Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வீட்டுக் கடனைக் கட்டி முடித்துவிட்டால்... அடுத்து என்ன செய்யலாம்?
Page 1 of 1

இன்று, வீட்டுக் கடன் வாங்குபவர்களில் 50 சத விகிதத்தினர் கடன் காலம் முடிவதற்கு முன்னதாகவே கடனை முழுக்கத் திரும்பக் கட்டி முடித்துவிடுகிறார்கள். வீட்டுக் கடனை அவ்வளவு சீக்கிரம் அடைக்க வேண்டும் என்கிற நிர்பந்தமும் இல்லை; அதனால் எந்தப் பெரிய பலனும் இல்லை.
வீட்டுக் கடனை ஒரு சுமையாக நினைப்பதினால் தான், அந்தக் கடனை சீக்கிரத்தில் திரும்பச் செலுத்திவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படி விரைவாக வீட்டுக் கடனைக் கட்டி முடித்தவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும், தங்கள் நிதித் திட்டமிடலை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இனிப் பார்க்கலாம்.
வீட்டுக் கடனைக் குறித்த காலத்துக்கு முன்னரே முடித்த வர்கள், அடுத்தப் பெரிய கடனை வாங்கவே ஆர்வம் காட்டுகின் றனர். உங்கள் தந்தை உங்களுக்கு விட்டுச் செல்லாத வீட்டை உங்களால் கட்ட முடிகிறபோது, நாளை உங்களுடைய குழந்தைகள் இதைவிடப் பெரிய வீட்டை அவர்களுக்காக அவர்களே கட்டிக்கொள்வார்கள் அல்லது வாங்கிக்கொள்வார்கள் என்பதைப் புரிந்துகொண்டால், இந்தத் தவறை பலரும் செய்ய மாட்டார்கள்.
மேலும், பலரும் இன்றைய சூழலுக்கேற்ப குடியிருக்கும் அடுக்குமாடிக் கட்டடங்களுடன், பலதரப்பட்ட வசதி வாய்ப்புள்ள தையே நாடுகிறார்கள். அவ்வாறு இருக்கும்போது அவருடைய பெற்றோர் கொடுத்த இடத்திலோ அல்லது அவரிடம் சேர்ந்தோ வாழ முடிவதில்லை!
கடன் போதை!
வீடு வாங்க வேண்டும், சொத்துக்கு மேல் சொத்து சேர்த்துக்கொண்டே போக வேண்டும் என்பது ஒருவகையான போதை. இந்தப் போதை வேலைக்குச் சேர்ந்தவுடன் ஆரம்பித்து, வேலையிலிருந்து ஓய்வுபெறும்வரை நீடிக்கிறது. இவ்வாறு செய்யும்போது அவர்களால் நிகழ்காலத்தில் சந்தோஷமாக இருக்க முடிவ தில்லை. அதேசமயம், வேலை யிலிருந்து ஓய்வுபெற்ற பின்போ அல்லது சிறிது காலத்துக்கு முன்போ வீடு வாங்கியவர்கள் சந்தோஷமாக வாழ்ந்திருந் தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
எனவே, தேவைக்கு ஒரு வீடு என்று வாங்கி, அதற்கான கடனை திரும்பக் கட்டியபிறகு, மீண்டும் ஒரு வீட்டுக் கடன் என்று புறப்படாமல், வேறு என்ன மாதிரியான முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்பது முக்கியமான கேள்வி.
தேவைக்கு மீறிய முதலீடு வேண்டாம்!
பலருக்கு முதல் வீடே எட்டாத கனியாக உள்ளது. இன்று, தேவைக்கும் அதிகமாகச் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாங்குகிறார்கள். இப்படி வாங்கும் வீட்டில் வசிக்க முடியாமல் போனால், அதை வாடகைக்கு விடும் சூழல் உருவாகிறது. இதனால் அதில் முதலீடு செய்த அளவுக்கு ரிட்டர்ன் கிடைப்பதில்லை. ஒரு வீட்டை வாங்கியபின் அடுத்து ஒரு வீடு வாங்க வேண்டும் என்று நினைக்காமல், மிச்சமாகும் இஎம்ஐ தொகையை முக்கியமான எதிர்காலத் தேவைகளுக்காக முதலீடு செய்வதே புத்திசாலித் தனம்.
ஓய்வுக்காலம்!
பத்து வருடத்துக்குள் வீட்டுக் கடனை கட்டிமுடித்தவர்கள், கடன் செலுத்த ஒதுக்கிவந்த தொகையை அடுத்த பத்து வருடம் தொடர்ந்து முதலீடு செய்து, அந்த முதலீட்டை மேலும் 5 வருடம் கழித்து எடுத்தால், அவர்களுடைய ஓய்வுக்காலத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் சமாளித்துவிட முடியும்.
உதாரணமாக, ஒருவர் 30 வயதில் வீட்டுக் கடனை வாங்கி, அதை 40 வயதில் முடித்துவிடு கிறார் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த 10 வருடம் அந்த வீட்டுக் கடன் தவணையை (ரூ.20,000) சேமிப்பதாக எடுத்துக் கொண்டால், 10 வருடத்தில் சேமிக்கும் தொகை 24 லட்சம் ரூபாய். அது 15% கூட்டுவட்டியில் 55.73 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும்.
அதை, அடுத்த 5 வருடம் கழித்து எடுத்தால், அதுவே 1.17 கோடி ரூபாய். ஒருவேளை அவருக்கு 60 வயதில் (10 வருடம் கழித்து எடுத்தால்) தேவைப்படு மெனில், அது 2.47 கோடி ரூபாய்.
இதைப் பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதாமாதம் 2 லட்சம் ரூபாய் எடுத்துக்கொள்ள முடியும். இது ஓய்வுக்காலத்துக்குப் போதுமானதாக இருக்கும்.
10:10:10 தியரி!
10:10:10 தியரி என்ன சொல்கிறது தெரியுமா? ஒருவர் 10 வருடம் பழகிய ஒரு பழக்கத்தை, அடுத்த 10 வருடமும் தொடரு கிறார். அடுத்த 10 வருடம் அதை வளர விடுகிறார். ஒரு வீடு வாங்கினால், அதை அடுத்தச் சில ஆண்டுகளிலேயே நாம் விற்றுவிடுவதில்லை. குறைந்தபட்சம் இருபது ஆண்டுகளாவது அதை வைத்திருக்கிறோம். எனவே, நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் நாம் நீண்ட காலத் துக்கு முதலீடு செய்வதில்லை. சில ஆண்டுகளிலேயே முதலீட்டு பணத்தை திரும்ப எடுத்து விடுகிறோம். ஆனால், நீண்ட காலத்துக்குத் தொடர்ந்தால், நல்ல லாபம் பெற வாய்ப்புண்டு.
சீக்கிரம் வீட்டுக் கடன் கட்டி முடித்தவர்களுக்கு அவர்களை அறியாமல் சேமிப்பு என்கிற நல்ல பழக்கம் உருவாகி இருக்கும். அப்படி ஆரம்பிக்கும் சேமிப்பை எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. இந்தச் சேமிப்பை மீண்டும் இன்னொரு வீட்டின் மீது என்றில்லாமல், அதிக லாபம் தரக்கூடிய வேறு முதலீடுகளில் முதலீடு செய்வதே நல்லது.
நாணயம் விகடன்வீட்டுக் கடனை ஒரு சுமையாக நினைப்பதினால் தான், அந்தக் கடனை சீக்கிரத்தில் திரும்பச் செலுத்திவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படி விரைவாக வீட்டுக் கடனைக் கட்டி முடித்தவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும், தங்கள் நிதித் திட்டமிடலை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இனிப் பார்க்கலாம்.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» அதிக வீட்டுக் கடனுக்கு என்ன வழி?
» வங்கிகளில் அதிகரிக்கும் வாராக்கடன்... என்ன காரணம், என்ன தீர்வு?
» சிறுகக் கட்டி பெருக வாழலாம்!
» வீட்டுக்கடன் தவணை: சீக்கிரம் கட்டி முடிப்பது நல்லதா?
» கார் கடன்: கட்டி முடித்தபிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum