் நிறுவனங்கள் இனிவரும் காலத்தில் வேகமாக வளரும் என நினைப்பவர்கள் போன்ற அனைவரும் இந்த ஃபண்டில் தாராளமாகவும், மொத்தமாகவும், எஸ்ஐபி மற்றும் எஸ்டிபி முறையிலும் முதலீடு செய்யலாம்.
முதலீட்டுக் காலம்!
இந்த ஃபண்டில் அதிகமாக மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் இடம் பெற்றுள்ளதால், நீண்ட காலத்தில்தான் வருமானம் தரக்கூடியதாக இருக்கிறது.
யார் முதலீடு செய்யக் கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான, நிலையான வருமானத்தை விரும்பு பவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள் ஆகியோர் இந்த ஃபண்டில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதே நல்லது!
-- ந.விகடன்

Last edited by தருண் on Fri Aug 01, 2014 9:20 am; edited 1 time in total
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Re: ஃபண்ட் பரிந்துரை :
ஃபண்ட் பரிந்துரை!
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
சென்ற வாரங்களில் பங்கு சார்ந்த திட்டங்கள் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் கடன் சார்ந்த திட்டங்களில் ஒன்றான ஃப்ராங்க்ளின் இந்தியா கார்ப்பரேட் பாண்ட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம். இதே ஃபண்ட் நிறுவனத்தைச் சார்ந்த ஷார்ட் டேர்ம் இன்கம் ப்ளான் குறித்து சில வாரங்களுக்கு முன்பு பார்த்தோம். அந்த ஃபண்டின் ஆவரேஜ் முதிர்வு காலத்தைவிட இந்த ஃபண்டின் ஆவரேஜ் முதிர்வு காலம் சற்று அதிகம். அதேபோல், இந்த ஃபண்டின் வருமானமும் சற்று அதிகமாக இருக்கும்.
இந்த ஃபண்டை ஃபிக்ஸட் டெபாசிட்டுக்குச் சமமாக எடுத்துக்கொள்ளலாம் – முதலீட்டுக் காலம் 3 ஆண்டுகளுக்குமேல் இருக்கையில்! மியூச்சுவல் ஃபண்டுகளின் நடைமுறைப்படி, எவ்விதமான வருமான கேரன்டியும் தரக்கூடாது. ஆகவே, இந்த ஃபண்டிலும் வருமானம் இவ்வளவு வரும் என்ற கேரன்டி கிடையாது. கடந்த 1, 2 மற்றும் 3 ஆண்டுகளில் முறையே 11.7%, 10.2% மற்றும் 10.4% வருமானத்தைக் கொடுத்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளிலும் இதுபோல் வங்கி டெபாசிட்டுகளைவிட அதிக வருமானத்தை இந்த ஃபண்டும், இதன் கேட்டகிரியில் உள்ள பிற ஃபண்டுகளும் தரும் என எதிர்பார்க்கலாம்.
இதுபோன்ற கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும்போது, முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டுக் காலத்தை, பொதுவாக 3 ஆண்டுகளுக்குமேல் வைத்துக் கொள்வது நன்று. ஏனென்றால், சந்தையின் சின்னச் சின்ன ஏற்ற இறக்கங்கள் இந்த ஃபண்டை பாதிக்காமல் இருக்கும்.
மேலும் 3 ஆண்டுகளுக்குமேல் வைத்திருக்கையில்தான் நீண்ட கால முதலீட்டு லாப வரி உரித்தாகும். 3 ஆண்டுகளுக்குள் பணத்தை எடுத்தால், கிடைக்கும் வருமானத்துக்கு உங்கள் வரி வரம்பில், வரி கட்ட வேண்டிவரும். 3 ஆண்டுகளுக்குமேல் பணத்தை வெளியில் எடுக்கும்போது, வரும் வருமானத்துக்கு, பணவீக்கத்துக்கு அட்ஜஸ்ட் செய்த பிறகு 20% வரி செலுத்த வேண்டும். இது ஃபிக்ஸட் டெபாசிட்டுகளோடு ஒப்பிடும்போது, மிகவும் குறைவான வரி ஆகும்.
இந்த ஃபண்ட் நிர்வகித்து வரும் தொகை ரூ. 7,433 கோடியாகும். இதன் ஃபண்ட் மேனேஜர்கள் சந்தோஷ் காமத் மற்றும் சுமித் குப்தா ஆவர். இந்த ஃபண்ட் வைத்திருக்கும் கடன் பத்திரங்களின் சராசரி முதிர்வு காலம் 2.8 வருடங்கள் ஆகும். இதன் பெயரில் குறிப்பிட்டுள்ளதுபோல இந்த ஃபண்ட் முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளின் கடன் பத்திரங்களையே வைத்துள்ளது.
அரசாங்க பாண்டுகள் இதன் போர்ட்ஃபோலியோவில் இல்லை. இதன் போர்ட்ஃபோலியோவில் கிட்டத்தட்ட 11% கிகிகி ரேட்டிங் கொண்ட பத்திரங்களும், 44% கிகி பத்திரங்களும், எஞ்சியது கி அல்லது அதற்கும் குறைவான ரேட்டிங் கொண்ட பத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. ஆகவே, எனக்கு கிகிகி ரேட்டிங் கொண்ட பத்திரங்கள்தான் வேண்டும் என்பவர்கள், இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம். இதன் போர்ட்ஃபோலியோவில் ஜேஎஸ்டபிள்யூ குரூப், அதானி என்டர்பிரசைஸ், ஹெச்பிசிஎல் மித்தல் பைப்லைன்ஸ், தீவான் ஹவுஸிங் போன்ற நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.
இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவின் தற்போதைய யீல்டு 10.44% ஆகும். அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பிருப்பதால், இந்த ஃபண்ட் வைத்திருக்கும் பாண்டுகளில் கேப்பிட்டல் அப்ரிஸியேஷனுக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த ஃபண்டின் வருமானமும் நன்றாக இருக்கும்.
இந்த ஃபண்டின் செலவு விகிதம் 1.82% ஆகும். இது, இதையொத்த பிற ஃபண்டுகளைப் பார்க்கும்போது, சற்று அதிகம். இந்த ஃபண்ட் ஆரம்பித்தது டிசம்பர் மாதம் 2011ம் ஆண்டு ஆகும். நாம் பொதுவாக 5 ஆண்டுகளுக்குக் குறைவாக சந்தையில் இருந்துள்ள ஃபண்டுகளை நமது பரிந்துரைக்கு எடுத்துக் கொள்வதில்லை.
இந்த கேட்டகிரி புதிதாகத் தலையெடுத்து வரும் கேட்டகிரி என்பதால், இதில் வெற்றிகரமாக நடந்துவரும் நீண்ட காலத் திட்டங்கள் குறைவே. இந்த ஃபண்டின் இதுநாள்வரை உள்ள செயல்பாட்டை வைத்தும், இந்த ஃபண்ட் நிறுவனத்தின் கடன் சார்ந்த திட்டங்களில் உள்ள அனுபவத்தை வைத்தும் இந்த ஃபண்டை பரிந்துரை செய்கிறோம்.
இந்த ஃபண்ட் ஆரம்பித்து கடந்த 11 காலாண்டுகளில், ஒரு காலாண்டைத் தவிர மற்ற அனைத்துக் காலாண்டுகளிலும் பாசிட்டிவ் வருமானத்தையே கொடுத்துள்ளது. இந்த ஃபண்ட், ஒருவர் ஒரு தினத்துக்கு ஒரு ப்ளானுக்கு ரூ.20 கோடிக்குமேல் முதலீடு செய்ய அனுமதிப்பதில்லை. இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.10.94 ஆகும்.
வருடத்துக்கு 3 – 4 முறை டிவிடெண்டை வழங்கியுள்ளது. உடனடி பணம் தேவையில்லாதவர்கள், குரோத் ஆப்ஷனில் சென்றுவிட்டு 3 ஆண்டுகள் கழித்து எஸ்டபிள்யூபி முறையில் பணத்தை எடுத்துக்கொள்வது, வரிச் சுமையைக் குறைக்கும்.
இந்த ஃபண்டில் முதலீடு செய்த ஒரு வருடத்துக்குள் வெளியேறினால் 3%ம், 1 – 2 வருடத்துக்குள் வெளியேறினால் 2%ம், 2 – 3 ஆண்டுகளில் வெளியேறினால் 1%ம் வெளியேற்றுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஆகவே, மூன்று ஆண்டுகளுக்குள் பணம் தேவைப்படுபவர்கள் வேறு கேட்டகிரியில் உள்ள ஃபண்டுகளை நாடலாம். கேரன்டியான வருமானத்தை நாடுபவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம்.
நல்ல ஃபண்ட் நிறுவனம், சிறந்த ஃபண்ட் மேனேஜ்மென்ட் டீம், நல்ல வரலாறு போன்ற குணங்களுடைய இந்த ஃபண்ட் கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்களுக்கும், போர்ட் ஃபோலியோவில் கடன் சார்ந்த ஒதுக்கீட்டை நாடுபவர்களுக்கும் சிறப்பான முதலீடாக அமையும்.
யாருக்கு உகந்தது?
பங்குச் சந்தை ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், அதிக வரி வரம்பில் இருப்பவர்கள், வரிக்குப் பிந்தைய வருமானத்தை அதிகமாக எதிர்பார்ப் பவர்கள், ஓய்வுக்காலத்தில் இருப்பவர் கள், பணம் அதிகம் உள்ளவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள், நடுத்தர காலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு நிகரான வருமானத் துடன் வேண்டும்போது எடுத்துக் கொள்ளும் வசதியை விரும்புபவர்கள்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
நீண்ட காலத்தில் பணம் தேவைப்படு பவர்கள், குறிப்பிட்ட இடைவெளிகளில் உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள்.
-- ந.விகடன் சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

ஃபண்ட் பரிந்துரை
டி.எஸ்.பி-பி.ஆர் டாக்ஸ் சேவர் ஃபண்ட்: முதலீடு செய்க
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
இதற்கு முன்பு இரண்டு டாக்ஸ் சேவர் - அதாவது, இஎல்எஸ்எஸ் (ELSS – Equity Linked Savings Scheme) குறித்து பார்த்தோம். ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்டு மற்றும் ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவையே அந்த ஃபண்டுகள். இந்த வாரம் டிஎஸ்பி-பிஆர் டாக்ஸ் சேவர் ஃபண்ட் குறித்து பார்ப்போம்.
டிஎஸ்பி பிளாக் ராக் (DSP – BlackRock) நிறுவனம் ரூ.38,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் நல்ல செயல்முறையைக் கொண்டுள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
இந்தத் திட்டம் ஜனவரி 2007-ல் துவங்கப்பட்டது. தற்போது ரூ.1,063 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் அபூர்வ ஷா. இவர் நெடுநாட்களாக இந்த நிறுவனத்தில் ஃபண்ட் மேனேஜராக உள்ளார். ஜூலை 2012-ல் இருந்து இந்த ஃபண்டின் மேனேஜராக இருக்கிறார்.
இந்த ஃபண்டின் போர்ட் ஃபோலியோவில் ஏறக்குறைய 60% லார்ஜ் கேப், 40% மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் இடம்பெற்றுள்ளன. எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் எல் அண்ட் டி இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. அதுல், கஜாரியா செராமிக்ஸ், கும்மின்ஸ் இந்தியா, கிராம்ப்டன் கிரீவ்ஸ், ஐஷர் மோட்டார்ஸ் போன்ற நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளும் இதன் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஃபண்டின் பீட்டா 0.97. இது ஏறக்குறைய மார்க்கெட் பீட்டா ஆகும். ஆகவே, இந்த ஃபண்டின் ஏற்ற இறக்கமும் சந்தையை ஒட்டியே இருக்கும். இதன் ஆல்ஃபா 8.55 என்பது மிகவும் நல்ல செயல்பாட்டை குறிக்கிறது. இந்த ஃபண்ட் எப்போதும் முழுவது மாக முதலீட்டிலேயே இருக்கும் – அதாவது, கேஷ் கால்ஸ் எடுப்ப தில்லை.
இந்த ஃபண்ட் ஃபைனான்ஸ், டெக்னாலாஜி,் எனர்ஜி போன்ற துறைகளில் நிஃப்டி 50 குறியீட்டை ஒப்பிடும்போது அண்டர்வெயிட்டாகவும், ஹெல்த்கேர், கெமிக்கல்ஸ், இன்ஜினீயரிங் போன்ற துறைகளில் ஓவர்வெயிட்டாகவும் உள்ளது.
இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (ஜனவரி 18, 2007) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது (ஜனவரி 02, 2015) ரூ.3,11,730-ஆக உள்ளது. இது கூட்டுவட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 15.35%-க்கு சமம். இதே காலகட்டத்தில் நிஃப்டி 50 குறியீடு, கூட்டுவட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 9.39%தான் தந்துள்ளது. கடந்த கால பொருளாதார மந்தநிலையைக் கணக்கில் கொண்டால், இது நல்ல வருமானமே. இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.17.70. இது வரை 4 முறை டிவிடெண்ட் தந்துள்ளது. கடந்த இரு ஆண்டு களாக பிப்ரவரியில் டிவிடெண்ட் தந்துள்ளது. டிவிடெண்ட் எதிர்பார்ப்பவர்கள் இந்த ஆப்ஷனில் செல்லலாம்.
பிற இஎல்எஸ்எஸ் ஃபண்டுகளைப் போலவே, இந்த ஃபண்ட் முதலீட்டுக்கு மூன்று வருட காலம் லாக்-இன் உள்ளது. எஸ்ஐபி முறையில் செய்யப்படும் ஒவ்வொரு மாத முதலீட்டுக்கும், முதலீட்டு தேதியிலிருந்து 36 மாதங்கள் லாக்-இன் என்பதை நினைவில் கொள்வது நல்லது. நல்ல செயல்முறையைக் கொண்டுள்ள ஃபண்ட் நிறுவனம், பரிச்சயமான ஃபண்ட் மேனேஜர், நல்ல வருமானம் ஆகிய சிறப்புகளைக் கொண்ட இந்த ஃபண்டில், 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை தேவைபடுபவர்கள் தாராளமாக எஸ்ஐபி முறையிலும், சந்தையின் சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டின் லார்ஜ் கேப் ஃபோகஸ், இந்த ஃபண்டுக்கு ஒரு ஸ்திரத்தன்மையைக் கொடுக்கிறது.
யாருக்கு உகந்தது?
சம்பாத்தியம் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் இருந்து 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கை எதிர்பார்ப் பவர்கள், அவ்வாறு செய்யும் முதலீட்டில் ரிஸ்க் எடுத்து, எடுக்கும் ரிஸ்குக்கு ஏற்றாற்போல் வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள்.
யாருக்கு உகந்ததல்ல!
80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை தேவைப்படாதவர்கள், ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாதவர்கள், உறுதியான/நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் குறித்து போதிய ஞானம் இல்லாதவர்கள்.
?நான் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். அந்த முதலீட்டை 5-10 வருடங்கள் வைத் திருக்கத் தயாராக உள்ளேன். என் பயம் என்னவெனில், பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது முதலீடு செய்துவிட்டால், சில வருடங்கள் கழித்து அந்த முதலீட்டின் மதிப்பு எவ்வாறாக இருக்கும் என்பதுதான். (2000, 2008 ஆண்டுகளில் சந்தை பெரும் வீழ்ச்சி அடைந்ததைப்போல) இதைத் தெரிந்துகொள்ள ஏதேனும் புள்ளிவிவரங்கள் உள்ளதா? சுரேஷ், சென்னை.
“இதுபோன்ற தவறுகளை தவிர்க்கவே சிறு முதலீட்டாளர்களை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யச் சொல்கிறோம். உங்களால் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய முடியாது எனில், தாராளமாக மொத்தமாக முதலீடு செய்யலாம். அவ்வாறு செய்யும்போது எஸ்டிபி (STP – Systematic Transfer Plan) முறையைப் பயன்படுத்தி முதலீடு செய்யுங்கள். சந்தையின் உச்சம் எது பள்ளம் எது என்று யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது.
நிகழ்வுக்குபின்பே அது தெரி யும். ஆனால், இந்திய பொருளாதாரம் நல்ல வளர்ச்சியில் இருப்பதால், தவறான காலகட்டத்தில் முதலீடு செய்தால்கூட நீங்கள் காத்திருந்தால், லாபகரமாக வெளியே வரமுடியும். உதாரணத்துக்கு, கடந்த முறை ஜனவரி 07, 2008-ம் தேதியன்று சந்தை உச்சத்தைத் தொட்டது. உங்கள் கெட்ட காலம் அன்றுதான் நீங்கள் ஹெச்டிஎஃப்சி டாப் 200 திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாயை ஒன்றாக முதலீடு செய்திருந்தால், சில மாதங்களில் அந்த முதலீடு நஷ்டத்தில் இருந்திருக்கும்.
நீங்கள் டென்ஷன் ஆகாமல் அதை அப்படியே விட்டிருந்தால், அதன் இன்றைய மதிப்பு ரூ.2,00,869 (ஜனவரி 02, 2015) ஆக இருக்கும். இது கூட்டுவட்டி அடிப்படையில் சுமார் 10.50% வட்டிக்குச் சமம். வங்கி டெபாசிட் வட்டியைவிட இது அதிகம். மேலும், வருமான வரி ஏதும் நீங்கள் செலுத்த வேண்டாம். முடிந்தவரை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒருமுறை முதலீட்டோடு நின்றுவிடாமல், தொடர்ந்து முதலீடு செய்வது நன்று.''
ந.விகடன் டி.எஸ்.பி-பி.ஆர் டாக்ஸ் சேவர் ஃபண்ட்: முதலீடு செய்க

யூடிஐ ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் – ஷார்ட் டேர்ம் பிளான்: முதலீடு செய்க
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
உங்கள் பணம் ஏன் 4 சதவிகித வட்டியில் வங்கி சேமிப்புக் கணக்கில் தூங்க வேண்டும்? கடந்த வாரம் வரிச் சலுகை தரக் கூடிய ஒரு ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் ஒன்றான யூடிஐ ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.
ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் பலர் சம்பாதிக்கின்றனர். அவ்வாறு கஷ்டப்பட்டுச் சம்பாதித்தப் பணத்தைக் கண்டு கொள்ளாமல் தங்களது வங்கி சேமிப்புக் கணக்கிலேயே விட்டுவிடுகிறார்கள். பெரும்பாலான வங்கிகள் அந்தக் கணக்குக்கு ஆண்டுக்கு 4% வட்டியைத்தான் வழங்குகின்றன. ஆக, ஒரு வருடம் முழுதும் நீங்கள் 1 லட்சம் ரூபாயை வைத்திருந்தாலும், உங்களுக்குக் கிடைக்கப்போவது ரூ.4,000 மட்டும்தான்.
அதேசமயத்தில் யூடிஐ ஃப்ளோட்டிங் ரேட் போன்ற ஃபண்டுகளில் கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் 1 லட்சம் ரூபாயை வைத்திருந்தால், உங்களுக்கு ரூ.8,830 கிடைத்திருக்கும். இது சேமிப்புக் கணக்குடன் ஒப்பிடுகையில், இரண்டு மடங்குக்கும்மேல் வருமானம் கிடைக்கும். சேமிப்புக் கணக்கைப்போல வேண்டும் என்கிற போது, ஒருநாள் இடைவெளியில் எப்போது வேண்டுமென்றாலும் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதியும் உண்டு. ஆக, நீங்கள் தொகையை வைத்திருக்கும் சில நாட்களுக்குக்கூட ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உங்களுக்குக் கிடைக்கிறது. இது ஓர் அரிய முதலீட்டு வாகனம் என்பதால், பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற திட்டங்களைத் தங்களது டிரஷரி மேலாண் மைக்கு வெகு லாவகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
யூடிஐ ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் ரூ.3,100 கோடிக்கும் மேலான சொத்தை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் சுதிர் அகர்வால் ஆவார். இந்தத் திட்டம் 2003-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த இருபது காலாண்டுகளில் எந்த ஒரு காலாண்டிலும் இந்த ஃபண்ட் நெகட்டிவ் வருமானத்தைக் கொடுத்தது கிடையாது. இந்த ஃபண்டின் ஆவரேஜ் கிரெடிட் ரேட்டிங் “AAA” ஆகும். இது இந்த ஃபண்ட் மிகவும் குவாலிட்டியான முதலீடுகளைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கும்.
இதன் போர்ட்ஃபோலியோவில் டாப் ஹோல்டிங்ஸாக நமது மத்திய ரிசர்வ் வங்கியின் டிரஷரி பில்ஸ், ஹெச்டிஎஃப்சி-யின் கமர்ஷியல் பேப்பர், பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கனரா வங்கியின் டெபாசிட்டுகள், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் பாண்டுகள் உள்ளன. இந்த ஃபண்ட் பெரும்பாலும் தனது முதலீட்டை சர்ட்டிஃபிகேட் ஆஃப் டெபாசிட்டுகள், டிரஷரி பில்கள், கமர்ஷியல் பேப்பர்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்துள்ளது.
இந்த ஃபண்ட் எஸ்ஐபி முதலீட்டை ஏற்றுக்கொள்கிறது. குறைந்தபட்ச எஸ்ஐபி மற்றும் மொத்த முதலீடு, முறையே ரூ.2,500 மற்றும் ரூ.5,000 ஆகும்.
இந்த ஃபண்டில் செய்யும் முதலீட்டை நமக்கு ஏற்றாற்போல் பல தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கு அல்லது இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்துவதற்கு அல்லது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று இருக்கின்ற மகன்/ மகள் திருமணத்துக்கு என எந்தத் தேவைக்காக வேண்டுமானாலும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஃபண்டில் முதலீடு செய்யும் போது சிறு முதலீட்டாளர்கள் குரோத் ஆப்ஷனில் செல்லலாம். குரோத் ஆப்ஷன் தவிர, தினசரி டிவி டெண்ட், வாராந்திர டிவிடெண்ட், மாதாந்திர டிவிடெண்ட், டிவிடெண்ட் ரீஇன்வெஸ்ட்மென்ட் என பலவித ஆப்ஷன்கள் உள்ளன.
ஆனால், டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்லும்போது 28.33% (தனி நபர்கள்) அல்லது 33.99% (கம்பெனிகள்) டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரியைப் பிடித்துக் கொண்டுதான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் டிவிடெண்டை கொடுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்க. அந்த டிவிடெண்ட் முதலீட்டாளர்கள் கையில் கிடைக்கும்போது வரி இலவசம்தான்.
இந்தத் திட்டத்தில் நுழைவுக் கட்டணமோ அல்லது வெளியேற்றுக் கட்டணமோ எதுவுமே இல்லை. போட்ட சில நாட்களிலேயே பணத்தை எடுத்துக் கொள்ளலாம் அல்லது எவ்வளவு காலம் வேண்டு மானாலும் விட்டவைக்கலாம். சில தினங்கள் அல்லது மிகக் குறுகிய காலத் தேவைகளுக்கு வருபவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டாம். குறைந்தது ஒரு மாதத்துக் காவது தேவைப்படாத பணத்தை இந்தத் திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம். தேவைப்படும்போது மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
எஸ்ஐபி மற்றும் மொத்த முதலீட்டை இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் துவக்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டை துவக்குவதற்கு எந்த நேரமும் நல்ல நேரமே. அவ்வப்போது வங்கி சேமிப்புக் கணக்கில் தூங்கிக் கொண்டிருக்கும் பணத்தை இந்தத் திட்டத்துக்கு முதலீட்டாளர்கள் மாற்றிவிடலாம். பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ஒரு பிசினஸ் டே ஆகும்.
உங்களது வங்கிச் சேமிப்புக் கணக்கில் அதிகமான தொகையை வைத்திருப்பதும் ஒரு வகையில் ஆபத்தானதுதான். ஏனென்றால், ஏதேனும் ஆன்லைன் பிராடுகள் நடந்து உங்களது பணம் களவு போய்விட்டது எனில், வங்கி தாங்கள் பொறுப்பில்லை என்று கூறிவிடுகிறது. ஆகவே, இதுபோன்ற ஃபண்டுகளில் தாங்கள் பணத்தை வைத்திருக்கும்போது உங்களுக்கு பாதுகாப்புடன் அதிக வருமானமும் கிடைக்கிறது.
யாருக்கு உகந்தது?
சேமிப்புக் கணக்கில் நிறைய பணத்தை வைத்திருப்பவர் களுக்கு, ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, சில நாட்க ளிலிருந்து சில மாதங்களுக்கு பணம் தேவைப்படாத வர்களுக்கு, எமர்ஜென்ஸியில் பணம் தேவைப்படுகிறவர் களுக்கு, சேமிப்புக் கணக்கைவிட அதிக வருமானத்தை விரும்புபவர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் பணம் தேவைப்படுகிறவர்களுக்கு.
யாருக்கு உகந்ததல்ல?
அதிக வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்க முடியாதவர்கள், கேரன்ட்டீட் வருமானத்தை விரும்புபவர்கள்.
--ந.விகடன் யூடிஐ ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் – ஷார்ட் டேர்ம் பிளான்: முதலீடு செய்க

ஹெச்டிஎஃப்சி லார்ஜ் கேப் ஃபண்ட்: மாற்ற வேண்டிய ஃபண்ட்!
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
இதுவரை பல ஃபண்டுகளில் உங்களை முதலீடு செய்யச் சொன்னோம். இந்த வாரம் சற்று மாறுதலாக ஒரு ஃபண்டில் உள்ள உங்களின் முதலீட்டை வேறு ஒரு ஃபண்டுக்கு மாற்றிக்கொள்ளச் சொல்லி பரிந்துரை செய்கிறோம். களைகளை அவ்வப்போது பறித்தால்தானே உங்களது பயிர் நன்றாக வளரும். அதன் அடிப்படையில்தான் இந்தப் பரிந்துரை.
பொதுவாக, நாம் முதலீடு செய்யும் ஃபண்ட், குறைந்தது நிஃப்டி 50 குறியீட்டைவிட சற்று அதிகமான வருமானத்தைக் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு மேலாண்மை செய்வதற்கு நாம் பணம் கொடுக் கிறோம். அவ்வாறு நிஃப்டியைவிட அதிக வருமானம் கொடுக்க முடியாத பட்சத்தில் நாம் நிஃப்டி குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட குறியீட்டு ஃபண்டிலோ அல்லது
இ.டி.எஃப்-பிலோ குறைந்த செலவில் முதலீடு செய்துவிடலாம்.
அவ்வாறு நிஃப்டி குறியீட்டை தொடர்ந்து பீட் செய்யாத ஒரு ஃபண்டுதான் ஹெச்டிஎஃப்சி லார்ஜ் கேப் ஃபண்ட். இந்த ஃபண்ட் இதற்கு முந்தைய அவதாரத்தில் மார்கன் ஸ்டேன்லி குரோத் ஃபண்ட் என்று அழைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இந்தியாவில் தொழில் செய்துவந்த மார்கன் ஸ்டேன்லி மியூச்சுவல் ஃபண்ட், அவ்வளவு வெற்றிகரமாகச் செயல்பட முடியவில்லை. ஆகவே, டிசம்பர் 2013-ல் தனது ஃபண்டுகள் அனைத்தையும் ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு விற்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ஜூன் 2014-ல் ஹெச்டிஎஃப்சி நிறுவனம் திட்டங்களை எடுத்துக்கொண்ட பிறகு, திட்டங்களின் பெயர்களையும், அந்தத் திட்டங்கள் செயல்படும் விதத்தையும் மாற்றியமைத்தது. அதுசமயம்தான் மார்கன் ஸ்டேன்லி குரோத் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி லார்ஜ் கேப் ஃபண்டாக மாறியது.
இந்த ஃபண்ட் தற்போது ரூ.1,269 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் தற்போதைய ஃபண்ட் மேனேஜர்கள் விநய் குல்கர்னி மற்றும் ராகேஷ் வியாஸ் ஆவார்கள். இது தற்போது முழுக்க முழுக்க லார்ஜ் கேப் ஃபண்டாகச் செயல்பட்டு வருகிறது. இதன் போர்ட்ஃபோலியோவில் ஏறக்குறைய 94% லார்ஜ் கேப் பங்குகள் உள்ளன. எஞ்சியது மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
எஸ்பிஐ, இன்போஃசிஸ், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்றவை இதன் டாப் 5 ஹோல்டிங்ஸாக உள்ளது. முதல் இரண்டு பங்குகளிலும் 9 சதவிகிதத்துக்குமேல் வெயிட் உள்ளது. கடந்த 1, 2, 5, மற்றும் 10 வருட காலகட்டங்களில் நிஃப்டியைவிடக் குறைவான வருமானத்தையே கொடுத்துள்ளது (ஃபண்ட் வருமானம் Vs நிஃப்டி 50 வருமானம் ஒப்பீட்டு அட்டவணையைக் காண்க).
கடந்த காலச் செயல்பாடு பெரும்பாலும் மார்கன் ஸ்டேன்லி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தினால் தான் என்றாலும், இனிவரும் காலங் களில், தற்போது இந்த ஃபண்டை மேனேஜ் செய்யும் ஃபண்ட் மேனேஜர்களைவிட, ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வேறு நல்ல ஃபண்ட் மேனேஜர்கள் (பிரஷாந்த் ஜெயின் மற்றும் சிராக் சேத்தல்வத்) உள்ளனர். ஆகவே, முதலீட்டாளர்கள் தங்களது ஹெச்டிஎஃப்சி லார்ஜ் கேப் ஃபண்டில் உள்ள முதலீட்டை, ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப, எதிர்பக்கம் மேலே கொடுத்துள்ள (பார்க்க: பரிந்துரை ஃபண்டுகள்) ஏதாவது ஒரு ஃபண்டில் முழுத் தொகையையும் மாற்றிக்கொள்ளலாம்.
--ந.விகடன் ஹெச்டிஎஃப்சி லார்ஜ் கேப் ஃபண்ட்: மாற்ற வேண்டிய ஃபண்ட்!

எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்ட்:மாற்ற வேண்டிய ஃபண்ட்!
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
சென்ற வாரத்தைத் தொடர்ந்து இந்த வாரமும் உங்களை மற்றுமொரு ஃபண்டிலிருந்து மாறச் சொல்லி பரிந்துரை செய்கிறோம். நிஃப்டி குறியீட்டோடு இந்த ஃபண்டின் செயல்பாட்டை ஒப்பிடும்போது கடந்த ஐந்து வருட காலத்தில் சுமாராக உள்ளது. அதேபோல், இதே கேட்டகிரியில் உள்ள நன்றாகச் செயல்படும் பிற ஃபண்டுகளை ஒப்பிடும்போதும் இதன் செயல்பாடு சற்று சுமாராகவே உள்ளது.
ஆனால், இந்த ஃபண்டை நீங்கள் நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட்டோடு ஒப்பிட்டால், இந்த ஃபண்டும் சற்று சுமாராகச் செயல்படும் வேறு ஃபண்டுகளும், ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிகமான வருமானத்தை நீண்ட காலத்தில் கொடுத்துள்ளன. இதிலிருந்து தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று, எந்தக் காரணத்துக்காகவும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை மிஸ் செய்யக்கூடாது என்பதுதான். இந்தப் பரிந்துரை உங்களின் செல்வத்தை வேறு நல்ல ஃபண்டுகளில் மாற்றி, இன்னும் வேகமாக வளரச் செய்வதற்குத்தான்!
எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்ட் தற்போது ரூ.2,128 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் ஆர்.சீனிவாசன் ஆவார். இந்த ஃபண்ட், பொதுவாக நல்ல பங்குகள் சூழ்நிலை காரணமாக குறைவான விலையில் கிடைக்கும்போது அந்தப் பங்குகளில் முதலீடு செய்யும்.
உதாரணத்துக்கு, தற்போது பெட்ரோலியத் துறையில் இருக்கும் பங்குகளை, இறங்கும் கச்சா எண்ணெய் விலையினால், யாரும் வாங்க அவ்வளவாக விரும்புவதில்லை. இதுபோன்ற சூழல்களில் கான்ட்ரா வியூகத்தைக்கொண்டுள்ள ஃபண்டுகள், இந்தத் துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யும்.
ஆனால், இதன் பெயருக்கு ஏற்றாற்போல இந்த ஃபண்ட் தற்போது தனது முதலீட்டு வியூகத்தை அமைத்துக் கொள்ளவில்லை. இந்த ஃபண்டும் வேறு எந்த ஒரு டைவர்ஸிஃபைடு ஃபண்டைப் போலவே செயல்பட்டு வருகிறது
இதன் டாப் ஹோல்டிங்ஸாக ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ் டிவிஆர் போன்ற பங்குகள் உள்ளன. ஃபைனான்ஸ், ஆட்டோமொபைல், டெக்னாலஜி, ஹெல்த்கேர், எஃப்எம்சிஜி போன்றவை இதன் டாப் துறைகளாக உள்ளன.
இந்த ஏறும் சந்தையில்கூட இந்த ஃபண்டின் கடந்த 5 வருட வருமானம் இன்னும் நிஃப்டி குறியீட்டை தாண்டிச் செல்ல வில்லை. கடந்த 5 வருடத்தில் இந்த ஃபண்ட் ஆண்டுக்கு 10.47% வருமானத்தைக் கொடுத்துள்ளது. அதேசமயத்தில், நிஃப்டி 50 குறியீடு ஆண்டுக்கு 11.89% வருமானத்தைக் கொடுத்துள்ளது.
இதே வியூகத்தில் செயல்பட்டுவரும் மற்றொரு ஃபண்ட் ரெலிகர் இன்வெஸ்கோ கான்ட்ரா ஃபண்டாகும். அது ஆண்டுக்கு 15.9% வருமானத்தை கடந்த 5 ஆண்டுகளில் கொடுத்துள்ளது.
அதே 5 ஆண்டுகளில் இந்த ஃபண்டின் கேட்டகிரி ஆவரேஜ் வருமானம் 14.90% ஆகும். கடந்த 1, 2 மற்றும் 3 வருட வருமானம் நிஃப்டியை பீட் செய்துள்ளபோதும், கேட்டகிரி ஆவரேஜைவிட குறைவாகவே கொடுத்துள்ளது.
மேலும், இதே ஃபண்ட் நிறுவனத்தில் முதலீட்டாளர்களுக்கு வேறு நன்றாகச் செயல்படும் பல திட்டங்கள் உள்னன. அவற்றுள் எஸ்பிஐ புளூசிப் ஃபண்ட் மற்றும் எஸ்பிஐ மேக்னம் மல்ட்டிபிளையர் பிளஸ் ஃபண்ட் ஆகியவை ஆகும்.
அதிக ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள், தங்களது எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்ட் முதலீட்டை, மேக்னம் மல்ட்டிபிளையர் பிளஸ் ஃபண்டிலும், குறைவான ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் எஸ்பிஐ புளூசிப் ஃபண்டிலும் மாற்றிக் கொள்ளலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கடந்த 2011 தொடங்கி ஹெச்டிஎஃப்சி. டாப் 200, ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டுகளில் ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வருகிறேன். மற்ற ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஃபண்டுகள் நல்ல வருமானம் தரவில்லை. நான் இதே ஃபண்டுகளில் என் முதலீட்டைத் தொடரலாமா அல்லது வேறு ஃபண்டுகளுக்கு மாறலாமா? தவிர, பிர்லா சன் லைஃப் டாப் 100 ஃபண்டில் பிரதிமாதம் 1,000 ரூபாயும், யூடிஐ ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்டில் பிரதிமாதம் 1,000 ரூபாயும், ஐசிஐசிஐ புருடென்ஷியல் டைனமிக் ஃபண்டில் பிரதிமாதம் 2,500 ரூபாயும் முதலீடு செய்து வருகிறேன்.
எஸ்.குமார், சென்னை.
''நீங்கள் முதலீடு செய்துவரும் அனைத்து ஃபண்டுகளுமே நல்ல ஃபண்டுகள்தான். அவற்றில் முதலீட்டைத் தொடர்ந்து வாருங்கள். ஹெச்டிஎஃப்சி டாப் 200 மற்றும் ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஆகிய இரண்டு ஃபண்டுகளும் லார்ஜ் கேப் திட்டங்கள் ஆகும். அவற்றை மிட் கேப் ஃபண்டுகளுடன் ஒப்பிடாதீர்கள். கடந்த ஆண்டு மிட் கேப் திட்டங்கள், லார்ஜ் கேப் திட்டங்களைவிட அதீதமான வருமானத்தைக் கொடுத்துள்ளன. அந்த செயல்பாடு இனிவரும் காலங்களிலும் தொடரும் என்பது உறுதியல்ல. உங்களால் அதிக ரிஸ்க் எடுக்க முடியும் எனில், ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்சூனிட்டீஸ், ஐசிஐசிஐ புரூ. டிஸ்கவரி, ஃப்ராங்க்ளின் ஸ்மாலர் கம்பெனீஸ் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.''
ந.விகடன்

ஐசிஐசிஐ புரூ ஃபோகஸ்டு புளூசிப் ஈக்விட்டிஃ பண்ட்: முதலீடு செய்யவும்
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
கடந்த சில வாரங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய ஃபண்டுகள் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் முதலீட்டுக்கு உகந்த ஐசிஐசிஐ புரூ. ஃபோகஸ்டு புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.
இந்த ஃபண்ட் 6 ஆண்டு களுக்கு முன்னால் (மே 28, 2008), சந்தை உச்சத்தில் இருந்து விழுந்ததற்குப் பின்னால் ஆரம்பிக்கப்பட்டது. ஃபண்ட் ஆரம்பித்தபோது தேசியப பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள டாப் 200 நிறுவனங்களிலிருந்து 20 பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்தது. தற்போது நிர்வகிக்கும் தொகை கூடிவிட்டதால், 51 பங்குகளைத் தனது போர்ட் ஃபோலியோவில் வைத்துள்ளது. இருப்பினும், பெரும்பாலான முதலீடு டாப் 25 – 30 பங்குகளுக்கு உள்ளேயே உள்ளது. தற்போது பங்குகளை வாங்கும்போது, அந்தப் பங்குகள் சந்தை மதிப்பில் டாப் 100க்குள் இருந்தால் மட்டுமே வாங்குகிறது. இந்த ஃபண்ட் தற்போது நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு ரூ.8,387 கோடியாகும். இதன் ஃபண்ட் மேனேஜர் மனீஷ் குன்வானி ஆவார்.
இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (மே 28, 2008) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் தற்போது (பிப்ரவரி 09, 2015) ரூ.2,92,900ஆக உள்ளது. இது கூட்டு வட்டி (சிஏஜிஆர்) அடிப்படையில் ஆண்டுக்கு 17.34% வருமானம் ஆகும். இந்த ஃபண்ட் ஆரம்பித்ததில் இருந்து ஒருவர் எஸ்ஐபி முறையில் மாதத்துக்கு ரூ.1,000 முதலீடு செய்திருந்தால், அதன் தற்போதைய மதிப்பு ரூ.1,63,655 ஆகும். இது கூட்டு வட்டி அடிப்படையில் 20.85% வருமானமாகும். லார்ஜ் கேப் ஃபண்டுகளில், இந்திய பொருளாதாரத்துக்குச் சோதனை யான கடந்த ஆறு ஆண்டுகளில், இது ஒரு சிறந்த வருமானமாகும்.
கடந்த ஆறு ஆண்டுகளில், 2012-ம் ஆண்டைத் தவிர ஒவ்வொரு ஆண்டிலும் நிஃப்டி குறியீட்டின் வருமானத்தைவிட இந்த ஃபண்ட் அதிக வருமானம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும் – அதுவும் நல்ல மார்ஜினில். உதாரணத்துக்கு, 2009-ம் ஆண்டில் நிஃப்டியைவிட 15.43% அதிக வருமானத்தையும், 2014-ம் ஆண்டில் நிஃப்டியைவிட 9.71% அதிக வருமானத்தையும் கொடுத்துள்ளது. கடந்த 5 வருட கால வருமானத்தை ஒப்பிடும்போது, லார்ஜ் கேப் ஃபண்டுகளில் டாப் 5 ஃபண்டுகளில் ஒன்றாக உள்ளது.
இதன் டாப் ஹோல்டிங் பங்குகளாக ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோசிஸ், ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனப் பங்குகள் உள்ளன. பொதுவாக, இதன் துறை சார்ந்த வெயிட்டுகள், நிஃப்டி குறியீட்டின் துறை சார்ந்த வெயிட்டுகளை ஒட்டியே உள்ளது. பெரிய துறைகளில், நிஃப்டியில் உள்ள அந்தத் துறையின் வெயிட்டைவிட 5% வித்தியாசத்துக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறது. உதாரணத்துக்கு, ஃபைனான்ஸ் துறையின் வெயிட் நிஃப்டியில் 30% என்றால், இந்த ஃபண்ட் தனது ஃபைனான்ஸ் துறையின் வெயிட்டை 35 சதவிகிதத்துக்கு மிகாமலும், 25 சத விகிதத்துக்குக் குறையாமலும் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறது.
ஃபைனான்ஸ், ஆட்டோ, இன்ஜினீயரிங் போன்ற துறைகளில் சிறிதளவு ஓவர்வெயிட்டாகவும், டெக்னாலஜி, எஃப்எம்சிஜி, ஹெல்த்கேர் போன்ற துறைகளில் சிறிதளவு அண்டர்வெயிட்டாகவும் உள்ளது.
இந்த ஃபண்ட் பெரும்பாலும் நிஃப்டியை ஒட்டியே தனது துறை சார்ந்த வெயிட்டை அமைத்துக் கொள்வதால், சந்தையுடன் ஒப்பிடும்போது இதன் இறக்கம் குறைவாக இருக்கும்.
அதே சமயம் ஏற்றம் மிக அதீதமாக இருக்காது.
துறை சார்ந்த பங்குகளைத் தேர்வு செய்வதில் ரிஸ்க் எடுக்காமல், அந்தத் துறைக்குள் நல்ல நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்வதில் ஃபண்ட் மேனேஜர் தனது திறமையைக் காட்டுகிறார். வாங்கும் பங்குகளை நீண்ட காலத்துக்கு இந்த ஃபண்ட் வைத்துக்கொள்கிறது.
ரிட்டையர்மென்ட் ஆகியிருப்பவர்கள் அல்லது கேஷ் ப்ஃளோவை விரும்புபவர்கள் இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்லலாம். அதன் என்ஏவி ரூ.22.04 ஆகும். கடந்த மூன்று வருடங்களாகத் தொடர்ந்து டிவிடெண்டை ஜனவரி மாதத்தில் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒருவரது கோர் போர்ட் ஃபோலியோவில் (சிஷீக்ஷீமீ றிஷீக்ஷீtயீஷீறீவீஷீ) வைத்துக்கொள்ள இது சிறந்த ஃபண்ட்.
அனைத்து வயதினரும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். குறிப்பாக, கன்சர்வேட்டிவ்வானவர்கள், குறைந்த இறக்கத்தை விரும்புபவர்கள், ஒரு ஸ்டெடியான அதேசமயத்தில் அதிக ஏற்ற இறக்கம் இல்லாத முன்னேற்றத்தை விரும்புபவர்கள் இந்த ஃபண்டில் தாராளமாக எஸ்ஐபி முறையிலும், சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் முதலீடு செய்யலாம்.

ரிலையன்ஸ் ஃபோகஸ்டு லார்ஜ் கேப் ஃபண்ட்: மாற்ற வேண்டிய ஃபண்ட்!
சொக்கலிங்கம் பழனியப்பன், டாக்டர் ப்ராகலா மேனேஜ்மெட் பி.லிமட்
இது ஒரு லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்டாகும். இதன் போர்ட்ஃபோலியோ வில் 75 சதவிகிதத்தை லார்ஜ் கேப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் கேப் பங்குகளிலும் இந்தத் திட்டம் முதலீடு செய்துள்ளது.
தற்போது ரூ.1,128 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்ட் மார்ச் 28, 2006ல் துவங்கப்பட்டது.
இந்த ஃபண்டின் மேனேஜர் ஓம்பிரகாஷ் குக்கியன் ஆவார்.
2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஃபண்ட் ஆரம்ப காலங்களில் ரிலையன்ஸ் ஈக்விட்டி ஃபண்ட் என்று அழைக்கப்பட்டது. அப்போது பி/இஐ அடிப்படையாகக் கொண்டு, கேஷுக்கு மாறுவதும், பிறகு பங்குகளை வாங்குவதுமாக இருந்தது.
தற்போது இந்த வியூகம் மாற்றப்பட்டு, மிகவும் ஃபோகஸான 25 பங்குகளில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளது. இந்த ஃபண்ட் ஏறக்குறைய ரூ.1,128 கோடி ரூபாயை நிர்வாகம் செய்து வருகிறது ஜனவரி 2014ம் ஆண்டு ரிலையன்ஸ் ஃபோகஸ்டு லார்ஜ் கேப் ஃபண்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் ஃபண்ட் மேனேஜர் பங்குகளைத் தேர்வு செய்யலாம். அதுபோல் துறை சார்ந்த சவால்களையும் பங்கு மேனேஜர் எடுக்கலாம். ஒருதுறை நன்றாகச் செயல்படும் என்று ஃபண்ட் மேனேஜர் நினைத்தால், அந்தத் துறையில் அதிக சதவிகிதத்தை ஒதுக்கலாம். அதேபோல், அந்தத் துறை சரியாகச் செயல்படாது என்று நினைத்தால், அந்தத் துறையிலிருந்து விலகியும் இருக்கலாம்.
மிகவும் வளைந்துகொடுக்கக்கூடிய வியூகத்தை இந்த ஃபண்ட் அமைத்துக் கொண்டுள்ளது. சந்தை மதிப்பு அதிகமாக உள்ள டாப் 100 நிறுவனங் களுக்கு உள்ளேயே தனது முதலீட்டை அமைத்துக் கொள்கிறது.
இதன் டாப் ஹோல்டிங்ஸாக எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோசிஸ், அல்ட்ராடெக் சிமென்ட், எல் அண்ட் டி போன்ற நிறுவனங்கள் உள்ளன.
தற்போது இந்த ஃபண்ட் ஃபைனான்ஸ், ஹெல்த்கேர், இன்ஜினீயரிங் போன்ற துறைகளில் ஓவர்வெயிட்டாக உள்ளது.
ஃபைனான்ஸ் துறையில் மட்டும் ஏறக்குறைய 27.90 சதவிகிதம் அளவுக்கு முதலீட்டை வைத்திருக்கிறது. ஹெல்த் கேர் மற்றும் இன்ஜினீயரிங் துறைகளில் தலா 10.51, 10.24 சதவிகிதம் அளவுக்கு முதலீட்டை வைத்துள்ளன.
ஆனால், டெக்னாலஜி, ஆட்டோமொபைல் மற்றும் எனர்ஜி துறைகளில் அண்டர்வெயிட்டாகவும் உள்ளது. டெக்னாலஜி துறையில் 9.93 சதவிகிதம், ஆட்டோமொபைல்ஸ் துறையில் 8.24 சதவிகித முதலீட்டையும் வைத்துள்ளது.
மீப காலங்களில் இந்த ஃபண்ட் (1 மற்றும் 3 வருட காலங்களில்) நிஃப்டி குறியீட்டை பீட் செய்திருந்தாலும், நீண்ட காலத்தில் (5 மற்றும் 7 வருடங் களில்) நிஃப்டி குறியீட்டைவிடக் குறைவான வருமானத்தையே தந்துள்ளது. 7 வருடங்களில் இந்த ஃபண்ட் வெறும் 6.57 சதவிகித வருமானம் மட்டுமே தந்திருக்கிறது. இதனால்தான் நாம் இந்த ஃபண்டை மாற்றும்படி பரிந்துரை செய்கிறோம்.
மேலும், இந்த ஃபண்ட் மேனேஜரின் நீண்டகாலச் செயல்பாட்டுத் திறமை இன்னும் நிரூபணமாகவில்லை. இவரைவிட நல்ல ஃபண்ட் மேனேஜர்களும், இதைவிட நல்ல ஃபண்டுகளும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் உள்ளது என்பதும் நமது பரிந்துரைக்கு மற்றொரு காரணம்.
ஆகவே, ரிலையன்ஸ் ஃபோகஸ்டு லார்ஜ் கேப் ஃபண்டில் உள்ள தங்களது முதலீட்டை, முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்டுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
குறைவான ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் ரிலையன்ஸ் எம்ஐபி திட்டத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.

ஃப்ராங்க்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனீஸ் ஃபண்ட்: முதலீடு செய்யவும் சென்ற வாரம் லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய ஐசிஐசிஐ புரூ ஃபோகஸ்டு ப்ளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். அதைத் தொடர்ந்து இந்த வாரம் முதலீட்டுக்கு உகந்த ஃப்ராங்க்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனீஸ் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.
இது ஒரு மல்ட்டி கேப் ஃபண்டாகும். தற்போது ரூ.1,773 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்டை நாம் பரிந்துரைப்பதற்கு முக்கியக் காரணம், இதன் கடந்த 1, 2, 3 மற்றும் 5 வருட செயல்பாடு (முறையே 96.1%, 44.9%, 36.1%, மற்றும் 21.6%) மிகவும் அற்புதமாக இருப்பதுதான்.
இந்த ஃபண்ட் ஆரம்பித்தது ஜூலை 2007-ம் ஆண்டுதான். எனவே, இந்த ஃபண்ட் வரலாறு ஏறக்குறைய எட்டு ஆண்டுகள்தான்.
மேலும், இது ஒரு மல்ட்டி கேப் திட்டமாகும். ஆதலால், அக்ரெஸிவ் முதலீட்டாளர்களுக்கு இது உகந்த திட்டமாகும். கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்கள், இந்த ஃபண்டுக்குப் பதிலாக, வேறு லார்ஜ் கேப் ஃபண்டு களில் முதலீடு செய்து கொள்ளலாம்.
இந்த ஃபண்ட் தற்போது ஏறக்குறைய 58 சதவிகித முதலீட்டை லார்ஜ் கேப் பங்குகளில் வைத்துள்ளது. எஞ்சியதை மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளில் வைத்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு, ஒவ்வொரு துறைகளும் / ஒவ்வொரு தரப்பட்ட நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வேகமாக வளரும். அவ்வாறு உயரிய வளர்ச்சி உடைய துறைகளையும், நிறுவனங்களையும் தேர்வு செய்து முதலீடு செய்து நல்ல வருமானத்தை முதலீட் டாளர்களுக்குக் தருவதுதான் இந்த ஃபண்டின் நோக்கம். நமது இந்தியப் பொருளாதாரத்தைவிட அதிக வளர்ச்சியுடைய (டேர்னோவர் மற்றும் லாபம்) நிறுவனங்களையே தனது போர்ட்ஃபோலியோ வுக்குத் தேர்வு செய்கிறது.
தற்போது இதன் டாப் ஹோல்டிங்ஸாக ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுஸூகி, எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி போன்ற நிறுவனப் பங்குகள் உள்ளன. பாரத் எலெக்ட்ரானிக்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஓரியன்ட் சிமென்ட், யெஸ் பேங்க் போன்ற மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளும் இதன் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றுள்ளன.
இதன் போர்ட்ஃபோலியோ மிகவும் கச்சிதமாக 36 பங்குகளையே கொண்டுள்ளது. ஃபைனான்ஸ், டெக்னாலஜி மற்றும் எஃப்எம்சிஜி துறைகளில் அண்டர்வெயிட்டாக உள்ளது.
இன்ஜினீயரிங், ஹெல்த்கேர் மற்றும் கம்யூனிகேஷன் துறைகளில் ஓவர் வெயிட்டாக உள்ளது. இதன் போர்ட் ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் ஆவரேஜ் சந்தை மதிப்பு ரூ.35,833 கோடியாக உள்ளது.
இந்த ஃபண்டின் பீட்டா சந்தைக்குச் சமமாக (1) உள்ளது. இதன் ஆல்ஃபா மிக, மிகக் கவர்ச்சிகரமாக 15.27 என்ற நிலையில் உள்ளது
கடந்த 1, 3, 5 மற்றும் 7 வருட காலங் களில் நிஃப்டி மற்றும் கேட்டகிரி ஆவரேஜைத் தாண்டி கணிசமாக லாபம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 1 ஆண்டு காலத்தில் 97.26 சத விகிதமும், 3 ஆண்டு காலத்தில் 36.15 சதவிகிதமும் வருமானம் தந்திருக்கிறது. அதிக வளர்ச்சியுள்ள நிறுவனங்களின் போர்ட்ஃபோலியோ என்பதால், இந்த ஃபண்ட் காளைச் சந்தையில் மிக நன்றாகச் செயல்படும். அதேசமயத்தில், கரடிச் சந்தையில் சற்று சுமாராகச் செயல்படும்.
ரிஸ்க்குடன் கூடிய அதிக வருமானத்தை விரும்புபவர்கள், அக்ரெஸிவ் வருமானத்தை விரும்புபவர் கள், இளம் வயதினர், வெல்த் கிரியேஷனுக்காக ஃபண்டைத் தேடுபவர்கள் போன்ற அனைவரும் இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
நான் இரண்டு கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். முதலாவது கேள்வி, கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டீஸ் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். அடுத்த 5 7 ஆண்டுகளுக்கு இந்தப் பணம் எனக்குத் தேவையில்லை. இந்த ஃபண்ட் நல்ல ஃபண்ட்தானா?
இரண்டாவது கேள்வி, டாக்ஸ் ஃபண்டுகளில் டிவிடெண்ட் ரீஇன்வெஸ்ட்மென்ட் திட்டத்தைத் தேர்வு செய்யலாமா?
-வினோத், பெங்களூரு.
''கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டீஸ் ஃபண்ட் மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் ஒரு திட்டமாகும். ஆகவே, அதிக ரிஸ்க்கும் அதிக ரிவார்டும் உள்ள ஃபண்டாகும். இது ஒரு நல்ல ஃபண்ட் என்றாலும், உங்களின் முதலீட்டுக் காலம் 5 – 7 வருடங்கள்தான் என்பதால், நல்லதொரு லார்ஜ் கேப் அல்லது பேலன்ஸ்டு ஃபண்டில் செல்வது சிறந்ததாகும்.
உங்களது இரண்டாவது கேள்விக்கான பதில், டாக்ஸ் சேவர் ஃபண்டுகளில் டிவிடெண்ட் ரீஇன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன் என்பது புலிவால் பிடித்த கதை மாதிரிதான். கட்டுப்பாட்டு வாரியத்தில் இதற்கு தடை விதித்திருப்பது நல்ல விஷயம்தான். நீங்கள் எப்போது டாக்ஸ் சேவர் ஃபண்டில் முதலீடு செய்தாலும் நீங்கள் குரோத் அல்லது டிவிடெண்ட் பே அவுட் ஆப்ஷனையே தேர்வு செய்யுங்கள்.''
---சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்
--ந.விகடன்ஃப்ராங்க்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனீஸ் ஃபண்ட்: முதலீடு செய்யவும் சென்ற வாரம் லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய ஐசிஐசிஐ புரூ ஃபோகஸ்டு ப்ளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். அதைத் தொடர்ந்து இந்த வாரம் முதலீட்டுக்கு உகந்த ஃப்ராங்க்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனீஸ் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.

சென்ற வாரம், சற்று கூடுதலான ரிஸ்க் உடைய ஃப்ராங்க்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனீஸ் ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் நீண்ட காலமாக நன்றாகச் செயல்பட்டு வரும் பேலன்ஸ்டு திட்டங்களில் ஒன்றான பிர்லா சன் லைஃப் 95 ஃபண்ட் குறித்துப் பார்ப்போம். இந்தத் திட்டம் 1995-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இது தற்போது ரூ.1,296 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் பிரசாத் தோண்டே மற்றும் மகேஷ் பாட்டீல் ஆவார்கள்.
இந்த ஃபண்ட் ஒரு கலப்பின வகையைச் சார்ந்ததாகும். அதாவது, பங்குகள் மற்றும் கடன் உபகரணங்களில் முதலீடு செய்யும். சந்தை நிலவரத்தைப் பொறுத்து இந்தத் திட்டம் 50 சதவிகிதத்திலிருந்து 75% வரை பங்குகளில் முதலீடு செய்யும்.
அதேபோல், தனது போர்ட்ஃபோலி யோவில் லார்ஜ் கேப் அல்லது மிட் கேப் பங்குகளின் சதவிகிதத்தைத் தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளும் வசதியையும் இந்த ஃபண்ட் பெற்றுள்ளது.
தற்போது தனது போர்ட்ஃபோலியோவில் 72% பங்கு சார்ந்த முதலீட்டையும், 28% கடன் சார்ந்த முதலீட்டையும் வைத்து உள்ளது. பங்கு சார்ந்த முதலீட்டில் பெரும்பாலும் லார்ஜ் கேப் பங்குகளே இடம்பெற்றுள்ளன. மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்யும்போதும், பெரிய மிட் கேப் நிறுவனப் பங்குகளிலேயே முதலீடு செய்கிறது. ஸ்மால் கேப் பங்குகளில் பெரும்பாலும் முதலீடு செய்வதில்லை.
கடந்த சில ஆண்டுகளாக தனது பங்கு சார்ந்த போர்ஷனில் 20 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதம் வரை மிட் கேப் பங்குகளை வைத்துக் கொள்கிறது. ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.
கடன் சார்ந்த உபகரணங்களில் மத்திய அரசாங்க பாண்டுகள் மற்றும் ஐடிபிஐ பேங்க், ஹிண்டால்கோ, டிஎல்எஃப் போன்ற நிறுவனங்களின் பாண்டுகளையும் கொண்டுள்ளது.
இந்த ஃபண்டின் ஏறி இறங்கும் தன்மை (1.01) சந்தை அளவை ஒட்டியே உள்ளது. இதன் ஆல்ஃபா 6.35 என்ற அளவில் கவர்ச்சிகரமாக உள்ளது. இந்த ஃபண்ட் பேலன்ஸ்டு கேட்டகிரி யில் வருவதால், 12 மாதத்துக்குமேல் முதலீட்டை வைத்திருக்கையில், லாங் டேர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் வரி ஏதும் இல்லை.
இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (பிப்ரவரி 10, 1995) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் இன்றைய தினத்தில் ரூ.59,45,055 ஆக உள்ளது.
அதேபோல, இந்த ஃபண்ட் ஆரம்பித்ததிலிருந்து ஒருவர் எஸ்ஐபி மூலம் மாதத்துக்கு ரூ.1,000 முதலீடு செய்திருந்தால் (மொத்த முதலீடு ரூ.2,39,000) அதன் இன்றைய மதிப்பு ரூ.34,48,875 ஆகும். இதுதான் நீண்டநாள் முதலீட்டின் மகிமை.
இன்று சில்லறை முதலீட்டாளர் களுக்கு, இதுபோன்ற ஒழுக்கத்துடன் கூடிய ஓர் உன்னதமான முதலீடு வேறு எதுவும் இந்தியாவில் இல்லை என தாராளமாகக் கூறலாம்.
இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.160.33 ஆகும். ஆரம்பித்த மறு வருடத்திலிருந்து, மூன்று ஆண்டுகளைத் தவிர்த்து, இதுவரை தொடர்ந்து டிவிடெண்டை வழங்கியுள்ளது. கேஷ் ஃப்ளோ தேவைப்படுபவர்கள் இந்த ஆப்ஷனைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
நீண்ட நாள் வரலாறு, தொடர்ச்சியாக நல்ல செயல்பாடு, நல்ல வருமானம் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த ஃபண்டில் உங்களின் எதிர்காலத் தேவைகளுக்காகவும், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்றவற்றுக்காகவும் தாராளமாக முதலீடு செய்யலாம்.
யாருக்கு உகந்தது?
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதல்முறை முதலீடு செய்ய விரும்பு பவர்கள், 100% ஈக்விட்டி ஃபண்டுகளை விட சற்று குறைவான ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் சற்று குறைவான ஏற்ற இறக்கத்தை நாடுபவர்கள், 50 வயதைத் தாண்டியவர்கள், மீடியம் டேர்மில் பணம் தேவைப்படுபவர்கள், குழந்தைகளின் கல்வித் தேவைக்கு முதலீடு செய்பவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப் படுபவர்கள், உறுதியான, நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்களுக்கு இந்த ஃபண்ட் ஏற்றதாக இருக்காது.
சொக்கலிங்கம் பழனியப்பன்,
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
--ந.விகடன்

பி.என்.பி பரிபாஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட்: முதலீடு செய்க இதற்கு முந்தைய வாரங்களில் சில டாக்ஸ் சேவர் - அதாவது, இஎல்எஸ்எஸ் (ELSS – Equity Linked Savings Scheme) குறித்துப் பார்த்தோம். அவற்றைத் தொடர்ந்து இந்த வாரம் பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட் (BNP Paribas Mutual Fund) நிறுவனம் நடத்திவரும் பிஎன்பி பரிபாஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் குறித்து காண்போம்.
இந்தியாவில் தொழில் செய்துவரும் 45 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில், பிஎன்பி பரிபாஸ் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் தற்போது ரூ.3,697 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. பிஎன்பி பரிபாஸ் இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஸ்தான் இந்த நிறுவனத்தின் ஸ்பான்ஸர் ஆகும்.
இந்த நிறுவனம் உலக அளவில் பெரிய வங்கிகளுள் ஒன்றான பிஎன்பி பரிபாஸ் குழுமத்தைச் சார்ந்ததாகும். பிஎன்பி இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஸ் உலகளவில் யூரோ 508 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. உலகளவில் 37 நாடுகளில் தனது கால்களைப் பதித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத் துடன் கைகோத்து இருந்தது பிஎன்பி பரிபாஸ் நிறுவனம். 2010-ம் ஆண்டு உலகளவில் உள்ள ஃபோர்ட்டீஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை பிஎன்பி பரிபாஸ் இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஸ் வாங்கியது. அதனால், இந்தியாவில் அப்போது செயல்பட்டுவந்த ஃபோர்ட்டீஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பிஎன்பி பரிபாஸ் கைக்குள் வந்தது. இந்தியாவில் ஒரே நிறுவனம் இரண்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களை நடத்த முடியாது என்ற காரணத்தினால், சுந்தரத்தைவிட்டு விலகி, தன் கைக்குள் வந்த ஃபோர்ட்டீஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை பிஎன்பி பரிபாஸ் என்று பெயர் மாற்றம் செய்து தற்போது நடத்தி வருகிறது. இனிவரும் காலங்களில் இந்தியாவின் வளர்ச்சியை முன்னிட்டு தனது தொழிலை வேகமாக விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும், ரூ.200 கோடிக்கும் மேலாக தொழிலில் முதலீடு செய்துள்ளது.
இந்த நிறுவனம் தற்போது 4 பங்கு சார்ந்த திட்டங்களை நிர்வகித்து வருகிறது. மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது என்பதுபோல, இந்த நான்கு திட்டங்களுமே கடந்த 5 ஆண்டுகளில் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் நடத்தும் ஃபண்டை இந்த வாரம் நாம் பரிந்துரைக்காக எடுத்துக்கொண்டதற்கு இதுவே முதல் காரணம். மேலும், இந்த மாத முடிவுக்குள் நாம் அனைவரும் 80-சி பிரிவின் கீழ் ரூ.1.50 லட்சம் வரை வரிச் சலுகை பெறுவதற்கு முதலீடு செய்தாக வேண்டும் என்பது இரண்டாவது காரணம்.
பிஎன்பி பரிபாஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் தற்போது ரூ.349 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் ஷ்ரேயாஷ் தெவால்கர் ஆவார். இவரே பிற பங்கு சார்ந்த திட்டங்களையும் இந்த நிறுவனத்தில் நிர்வகித்து வருகிறார். இந்தத் திட்டம் ஏறக்குறைய 66% சொத்துக்களை லார்ஜ் கேப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது.
இந்த ஃபண்ட் வளர்ச்சியுள்ள பங்குகளையே நாடிச் செல்கிறது. மேலும், இந்த மியூச்சுவல் ஃபண்ட், 'நிறுவனங்கள்தான் செல்வத்தை உருவாக்குகிறது, சந்தைகளை அல்ல’ என்னும் கோட்பாட்டை நம்புகிறது. பிஎம்வி (BMV – Business, Management, Valuation) அடிப்படையில் இதன் ஆராய்ச்சி மற்றும் முதலீட்டு கலாசாரம் அமைந்துள்ளது. அதாவது, இந்த நிறுவனம் ஸ்திரமான மேலாண்மையைக் கொண்ட சிறந்த தொழில்களை (பங்குகளை), நியாயமான விலையில் வாங்குகிறது. இந்த முறையில் கடந்த சில ஆண்டுகளில் இந்த நிறுவனம் நடத்தும் அனைத்து பங்கு சார்ந்த திட்டங்களும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த ஃபண்ட் பொதுமக்கள் சார்ந்த தொழில்களை விரும்புவது, இது வைத்துள்ள பங்குகளில் இருந்து தெரிய வருகிறது. உதாரணத்துக்கு, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஜெட் ஏர்வேஸ், ஐடியா செல்லுலார், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டர் ரெட்டீஸ், ஜே.கே சிமென்ட் போன்ற நிறுவனங்கள் யாவும் ரீடெயில் ஓரியன்டட்ஆக உள்ளன. இவை யாவும் இதன் போர்ட்ஃபோலியோவில் இடம் பெற்றுள்ளன.
பிற ஃபண்டுகளை ஒப்பிடும்போது டெலிகாம் பங்குகளில் இந்தத் திட்டம் ஓவர்வெயிட்டாக உள்ளது குறிப்பிடத் தக்கது. பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய இரு பங்குகளின் வெயிட்டேஜ் மட்டும் ஏறக்குறைய 11% ஆகும். மேலும், சர்வீசஸ், கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் ஹெல்த்கேர் துறைகளில் இந்த ஃபண்ட் ஓவர்வெயிட்டாக உள்ளது. ஃபைனான்ஸ், டெக்னாலஜி மற்றும் எனர்ஜி துறைகளில் அண்டர் வெயிட்டாக உள்ளது.
இந்த ஃபண்டின் பீட்டா (0.90) குறைவாகவும், அதேசமயத்தில் ஆல்ஃபா (9.87) மிகவும் கவர்ச்சிகரமாகவும் உள்ளது. 2010-ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டம் சற்று சுமாராகச் செயல்பட்டிருந் தாலும், பிஎன்பி பரிபாஸ் நிறுவனம் வாங்கியதிலிருந்து இந்தத் திட்டம் மிகவும் நன்றாகச் செயல்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக (2011 – 2014) தொடர்ந்து நிஃப்டி குறியீட்டைவிட அதிக வருமானம் தந்துள்ளது. அதேபோல், கடந்த ஐந்து ஆண்டுகளாக கேட்டகிரி ஆவரேஜையும் தாண்டி செயல்பட்டுள்ளது.
ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு வைத்துள்ளவர்கள், தங்களின் 80சி பிரிவின் கீழ் வரும் முதலீட்டுக்கு இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
யாருக்கு உகந்தது?
சம்பாத்தியம் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் இருந்து, 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கை எதிர்பார்ப்பவர்கள்.
அவ்வாறு ரிஸ்க் எடுத்து, அந்த ரிஸ்குக்கு ஏற்ப வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு.
யாருக்கு உகந்ததல்ல!
80-சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை தேவைப்படாதவர்கள். ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாதவர்கள்.
உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புபவர்கள்.
பங்குச் சந்தை ஏற்ற, இறக்கம் குறித்து போதிய ஞானம் இல்லாதவர்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சொக்கலிங்கம் பழனியப்பன்,
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
ந.விகடன்பி.என்.பி பரிபாஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட்: முதலீடு செய்க இதற்கு முந்தைய வாரங்களில் சில டாக்ஸ் சேவர் - அதாவது, இஎல்எஸ்எஸ் (ELSS – Equity Linked Savings Scheme) குறித்துப் பார்த்தோம். அவற்றைத் தொடர்ந்து இந்த வாரம் பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட் (BNP Paribas Mutual Fund) நிறுவனம் நடத்திவரும் பிஎன்பி பரிபாஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் குறித்து காண்போம்.

ஃப்ண்ட் பரிந்துரை
ரெலிகர் இன்வெஸ்கோ மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃப்ண்ட்: முதலீடு செய்க!
இந்த வாரம் ஃபண்ட் பரிந்துரை பகுதியில், மிகவும் நன்றாகச் செயல் பட்டுவரும் ஒரு மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் பற்றிக் காண்போம். ரெலிகர் இன்வெஸ்கோ மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ச்சியாக நிஃப்டி குறியீட்டையும், சிஎன்எக்ஸ் மிட் கேப் குறியீட்டையும்விட திறம்படச் செயல்பட்டுள்ளது.
ரெலிகர் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஏறக்குறைய ரூ.20,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை ரெலிகர் செக்யூரிட்டீஸும், எஞ்சியதை அமெரிக்க நிறுவனமான இன்வெஸ்கோவும் வைத்துள்ளன. ரெலிகர் செக்யூரிட்டீஸ், நமது பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப் பட்டுள்ள ரெலிகர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் (wholly owned subsidiary) துணை நிறுவனமாகும்.
ரெலிகரின் புரமோட்டர்கள், ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர் குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்கள் மல்விந்தர் மோகன் சிங் மற்றும் ஷிவிந்தர் மோகன் சிங் ஆவர். இன்வெஸ்கோ உலகளவில் 780 பில்லியன் டாலர்களுக்கு மேலான சொத்துக்களை நிர்வகித்துவரும் ஒரு அமெரிக்க முதலீட்டு நிறுவனமாகும்.
ரெலிகர் மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் மார்ச் 2008-ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். இதன் ஃபண்ட் மேனேஜர் வினய் பஹாரியா ஆவார். இந்த ஃபண்ட் தற்போது ரூ.423 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில் வளரும் நிறுவனப் பங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பங்குகளைத் தேர்வு செய்யும்போது, குறைவான மதிப்பைக் காட்டிலும், அந்த நிறுவனத்தின் தரம் மற்றும் விரிவாக்கம் செய்யும் திறனுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது.
மேலும், இந்த ஃபண்ட் நிறுவனம் ஒரு உன்னதமான செயல்முறையைக் கொண்டுள்ளது. தனது போர்ட்ஃபோலியோவில் பங்குகளை தேர்வு செய்வதை ஒரு கலையைப் போன்று செய்கிறது. இரண்டாவதாக, போர்ட்ஃபோலியோ அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. துறை சார்ந்த கட்டுப்பாடு இந்த ஃபண்டுக்கு ஏதும் இல்லை.
இதன் போர்ட்ஃபோலியோவில் ஏறக்குறைய 64 சதவிகிதம் மிட் கேப் பங்குகளும், 20 சதவிகிதம் ஸ்மால் கேப் பங்குகளும், எஞ்சியது லார்ஜ் கேப் பங்குகளிலும் உள்ளது.
டி.பி. கார்ப்பரேஷன், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட், ஐஎன்ஜி வைஸ்யா பேங்க், பாரத் ஃபோர்ஜ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டாக இருந்தபோதும், இதன் டேர்னோவர் மிகவும் குறைவாக (21%) உள்ளது. இந்த ஃபண்டின் பீட்டா (1) சந்தையையொட்டியே உள்ளது.
ஆனால், இதன் ஆல்ஃபாவோ 15. இதுவரை நாம் பார்த்த ஃபண்டுகளிலேயே இது ஒரு உயர்ந்த ஆல்ஃபா ஆகும். இந்த ஃபண்ட் ஒருபோதும் கேஷ்கால் எடுப்பதில்லை. அதாவது, பணத்தை கையில் வைத்திருப்பதில்லை. மொத்த தொகையும் எப்போதும் முதலீட்டிலேயே இருக்கும்.
இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் (17-3-2008), தற்போது (5-3-2015) ரூ.3,70,900-ஆக உள்ளது. இது கூட்டு வட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 20.69% வருமானம் ஆகும். இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் நமது பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஃபண்ட் முழுக்க முழுக்க மிட் அண்ட் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதால், நீண்ட கால அடிப்படை யில் வெல்த் கிரியேஷனுக்காக முதலீட்டாளர் கள் இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம். கடந்த கால செயல்பாட்டை வைத்துப் பார்க்கும்போது, இனிவரும் காலங் களிலும் இந்த ஃபண்ட் நல்ல செயல்பாட்டை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
யாருக்கு உகந்தது?
இளம் வயதினர், பணம் அதிகமாக உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், பணம் உடனடியாகத் தேவைப்படாதவர்கள்.
யாருக்கு உகந்ததல்ல?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான/நிலையான வருமானத்தை விரும்பு கிறவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.
ஒரு லட்சம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பு கிறேன். இந்தப் பணம் 15 வருடத்துக்குப் பின் கிடைத்தால் போதும்; அதிக ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கிறேன். நல்ல ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.
முகமது, கோவை.
‘‘பொதுவாக, மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகள் நீண்ட காலத்தில் நல்ல வருவாயைத் தரும் என்றாலும், எப்போதாவது தவறான முடிவுகளை எடுத்துவிட்டால், அந்த ஃபண்டுகள் தங்கள் தவற்றைத் திருத்திக்கொள்வதற்கு சில ஆண்டுகள் ஆகிவிடும். ஆகவே, லார்ஜ் மற்றும் மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. நாம் ஏற்கெனவே இந்தப் பகுதியில் கண்ட சில ஃபண்ட் நிறுவனங்களின் லிக்விட் ஃபண்டுகளில் முதலில் பணத்தை முதலீடு செய்யுங்கள். ஏறக்குறைய இரண்டு மாத காலம் கழித்து, கீழ்வரும் ஃபண்டு களில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு ஃபண்டுகளில் எஸ்டிபி முறை மூலம் முதலீடு செய்துகொள்ளவும்.
1.ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர் சூனிட்டீஸ் ஃபண்ட், 2. யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட், 3. மிரே இந்தியா ஆப்பர் சூனிட்டீஸ் ஃபண்ட், 4. ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ்.’’
சொக்கலிங்கம் பழனியப்பன்,
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
--ந. விகடன்

Q & A

ஃபண்ட் பரிந்துரை ரிலையன்ஸ் மணி மேனேஜர் ஃபண்ட்: முதலீடு செய்க
சென்ற வாரம் ஒரு மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் வகைகளில் ஒன்றான ரிலையன்ஸ் மணி மேனேஜர் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் இரண்டு பெரிய வகைகள் உள்ளன. அவையாவன, கடன் சார்ந்தவை மற்றும் பங்கு சார்ந்தவை. பங்கு சார்ந்த ஃபண்டுகள், பங்குச் சந்தையை ஒட்டிய ரிஸ்க் உடையவை. கடன் சார்ந்த ஃபண்டுகள், உட்பிரிவைப் பொறுத்து, மிக மிகக் குறைவான ரிஸ்க் உடையவை. ஒருவகையில் பார்த்தால், ஃபிக்ஸட் டெபாசிட்டுகளைவிட ரிஸ்க் குறைவானவை. ஏனென்றால், ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் நாம் முதலீடு செய்யும்போது ஒரே நிறுவனத்தில் அல்லது ஒரே வங்கியில் முதலீடு செய்கிறோம். ஆகவே, அந்த நிறுவனத்துக்கோ அல்லது வங்கிக்கோ பிரச்னை ஏற்பட்டால், நமது முதலீடும் பிரச்னையில் சிக்கிக்கொள்ளும்.
ஆனால், ரிலையன்ஸ் மணி மேனேஜர் போன்ற கடன் சார்ந்த ஃபண்டுகள், நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவன கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. ஆகவே, ஒரு சில நிறுவனங்களோ அல்லது வங்கிகளோ பிரச்னையில் சிக்கினால்கூட, ஃபண்டுக்குப் பெரிய பாதகம் வந்துவிடாது. இந்தக் காரணத்தினால் முதலீட்டாளர்களின் அசலுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுவிடாது.
ரிலையன்ஸ் மணி மேனேஜர் ஃபண்ட் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் வகையைச் சார்ந்த ஃபண்டாகும். இந்த ஃபண்ட் ரூ.9,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
இதன் ஃபண்ட் மேனேஜர்கள் அமித் திரிபாதி மற்றும் அஞ்சு சஜ்ஜர் ஆவார் கள். இவர்களில் அமித் திரிபாதி 11-க்கு மேற்பட்ட ஆண்டுகளும், அஞ்சு சஜ்ஜர் 7 ஆண்டுகளுக்கு மேலும் பணியாற்றி வருகிறார்கள். அமித் திரிபாதி ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் கடன் சார்ந்த ஃபண்டுகளின் தலைவர் ஆவார். இவர் இந்த ஃபண்டுக்கு மேக்ரோ லெவல் வேலைகளான எக்ஸ்போஸர் லெவல் (ஒவ்வொரு நிறுவன உபகரணங்களுக்கும் உள்ள லிமிட், ஒவ்வொரு வகை உபகரணங்களுக்கும் உள்ள லிமிட்) போன்றவற்றைக் கவனித்துக்கொள்கிறார். தினசரி ஃபண்ட் மேலாண்மையை அஞ்சு சஜ்ஜர், ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் மூன்று அனலிஸ்ட்டுகளின் உதவியுடன் கவனித்துக் கொள்கிறார். மேலும், பங்கு சார்ந்த முதலீட்டுப் பிரிவிடம் தாங்கள் முதலீடு செய்யப்போகும்/ செய்திருக்கும் நிறுவனங் களின் நிலைமை குறித்தும் அறிந்துகொள்கிறது இந்த டீம்.
இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் பெரும்பாலும் (80%) AAA கிரெடிட் ரேட்டிங் உடைய உபகரணங்களே உள்ளன. அதேபோல, AA- ரேட்டிங்குக்குக் கீழ் செல்வதில்லை. இந்த ஃபண்ட் முதலீடு செய்யும் பெரும்பாலான உபகரணங்களின் முதிர்வுக் காலம் ஒன்பது மாதத்துக்குள் இருக்கும்.
இதன் போர்ட்ஃபோலியோவில் 15 முதல் 25 சதவிகித முதலீடுகள் 9 முதல் 18 மாத மெச்சூரிட்டியில் இருக்கும். இந்த ஃபண்டின் தற்போதைய யீல்டு டு மெச்சூரிட்டி (YTM – Yield to Maturity) 8.91 சதவிகிதமாக உள்ளது. இந்த ஃபண்டின் செலவு விகிதம் 0.59% ஆகும்.
கடந்த ஏழு ஆண்டுகளில் (2008 – 2014) ஒரு ஆண்டைத் தவிர (2009), எல்லா ஆண்டுகளிலும் என்எஸ்இ டிரஷரி பில் வருவாயைவிட அதிகமாக வருமானம் கொடுத்துள்ளது.
கடந்த ஏழு காலண்டர் ஆண்டுகளில், இந்த ஃபண்ட் மிகவும் குறைவான வருவாயை (5.64%) 2010-ம் ஆண்டிலும், மிகவும் அதிகமான வருவாயை (9.71%) 2012-ம் ஆண்டிலும் கொடுத்துள்ளது.
கடந்த 20 காலாண்டுகளில் ஒரு முறைகூட நெகட்டிவ் வருமானத்தைத் தந்ததில்லை. அனைத்துக் காலாண்டு களிலும் பாசிட்டிவ் வருமானத்தையே கொடுத்துள்ளது.
இந்த ஃபண்டின் மற்றொரு சிறப்பம்சம், மிகவும் குறைவான முதலீட்டுத் தொகையாகும். நீங்கள் 500 ரூபாயில் உங்கள் முதலீட்டைத் துவக்க லாம். எஸ்ஐபி முறையில் கணக்கைத் துவக்குவதற்கு ரூ.100 இருந்தாலே போதுமானது. இந்த அளவு குறைவான அளவில் முதலீட்டை வாங்கிக் கொள்வது மிகச் சில ஃபண்டுகளே!
இந்த ஃபண்டில் நுழைவு மற்றும் வெளியேற்றுக் கட்டணம் ஏதும் இல்லை. போட்ட பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறும் வசதி உள்ளது. ஆகவே, அரும்பாடுபட்டு சம்பாதித்த உங்கள் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் 4% வட்டிக்கு தூங்கவிடாதீர்கள்!
நல்ல அனுபவமுள்ள முதலீட்டு டீம், சிறந்த வரலாறு, ஹை குவாலிட்டி போர்ட்ஃபோலியோ போன்ற பல சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த ஃபண்டில், முதலீட்டாளர்கள் தங்களது குறுகிய காலத் தேவைகளான பிரீமியம் பேமன்ட், பள்ளி/ கல்லூரி கட்டணங்கள், எமர்ஜென்சி ஃபண்ட் போன்ற அனைத்துக்கும் மொத்தமாகவும், எஸ்ஐபி முறையிலும் தாராளமாக முதலீடு செய்துகொள்ளலாம்.
யாருக்கு உகந்தது?
சேவிங்ஸ் கணக்கில் தூங்கிக் கொண்டிருக்கும் பணத்துக்கு, ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, சில நாட்களிலிருந்து சில மாதங்களுக்குள் பணம் தேவைப்படுபவர்களுக்கு, எமர்ஜென்சியில் பணம் தேவைப் படுபவர்களுக்கு, சேவிங்ஸ் கணக்கை விட அதிக வருமானத்தை விரும்புபவர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் பணம் தேவைப்படுபவர்களுக்கு.
யார் முதலீடு செய்யக்கூடாது?
அதிக வருமானத்தை விரும்பு பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்க முடிந்தவர் கள், கேரன்டீட் வருமானத்தை விரும்புபவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்வதைத் தவிர்த்துவிட லாம்!
சொக்கலிங்கம் பழனியப்பன்,
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
--ந.விகடன்சென்ற வாரம் ஒரு மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் வகைகளில் ஒன்றான ரிலையன்ஸ் மணி மேனேஜர் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.

ஐடிஎஃப்சி ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்: முதலீடு செய்க
கடந்த 20 காலாண்டுகளில் எந்தவொரு காலாண்டிலும் நெகட்டிவ் வருமானத்தைத் தரவில்லை இந்த ஃபண்ட்!
இந்த வாரம் ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் வகையைச் சார்ந்த ஐடிஎஃப்சி ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம். இந்த ஃபண்டைப் பற்றிய விவரங்களைப் பார்க்கும்முன், ஆர்பிட்ரேஜ் என்றால் என்ன என்பது பற்றியும், ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் எவ்வாறு செயல்படு கின்றன என்பது குறித்தும் பார்த்து விடுவோம்.
ஒரு பொருளை மலிவாக இருக்கும் இடத்தில் இருந்து வாங்கி, அதிக விலையுள்ள இடத்தில் விற்பதுதான் ஆர்பிட்ரேஜ் . உதாரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ பால்கோவாவின் விலை ரூ.300. அதே பால்கோவாவின் விலை சென்னையில் ரூ.400 என வைத்துக் கொள்வோம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் வாங்கி, சென்னையில் விற்றால் அதிக ரிஸ்க் இல்லாமல் (சில செலவுகளுடன்) லாபம் பார்த்துவிடலாம். இந்த விலை வித்தியாசத்தைத்தான் ஆர்பிட்ரேஜ் எனக் கூறுகிறோம். இந்தக் கான்செப்ட்டை ஒட்டிய அடிப்படையில் வேலை செய்பவை தான் ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளும்!
நமது பங்குச் சந்தையில் நிறுவனப் பங்குகள் வர்த்தகமாகின்றன. முன்னணி நிறுவனப் பங்குகள் ஃப்யூச்சர்ஸ் அண்ட ஆப்ஷன்ஸ் என்கிற எஃப் அண்ட் ஓ சந்தையில் வர்த்தகமாகின்றன. ஒரு நிறுவனப் பங்குக்கும் அதன் ஃப்யூச்சர்ஸுக்கும் உள்ள விலை வித்தியாசத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதுதான் ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளின் வேலை.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி வியாழக்கிழமையும் ஃப்யூச்சர்ஸ் எக்ஸ்பைரி உள்ளது. அன்றைய தினத்தில், உதாரணத்துக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை ரூ.300 என வைத்துக் கொள்வோம். அடுத்த மாத எக்ஸ்பைரி உள்ள அதே பங்கின் ஃப்யூச்சர்ஸ் விலை ரூ.303 என வைத்துக் கொள்வோம். ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள், கேஷ் மார்க்கெட்டில் எஸ்பிஐ பங்கை ரூ.300-க்கு விலைக்கு வாங்கும். அதே சமயத்தில் ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட் டில் ரூ.303-க்கு விற்றுவிடும்.
இந்த ஃபண்ட் ஒரு சந்தையில் வாங்கி, மற்றொரு சந்தையில் விற்று விடுவதால், எந்த ரிஸ்க்கும் இல்லை. அடுத்த மாதம் கடைசி வியாழக்கிழமை வரை பங்கையும், ஃப்யூச்சர்ஸையும் வைத்திருந்து சரிசெய்துவிடுவார்கள். அந்த ரூ.3 வித்தியாசம் ஃபண்டுக்கு லாபமாக வந்துவிடும். சந்தை நிலவரத்தைப் பொறுத்து சில சமயங்களில் கேஷ் மார்க்கெட்டில் விற்று, ஃப்யூச்சர்ஸ் சந்தையில் வாங்குவதும் உண்டு. இவ்வாறுதான் இந்த வகை ஃபண்டுகள் செயல்படுகின்றன.
65 சதவிகிதத்துக்கும் அதிகமான சொத்துக்கள் பங்கு சார்ந்தவையாக இருப்பதால், இந்த வகை ஃபண்டு களிலிருந்து வரும் வருமானத்துக்கு, ஒரு வருடத்துக்கு மேல் வைத்திருக்கை யில், வருமான வரி ஏதும் செலுத்த வேண்டாம். மேலும், டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரியும் இந்த வகை ஃபண்டுகளுக்குக் கிடையாது. ஆகவே, இந்த வகை ஃபண்டுகள் கடன் சார்ந்த திட்டங்களைப் போல் அதிக ரிஸ்க் இல்லாத வருமானத்தைத் தந்தாலும், வருமான வரி பங்கு சார்ந்த திட்டங்களைப் போலத்தான். இதுவே இந்த ஃபண்டுகளின் பெரிய சாதக அம்சமாகும்!
ஐடிஎஃப்சி ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் ரூ.2,133 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இது ஒரு பிளைன் வெண்ணிலா ஆர்பிட்ரேஜ் ஃபண்டாகும். இதன் 69 சதவிகித சொத்துக்கள் (ஹெட்ஜ் செய்யப்பட்ட) பங்குகளிலும், எஞ்சியது ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் பிற கடன் உபகரணங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் பெஞ்ச்மார்க் கிரிஸில் லிக்விட் வருமானமாகும். இந்த ஃபண்டை என்எஸ்இ டிரஷரி பில் வருமானத்துடன் ஒப்பிடும்போது, கடந்த ஐந்து காலண்டர் ஆண்டுகளில் 2014-ம் ஆண்டைத் தவிரப் பிற ஆண்டுகளில், என்எஸ்இ டிரஷரி பில் வருமானத்தைவிட அதிக வருமானம் தந்துள்ளது. கடந்த ஆண்டில் என்எஸ்இ டிரஷரி பில் வருமானத்தைவிட 0.25% குறைவாகக் கொடுத்துள்ளது.
கடந்த 20 காலாண்டுகளில் எந்த வொரு காலாண்டிலும் நெகட்டிவ் வருமானத்தைத் தரவில்லை. கடந்த காலங்களில் மிகவும் குறைவாக வருமானம் தந்தது 2009-ம் (3.29%) ஆண்டில்தான். அதிகமான வருமானம் கொடுத்தது 2012-ம் (9.32%) ஆண்டில். கடந்த 1, 2, 3, மற்றும் 5 ஆண்டுகளில் டிரெய்லிங் வருமானம் முறையே 8.47%, 8.90%, 9.03%, மற்றும் 8.36 சதவிகிதமாக இருந்துள்ளது. இந்த ஃபண்டில் முதலீடு செய்த 90 நாட்களுக்குள் வெளியேறினால், 0.25% வெளியேற்றுக் கட்டணம் விதிக்கப்படுகிறது. குறைந்தது ஒரு வருட கண்ணோட்டத்தில் இந்த ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது.
அதிக வருமான வரி வரம்பிலிருந்து, ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு நிகரான வருமானத்தை, வருமான வரியில்லாமல் பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த ஃபண்டாகும். அதேபோல் பார்ட்னர்ஷிப், பிரைவேட் மற்றும் பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள் ஓராண்டுக்குமேல் லிக்விட் ஃபண்ட் வருமானத்துக்கு நிகரான, அதே சமயத்தில் வரும் வருமானத்துக்கு வரியில்லாத முதலீட்டைப் பார்க்கும்போது, இந்த ஃபண்ட் கனகச்சிதமாகப் பொருந்தும்.
யாருக்கு உகந்தது?
லிக்விட்/அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளுக்கு இணையான வருமானத்தைத் தேடுகிறவர்களுக்கு, குறைந்த ரிஸ்க் முதலீட்டில் வரிக்குப் பிந்தைய வருமானத்தை அதிகமாக ஈட்ட விரும்புவர்கள், அதிக வருமான வரி வரம்பில் உள்ளவர்கள், வரியில்லாத டிவிடெண்டை விரும்புபவர், வங்கி டெபாசிட்களுக்கு மாற்றைத் தேடுபவர்கள்.
யார் முதலீடு செய்யக் கூடாது:
அதிக ரிஸ்க் எடுத்து வருமானத்தை ஈட்ட விரும்புபவர்கள், கியாரண்டீட் வருமானத்தை ஈட்ட விரும்புபவர்கள்.
சொக்கலிங்கம் பழனியப்பன்,
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
--விகடன்ஐடிஎஃப்சி ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்: முதலீடு செய்க

ஃபண்ட் பரிந்துரை: மாற்ற வேண்டிய ஃபண்ட்!
சுந்தரம் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட்: மாற்றிக்கொள்ளவும்
2008-ம் ஆண்டு உருவான சந்தை சரிவில் அடிபட்டு மீண்டு வரமுடியாமல் தவிக்கும் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று.
இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமாக ஏற்கெனவே முதலீடு செய்துவிட்டு மாற்றிக்கொள்ள வேண்டிய ஃபண்டான சுந்தரம் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட் பற்றிப் பார்ப்போம்.
2008-ம் ஆண்டு உருவான சந்தை சரிவில் அடிபட்டு மீண்டு வரமுடியா மல் தவிக்கும் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. அந்தச் சரிவில்தான் பல இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் ஃபண்ட் மேனேஜ்மென்ட் டீமானது, ஒழுக்கம் எவ்வளவு அவசியம் என்பதைக் கற்றுக்கொண்டன. அதுவரை அக்ரெஸிவ்வாகப் பங்குகளை விற்று கேஷாக வைத்துக் கொள்வது, பிறகு சந்தை ஏறும் என்று தெரிந்தால் பங்குகளை வாங்கு வது போன்ற ஒழுங்கில்லாத செயல்களைச் செய்துவந்தன. புதிதாகச் சந்தைக்கு வரும் ஒரு சாதாரண முதலீட்டாளர் செய்யும் தவறுகளைப் பல கோடி ரூபாய்களை நிர்வகிக்கும் சில ஃபண்ட் நிறுவனங்களும் செய்தன. அந்தச் சரிவுக்குப்பின் வந்த திடீர் ஏற்றத்தில், வைத்திருந்த பணத்தைக் கொண்டு பங்குகளை வாங்க கோட்டைவிட்டன. அந்தத் தவறினால், சில ஃபண்டுகள் இன்று வரை எழ முடியாமல் தவிக்கின்றன.
இந்த ஃபண்ட் ஆரம்பித்த 2002-ம் ஆண்டிலிருந்து இதன் ஃபண்ட் மேனேஜராக ஸ்ரீவித்யா ராஜேஷ் இருந்துவந்தார். ஏப்ரல் 2013 முதல் ஜே.வெங்கடேசன் ஃபண்ட் மேனேஜராக இருந்துவருகிறார்.
இந்த ஃபண்ட் தற்போது ரூ.400 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இது 84 சதவிகிதத்துக்கும் அதிகமான சொத்துக்களை லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. இதன் டாப் ஹோல்டிங்ஸாக ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் உள்ளன. ஆரம்ப காலங்களில் ஃபோகஸ்டு போர்ட்ஃபோலியோவாக (30 பங்குகளுக்கு மிகாமல்) இருந்தது, பிறகு பரவலான போர்ட் ஃபோலியோவாக (50 பங்குகள் வரை) 2010-ம் ஆண்டு மாற்றப்பட்டது.
திரும்பவும் ஃபோகஸ்டு போர்ட்ஃபோலியோ வாக மாறிவருகிறது என்பது இந்த ஃபண்ட் தற்போது வைத்திருக்கும் 41 பங்குகளிலிருந்தும், டாப் 3 துறைகளின் அலோகேஷனை (ஃபைனான்ஸ் – 36.27%, டெக்னாலாஜி – 13.78%, ஆட்டோமொபைல் – 12.85%) பார்த்தாலே தெரியும். சில நேரங்களில் கேஷ் அதிகமாக வைத்திருந்த ஃபண்ட், தற்போது முழுவதும் (99.04%) பங்குகளில் முதலீடு செய்துள்ளது.
கடந்த 5 மற்றும் 7 வருட காலங்களில் இந்த ஃபண்டின் வருமானம் நிஃப்டி 50 குறியீட்டைவிட அதிகமாக இல்லை. கடந்த ஐந்து மற்றும் ஏழு வருடங்களில், இந்த ஃபண்ட் ஆண்டுக்கு சிஏஜிஆர் அடிப்படையில் 8.20% மற்றும் 7.21% வருமானத்தை முறையே தந்துள்ளது. அதேசமயத்தில், நிஃப்டி 50, 9.56% மற்றும் 8.11% வருமானத்தைத் தந்துள்ளது. இதே காலகட்டத்தில் லார்ஜ் கேப் ஃபண்டுகளின் கேட்டகிரி ஆவரேஜ் 10.91% மற்றும் 9.64% ஆகும்.
கடந்த ஐந்து வருடத்தில் பல லார்ஜ் கேப் ஃபண்டுகள் ஆண்டுக்கு 12 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானத்தைத் தந்துள்ளன. இந்த வருமானக் குறைவே இந்த ஃபண்டிலிருந்து முதலீட்டாளர் களை மாற்றிக் கொள்ளும்படி நாம் சொல்ல முக்கிய காரணம்.
இந்த ஃபண்ட் கடந்த 5 மற்றும் 7 வருட காலங்களில் இதனை யொட்டிய பிற ஃபண்டுகளோடு ஒப்பிடுகையில் சுமாராகச் செயல்பட்டிருந்தாலும், ஈக்விட்டி அஸெட் கிளாஸ் நன்றாகச் செயல் பட்டிருப்பதால், இந்த ஃபண்டிலிருந்து இதே ஃபண்ட் நிறுவனத்தில் நன்கு செயல்பட்டுவரும் வேறு பங்கு சார்ந்த திட்டங்களுக்கு முதலீட் டாளர்கள் தங்களது முதலீட்டை மாற்றிக்கொள்ளலாம்.
சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் அவ்வாறு நன்றாகச் செயல்பட்டுவரும் திட்டங்களில் ஒன்று சுந்தரம் செலக்ட் மிட் கேப் ஃபண்டாகும். ஆகவே, சுந்தரம் செலக்ட் மிட் கேப் ஃபண்டுக்கு, முதலீட்டாளர்கள் தங்களது சுந்தரம் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட் முதலீட்டை முழுவதுமாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி மாற்றிக் கொள்ளும்போது, மிட் கேப் திட்டம், லார்ஜ் கேப் திட்டத்தைவிட சற்று கூடுதல் ரிஸ்க் உடையது என்பதை மறக்க வேண்டாம்!
கேள்வி - பதில்சுந்தரம் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட்: மாற்றிக்கொள்ளவும்

நான் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறேன். ஆண்டு வருமானம் ரூ.1,08,000 . அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக வீடுகட்ட ரூ.5 லட்சம் தேவை. மாதம் என்னால் ரூ. 1,500 முதலீடு செய்ய முடியும். எனக்கேற்ற முதலீட்டு திட்டத்தினைக் கூறவும்.
கே.கோவிந்தசாமி, பொள்ளாச்சி.
இன்னும் ஐந்து வருடத்தில் கட்டவிருக்கும் வீட்டுக்காக நீங்கள் சேமிக்க விரும்புகிறீர்கள். நீங்கள் ஐந்து வருடத்தில் வீடு கட்டப்போவது உறுதி என்னும்பட்சத்தில், மேலும் நீங்கள் சேமிக்க இருக்கும் தொகை மாதம் ரூ 1,500தான் உங்களின் பிரதான சேமிப்புத் தொகை என்றால், நீங்கள் இந்த மாதாந்திர சேமிப்பில் எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாது. ஆகவே, நீங்கள் இந்தத் தொகையை ஒரு வங்கி ரெக்கரிங் டெபாசிட்டில் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம்/ கிரெடிட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்டுகளில் போட்டுக்கொள்வது சிறந்தது. சற்று ரிஸ்க் எடுக்க நீங்கள் தயார் என்றால் பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.
பரிந்துரை செய்யும் ஃபண்டுகள்:
அல்ட்ரா ஷார்ட் டேர்ம்: ஐசிஐசிஐ புரூ ஃப்ளெக்ஸி இன்கம் பிளான்
கிரெடிட் ஆப்பர்சூனிட்டீஸ்: ஃப்ராங்க்ளின் இந்தியா ஷார்ட் டேர்ம் இன்கம் பிளான்
பேலன்ஸ்டு ஃபண்ட்: ஹெச்டிஎஃப்சி அல்லது டாடா பேலன்ஸ்டு ஃபண்ட்.
சொக்கலிங்கம் பழனியப்பன்,
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
--விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Re: ஃபண்ட் பரிந்துரை :
ஃபண்ட் பரிந்துரை: மாற்ற வேண்டிய ஃபண்ட்!
டெம்பிள்டன் இந்தியா குரோத் ஃபண்ட்: மாற்றிக் கொள்ளவும்
கடந்த 1, 3, 5 வருட காலங்களில் கேட்டகிரி ஆவரேஜை விட குறைவான வருமானத்தையே தந்துள்ளது; 10 வருட காலகட்டத்தில் கேட்டகிரி ஆவரேஜைவிட 0.24% அதிகமான வருமானத்தையே தந்துள்ளது இந்த ஃபண்ட்!
இந்த வாரம் மாற்றிக்கொள்ள வேண்டிய ஃபண்டான டெம்பிள்டன் இந்தியா குரோத் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம். ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிர்வகித்துவரும் திட்டங்களில் ஒன்றுதான் டெம்பிள்டன் இந்தியா குரோத் ஃபண்டாகும். இது ஒரு மல்ட்டிகேப் திட்டமாகும். இதன் ஃபண்ட் மேனேஜர் சேத்தன் சேகல் ஆவார். ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் சேர்மனாக பணியாற்றிவரும் மார்க் மொபியஸ் (Mark Mobius) பின்பற்றும் வேல்யூ இன்வெஸ்டிங் முறையை இந்த ஃபண்ட் கடைப்பிடிக்கிறது.
ல்ல வளர்ச்சியுள்ள நிறுவனங் களின் பங்குகள் பல காரணங்களால், அவற்றின் உண்மையான மதிப்பிலிருந்து மிகவும் குறைவாக வர்த்தகமாகும். அவ்வாறு வர்த்தக மாகும் பங்குகளில் நீண்டகால அடிப்படையில் இந்த ஃபண்ட் முதலீடு செய்கிறது. நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வதால், இந்த ஃபண்டின் டேர்னோவர் விகிதம் மிகவும் குறைவு (4%).
இந்த ஃபண்ட் 20 பங்குகளுடன் மிகவும் கச்சிதமான போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது. டாப் 5 பங்குகளில் 54.01% வெயிட் உள்ளது. டாடா கெமிக்கல்ஸில் 15.49 சதவிகிதமும், பஜாஜ் ஹோல்டிங் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸில் 12.95 சதவிகிதமும் உள்ளது. அதைத் தொடர்ந்து, ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ் மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் இடம் பெற்றுள்ளன. இதன் டாப் ஹோல்டிங்ஸ் ஃபைனான்ஸ் துறையில் (43.13%) உள்ளது. அதனைத் தொடர்ந்து கெமிக்கல்ஸ் (15.49%), டெக்னாலஜி (9.16%), மற்றும் எனர்ஜி (8.23%) துறைகளில் இடம்பெற்றுள்ளன.
நல்ல முதலீட்டு ஒழுக்கம், ஆரம்பத்திலிருந்து ஒரே ஃபண்ட் மேனேஜர், குறைவான டேர்னோவர் போன்ற பல நல்ல குணாதியசங்களை இந்த ஃபண்ட் கொண்டிருந்தாலும், கடந்த ஐந்து வருட காலத்தில் நிஃப்டியை ஒட்டியே வருமானத்தைக் கொடுத்துள்ளது. ஐந்து ஆண்டு களுக்கு முன்னால் ஒருவர் செய்த முதலீட்டுக்கு இந்த ஃபண்ட் 10.15 சதவிகித வருமானத்தை சிஏஜிஆர் அடிப்படையில் தந்துள்ளது. அதே காலகட்டத்தில் நிஃப்டி குறியீடு 10.16 சதவிகித வருமானத்தையும், இந்த ஃபண்டின் கேட்டகிரி (ஃபண்ட் வகை) ஆவரேஜ் 13.90 சதவிகித வருமானத்தையும் கொடுத்துள்ளது.
மேலும், கடந்த 1, 3, 5 வருட காலங்களில் கேட்டகிரி ஆவரேஜை விட குறைவான வருமானத்தையே தந்்துள்ளது. 10 வருட காலகட்டத்தில் கேட்டகிரி ஆவரேஜைவிட 0.24% அதிகமான வருமானத்தையே தந்துள்ளது. இதே ஃபண்ட் நிறுவனத்தில் செயல்பட்டுவரும் பிற திட்டங்கள் இந்த காலகட்டத்தில் நல்ல வருமானத்தைத்தந்துள்ளன.
இதே ஃபண்ட் நிறுவனம் நடத்தும் மற்றொரு மல்ட்டிகேப் திட்டம் ஃபிராங்க்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனீஸ் ஃபண்டாகும். அந்தத் திட்டம் கடந்த 1, 3, மற்றும் 5 வருடங்களில் முறையே 75.81%, 35.52%, மற்றும் 19.64% வருமானத்தைக் கொடுத்துள்ளது.
இந்த இரண்டு ஃபண்டுகளின் முதலீட்டுத் தத்துவம் வெவ்வேறு என்றாலும், டெம்பிள்டன் குரோத் ஃபண்டைவிட குறைவான பீட்டா வில், மிகவும் உன்னதமான ஆல்ஃபாவை ஹை குரோத் கம்பெனீஸ் ஃபண்ட் கொடுத்துள்ளது. இதே கூற்று ஃபிராங்க்ளின் புளூசிப் மற்றும் பிரைமா பிளஸ் ஆகிய ஃபண்டுகளுக்கும் உண்மையாகும். (இந்த ஃபண்டுகளின் ஒப்பீட்டை கீழ்கண்ட அட்டவணை 1-ல் காண்க.)
ஆகவே, ஏற்கெனவே டெம்பிள்டன் குரோத் ஃபண்டில் முதலீடு செய்துள்ளவர்கள், ரிஸ்க் எடுக்கும் திறன் குறைவாக இருந்தால், ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டுக்கு மாறிக் கொள்ளலாம்.
ரிஸ்க் எடுக்கும் திறன் மீடியமாக இருந்தால், ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் ஃபண்டுக்கு மாறிக் கொள்ளலாம். ரிஸ்க் எடுக்கும் திறன் அதிகமாக இருந்தால், ஃபிராங்க்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனீஸ் ஃபண்டுக்கு மாறிக் கொள்ளுங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------டெம்பிள்டன் இந்தியா குரோத் ஃபண்ட்: மாற்றிக் கொள்ளவும்

என் பெயர் பால்ராஜ். எனக்கு 27 வயதாகிறது. நான் சேமித்து வைத்திருக்கும் 6 லட்சம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். அதிக ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை. ஆனால், 12 முதல் 15 சதவிகித வருமானம் தருகிற ஃபண்டுகளை சொல்லுங்கள்.
‘‘நீங்கள் எதிர்பார்க்கும் (ஆண்டுக்கு) 12 முதல் 15% வருமானம், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நீண்ட காலத்துக்கு (7 ஆண்டுகளுக்கு மேல்) முதலீடு செய்தால் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த முதலீடு ரிஸ்க் உடையது. ரிஸ்க் இல்லாமல் உங்களுக்கு இந்தியாவில் வேறு எந்த முதலீடும் நீங்கள் எதிர்பார்க்கும் இந்த வருவாயைத் தராது. ஆகவே, நீங்கள் வைத்திருக்கும் ரூ.6 லட்சத்தை அடுத்த 7 ஆண்டுகளுக்கு தேவையிருக்காது என்பதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள்; மேலும், உங்கள் வயது குறைவுதான் என்பதால், இந்த முதலீட்டில் இருந்து எந்த வருமானத்தையும் அடுத்த 7 ஆண்டுகளுக்கு எதிர்பார்க்காதீர்கள். 7 ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் உங்களுக்கு சிஏஜிஆர் அடிப்படையில் ஆண்டுக்கு 12 முதல் 15% வரியில்லாத வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள் என்றால், கீழ்க்கண்ட திட்டங்களில் எஸ்டிபி முறையில் முதலீடு செய்துகொள்ளுங்கள்: 1. ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ், 2. யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட்.''
சொக்கலிங்கம் பழனியப்பன்,
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
--விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Re: ஃபண்ட் பரிந்துரை :
ஃபண்ட் பரிந்துரை: ஹெச்டிஎஃப்சி சில்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்ட் – இன்வெஸ்ட்மென்ட் பிளான்: முதலீடு செய்க
குழந்தைகளின் நலனுக்காக முதலீடு செய்யக்கூடிய ஒரு ஃபண்டைப் பற்றி இந்த வாரம் விரிவாகக் காண்போம். பெயரில் குறிப்பிட்டுள்ளது போல, குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள ஃபண்டுதான் ஹெச்டிஎஃபசி சில்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்ட்.
இந்த ஃபண்டில் இரு பிளான்கள் உள்ளன. ஒன்று, நாம் இங்கு பார்க்கப் போகும் இன்வெஸ்ட்மென்ட் பிளான். மற்றொன்று, சேவிங்ஸ் பிளான் ஆகும். இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பது ஒரு பேலன்ஸ்டு ஃபண்டுக்குச் சமமாகும். அதாவது, 75% வரை பங்கு சார்ந்த முதலீட்டிலும், எஞ்சியது கடன் சார்ந்த முதலீடுகளிலும் இருக்கும். சேவிங்ஸ் பிளானில் பங்கு சார்ந்த முதலீடு 20 சதவிகிதம் வரையும், எஞ்சியது கடன் சார்ந்த முதலீடுகளிலும் இருக்கும். சேவிங்ஸ் பிளான் ஒரு எம்ஐபி திட்டத்துக்குச் சமமாகும்.
இந்தத் திட்டத்தில் யூனிட் ஹோல்டர் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தையாகும். கிஃப்ட் கொடுப்பவர்தான் விண்ணப்பதாரர் ஆவார். பெற்றோர்கள் அல்லது தாத்தா, பாட்டி போன்றோர் குழந்தைக்கு முதலீட்டை பரிசாகக் கொடுக்கலாம்.
இந்தத் திட்டம் குழந்தையின் பெற்றோர் அல்லது லீகல் கார்டியனுக்கு, செய்திருக்கும் முதலீட்டைப் போல 10 மடங்கு விபத்துக் காப்பீட்டை இலவசமாக வழங்குகிறது. இந்த விபத்துக் காப்பீடு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை ஒரு யூனிட் ஹோல்டருக்கு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் லாக்-இன் ஆப்ஷன் உள்ளது. நமது தேவையைப் பொறுத்து லாக்-இன்-ஐ தேர்வு செய்து கொள்ளலாம். அவ்வாறு தேர்வு செய்துகொண்டால் குழந்தைக்கு 18 வயது ஆனபின்புதான் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். லாக்-இன் வேண்டாம் என்று கூறிவிட்டால், தேவைப்படும்போது வெளியேற்றுக் கட்டணத்துக்கு உட்பட்டு முதலீட்டைத் திரும்ப எடுத்துக்கொள்ள முடியும் (365 நாட்களுக்குள் வெளியேறினால் 3%, 366 – 730 நாட்களுக்குள் வெளியேறினால் 2%, 731 – 1095 நாட்களுக்குள் வெளியேறினால் 1% வெளியேற்றுக் கட்டணம் கட்டவேண்டும்!).
இந்தத் திட்டம் தற்போது தற்போது ரூ.798 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் சிராக் சேத்தல்வத் ஆவார். இவர் ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வெற்றிகரமாக செயல்பட்டுவரும் திட்டங்களான ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட் மற்றும் ஹெச்டிஎஃப்சி மிட்கேப் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்டுகளையும் நிர்வகித்து வருகிறார். இவர் 2007-ம் ஆண்டிலிருந்து இந்த ஃபண்டின் மேனேஜராக உள்ளார். இவர் பொறுப்பு ஏற்றபின் இந்த ஃபண்டின் செயல்பாடும் சூடு பிடித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பிற பேலன்ஸ்டு ஃபண்டு களையெல்லாம்விட அதிக சிஏஜிஆர் வருமானத்தை இந்த ஃபண்ட் கொடுத்துள்ளது. கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில் பிற பேலன்ஸ்டு ஃபண்டுகளை விட சற்று குறைவான வருமானத்தைக் கொடுத்தி ருந்தாலும், நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளது.
தற்போது இதன் போர்ட்ஃபோலியோவில் 71% பங்குகளிலும், எஞ்சியது கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. (பார்க்க: டாப் 10 பங்குகள், டாப் 4 கடன் பத்திரங்கள் குறித்த அட்டவணை)
இதன் பீட்டா 0.81 ஆகவும், இதன் ஆல்ஃபா 8.10 ஆகவும் உள்ளது. இது குறைவான ரிஸ்க்கில் அதிக லாபத்தைக் குறிக்கிறது.
இந்த ஃபண்ட் துவங்கியபோது (மார்ச் 02, 2001) ஒருவர் செய்த முதலீடான ரூ 1 லட்சம், தற்போது ரூ.11,06,690-ஆக உள்ளது. இது சிஏஜிஆர் அடிப்படையில் 18.54% வருமானம் ஆகும்.
குழந்தைகள் நலனுக்காக பரிசளிக்க விரும்புபவர்களுக்கு இந்த ஃபண்ட் ஒரு நல்ல சாய்ஸ் ஆகும். ஏனென்றால் முதலீடு செய்த பணத்தை, பெற்றோர்களோ அல்லது லீகல் கார்டியனோ வேறு எதற்காகவும் எடுத்து பயன்படுத்த முடியாது.
அதேபோல் நாம் குழந்தைக்காக முதலீடு செய்த பணத்தை வேறு எந்த காரணத்துக்காகவும் எடுக்கக் கூடாது என்ற ஆப்ஷனை விரும்பும் பெற்றோர்களுக்கும் இந்த ஃபண்ட் ஒரு சிறந்த தேர்வாக அமையும். சாதாரணமாக பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், சந்தையில் உள்ள வேறு பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம்.
குழந்தைகளுக்காக மியூச்சுவல் ஃபண்டுகளில் வடிவமைக்கப் பட்ட ஸ்பெஷலான திட்டங்களை நாடுபவர்களுக்கு, இது ஒரு உன்னதமான திட்டமாகும். நல்ல ஃபண்ட் நிறுவனம், நல்ல ஃபண்ட் மேனேஜர், நல்ல செயல்பாடு போன்ற அனைத்து குணங்களையும் இந்தத் திட்டம் கொண்டுள்ளது.
யாருக்கு உகந்தது?
குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக முதலீடு செய்ய விரும்புகிற வர்களுக்கு.
யார் முதலீடு செய்யக் கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுகிறவர்கள், உறுதியான/நிலையான வருமானத்தை விரும்புகிறவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.
சொக்கலிங்கம் பழனியப்பன்
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
--விகடன் குழந்தைகளின் நலனுக்காக முதலீடு செய்யக்கூடிய ஒரு ஃபண்டைப் பற்றி இந்த வாரம் விரிவாகக் காண்போம். பெயரில் குறிப்பிட்டுள்ளது போல, குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள ஃபண்டுதான் ஹெச்டிஎஃபசி சில்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்ட்.

ஃபண்ட் பரிந்துரை: பிர்லா சன் லைஃப் எம்ஐபி 2 – வெல்த் 25 பிளான்: முதலீடு செய்க
மியூச்சுவல் ஃபண்டுகளில் கலப்பின வகையில் எம்ஐபி திட்டங்களுள் ஒன்றான பிர்லா சன் லைஃப் எம்ஐபி 2 – வெல்த் 25 என்கிற ஃபண்டை குறித்து இந்த வாரம் பார்ப்போம். இந்தப் பகுதியில் இந்த வகையான இரண்டு ஃபண்ட் திட்டங்களைப் பற்றி கடந்த இதழ்களில் அலசி இருக்கிறோம். ரிலையன்ஸ் எம்ஐபி மற்றும் ஹெச்டிஎஃப்சி எம்ஐபி – எல்டிபி ஆகியவையே அந்த இரண்டு ஃபண்டுகள் ஆகும்.
இந்த இரண்டு ஃபண்டுகளைத் தொடர்ந்து, இந்த பிர்லா திட்டமும் நன்றாகச் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தற்போது ரூ.833 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. ஏறக்குறைய 72 சதவிகித சொத்துக்களைக் கடன் சார்ந்த முதலீடுகளிலும், எஞ்சியதை பங்கு சார்ந்த முதலீடுகளிலும் முதலீடு செய்துள்ளது.
தற்போது இதன் போர்ட்ஃபோலியோவில் 51 சதவிகிதத்துக்கும் அதிகமாக மத்திய அரசாங்க பாண்டுகள் இடம்பெற்றுள்ளன. வட்டி விகிதம் குறைந்துகொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அரசாங்க பாண்டுகளில் செய்யும் முதலீடு நல்ல லாபத்தைத் தரும் என்ற யுக்தியே இந்த அளவு சதவிகித முதலீட்டுக்கு காரணம். அதேபோல் பங்கு சார்ந்த முதலீட்டில் பல மடங்குகள் லாபத்தைக் கொடுத்த ஐஷர் மோட்டார்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், மதர்ஸன் சுமி போன்ற மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. ஒருபக்கம் வட்டி விகிதக் குறைப்பு, மறுபக்கம் பங்குச் சந்தை ஏற்றம் என இரு பக்கத்திலிருந்தும் இந்த ஃபண்ட் லாபத்தைக் கடந்த ஓரிரு ஆண்டுகளில் கணிசமாகச் சம்பாதித்துள்ளது.
இந்தத் திட்டம் ஆரம்பித்த போது ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் தற்போது ரூ.2,86,824-ஆக உள்ளது. இது சி.ஏ.ஜி.ஆர் அடிப்படையில் 10.11 சதவிகித வருமானமாகும். குறைவான வரிச் செலவுடன் கூடிய இந்த வருமானம், வங்கி டெபாசிட்டுகளுடன் ஒப்பிடும் போது உயர்வான வருமானம் என்பதில் சந்தேகமே இல்லை.
கடந்த 1, 2, மற்றும் 5 ஆண்டு களின் செயல்பாட்டில் டாப் 5 திட்டங்களுள் ஒன்றாக உள்ளது. அதேபோல் இதன் கேட்டகிரி ஆவரேஜையும் கடந்த காலங்களில் அதிக வருமானம் தந்துள்ளது.
குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை முதலீடு செய்யும் தொகை தேவைப்படாது; அதேசமயத்தில் அதிக ரிஸ்க் வேண்டாம்; ஃபிக்ஸட் டெபாசிட்டைவிடச் சற்று அதிக வருமானம் வந்தால் போதும் என நினைப்பவர்களுக்கு இந்தத் திட்டம் கச்சிதமாகப் பொருந்தும்.
இந்தத் திட்டம் குரோத் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன் களை வழங்குகிறது.
டிவிடெண்ட் முதலீட்டாளர் கையில் டாக்ஸ் ஃப்ரீ என்றாலும், டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரி செலுத்திய பிறகுதான் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, உடனடியாக பணம் தேவைப்படாதவர்கள், குரோத் ஆப்ஷனில் போட்டு விட்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு எஸ்டபிள்யூபி ஆப்ஷன் மூலமாக மாதாந்திரம் பணத்தை எடுத்துக்கொண்டால், வரிச் சுமை குறையும்.
அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், முதியோர்கள், நீண்ட காலக் கடன் சார்ந்த முதலீட்டுக்கு நல்ல உபகரணங் களைத் தேடுபவர்கள், நீண்ட கால ரெக்கரிங் டெபாசிட்டுக்கு ஒரு மாற்றைத் தேடுபவர்கள் போன்ற அனைவரும் இந்தத் திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
யாருக்கு உகந்தது?
நீண்ட நாள் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளைவிட அதிக வருமானத்தை எதிர்பார்ப்பவர் கள், குறைந்த அளவில் ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள், நீண்ட நாட்களில் பணவீக்கத்தைத் தாண்டி சில சதவிகிதம் அதிக வருமானத்தை எதிர்பார்ப்பவர் கள், குறைந்த ரிஸ்க் முதலீட்டில் வரும் வருமானத்துக்கு மிகக் குறைவான வரியைக் கட்ட விரும்புபவர்கள், மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கான முதலீட்டை நாடுபவர்களுக்கு உகந்தது.
யார் முதலீடு செய்யக் கூடாது?
அதிக வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், நீண்ட காலத்தில் பணம் தேவைப் படுபவர்கள் இந்த ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்!
நான் ஒரு என்ஆர்.ஐ. அமெரிக்காவில் எனது கணவர் சாஃப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறார். நாங்கள் இங்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இன்னும் சில வருடங்களில் நாங்கள் இந்தியா வர எண்ணுகிறோம். எங்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவனது எதிர்காலத்துக்காக நாங்கள் இந்தியாவில் நல்லதொரு திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கிறோம். எந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்? நாங்கள் என்ஆர்ஐ என்பதால் முதலீடு செய்வதில் ஏதேனும் பிரச்னை உள்ளதா?
ஜி.ஆர். உதயா,
கலிபோர்னியா, யு.எஸ்.ஏ.
‘‘அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் இந்தியர்களின் முதலீட்டு விண்ணப்பங்களை பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்றுக்கொள்வதில்லை. சில இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன. அவையாவன, எல் அண்ட் டி, சுந்தரம் மற்றும் பிரமரிக்கா ஆகும். இந்த மூன்று மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் நீங்கள் உங்கள் முதலீட்டை வைத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் வெளிநாட்டில் வசிப்பதால், ஒரு முதலீட்டு ஆலோசகர் உதவியுடன் உங்கள் முதலீட்டை செய்வது சிறந்தது. மேலும், நீங்கள் வசிக்கும் நாட்டில், இந்தியாவில் செய்யும் முதலீட்டை கட்டாயமாக தெரிவிக்க (Declare) வேண்டும். என்ஆர்ஐ என்பதால் இந்தியாவில் முதலீடு செய்வதில் பிரச்னைகள் ஏதும் இல்லை. இரு நாட்டிலும் உள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உங்களின் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.
உங்கள் மகனின் எதிர்காலத்துக்காக கீழ்க்கண்ட ஃபண்டில் எஸ்ஐபி முறையில் நீங்கள் முதலீட்டை மேற்கொள்ளலாம்: எல் அண்ட் டி ஈக்விட்டி ஃபண்ட்.’’

கேள்வி - பதில்

ஃபண்ட் பரிந்துரை: எஸ்பிஐ புளூசிப் ஃபண்ட்: முதலீடு செய்க
பெரும்பாலும் லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய எஸ்பிஐ புளூசிப் ஃபண்ட் குறித்து இந்த வாரம் பார்ப்போம்.
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஏறக்குறைய ரூ.75,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. எஸ்பிஐ புளூசிப் ஃபண்ட் பிப்ரவரி 2006-ல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ஃபண்ட் தற்போது ரூ.1,680 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இது பெரும்பாலும் புளூசிப் நிறுவனப் பங்கு களிலேயே தனது முதலீட்டை வைத்துக் கொள்கிறது. சந்தை மதிப்பில் டாப் 100 இடங்களுக்குள் இருக்கும் பங்குகளிலேயே தனது முதலீட்டை செய்கிறது.
இதன் ஃபண்ட் மேனேஜர் ஸோஹினி அண்டானி ஆவார். இவர் இந்த ஃபண்டை 2010-ம் ஆண்டிலிருந்து நிர்வகித்து வருகிறார். இந்த ஃபண்ட் ஏறக்குறைய 70 சதவிகித முதலீட்டை லார்ஜ்கேப் பங்குகளிலும், எஞ்சியதை மிட்கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது.
இதன் டாப் ஹோல்டிங்ஸாக ஹெச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுஸூகி, மதர்ஸன் சுமி, எல் அண்ட் டி, மற்றும் டிசிஎஸ் உள்ளது. நிஃப்டியுடன் ஒப்பிடும் போது ஃபைனான்ஸ், டெக்னாலஜி, எஃப்எம்சிஜி போன்ற துறைகளில் அண்டர் வெயிட்டாகவும், ஆட்டோ மொபைல், ஹெல்த்கேர், இன்ஜினீயரிங் போன்ற துறை களில் ஓவர்வெயிட்டாகவும் உள்ளது.
இந்த ஃபண்டின் பீட்டா சந்தையைவிடக் குறைவாக 0.84 என்ற அளவில் உள்ளது. அதேசமயத்தில் இதன் ஆல்ஃபா 9.65 என்ற அளவில் மிகவும் உன்னதமாக உள்ளது.
போர்ட்ஃபோலியோவில் 10% வரை சந்தை வாய்ப்புகளை பயன்படுத்துவதற்காக கேஷ் வைத்துக் கொள்கிறது. நிஃப்டி யுடன் ஒப்பிடும்போது, 8% வரை ஒரு துறையிலும், 4% வரை ஒரு பங்கிலும் அதிகமாக வெயிட்டை இந்த ஃபண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஃபண்டின் செயல்பாட்டில் 2010-ம் ஆண்டுவரை ஏற்ற இறக்கம் இருந்தது. செயல்பாடும் சுமாராகத்தான் இருந்தது. தற்போதைய ஃபண்ட் மேனேஜர் வந்ததிலிருந்து, இந்த ஃபண்டின் செயல்பாடு நன்றாக முன்னேறியுள்ளது.
2011-ம் ஆண்டிலிருந்து இந்த ஃபண்ட் தொடர்ந்து நிஃப்டியை விட அதிக வருமானம் தந்துள்ளது.
கரடிச் சந்தையைக் காட்டிலும், காளைச் சந்தையில் இந்த ஃபண்ட் நன்றாகச் செயல்படுகிறது. கடந்த 1, 3, மற்றும் 5 வருடச் செயல்பாடுகள் இந்த ஃபண்டை லார்ஜ்கேப் ஃபண்டுகளில் டாப் 25 சதவிகித ஃபண்டுகளில் ஒன்றாக இடம்பெறச் செய்து உள்ளது.
இதே காலகட்டங்களில் நிஃப்டியையும், கேட்டகிரி ஆவரேஜையும்விட அதிகம் வருமானம் தந்திருக்கிறது. உதாரணத்துக்கு, கடந்த ஒரு வருடத்தில் நிஃப்டி 22.18% வருமானத்தையும், இதன் கேட்டகிரி 38.03% வருமானத்தையும் தந்துள்ளன. அதே காலகட்டத்தில் இந்த ஃபண்ட் 43.62% வருமானத்தைத் தந்துள்ளது.
கடந்த 5 வருடத்தில் நிஃப்டி 9.16% வருமானத்தையும், இதன் கேட்டகிரி 12.25% வருமானத்தையும் தந்துள்ளது. ஆனால், இந்த ஃபண்டோ 14.09% வருமானத்தைக் கொடுத்துள்ளது.
குறைவான ரிஸ்க்குடன் கூடிய பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை விரும்பு பவர்கள், கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்கள், முதன்முறை முதலீட்டாளர்கள் என அனைவரும் இந்தத் திட்டத்தில் எஸ்ஐபி மூலமாகவும், சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் முதலீடு செய்யலாம்.
யாருக்கு உகந்தது?
அனைத்து வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், நீண்ட காலத்தில் குறைந்த ரிஸ்க்கில் செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், பங்கு சார்ந்த முதலீடுகளில் குறைவான ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதி யான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு இப்போது 38 வயதாகிறது. என் குழந்தைகளின் எதிர்கால செலவுகளுக்காகவும் கல்விக்காகவும் அடுத்த 12 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். என்னால் அதிக ரிஸ்க் எடுக்க முடியும். மாதம் 15,000 ரூபாய் என்னால் முதலீடு செய்ய முடியும். எனக்கேற்ற ஃபண்டுகளை சொல்ல முடியுமா?
எ.முத்துக்குமார், சிக்கிம்.
‘‘உங்களால் அதிக ரிஸ்க் எடுக்க முடியும் எனவும் 12 வருடங்கள் காத்திருக்க முடியும் என்றும் கூறியிருக்கிறீர்கள். ஹை ரிஸ்க் - ஹை ரிவார்டில் வருவது ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்டுகளே. அந்த அடிப்படையில் கீழ்க்கண்ட ஃபண்டுகளில் தலா ரூ.5,000 வீதம் உங்களின் முதலீட்டை ஆரம்பித்துக் கொள்ளுங்கள்:
1. ரெலிகர் இன்வெஸ்கோ ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்ட்
2. ஃபிராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட்
3. டி.எஸ்.பி – பி.ஆர் மைக்ரோகேப் ஃபண்ட்
ஸ்மால் அண்ட் மிட்கேப் திட்டங்களில் சற்று கூடுதல் கண்காணிப்பு அவசியம் என்பதை நினைவில்கொண்டு செயல்படுங்கள்.’’
சொக்கலிங்கம் பழனியப்பன்
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
--விகடன்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------பெரும்பாலும் லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய எஸ்பிஐ புளூசிப் ஃபண்ட் குறித்து இந்த வாரம் பார்ப்போம்.

கேள்வி பதில்
எனக்கு இப்போது 38 வயதாகிறது. என் குழந்தைகளின் எதிர்கால செலவுகளுக்காகவும் கல்விக்காகவும் அடுத்த 12 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். என்னால் அதிக ரிஸ்க் எடுக்க முடியும். மாதம் 15,000 ரூபாய் என்னால் முதலீடு செய்ய முடியும். எனக்கேற்ற ஃபண்டுகளை சொல்ல முடியுமா?
எ.முத்துக்குமார், சிக்கிம்.
‘‘உங்களால் அதிக ரிஸ்க் எடுக்க முடியும் எனவும் 12 வருடங்கள் காத்திருக்க முடியும் என்றும் கூறியிருக்கிறீர்கள். ஹை ரிஸ்க் - ஹை ரிவார்டில் வருவது ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்டுகளே. அந்த அடிப்படையில் கீழ்க்கண்ட ஃபண்டுகளில் தலா ரூ.5,000 வீதம் உங்களின் முதலீட்டை ஆரம்பித்துக் கொள்ளுங்கள்:
1. ரெலிகர் இன்வெஸ்கோ ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்ட்
2. ஃபிராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட்
3. டி.எஸ்.பி – பி.ஆர் மைக்ரோகேப் ஃபண்ட்
ஸ்மால் அண்ட் மிட்கேப் திட்டங்களில் சற்று கூடுதல் கண்காணிப்பு அவசியம் என்பதை நினைவில்கொண்டு செயல்படுங்கள்.’’
சொக்கலிங்கம் பழனியப்பன்
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
--விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Re: ஃபண்ட் பரிந்துரை :
ஃபண்ட் பரிந்துரை: ரெலிகர் இன்வெஸ்கோ கிரெடிட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட்: முதலீடு செய்க
சென்ற வாரம் லார்ஜ்கேப் திட்டங்களில் ஒன்றான எஸ்பிஐ புளூசிப் ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். இவ்வாரம் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் ஒன்றான ரெலிகர் இன்வெஸ்கோ கிரெடிட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.
பொதுவாக கிரெடிட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்டுகளின் முதலீட்டுக் காலம் குறைந்தது ஒரு வருடமாக இருக்கும். இன்னும் சில ஃபண்டுகளின் முதலீட்டுக் காலம் 3 வருடங்களாக உள்ளது. அதற்குமுன் வெளியேறும் பட்சத்தில் வெளியேற்றுக் கட்டணம் உள்ளது.
ஆனால், ரெலிகர் இன்வெஸ்கோ கிரெடிட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் சற்று வித்தியாசமானது. இது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் கேட்டகிரியில் வருகிறது. இதன் முதலீடும் குறுகிய கால உபகரணங்களிலேயே உள்ளது. இந்த ஃபண்டில் உள்ள உபகரணங்களின் சராசரி முதிர்வுக் காலம் 33 நாட்களாகும். ஆகவே தனது வெளியேற்றுக் கட்டணத்தையும் அவ்வாறே அமைத்துள்ளது. முதலீடு செய்த 30 நாட்களுக்குப் பின் வெளியேறினால் எந்தவிதமான கட்டணமும் கிடையாது. அதற்கு முன் வெளியேறினால் வெளியேற்றுக் கட்டணமாக 0.25% வசூலிக்கப்படுகிறது.
சந்தையில் உள்ள பிற அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் வெளியேற்றுக் கட்டணம் இல்லாதபோது இந்த ஃபண்டில் நான் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு முக்கியக் காரணம், இந்த ஃபண்ட் தரும் நல்ல வருமானம்தான். கடந்த 1, 3 மற்றும் 5 ஆண்டுகளில், முறையே 9.35%, 9.55% மற்றும் 9.17% வருமானத்தைக் கொடுத்துள்ளது. இந்த ஃபண்டைவிட ஃபிராங்க்ளின் இந்தியா அல்ட்ரா ஷார்ட் பாண்ட் ஃபண்ட் சற்று கூடுதல் வருமானத்தைத் தந்துள்ளது. ஆனால், அந்த வருமானம் கூடுதல் ரிஸ்க்குடன் வந்துள்ளது. ஃபிராங்க்ளின் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டில் உள்ள உபகரணங்களின் ஆவரேஜ் கிரெடிட் ரேட்டிங் AA. ஆனால், ரெலிகர் இன்வெஸ்கோ கிரெடிட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்டின் ஆவரேஜ் கிரெடிட் ரேட்டிங் AAA ஆகும். AAA ரேட்டிங் உயர்ந்த தரமுள்ள முதலீட்டுப் பத்திரங்கள் உள்ளதைக் குறிக்கிறது. ஆகவே முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கு மிகுந்த பாதுகாப்பு கிடைக்கிறது.
முதலீட்டு யுக்தி!
உயர்ந்த தரமுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் குறுகிய கால கடன் பத்திரங்களில் இந்தத் திட்டம் முதலீடு செய்கிறது. கடன் பத்திரங்களின் சந்தையில் பலவிதமான முதலீட்டு வாய்ப்புகள் முதலீடு செய்வதற்கு கிடைக்கும். இத்திட்டம் கீழ்கண்ட வாய்ப்புக்களை தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறது.
தரமான நிறுவனங்களோ அல்லது துறைகளோ மேக்ரோ பொருளாதார நிலைமைகளால், முதலீட்டாளர்களின் பார்வையிலிருந்து விலகி இருக்கும். அப்போது அந்த நிறுவனங்கள் தங்களது கடன் பத்திரங்களுக்கு அதிக வட்டியை வழங்க முன்வரும். அதுபோன்ற நிறுவன உபகரணங்களில் இத்திட்டம் முதலீடு செய்கிறது.
புதிய நிறுவனங்கள் கடன் சந்தையில் நுழையும்போது அதிக வட்டியை வழங்க ஆயத்தமாக இருப்பார்கள். அதுபோன்ற வாய்ப்புகளையும் இத்திட்டம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
அதேபோல் சில நிறுவனங்கள் அவர்களின் தரமான நிர்வாகத்தால், கிரெடிட் ரேட்டிங்கில் உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கும். ஆனால், அந்த நிறுவனங்களின் தறபோதைய கிரெடிட் ரேட்டிங்கை வைத்து, அந்த நிறுவனங்கள் சற்று அதிகமான வட்டியை வழங்கும். அதுபோன்ற நிறுவன கடன் பத்திரங்களிலும் இத்திட்டம் முதலீடு செய்கிறது.
அதிகபட்சமாக 60 நாட்கள் மெச்சூரிட்டி கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறது. பொதுவாக, பிற கடன் திட்டங்களில், வட்டிவிகித ஏற்ற இறக்கத்தை வைத்து உபகரணங்களை மாற்றுவார்கள். அதுபோல் இத்திட்டம் செய்வதில்லை. செய்த முதலீட்டில் முதிர்வுக் காலம் வரை நிலைத்திருக்கும்.
இந்த ஃபண்ட் திட்டத்தின் போர்ட்ஃபோலியோவில் மொத்தம் 51 பத்திரங்கள் உள்ளன. இதன் முதலீடு முழுக்க முழுக்க கமர்ஷியல் பேப்பர்களிலேயே உள்ளது. இந்தத் திட்டத்தின் ஃபண்ட் மேனேஜர் நிதிஷ் சிக்கந்த் ஆவார்.
தற்போது ரூ.2,200 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. ரெக்கரிங் டெபாசிட்டுக்குப் பதிலாக, இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் தாராளமாக முதலீடு செய்யலாம்.
மேலும், குறுகிய காலத்தில் தேவைப்படும் பணத்தையும் இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். தேசிய பங்குச் சந்தையின் டிரஷரி பில் வருமானத்துடன் ஒப்பிடும்போது, தொடர்ந்து இந்தத் திட்டம் அதிகமான வருவாயைத் தந்துள்ளது.
யாருக்கு உகந்தது?
சேமிப்புக் கணக்கில் தூங்கிக் கொண்டிருக்கும் பணத்தை முதலீடு செய்ய விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், சில மாதங்களுக்குள் பணம் தேவைப்படுபவர்கள், எமர்ஜென்சியில் பணம் தேவைப்படுபவர்கள், சேமிப்புக் கணக்கைக் காட்டிலும் அதிகமான வருமானத்தை விரும்புபவர்கள், எப்போது வேண்டுமானாலும் பணம் தேவைப்படுபவர்கள்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
அதிக வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள், கேரன்டி வருமானத்தை விரும்புபவர்கள்.

ஃபண்ட் பரிந்துரை: ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் ஃபண்ட்: முதலீடு செய்க
நீண்ட நாள் வரலாறு கொண்ட பங்கு சார்ந்த திட்டங்களில் ஒன்றான ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் ஃபண்ட் குறித்து இப்போது பார்ப்போம். இது ஒரு லார்ஜ் மற்றும் மிட்கேப் ஃபண்ட் ஆகும்.
இந்த ஃபண்ட் ஆரம்பித்தது செப்டம்பர் 1994-ம் ஆண்டு. தற்போது இந்த ஃபண்ட் ரூ.4,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் ஆனந்த் ராதாகிருஷ்ணன் மற்றும் ஜானகிராமன் ஆவார்கள்.
சந்தையில் தொடர்ச்சியாக சீரான செயல்பாட்டை (consistent performance) கொண்டுள்ள சில ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. இதன் போர்ட்ஃபோலியோ ஹெல்த்கேர், இன்ஜீனீயரிங் மற்றும் சர்வீசஸ் துறைகளில் ஓவர்வெயிட்டாகவும், ஃபைனான்ஸ், டெக்னாலஜி மற்றும் எனர்ஜி துறைகளில் அண்டர்வெயிட்டாகவும் உள்ளது. இந்த ஃபண்டின் டாப் ஹோல்டிங்ஸாக ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல் மற்றும் யெஸ் பேங்க் உள்ளன. இதன் போர்ட்ஃபோலியோவில் 70% லார்ஜ்கேப் பங்குகளிலும், எஞ்சியது மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் போர்ட்ஃபோலியோ டேர்னோவர் விகிதம் மிகவும் குறைவாக (11%) இருப்பது, ஃபண்ட் மேனேஜர் தான் நிர்வகித்துவரும் போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ள பங்குகளின் மீதுள்ள உறுதியைக் காண்பிக்கிறது.
கடந்த 1, 3, 5, 10 ஆண்டுகள் என எந்த காலகட்டத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த ஃபண்ட் நிஃப்டியைவிட அதிக வருமானம் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல், கேட்டகிரி ஆவரேஜையும்விட அதிக வருமானத்தை சுலபமாக தந்துள்ளது.
உதாரணமாக, கடந்த 5 வருட காலகட்டத்தில் சிஏஜிஆர் அடிப்படையில், நிஃப்டி குறியீடு ஆண்டுக்கு 11.38% வருமானத்தைக் கொடுத்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்த ஃபண்டின் கேட்டகிரியில் உள்ள பிற ஃபண்டுகளின் சராசரி வருமானம் 14.16% ஆகும்.
ஆனால், இந்த ஃபண்டின் வருமானம் கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 18.35% தந்திருக்கிறது. இதேபோல்தான் பிற கால கட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
இந்த ஃபண்ட் ஆரம்பித்த போது (செப்டம்பர் 1994) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது (மே 2015) ரூ.44,12,210-ஆக உள்ளது. இது சிஏஜிஆர் அடிப்படையில் கணக்கிடும் போது ஆண்டுக்கு 20.12% வருமானம் ஆகும். அதேபோல் ஆரம்பித்ததிலிருந்து ஒருவர் செய்த மாத முதலீடான ரூ.1,000 தற்போது ரூ.44,22,860-ஆக உள்ளது. கடந்த இருபதுக்கும் மேற்பட்ட வருடங்களில் அவர் செய்த முதலீடு (245 தவணைகளில் மாதம் ரூ.1,000) ரூ.2,45,000 ஆகும். இது சிஏஜிஆர் அடிப்படையில் ஆண்டுக்கு 23.91% வருமானம் ஆகும்.
ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.36.66 ஆகும். கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இந்த ஃபண்ட் தொடர்ந்து டிவிடெண்ட்டை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு பிப்ரவரி மாதத்திலும் டிவிடெண்ட் வழங்குகிறது.
இந்த ஃபண்டின் பீட்டா 0.89 ஆகும். இது சந்தையைவிட குறைவான ரிஸ்க்கை குறிக்கிறது. குறைவான ரிஸ்க்கில் இதன் ஆல்ஃபா 8.97 என்ற அளவில் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
சற்று குறைவான ரிஸ்க் உள்ள ஃபண்டைத் தேடுபவர்கள், தொடர்ச்சியாக நல்ல செயல்பாடு உள்ள ஃபண்டை நாடுபவர்களுக்கு இந்த ஃபண்ட் பொருத்தமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
யாருக்கு உகந்தது?
ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து உள்ளவர்கள், அனைத்து வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தை பெருக்க நினைப்பவர்கள், மீடியம் ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.
ந.விகடன்நீண்ட நாள் வரலாறு கொண்ட பங்கு சார்ந்த திட்டங்களில் ஒன்றான ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் ஃபண்ட் குறித்து இப்போது பார்ப்போம். இது ஒரு லார்ஜ் மற்றும் மிட்கேப் ஃபண்ட் ஆகும்.

ஃபண்டு Q & A
2014-ம் ஆண்டு ஜூலை முதல் இந்த ஃபண்டுகளில் (பிர்லா சன் லைப் ஃப்ரண்ட்லைன் ஈக்விட்டி, ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி, ஐடிஎஃப்சி பிரிமீயர் ஈக்விட்டி, ஹெச்டிஎஃப்சி. டாப் 200, ஹெச்டிஎஃப்சி மிட்கேப் ஆப்பர்சூனிட்டீஸ், ஐசிஐசிஐ புரூ வேல்யூ டிஸ்கவரி, ஐசிஐசிஐ புரூ ஃபோக்கஸ்டு புளூசிப் ஈக்விட்டி, ரிலையன்ஸ் பார்மா, மிரே அஸெட் இந்தியா ஆப்பர்சூனிட்டீஸ்) மாதம் தலா ரூ.5,000 முதலீடு செய்து வருகிறேன். 37 வயதாகும் எனக்கு 6 மற்றும் 2 வயதுகளில் இரு குழந்தைகள் உண்டு. குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் என் ஓய்வுக் காலத்துக்கு பணத்தை மேற்கூறிய ஃபண்டுகளில் சேர்த்து வருகிறேன். தற்போதுள்ள நிலைமையின்படி, இரு குழந்தைகளின் படிப்புக்கும் தலா ரூ.10 லட்சம் தேவை. என் ஓய்வுக் காலத்துக்கு மாதம் ரூ.50,000 தேவை. இந்த நோக்கங்களை நிறைவேற்ற நான் முதலீடு செய்து வரும் ஃபண்டுகள் சரிதானா அல்லது மாற்றம் செய்ய வேண்டுமா?
என்.ஸ்ரீனிவாசன்,
‘‘நீங்கள் வைத்திருக்கும் ஃபண்டுகள் அனைத்தும் சிறந்தவையே. உங்களுக்கு வரி சேமிப்பு தேவையிருந்தால், ஆக்ஸிஸ் லாங்டேர்ம் ஃபண்டில் முதலீட்டைத் தொடருங்கள். இல்லையேல், லாக்-இன் இல்லாத ரெகுலர் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம்.
துறை சார்ந்த ஃபண்டுகளில் ரிஸ்க் சற்று அதிகம். ஆகவே பார்மா ஃபண்டுக்குப் பதிலாக, டைவர்ஸிஃபைடு திட்டங்களிலேயே முதலீடு செய்து கொள்ளலாம். 9 ஃபண்டுகளுக்குப் பதிலாக, 5 – 6 ஃபண்டுகளில் உங்கள் மொத்த முதலீட்டையும் வைத்துக்கொள்ளலாம். அவ்வாறு குறைக்கும்போது, ஹெச்டிஎஃப்சி டாப் 200, ரிலையன்ஸ் பார்மா மற்றும் தேவையில்லை என்றால் ஆக்ஸிஸ் லாங்டேர்ம் ஈக்விட்டி போன்றவற்றை நிறுத்திவிட்டு, அந்தத் தொகையை பிற ஃபண்டு களில் அதிகப்படுத்தலாம்.''
சொக்கலிங்கம் பழனியப்பன்
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Re: ஃபண்ட் பரிந்துரை :
ஃபண்ட் பரிந்துரை: ஐசிஐசிஐ புரூ எம்ஐபி 25 - முதலீடு செய்க!
வங்கிகளில் வட்டி குறைந்து வருகிறதே என இன்றைக்குப் பலரும் கவலைப்படுகிறார்கள். இதற்காகக் கவலைகொள்ள வேண்டிய அவசியமே இல்லை. வட்டி விகிதம் இறங்கும் காலத்திலும், நீங்கள் டீஸன்டான வருமானத்தைப் பெறலாம். அந்தவகைத் திட்டங்களில் ஒன்றுதான் நாம் இப்போது பார்க்கப்போகும் ஐசிஐசிஐ புரூ எம்ஐபி 25 திட்டம்.
எம்ஐபி (MIP – Monthly Income Plans) ஃபண்டுகள் கலப்பின வகையாகும். இவற்றில் சுமார் 70% கடன் சார்ந்த முதலீடுகளிலும், எஞ்சியது பங்கு சார்ந்தவற்றிலும் முதலீடு செய்யப்படுகிறது. நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட்டை விட சற்று அதிக வருமானம் வேண்டும் என நினைப்பவர் களுக்கு இந்த வகைத் திட்டங்கள் மிகவும் பொருந்தும்.
இந்தத் திட்டம் தனது போர்ட்ஃபோலியோவில் ஏறக்குறைய 22 சதவிகிதத்தைப் பங்கு சார்ந்த முதலீட்டிலும், 76 சதவிகிதத்தைக் கடன் பத்திரங் களிலும், எஞ்சியதை ரொக்கமாக வும் வைத்துள்ளது. கடன் சார்ந்த முதலீட்டில், நீண்ட காலம் முதிர்வு கொண்ட மத்திய அரசாங்க பாண்டுகளில் சுமார் 54% முதலீடு செய்துள்ளது. மற்றவை கார்ப்பரேட் நிறுவன பாண்டுகளில் முதலீடு செய்யப் பட்டுள்ளது. இனிவரும் காலங் களில் இன்னும் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப் படுவதால், மத்திய அரசாங்க பாண்டுகளில் அதிகமான முதலீட்டை வைத்துள்ளது. காரணம், வட்டி விகிதம் குறையும் போது, பாண்டுகளின் விலை ஏறும்!
இதன் பங்கு சார்ந்த முதலீட்டில் வாப்கோ இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், நெட்கோ பார்மா, மாருதி சுஸூகி, டாக்டர் ரெட்டீஸ் போன்ற பங்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஃபண்டின் பங்கு சார்ந்த முதலீட்டை ரஜாத் சந்தக் என்கிற ஃபண்ட் மேனேஜர் நிர்வகித்து வருகிறார். இவர் மெட்டல், எண்ணெய் போன்ற கமாடிட்டி தொழில் செய்யும் நிறுவனங்களை விட, நுகர்வோர் சார்ந்த நிறுவனப் பங்குகளையே தனது போர்ட்ஃபோலியோவில் அதிகம் இருக்கும் ஒரு கச்சி தமான போர்ட் ஃபோலியோவை வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆகவே, தற்போது 36 பங்குகளாக இருப்பது இனிவரும் காலத்தில் இன்னும் குறைய வாய்ப்பிருக்கிறது.
இந்த ஃபண்டின் கடன் சார்ந்த போர்ட்ஃபோலியோவை மனீஷ் பாந்தியா என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த போர்ட்ஃபோலியோவின் ஆவரேஜ் மெச்சூரிட்டி 9 வருடங் களுக்கும்மேல். பெரும்பாலும் மத்திய அரசாங்க பாண்டுகளும், AAA ரேட்டிங் கொண்ட கார்ப்பரேட் பாண்டுகளும் உள்ளன. மிகக் குறைவான சதவிகிதத்திலேயே AA ரேட்டிங் கொண்ட பாண்டுகள் உள்ளன. மொத்தத்தில், இந்த ஃபண்ட் தரமான போர்ட்ஃபோலி யோவைக் கொண்டுள்ளது.
இந்த ஃபண்ட் தற்போது ரூ.1,291 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. ஃபண்ட் ஆரம்பித்த போது (மார்ச் 30, 2004) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது (ஜூன் 05, 2015) ரூ.3,02,065-ஆக உள்ளது. இது கூட்டுவட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 10.38% வருமானம் ஆகும்.
நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட்டுடன் ஒப்பிடும்போது, குறைந்த ரிஸ்க்கில் இது ஒரு நல்ல வருமானமாகும்.
மேலும், இந்த வருமானத்துக்கு நீண்ட கால கேப்பிட்டல் கெயின்ஸ் வரிதான் (3 ஆண்டுகளுக்கு மேல் வைத்தி ருக்கையில்) உரித்தாகும் என்பது கூடுதல் லாபம் ஆகும்.
உச்சப்பட்ச வருமான வரி வரம்பில் இருப்பவர்களுக்கு, ஃபிக்ஸட் டெபாசிட்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஃபண்டில் இருந்துவரும் வருமானத்துக்குக் கட்டவேண்டிய வரி மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்.
இதில் ஒரு பாசிட்டிவ் அம்சம் என்னவென்றால், நீங்கள் ஃபண்டைவிட்டு வெளியேறும் வருடத்தில்தான் வரி கட்ட வேண்டும். இதுவே, ஃபிக்ஸட் டெபாசிட்டாக இருந்தால், வருடா வருடம் வட்டித் தொகையைக் கையில் வாங்கினா லும் வாங்காவிட்டாலும் வரி கட்ட வேண்டும்.
வரி கட்ட வேண்டிய தொகைக்குக் கிடைக்கும் வருமானம் இந்த ஃபண்டுகளில் உங்களுக்கு எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கிறது. உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் மூலத்தில் வரிப்பிடித்தம் கிடையாது. நாம்தான் தெரிவிக்க (Declare)் வேண்டும்.
இந்த ஃபண்டில் முதலீடு செய்து மூன்று வருடங்களுக்குப் பிறகு, எஸ்டபிள்யூபி (SWP – Systematic Withdrawal Plan) முறை மூலம் மாதாமாதம் பென்ஷன் போலப் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த முறையினால், ஒன்று ரெகுலர் வருமானம் கிடைக்கும்; மற்றொன்று, மூன்று வருடங்களுக்குப் பிறகு பணத்தை எடுக்கும்போது வருமான வரியும் குறைவாகவே கட்டவேண்டி வரும்.
இதன் பெயரில் உள்ளதுபோல (MIP - மன்த்லி இன்கம் பிளான்) ஒவ்வொரு மாதமும் இந்த ஃபண்ட் வருமானம் கட்டாய மாகத் தரும் என்று எதிர்பார்ப்பது தவறு. இந்த ஃபண்டில் குரோத் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன் கள் உள்ளன.
டிவிடெண்ட் ஆப்ஷனில் மாதாந்திர டிவிடெண்ட் மற்றும் காலாண்டு, அரையாண்டு டிவிடெண்ட் என மூன்று வகைகள் உள்ளன. டிவிடெண்ட், வரிப்பிடித்தம் செய்தது போகத்தான் முதலீட்டாளர் களின் கையில் கிடைக்கும்.
வரியைச் சேமிக்க விரும்புகிற வர்கள், குரோத் ஆப்ஷனில் சென்றுவிட்டு மூன்று ஆண்டுக்குப் பிறகு நாம் மேலே கூறியதுபோல எஸ்டபிள்யூபி முறை மூலம் மாதாமாதம் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஃபண்டில் மிகவும் குறுகிய காலத்துக்கு முதலீட்டா ளர்கள் நுழைய வேண்டாம். குறைந்தது 3 – 5 வருட காலத்துக் காவது முதலீடு செய்யும் தொகையை மட்டுமே இந்த ஃபண்டில் கொண்டு வரவும்.
நாம் ஏற்கெனவே கண்டது போல குறைந்த ரிஸ்க்கில் பணவீக்கத்தைத் தாண்டி, சற்று அதிக வருவாயை எதிர்பார்ப்பவர் கள் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டுடன் ஒப்பிடும்போது, குறைவான வருமான வரி கட்ட விரும்புபவர்கள் இந்தத் திட்டத்தில் மொத்தமாகவும், எஸ்ஐபி முறையிலும் தாராளமாக முதலீடு செய்யலாம்.
எனக்கு இப்போது 37 வயது. ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறேன். இந்தியாவில் 15 ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு, கடந்த ஆண்டு முதல் அமெரிக்காவில் வேலை பார்க்கத் தொடங்கி இருக்கிறேன். அடுத்த 8 முதல் 10 ஆண்டுகள் அமெரிக்காவிலேயே இருப்பேன். என்னுடைய இபிஎஃப் அக்கவுன்ட்டில் இப்போது 20 லட்சம் ரூபாய் இருக்கிறது. இந்தப் பணத்தை எடுத்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? தவிர, ஐசிஐசிஐ புரூ எக்ஸ் அண்ட் சர்வீசஸ் ஃபண்டில் ரூ.10 ஆயிரம், டிஎஸ்பி பிஆர் மைக்ரோ ஃபண்டில் ரூ.10 ஆயிரம், ஐசிஐசிஐ பேலன்ஸ்டு ஃபண்டில் ரூ.5 ஆயிரம், ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்டில் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்து வருகிறேன். ஐசிஐசிஐ ஈக்விட்டி ஆர்பிட்ரேஜ் ஃபண்டில் ரூ.7 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறேன். இந்த முதலீடு சரியான தேர்வுதானா?
பாலமுருகன்.
‘‘குறைந்தது ஐந்து வருடங்களுக்கு பிராவிடண்ட் பணம் உங்களுக்குத் தேவையிருக்காதபட்சத்தில், அதைத் தாராளமாகப் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம். நீங்கள் அமெரிக்காவில் வாழும் வெளிநாடுவாழ் இந்தியர் என்பதால், நீங்கள் மேலே தந்துள்ள ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்ய முடியாது. ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி மற்றும் டிஎஸ்பி ஆகிய மூன்று நிறுவனங்களுமே அமெரிக்கா மற்றும் கனடா வாழ் இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்களைத் தற்போது ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, உங்களின் முதலீட்டை சுந்தரம், எல் அண்ட் டி மற்றும் பிரமெரிக்கா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் தொடரலாம். மேலும், உங்களின் பிராவிடண்ட் ஃபண்ட் பணத்தையும் இதே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் உள்ள நல்ல பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளலாம். இந்த நிறுவனங்களில் நன்கு செயல்பட்டுவரும் சில ஃபண்ட் திட்டங்கள் இதோ: 1. எல் அண்ட் டி ஈக்விட்டி ஃபண்ட், 2. சுந்தரம் செலக்ட் மிட் கேப் ஃபண்ட்.’’

ஃபண்ட் Q& A

ஃபண்ட் பரிந்துரை: பிஎன்பி பரிபாஸ் ஈக்விட்டி ஃபண்ட்: எல்லா வயதினருக்கும்
லார்ஜ் + மிட் கேப் திட்டங்களில் ஒன்றான பிஎன்பி பரிபாஸ் ஈக்விட்டி ஃபண்ட் குறித்து இப்போது பார்ப்போம். பிஎன்பி பரிபாஸ் இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஸ்தான் பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஸ்பான்ஸர் ஆகும்.
இந்த நிறுவனம் உலக அளவில் பெரிய வங்கிகளுள் ஒன்றான பிஎன்பி பரிபாஸ் குழுமத்தைச் சார்ந்ததாகும். இந்த நிறுவனம் உலக அளவில் 37 நாடுகளில் தனது கால்களைப் பதித்துள்ளது. இந்தியாவில் 2010-ம் ஆண்டு வரை இந்த நிறுவனம் ஃபோர்டிஸ் மியூச்சுவல் ஃபண்ட் என்ற பெயரில் தொழில் செய்துவந்தது.
இந்தத் திட்டம் ஒரு டைவர்ஸிஃபைடு திட்டமாகும் – அதாவது, அனைத்துத் துறை களிலும் முதலீடு செய்யக்கூடிய திட்டமாகும். தற்போது ரூ.747 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் ஷ்ரேயாஸ் தெவால்கர் ஆவார்.
இந்தத் திட்டத்தை நாம் பரிந்துரைக்கு எடுத்துக் கொண்ட தற்கு முக்கியக் காரணம், கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சி யாக நன்றாகச் செயல்பட்டு வருவதே ஆகும். கடந்த 5 வருடங் களில் நிஃப்டி குறியீட்டைவிடவும், இதன் கேட்டகிரி ஆவரேஜைவிட வும் அதிக வருமானத்தைக் கொடுத்துள்ளது.
இந்தத் திட்டம் தனது போர்ட்ஃபோலியோவில் கிட்டத்தட்ட 79% முதலீட்டை லார்ஜ் கேப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகளிலும் வைத்துள் ளது. டெலிகாம் துறையில் இந்த ஃபண்ட் பாசிட்டிவ்வாக இருப்பது இதனுடைய டாப் ஹோல்டிங்ஸிலிருந்து தெரிய வருகிறது.
ஐடியா செல்லுலார் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டும் சேர்ந்து 15 சதவிகிதத்துக்கும் அதிகமாக இதன் போர்ட் ஃபோலியோவில் இடம் பெற்றுள் ளது. கம்யூனிகேஷன், ஹெல்த் கேர், சர்வீசஸ் ஆகிய துறைகளில் ஓவர்வெயிட்டாகவும், ஃபைனான்ஸ், டெக்னாலஜி மற்றும் எனர்ஜி போன்ற துறை களில் அண்டர்வெயிட்டாகவும் உள்ளது. இதன் பீட்டா (0.90) சந்தையைவிடக் குறைவாகவும், ஆல்ஃபா அதிகமாகவும் (7.95) உள்ளது, இதன் நல்ல செயல்பாட்டைக் குறிக்கிறது.
பிஎன்பி பரிபாஸ் 2010-ல் இந்த ஃபண்ட் நிறுவனத்தை எடுத்ததி லிருந்து, நிறுவனத்தில் உள்ள திட்டங்களில் செயல்பாடு முன்னேறியுள்ளது. இதன் கடந்த 5 வருட கால வருமானத்தை வைத்துப் பார்க்கும்போது, இந்த முன்னேற்றம் தெளிவாகத் தெரிய வருகிறது. இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (செப்டம்பர் 23, 2004) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.6,52,500- ஆக உள்ளது. இது சிஏஜிஆர் அடிப்படையில் 19.11% வருமானமாகும்.
இந்த ஃபண்ட் ரூ.500 முதல் எஸ்ஐபி முதலீட்டை ஏற்றுக் கொள்கிறது. ஒரு நல்ல, தொடர்ச்சியான வருமானம் தருகிற லார்ஜ் கேப் ஃபண்டை (மிட் அண்ட் ஸ்மால் கேப் எக்ஸ்போஷர் சில சதவிகிதத்து டன்) எதிர்பார்ப்பவர்கள், பிஎன்பி பரிபாஸ் ஈக்விட்டி ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
உங்களின் கோர் போர்ட்ஃபோலியோவுக்கு (Core Portfolio) இந்த ஃபண்டை வைத்துக் கொள்ளலாம்.
யாருக்கு உகந்தது?
ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள் ளவர்கள், அனைத்து வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், மீடியம் ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.
--விகடன்
--சொக்கலிங்கம் பழனியப்பன்

ஃபண்ட் பரிந்துரை: ஐடிஎஃப்சி டாக்ஸ் அட்வான்டேஜ் (இஎல்எஸ்எஸ்) ஃபண்ட்: வரிச்சுமையைக் குறைக்க விரும்புவோருக்கு ஏற்ற ஃபண்ட்!
வரிச்சுமையைக் குறைக்க விரும்பாத குடிமகன் யார் இருப்பார்? 80சி பிரிவின் கீழ் நம் அனைவருக்கும் ரூ.1.50 லட்சம் வரிவிலக்குக் கிடைக்கிறது. 80சி பிரிவின் கீழ் பல முதலீடுகள் வந்தாலும், இருப்பதிலேயே மிகக் குறைவான லாக்-இன் மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய ஒரே முதலீடு டாக்ஸ் அல்லது இஎல்எஸ்எஸ் (ELSS – Equity Linked Savings Scheme) என்று சொல்லக் கூடிய ஃபண்டுகள்தான்.
இந்த முதலீடுகளின் லாக்-இன் மூன்று வருடங்கள்தான். மேலும், இந்தவகை முதலீடுகள் பிற ரிஸ்க் இல்லாத முதலீடுகளின் வருமானத்தைப்போல இரண்டு மடங்கு தர வாய்ப்பிருக்கிறது.
ஐடிஎஃப்சி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட் ரூ.350 கோடிக்கும் மேலான சொத்துக் களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் அனிருத்தா நாஹா ஆவார். இவர் 2013-ம் ஆண்டிலிருந்து இதன் ஃபண்ட் மேனேஜராக இருந்து வருகிறார்.
இந்த ஃபண்ட் டிசம்பர் 2008-ம் ஆண்டில் துவங்கப்பட்ட ஃபண்டாகும். துவங்கியபோது ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.4,01,075-ஆக உள்ளது.
இது சிஏஜிஆர் அடிப்படையில் 23.90% ஆகும். சாதாரண பாஷையில் சொன்னால், இது ஏறக்குறைய மாதத்துக்கு இரண்டு வட்டியாகும்.
பிற வகையான (பிபிஎஃப், இன்ஷூரன்ஸ், இபிஎஃப், வங்கி டெபாசிட், அஞ்சலக டெபாசிட்) 80சி முதலீடுகளில் இந்த அளவு வருமானத்தைக் கனவில்கூட எதிர்பார்க்க முடியாது. என்பது தான் உண்மை.
இதன் போர்ட்ஃபோலியோவில் ஏறக்குறைய 43% லார்ஜ் கேப் பங்குகளிலும், 51% மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளிலும், எஞ்சியது கேஷாகவும் உள்ளது. இது ஒரு மல்ட்டி கேப் ஃபண்ட் போலத்தான் செயல்படுகிறது.
ஏறும் சந்தையில் ஃபண்ட் மேனேஜர் லார்ஜ் கேப் ஹோல்டிங்ஸை அதிகப்படுத்திக் கொள்கிறார். சந்தை இறங்குமுகத் தில் இருக்கும்போது மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளில் உள்ள தனது ஹோல்டிங்ஸை அதிகப்ப டுத்திக் கொள்கிறார்.
மேலும், இந்த ஃபண்ட் மேனேஜரின் பிரதான கொள்கை, சந்தை இறங்குகையில் ஃபண்டுக்குக் குறைவான இழப்பு ஏற்பட வேண்டும் என்பதுதான். ஆகவே, இந்த ஃபண்ட், சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது ஒருசில சதவிகிதம் குறைவாகக் கொடுத்தாலும், இறங்கும் சந்தை யில் குறைவாகவே இறங்கும்.
தவிர, இந்த ஃபண்ட் நிறுவனத் தின் தத்துவப்படி, கடனே இல்லாத அல்லது குறைவான கடன் உள்ள நிறுவனப் பங்கு களையே தனது போர்ட் ஃபோலியோவுக்குள் இருக்க வேண்டுமென விரும்புகிறது. இதனால்தான் ஃபைனான்ஸ் துறையில் குறைவான சதவிகிதம் (16.55%) வைத்துள்ளதற்கும் இதுவே காரணம் ஆகும்.
கன்சாலிடேஷன் ஆகும் துறைப் பங்குகளையும், ஏறக்குறைய மோனோபோலியாக (Monopoly) உள்ள நிறுவனப் பங்குகளையும் தனது போர்ட் ஃபோலியோவில் வைத்துக்கொள்ள இந்த ஃபண்ட் விரும்புகிறது.
சர்வீசஸ், ஹெல்த்கேர் மற்றும் இன்ஜினீயரிங் துறைகளில் ஓவர்வெயிட்டாகவும், ஃபைனான்ஸ் மற்றும் டெக்னாலஜி துறைகளில் அண்டர்வெயிட்டாகவும் உள்ளது. இந்த ஃபண்ட், மிட் அண்ட் ஸ்மால் கேப் எக்ஸ்போஷர் வைத்திருந்தாலும், அவை எல்லாம் பெரிய மிட் கேப் நிறுவனங்களாகும். ஆகவே, இந்த ஃபண்டின் ஆவரேஜ் மார்க்கெட் கேப் ரூ. 15,658 கோடி கோடியாகும்.
கடந்த 1, 3 மற்றும் 5 ஆண்டு களில் கேட்டகிரி ஆவரேஜைவிட 4-லிருந்து 9 சதவிகிதம் வரை அதிகமான வருவாயைக் கொடுத் துள்ளது இந்த ஃபண்ட். மற்றொரு சிறப்பம்சம், குறைவான பீட்டாவில் (0.85) அதிகமான ஆல்ஃபாவைத் (11.58) தந்துள்ள தாகும். இந்த ஃபண்ட், 27 பங்கு களுடன், மிகவும் கனகச்சிதமான போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது.
சிறந்த ஃபண்ட் மேனேஜர், நல்ல செயல்பாடு போன்ற சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த ஃபண்டில் முதலீட்டாளர் கள் தங்களது டாக்ஸ் சேவிங்ஸிற் காக எஸ்ஐபி முறையிலும், சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் தாராளமாக முதலீடு செய்யலாம்.
யாருக்கு உகந்தது?
சம்பாத்தியம் ரூ.2.50 லட்சத்துக்குமேல் இருந்து 80C பிரிவின் கீழ் வருமான வரிவிலக்கை எதிர்பார்ப்பவர்கள் மற்றும் அவ்வாறு செய்யும் முதலீட்டில் ரிஸ்க் எடுத்து, எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்றாற் போல் வருமானத்தை எதிர்பார்ப் பவர்கள்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
80சி பிரிவின் கீழ் வருமான வரிச்சலுகை தேவைப்படாத வர்கள், ரிஸ்க் எடுக்க விருப்ப மில்லாதவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் குறித்து போதிய ஞானம் இல்லாதவர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு புதியவனான நான், எஸ்பிஐ ப்ளூசிப், டாடா மிட் கேப், யூடிஐ மிட் கேப், ஃப்ராங்க்ளின் ஹை-குரோத், யூடிஐ எம்என்சி ஆகிய ஐந்து ஃபண்டுகளில் நான்கினைத் தேர்வு செய்யலாம் என்று நினைக்கிறேன். எந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?
குமார்
‘‘நீங்கள் தேர்வு செய்துள்ள 5 ஃபண்டுகளும் நல்ல ஃபண்டுகள்தான். இதில் நான்கு ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யப்போகிறீர்கள் என்கிறபட்சத்தில், ஏதாவது ஒரு மிட் கேப் ஃபண்டைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்!’’

ஃபண்ட் Q&A
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு புதியவனான நான், எஸ்பிஐ ப்ளூசிப், டாடா மிட் கேப், யூடிஐ மிட் கேப், ஃப்ராங்க்ளின் ஹை-குரோத், யூடிஐ எம்என்சி ஆகிய ஐந்து ஃபண்டுகளில் நான்கினைத் தேர்வு செய்யலாம் என்று நினைக்கிறேன். எந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?
குமார்
‘‘நீங்கள் தேர்வு செய்துள்ள 5 ஃபண்டுகளும் நல்ல ஃபண்டுகள்தான். இதில் நான்கு ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யப்போகிறீர்கள் என்கிறபட்சத்தில், ஏதாவது ஒரு மிட் கேப் ஃபண்டைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்!’’
--சொக்கலிங்கம் பழனியப்பன்
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
--ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Re: ஃபண்ட் பரிந்துரை :
ஃபண்ட் பரிந்துரை: கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட்: மீடியம் ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!
இந்த வாரம் முதலீட்டுக்கு உகந்த லார்ஜ் + மிட் கேப் திட்டங்களில் ஒன்றான கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.
கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஸ்பான்ஸர் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகும். இதன் 100 சதவிகித பங்குகளை கோட்டக் மஹிந்திரா வங்கி வைத்துள்ளது.
இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரூ.41,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்ட் நிறுவனத்தின் ஈக்விட்டி பிரிவின் தலைவர் ஹர்ஷாஉபாதி யாயா ஆவார். அவரே இந்த கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்டின் ஃபண்ட் மேனேஜரும் ஆவார். இவர் 2012-ம் ஆண்டிலிருந்து கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் இருந்து வருகிறார். இதற்குமுன்பு டிஎஸ்பி - பிஆர் மற்றும் யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களில் பணியாற்றியுள்ளார்.
இவர் பொறுப்பேற்றதிலிருந்து இந்த ஃபண்டின் செயல்பாடு நன்றாக முன்னேறியுள்ளது. அதேவேகத்தில் இந்த ஃபண்ட் மேலாண்மை செய்யும் சொத்துக்களும் வேகமாக வளர்ந்துள்ளன. ரூ.300 கோடியில் இருந்த சொத்துக்கள் 9 மடங்குக்குமேல் கடந்த மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் வளர்ந்துள்ளது.
இந்த ஃபண்ட் ஒரு லார்ஜ் + மிட் கேப் திட்டமாகும். தற்போது ரூ.2,700 கோடிக்கும் மேலான சொத்துக்களை இந்தத் திட்டம் நிர்வகித்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும், சில துறைகளின் வளர்ச்சி மற்ற துறைகளைவிட வேகமாக இருக்கும் என இந்தத் திட்டம் நம்புகிறது.
ஆகவே, வேகமாக வளரும் துறைகளில், தனது போர்ட்ஃபோலியோவில் அதிகமான வெயிட்டேஜை வைத்துக் கொள்கிறது. அதாவது, துறை சார்ந்த பல நல்ல பங்கு களை வைத்துக்கொள்கிறது. தற்போது ஆட்டோமொபைல் மற்றும் சிமென்ட் துறைகள் நன்றாக இருக்கும் என நம்புகிறது.
தனது போர்ட் ஃபோலியோவில் பெரும்பாலும் லார்ஜ் கேப் பங்குகளையே வைத்துக் கொள்கிறது. தற்போது 75% லார்ஜ் கேப்பிலும், எஞ்சியது மிட் அண்ட் ஸ்மால் கேப்பிலும் உள்ளது. 2008-ம் ஆண்டில் நடந்த சந்தை சரிவில் வேறு சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களைப்போல இந்த நிறுவனமும் அதிக கேஷுக்கு மாறியதால், சந்தை மேலெழுந்து வரும்போது இந்த நிறுவனத்தில் உள்ள ஃபண்டுகளின் செயல்பாடு குறைந்தது. அவ்வாறு செயல்பாட் டில் இருந்த குறைகளையெல்லாம் நீக்கி, இந்த நிறுவனம் தற்போது நன்றாகச் செயல்பட்டு வருகிறது.
உதாரணத்துக்கு, இந்த ஃபண்ட் 7.50 சதவிகிதத்துக்கு மேல் ரொக்கப் பணத்தை வைத்துக்கொள்வதில்லை. கேஷுக்குப் பதிலாக டிஃபென்ஸிவ் துறைகளில் தனது முதலீட்டை மாற்றிக்கொள்கிறது.
அதேபோல், இந்த ஃபண்ட் துறை சார்ந்த நல்ல பல பங்குகளை வைத்திருந்தாலும், எந்த நேரத்திலும் குறைந்தது நான்கு துறைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது.
ஒரு துறையில் 33 சதவிகிதத்துக்குமேல் செல்வ தில்லை. இந்த ஃபண்ட் தற்போது ஆட்டோமொபைல் மற்றும் சிமென்ட் துறைகளில் ஓவர் வெயிட்டாக உள்ளது.
எனர்ஜி மற்றும் டெக்னாலஜி துறையில் அண்டர்வெயிட்டாக உள்ளது. மெட்டல் துறையில் எந்த பங்கையும் வைத்துக் கொள்ளவில்லை. இந்த ஃபண்டின் போர்ட் ஃபோலியோ டேர்னோவர் சற்று அதிகமாக 80% என்ற அளவில் உள்ளது. பீட்டா சந்தையையொட்டி (1) உள்ளது. ஆல்ஃபா 8.16 என்ற அளவில் சிறப்பாக உள்ளது.
கடந்த 1, 3, 5 என எந்த காலகட்டங்களை எடுத்துக் கொண்டாலும், இந்த ஃபண்ட் நிஃப்டி மற்றும் கேட்டகிரி ஆவரேஜைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இந்த ஃபண்ட் சிஎன்எக்ஸ் 200 குறியீட்டை தனது பெஞ்ச் மார்க்காகக் கொண்டுள்ளது.
நல்ல ஃபண்ட் மேனேஜர் மற்றும் நல்ல செயல்பாடு கொண்டுள்ள இந்த ஃபண்டில் முதலீட்டாளர்கள் எஸ்ஐபி முறையிலும், சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும், தங்களது கோர் போர்ட் ஃபோலியோவுக்காக முதலீடு செய்யலாம்.
யாருக்கு உகந்தது?
ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள் ளவர்கள், அனைத்து வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்ப வர்கள், மீடியம் ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள் முதலீடு செய்ய உகந்தது.
யார் முதலீடு செய்யக்கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதி யான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் வயது 36. நான் ஒருமுறை முதலீடாக 75,000 வீதம் ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட் மற்றும் ஃப்ராங்க்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனீஸ் ஃபண்டுகளிலும், பிரதி மாதம் 2,000 வீதம் ஐசிஐசிஐ புரூ டைனமிக் பிளான், டாடா பேலன்ஸ்டு ஃபண்ட், ஃப்ராங்க்ளின் ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய விருப்பம். இந்த ஃபண்டுகள் எல்லாம் சரியானவைதானா? இவற்றில் முழுமையான பலன் பெற எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்?
பாலாஜி, மயிலாடுதுறை.
‘‘நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஃபண்டுகள் அனைத்தும் நல்ல டிராக் ரெக்கார்டு உள்ளவை. ஆகவே, அந்த ஃபண்டுகளில் முதலீட்டை ஆரம்பித்துக் கொள்ளலாம். நீங்கள் ஒருமுறை முதலீட்டை மேற்கொள்ளும்போது எஸ்டிபி முறையில் முதலீடு செய்துகொள்ளலாம். அது ரிஸ்க்கை சற்று குறைக்கும்.மியூச்சுவல் ஃபண்டுகளில் ஆண்டுகள் அதிகமாக அதிகமாக உங்களின் வருமானமும் உயர்ந்து கொண்டுதான் செல்லும்.
ஆதலால், எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலத்துக்கு முதலீட்டைத் தொடருங்கள். குறைந்தபட்சம் 5 வருடமாவது முதலீட்டைத் தொடருங்கள்.’’

ஃபண்ட் பரிந்துரை:பிர்லா சன் லைஃப் ஷார்ட் டேர்ம் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட்:
பிர்லா சன் லைஃப் ஷார்ட் டேர்ம் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் ஒரு கடன் சார்ந்த திட்டமாகும். 3 வருடம் மற்றும் அதற்குமேல் உள்ள காலகட் டத்துக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். ஃபிக்ஸட் டெபாசிட்டைவிடச் சற்று கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதுடன், வருமான வரியும் மிகக் குறை வாகத்தான் செலுத்தவேண்டி இருக்கும்.
இந்த வகை கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் குறைவு. ஏனென்றால், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பல நிறுவ னங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. ஆனால், கேரன்டீட் வருமானத்தை விரும்புபவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம்
இது கிரெடிட் ஆப்பர்சூ னிட்டீஸ் ஃபண்ட் வகையைச் சார்ந்த ஃபண்டாகும். இந்த ஃபண்ட் பெரும்பாலும் ஆவரேஜ் கிரெடிட் ரேட்டிங் கொண்ட கார்ப்பரேட் கடன் பத்திரங் களிலேயே முதலீடு செய்கிறது. சற்று அதிக யீல்டு தரக்கூடிய கடன் சார்ந்த ஃபண்டுகள் இரண்டு வகைகளில் தங்களது வருமானத்தை அதிகரிக்கலாம்.
முதல் வகை, நல்ல தரமான (AAA) ரேட்டிங் கொண்ட பாண்டுகள் அல்லது மத்திய அரசாங்க பாண்டுகளைத் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துக்கொண்டு, அந்த போர்ட்ஃபோலியோவின் ஆவரேஜ் மெச்சூரிட்டியை சந்தையில் நிலவும் வட்டி விகிதத்தைப் பொறுத்து ஏற்றி இறக்கி வருமானத்தை அதிகப் படுத்துவார்கள். இரண்டாம் வகை, இந்த ஃபண்டைப்போல, சற்று குறைவான கிரெடிட் ரேட்டிங் (AA மற்றும் அதற்குக் கீழ்) கொண்ட அதேசமயத்தில் அதிக யீல்டு தரக்கூடிய கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்து வருமானத்தை அதிகப்படுத்துவார்கள்.
இந்த ஃபண்டின் போர்ட் ஃபோலியோவில் AAA ரேட்டிங் கொண்ட பாண்டுகள் மற்றும் அரசாங்க பாண்டுகள் ஏறக்குறைய 40% உள்ளது. AA ரேட்டிங் கொண்ட பாண்டுகள் ஏறக்குறைய 46% உள்ளன. எஞ்சியது அதற்குக் கீழ் ரேட்டிங் கொண்ட பாண்டுகளாகவும், கேஷாகவும் உள்ளன. போர்ட் ஃபோலியோவின் ஆவரேஜ் மெச்சூரிட்டி 3.44 வருடங்களாக உள்ளது.
இந்த ஃபண்ட் ஜூன் 2008-லிருந்து பெயர் மாற்றப்பட்டு, தற்போது உள்ள பெயரில் அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு பிர்லா பாண்ட் இண்டெக்ஸ் ஃபண்ட் என்று அழைக்கப்பட்டது. தற்போது ரூ.4,092 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது
கடந்த 1, 3 மற்றும் 5 வருடங்களில் இதன் கேட்டகிரியைவிட அதிக வருமானத்தைக் கொடுத்துள்ளது. டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் சொல்யூஷன்ஸ், இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் யுட்டிலிட்டீஸ் அண்ட் பவர் ஆகிய நிறுவனப் பத்திரங்கள் ஒவ்வொன்றிலும் 5 சதவிகிதத்துக்கும் அதிகமான ஹோல்டிங்ஸைக் கொண்டுள்ளது.
இந்த ஃபண்டில் முதலீடு செய்த ஒரு வருடத்துக்குள் வெளியேறினால், 1% வெளியேற்றுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களது முதலீட்டுக் காலத்தைக் குறைந்தது மூன்றாண்டுகளுக்கு மேல் வைத்துக்கொள்வது நல்லது. மூன்று ஆண்டுகளுக்குள் வெளியேறும்போது, வரும் வருமானத்துக்கு, அவரவர் வருமான வரி வரம்பில் வரி கட்டவேண்டி வரும்.
அதுவே, மூன்று வருடத்துக்குமேல் ஆகும் போது, நீண்ட கால கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ் கட்ட வேண்டி யிருக்கும். அது தற்போது, பணவீக்கத்துக்கு அட்ஜஸ்ட் செய்தபிறகு 20% ஆகும். அவ்வாறு செலுத்தும்போது வருமான வரி மிகவும் சொற்பமாகத்தான் வரும். ஆகவே, வருமான வரியின் உச்சவரம்பில் இருப்பவர்களுக்கு, ஃபிக்ஸட் டெபாசிட்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஃபண்ட் ஒரு நல்ல வரப்பிரசாதமாக இருக்கும்.
இந்த ஃபண்டில் டிவிடெண்ட் ஆப்ஷனும் உள்ளது. அதைவிட குரோத் ஆப்ஷனில் சென்று விட்டு, மூன்று ஆண்டுகள் கழித்து, எஸ்டபிள்யூபி (SWP – Systematic Withdrawal Plan) முறை மூலம் மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளி களில் பணத்தை எடுத்துக் கொள்ளும்போது, வருமான வரி மிகவும் குறைவாக இருக்கும்.
ரெக்கரிங் டெபாசிட்டுக்குப் பதிலாக, எஸ்ஐபி முறையிலும் இந்த ஃபண்டில் சிறு முதலீட் டாளர்கள் தாராளமாக முதலீடு செய்யலாம். இந்த ஃபண்ட் கன்ஸர்வேட்டிவ் முதலீட்டா ளர்களுக்கும், போர்ட் ஃபோலியோவில் கடன் சார்ந்த ஒதுக்கீட்டை நாடுபவர்களுக்கும் சிறப்பான முதலீடாக அமையும்.
யாருக்கு உகந்தது?
பங்குச் சந்தை ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், அதிக வரி வரம்பில் இருப்பவர்கள், வரிக்குப் பிந்தைய வருமானத்தை அதிகமாக எதிர்பார்ப்பவர்கள், ஓய்வுக்காலத்தில் இருப்பவர்கள், பணம் அதிகம் உள்ளவர்கள்.மற்றும் பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள், நடுத்தரக் காலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு நிகரான வருமானத்துடன், வேண்டும் போது எடுத்துக்கொள்ளும் வசதியை விரும்புபவர்கள்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
நீண்ட காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், குறிப்பிட்ட இடைவெளிகளில் உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள்.

Similar topics
» ஃபண்ட் பரிந்துரை : ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் முதலீடு செய்க!
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» ஃபண்ட் ஹவுஸ்
» பரஸ்பர நிதித் திட்டங்களில் குழும நிறுவனங்களின் முதலீடு: விவரம் வெளியிட பரிந்துரை
» பி.எஃப் நிதியை பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்யலாம்: பங்கு பரிவர்த்தனை வாரியம் பரிந்துரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum