வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


அதிக வீட்டுக் கடனுக்கு என்ன வழி?

Go down

அதிக வீட்டுக் கடனுக்கு என்ன வழி? Empty அதிக வீட்டுக் கடனுக்கு என்ன வழி?

Post by தருண் Fri Jul 18, 2014 3:45 pm

கணவன், மனைவி ரெண்டு பேரும் வேலை பார்க்குறவங்களா இருந்தா, ரெண்டு பேரோட சம்பளத்தையும் கணக்குல எடுத்துக்கிட்டு அதிகக் கடன் தருவாங்க. இதேமாதிரி அப்பாவும், மகனும் சேர்ந்து கூடுதல் தொகையை கடன் வாங்கலாம். சம்பளம் தவிர வேற வருமானம் வருதுன்னா, அதையும் காட்டி கூடுதலா கடன் வாங்கலாம்.
விஷயம் என்னன்னா, 'வாங்குற கடனை சிக்கல் இல்லாம திருப்பிக் கட்டக்கூடிய அளவுக்கு இவருக்குப் பொருளாதார நிலைமை இருக்கு'னு கடன் கொடுக்கிற நிறுவனம் நம்பணும்.. அவ்வளவுதான்! அதுக்கான ஆதாரங்களை நீங்க கொடுத்தா எவ்வளவு வேணும்னாலும் கடன் தருவாங்க.

எவ்வளவு காலத்துக்குள் கடனைத் திரும்பக் கட்டலாம்?


சாதாரணமா 5- லிருந்து 25 வருஷம் வரைக்கும் திருப்பிக் கட்டுற வசதி இருக்கு. இது உங்களோட வயசு, நிதி நிலைமை, ரிட்டயர்மென்ட்டுக்கு இன்னும் எத்தனை வருஷம் இருக்கு.. இதையெல்லாம் பார்த்துதான் முடிவு செய்யப்படுது. 25 வயசுல கடன் வாங்கினா அதிகபட்சம் 25 வருஷத்துல, அதாவது 50 வயசு வரைக்கும் கடனைக் கட்டலாம். அதே நேரத்துல 50 வயசுல கடன் வாங்கினா, அதை ரிட்டயர் ஆகுறதுக்குள்ள திரும்பக் கட்டணும். அப்ப மாதத் தவணை அதிகமாயிடும்.

வருஷம் கூடக் கூட... மாதத் தவணை குறையும். 'அப்படின்னா 25 வருஷத்துல திருப்பிக் கட்டிக்கலாம்'னு நினைச்சுடாதீங்க. தவணைத் தொகைதான் குறையும்... ஆனா, வட்டி விகிதம் அதிகமாயிடும். மொத்தமா சேர்த்துப் பார்த்தா அதிகத் தொகை கட்ட வேண்டியிருக்கும். அதனால தேவையில்லாம நீண்ட காலத்தை செலக்ட் பண்ணக்கூடாது. உங்களோட பொருளாதார நிலைமைக்குத் தகுந்த-மாதிரி முடிவெடுங்க.

முன்கூட்டியே ஒப்புதல்!

இப்போல்லாம் பெரும்பாலான பேங்க்குகள், வீட்டு வசதி நிறுவனங்கள்ல கடனைத் திருப்பிச் செலுத்துற திறனை வச்சு, அட்வான்ஸா கடனுக்கு ஒப்புதல் கொடுக்கிறாங்க! இதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டா, தேவையான ஆவணங்களை கொடுத்த ஒரு வார காலத்துலயே கடன்தொகை கைக்கு வந்துடும். இதனால, டயம் வேஸ்ட்டாகாது. கடன் கிடைக்காம போறதுக்கான வாய்ப்பும் குறையும்.

எதெற்கெல்லாம் கடன் கிடைக்கும்?

மனை, வீடு வாங்க/கட்ட, ஃப்ளாட் வாங்க, இருக்கிற வீட்டை மேம்படுத்த/கூடுதல் அறைகள்/தளம் கட்ட.. இப்படி எல்லாத்துக்கும் கடன் வாங்கலாம்.

(நாணயம் விகடன் எல்.கே.ஜி. இணைப்பு புத்தகத்திலிருந்து...!)

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum